ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2019

அனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்


1.தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அது வாலியாகி விடுகின்றது.
2.நல்ல குணத்தின் தன்மை எண்ணும் போது ஆஞ்சநேயனாகி விடுகின்றது.

நல்ல குணத்தை எண்ணி எடுக்கும் போது சீதாவிற்கும் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் மத்தியிலே இந்த உணர்வின் தன்மை அணுவான பின் இராமன் இட்ட கட்டளைப்படி ஆஞ்சநேயர் வாழ்கிறார்.

நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எல்லாம் சீதாலட்சுமி ஆகின்றது. அந்தச் சீதாவைப் பாதுகாப்பது யார்…? இந்த உணர்வுகள்... உணர்ச்சிகள்...! அப்போது உடலிலே என்ன செய்கிறது...?

இராமன் ஊடுருவிச் சொல்கின்றான் என்ற நிலைகளில் தீமைகளை அகற்றும் உணர்வாக வருகிறது. (இராமன் என்றால் எண்ணங்கள், சீதா என்றால் சுவை – மணம், மகிழ்ச்சி).

இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் நிறைவேற்றுகின்றான். ஆஞ்சநேயன் என்றால் வாயு (காற்று) அதாவது அந்த எண்ணத்தின் உணர்வலைகள்

சீதாவைச் சிறை பிடித்துக் கொள்கிறான் இராவணன்...! ஏன்...?

1.நல்ல குணத்தின் தன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்
2.அசுர குணங்கள் கொண்ட நிலையில் அதன் மீது இச்சைப்படுகின்றான்.
3.ஆக இராவணனின் சகோதரி இராமன் மேல் இச்சைப்படுகின்றாள்.

(அதாவது நாம் நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வேதனையான கோபமான உணர்வை நுகர்ந்த பின் அடுத்து நல்ல எண்ணங்கள் வருகின்றதா..? இல்லை...! நம்முடைய மகிழ்ச்சி காணாது சிறைப்படுகின்றது, தீமையான குணம் நல்ல குணத்தை அடக்கப் பார்க்கின்றது)

அப்போது இவன் என்ன செய்கிறான்...! இவளை அவமதித்து விடுகின்றான். என்னை அவமதித்து விட்டான் என்ற கோபத்தில் சூர்ப்பணகை இராமனின் மனைவி அழகாக இருக்கிறது என்று இராவணனிடம் சொல்கிறாள்...!

ஆஹா... என் சகோதரியை இப்படியா சொன்னான் இராமன் என்று இவன் அகம் கொள்ளுகின்றான். அகம் கொண்ட பின் என்ன செய்கின்றான்..?

அவள் அழகை வர்ணிக்கும் போது அந்த உணர்வை நுகர்ந்து தனக்குள் அதை அடைய வேண்டும் என்ற உணர்வு இங்கே தோன்றுகிறது. பொறாமையில் வரக்கூடிய நிலை இது.

சகோதரி வார்த்தையைக் கேட்டான். அதனால் அகம் கொண்டு செயல்படும் போது கடைசியில் அவனுக்கு அழிவே வந்து விடுகிறது.

இராவணன் கூடப் பிறந்த சகோதரன் கும்பகர்ணனோ அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான்... நல்லவன் அவன்...! (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா..!)

இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்தான்...?

தன் தந்தையினுடைய நிலையில் மகனான அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது... உருவாக மாட்டேன் என்கிறது...! அதாவது
1.இராவணன் அவன் ஆசையின் இச்சைக்குச் செயல்படும் போது
2.தீமைகளை அகற்றும் வல்லமை உருவாவதில்லை. (தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி)

அதே சமயத்தில் தசரதச் சக்கரவர்த்தி தினம் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். கங்கணமே கழட்டவில்லை. தசரதன் என்றால் பத்தாவது நிலை அடையக் கூடிய பருவம் பெற்ற நம் உயிர் தான்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்...!
1.அவரை உற்று நோக்கிய பின் அந்த வேதனைப்படும் சக்தியாக
2.என்னுடன் இணைந்து செயல்படுகிறது... அப்போது அது மனைவியாகின்றது.
3.மனைவியாகப்படும் போது அதிலே உருப் பெறும் கரு அந்த வேதனைகளை உருவாக்கும் தன்மைக்கே வருகிறது.
(இராமயாணக் காவியத்தை இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை யாராவது நாம் மதிக்கிறோமா...? இராமன் நல்லவனா என்றும் சீதா தூய்மையானவளா என்றும் பட்டிமன்றம் வைத்து ஆயிரம் கற்பனைகளைப் பண்ணி இராமயாணத்தையே கொலை செய்து விடுவார்கள். மனிதனின் சிந்திக்கும் தன்மையே இழக்கப்படுகிறது)

