ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2013

ஒருவருக்கு நல்லது செய்ய, எந்த முறைப்படி செய்ய வேண்டும்?

நம்மை ஒருவர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், நீங்கள் எந்த நன்மை செய்தாலும், அது வீண்தான்.

எதிர்பாராது நன்மைகள் பல செய்தோம் என்றால்,
அது நம்மையும் பாதிக்காது.
நமக்குள் செய்த நன்மையின் தன்மை
நமக்கு உயர்ந்த உணர்வைக் கொடுக்கும்.

ஒருவருக்கு உதவி செய்துவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், “நான் இத்தனை செய்தேன், அவர் என்ன செய்தார்?” என்ற நிலைகளை முன்வைத்தால் உதவி செய்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆக, நாம் செய்தும் பலனற்றுப் போய்விடுகின்றது.

அவரும் பெறமுடியவில்லை. இரண்டு பக்கமும் பலன் இரண்டு பேருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது. இதைப் போன்று நம் வாழ்க்கையில் எதைச் சீர்படுத்த வேண்டும். எதனைப் பெறவேண்டும் என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, ஒருவரிடம் எதிர்பார்த்து ஒன்றைச் செய்வது. எப்படியும் அவருடைய நிலைகளைப் புகழ்ந்து எண்ணவேண்டுமென்றால், குறைகள் நிச்சயம் வந்தே தீரும்.

அந்த எதிர்பார்ப்பு இல்லாதபடி, உயர வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது உயரும்.
                      
இதைத்தான் நாம் யாருக்குச் செய்தாலும்,
அந்த குரு அருள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அவருக்குள் இருக்கும் நோய்கள் நீங்கவேண்டும்.
மெய்ப்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.
என்ற இந்த எண்ணத்தை நமக்குள் வளர்த்தால்
அந்த உணர்வு நமக்குள் விளையும்.
விளைந்த உணர்வின் சொல்லாக அது பாயும்.

ஆக, எந்தச் செடியின் சத்தை நாம் நுகர்கின்றோமோ, அந்தச் செடியின் உணர்ச்சியின் தன்மைதான் நம்மை இயக்கும். ஆகவே, நாம் எந்த குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ, அதன் செயலாகத்தான் இருக்கும்.

இதனால்தான், அடிக்கடி நாம் திருட வேண்டியது எது என்றால், அருள்ஞானம். அதைச் செலவழிக்க வேண்டுமென்றால், அருள் சொற்களைத்தான் சொல்ல வைக்கும். அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது. எமது அருளாசிகள்.
 

May 3, 2013

நாம் எதைத் திருட வேண்டும்...?

இன்று சம்பாதித்து, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்.;.;? \\

எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே, திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அருள் ஞானமாகத்தான் இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு, நாம் எதைத் திருட வேண்டும்? தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.

அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் இந்தத் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது. நாம் திருடவேண்டியது எதை...? 

திருடன் என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது.
ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால்,
10 நாட்களுக்கு நம்மை இழுத்து
“வாட்டு வாட்டு” என்று வாட்டிவிடுவார்.
அந்த நிலையைச் செய்வார்.

இதைச் சொல்கிறோமென்றால், நீங்கள் எதைத் திருட வேண்டும். அருள் ஞானத்தைத் திருடிப் பதிய வைத்து, அதன்படி நடக்க வேண்டுமென்று அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

திருடியவன் என்ன செய்கின்றான்..? பொருளை எடுத்து அவன் சுகத்திற்கு அனுபவிக்கிறான். அதே போல்
அருள் ஞானத்தை நீங்கள் திருடினால்,
உங்கள் வாழ்க்கையில் வரும் "இருளை நீக்கி", மகிழ்ச்சி பெறும் உணர்வுகளுக்கு அது பயன்படும். 

எங்கிருந்து ஒளியான உயிர் தோன்றியதோ, அங்கேயே நாம் அனைவரும் செல்வோம்.

நாம் இந்த தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து, எங்கிருந்து ஒளியான உயிர் துடிப்பு தோன்றியதோ, அந்த விண்ணிற்கே செல்வோம்.

