ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2014

குரு என்றால் யார்?

குரு என்றால் என்ன? உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது,  அதனின் அறிவாக இயக்குகின்றது. இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு சிந்தித்து பாருங்கள்.

குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்?

உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ
உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ
நான் எண்ணினேன் என்றால்,
அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கேயாகும்.

இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை, வளர்க்கப்பட்ட நிலைகளில் இருந்து நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் குருவிற்கு நான் செய்யும் துரோகம்.

எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு, எத்தனையோ நிலைகள் உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டதுதான் இந்த உயிர்.

பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு, நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.

அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால், அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

நமது குரு பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது, யானையைக் காட்டி,
அந்த யானையிடமிருந்து தப்பிக்க,
யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.

பூனை, எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து,
அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ
அதைப் போல, யானையின் மணத்தை நுகர்ந்து கொள்.
திரும்பத் திரும்ப நுகர்ந்து, அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது,
யானை வலுவுடையதுதான் என்றாலும்,
அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி, அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.

சில நேரங்களில் காட்டுக்குள் போகும் பொழுது, குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அனுபவத்தைச் சொல்லுகின்றேன்.

நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை. அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்த பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.