இராமன் நல்லவன் என்ற நிலையில் தசரதன் தன் மகன் மேல் பிரியப்படுகின்றான். ஒரு நல்லவன் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும். எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதற்காக வேண்டி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதர் எண்ணுகின்றார்.

ஆனால் கைகேயி கேட்ட வரப்படி நல்லவனுக்கு ஆட்சி இல்லை என்று ஆனபின் தனக்குள் அந்த உணர்ச்சிக்குள் அடிமையாகும் போது இந்த உடலை விட்டுப் பிரிகின்றார்.

யார்...? இந்த உயிர் வெளியிலே போய்விடுகிறது. பரதனோ தன்னுடைய சகோதரன் இராமன் நல்லவன் என்று உணர்கின்றான்.
1.அவன் பாதத்தை வைத்துத் தான் நான் ஆட்சி புரிவேன்
2.நல்ல குணங்களை வைத்து ஆட்சி புரிவேன் என்று செயல்படுத்துகின்றான்.

இராமன் காட்டிற்குள் செல்லப்படும் போது முதலில் குகனைத்தான் சந்திக்கின்றான். குகன் ஒரு படகோட்டி. அந்தக் குகனைச் சந்தித்த பின் அவன் இராமனை வரவேற்கின்றான். நல்ல உணர்வுகள் வருகிறது.

குகன் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய இரத்தம். அதற்குள் நம் எண்ணங்கள் அனைத்தும் படகாகச் செல்கின்றது. உயர்ந்த ஞானங்களை நாம் எடுக்கும் போது உடல் முழுவதும் அது படர்கின்றது. தீமைகள் உருவாகும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்காது அருள் ஞானத்தை அன்புக் கட்டளையாக இடுகின்றது. இது அடிபணிகின்றது.

இரத்தத்தில் அருள் ஞானத்தைப் பரப்பப்படும் போது இது ஊடுருவி உடல் அனைத்திற்குமே போகின்றது. பகைமை உணர்வை அடக்குகின்றது. நட்பு கொண்டு இணைகின்றது. அது தான் கல்யாணராமா.
1.அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் பெருக வேண்டும் என்று எண்ணும் போது
2.மற்ற தீமைகளை ஒடுக்கி நல்ல அணுக்கள் அனைத்திற்கும் உற்சாகம் ஊட்டுகிறது.
3.இப்படி ஒன்றுக்கொன்று போர் செய்யாத நிலைகள் வரும் போது நம்முடைய உணர்வுகள் அனைத்தும் ஒளியாகின்றது.

அப்படிப்பட்ட நிலையில் ஒளியின் கதிராக இருப்பது தான் துருவ நட்சத்திரம். வருவது அனைத்தையும் அரவணைத்துத் தன்னுடன் இயங்கச் செய்யும் தன்மைகளாக ஒளியின் உணர்வாக மகிழ்ந்திடும் உணர்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக
1,துருவ நட்சத்திரத்தின் சக்தியின் பேரருள் பேரொளியை எடுத்து
2.உடலிலுள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் உயிரின் துணை கொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்


படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த... அகஸ்தியன் பால் செல்லும்...!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.

மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்... தெரிந்தேன்.. அறிந்தேன்... துன்புறுத்தப்பட்டேன்...!

அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.

இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும்  போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.

நமது எல்லை எது...? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.

உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.

ஆனால் “என்னமோ போகட்டும்... நாளைக்கு நடப்பதை யார் அறிவார்...?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.

