ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2014

நம்மை ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்திலிருந்து விடுபடும் வழி

ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன், கீழே இருக்கக்கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. 

ஆனால், நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் அலைபாயும் பொழுது, தெளிவாகத் தெரிவதில்லை.

நமக்குள் நன்மையான நிலைகளையும், நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் இந்த நிலையைத்தான்,
அந்த மெய்ஞானியின் உணர்வின் அலையை,
நமக்குள் செலுத்தப்படும் பொழுது
பல உணர்வின் அலைகள்
அலைந்து கொண்டிருக்கும் நிலையை
அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்து தியானிக்கப்படும் பொழுது,
அந்தத் துன்பத்தைப் போக்கக்கூடிய
மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவுகின்றது.

வாழ்க்கையில் உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக் குழப்பத்தை, மனக் குடைச்சலை இது நிவர்த்தி செய்து, உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி, உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.

அதே சமயம் வியாபாரத்திலும் கூட உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.

குடும்பத்திலும் கூட உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது. குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

ஆக, அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு, ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும், வளர்ச்சியாகும்.


அவ்வாறு அந்த உணர்ச்சியின் நிலைகள் பெற்று, வாழ்க்கையிலே மகிழ்ச்சி என்ற நிலையில் இந்த உடலைவிட்டுச் சென்றபின், இந்த உயிராத்மா ஒளியாக மாறி, எந்த மகரிஷிகள் காட்டி உணர்த்தினார்களோ அங்கே செல்ல முடியும்.

February 6, 2014

12 வருட கால அனுபவ வித்துதான் "ஆத்ம சுத்தி" - ஞானகுரு

1. ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை (வித்து) குருநாதர் கொடுத்த நிலை
நாம் எந்தக் குறைகள் கண்டாலும், உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்துவதற்குத்தான், யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து, அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து, நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால், அவருக்கு பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த அந்த நிலைகள், அந்தத் துன்பங்கள் விளைய வைக்கும் அந்த நிலைகளிலிருந்து மீள்வதற்கு, என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்து, தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது? என்ற நிலையை அறியச் செய்தார்.

மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் கொண்டு
அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது,
ஒரு மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயல்படுகின்றது
என்பதையும் காட்டினார்.

அந்த எண்ணத்தை எடுத்து, அதைப் போன்று மனித உடலில் விளைய வைத்து, ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற நிலையையும் எம்மைப் பெறச் செய்தார்.

அதைப் பெறச் செய்து, எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து, அந்தத் துன்பத்தை நீக்க “நீ எப்படி எடுக்க வேண்டும்” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும், எமக்குள் வரக்கூடிய வியாதியையும், நிவர்த்தி செய்ய முடிந்தது.
2. 12 வருட கால அனுபவத்தில் எமக்குள் விளைய வைத்த மெய்ஞானிகளின் ஆற்றல் தான் "ஆத்ம சுத்தி"
அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து, அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து,
அப்படி வளர்த்துக் கொண்ட
“அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” இப்பொழுது உபதேசிக்கின்றோம்

இந்த உபதேசத்தின் உணர்வை உங்கள் ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் நன்மை தீமைகளை உருவாக்கும் நிலைகளில்
அந்த நன்மையை உருவாக்கும்
உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு,
இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.

அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் சேர்க்கப்பட்டு, உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் உணர்வுகள், உங்களை ஆட்டிப்படைக்கும் இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.
ஆகவே, நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி,
உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை
நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருடகால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது, அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து, திரும்ப உபதேசத்தின் நிலைகள் கொண்டு, உங்களுக்கு வாக்கின் நிலைகள் கொண்டு, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளை, நீங்கள் உங்களுக்குள் அந்த ஞானத்தை அந்த நல்ல சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும், ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

February 4, 2014

தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் குரு காட்டிய இந்த அருள்வழிகள்

1. குருநாதர் காட்டிய அருள் வழி
பிறர் குறை செய்வதைப் பார்த்தவுடன், ‘’நீ குறை செய்கிறாய்’’ என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் அதைப்போல நமக்குள் அந்தக் குறையான உணர்வு வரப்படும்போது, து நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி, ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படித் தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு நாமே
நம்மைக் கோபப்படச் செய்யும்,
குரோதப்படச் செய்யும்,
வேதனைப்படச் செய்யும்,
சோர்வடையச் செய்யும்,
இந்தக் குறைகளை நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.
அதைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான், நமது குருநாதர் காட்டிய ந்த அருள்வழி

நமது குருநாதர் அருளான அந்த அருள் ஒளிப்படி, மெய்ஞானிகள் வளர்த்து, அவர்கள் உடலில் விளையவைத்த சத்துக்கள் நம் பூமியிலே படர்ந்திருக்கின்றது.