அங்கு சென்று, விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்று
என்றும் பதினாறு என்ற நிலையை
அந்த நிலையான சரீரமாகப் பெற்று,
அந்தச் சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் கதிர்கள்
உலகத்திற்கு சிருஷ்டிக்கும் உணர்வின் ஆற்றல்களாக
பெருக வேண்டும் என்று தியானிப்போம்.
நாம் விண்ணின் தொடர்பு கொண்டு, ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நினைவை நிலை நிறுத்திக் கொள்வோம்.

புவியின் வாழ்க்கையின் தன்மையிலே வரக்கூடிய விருப்பு, வெறுப்பு ஆசை, பாசம், இவைகளை அனைத்தையும் அழித்து, நாம் செய்ய வேண்டியது நல்லது என்ற நிலையும், அந்த நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, நாம் விண் செல்வோம்.

இந்த வழிகளிலே, ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் என்று 
உறுதிப்படுத்திக் கொள்வோம்.
ஒவ்வொருவரும் இதில் முன்னெற்றம் பெறவேண்டும், 
பயன்கள் பெறவேண்டும், 
ஒளிச் சரீரம் பெறவேண்டும்

அதற்குண்டான ஆற்றல் உங்களுக்குள் வளரவேண்டும். அந்த ஆற்றலின் நிலை கொண்டு, உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்களை உங்கள் உணர்வாலே நீக்கி, அந்த மெய் ஒளியின் நிலைகள் உங்களுக்குள் பெருக வேண்டும்.

அது உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்காக,
எல்லா மகரிஷிகளையும், நமது குருநாதரையும் வேண்டி,
குருநாதருடைய அருள் ஒளியில், அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் பெறவேண்டும் என்று, யாம் பிரார்த்திக்கின்றோம்.

May 1, 2013

பரமேஸ்வரன்

1. பரமேஸ்வரன்
நமக்குள் இருக்கக்கூடிய ஜீவனை, வெப்பத்தை ஈஸ்வரா என்கிறோம். இது சீவலிங்கம் என்பது, பூமி ஒரு எல்லையாக இருப்பதனால்,
பரத்துக்கு ஈஸ்வரா பரமேஸ்வரா,
அது பூமிக்கு வெப்பம்.

நம் பூமி வான்வீதியில் என்ன செய்கின்றது? சூரியனைப் பார்க்கும் பொழுது, ஒரு எல்லையாகத் தெரிகின்றது. மற்ற கோள்களைப் பார்க்கும் பொழுது, ஒரு எல்லையாகத் தெரிகின்றது நம் பூமியும் ஒரு எல்லை, ப்படி எல்லையாக இருப்பதை, பரம் என்று சொல்வது.

பரம் என்றால், ஒரு எல்லை என்று அர்த்தம். பரம் என்பது, இதற்குள்ளே உற்பத்தி செய்வது பரமேஸ்வரா, ஞானிகள் பெயர் வைத்துக் கொடுக்கிறார்கள்

நாம் பரமேஸ்வரனைக் கும்பிட்டால், அவன் நமக்கு வரம் தருவான் என்று தான் நம்மைக் கும்பிட வைத்திருக்கிறார்களே தவிர, யார் என்பதைத் தெளிவாக்கவே இல்லை.

அந்தப் பரமேஸ்வரன் யார்? இந்தக் காற்றில் வானவீதியிலிருந்து எடுத்து, கல், மண்ணாகி, மண்ணினுடைய நிலை ஆவியாகி, இந்தக் காந்த அலைகள் அது இழுத்து, அதை இழுத்து அது பரவிக்கொண்டே போகின்றது.

ஒன்றோடு ஒன்று சண்டை போடுகின்றது ஒன்றை ஒன்று விழுங்குகின்றது. ஒன்றுடன் ஒன்று கலக்கின்றது.

மோதும் பொழுதெல்லாம், சூடாகி சூடாகிக் கலந்து,
பல நிலைகளாகி, அது வெளியில் வந்த பிற்பாடு,
அது காளானாகி, செடியாகி, அதில் இருந்து ஆவியாக வருவது,
அது படர்ந்து, மற்ற காந்த அலையெல்லாம் எடுத்து, உயிரணுவாகி,  
அந்த உயிரணு செடிகளின் சத்தை எடுத்துச் சாப்பிட்டு,
அதாவது ஒலி ஒளியாக மாற்றுகின்றது.
இப்படித்தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

நம் பூமி பரமேஸ்வரா என்பது, இந்தப் பரத்துக்குள் எல்லாவற்றையும் உற்பத்தி செய்து, நைஸ் செய்து அனுப்புகின்றது. இதே சூரியனுடைய காந்த சக்திதான், அதற்குள்ளே கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இதற்குப்பெயர் பரமேஸ்வரா என்று சொல்கிறோம்.