இப்பொழுது நாம் இந்த உடலான சொர்க்க பூமியில் இருக்கின்றோம். நம் உயிர் சொர்க்க வாசலாக இருக்கின்றது. இந்த சொர்க்க வாசலை வைத்து நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் விண் செல்ல முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையில் அதைச் சொர்க்க லோகமாக மாற்ற வேண்டும். அதற்காகச் சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
1.சொர்க்கத்தை அடைந்திட்ட உயிருடன் ஒன்ற வேண்டும்.
2.அருள் ஒளிச் சுடரை இங்கே வளர்க்க வேண்டும்.
3.வளர்த்தால் நம் உயிர் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

April 2, 2019

ஞானிகள் அமர்ந்து தியானம் (தவம்) செய்த இடங்களின் மகிமைகள்


அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்த பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்த பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!


கேள்வி:-
குழந்தைகளைப் பக்குவப்படுத்தி மெய் ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும்...?

பதில்:-
குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு
1.நம்முடைய வீடு...
2.நம்முடைய சகோதரர்கள் உறவினர்கள்...
3.நம் விவசாயம் என்ன…?
4.நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்துப் பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.
1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் ஆசைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் எண்ணியபடி படிப்பிலும் மற்ற நல்ல பழக்கங்களிலும் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.

செய்யத் தவிர்க்க வேண்டியது:-
1.குழந்தையைக் கவனிக்க முடியவில்லை அவன் அழுது கொண்டே இருக்கின்றான் என்று சொல்லி விட்டு செல் ஃபோனையோ டி.வி.யையோ பார்க்கப் பழகிக் கொடுக்கக் கூடாது
2.குழந்தையை வெறுப்புடனோ ஆத்திரத்துடனோ எதிலுமே கட்டாயப்படுத்தக் கூடாது.
(3.நீ இந்த உண்மையை உணர்ந்து கொள்... நீ சிந்தித்துப் பார்... என்று அவனிடம் இருக்கும் நல்ல உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்
4.ஒரு தடவைக்குப் பத்து முறையாவது நாம் சொல்ல வேண்டும்.)
5.வீட்டில் குழந்தையால் தொல்லையாக இருக்கிறது என்று குழந்தையை மற்றவர்களிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லும் பழக்கம் வரக்கூடாது.
6.குழந்தையை எக்காரணம் கொண்டும் (மனதில் கூட) சாபமிடக் கூடாது... இவன் எல்லாம் உருப்பட மாட்டான்... என் உயிரையே வாங்குகிறான்... நாசமாகப் போகிறவனே... என்ற எண்ணமே வரக்கூடாது.
7.நம் வேலைக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என்று அவனை அலட்சியப்படுத்தக் கூடாது (அலட்சியம் செய்தால் அவன் மேலும் நமக்குத் தான் தொல்லை தருவான்)
8.குழந்தை மேல் அவநம்பிக்கை கொள்ளவே கூடாது...! (கண்டிப்பாக ஞானியாக வளர்வான் என்ற எண்ணம் வர வேண்டும்)

செய்ய வேண்டியது:-
1.கூட்டுத் தியானங்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.
2.ஞான உபதேசங்களைக் குழந்தைகளில் காதில் விழும்படியாகக் கேட்க வைக்க வேண்டும்.
3.மெய் ஞான நூல்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல் வாசித்து அதைக் குழந்தைகளைக் கேட்க வைக்க வேண்டும்.
4.கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உணவோ தண்ணீரோ பாலோ கொடுப்பதிலிருந்து மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது நாம் அந்த அருள் உணர்வுகளுடன் தான் அதைக் கொடுத்துப் பழக வேண்டும்
5.அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை நாம் பதிவாக்காது நம்முடைய நல்ல உணர்வுகளை அவர்களுக்குள் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
6.ஞானத்தைப் பெறுவதும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் (அகஸ்தியர் போகர் வான்மீகி வியாசகர் கொங்கணவர் அத்திரி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் இராமலிங்க அடிகள்)  அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் குழந்தைகளுக்குச் சொல்வதுமே குழந்தைகளுடைய பொழுது போக்காக இருக்க வேண்டும்.
7.ஆக மொத்தம் நாம் நம்முடைய கண்களால் சொல்லால் குழந்தைள் நல்லதைக் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும்..! நல்லதைப் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டும்...!
8.எந்த நிலையிலும் குழந்தைகளுக்கு இதைப் பதிவாக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் நமக்குள் வர வேண்டுமே தவிர குழந்தை கேட்கவில்லை.. கவனிக்கவில்லை.. அவனுக்கு இஷ்டமில்லை அவன் கேட்க மாட்டான்.. எதற்கு இதைச் செய்ய வேண்டும்...? என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது.
9.இன்றைய சுட்டிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக ஞானிகளாக வருவார்கள்.
10.வாய் வழியாகச் சொல்லிச் சொல்லி அவனைத் திருத்த வேண்டும் என்பதற்குப் பதில் அவனுக்குள் ஆழமாகப் பதிவாக்கக் கூடிய செயல்களைத் தான் செய்ய வேண்டும்.
11.நாம் செய்யும் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் குழந்தையிடம் வித்தாகி விளைந்து வருவதை 48 மணி நேரத்திலோ 48 நாளகளிலோ உறுதியாகக் குழந்தையிடம் பார்க்கலாம்.

