சப்தரிஷி மண்டலங்களைக் காட்டினார் குருநாதர் - ஞானகுரு
இதைப்போன்றே, ஒரு உயிரணு தோன்றி,
புழுவிலிருந்து
மனிதனாகத் தோன்றி மனிதனானபின்
அந்த மனிதனுடைய
உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி,
இன்று துருவத்தை
அடைந்து,
துருவ மாகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி,
அதனின்று வெளிப்படும்
உணர்வுகளைத் தான் சுவாசித்து
அதனின் நிலைகள்
கொண்டு
சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து,
இன்று எப்படி சுழன்று கொண்டிருக்கிறார்கள்
என்ற நிலையை உணர்த்தினார்
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர்.
உலகில் உள்ள
மதங்கள் அனைத்தும், அந்தந்த மதங்கள் காட்டிய வழிமுறைப்படி வணங்கி
வரும் தெய்வ வழிபாட்டில் உபதேசித்த அறநெறிகளையும், பல
நற்பண்புகளைக் கடைப்பிடித்து மக்கள்
வாழ்ந்து வருகிறார்கள்’
ஆக, ஒவ்வொரு மனிதரும் தான் வணங்கி வரும் தெய்வங்கள் தங்களைக்
காத்து வரும் என்ற நம்பிக்கையில் எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே உலகில்
உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்
ஆனால், ஒவ்வொரு
மனிதருக்குள்ளும் தீய உணர்வலைகள், அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில்
எவ்வாறு சேர்கின்றன என்பதனையே உனக்கு உணர்த்தினேன் என்றார்
குருநாதர். அதிலே நீயும் ஒருவன்.
தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ
எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்?” என்ற
கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.
பல நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் ஒளியலைகளை காண்பித்து அதன் நிலைகளையும் உணர்த்தினார்.
பின்பு, சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள்
சிறுசிறு புள்ளிகளாக வலம் வந்து
கொண்டு
கோலிக் குண்டுகளைப் போன்று
பல வண்ணங்களில் இருந்தன.
“அவை எல்லாம் என்ன?” என்று என்னைக் கேட்டார்.
“நான் தெரியவில்லை” என்று சொல்லியதும், மற்றவர்களிடம்
பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே, என்னை ஓங்கி ஒரு அடி
கொடுத்தார் குருநாதர்.
நான்
திகைத்துப் போனேன் பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.
அதெல்லாம், சப்தரிஷி மண்டலங்கள்
வெளிப்படுத்திய ஒளி சக்தியை பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில்,
அவர்கள்
தவங்களின் பலனால், புலன்களின் உணர்வால்,
அந்த ஒளி
சக்தியைத் தங்களின்
சுவாசங்களில் ஈர்த்து,
இரத்த
நாளங்களில் சேர்த்துக் கொண்டு,
அவர்களின்
தவத்தின் வலிமையால்
சப்தரிஷி
மண்டலங்களின் ஒளி சக்திகளின் ஆற்றல்களை,
அவர்களின்
உடல்களில் சேர்த்துக் கொண்டதினால்.
மனிதனை
மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்து,
தங்களையே அறியும் ஞானிகளாக
ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி,
அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணுசிசுக்கள்
ஒளியாக மாறி உயிருடன் உயிராகச் சேர்ந்து,
ஒளியின் உணர்வு கொண்ட,
ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத்தான்
நீ பார்த்தது என்றார் குருநாதர்.