ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2018

இருபத்தியேழு நட்சத்திரங்களின் “சூட்சம சக்தி…!”

நம் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் தன்மைகள் தூசியாகவும் துகள்களாகவும் வரும் போது அதிலே ஒன்றுக்கொன்று எதிர்நிலையாகி மோதும் போது மின்னலாகப் பரவுகின்றது.

அதிலிருந்து வரும் துகள்களை துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் உணர்வாக இன்றும் வளர்ந்து கொண்டு உள்ளது. 27 நட்சத்திரத்திலிருந்து வருவதைத் தான் அது உணவாக உட்கொள்ளுகின்றது.

நம் உயிரும் 27 நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது தான். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

அதே போல் இருபத்தேழு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் கலந்த நிலைக்கொப்பத்தான் நம் பூமியில் தாவர இனங்கள் விளைகின்றது.

தாவர இனங்களிலிருந்து விளைந்து வருவதை நாம் உணவாக உட்கொள்ளும் போது (தாவரத்தில் கலந்த நட்சத்திரத்தின் இயக்கம்) இயக்கச் சக்தியாகி உடலுக்குள் இது அணுத் தன்மை அடைந்து அதனுடைய மலத்தை உடலாக மாற்றித் தன் இனத்தைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

நாம் நுகர்ந்ததை நமது உயிர் அது ஜீவ அணுவாக மாற்றி அதன் உணர்வின் வரிசையில் அதக் கருவாக்கி அணுவாக்கி விடுகின்றது. அது அணுவாகி விட்டால் அதையே (தாவரத்தில் விளைந்ததை) உணவாக உட்கொள்ளும் நிலையாகின்றது.

எதிர் நிலையான நட்சத்திரங்களின் துடிப்பால் உயிர் எப்படி உருவானதோ இதைப் போல தான் ஒவ்வொரு தாவர இனங்களிலும் கலந்து கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் நம் உடலுக்குள் வந்தபின் அந்தந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நம் உயிர் எவ்வாறு உருவாகின்றதோ அதே போல தான் அணுவின் தன்மை அடையப்படும்போது அதற்குள்ளும் உயிர் என்ற நிலை ஆகின்றது.

அப்பொழுது அந்த இயக்கத்திற்குப் பெயர் ஈசன் என்றும் இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் உருவாவதை லெட்சுமி என்றும் அதற்குள் இருக்கும் உணர்வுகளைக் குணங்கள் என்றும் அதனின் மணத்தின் உணர்வைப் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் ஞானிகள் காரணப் பெயர் வைத்தார்கள்.

எதனின் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள் உருப் பெற்றதோ அதன் ஞானத்தின் வழி கொண்டு தன் உணர்வைக் கவர்ந்து அதனின் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்தோமென்றால் அதை உயிர் நமக்குள் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை கருவாக்கி வேதனை என்ற உணர்வாக நரகலோகமாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால் நமது உயிரான ஈஸ்வரலோகத்தில் அது கருவாக உருப் பெறுகின்றது.

உடலுக்குள் சென்றபின் இந்திரலோகமாக மாறி அணுவின் தன்மையாகி அதனின் மலம் சிவலோகமாக (உடலாக) மாறினாலும் இருளை அகற்றிடும் தன்மையாக அது சொர்க்கலோகமாக (ஒளிச்சரீரம்) மாறுகின்றது.

1.அந்த அணுத் தன்மை வளர்ந்தால்
2.மின்னல்கள் பல வகையில் பரவினாலும்
3.அந்த மின்னலிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளைச் சுவாசித்து
4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
5.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை உணவாக்கிடல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதனை ஊழ்வினை என்ற வித்தாகப் பதியச் செய்கின்றோம். பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் நுகர்ந்தால்
1.பேரருள் என்ற நிலையைப் பெற முடியும்.
2.பேரருள் என்றால் எதனையுமே தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்றி
3.ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

மனிதனாக இருக்கும் போது துருவ மகரிஷி நஞ்சினை வென்று உணர்வினை எப்படி ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த நிலையை நாமும் பெற முடியும்.

அறியாமல் வரும் பகைமைகளை “மறைமுகமாக நீக்கும் முறை” – தெய்வீக அன்பை வளர்க்கும் முறை

நம் குடும்பங்களிலோ அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் குடும்பங்களிலோ அன்பாகப் பண்பாக நாம் பழகி வந்தாலும் சந்தர்ப்பத்தால் பகைமையாகி விடுகின்றது.