எங்கள் குழந்தைகள் அனவைரும் உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக வருவார்கள்...!” என்ற வைராக்கியமான எண்ணம் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் வர வேண்டும் (இது தான் மிகவும் முக்கியம்)

இனி நடக்கப் போகும் உலக மாற்றத்தின் நிகழ்வுகள்


நமது பூமி சுழலும் போது அந்தச் சுழற்சியால் காந்தப்புலன்கள் ஏற்பட்டு அதன் மூலம் தான் கவரும் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் பனிப் பாறைகளாக உறைகின்றது.

1.அப்படி அந்த உணர்வின் தன்மை நுகரும் போது பார்வதி பஜே... நமச்சிவாய...!
2.இந்த உடலாக (பூமியாக) மாறுகின்றது. பார்வதிக்கும் சிவனுக்கும் கல்யாணம் என்ற நிலைகள்.

அதாவது பூமியின் ஓடு பாதையில் தன் பார்வையில் பட்ட (விண்ணிலிருந்து வரும்) சக்திகளை நுகரப்படும் பொழுது இந்த உடலான சிவனுடன் சேர்த்து இரண்டற இயங்குகிறது என்று வியாசகர் காட்டுகிறார்.

உலகமே இங்கு திரளும். அதனால் பூமியில் மாற்றங்கள் வந்து விடும் என்பதற்காக வேண்டி நீ தெற்கே போ…! என்று சிவன் சொன்னான். ஏனென்றால் தெற்கே தோன்றியது தான் பூமியைச் சமப்படுத்தும் உணர்வு...!

பூமியைச் சமப்படுத்த அகஸ்தியனைத் தெற்கே போ...! என்று சொல்லும் பொழுது தெற்கிலே (தென்னாட்டிலே) தோன்றியவன் தான் அந்த அகஸ்தியன்.

அந்த அகஸ்தியைன் உணர்வுகளை ஒவ்வொருவரும் எடுத்தால் தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்ற அந்தக் காரணத்துடன் தான் வியாசகர் சொல்லியிருக்கிறார். அதை நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

1.மனித உடலுக்குள் வருவதை மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு இந்தப் பூமியின் திசையைத் திருப்பியதும் அவர் தான்
3.நம் பூமியைச் சமப்படுத்தியவரும் அந்த அகஸ்தியன் தான்.

அது ஒரு காலம் துருவப் பகுதியில் இது வளர வளர இது வளர்ந்து கொண்டே இருக்கும். இது எடை கூடி விட்டால் மாறிவிடும். அப்பொழுது கடல் அலைகள் மாறும்.

தென் துருவம் வட துருவம் எல்லாம் மாறி அதிலே மாற்றங்கள் வரப்போகும் போது நீக்ரோக்கள் வாழும் பகுதி எல்லாம் கடல் அலைகளுக்குள் திருப்பிவிடும்.