ந்த மெய்ஞானிகள், சப்தரிஷி மண்டலங்களில் மண்டலங்களாக இருக்கின்றார்கள். அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து நீங்கள் சக்திகள் பெறுவதற்கு, யாம் சதா உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

இந்த உணர்வை டுப்பதற்கு, ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, அது உங்களுக்குள் உள்ள மனக்கலக்கத்தைத் தடுத்து நிறுத்த உதவும்.
2. வேக வைத்துத்தான் எதையும் உட்கொள்ள வேண்டும்
அதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், நம் உடலுக்குள் வியாதியாகி நம் உடலுக்குள் விளைய ஆரம்பித்து விடுகின்றது. வ்வப்பொழுது, உடனுக்குடன் நாம் அதைத் துடைக்க வேண்டும்.

உங்களுக்கு, எந்த சந்தர்ப்பத்தில் துன்பங்கள் நேர்ந்தாலும், அடுத்த கமே நீங்கள் ஆத்மசுத்தி செய்தீர்கள் என்றால், மனபலம் கிடைக்கும். ஆக, நம் உடலில் பின்னால் வரக்கூடிய துன்பத்தை, முன்னாடியே தடுத்து நிறுத்திவிடலாம்.,

கெட்டதை முதலில் நாம் அறிந்து கொள்கின்றோம். அதாவது, கருணைக் கிழங்கிலே விஷம் இருக்கின்றது என்று அறிந்து கொள்கின்றோம். அதை வேக வைத்து நீக்குகின்றோம்,

ஒருவர் கெட்டவர் என்று, நாம் எண்ணுகின்றோம். அவருடைய எண்ணங்களை நாம் மனதிலே எண்ணும் பொழுது, அவர் செய்கையினுடைய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி, அந்த உணர்வுகள் வந்து, அவரைக் குறையாகப் பேச வைக்கின்றது.

அப்படிக் குறையாகப் பேசும் பொழுது, அந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறுகின்றது. ஆக, நம் உடலுக்குள் நாம் விஷத்தைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது, கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறது என்று தெரிகிறது. அதை வேக வைத்துத்தான், நாம் சாப்பிடுகின்றோம்.

அதைப் போல, ஒருவரிடத்தில் நாம் குறை காணும் பொழுது, அந்தக் குறையான உணர்வின் விஷத்தை நாம் நேரடியாக உட்கொள்ளாதபடி, ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அந்தக் குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ, யார் மேலே காணுகின்றோமோ, அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

ஆத்ம சுத்தி செய்து, நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதைப் போன்று எண்ணிப் பழக வேண்டும்.

February 3, 2014

முறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் உள் உணர்ச்சி

இப்பொழுது, முறைப்படி நாம் தியானமிருக்கிறோம் என்று சொன்னால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நமக்குள் பெறுவதற்குத்தான்.

அதற்டுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி, மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும், என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.

அப்படி தியானிக்கப்படும்போது, இந்தக் காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி, உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அந்த அருள்சக்தியாலே உங்களுக்குத் துன்பம் போகும் என்று யாம் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வுக்குள் பதிவுசெய்த இந்த உணர்வை
ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன்,
அந்தக் காற்றிலிருந்து அந்தச் சக்தியை எடுத்து,
உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.

காரணம், சதா உங்களிடம் யாம் வாக்குகளைச் சொன்னாலும், அதை நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, உங்கள் உடலைக் கோயிலாக மதித்து,
அவன் வீற்றிருக்கக்கூடிய கோயிலில்,
அங்கே நல்ல வாசனையைப் போட்டால்
எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று யாம் தியானிக்கின்றோம்.

அதே சமயத்தில், அதற்கு வேண்டிய அந்த சக்தியை எடுத்து, உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று, இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம். அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது, அந்த சக்திகள் கிடைக்கும்.

சில நேரங்களில், இங்கே எம்மைச் சந்தித்துப் போனவர்களுக்கெல்லாம், நெற்றியிலே குறு குறு என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால், உங்கள் உடல்களில் "ஒருவிதமான புது உணர்வுகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ, ஞ்சலமோ வரப்படும்போது, மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில் கூட,
யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்,
உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்.
அந்த நேரமாவது நீங்கள் பார்த்து, உணர்ந்து, சுதாரித்து, ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கினால், அந்த சக்தி உங்களுக்குள் இணைந்து, அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க இது உதவும்.

நீங்கள் எண்ணி எடுத்தால்தான், அந்தச் சக்தி கிடைக்கும்.
ஆகவே, ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த ஆயுதத்தை
பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்

February 2, 2014

சாமி செய்யும் என்றால் சாமி ஒன்றும் செய்யாது, ஏன்?