நாம் யார்? நாம் எப்படி உருவாகி இருக்கின்றோம்? இயற்கையைக் கடவுளாக, நமக்கு யார் சொன்னது? அது எப்படியெல்லாம் நமக்குள் உருவாகுகின்றது?தையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. பூமியின் நடு மையத்தில் இருக்கும் வெப்பத்தின் உண்மை நிலைகள்
உதாரணமாக, ஒரு பானையில் வைத்து நாம் ஒரு சரக்கைப் போடுகிறோம் என்றால், தை வேக வைத்தவுடனே, போட்ட சரக்குக்குத் தகுந்த மாதிரி, அதனுடைய வாசனை இருக்கின்றது,

நாம் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதை நெருப்பை வைத்து சூடாக்கினால், “தத புதா.. தத புதா..” என்று  சப்தம் போட ஆரம்பித்துவிடுகின்றது. சூடு அதிகமாகிப் போனதென்றால், இருக்கின்ற சாமான் அத்தனையும் வெடிக்கச் செய்து, தூக்கி எறிந்துவிட்டுப் போகின்றது

நீங்கள் தண்ணீரை குக்கரில் உள்ளே வைத்து, அதிகமாக அந்த நெருப்பை வைத்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போய் விட்டால் என்ன செய்யும்? மேலே அடைத்துவிட்டால், பாம் (BOMB) வெடித்த மாதிரி வெடித்து, நம்மைச் சுக்கு நூறாக்கிவிடும்.

அதே மாதிரிதான், நம் பூமி வானவீதியில் எடுத்துக்கொண்ட சக்தியெல்லாம் அது உருவாக்கி, நடு மையத்தில் வெப்பமானவுடனே தத புதா.. தத புதா…” என்று கொதித்துக் கொண்டே இருக்கின்றது.

அப்படிக் கொதிக்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக, சில பக்கங்களில் பூமி கீழே இறங்கும். சில பக்கம், அந்த கேஸ் (GAS) போகிற பக்கம் மலைகளாக உருவாகிக்கொண்டு வரும்கடல்களிலேயும் மலை உருவாகின்றது.
இதெல்லாம், நில நடுக்கங்கள் வருவது நிலமாற்றங்கள் ஏற்படுவது, ஒரு பக்கம் எரிமலை எப்படி வருகின்றதோ, நாம் எப்படி சாப்பிட்டுவிட்டுச் சில நேரம்  கக்குகின்றோமோ, எப்படி நீங்கள் குக்கரை வைத்து, கேஸ் ஒரு பக்கம் போனவுடனே, நிதானமாக அங்கிருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் வேக வைக்கின்றதோ, இதே மாதிரிதான் வானவீதியிலும் சுற்றும்பொழுது, ஒன்றோடு ஒன்று உராய்ந்து, அந்த வெப்ப அலைகள் பூமிக்குள் படுகின்றது.

பூமிக்குள் வந்த பிற்பாடு என்ன செய்கின்றது? அது எரிமலையாக வெடித்து, அதிகமாகச் சூடாக்குகின்றது. ஒரு பக்கம் கக்கிவிட்டு, சமமான நிலைகளிலிருந்து கொஞ்சம் போல வைத்து, இங்கிருக்கக்கூடிய கல் மண் எல்லாம் விளைய வைக்கின்றது.

அதில் இருந்து சூடாக்கச் செய்து, ஆவியாக மாற்றி, வெளியில் வருவதை வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகள் எடுத்து, அது ஓடும் பொழுது சமமான சூடாகி, இவ்வளவு பக்குவமும் நடக்கின்றது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, ஒவ்வொரு பொருளாக உருவாக்குகின்றான். அன்றைக்கு மெய்ஞானி, இந்தப் பேருண்மைகளை எல்லாம் கண்டுபிடித்து, நாம் எப்படியெல்லாம் உருவானோம் என்று உணர்த்தினான்.

