1. உபதேசிப்பது யாம் இல்லை
மெய்ப்பொருள் கண்ட மெய்
ஞானியின் உணர்வை யாம் பின்பற்றி, எமக்குள் ஆட்சி புரியும் நஞ்சின் நிலையை வென்று, அந்த
நஞ்சினை அடக்கி, உணர்வினை
ஒளியாக மாற்றிச் சென்ற, மெய் ஞானியின் உணர்வை நாம் பருகுவதற்கு, அவர் காட்டிய நிலைகள், இன்று உங்களுக்குள் உபதேசித்தது, பேசுவது நான் அல்ல.
மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து, பொருளறிந்து,
உணர்வின் தன்மை நஞ்சினை அடக்கி,
அதையே ஒளியாக மாற்றி,
இன்றும் நிலையாக இருக்கும்,
இந்த உயிரின் நிலைகள் கொண்டு
தனக்குள் ஒளியின் சிகரமாக இருக்கும்
அவரிடம் ஒன்றி, அவராக இருக்கும்
அருள்ஞானியின் உணர்வுகளை,
இங்கே அது நுகரப்படும்போது,
உணர்வுகள் பேசுகின்றன, நான் அல்ல.
எனக்கு ஒரு சந்தர்ப்பம்.
இந்த உணர்வுக்குள்
ஊடுருவி, உணர்வின் செயலாக,
எனக்குள் இருக்கும் நிலைகள்
கொண்டு சேர்ந்து, அகத்தை
அடக்கி,
அந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலைகளுக்கு,
இங்கே, அந்த உணர்வின் தன்மை,
2. நீங்கள் பெறவேண்டும் என்று யாம் எண்ணும் பொழுதுதான் எமக்குள்
விளைகின்றது.
கேட்டுணர்ந்த அனைவருக்கும் உணர்வின் தன்மை விளையவேண்டும் என்ற ஏக்க நிலைகள்
வரும்போதுதான், இந்த உணர்வின்
தன்மை, எமக்குள் விளைகின்றது.
உங்களால், நான் இதை அனுபவிக்கின்றேன்.
எமக்கு என்று எதுவுமில்லை.
உங்களுக்கு என்று யாம் சொல்லும்பொழுது
இந்த நிலை வருகின்றது. இதைத்தான்,
ஆலயங்களில் செய்து காட்டிய நிலைகள்.
ஆலயங்களில், தெய்வ குணத்தைப் பார்க்கப்படும் பொழுது,
இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்,
இந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்.
இந்த மலரைப் போல எங்கள் உடல் முழுவதும் மணங்கள் மணக்க
வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் ஒளி, எங்களுக்குள் நல் மணமாக மாறவேண்டும் என்று
நாம் எண்ணவேண்டும்,
எங்களைப் பார்ப்போர்க்கெல்லாம், மலரின் மணமும், மகிழ்ச்சியும்
பெறவேண்டும். எங்கள் சொல்லின் தன்மை, பிறரை இனிமைப்படுத்தும் நிலையாகப் பெறவேண்டும்
என்று நாம் எண்ணும் பொழுது, நாம் எண்ணியதை, அந்த உணர்வின் தெய்வமாக மாற்றுகின்றது.
ஆலயத்திற்கு வருவோர் அனைவரும்,
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
இந்த நற்குணங்களைக் காத்திடும் உணர்வுகள் வரவேண்டும்.
காத்திட்ட அருள்ஞானியின் உணர்வுகள் இங்கே விளைய வேண்டும்.
வருவோர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்
என்று நாம் எண்ண வேண்டும்
அவர்கள் அறியாது செய்த தீமைகள் நீங்க வேண்டும்.
மெய்ப்பொருள் காணும் நிலை பெறவேண்டும்.
இந்த தெய்வநிலை அங்கே பெறவேண்டும்,
என்று ஆலயத்தில் யாரொருவர் வணங்குகின்றனரோ,
அவர்கள் அதுவாகுகின்றார்கள்.
