1. நாராயணன்
(பக்கம் 6-8)
ஆதியின் வான்வீதியில் ரூபங்கள்
இல்லாத நிலையில் ரூபமாக, திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்றும், ரூபங்கள் உருவாகக்
காரணமாக இருந்த கண்ணுக்குப் புலப்படாததை, சக்தி என்றும், அது ஒன்றாக இணைந்து திடப்பொருளாகும்
பொழுது, பரமசிவம் என்றனர் ஞானிகள்.
பரம் என்பது எல்லை. பரம்பொருளாவதை
பரமசிவம் என்றும், சக்தி சிவமாகின்ற நிலையை நாம் தெரிந்து கொள்வதற்காக, பரமசிவம் என்று
காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
பரம்பொருள், தன் அருகில் காந்தப் புலன் மோதும் பொழுது, சுழற்சியின்
தன்மை அடைகின்றது. தன் ஓடு பாதையில் சுழற்சியால் ஈர்ப்பாவதும், தனது துருவப் பகுதியில், தனக்கு எதிர் முனையில்
வருவதைக் கவர்வதும், கவர்ந்து கொண்ட உணர்வை வெப்பம், தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.
இத்தகைய நிலை பெறுவதைத்தான்
சீவலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள். ஜீவனுள்ளதாக ஒரு பொருள் உருவாகின்றது என்பதை
நமக்கு உணர்த்துவதற்காக, சீவலிங்கம் என்று காரணப்பெயரை வைத்தார்கள்.
நாம் இன்று சிவலிங்கம் என்று
சொல்லுகின்றோம். ஆனால், மெய்ஞானிகள் வைத்த பெயரோ “சீவலிங்கம்”. ஆக, ஜீவிக்கும் திறன் பெற்று,
தனக்குள் வளர்க்கும் திறன் பெற்றது.
பரம்பொருள் தனது சுழற்சியின்
பொழுது, தன் துருவப் பகுதியில் எதிரில் வரும் தனது உணர்வினைக் கவர்ந்து, தனக்குள் உள்இழுப்பதும்,
இதற்குள் ஏற்படும் வெப்பத்தின் தன்மை கொண்டு, பரம்பொருளுக்குள் வெப்பம் நடுமையம் அடைந்து,
தன் அருகிலே இருக்கும் நிலைகள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, தன் அருகிலே இருப்பதை
அனைத்தையும் அது அமிலமாக மாற்றுகின்றது. பின் அதில் உள்ளது ஆவியாக மாறி, ஒரு திடப்பொருளாகின்றது.
மேற்பரப்பில் கவரப்படும்
அனைத்து சத்தும், கொதிகலனாகும் பொழுது, கீழிறங்குகின்றது. உதாரணமாக ஒரு இரும்பை உருக்கினோம்
என்றால், கீழ்பரப்பு உருகி, கீழே இருக்கும் பாகம் அமிலமாக மாறுகின்றது. கீழ்பாகம் உருக
உருக, மேல்பாகம் கீழே இறங்குகின்றது.
இதைப் போன்றுதான், பரம்பொருள்
தன் சுழற்சியாகும் பொழுது, மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை, அது நடுப்பாகத்தில்
வெப்பத்தின் தன்மை கூடி, தன் அருகிலே இருப்பதை உருகச் செய்து, அதன் உணர்வுகள் கீழே
இறங்குவதும், பாம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும், தான் கவர்ந்து கொண்ட
சக்தி, இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும், உலோகத் தன்மைகளாக மாறுவதும், கல் மண்
பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஆவதினால்தான், சீவலிங்கம் என்ற காரணப்பெயரைச்
சூட்டினார்கள்.
இவ்வாறு தனது வளர்ச்சியில்
கவர்ந்து கொண்ட நிலைகள், சிறு பொருளாக இருந்தது, பெரிய பொருளாக மாறுகின்றது. அப்படி
உருப்பெற்ற பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது. பெரும் பொருளாக மாறும் பொழுது, அதனின்
வளர்ச்சியும் அதிகரித்து, சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால்,
வெப்பத்தின் தன்மையும், ஈர்ப்பின் தன்மையும் அதிகரிக்கின்றது.
ஆக, சுழற்சியால் ஏற்படும்
வெப்பத்தை, தன் நடு மையத்தில் சேர்த்துக் கொள்கிறது. இதனால் வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது.
தன் அருகிலே இருக்கக்கூடிய பொருள்களின் கலவைகளை சீக்கிரமாக மாற்றுகின்றது. இந்த உணர்வின்
தன்மை பாறைகளாகவும், உலோகங்களாகவும் மாறுபடுகின்றது.
உதாரணமாக, ஒரு இரும்பு திடப்பொருளாக
இருப்பதை நெருப்பில் போட்டால், அது அமிலமாக மாறுகின்றது. இதைப் போன்று பரம்பொருள் மையத்தில்
அமிலநிலை உருவாகின்றது.
முதலில் நீராக இருந்தது,
அதனில் ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி, ஒன்றாக இணைந்த
அணுக்கள் இரண்டறக் கலந்து, ஒரு பொருளாக மாறியது.
அதே சமயம் அதனின் சுழற்சி
வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள் உருகும் தன்மை அடைந்து, அதனில்
உருமாற்றங்கள் ஏற்படும் நிலைகள் பெற்றது. இந்த நிலைகள் எல்லாம், சந்தர்ப்பத்தால் உருவான
நிலைகள். கடவுள் என்ற தனித்தன்மை
இல்லை.
இயற்கையில் சந்தர்ப்பத்தால்
இணைந்த சக்தியின் நிலைகள்,
எதிர்மறை கொண்டு இயக்கும் நிலைகளால்தான்,
ஒன்றுடன் ஒன்று மோதி,
ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை
உருவானது.
கடவுள் என்பது வெப்பமாக உள்நின்று, தனது இயக்கத்தின் தொடர்
கொண்டு, தனக்குள் வருவதை உருமாற்றி, உணர்வை மாற்றி பல நிலைகளை உருவாக்குகின்றது. உள் நின்று இயக்கும் வெப்பத்திற்குத்தான் கடவுள், என்று காரணப்
பெயரை வைத்தார்கள், ஞானிகள்.
(பக்கம் 13-17)
பிரபஞ்சம் உருவாகும் நிலையை,
சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில், ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு
உணர்த்தியுள்ளார்கள். சிவதத்துவத்தில் சக்தி சிவமாகும் விதத்தைக் காண்பித்து, பரமசிவம்,
சர்வேஸ்வரன், ஈஸ்வரன் என்னும் நிலைகளையும் காண்பித்து, அதனின் உண்மைகளை நம்மை அறியும்படி
செய்தனர்.
சிவனைக் காண்பிக்கும் பொழுது,
சிவனுக்கு இரண்டு மனைவி என்றும், ஒரு மனைவி ஜடாமுடி மேல் உள்ள கங்கை என்றும், இன்னொரு
மனைவி உடலில் சரிபகுதி பெற்ற பராசக்தி என்றும், உரைத்திருப்பார்கள் ஞானிகள்.
தான் நுகர்ந்த அணுவுக்குள் உள்ள வெப்பமும், தன்னுடன் இணைந்து இயங்குவதால் சிவனில் சரிபகுதி பராசக்தி
என்றும், நீரும் நெருப்பும் கலந்து, எப்பொருளின் தன்மையை தனக்குள் இணைக்கின்றதோ, அது தன்னுடன் இணைந்து
நிலமாக, சிவமாக மாறுகின்றது என்ற நிலையை, சிவரூபத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
சிவன் கையில் உள்ள திரிசூலம்,
நீர், நிலம், நெருப்பை நமக்கு உணர்த்தி,
திரிசூலத்தில் உள்ள உடுக்கையின் மூலம், “
ஒரு பொருளின் தன்மை ஒன்றிலே
மோதப்படும் பொழுது,
அதனின் மோதலின் நாதங்கள் மாறி,
உணர்வின் தன்மை எப்படி மாற்றங்கள் ஆகின்றது?
என்ற நிலைகளை நமக்கு உணர்த்தினார்கள்.
சிவனின் கழுத்திலும், கையிலும்,
விஷம் கொண்ட பாம்பு இருக்கும்.
ஆக, இதன் மூலம் விஷத்தின் இயக்கத்தையும்,
விஷத்தின் தன்மை மற்றொன்றுடன்
கலந்தபின்,
அது எதனின் உணர்வை நுகர்ந்ததோ,
அதனின் இயக்கமாக இயக்கும்
நிலையையும்,
நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்
ஞானிகள்.
சிவன் உடலிலே யானைத்தோல்,
புலித்தோல், மான்தோல், இவற்றிலான உடைகள் இருப்பதாகக் காண்பித்து, மானும் சிவமே, யானையும்
சிவமே, புலியும் சிவமே என்று உரைத்து, இதனின் உணர்வினால், உடல்கள் மாற்றமாகி உணர்வின் தன்மை கொண்டு,
மனிதனாக உருவானோம் என்பதையும் தெளிவாக்கியுள்ளார்கள்.
ஜடாமுடியில் பிறைச் சந்திரனைப் போட்டு, ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது, அதனதன்
செயல்கள் சமபங்கு இழந்துவிடுகின்றன, ஆக, அதனின் நிலைகள் குறைந்துவிடுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கி,
உலகம் உருவான விதத்தை ஞானிகள் சிவரூபத்தின் மூலமாக, நமக்கு உணர்த்துகின்றார்கள். இப்படி,
ஞானிகள் ஆதியில் கோள்களும், நட்சத்திரமும், சூரியனும், பிரபஞ்சமும் எப்படி உருவானது
என்று நமக்கு உணர்த்தினார்கள்.
உயிரணுவின் தோற்றத்தையும்,
அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும், மனிதர், தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை
எது? என்பதையும், நமக்கு உணர்த்துவதற்காக, ஒரு உயிரணுவின்
உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.
உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின்
தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து, தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு
தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கி, நம்மை நல்வழிப்படுத்துவதற்காக,
உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை, கடவுளின் அவதாரங்களாக வகைப்படுத்தி, உயிரணுவின் தோற்றுவாயான
சூரியனுக்கு நாராயணன் என்று பெயரிட்டு, சூரியனைக் கடவுளின் முதல் அவதாரம், என்று நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.
பாற்கடலில், ஆதிசேஷன் மேல்
பள்ளி கொண்டு நாராயணன் இந்த உலகை இரட்சிக்கின்றான் என்றும், சூரியன் தான் வளர்த்துக் கொண்ட சக்தியை ஸ்ரீதேவி என்றும், அடுத்து அது திடப்பொருளாகும் பொழுது, பூதேவி என்றும் ஆக, நாராயணன் இரு சக்தியின் துணை கொண்டு இயங்குகின்றான்,
என்றும் உணர்த்தினார்கள்.
சிவதத்துவத்தில், கங்கை ஒரு
மனைவி என்றும், அதனுடன் சேர்ந்த வெப்பம் இன்னொரு மனைவி என்றும், ஆக சிவனுக்கு இரண்டு
மனைவி என்றுரைத்து, நீரின் சக்தியும், வெப்ப சக்தியும் இல்லையென்றால், உருப்பெரும் சக்தி
இல்லை. ஆக இது சிவசக்தி.