கருப்பர்கள் என்ற நிலைகள் வரப்போகும் போது வளர்ந்த நிலைகள் கொண்டு காட்டு விலங்குகளாக மாற்றி விடும். இன்றைக்குச் சக்திவாய்ந்த செயற்கைக் கோள்கள் மூலமாகவும் விமானங்கள் மூலமும் பறந்து
1.கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் ஊர்களை எல்லாம்
2.விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆதியிலே பூமி கவிழும் நிலை வரும் பொழுது அதை மாற்றிப் பூமியைச் சமப்படுத்தியவர்... அணுவின் ஆற்றலைப் பெற்றவர் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த அகஸ்தியர் அவர் அன்றைக்குச் செய்ததால் தான் இப்போதும் இந்நேர வரையிலும் பூமி ஒரு சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் அபரிதமான விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.விஞ்ஞானிகளோ அல்லது அரசை நடத்துபவர்களோ இதைச் திசை திருப்பப் போகிறார்கள்.
2.நாம் எங்கெங்கே போகப் போகிறோம் என்று தெரியவில்லை.
3.இதற்குள் எத்தனையோ ஆசை வைத்திருக்கின்றோம்.
4.பூமிக்குள் பதுக்கி வைத்திருக்கும் சில விஷத் தன்மைகள் (குண்டுகள் ஆயுதங்கள்) வெடிக்கப் போகிறது.
5.அதனால் ஏற்படும் புகை மண்டலம் அடர்த்தியின் தன்மை அடையப் போகிறது.
6.அத்தகைய புகை மண்டலத்தால் சூரியனின் ஒளிக் கதிர்கள் மங்கி நம் பூமியே ஒரு பக்கம் பனியாக உறையப் போகிறது.
7.அப்படி உறைந்தால் பூமி தலைகீழாகப் போகும்

இரண்டு மூன்று வகையில் விபத்து வரப்போகிறது. அதில் எந்த விபத்து என்று... எதிலே வந்து தாக்கப் போகிறது...! என்று யாரும் சொல்ல முடியாது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சின் தன்மை பரவுகிறது. அந்த நஞ்சின் தன்மை வரப்போகும் போது மனிதன் செய்து வைத்தது வெடிக்கத்தான் போகிறது. வெடித்த பின் அதை நுகரத்தான் போகின்றோம். மனித உருவையே மாற்றும் தன்மையாக வந்து கொண்டிருக்கிறது.

ஞானிகள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அவர்கள் பெற்ற அருள் ஆற்றல்களை எடுத்து நமக்குள் அருள் ஒளி சுடராக வரப்படும் போது இந்த வேடிக்கை எல்லாம் நாம் பார்க்கலாம்.

இல்லை என்றால் அந்தச் சுழற்சிக்குள் சிக்கி காணாத நிலைகளில் போய்த் திரும்பவும் முதலிலிருந்து வளர்ச்சிக்கு வர வேண்டும்...!

April 1, 2019

அக்கால ஞானிகள் கேட்ட “பிச்சாந்தேஹி...!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்ன


1.நோயாளிக்கு மூன்று வேளை உணவு
2.சம்சாரிக்கு இரண்டு வேளை உணவு
3.ஞானிக்கு ஒரு வேளை உணவு என்ற உணவின் நியமனக் கட்டுப்பாடு
4.உலகோதய வாழ்க்கையில் எல்லோரும் உடல் நலத்துடன் வாழ்வதற்காக அன்றைய சித்தர்கள் வகுத்த வழி...!

குருவிடம் சிஷ்யன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “குருகுல வாசத்தில் நாவின் சுவையை அடக்கி...!” ஆகாரக் கட்டுப்பாட்டின் வழியில் புலனடக்கம் பெற்று...
1.தனக்குள் இயக்கும் எல்லா உணர்வுகளையும்
2.தன் மனக்கட்டுப்பாட்டில் அடங்கச் செய்வதாகும்.

ஞானிக்கு ஓர் வேளை தான் உணவு என்றால் அதையும் அவன் எப்படி ஏற்கின்றான்...?

ஓர் நாளைக்கு ஓர் முறை தான் என்ற நிலையில் தான் தேர்வு செய்த ஓர் வீட்டிற்குச் சென்று “பிச்சாந்தேஹி...!” என்று கேட்பான். ஆனால் அந்தச் சொல் வழக்கில் இருந்து விடுபட்டு இன்று அதனுடைய புனிதத் தன்மையே திரிந்து போய்விட்டது.

ஞானிகள் வீடு வீடாகச் சென்று பிட்சை கேட்பதில்லை.