1. சாமி செய்யும் என்றால் சாமி ஒன்றும் செய்யாது, ஏன்?
பக்தி என்ற நிலைகளில், ஆராதனை செய்துகொண்டு
சாமி செய்யும் என்றால், ஒன்றும் செய்யாது”.

சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை
நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்,
அந்த வேதனை கலந்து, நல்ல குணமும் சேர்ந்து
உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.

கடைசியிலே, நமக்குள் அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம், வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான்
தெய்வமாக உணர்த்தப்பட்டு, அதை முன்னிறுத்தி,
இந்த குணம் உங்களுக்கு இன்னது செய்யும்,
இந்த குணம் நம் உடலிலே இருக்கிறது.
உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை,
அதற்குப் பெயர்களை வைத்து
தெய்வ உருவங்களாக காட்டி
அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால், நாம் ஆராதனை செய்துவிட்டு, சாமி செய்யும்என்றால் எப்படிச் செய்யும்?
2. தியானம் செய்வதை பெரிய மலை என்று எண்ணுகின்றோம்
தியானம் என்றால் என்னமோ பெரிய மலை என்று எண்ணுகிறோம்.
நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
திரும்பத் திரும்ப நினைத்து,
அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால், இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு, குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். அந்தச் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியை,
சொல்லாலே, பேச்சாலே, இந்த உணர்வாலே கொடுத்து,
உங்களுக்குள், நீங்களும் வளர்த்துக் கொள்ள
வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து, இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை, மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம். இதைப் போலத்தான், இந்த தியானம் என்பதின் நிலைகள்.
3. எண்ணும் எண்ணமே இறைவன், இறையின் செயலே தெய்வம்
அழுத்தமாக ஓம் ஈஸ்வரா என்று,
நம் உயிரை - புருவ மத்தியில் எண்ணி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்என்ற
சுவாச உணர்வுகளை
நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி”, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்களுக்குள் தீமை செய்யம் அணுக்களை இது நன்மை செய்யும் அணுக்களாக மாற்றும். நல்ல சிந்திக்கும் திறன் கிடைக்கும். வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவான வழியைக் காட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

இந்த சக்தியை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ச்சப்படும் பொழுது, இந்த உணர்வுகள் அங்கேயும் சென்று வேலை செய்யும்.
தீமைகள் அகலும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

வீட்டிற்குள்ளேயோ, தொழில் செய்யும் இடங்களிலேயோ, மற்ற இடங்களிலேயோ, பகைமைகள் வருகின்றது. அந்தப் பகைமையை நீக்கச் செய்யும் இடம்தான் கோவில்.

அதாவது கோவிலுக்குள் வந்தால் ஒருமை. மக்கள் அனைவரும் ஒன்றி வாழ மகிழ்ந்து வாழத்தான் அன்றைய ஞானிகள் கோவிலை அமைத்தார்களே தவிர,
நம் குறைகளைச் சொல்லவோ,
வேதனைகளை வெளிப்படுத்துவதற்கோ,
மற்றவரை வேதனைப்படச் செய்வதற்கோ கோவில் இல்லை.

மனிதனைப் பண்படுத்தி, அடுத்த நிலையாக மனிதன் தெய்வீக நிலை பெறச் செய்ய உருவாக்கப்பட்ட இடம்தான் கோவில். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வம். இதைத்தான் கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று அன்று வியாசக பகவான் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

February 1, 2014

நல்லவர் கெட்டவராக ஆவதன் காரணம் என்ன...?

1. அசுத்தமானவற்றை அப்புறப்படுத்தும்போது அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது
நாம் நல்ல சுத்தமான கையைக் கொண்டு, அசுத்தமானப் பொருளை அப்புறப்படுத்துகின்றோம். அப்படி அப்புறப்படுத்தும்போது கையிலே அந்த அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது. கையில் ஒட்டிக்கொண்டதைத் துடைக்க வேண்டுமல்லவா?

சுத்தப்படுத்தாமல் அந்த அசுத்தமான கையுடனே,
உணவை உட்கொண்டால் என்னவாகும்?
நல்ல பொருளும் அசுத்தமாகும். சுவையும் கெடும்.

இதைப்போலத்தான், இந்த வாழ்க்கையில் யாருக்கு எந்த நன்மை செய்தாலும், தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும், அந்த அசுத்தத்தை நீக்க, அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து, இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை மறவாது செய்து பழக வேண்டும்.

பிறர் கஷ்டங்களோ, துன்பங்களோ, தவறுகளோ இதைப் பார்க்கப்படும்போது அறிகின்றோம். அடுத்த நிமிடம் அது நமக்குள் ஜீவனாக வளரக்கூடாது.