ஆனாலும், சூரியன் காந்தத்தால்
இழுத்து உறையச் செய்யும் பொழுது, உடலாக மாற்றப்படும் பொழுது, ஸ்ரீதேவி என்றும், இப்படி
உடலின் தன்மை அடைந்தபின், சுழற்சியின் தன்மை பெற்று தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை
உருவாகின்றது. ஆக, இதை ஞானிகள் பூதேவி என்றும் தெளிவாக்கியுள்ளார்கள்.
நாராயணன் ஒரு கடவுள். அவன்
எங்கேயோ இருந்து கொண்டு நம்மை இரட்சிக்கின்றான் என்று எண்ணுகின்றோம். ஆனால், நாம் வேதங்கள்
நமக்கு உணர்த்திய மூலத்தின் உண்மையை, ஞானிகள் காட்டிய வழியில் உணர்ந்திடல் வேண்டும்.
அப்படி உணர்ந்து, அந்தக்
கருத்தின் உணர்வாக இயங்கத் தொடங்கினால், அதனின் உணர்வை நாம் பெற்று, சூரியன் ஒளிச்சுடரானது
போன்று, மனிதர் தம் ஆறாவது அறிவின்
துணை கொண்டு, ஏழாவது நிலையான ஒளியின் உணர்வின் தன்மையினை வளர்க்க முடியும். எமது அருளாசிகள்.
2. விஷ்ணு
(பக்கம் 21,22)
சூரியன் தன்னுள் ஈர்த்து
வளர்த்துக் கொண்ட சத்தை, வெப்ப காந்தமாக வெளிப்படுத்துகின்றது. அது தன் தளவாயில் விஷத்தைப்
பிரித்தாலும், வெளிப்படும் பொழுது, விஷத்தைக் கவர்ந்துதான் வெப்ப காந்தம் வெளிப்படுகின்றது.
சூரியனிலிருந்து வெளிப்படும்
நிலைகள் விஷம். வெப்பம், காந்தம் என மூன்று நிலைகள் கொண்டு வெளிப்படுகின்றது. வெப்பம்,
உருவாக்கும் சக்தி, காந்தம் அரவணைக்கும் சக்தி, விஷம் இயக்கும் சக்தி என மூன்று நிலைகள்
கொண்டு இயங்குகின்றது.
காந்தம் தன் அருகிலே வருவதைக் கவர்ந்து தனக்குள் இணைப்பதும், இணைத்ததின் நிலைகொண்டு,
வெப்பம் அதனைச் சமைத்து தனதாக
உருவாக்குகின்றது. விஷமோ இதனில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.
இத்தகைய இயக்கத்தின் தன்மை
கொண்ட, மூன்று புலன் கொண்ட அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் பரவி
வருகின்றது.
இதே பிரபஞ்சத்தில், 27 நட்சத்திரங்களின்
கதிரியக்கச் சக்திகள் அணுக்களாக மாறி, பரவி வருகின்றது. வியாழன் கோளிலிருந்து வெளிப்படும்
கதிரியக்கப் பொறிகளை, சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அணுக்களாக வரப்படும் பொழுது, ரேவதி
நட்சத்திரத்தின் நிலைகள் அருகிலே வந்தால், இதைக் கண்டு உணர்வின் உந்து விசையால் ஓடுகின்றது.
அப்படி ஓடும் நிலைகளில்,
கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக்களில் மோதப்படும் பொழுது, அது சுழற்சியின் தன்மை அடைந்து,
அந்த சுழற்சியில் வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்த்து, ஒன்றுடன்
மோதும் நிலைகள் வருகின்றது.
மோதும் நிலை வரும்பொழுது,
அதில் வெப்பமும், ஈர்க்கும் தன்மையும் வருகின்றது. ஈர்க்கும் சக்தி வரப்படும் பொழுது,
எந்தக் கோள் உமிழ்த்திய அணு அடைப்படுகின்றதோ, அதன் அடைப்பிற்குள் உருவாகும் நிலை கொண்டு,
மற்ற அணுக்களைக் கவர்ந்து அடைபடுகின்றது. ஒரு உயிரணுவாக உருவாக்குகின்றது.
உயிரணுவில் ஏற்படும் துடிப்பால் உருவாகும் வெப்பத்தை "விஷ்ணு” என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
வெப்பத்தால் ஈர்க்கும் தன்மை
உருவாவதை லட்சுமி என்றும், விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும், காரணப்பெயரைக் கொடுத்து
நாராயணனின் மறு
அவதாரம் விஷ்ணு என்று உரைத்து, உயிரணுவின் தோற்றத்தை நமக்கு ஞானிகள் உணர்த்தினார்கள்.
லட்சுமி தனக்குள் ஈர்ப்பதை,
விஷ்ணு (வெப்பம்) உருவாக்கி, ஜீவ அணுவாக விளையச் செய்கின்றது.
ஒரு உயிரணு தன்னில் ஜீவ அணுவை
உருவாக்கும் போது,
அந்த ஜீவ அணு எந்த உணர்வின்
சத்தினால் உருவானதோ
அதன் இனத்தை அது பெருக்கும்.
உதாரணமாக ஒரு விஷச் செடியில்
உருவான ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து காற்றில் உள்ள தன் சத்தை எடுத்து,
அதே செடியாக விளையும். அதே போன்று
ஒரு உயிரணு ஒன்றை நுகர்ந்து,
அதனின் உணர்வின் அணுவாக உருவானால்,
அந்த அணு தன் இன சத்தைக் கவர்ந்து
தன் இனத்தைப் பெருக்கும்.
ஆக, இதைத்தான் விஷ்ணுவின்
மகன் பிரம்மா
என்று உரைத்தார்கள் ஞானிகள்.
ஒரு உயிரணு ஒரு உணர்வின்
தன்மையினை நுகர்ந்து, அதனில் உருப்பெறும் அணுக்களாக வரும்பொழுது, “பிரம்மம்” என்றும்,
அப்படி பிரம்மமான அந்த உணர்வின் சத்து, உயிருடன் ஒன்றி இயங்கத் தொடங்கிவிட்டால், அதற்கு
“சிவம்” என்றும் காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்
3. இராமன்
(பக்கம் 25-28)
கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.
உயிரணு பெறும் சரீரத்தின்
தோற்றமான விதத்தையும்,
எண்ணங்களின் தோற்றத்தையும்,
அதனின் இயக்கங்களை நமக்கு
உணர்த்துவதற்காக,
அன்று ஞானிகள் இராமன் என்னும்
கதாபாத்திரத்தைப் படைத்து, இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.
சூரியனிலிருந்து வெளிப்படும்
வெப்பம், விஷம், காந்தம், புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது, ஒரு செடியிலிருந்து
வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது, அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.
அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால்,
அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.
“சீதா” என்ற இந்த சுவை உயிருடன்
ஒன்றி,
அதன் உணர்வின் உடலாக சிவமாக
மாறுகின்றது.
சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.
இதைத்தான், திரேதாயுகத்தில்
நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று, தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது. அதில்
திரேதா என்பது சரீரம், உயிரணு உடல் பெறும் நிலை. இதற்குள் சீதாராமன், தான் எடுத்துக்
கொண்ட சுவை எதுவோ, அந்த எண்ணமாக இயக்குகின்றது.
ஒரு உயிரணு கடலைச் செடியின்
மணத்தை நுகர்ந்து, புழுவின் உடலைப் பெற்றபின் கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும் என்ற
எண்ணம் அந்தப் புழுவிற்கு வருகின்றது. அதாவது, எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ, அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான்
எண்ணம் வருகின்றது.
உயிரணு ஒரு செடியிலிருந்து
சத்தினை நுகர்ந்து, தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது, “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி,
இதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகின்றது.
உணர்ச்சியை வைத்து
உணர்வை இயக்கி,
அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது. எண்ணம் இல்லை என்றால்,
இயங்காமல்தான் இருக்கும்.
எந்த நினைவினை எண்ணுகின்றோமோ,
அது இராமனின் அம்பு போன்று
பாய்ந்து,
உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும்
இயக்கி,
அதன் தொடர் கொண்டு நமது உடலை
இயக்கும்.
எண்ணம் உருவாகவில்லை என்றால்,
உடலை இயக்காது.
இதைத்தான், நாராயணன் திரேதாயுகத்தில்
சீதாராமனாகத் தோன்றுகின்றான், என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது.
மனிதரிடத்திலும், உணர்வின்
எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள். கல்யாணராமனாக
எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத்
தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு, வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ,
அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர்.
ஏனெனில், காண்டீபத்தில் பொருத்தி
எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது. ஆகவே, துன்புறுத்தும் உணர்வை
வென்றவர் எவரோ, அவரே திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர்.
வீரதீரம் காட்டிய பலரும்
வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை. ஆனால்
இராமனோ,
தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து
தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்
என்பதை உணர்த்தும் பொருட்டு,
இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறித்துவிடுகின்றான்.
அதன்பின், சீதையை மணந்து
கொள்கின்றான் என்று காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியினை தன்னுடன் இணைத்துக் கொண்ட
நிலையைத்தான், “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர்.
மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி, அந்தத் தீமையைச் செயல்படவிடாது
தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் மகரிஷிகள். துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும்
நிலையை அடைந்தார்கள்.
(பக்கம் 28-30)
பல கோடி தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், மகரிஷிகள் அதனை தமது அரவணைப்பாக, தமக்குள் சுவையாக
ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள்.
துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது. ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாறியவர்கள். இதுதான் ‘’கல்யாணராமா’’ என்பது.
மேலும், இராமாயணத்தில் பிறர் கொள்ளும் கோபம், பிறர் கொள்ளும்
வேதனை போன்றவைகளை வாலியாகக் காண்பித்தனர். வாலி வலிமை மிக்கவன் என்றும், எதிரில் நிற்கும்
எதிரியின் வலிமையில் பாதி இவனுக்கு அதிகமாக வந்துவிடும் என்றும், இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.
இப்பொழுது, ஒரு மனிதன் வேதனையால் வாடுகின்றான் என்றால்,
நாம் அதைப் பரிவு கொண்டு, பண்பு கொண்டு பார்க்கும் பொழுது, அவனுடைய வேதனையான உணர்வுகள்
நம்முள் கலந்து, நம்முடைய நல்ல குணங்களை வலுவிழக்கச் செய்கின்றன.
நாம் எவ்வளவு பண்பு கொண்ட மனிதர்களாக இருப்பினும்,
வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால்,
அது நம் உடலுக்குள் கலந்து,
நமது நல்ல குணத்தின் தன்மையை வலுவிழக்கச் செய்துவிடும்.
ஆக, நாம் கேட்டுணர்ந்த வேதனை என்ற உணர்வுகள், நம்முள்
வலிமை பெறுகின்றது. இதுதான்,
வாலி எவரைப் பார்த்தாலும்,
அவரின் வலுவின் சரிபகுதியை, தனக்குள் பெற்றுக் கொள்வான், என்று காரணப்பெயரைச்
சுட்டிக் காட்டி, மனிதன் தன் இயல்பான நிலைகளிலிருந்து, எவ்வாறு தன்னை மீட்டிக்
கொள்ள வேண்டும்? என்பதனை இராமாயணத்தில் காண்பித்தார்கள்.