இன்று ஓர் ஞானியோ... முனிவனோ...
1.தனது வீட்டிற்குப் போஜனத்திற்காக வரமாட்டாரா...?
2.அவருடைய ஆசியைப் பெற மாட்டோமா...? என்று
3.வாசலில் காத்திருக்கும் இல்லறத்தோர் ஏங்கியது அந்தக் காலம்.
(அக்கால வழக்கம் எல்லாம் இன்று கேடுற்று விட்டது)

ஏதாவது ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்து ஓர் வேளை பகல் பொழுதோ அல்லது அந்திமப் பொழுதோ சென்று சிறிது நேரம் நின்று பிட்சை என்ற ஒரு சொல் கேட்டு அன்புடன் வந்து அளித்திட்ட அமுதை அமுதமாக எண்ணி உண்பார்கள்.

ஒரு வேளைப் பொழுதுதான் உண்ணும் வழக்கமாக இருந்தாலும் “பிச்சாந்தேஹி...!” என்று கேட்டுக் குறித்த அவகாச காலத்தில் உணவு வராவிட்டால் என்ன செய்வார்கள்...?

அங்கு நிற்காமல் திரும்பி வந்து வெறும் நீரைக் குடித்து விட்டு மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்து “ஈஸ்வர தியானத்தில்” ஈடுபடுவார்கள். அக்காலத்தில் மூலிகை ஔஷதங்களைத் குருவின் மூலம் அறிந்து பெற்று அதை உண்டு வந்த அந்த வழக்கம் இன்று நடைமுறையில்  சாத்தியப்படவில்லை.

இன்று உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்துக்கள் குறைவு. அது போக உடல் சோர்வும் மன நலிவும் உற்றுப் பிணிகளுக்கு ஆளாகுவது தான் இன்றைய நிலை.
1.அக்கால ஞானிகள் பெற்ற ஞானம் என்பது மிகவும் எளிதல்ல...!
2.கடுமையின் கடுமையை எதிர் நோக்கி வென்று வந்தார்கள் அவர்கள்.

அன்று மக்கள் தொகை பெருக்கம் இல்லாததால் குறைந்த கால அளவில் தான் பெறவேண்டிய நற்சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் முறைக்குத் “தியானம் என்பதே... மிகக் கடுமையான பரிசோதனை முறைகளாக இருந்தது...!”

தான் பெற்ற சக்தியையே அது எந்த வழித் தொடர் என்பதை அறிந்து அதைப் பெற்று தனது நிலையை மென்மேலும் உயர்த்திடவே அனுபவப் பாட நிலைகள் கொண்டு வளர்ந்தவர்கள் தான் “அக்கால ஞானிகள்...!”

ஒரு வேளை உணவும் கிடைத்திடா விட்டாலும் வெறும் நீரை அருந்தி சந்தோஷமாகத் துயில் கொள்ளும்
1.தியானத் துயிலில் மனப் பக்குவ நிலை பெறும் சத்திய சோதனையையே
2. சத்திய நிலை நிலைக்கப் பெறும் தொடரில் வென்று
3.தனது நிலையை அன்று வளர்த்துக் கொண்டார்கள்.

அதே போல இந்த உலகில் வாழையடி வாழை என வாழ்ந்து கொண்டிருக்கும் ஞான சக்திச் செல்வங்களும் (மக்கள்) பெறவேண்டும் என்ற ஆசையின் நிலையில் தான்
1.இன்று கடுமையை விடுத்து
2.எளிய முறையாகத் தியானத்தின் மூலம் நற்சக்தி பெறுதல் என்று உணர்த்தி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

மிகச் சுலபமான நிலைகளில் எண்ணத்தால் எண்ணி ஏங்கினாலே  கிடைக்கும் வழிக்கு இந்தத் தியான முறையை உணர்த்துவது என்பதே வளர்ச்சியின் வளர்ப்பாக்கி “ஆதி சக்தியின் மூலத்தில் எல்லோரையும் கலக்கச் செய்வதற்குத்தான்..!”

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்


நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி... அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகும் பருவத்தில் இருக்கிறது. இப்படி விலகி விட்டால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுவிடும்.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட... நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப... வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம் என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்... நன்றாக வாழ வேண்டும்...! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பர பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்...?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
(உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா...? இல்லையே...!)
3.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நல்லா இருக்க வேண்டும்...!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்...?

பார்...! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்... இப்படிக் கேவலப்படுத்துகின்றானே...! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ... அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்...!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்...
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்...
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி...” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?  நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா...!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மை காக்கும்...!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...!