இதுதான், ஆறாவது அறிவு கொண்டு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்
என்பது. நமக்குள் நட்பற்ற நிலைகள், எத்தனையோ உண்டு. கோபம் உண்டு, அழித்திடும் நிலை
உண்டு குரோதம் உண்டு. பழித்திடும் நிலை உண்டு.
அனைத்தும் இருந்தாலும்,
ஆலயத்தில் காட்டிய, இந்த உணர்வின் தன்மை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது,
எனக்குள் அனைத்துச் சக்தியும், எனக்குள் அகந்தையாகப் பேசும் உணர்வுகளுடன், அந்த மெய்ஞானியின்
உணர்வு கலந்து, எனக்குள் அது சென்று, எனக்குள் அகந்தையின் நிலைகளை வீழ்த்தி,
அந்த உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்கிறது.
மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்த ஞானிகள் காட்டிய நிலைகளில், நீங்கள் அனைவரும் வாழவேண்டும்
ஏன்று யாம் எண்ணும் பொழுது, எமக்குள் அந்த ஞானிகளின் அருள்சக்தி விளைகின்றது.
3. நாம் எங்கே செல்லவேண்டும்?
அதே சமயத்தில், நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
நாயகனாக, இந்த உடலாக நாம் ஆனாலும், நாம் எந்த வினையை நமக்குள் சேர்க்க வேண்டும் என்ற
நிலையாக, நஞ்சை நீக்கி, மெய் உணர்வின் தன்மை பெற்று, இருளுக்குள் பொருளைக் காணும் நிலைகளைப்
பெற்று, தீமையை வென்று, உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற மகரிஷிகள் உணர்த்தியுள்ளார்கள்.
அதே போன்று, நம்முடைய முன்னோர்கள் நம்மை வாழ வைத்து, மனிதனாக
உருவாக்க, அவர்கள் உடலில் அறியாது நஞ்சைச் சேர்த்து, நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த
உயிராத்மாக்களை, நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
நமக்காகப் பல துயரங்களைப்பட்ட, நம் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை,
கூட்டமைப்பாக, வலுக்கொண்ட எண்ணங்களைக் கூட்டி, நம்மைக் காத்த உயிரான்மாக்களைப் பிறவா
நிலை பெறச் செய்யவேண்டும். அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அந்த உணர்வின்
ஆற்றலைக் கலக்கச் செய்து, அடுத்து நஞ்சான உடலாகப் பெறும் உடலைக் கருக்கச் செய்து, அவர்கள்
அங்கே செல்ல வேண்டும்.
பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி, நம் உடல் வளர்ந்தது.
பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, உணர்வுகள் தோன்றியது.
பூமியின் ஈர்ப்புக்குள், நாம் வாழ்ந்து பழகியவர்கள்.
ஆக, இதைக் கடந்து, நாம் செல்ல வேண்டும் என்றால், இந்தப்
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூட்சும உடலடைந்த முன்னோர்களை விண்ணுக்குத்
தள்ளி, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்து,
நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அங்கே சுழலச் செய்வதுதான் நம் கடமை.
நம்மை ஈன்ற தாய்
தந்தையை, தன்னை வளர்த்திட்ட முன்னோர்களின் உயிராத்மாக்களை நாம் விண் செலுத்துகின்ற
பொழுது, நமது எண்ணமும் அங்கே செல்கின்றது. இதுவே கூர்ம அவதாரம்.
சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் சுழல்வது போல, முதல் மனிதன்
அகத்தியன் துருவத்தையடைந்து, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானான். அதன் ஈர்ப்பு
வட்டத்தில், (சப்தரிஷி மண்டலம்)
அவரைப் பின்பற்றிச்
சென்றவர்கள், எண்ணிலடங்காது, முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.
நாம் அனைவரும், அங்கே செல்ல வேண்டும்.