மனிதனின் இயல்பு, பிறர் துயரப்படுவதைக் கேட்டுணர்ந்து, அந்த துயரிலிருந்து மீட்டுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன்.
ஆனால் ஒரு சிலருக்கு அந்த துயரத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் என்ணம் இருந்தாலும், துயரப்படுவோரிடத்தில் விளைந்த உணர்வே இவரிடத்திலும்
விளைந்து விடுகின்றது.
இதிலிருந்து மீளும்
மார்க்கத்தை நமக்கு உணர்த்தும் பொருட்டுத்தான், “வாலியை இராமன்
மறைந்திருந்து தாக்கினான்” என்று இராமாயணத்தில்
காண்பித்தார், வான்மீகி மாமகரிஷி.
மறைந்திருந்து தாக்கவில்லை. மறைந்திருந்து அதனின் செயலை
ஒடுக்கினான் என்று அறிதல் வேண்டும்
ஏனென்றால், ஒரு மனிதன் வேதனைப்படுவதை
நாம் நேர்முகமாகப்
பார்க்கும்பொழுது அல்லது கேட்கும் பொழுது,
அந்த நோயின் தன்மை நம்முள்
கலந்து,
நமது நல்ல குணங்களில் ஊடுருவி,
நஞ்சு கலந்ததாக
ஆக்கிவிடுகின்றது.
நாம் நல்ல
குணத்தின் வலிமையை இழக்கின்றோம்.
இதிலிருந்து தப்ப வேண்டும்
என்பதை உணர்த்தும் பொருட்டுதான், இராமன்
மறைந்திருந்து வாலியை அடக்கினான், என்று நமக்கு உரைத்தனர் ஞானிகள்.
நாம் வேதனையை நுகர்கின்ற
பொழுது, நமது உடல் நடுங்குகின்றது, பயமாகின்றது, சோகம் சூழ்கின்றது. நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
இது போன்ற நிலைகளிலிருந்து மனிதர் மீள்வதற்குத்தான், அன்று ஞானிகள் காட்டியது ‘’கல்யாணராமா’’.
இன்று உலகில் எத்தனையோ விஷத்தன்மை இருப்பினும், தம்முடன் அரவணைத்து,
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் துருவ மகரிஷி.
அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளையும், (அதைப்
பின்பற்றிய மகரிஷிகள்) வேதனை கொண்ட உணர்வுகளை தனக்குள் அடக்கி, அதை தம்முள்
ஒளியின் சரீரமாக மாற்றிய
மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும்,
எவர் தம்முள் கவர்கின்றனரோ,
அவர் பிறருடைய தீமையான
உணர்வுகளைக் கேட்டறிந்தாலும்,
அதனின் விஷத்தன்மையை அடக்கி
சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று,
தீமையிலிருந்து விடுபடமுடியும்,
இதுதான் ‘’கல்யாணராமா’’.
நாம் கல்யாணராமனாக ஆக வேண்டும். ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷிகளின்
அருளுணர்வின் துணை கொண்டு, நாம்
செயல்பட வேண்டும்.
அப்படிச் செயல்பட்டோம் என்றால், நாம் என்றும் கல்யாணராமனாக உலகில் எத்தனை
தீமைகள் இருப்பினும், தீமைகளை ஒடுக்கி,
நல் உணர்வை தன்னுடன் அரவணைத்து, ஒளியின் சரீரமாக தீமையற்ற நிலையாக, நாம் வாழமுடியும் என்பதுதான் இராமாயண
காவியத்தில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
4. கண்ணன்
(பக்கம் 33-35)
உலகம் எவ்வாறு உருவானது?
சூரியன் எவ்வாறு உருவானது? உயிரணு எவ்வாறு உருவானது? தாவர இனங்கள் எவ்வாறு உருவானது?
என்பதை நமது காவியங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. அதில் உயிரினங்களிடத்தில்
கண் உருவானதை, நான்காவது அவதாரமாகக் கண்ணனன் தோன்றுகின்றான் என்று விளக்கியுள்ளனர்.
ஒரு உயிரணு, கடலைச் செடியிலிருந்து
வெளிப்படும் மணத்தைத் தனக்குள் கவர்ந்து, தனது உடலாக மாற்றி, புழுவாக உருப்பெறுகின்றது.
பின், இந்தப் புழு இதே வாசனையை நுகர்ந்து, தனது உணவிற்காக கடலைச் செடி இருக்கும் இடத்திற்கு,
நகர்ந்து செல்லும்.
புழுவிற்குப் பசி எடுத்து,
பசியின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது, சாப்பிட வேண்டும் என்ற எண்ணங்கள் வந்து, அதனின்
உணர்வின் துணை கொண்டு புழு தன் உடலை நகர்த்திச் சென்று, தாவர இனத்தை உணவாக எடுக்கின்றது.
இதை விஷ்ணு தத்துவத்தில் “எந்தச் சுவையின் தன்மையை
நுகர்ந்ததோ, அந்த எண்ணங்கள் கொண்டு, அந்த இடத்திற்கு உடலை அழைத்துச் செல்கின்றது” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
கடலைச் செடி சாந்தமானது.
சாந்தத் தன்மை கொண்ட கடலைச் செடியைத் தேடி மணத்தால் நுகர்ந்து, நகர்ந்து செல்லும் புழு,
தான் செல்லும் வழியில்
ஒரு விஷச் செடியின் காற்றினைச்
சுவாசித்துவிட்டால்,
மயங்கி விடுகின்றது, வேதனைப்படுகின்றது.
அப்பொழுது, அதனின் இரை தேடும்
செயலும் தடைபடுகின்றது.
அப்பொழுது, புழுவிற்கு, தனது உணவினைப் “பார்க்க
வேண்டும்”, என்ற உணர்வின் எண்ணங்கள் வருகின்றது.
ஆனாலும், புழு தான் பார்க்க
முடியாத நிலைகள் கொண்டு, மற்ற விஷத் தாவர இனங்களை நுகர்வதால், வேதனையின் உணர்வுகள்
இதற்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி, முதலில் உருவான அணுக்களைக் கொல்லுகின்றன.
அப்பொழுது, வேதனையான உணர்வின் எண்ணங்கள் உருவாகி, அதன் நிலைகளில் அணுக்கள் உருவாகின்றன.
NEGATIVE, POSITIVE என்ற
விஷத்தின் தன்மை கொண்டு எப்படி சூரியன் இயங்குகின்றதோ, இதைப் போன்று, எதிரிமறையான அணுக்களின்
மோதலில் அங்கே புழுவாக உருவாகின்றது.
மோதலில் ஒளியின் தன்மை ஆவது போன்று, இந்த உணர்வின் தன்மை, நினைவின் ஆற்றல்,
“பார்க்க வேண்டும்”
என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
அந்த உணர்ச்சியின் தன்மை,
பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் புழுவின் உடலில் இரண்டும் எதிர்மறையாகி, நுகர்ந்த
உணர்வின் தன்மை சேர்ந்து, புழுவின் உடல் மடிந்து, உணர்வுகள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டு,
இணைத்துக் கொண்ட நிலைகொண்டு, மாற்று உருப்பெறுகின்றது. பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
இப்படி, கண் உருவாகும் நிலைக்குத்தான்
காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள். வாசு என்பது உயிர். வாசுதேவன், தான் சுவாசித்த உணர்வின்
தன்மை வளரப்படும் பொழுது, தேவகி, தமக்குத் தேவையான சக்தியின் துணைகொண்டு, தான் எண்ணும் பொழுது, வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள்
கண்ணன் பிறந்தான்.
அதாவது கண்கள் உருப்பெற்றது.
கம்சன் என்பது இருள். இருள் சூழ்ந்த சிறையிலிருந்து, தன் அன்னை தந்தையை மீட்க, கண்ணன்
பிறந்தான் என்ற நிலையைக் காண்பித்துள்ளார்கள்.
இந்த உயிரும், தான் எண்ணிய சக்தியும் இரண்டும் சேர்ந்து, உணர்வின் கருவாக விளைந்து
கருவிழியாக உருவாகியது.
கருவிழியின் தன்மை கூர்மையாக
உற்றுப் பார்த்து, உணர்வின் தன்மை பதிவாகி, அந்த அலைகளைத் தனக்குள் எடுத்து, தான் எப்படி
எண்ணி மாறவேண்டும் என்ற நிலை உருவானதைத்தான் நாராயணன் துவாரகயுகத்தில், வாசுதேவனுக்கும்,
தேவகிக்கும், கண்ணனாக உருப்பெற்று, உடலின் தன்மையைக் காக்கும் உணர்வாக, கண்ணன் தோன்றினான்
என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
(பக்கம் 35-37)
நமது உடலினுள் இருக்கும்,
அனைத்து குணங்களுக்கும் குருவாக இருப்பது நமது உயிர். நமது கண்கள் உணர்வுகளைக் கவர்ந்து,
நம்மை நுகரச் செய்து, உயிருடன் இணைக்கின்றது. அது பதிவாகவில்லை என்றால், இங்கு நமக்குள் நுகரும்
திறன் இல்லை.
உதாரணமாக, இப்பொழுது யாம்
உங்களுக்கு உபதேசித்துக் கொண்டுள்ளோம். இப்பொழுது, உங்கள் நினைவின் ஆற்றலானது இங்கே
இருக்க வேண்டும். ஆனால், “இன்றைக்கு கடையில் வேலைக்காரன் என்ன செய்கின்றானோ? விட்டுவிட்டுப்
போய்விட்டானோ?” என்று உங்களுடய நினைவினைச் செலுத்திவிட்டால்,
யாம் சொல்லும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகாது.
யாராவது திருப்பிக் கேட்டால், சொல்லத் தெரியாது.
பதிவானால்தான்
இந்த உணர்வின் அலைகளை நுகர முடியும்.
கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன்,
வேதனை கொண்ட உணர்வின் அலைகளைக் கவர்ந்து நுகர்கின்றது. அதன் உணர்வின் தன்மை உயிருடன்
இணைக்கப்படும் பொழுது, உயிரான குருக்ஷேத்திரத்தில் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் தான்,
குருக்ஷேத்திரப்போர் நடக்கிறது, என்று உணர்த்தியுள்ளார்கள். அதாவது,
உடலை உருவாக்கிய அணுக்களின்
தன்மை,
தனது பாதுகாப்பான நிலைகளில் வேகமாக உருவாக்கி
எதிரிகளிடமிருந்து காக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.
இதைத்தான் கண்ணன் சங்கநாதம்
செய்கிறான் என்று
ஞானிகள் உரைத்தனர்.
நமது உடலிலுள்ள கண், ஒரு
காட்சியின் உணர்வினைக் கவர்கின்ற பொழுது, அந்த உணர்வின் வேகத்தை சத்தியபாமா நுகர்ந்தறிந்த
நிலைகள் வந்தாலும், அந்த உணர்வின் தன்மையை, தன் உடலாக்கி அதன் அறிவாக இயக்கத் தொடங்கிவிடும்.
