நான் இந்தப் பரமாத்மாவுடன் சேரப்போகின்றேன் என்று எல்லோரும் சொல்வார்கள்.
யார் இறந்தாலும் பரமாத்மாவில்தான் சேருவோம்.
நமக்குள் உயிராத்மாவாக இருந்து, நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருக்கும் இந்த
உணர்வின் ஒளியுடன் அது ஒளிச்சுடராக
நமது உடலைத் தீயில் போட்டு கருக்கினாலும்,
நமது உடல் முழுவதும் கருகினாலும்,
தசைகளில் இருந்த உணர்வுகள் கருகிய உணர்வு கொண்டு
ஆன்மாவாக மாறுகின்றது.
ஆனால், உயிர் கருகுவதில்லை.
அதே போல, அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை, கருகாநிலை பெற்று, அவனை ஒன்றி,
அவனின் நிலையாக வளரும் நிலைதான், யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல்.
அதே நிலையைக் கொண்டு, ஒளியாக மாறுவதுதான் கருகாநிலை. இதை வேகாக்கலை என்பார்கள்.
வேகாக்கலையைக் கற்றுக் கொண்ட மெய்ஞானிகள் இன்றும் விண்ணுலகில்,
எத்தகைய நஞ்சானாலும்
ஊடுருவாதபடி,
வைரம் எப்படித் தன் நஞ்சினை அடக்கி,
ஒளியின் சிகரமாக இருளை விலக்கி,
பொருள் காணும் நிலையாகக் காட்டுகிறதோ,
அதைப் போல, விண்ணுலகிலிருந்து வரும்,
ஆற்றல்மிக்க நஞ்சினைத் தனக்குள் மாற்றி
ஒளியின் சிகரமாக
“என்றும் பதினாறு”
என்ற நிலையை அடைந்து,
மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் பெறுவதற்கு, மெய்ஞானியின் உணர்வாற்றல் இங்கு
உண்டு.
அதைப் புராணங்களாகக் காட்டப்பட்டு அதில் ரிஷிகளாக வர்ணிக்கப்பட்டு, ரிஷியின்
மகன் நாரதன் என்று நமக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.