அப்படிப் பகைமைகள் விளைந்தாலும் நாம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். மன பலம் கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

பகைமையான உணர்வுகளைக் கேட்டறியும் பொழுதெல்லாம் உடனே இதைத் தூய்மைப்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தக் குடும்பங்களில் படர வேண்டும்.
2.அவர்கள் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.
3.அவர்களுக்குள் வசிஷ்டரும் அருந்ததி போல ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் வளர வேண்டும்.
4.அவருக்குள் அந்த பற்றுடன் பாசத்துடன் வளர்ந்திடும் இந்த நிலைகள் வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று நாம் எண்ணி எடுக்கும் போது நமக்குள் வரும் இந்தப் பகைமை என்ற பற்றைப் பிரித்துவிடும்.

எது…?

அவர்களின் பகைமையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி இந்த நினைவை நமக்குள் ஊன்றவிடாது.

நான் நண்பனாக அவர்கள் வீட்டிற்குள் சென்றாலும் இந்த எண்ண அலைகளைப் பதித்து இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்களுக்குத் தெரிகின்ற மாதிரி நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

1.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
3.அவர்கள் பொருள் கண்டு உணர்ந்து செயல் பட வேண்டும் என்று மனதில் எண்ணி
4.நம்முடைய பார்வையின் அலைகளை அங்கே படரச் செய்து
5.நம்முடைய மண் அவர்கள் வீட்டிலே இவ்வாறு எண்ணிப் பதித்து விடுங்கள்.

எங்கே ஊன்றி இருக்கின்றீர்களோ அங்கே பதிவாகும். இப்போது இது பதிவாக்கி விட்டால் இந்த உணர்வுகள் அங்கே பதிந்தது என்ன செய்யும்?

அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த அருள் ஞானத்தை ஊட்டும்.
1.பகைமை என்பது நம் எண்ணத்தில் சிறிதளவு கூட வராது.
2.தெய்வீகப் பண்புகள் நமக்குள் வளரும்.
3.தெய்வீக அன்பாக மாறும்

இந்த முறையினைக் கடைபிடித்தால் மிகவும் நல்லது. செய்து பாருங்கள்.

February 1, 2018

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது? அதை மாற்றும் வழி என்ன?

மனிதனின் வாழ்க்கையில்
1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

ந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டு விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

வேதனை உணர்வுகள் -அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்.., “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.

அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகிவிட்டால்.., அது உமிழ்த்த நேர்ந்தால்.., “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும்.

அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.

அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.

பித்த சுர்ப்பிகளில் சேரும் இத்தகையை நஞ்சான உணர்வுகளைக் குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வளர்ந்து நஞ்சை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். உயிருடன் ஒன்றி எல்லா உணர்வுகளையும் ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்.

அகண்ட அண்டத்திலிருந்து வரும் கடுமையான நஞ்சுகளையும் உணவாக எடுத்து அதை ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் அந்த “அகஸ்தியன்”.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நமக்குள் உள்ள “ஒவ்வொரு குணங்களிலும்... ஒவ்வொரு எண்ணங்களிலும் இணைக்க வேண்டும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் எந்தக் குணம் வந்தாலும் அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் கலக்கச் செய்யும் பழக்கம் வரவேண்டும்.

அதே சமயத்தில் நம் உடலிலுள்ள சிறு குடல் பெரும் குடல் கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறு நீரகம் இருதயம் போன்ற உறுப்புகள் முழுவதிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கண்ணின் நினைவு கொண்டு இணைக்க வேண்டும்.

அப்பொழுது அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடையும். அந்த அகஸ்தியன் எல்லா உனர்வுகளையும் ஒளியாக்கியது போன்று ஒளி பெறும் உணர்வின் கருவாக விளையத் தொடங்கும்.

நஞ்சை அடக்கிப் பேரருள் பேரொளியாக நமக்குள் மாறும். உடல் நலம் பெறுவோம். நோய்கள் நமக்குள் வராத நிலையும் ஆகின்றது.

இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிகளிலேயும் நம் ஆறாவது அறிவினை அந்த நல்ல உணர்வினைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் எத்தகைய விஷம் வந்தாலும் அதை ஒளியாக மாற்றுவது போல் நம் உயிரான்மாவிலும் அந்த ஆற்றல் பெருகும். தீமை புகாத வலிமை பெற்றதாக மாறும். 

உடல் வலிமை பெறவேண்டும் என்றால் “பச்சைக் காய்கறிகளை.. உணவாக உட்கொள்ளுங்கள்...!” என்று டாக்டர்கள் சொல்வார்கள் – அதனின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்...!

இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. “வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை”.

மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.

மற்ற உயிரினங்களைப் போன்று நாம் பச்சையாக உட்கொண்டால் இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால் இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.

இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை...!” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர் நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.

உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின் அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்?

பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றி பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.

1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்
2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.
3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளைக் காணும்போதெல்லாம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதைச் சேர்த்து விஷத்தை வெல்ல வேண்டும். “விஷத்தை வென்றிடும் அணுக்களாக...” நமக்குள் பெருக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் விஷத்தைக் குறைத்து இன்று மனிதனாக வந்த நாம் விஷத்தை வென்றிடும் இதனின் கணக்குக் கூடக் கூட விஷத்தை ஒளியாக மாற்றிடும் வளர்ச்சி பெறுவோம்.

“ஒளியின் சுடராகப் பெற்றிடுவோம்”. மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடலாம்.

குருநாதர் என்னை அருள் ஞானப் பாதையில் வளர்த்த முறை…!

இன்றைக்குப் பல எத்தனையோ ஆயிரம் பேர் என்னை (ஞானகுரு) எண்ணிக் கொண்டு வருகின்றீர்கள். சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. தலை வலிக்கின்றது. மேல் வலிக்கின்றது. இதையெல்லாம் பாய்ச்சுவீர்கள். இது உங்கள் உணர்வு.

1.என் உணர்வு உங்களிடம் இருக்கின்றதனால்
2.நீங்கள் எந்த வகையில் என்னை (ஞானகுரு) எண்ணி பதிவுப் செய்கின்றீர்களோ
3.அந்த உணர்வு தான் உங்களிடம் வருகின்றது.

சாமி (ஞானகுரு) தான் கஷ்டத்தை எல்லாம் தீர்க்க வேண்டும்…! என்று எண்ணிப் பதிவு செய்திருந்தீர்கள் என்றால்
1.அது தான் உங்கள் நினைவிற்கு வரும்.
2.அந்த நினைவுடனே என்னிடம் வருவீர்கள்.
3.இப்படி எண்ணினீர்கள் என்றால் “என்னிடமிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியாது…!”

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.சாமி…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிணீர்கள் என்றால்
3.என்னிடமிருந்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.
4.அது உங்களுக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளரும்.

என் கஷ்டமெல்லாம் நீங்கவில்லை…! ஒரே தலைவலியாக இருக்கின்றது…! இன்றைக்கு எனக்கு இப்படியே தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது…! என்று இப்படிச் சொன்னால் இதைத்தான் வளர்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

அதே சமயத்தில் என்னிடம் பேசும் போது இதே உணர்வை பதிவு செய்து விட்டீர்கள் என்றால் என்னை நீங்கள் எண்ணும்போதெல்லாம் இங்கே என் ஆன்மாவில் வந்து மோதும்.

இதை எல்லாம் தடுப்பதற்கு அந்த மகரிஷிகளின் உணர்வை எனக்குள் நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தேன் என்றால் உங்களை மாதிரி என்னையும் கீழே கொண்டு வந்துவிடும்.

ஆகவே அந்த உணர்வுகளை மாற்றி அமைப்பதற்கு அந்த இருபத்தி நான்கு மணி நேரமும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நிலைகள் எல்லாம் அதிகமாகிப் போனதென்றால் அதைக் கழிப்பதற்கு நான் படுகின்ற சிரமம் எனக்குத்தான் தெரியும்.

 குருநாதரிடம் கூட காட்டிற்குள்ளே போகும் போது இத்தனை சிரமம் எனக்குத் தெரியவில்லை.

முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்ட பின்
1.தீமையின் நிலைகளில் இருந்து விடுபடும் சந்தோஷம் வரும்.
2.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாகத் தெரியும்.
3.அப்புறம் சந்தோஷமாக இருக்கும்.
4.எவ்வளவு நேரம் வருத்தப்பட்டமோ அந்த அளவுக்குச் சந்தோஷத்தை உருவாக்கச் செய்யும்.

அப்படித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை வளர்த்தார். உங்களுக்கும் அப்படித்தான் கொடுத்துக் கொண்டுள்ளோம்.

அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் எடுத்தால் தீமை விளைவிக்கும் நிலைகளை இது அடக்கி உங்களைத் தூய்மைப்படுத்தும்.

உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கும் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
1.மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.நீங்கள் அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று எனக்குள் வளர்த்து
3.அதே நினைவு கொண்டு தான் எல்லா நேரமும் செயல்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் உங்களால் அந்தச் சந்தோசத்தை அனுபவிக்க(வித்திருக்க) முடியும். 

“நாசமாகப் போகவேண்டும்” என்று சொல்வதை விட்டு விட்டு “நல்லதாக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொன்னால் முதலில் நமக்கு நல்லதாகின்றது…!