ஆகவேதான், சத்தியபாமா என்று
கண்களின் இயக்கம், தனதாக உருவாக்கும் அந்தச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலைகள்தான்
கண்ணனுக்கு இரு மனைவி என்று கூறுகிறார்கள்.
ஆகவே, கண்ணன் காட்டிய நிலைகள்
கொண்டுதான், தீமைகள் என்று நமக்குள் அறிகின்றோம். தீமை என்றால், உயிர் அதை உருவாக்கிவிடுகின்றது.
உணர்வின் அணுவாக மாற்றிவிடுகின்றது.
இத்தகைய நிலைகள் பெற்றாலும்,
மனிதன் பலகோடி சரீரங்களிலிருந்து, தீமைகளை வென்ற உணர்வுகளைக் கொண்டு, இந்த உடலின் தன்மையில்
வரும் ஆறாவது அறிவுதான் “கார்த்திகேயா” எதனையும் அறிந்திடும் அறிவாக உருவாகின்றது.
அவ்வாறு உருவான ஆறாவது அறிவின்
துணை கொண்டு, நன்மை தீமை என்ற நிலைகளை அறிந்து, தீமைகளை அகற்றும் நிலையினைப் பெற்றிருக்கின்றோம்.
துருவ மகரிஷிகள், தம் உணர்வின்
தன்மையினை ஒளியாக மாற்றி, இன்று துருவ நட்சத்திரமாக வானில் திகழந்து கொண்டுள்ளார்.
நாம் நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு,
துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நமது உடலினுள் பதிவாக்கி,
நினைவின் தன்மையை கண்ணில் கொண்டு வந்து,
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,
நல் உணர்வின் தன்மையை உடலினுள் செலுத்தி,
நமது உடலுக்குள் இருக்கும் நல் அணுக்களுக்குச்
சக்திவாய்ந்த நிலையைப் பரவச்செய்து,
அதனின் வலிமை பெற்றபின்,
வேதனை என்ற உணர்வுகள்
நமது உடலில் ஆன்மாவில் இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.
5. கூர்மை அவதாரம்
(பக்கம் 41-44)
“நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்”. அதாவது, நாம் தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தை
எண்ணினோம் என்றால், நமக்குள் அந்த உணர்வின் தன்மை விளையும்.
நல் ஞானியின் அருள் உணர்வைப்
பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது, நாமும் அவர்கள் அருள் வட்டத்தில் இணைய முடியும்.
இதைத்தான் அன்று ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள்.
உதாரணமாக, ஒரு ஆமையைப் பார்த்த நரி, அதைத் தன் உணவாக எண்ணி,
ஆமையின் அருகே வருகின்றது. ஆக, நரியின் உணவுக்கு, நரியின்
கண் ஆமையைக் காட்டுகின்றது. நரியின் கண், ருக்மணி
படமெடுத்து ஆமையைக் காட்டினாலும், அதன் கண்ணுக்குள் இருக்கும் சாந்தமான சத்யபாமா, “ஆமை புசிப்பதற்கு உகந்ததுதான்” என்று நரிக்கு உணர்த்துகின்றது.
இந்த உணர்வின் துணை கொண்டு, ஆமையின்
உடலிலிருந்து வரக்கூடிய மணம், நரியால் சுவாசிக்கப்படும் பொழுது, நரியின்
உயிரான குருஷேத்திரத்தில், ஆமையின் உணர்வலைகள் மோதி இயக்கப்படும் பொழுதுதான், நரியிடத்தில், “இனி இதனை எளிதில் கவரலாம்” என்ற
உணர்வின் நினைவலைகளை, இயக்குகின்றது.
அதே சமயம், நரியின் நினைவலையும், ஆமையின் உணர்வும், நரியின் உயிரான குருக்ஷேத்திரத்தில், ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.
அதே சமயம், நரியின்
உணர்வுகள் வலுவுடன் இருப்பதனாலும்,
நரியின் உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்து,
இதை நாம் விழுங்க முடியும்,
இதை நாம் பிடித்துக் கொள்ள முடியும் என்று,
உயிருக்குள் உணர்வுகள் தூண்டப்பட்டு,
நரியானது, ஆமையின் அருகிலே செல்லுமாறு இயக்கப்படுகிறது.
ஆனால், ஆமை நரியைப் பார்த்தபின்,
அதன் உடலிலிருந்து வரக்கூடிய வலுவான உணர்வை
இந்த ஆமை நுகர்ந்து, உணர்ந்து,
இதனின் உயிரான குருக்ஷேத்திரத்தில்
போர் நடக்கின்றது.
ஆனால், அதே சமயம் நரியின் உணர்வைக் கண்டு,
தன் சிரசை உள் இழுத்து, தன்னைக் காத்துக் கொள்கின்றது.
ஆக, இவையனைத்திற்கும் கண்ணே காத்திடும் நிலையாக இருந்து, செயல்படுத்துகின்றது.
அதே சமயம், நரிக்கும்
அதன் கண்தான் வழிகாட்டுகின்றது. அதனின் வழி நரி சென்றாலும், ஆமையின் உயிரான குருக்ஷேத்திரத்தில், நரியின் உணர்வான நிலைகள் உந்தப்படும் போதுதான், ஆமை
நரியின் வலுவைக் கண்டு, தன்னைக்
காத்திடும் நிலையாக, தனக்குள்
தன் சிரசை உள் இழுத்துக் கொள்கின்றது.
அவ்வாறு, ஆமை தன் சிரசை உள் இழுத்துக் கொண்டாலும், அந்த நரியைப் பார்த்த உணர்வுகள், ஆமையின்
உடலுக்குள் வலுபெறும் நிலையாக ஆகிவிடுகின்றது. இதைத்தான், குருஷேத்திரப்
போரில் கண்ணன் சங்கநாதம் ஊதிய பிறகுதான், குருஷேத்திரப்
போரே நடக்கின்றது என்று வியாசர் எடுத்துரைக்கின்றார்.
ஆக, இங்கே ஆமையின் கண்கள், நரியிடமிருந்து
வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து சுவாசிக்கும்போது,
உயிரான குருக்ஷேத்திரத்தில் சங்கநாதம்,
அதாவது, உணர்வின் நாதம் வெளிப்படும்போது,
நரியின் உணர்வின் வலுவை அறிகின்றது.
அதன்பின் தான், ஆமையின்
உயிரான குருக்ஷேத்திரத்தில், அதனின் உடலிலிருக்கும் உணர்வும், நரியின்
உணர்வை நுகர்ந்து கொண்ட உணர்வும், இரண்டறக்
கலந்து, அதில் நரியின் உணர்வு வலுவாகும் பொழுது, “அதனிடம்
சிக்கிக் கொள்வோம்” என்ற
நிலையை இது உணர்ந்து, அந்த
உணர்வின் தன்மை கொண்டு, தன்
தலையை இழுத்துக் கொண்டாலும், நரியின் உணர்வுகள் அனைத்தும், இந்தச்
சாந்தமான ஆமையின் உணர்வின் குணங்களுக்குள், இரண்டறக் கலந்துவிடுகின்றன.
அதே சமயம், நரியின்
உணர்வு ஆமையின் சாந்தமான உணர்வுடன் கலந்தவுடன், அந்தப் போரில் நரியின் உணர்வே மேலோங்கி, இந்த
ஆமையைத் தன் உணவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று உணர்த்தினாலும், அது ஊதிய சங்கநாதம் கொண்டுதான், நரியும் இந்த ஆமையை உணவாக உட்கொள்ள, நகர்ந்து
வருகின்றது.
இவ்வாறு, நரி ஆமையை நோக்கி நகர்ந்து வரும்போது, இந்த ஆமை தன்னைக் காத்துக் கொள்ள, நரியைக் கூர்மையாகப் பார்த்து, அந்த உணர்வின் சாரத்தைச் சேர்க்கச் சேர்க்க, ஆமையின் உணர்வுகள் ஒடுங்குகின்றது.
ஆக, ஆமையின் உடலுக்குள்,
நரியின் உணர்வலைகள் ஓங்கி வளர்ந்தபின்,
ஆமையின் உணர்வுகள் செயலற்றதாக, இதற்குள் ஆகி
ஆமையின் உடலுக்குள் போர் நடந்து,
ஆமையின் உடலைப் பிளந்து,
அதனின்று விளைந்த நிலையை,
ஆமையின் உயிர், தன்னுடன்
அழைத்துச் சென்று,
அந்தக் கண்கள் காட்டிய, கண்ணனின்
வழி கொண்டு,
நரியான அந்த வியூகத்தைத் தகர்த்து, அதனின்
வலுவை,
இதற்குள் சேர்த்துக் கொண்ட, உணர்வின்
துணை கொண்டு,
நரியின் உடலுக்குள் ஊடுருவி,
அதனின் மையம் அடைந்து,
அந்த நரியின் உணர்வே, இந்த
ஆமையின் உடலுக்குள்
சேர்ப்பித்து
வளர்த்துக் கொண்டு,
நரியின் உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு,
நரியின் உணர்வின் சத்தை இது கவர்ந்து,
இந்த உணர்வின் துணை கொண்டு, நரியாக உருவாக்குகின்றது.
(பக்கம் 44-46)
புழுவிலிருந்து மனிதனாக வரும்
வரையிலும், ஒவ்வொரு பிறவியிலும் தன்னுடைய சரீரத்தைக் காத்துக் கொள்வதற்காக,
நமது கண்கள்
“உன்னைக் காட்டிலும் இது
வலுக்கொண்டது,
எனவே, அதனின் உணர்வு கொண்டு,
அதனை நுகர்ந்து தப்பித்துக்
கொள்” என்று
இந்த உடலுக்குள் உணர்வின்
சத்தை வளர்த்து, அதனின் வலுவைக் கூட்டச் செய்கின்றது.
நீ இந்த உடலை விட்டுச் சென்றபின்,
கவர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, “இவ்வுடலைக் காட்டிலும், வலுக் கொண்ட உணர்வின்
உடலுக்குள் புகுந்துவிடு” என்று இந்தக் கண்ணே உணர்த்துகின்றது,
கண்ணன் காட்டிய வழிப்படி,
தான் கவர்ந்த உணர்வின் துணை கொண்டு, ஒன்றின் ஈர்ப்புக்குள் புகுந்து, ஒன்றின் வியூகத்தைத்
தகர்ந்து. கவர்ந்த உணர்வின் துணை கொண்டு, அதனின் சத்தைத் தனக்குள் கவர்ந்து, “தானே
அதுவாக ஆனது” என்ற நிலையை உணர்த்துவதற்காக, கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்”
என்று உணர்த்தப்பட்டது.
மான் ஒரு புலியைப் பார்த்து,
புலியிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றது. ஆனால், புலி தன் பசியைப் போக்க, மானைப்
பார்த்து, தனது ஆவேச உணர்வு கொண்டு தாக்க எண்ணினாலும், புலி வெளியிடும் உணர்வின் தன்மையை,
மான் நுகர்ந்து அறிகின்றது.