நம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போதுதான், அதன் முகப்புகளிலே இது வட்டமிடத் தொடங்குகின்றது.
ஆக இந்த உணர்வைக் கவரும்போது,
தீமைகளைக் கவர்ந்துதான்
அதைச் செயல்படும் தன்மை வரும்.
இது உள்நின்று, அந்த அணுக்கள் வளர்ச்சி தன்மை வரும்.

இது உள்நின்று அந்த அணுக்கள் வளர்ச்சியாகிவிட்டால், அந்தத் தீமையின் அணுவாகவே அது மாறிவிடும். ஆக, நல்ல அணுவாக இருந்து தீமையின் அணுவாகிவிட்டால், தனக்குள் இதனின் தன்மை நோயாக உருப்பெற்று விடுகின்றது. இதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒருவர் உங்களைத் திட்டிவிட்டால், அதைப் பதிவாக்கிவிட்டால், பகைமையாகி அவர்களை எண்ணும்போதெல்லாம் பகைமை உணர்ச்சிகள் நமக்குள் தூண்டும். ஆக, அவரைப் பற்றி தவறின் நிலைகளுக்கு இழுத்து வந்துவிடும்.

பின், நாம் திரும்பிப் பார்த்தால் “இப்படி நினைத்தேன், இப்படி வந்துவிட்டது” என்போம். தவறு செய்தவனின் உணர்வு வரப்படும்போது, நாமும் இங்கே தவறு செய்யும் நிலையே வந்துவிடுகின்றது.

நாம் செய்யும் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, ”ஐந்தாறு பார்த்தாய் போய்யா, என்பார்கள்”. தவறு செய்தவர்களிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள். உடனே கோபப்படுவார்கள்.

கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்று சொன்னால், “எனக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டான் போய்யா” என்றுதான் சொல்வோம். இந்த வேகம், சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்தவிடாது,

அப்பொழுது, அதைச் சொல்கிறார் என்ற நிலையில், தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தபின், “ஈஸ்வரா” என்று அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து, இதைச் சுத்தப்படுத்தும் அந்த அருள்ஞானத்தை நாம் பெற்றோமென்றால், தீமைகளைத் தடுக்கும். நம் சிந்தனையைச் சீராக்கும்.
2. நல்ல அணுக்களின் முகப்பில் அருள்ஞான உணர்வுகளை இணைத்து சுத்தப்படுத்த வேண்டும்
இல்லையென்றால்,
நல்ல அணுவின் முகப்பில் வரப்படும்போது,
உணர்வின் அறிவாக ஊட்டும் “அதை” மறைத்துவிடும்.
நம்முடைய நினைவாற்றலும் மறைந்துவிடும், மறந்துவிடும்
தவறின் நிலைகளை நமக்குள் வளர்த்துவிடும்.

தவறான அணுக்கள் வளர்ந்துவிட்டால், பின் நோயாக உருவாகும். சிந்தனை குறையும். உடலில், அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டி, தசைகளைக் குறைக்கும்.

இதை எதற்கு உங்களுக்குச் சொல்கிறோம் என்றால், சந்தர்ப்பம் நம்மை எப்படியும் எந்ததெந்த வகையிலும், இது கலந்தபின் நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றும். ஆகவே இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அதற்குத்தான் அடிக்கடி நாம் அருள் மகரிஷியின் உணர்வை நாம் கவர்தல் வேண்டும். அதை நாம் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்ட வேண்டும். நம் உடலுக்குள், அதைப் பரப்புதல் வேண்டும். இது என்றைக்கும் சதா கிடைத்துக் கொண்டே உள்ளது.

அன்று அகஸ்தியன் தம் இளமைப் பருவத்தில்
தான் கற்றுணர்ந்த உணர்வும்,
அண்டத்தைக் கண்டுணர்ந்த உணர்வும்,
அவனிலே விளைந்த நிலைகள்
இன்றும் இங்கே படர்ந்துள்ளது.

அவன் வளர்ச்சியில், வளர்ந்து வந்த நிலைகளில் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி, இருளை நீக்கி ஒளியைக் காணும் நிலைகள் பெற்றான்.

நமக்கு முன் வந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை, எளிதில் நீங்கள் கவர்வதற்குத்தான்”
உங்களுக்குள் இதை உபதேசிப்பதும்,
திரும்பத் திரும்ப அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்குவதும்.

அப்படிச் செய்யும் பொழுது, நீங்கள் மீண்டும் நினைவுகொண்டு அதை நுகர்வதும், நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் நன்மை செய்வதும், நல்ல சந்தர்ப்பமாக உருவாகின்றது. அதற்குத்தான் இதைச் செய்கின்றோம். எமது அருளாசிகள்.