மனிதனானவன் தீமையை அதிகமாகச் செயல்படுத்துவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான்.

நன்மை செய்ய முற்பட்டாலும் வேதனைப்படுத்தும் நிலையோ..... துன்பப்படுத்தும் உணர்வையோ அவர்கள் நுகர்ந்து விட்டால் நல்ல குணங்களை மறைந்து செயலற்றவர்களாக மாறி தீயவர்களாகத்தான் மாறுகின்றார்கள்.

ஒருவன் அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொள்வோம் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடினாலும்
1.ஒரு சமயம் ஏன் இப்படி என்று திரும்பினால்
2.அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறி விடுகின்றோம்.
3.இப்படித்தான் மக்கள் மத்தியில் இந்த உணர்வுகள் இயக்குகின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது  பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போகட்டும்...! மண்ணிலே போகட்டும்...! என்று சொல்வார்கள்.

நாசமாக வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அதைச் சொல்பவர் உடல் முழுவதும் பெருக்கப்பட்டு
2.இவர்கள் விட்ட உணர்வையே அவரின் உயிர் உருவாக்கி அவருக்கே தான் பாதகமாக்கும்.

ஒரு வித்தை உருவாக்கி அது விளைந்த பின் அதே வித்தை இன்னோரு இடத்தில் ஊன்றினாலும் அதே வித்துதான் மீண்டும் விளைகின்றது.

நாசமாகப் போக வேண்டும் என்று முதலில் இவர்கள் எண்ணுகின்றனர். அந்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக  உருவாகின்றது (ஊன்றப்படுகின்றது).

அது சொல்லாகப் போகும் பொழுது விளைந்த சொற்கள் ஆகாத எதிரியின் செவிகளில் படுகின்றது. அந்த உணர்ச்சிகளைக் கண் வழி கவர்கின்றது.

என்னை இப்படியெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டாயா...! என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் இருவரையுமே வீழ்த்தி அவர்களுக்குள் உள்ள நல்ல குணங்களையும் மடியச் செய்கின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழவேண்டும் என்று அறியாதபடி சிலர் தவறான வழிகளில்
1.எதிரிகள் வீழ்ந்திட வேண்டும் வேண்டும்
2.என் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று ஆலயங்களுக்குச் சென்று வேண்டி
3.சந்தர்ப்பத்தால் வெறுப்பின் நிலைகளுக்குத்தான் செல்கிறார்கள்.

என் எதிரி வீழ்ந்து விட்டால்… என் தொழில் விருத்தியானால்… உனக்கு ஆட்டைப் பலி கொடுக்கிறேன் என்று பக்தியில் தான் நம் புத்தி செல்கிறது.

குருநாதர் இதைத் தெளிவாக காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி போன்ற தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுக்கின்றோம். சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டால் ஒன்றைக் கொல்லும் உணர்ச்சியைத்தான் ஊட்டுகின்றது.

ஆனால் நம் நல்ல சிந்திக்கும் தன்மையை மாற்றும் நிலையிலிருந்து மீள்வதற்கு அந்த உருவங்களை ஞானிகள் காட்டினாலும் அதை நாம் அறியவில்லை.

நாம் சிந்திக்கும் உணர்வின் தன்மையை இழந்து,.. அந்தத் தீமையின் உணர்வை வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வு இழக்கப்பட்டு நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் நமக்குள் எப்படி கடும் நோயாக மாறுகின்றது.

மக்கள் அறியாத நிலைகளில் இப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டு வருகின்றனர். இதிலிருந்து இவர்களை நீ மீட்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களுக்குள் நீ பதிவு செய் என்றார் குருநாதர்.

நம் நல்ல சிந்தனைகளை மறைக்கும் இந்த நிலையிலிருந்து நாம் மீள்வதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

பின் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக வளர வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் பார்ப்பவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து இப்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். .

1.நல்லதை மற்றவர்கள் பெறவேண்டும் என்று வேண்டும் பொழுது
2.அந்தச் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.
3.நாம் அதுவாகவே மாறுகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய நிலைகளில் நம்மைப் பிறர் வேதனைப்படச் செய்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
4.இவ்வாறு உடலுக்குள் பல முறை செலுத்தல் வேண்டும்.

ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைப்படச் செய்த உணர்வுகளை அடக்கி அந்த விஷத்தை அடக்குகின்றது.

மெய் ஞானியின் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெறுவது தியானம்.

1.நாம் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.என்னைப் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அந்த நிலைகள் பெற வேண்டும்.

மெய் ஞானிகளின் உணர்வை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் அது தவம்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது.
1.மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது
2.அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.