புலியின் ஆவேச உணர்வை மான்
நுகர்ந்து அறிந்து கொண்டபின்,
மானின் சாந்தமான உடலுக்குள்,
புலியின் வீரியமான உணர்வு
அதிகரித்து,
பயத்தின் உணர்வுகள் அதிகமாகி,
புலியின் உணர்வைச் சுவாசித்து,
மானின் உயிருக்குள் குருக்ஷேத்திரப்
போராக நடக்கின்றது.
அந்த சமயம், மானின் கண்,
மானுக்குத் தப்பித்து ஓட வழியைக் காட்டுகின்றது.
ஆனாலும், புலி மானை விடாது
துரத்தும் பொழுது, மான் புலியை எதிர்த்து நிற்கின்றது. அப்பொழுதும், கண்ணே மானை வழி
நடத்துகின்றது. அப்பொழுது புலியின் உணர்வு
அதிகரித்து, மானின் உடலுக்குள் கூடி, மானின் உடலைப் புலி தகர்த்துவிட்டால், புலியின் உணர்வின் துணை
கொண்டு, மானின் உயிரான்மா புலியின் வியூகத்தைத் தகர்த்து, வியூகத்தில் ஊடுருவி, புலியின் உணர்வை நுகர்ந்து,
புலியின் உணர்வாகக் கருவுற்று, புலிக் குட்டியாகப் பிறக்கும் நிலை வருகின்றது.
கண்ணன் காட்டிய உபதேசம் என்பது, “ஒன்றைக் கூர்ந்து கவனித்து,
கூர்ம அவதாரமாக அதுவாக நீ மாறு.
ஒன்றின் வலுவை உனக்குள் சேர்த்தால்,
இப்பொழுதுள்ள உடல் இழக்கப்பட்டால், எதனின் உணர்வை வலுவாகச் சேர்த்தாயோ, அதனின் உடலை
நீ பெறமுடியும்” என்று கீதையிலே ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு போர் முறையின் மூலம், உணர்வின்
செயல்களைப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டன.
உணர்வுகள் மறைகின்றது.
உணர்வுகள் வளர்கின்றது.
உடல்கள் மடிகின்றன.
உணர்வுகள் கலக்கின்றன. பின்
விளைகின்றன.
உணர்வின் வலுகொண்டு எதனை
நுகர்ந்ததோ, அதனின் உணர்வின் துணைகொண்டு, இன்னொரு உடலுக்குள் போகின்றது என்ற நிலைகள்
நமக்கு ஞானிகள் காண்பித்த பேருண்மைகள்.
6. வராக அவதாரம்
(பக்கம் 49-52)
நாம் எல்லோரும், பன்றியை
அசுத்தத்தில் உழலும் ஒரு ஜீவனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஞானிகள்
பன்றியின் தலையை மனித உடலில் பொருத்தி, கடவுளின் அவதாரங்களில் வராக அவதாரம் என்றுரைத்து,
நம்மை வணங்கச் செய்தனர்
ஒரு முறை குருநாதர், எனக்குக் காபி, அவருக்கு டீ, வாங்கி வரச் செய்து, இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து, அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட
குப்பை இரண்டைப் போட்டு, என்னைக் “குடி” என்கிறார் குருதேவர்.
யாம் இதைப் பார்த்து, “நாம் வசமாகச் சிக்கிக் கொண்டோம்”
என்று எண்ணி, சாலையில் செல்கின்ற ஆட்களைப் பார்க்கின்றோம். அப்பொழுது
என்னுடைய பார்வை என்ன செய்கின்றது? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன், ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன்
என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.
ஆக, இந்த எண்ணத்தால், அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை
அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு)
பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள், பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும்
கேட்கின்றேன்.
அப்பொழுது நான், நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அப்பொழுதுதான், உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர்
இயக்கி, உடல் முழுவதும்
பரவச் செய்து, நாம் எதை எண்ணுகின்றோமோ, அதே இனம் நமக்குள்
நின்று, அதே இயக்கமாக
எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத்
தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.
அப்பொழுது, அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன், முடியவில்லை.
“சரி, நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா” என்றார் குருதேவர்.
கடையில் கொண்டு போய்க்
கொடுத்தால், வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன்
என்றார்கள். இவ்வாறாகி விட்டது.
அப்பொழுது, நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப்
பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா, என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.
சாக்கடை அருகில், ஏழெட்டுக்
கோடு போடச் சொன்னார். முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.
இரண்டாவதாக, முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார்.
மூன்றாவதாக, நிலக்கடலையைச்
சாக்கடையில் போடச் சொன்னார்.
அங்கிருந்து பன்றி வருகின்றது
வந்தவுடனே, ஒவ்வொன்றாக மோந்து
பார்க்கின்றது. அப்பொழுது, பொட்டுக்
கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.
அடுத்து, முருக்கு, வேகமாக
எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள்
இதைக் கண்டுபிடித்துப் போகின்றது. அந்த முறுக்கை
எடுக்கின்றது.
அடுத்து, எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச்
சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி
அந்த வாசனையைத் தான் நுகர்ந்து எடுக்கின்றது.
சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர்.
அது நாற்றத்தை எடுக்கவில்லை,
நீ எதை எடுக்கின்றாய்? என்றார்.
காபி இருக்கின்றது, நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை,
உன் உடல் நீ ஆகாரம்
சாப்பிட்டவுடனே,
சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை,
உன் உடல் பிரித்துவிடுகின்றது.
உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப்
பிரிக்க முடியவில்லை? என்று
கேட்கின்றார் குருநாதர். நான் என்ன பதில் சொல்வது?
இந்த உணர்வின் இயக்கங்கள், நீ சாப்பிடும் ஆகாரம், ருசியாகச் சாப்பிடுகின்றாய். அதிலே இருக்கக் கூடிய நஞ்சு, அதில் இருக்கக்
கூடிய நாற்றத்தையெல்லாம், மலமாக
மாற்றிவிடுகின்றது, உன் உடலில் இருந்து, வரக்கூடிய ஆறாவது
அறிவு.
பன்றியின் உயிர் தீமைகளைப் பிளந்து, தீமைகளை அகற்றிடும்
உணர்வினை நுகர்ந்து, அதனில் விளைந்த உணர்வின் சத்தால்தான், இன்று மனித உடலைப் பெற்றிருக்கின்றது.
ஆகவே,
உயிர்தான் கடவுள். உனக்குள் நின்று
எண்ணியதை உருவாக்குவதும்,
எண்ணியதை ஜீவனாக்குவதும்,
எண்ணியதைச் செயலாக்குவதும் உயிரே.
அவனன்றி ஓர் அணுவும்
அசையாது. நீ எதை எதை எண்ணுகின்றாயோ, அது உன்னுள் அணுவாக மாறி அணுவின்
இயக்கமாகத்தான் உன் உடலின் இயக்கமும் உன் சொல், செயல் எல்லாமும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
மனிதனாக உருவாகக் காரணமாக இருந்ததே, உனது உயிர்தான் என்று எமக்கு உபதேசித்தார் குருநாதர்.
7. பரசுராம் அவதாரம்
(பக்கம் 55-58)
பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி, அதனுள் உள்ள
நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக, அடுத்து
மனிதனாக, “பரசுராம்” அவதாரமாக உருப்பெறும் நிலை பெறுகின்றது.
மனிதனானபின், நமது உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள
நஞ்சினை மாற்றிவிட்டு, நல்ல உணர்வைச் சமப்படுத்துகின்றது என்ற நிலையே, பரசுராம் அவதாரம்.
கடவுளின் அவதாரத்தில்,
ஒரு பொருளைத் தன்னுள் இணைத்து,
நன்மை என்றும்,
தீமை என்றும்,
அறிந்து சமப்படுத்தும் நிலைக்கு பரசுராம்
என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.
தீமைகளை ஒடுக்கிடும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, கணவன் மனைவி இரண்டு
பேரும் கவர்ந்து, தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான், சமப்படுத்த முடியும்.
இது பரசுராம்.
உதாரணமாக நாம் மிக மிக நல்லவர்களாக இருப்போம். பலருக்குப்
பக்குவம் சொல்லக் கூடியவர்களாக இருப்போம். ஆனால், நல்ல அறிவுரையுடன் கூடிய யோசனைகளைக்
கூறுபவர்கள் அனைவருமே, பிறருடைய குறைகளை, வேதனைகளை, துன்பங்களைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது.
உங்களிடத்திலும், பலர் வந்து, “என்னைப் பிறர் ஏமாற்றிவிட்டார்கள்,
நான் மோசம் போனேன்” என்று கூறுவதைக் கேட்டுக் கொண்டேயிருங்கள். அப்பொழுது, இதனின் உணர்வுகள்
எல்லாம் உங்களிடத்தில் விளைந்து, உங்களில் உள்ள நல்ல குணங்களைக் காணாமல் போகச் செய்துவிடும்.
இதெல்லாம் உங்களிடம் விளைந்தவுடனே, நீங்களும் பொய் சொல்ல
ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்களைப் பார்த்து, “பித்தலாட்டம் பண்ணுகிறார் என்று கூற
ஆரம்பித்து விடுவீர்கள். இவ்வாறு,
நீங்கள் நல்லதே
செய்து வந்தாலும்,
பிறர்படும் வேதனையின்
உணர்வை
உங்களுக்குள் சேர்க்கும் பொழுது,
அது நோயாகவும்,
கவலையாகவும், சோர்வடைந்த நிலையாகவும்
உங்களிடத்தில்
விளையும்.
பலரின் குறைகளைக் கேட்டு, உங்களுடைய நியாயத்தை எடுத்துச்
சொல்லும் பொழுது, உங்களுடைய உணர்வு வேகமாக இருக்கும். இதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால்,
மகன் ஏதாவது காரியத்திற்காக வெளியே சென்றால், உடனே அவனை, “அறிவுகெட்டதனமாகப் போகிறான்”
என்று திட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.
ஏதாவது ஒரு வேலையாக மனைவியைக் கூப்பிடுவோம். கூப்பிடும்
பொழுதே, “வா இங்கே” என்று வேகம் காட்டுவோம். “இதோ வருகிறேன்” என்று அவரும் குரல் கொடுப்பார்.
இதனின் உணர்வு
என்ன செய்யும்? பாத்திரம் ஒன்று கை நழுவி விழுந்துவிடும். உடனே
நாம், மனைவியிடம் “கொஞ்சமாவது அடக்கம் இருக்கிறதா, பார்” என்று சத்தம் போடுவோம். வெறுப்பின்
உணர்வுகள் நம்மிடம் அதிகரித்துவிடும்.
அப்பொழுது, இந்த உணர்வின் தன்மை வேதனையாகும் பொழுது, மனைவி
பொறுமையாகத்தான் இருப்பார். ஆனால், “ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுகிறார், என்னிடம்
எரிந்து விழுகின்றார்.” என்று மனைவிக்கு வேதனையாகும் பொழுது, அவருக்குக் கை கால் குடைச்சல்
வருகின்றது.
இதே உணர்வின் தன்மையுடன் சமையல் செய்தால் என்னாகும்? சாப்பாடு
நன்றாக இருக்காது. ஆக, சாப்பாடு பரிமாறும் பொழுதும் வம்பு.