நமது குருநாதர் இதையெல்லாம் எம்மைக் காணும்படி செய்தார் அதைத்தான் யாம் உங்களுக்குச் சொல்லுகின்றோம்.

பூமியின் மாற்றத்திலிருந்து தப்பி, நினைவிருக்கும் பொழுதே விண் செல்ல வேண்டும்

இந்தச் சரீரத்திலே, நாம் ரொம்ப நாட்கள் நீடித்து இருப்பதில்லை. உயிர் “எந்த நிமிடம் இந்த உடலைவிட்டுச் செல்லும்” என்று சொல்ல முடியாது.

ஏனென்றால், நாம் முன்பு சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான் இந்த உடலிலே நிலைத்திருக்கும்.

ஆனால் உடலைவிட்டுச் சென்றபின்,
நாம் எப்படியும் விண்ணிற்கே செல்ல வேண்டும்.
இன்னொரு உடல் பெறக் கூடாது.
இன்னொரு உடல் பெற்றுவிட்டால், இதைப் போன்ற சந்தர்ப்பம் எப்படி வரும்? என்று சொல்ல முடியாது.


இந்தச் சுற்று போய்விட்டால் அடுத்து இந்த பூமியினுடைய நிலைகள் மாறுபடும் நிலைகள் வருகின்றது. அந்த நிலைகளுக்குள் நாம் சிக்குண்டுவிடக் கூடாது.

இங்கே நீர்வளமே அதிகமாகும் நிலை வரப் போகின்றது. ஆக, ஜனங்களுடைய பெருக்கங்கள் அவ்வளவு கூட்டங்கள் கூடும் பொழுது நிலங்களே இருக்காது. நீங்கள் யுத்தமே செய்யவேண்டாம். இன்று ஐந்து வருடக் குழந்தைகளாக இருக்கின்றார்கள் என்றால் (உபதேசம் செய்த வருடம் 1989),
இனி இருபது வருடம் போகும் பொழுது,
இதனுடைய நிலைகளில் யாரோ, எவரோ என்றுதான் இருப்போம்.

ஜன நெருக்கடியில் நிலங்கள் குறைகின்றது, அதே சமயத்தில் விஞ்ஞான அறிவுகளால் செயல்படுத்தப்பட்ட அனைத்துமே, மழை பெய்வதைத் தடுக்கும் நிலையாக வந்துவிட்டது. மழை எல்லா இடங்களிலும் சரியாகப் பெய்யவில்லையென்றல், நமக்கு விவசாயம் இல்லை.

விவசாயம் இல்லையென்றால், உணவுக்காக வேண்டி கடந்த காலங்களில் எப்படிக் காட்டுமிராண்டி போல, ஒன்றை அடித்து ஒன்றை விழுங்கியது போன்று, உலகத்திலேகூட என்ன நடக்கிறது என்று தெரியாது.

ஆக, மனிதனுடைய சத்துக்களைச் சாப்பிட்டால் அது நல்லது என்று, இன்று குழந்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறோம். இவையெல்லாம் பார்சலாகின்றது. மேலை நாடுகளில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டிருந்தலும், அங்கே இந்த மாதிரி அசுத்த நிலைகள், மனிதனை விழுங்கும் நிலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சிறிது காலம் போய்விட்டால், நாம் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும். இதைப் போன்ற நிலைகள் வருவதற்கு முன் நாம் நினைவிருக்கும் பொழுதே, இந்த பூமியிலிருந்தே விண் செல்ல வேண்டுமென்ற நியையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
ஏனோ தானோ என்று இல்லாதபடி, நாளொன்றுக்கு பத்து முறையாவது தியானம் செய்யுங்கள். உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம், ஆத்ம சுத்தி செய்துகொள்ளுங்கள்.


இதைப் போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இதைச் செயல்படுத்த முற்பட வேண்டும். ஏனென்றால், காலங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றது. விஷ அலைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. சிந்திக்கும் நிலை தடுமாறிக் கொண்டே போகின்றது.


இதைப் போன்ற விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உடலிலிருந்தே, நினைவு இருக்கும் பொழுதே, ஒளியாக மாற்றிச் செல்லும் நிலையை நாம் பெறவேண்டும்..