இந்த நிலையைத் தொடர்ந்து, கணவன் மனைவி பிரிந்து விட்டார்கள்
என்றால், “நீ… நான்…” என்று சண்டை வருகின்றது. அப்பொழுது அடுத்தவருடைய வேதனையின் உணர்வுகள்
நமக்குள் புகுந்தபின், யாராவது உதவி செய்கிறார்கள் என்றால், அவர்களுடைய எண்ணம் இங்கே
வளரும்.
என் வீட்டுக்காரர் “இப்படித்தான்” என்று வேதனைப்படும்
பொழுது, அவர்களைச் சார்ந்தவர்கள், “அந்த மனுசன் அப்படித்தான், நீ வாம்மா கண்ணு” என்று
அனுசரித்தால் போதும், இவர்கள் செத்தால், உயிரான்மா அவர் உடலில் புகுந்து கொள்ளும்.
அப்பொழுது, வேதனையின் உணர்வுகளை மேலும் வளர்த்துக் கொண்ட
பின், “நான் உதவி செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே” என்ற நிலையில் வீட்டில்
கலவரம் உருவாகும். ஆக இங்கே
எண்ணங்கள் எமனாகி விடுகின்றன.
இப்படி, பகைமை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது, அது இணை
சேர்த்து வாழும் தன்மையைப் பிரித்து விடுகின்றது. ஆகவே, இதை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?
ஆக, கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து துருவ மகரிஷிகளின்
அருள் சக்தியைத் தம்முள் இணைத்து, வாழ்வில் சந்தர்ப்பங்களால் வரும் நஞ்சினை ஒடுக்கி,
தம்முள் நல் உணர்வைச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.
கணவன் தனது மனைவியை
உயர்த்தி நினைப்பதும், மனைவி தனது கணவனை உயர்த்தி, நினைவுகளை வளர்த்திடல் வேண்டும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து,
இதே உணர்வுடன் செயல்பட வேண்டும்.
“வசிஷ்டரும் அருந்ததியும்”
போன்று நாங்கள் இருவரும் ஒன்றி வாழ வேண்டும். அவர்கள் வாழ்ந்த உணர்வின்
தன்மை, என்றும் எங்களுக்குள்
நிலை கொள்ள வேண்டும், என்று எண்ணி ஏங்கி தியானித்தல் வேண்டும்.
“எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்” எனும்
நிலையாக, எப்பொழுது ஒன்றிய நிலைகள் வந்தாலும், இன்னொரு பிறப்புக்குப் போகாதபடி, பிறர்
செய்த ஏவல், நோய்கள் தனக்குள் வராதபடித் தடுக்க இது உதவும். இரண்டு மனமும் ஒன்றாகி,
திருமணமானபின், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை. எமது அருளாசிகள்.
(பக்கம் 60-65)
பலருடைய எண்ணங்களை அறிந்து
கொள்ளும் ஆற்றல், மனிதருக்கு உண்டு. இவ்வாறு, மனிதர் ஒன்றைத் தெளிந்து,
தெரிந்து, ஒவ்வொரு குணங்களையும் அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு
“பலராமன்” என்று ஞானிகள் பெயரிட்டனர்.
“பலராமன்
அவதாரம்” கடவுளின் அவதாரத்தில் எட்டாவது அவதாரமாகக்
காட்டப்பட்டுள்ளது. நாம் பலருடைய எண்ணங்களைக் கவர்ந்தாலும்,
அவர்கள் உடலில் விளைந்த தீமையான செயல்களையும், தீமையான உணர்வுகளையும், நமக்குள்
நுகரப்படும் பொழுது, “வாலி” என்ற
நிலைகள் நமக்குள் உருவாகி, நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை அடக்கும் நிலை
வருகின்றது.
இதிலிருந்து
எவ்வாறு நாம் மீளவேண்டும் என்பதற்காக, இதை
உணர்த்தி, உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம். நமது குருநாதர், எவ்வாறு எம்மிடத்தில் பதிவாக்கினாரோ
அதைப் போன்று, உங்களிடத்தில் பதிவின் நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.
யாம்
பதிவாக்கும் உணர்வுகளை, நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது, வாழ்கையில் வரும்
தீமைகளைப் பிளந்து, உங்களுக்குள் நல் உணர்வின் தன்மையைப் பெறமுடியும்.
ஏனென்றால்,
உலகில் வரும் தீமைகள் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் உருவாவதினால், பலராமன், பல
எண்ணங்களையும் அறியும் தன்மை வருகின்றது. பல எண்ணங்களினால்
வரும் வலிமையான நிலைகளை அடக்கும் நிலை பெற்றவர்தான் நரசிம்மா.
அன்று ஆண்ட
அரசர்கள், மக்களிடத்தில் தங்களுடைய ஆட்சி அதிகாரங்களைச் செலுத்துவதற்காக,
மக்களிடையே மதம், இனம், எனும் வேறுபாடுகளை உருவாக்கினார்கள்.
அபிஷேகம் ஆராதனைகளைச் செய்தால்,
கடவுள்
எல்லாம் செய்வார் என்றும் மக்களிடையே பரப்பினார்கள்.
எதிரிகளிடமிருந்து
தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், எதிரிகளை ஒழிக்கவும் மந்திரங்களைச் செய்தனர்.
தங்களுடைய ஆட்சி வலுவைக் கூட்டிக் கொள்ள, மந்திரங்களை, பக்தி என்ற நிலையில் மக்களிடையே பரப்பினார்கள். அந்நிலை
கொண்டு அரசர்களால் உருவாக்கப்பட்டதுதான், வாமன அவதாரம்.
அரசனால், மந்திர ஒலிகள் கொண்டு உருவாக்கப்பட்ட
நிலைக்குத்தான், வாமன அவதாரம் என்று பெயர். அதில் பிராமணனைப்
போட்டு, பூணூலையும் போட்டு குடையும் வைத்திருப்பார்கள்.
ஆக,
இவையெல்லாம் மந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள். சிருஷ்டிக்க வல்லவன் என்று
இன்று வேதங்களை ஓதி, உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால், அவர்கள் சொன்னது
நமக்குள் உருப்பெறுகின்றது.
அதை
நமக்குள் பதிவாக்கிக் கொண்டு நாம் இறந்தபின், அவர்கள் அதே மந்திரத்தைச் சொல்லி,
நமது உணர்வின் தன்மையைக் கைவல்யப்படுத்திக் கொள்கிறார்கள். அரசனுக்கு, அவனுடைய
நாட்டுக்குத் தீமைகள் என்றால்,
கைவல்யம் செய்த உணர்வுகளை ஏவல் செய்து கொள்கின்றார்கள்.
அரசன்
உருவாக்கி வளர்த்த தெய்வீக வலை கொண்டு, அரசனுடன் இணைந்து, குல தெய்வம் என்று உருவாக்கி அதன் வழிகளில்தான்
செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.
அரசன் வகுத்த பக்தி வழியில் நாம் பக்தி கொண்டு,
மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தோமானால்,
நமது உடலைவிட்டு ஆத்மா சென்றபின்,
அதை மற்றொருவன் கைவல்யப்படுத்திக் கொள்கிறான்.
இது போன்ற
நிலை, இந்து மதத்தில்தான் என்று இல்லை.
உலகிலுள்ள எல்லா மதங்களிலும் இதுதான் இன்றைய நிலை. மந்திர நிலைகொண்டு, உருவாக்கப்பட்ட பக்தி மார்க்கம் அனைத்தும், மனிதரிடம்
பேருண்மையின் தன்மையை மறைத்து, அவர்களது உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.
எதைப் பெறவேண்டும்?
எதை நீக்க வேண்டும்? என்பதை மறந்து,
“எல்லாம் கடவுள் செய்யும்” என்ற நிலைகளில் அபிஷேகம், ஆராதனை போன்ற சாங்கிய
சாஸ்திரங்களைத்தான் நாம் செய்து கொண்டுள்ளோம்.
ஞானிகள்
மனிதருக்கு வகுத்துக் கொடுத்த பாதைகள் வேறு. ஆனால், அரசர்கள் ஞானிகள் கொடுத்ததை
எடுத்து, பிரித்து, மனிதரை அடிமைப்படுத்த உருவாக்கிவிட்ட
வழிமுறைகள வேறு.
எனவே, நாம் அரசர்கள் உருவாக்கி
வளர்த்த மந்திர நிலைகளில் சிக்காமல்,
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த
உடல், பொன், பொருள், நமக்குச் சதம் இல்லை.
“உயிர் ஒன்றே நமக்குச் சொந்தம்”,
நாம் எடுக்கும் அருள் உணர்வுகளே நமக்குச் சொத்து”
என்ற உண்மையினை அறிந்து,
குரு காண்பிக்கும் வழியில் செயல்படுவோம். எமது அருளாசிகள்.
9. நரசிம்ம அவதாரம்
(பக்கம் 70-72)
மனிதனான நாம் அன்பும் பண்பும்
கொண்டு வாழ்கிறோம். நமது நண்பர்களோ, அல்லது உறவினர்களோ வேதனைப்படுவதைப் பார்த்து, நாம்
அதை நுகர நேரும் பொழுது, அந்த வேதனையான உணர்வுகளை, நம்மிடத்தில் வேதனையை உருவாக்கும்
அணுவாக உருவாக்கிவிடுகின்றது நமது உயிர்.
அதே சமயம், உணர்வின் ஈர்க்கும்
காந்தத்தால் மோதும் பொழுது, அணுவின் தன்மையாக உருவாக்குகின்றது. அதே நிலைகள் மீண்டும்
பிரம்மமாக்கிவிடுகின்றது. வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் சென்றபின், அணுக்களை
சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.
இதைத்தான், “பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள்.
அதாவது, கண்களால் பார்க்கப்படும் தீமையின் உணர்வுகள் உயிரில் மோதும் பொழுது,
உணர்வின் தன்மை இயக்கப்பட்டு,
அந்த உணர்வின் இயக்கமாக, “பஜே நமச்சிவாய”
இந்த உடலுக்குள், அதனின் உணர்வை இயக்கும்
உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக அமைந்துவிடுகின்றது
என்பதை உணர்த்துவதற்காக,
பாடல்களாகப் பாடினார்கள்.
வேதனையின் உணர்வை நாம் நுகர்வதினால்,
விஷமான உணர்வின் அணுக்கள் நமது உடல் முழுவதும் படர்கின்றது. நல்ல காரியங்கள் செய்வதற்கும்
தடை ஏற்படுகின்றது.
விஷமான உணர்வின் தன்மைகளை,
இரண்யன் என்று காண்பித்து, உடலான இந்திரலோகத்திற்குள் விஷமான உணர்வின்
தன்மைகளான இரண்யன் புகுந்து, நல்ல செயல்கள் நடைபெறமுடியாதபடி தடை ஏற்படுத்துகின்றான்
என்று, ஞானிகள் நன்கு தெளிவாக்கியுள்ளனர்.
வேதனை உணர்வுகள் நமக்குள்
அணுக்களாக விளைந்துவிட்டால், அவைகள்
இந்த உடலில் தன் உணர்ச்சிகளை உந்துகின்றன. அதாவது, தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் நம் உடலில்
விளைந்துவிட்டால், அது
நம்மிடத்தில் வேதனையை உருவாக்குகின்றது.
இதனால் நல்லதைச் செய்ய முடியாதபடி இருக்கின்றதே, சிவமே, என்று இந்த உடலில் உணர்ச்சிகளைத் தூண்டி அறிவிக்கின்றது, நமது இந்திரலோகத்து
அவயங்கள். இதனை ஞானிகள், ‘’தேவர்கள் சிவனிடம் முறையிடுவதாகக் காண்பித்தார்கள்.
அதற்கு சிவன், எனக்கு வருவதை
அணைக்கத்தான் தெரியுமே தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது’’, என்று அவர்களுக்கு பதிலளிப்பதாக ஞானிகள் நமக்கு
தெளிவாக்கியுள்ளார்கள். அதன் பின், வரம் கொடுப்பவன் விஷ்ணு. ஆகவே அவனிடம் செல்வோம் என
விஷ்ணுவிடம் வருகின்றனர். உயிரிடம் வேண்டும்படி கேட்கின்றனர்.
இந்திரலோகத்தினுள் இரண்யன்
புகுந்து எங்களைச் செயலற்றதாக ஆக்குகின்றான் நீங்கள் கொடுத்த வரத்தால், ‘’விஷ்ணுவே..! பரந்தாமா..!
எல்லாவற்றையும் உருவாக்கும் நிலைகள் கொண்டு, நீ வரம் கொடுத்த தன்மையால் இரண்யன் தரும் துன்பங்களை
எங்களால் தாங்க முடியவில்லையே’’ என்று
கதறுகின்றனர்.. அதற்கு
விஷ்ணு, “நான் என்ன
செய்யமுடியும்? என்னால் வரம்தான் கொடுக்க முடியும்” என்று சொல்லுகின்றார்.
‘’பிரம்மா உருவாக்குகின்றான்’’, அவனிடம் செல்வோம், அவன் அதற்கு உபாயத்தைச் சொல்வான் என்று பிரம்மனிடம்
செல்லுகின்றார்கள். அங்கே பிரம்மனிடம் சென்றாலோ, ‘’என் தந்தை விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட நான், அவர் இட்ட கட்டளைகளைச் செய்தே ஆகவேண்டும்.
நான் உருவாக்கவில்லையென்றால் உலகம் உருவாகாது’’ என்று பிரம்மனும் சொல்கின்றார்.
எதனின் உணர்வின் தன்மை பெற்றதோ, இன்று ஒரு நெல்லின் நிலைகள் உருவாக்கினால் அது உணர்வின்
தன்மை பதிவு செய்தால்தான், அந்த
நெல்லின் தன்மை உருவாகும்.
‘ஆக நான் எண்ணினாலும், என் தந்தை சொல்லை மீறாமல் என்னை எந்த
வழியில் உருவாக்கினாரோ அந்த குணத்தின் இனத்தை உருவாக்கிக்கொண்டுதான்
இருக்கமுடியும். நான் என் பணியில் தவறினால் உலகம் உருப்பெறாது, வாழவைக்க முடியாது’ என்று பிரம்மன் கூறுவதாக, அங்கே தெளிவாக்குகின்றார்கள்.
இந்திரலோகத்திற்குள்
தீமையை விளைவிக்கும் உணர்வுகள்
வரும்பொழுதும்,
நல்ல உணர்வின் தன்மை
அழியப்படும்பொழுதும்,
சிவனும், விஷ்ணுவும், பிரம்மாவும்
என்ன உபாயங்கள் செய்கின்றார்கள்? என்ற நிலைகளை
கேள்வி பதில்களாக அமைத்து,
நாமெல்லாம் அறிவதற்கு
காவியத் தொகுப்புகளைத்
தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்
அப்போது இவையெல்லாம்
கண்ணனுக்குத் தான் தெரியும். ஆகவே அவரிடம் சென்று கேட்போம், அவர் சரியான உபாயத்தை கொடுப்பார், என்பதை விளக்குவதற்காக காவியமாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
ஏனென்றால், கண் தோன்றியபின் எதைக் கூர்மையாகப்
பார்த்து, உணர்வின் தன்மையைக் கவர்ந்து, தமக்குள் இந்திரலோகத்தை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டு,
இந்த உலகையே சிருஷ்டிக்கும்
வல்லமை கொண்ட
மனிதனின் ஆறாவது அறிவாகவும்,
தீமைகளை வென்றிடும் மனித உருவை
உருவாக்கியது
என்ற நிலைகளை அங்கே தெளிவாக்குகின்றார்கள்.
அப்போதுதான் கண்ணனிடம்
செல்கின்றார்கள்,
(பக்கம் 73-76)
கண், தான் தோன்றியதிலிருந்து ஒவ்வொன்றையும் காத்தருளும் உணர்வை
அறிவாக ஊட்டி, அதனிலிருந்து விலகிச்
செல்வதும், நுகர்ந்த உணர்வுகள் தனக்குள்
வளர்வதற்கும் மூலகாரணமாக இருப்பது அவனே.
மனிதன் வரையிலும் வளர்த்தது இந்தக் கண்களே.
ஆகையினால் அனைத்தும் அவனுக்குத் தெரியும்.
அவனிடம் செல்வோம். அவனிடம் உபாயம் கேட்போம்.
அவன் காட்டும் வழியில், நாம் செல்வோம் என்ற நிலைகளில்
பிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும்
அவனிடம் செல்கின்றார்கள்.
யாரிடம்? நமது கண்களிடம் உணர்வின் நிலைகளை
முறையிடும்படி செய்கின்றார்கள். இந்திரலோகமாக
உடலின் செயலாக்கங்களை, மனிதன் தமது
ஆறாவது அறிவின் துணை கொண்டு, எப்படித் தெளிவாக்க வேண்டும் என்று நமது
காவியங்களில், தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. அதை நாம் யாரும் பயன்படுத்தவில்லை.
ஞானிகள் காண்பித்த அருள்\வழிப்படி,
‘’அதோ வருகிறான்”
ரிஷியின் மகன் நாரதன், சூரியனின்
அபிமானபுத்திரன். ஆக மனிதனின்
வாழ்க்கையில் தீமைகளை வென்று,
தமக்குள் தீமையை வென்றிடும் நிலைகளை சிருஷ்டித்துக் கொண்டவன், துருவ மகரிஷி.
தீமைகளை வெல்லும் உணர்வின்
தன்மை, துருவ நட்சத்திரத்திலிருந்து
வெளிவருவதை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், ரிஷியால் உருவாக்கப்பட்ட குழந்தைதான், நாராயணனின் அபிமானப்புத்திரன் ஆகின்றது.
சூரியன், தான் ஒளியின் சிகரமாக இருந்து, ஒன்றைத் தான்
கவர்ந்து, மற்றொன்றை
எப்படி இயக்குகின்றதோ, இதைப்போன்று
மனிதனானபின்,
துருவ நட்சத்திர உணர்வின்
ஒளிகளை எவர் நுகர்கின்றாரோ,
அவரின் உணர்வுகள், தீமைகளைப் பிளந்து,
உண்மைகளைத் தனக்குள் உணர்த்தும் என்று
இந்தக்கண்கள் அதைக் காட்டிக் கூறுகின்றது.
அப்போது பிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும்
‘’ஐயோ, அவன் கலகப்பிரியன் ஆயிற்றே, கலகங்கள் இனி என்ன நடக்கப் போகின்றதோ’’ என்று அஞ்சுகின்றனர்.
அப்போது கண்ணன் சொல்கின்றான், ‘’கலகங்கள்
நன்மையில்தானே முடிகின்றது. தீமையல்லவே’’ இதையெல்லாம் உணர்த்துகின்றனர்
ஞானிகள்.
நம்மிடத்தில் சேர்ந்துள்ள
வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்திருக்கும் நிலையில், கண்ணன் காட்டும் வழியில், துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து, நம்முள் இணைக்க வேண்டும்.
அப்படி இணைக்கும் பொழுது, நம்முள் விளைந்துள்ள வேதனையின் உணர்வுகளுக்கும் துருவ
மகரிஷிகளின் அருள் உணர்வுகளுக்கும், போராகி, கலகப்பிரியனாகி விடுகின்றது. இதெல்லாம் ஞானிகள் நமக்கு உணர்த்திய நிலைகள்.
ஆக கண்ணன் காட்டிய நிலைகள்
கொண்டு, மகாஞானிகளின் அருளுணர்வுகளை
நம்முள் செலுத்தும்பொழுது, நம்முள்
ஞானியின் உணர்வுகள் பிராணாயாமம்.
நாம் ஒரு பானைக்குள் போட்டு வேக வைக்கும்போது அதனின் சத்து கொதித்து, அதனின் மணம்
வெளிவருவதைப் போன்று, நாம்
பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி, நம் உடலுக்குள் சேர்க்கும்முன், நம் ஆன்மாவாக, மணமாக மாறுகின்றது.
ஆன்மாவாக இருந்தாலும் வரும்
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, கண்ணின்
நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி, ‘’மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவான்மா பெற வேண்டும்’’ என்று
கண்ணான கண்களின்
நினைவலைகளை
உட்புறமாகச் செலுத்தப்படும்போது,
நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்.
அவ்வாறு எண்ணிய உணர்வுகள் ஜீவன் பெற்று,
அந்த மணத்தின் வீரியத்தின் தன்மை
உள்நின்று வெளிவருவதை,
நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.
ஆகவே, ‘’உயிரான அவன், வாசற்படி மீது அமர்ந்து, இரண்யனை மடிமீது அமர்த்திப் பிளந்தான்’’ என்று எடுத்துரைக்கப்பட்டது. இதுதான், கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, அருள்மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணும்போது
உயிரான நிலைகள் ‘’ஓ’’ என்று
பிரணவமாகி,
நுகர்ந்த உணர்வின் சக்தி
பிரம்மாவாகி,
உடலுக்குள் அனைத்து நிலையும்
இணைத்து, சிருஷ்டித்து
அதனின் ஜீவனாகி, ஓங்கி, விண்ணின்
வீரிய சத்தாக,
உள்நின்று வெளிப்படும் உணர்வின் துணை கொண்டு,
வளர்ந்திருக்கும் தீமையைப் பிளந்து,
நாம் மகாஞானியின் உணர்வை நேர்முகமாக உள்சுவாசித்து
தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு,
நமக்குள் அருள் உணர்வின்
தன்மையை சேர்க்கும் நிலைதான்
‘’நரசிம்ம அவதாரம்’’ என்கிறோம்.
துருவ நட்சத்திரத்திலிருந்தும்,
சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்
வெளிப்படும் உணர்வின்
ஒளியலைகளை,
நமக்குள் கவர்ந்து, ஆன்மாவாக மாற்றி,
நம்மில் வந்து மோதும்
தீயஉணர்வுகளைப் பிளந்து, உயிரில்
இணையும் உணர்வினை ஒளியின் உணர்வாக இணைக்கவேண்டும்.
தீமைகள் என்றும் நம்முள்
நுழையாதபடி, தடைப்படுத்திடல் வேண்டும். இவ்வாறு, தீமையின் தன்மை நம்முள் நுழையாதபடி தடைசெய்வதைத்தான், ‘’நரசிம்மன்’’ என்றார்கள் ஞானியர்கள்.
10. கல்கி
(பக்கம் 79-81)
என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான்
ஞானிகள் “கல்கி” என்றார்கள். மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான்,
பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.
உயிரின் பரிணாம வளர்ச்சியில்
இறுதியானதும்,
உறுதியானதுமான
அழியா ஒளிச்
சரீர வாழ்வே,
மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும்
என்றுரைத்தார்கள் ஞானிகள்.
சூரியனின் ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்பட்டு, புவியின் ஈர்ப்பில் வந்த உயிரான்மாவிற்கு விண்ணில் ஒளிச்
சரீரம் பெறுவதே முழுமையான நிலையாகும்.
விண்ணில் ஒளிச் சரீரம் பெற்ற உயிரான்மா, தம் ஒளியின் தன்மையை
நாளும் வளர்த்துக் கொண்டாலும், அது எல்லையில்லாப் பேரண்டத்தில், சிறியதாகவே இருக்கும்.
ஒளியின் சரீரத்திற்கு அழிவே இல்லை. ஆகையால்தான், பெருவீடு
பெருநிலை என்ற அழியா ஒளிச்சரீரத்திற்கு என்றும் பதினாறு என்று, காரணப் பெயரைச் சூட்டினார்கள்
ஞானிகள்.
சப்தரிஷிகள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உணர்வின் ஒளி அலைகளைத் தம்முள் கவர்ந்து, தம்முள் நஞ்சினைப் பிளந்து, தீமைகள் தம்முள்
வராது தடுத்து, பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மனிதர்களான நாம், நமது ஆறாவது அறிவின் துணைகொண்டு, துருவ
நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளி
அலைகளை நம்முள் கவர்ந்து, நம் உடல் முழுவதும் படரச் செய்து, நமது உடலில் உள்ள எல்லா
அணுக்களிலும் பரவச் செய்து, அதனின் வலிமை பெற்றபின், வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில்
ஆன்மாவாக இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.
தீமைகள் விளைந்த நிலையைப் பிளக்க வேண்டுமென்றால், நாம்
எப்படி சக்தி பெறவேண்டும் என்பதை நமக்கு ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
கார்த்திகை நட்சத்திரமும், ரேவதி நட்சத்திரமும், சேர்ந்து
ஒரு உயிராக எப்படி உருவானதோ, இதைப் போன்று, தீமைகளை அகற்றிடும் சக்தியினைக் கணவன் மனைவி
இரண்டு பேரும், சேர்ந்து பெறவேண்டும்.
அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தம் உடலுக்குள் சேர்த்து, மனைவி தன் கணவன்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர் உயர்ந்த நிலை பெறவெண்டும், அவருடைய பார்வை
என்றும் என்னைத் தெளிந்த மனமாக்க வேண்டும், மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க வேண்டும்
என்று எண்ணுதல் வேண்டும்.
அதுபோன்றே, கணவனும் தன் மனைவி அந்த சக்திகளைப் பெறவேண்டும்
என்று எண்ண வேண்டும். தீமைகளை அகற்றிடும் சக்தியினை, தனித்து ஒருவர் பெறமுடியாது.
நளாயினி, தன் கணவனைக் கூடையில் வைத்து, தன் சிரம் மீது
சுமந்தாள் என்ற நிலையாக, மனைவி,
தான் குறைகளை எண்ணாது,
கணவருடைய நிறைவான மனது எனக்கு வரவேண்டும்
என்று எண்ணுதல் வேண்டும்.
ஆதியிலே, அகத்தியன்
துருவத்தை நுகர்ந்து, அதன் வழியினில்
துருவ மகரிஷியாகி, தான் பெற்ற சக்தியெல்லாம் தன் மனைவி பெற
வேண்டும், என்ற உணர்வினை
ஊட்டி, அதே உணர்வினை மனைவி, தன் கணவனுக்குக்
கிடைக்கவேண்டும், என்று உணர்வினை
வலுபெறச் செய்ததினால், எந்தத் தீங்கினையும்
உருமாற்றவல்ல சக்தி அவர்களிடத்தில் உண்டானது.
தீமையை அகற்றிய மகரிஷிகளின்
அருளுணர்வுகளை, கணவன், மனைவி இரண்டு பேரும் கவர்ந்து, தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான், சமப்படுத்தமுடியும்.
தீமைகளை அகற்றும் செயலாக்கமாக, கணவன் தனது மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று
எண்ணுவதும், மனைவி தனது கணவன் பெற வேண்டும்
என்று என்ணுவதும், ஆக இந்த இரு உணர்வும் வரும்பொழுது ரேவதி நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிரானதைப் போன்று, கணவன், மனைவி
இரண்டு பேரின் உணர்வின் தன்மையும் ஒன்றாகின்றது.
உணர்வினை ஒளியாக ஒருவருக்கொருவர் மாற்றப்படும்பொழுது, இருவருக்குள்ளும்
வரக்கூடிய இருளினை மாற்றுகின்றது. இருளை மாய்த்து
ஒளியாக மாற்றுகின்றது.
மகரிஷிகளின் அருள்சக்தி கணவன்/மனைவி பெறவேண்டும் என்றும்,
அவரின் உணர்வுகள் வலுப்பெற
வேண்டும்,
அவர் பேரின்பப் பெருவாழ்வு
வாழ வேண்டும்,
அவருடைய பார்வை எப்பொழுதும்
எனக்குள் நல் ஒளியை உணர்த்த
வேண்டும் என்றும்,
இந்த உணர்வை எண்ணும்பொழுது
இந்த உணர்வின் வலுவான நிலைகள்
இங்கே கூடி,
வலுவின் தன்மைகள் பெறப்படும்பொழுது,
அவர்கள் பிறருடைய தீமைகளைப் பார்த்தாலும்,
தீமைகள் அவர்களுக்குள் வராது தடுத்து,
கல்கியின் தன்மையினை
அவர்களுக்குள் உருவாக்குகின்றது.
(பக்கம் 79-81)
“எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்
சாவித்திரி” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைந்து, மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு, மனித உடலை விட்டுச் சென்ற பின்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு
வட்டத்தில் இணைந்து
வசிஷ்டரும் அருந்ததியும்
போன்று வாழ்ந்து,
நுகர்ந்த உணர்வின் தன்மையால்
தம்முள் வலிமை கொண்டு,
தம் உணர்வின் தன்மைகளை
ஒளிக்கதிர்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
இதுதான் கல்கி.
உயிர் விண்ணிலே தோன்றியது.
உணர்வின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதியது. எதிர்ப்பின் உணர்வு கொண்டு இயக்கச்
சக்தியாக மாறுகின்றது. அதனின் இயக்கத்தால், ஈர்ப்பால் ஆண், பெண் என்ற நிலைகளில் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
இரு உடல்கள் பிரிந்தபின், மனிதனில் இது ஆண், பெண் என்ற நிலைகள் உருவாக்கி, இதில் உருவாக்கும் எண்ணங்களை தனக்குள் சேர்த்து, உணர்வின் ஒளியின் சுடராகப் பெற்றவர்கள்தான், இன்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், இன்று தம்முள் உருப்பெறும்
உணர்வுகளை தம்முள் அணைத்து, வசிஷ்டரும், அருந்ததியும் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாம்
கவர்ந்துகொண்ட சக்தி கொண்டு, உணர்வின்
இருளைப் போக்கி, ஒளியின்
சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சூரியன் அழியலாம்
உயிரணுவாக ஆனபின்,
அழிவில்லை. மனிதனோ அல்லது
வேறு எந்த உயிரினமோ நெருப்பில் விழுந்தால், அதனின் உடல் கருகுகின்றது. ஆனால், உயிர் மடிவதில்லை.
குடும்பத்தில் வெறுப்பு கொண்டு, ஒருவன் தன்னை எரித்துக்
கொண்டால் சாகும் தருவாயில், எந்த நண்பனைப் பற்றுடன் எண்ணுகின்றானோ, அவன் உடலில் இவனது
உயிரான்மா புகுந்து கொள்ளும். இங்கே நெருப்பில் எரியும் பொழுது, என்ன எரிச்சல் இருந்ததோ,
அதே உணர்வுகள் நண்பனின் உடலில் எரிச்சலாகும்.
இப்படி வெறுப்பின் தன்மை உருவாக்கப்பட்டு, அவனின் வாழ்க்கையைப்
பாழாக்கும் நிலைதான் வருமே ஒழிய, உயர்த்தும் நிலைகள் இல்லை ஆக, இதனின் உணர்வுகள் சாகாக்கலையாக
இருந்து, அவர்கள் இருவரது உயிரினையும், கீழான பிறவிக்கும் அழைத்துச் செல்கின்றது.
இதனை அறிந்துணர்ந்து கொண்ட நாம் அனைவரும், சாகாக்கலை எனும்
நிலையிலிருந்து விடுபட்டு, வேகாக்கலை எனும் மெய்ப்பொருள் தன்மையினை, துருவ மகரிஷிகளின்
உணர்வின் ஒளி அலைகளை தம்முள் இணைத்துப் பெறுதல் வேண்டும்.
அருள்ஞான நிலைகளை உங்களிடத்தில் உருவாக்குவதற்காகத்தான், நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள், எமக்குள் பதிவு செய்த அருள்ஞான நெறிப்படி, உணர்வின்
நிலை கொண்டு, யாம் அருள் ஞானத்தைப் பெற
வேண்டும் என்று எண்ணும்பொழுது, அருள்
ஞானிகள் பெற்ற உணர்வுகளை யாம் பெறுகின்றோம்.
அதனின் உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தி, உங்களிடத்தில் பதிவு
செய்கின்றோம்.
அருள் ஞான நெறிகள், கேட்போர் உணர்வுகளில் ஞான வித்தாக, ஊழ்வினையாகப் பதிவாகின்றது.. அருள் ஞான நெறிகளில் நினைவினைச் செலுத்தி, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்களேயானால், அருள் ஞான உணர்வை,
உங்கள் உயிர் அணுவாக
மாற்றுகின்றது.
அருள் ஞான உணர்வுகளை மீண்டும், மீண்டும் எண்ணும் பொழுது மெய்யுணர்வுகள் உங்களுக்குள் பெருகுகின்றது.
தீமையற்ற நிலையாக உயிர்
உருவாக்குகின்றது.
பேரானந்தத்தின் தன்மையினை
உங்களிடத்தில் உருவாக்குகின்றது.
உங்களுடைய உயிரான்மா என்றும்
பதினாறு என்ற
மெய்ப்பொருளின் தன்மையைப்
பெறும் தகுதியினைப் பெறுகின்றது.
இதனின் உண்மை நிலைகளை
அறிந்துணர்ந்து, தம்முள்
மெய்ப்பொருளைப் பெறும் தன்மையாக, தமது உணர்வை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், என்றும் பேரானந்த பெருவாழ்வைப்
பெறுவதற்கு, எமது அருளாசிகள்.