ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2013

நாம் எதனால் உணர்ச்சிவசப்பட்டு இயங்குகின்றோம்?

1. நாம் எதனால் உணர்ச்சிவசப்பட்டு இயங்குகின்றோம்?
இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார்,  அந்தச் சொல் வெறும் வார்த்தைதான்.  
அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
நமக்குள் அடக்கமுடியவில்லை.
இவ்வாறு சொல்கிறானே! என்று பதட்டமும்,
பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ, அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறிவிடுகின்றது.


இப்பொழுது நாம் சாதாரண மனிதர்களிடத்தில் தொடர்பு கொண்டு பேசுகின்றோம், சண்டை போட்டுக் கொள்கின்றோம், அல்லது சந்தோசமாக இருக்கின்றோம்.
ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தியவுடன்
அந்த எண்ணங்கள் நமக்குள் தோன்றி,
அவர் பேசிய எண்ணங்கள் ஆத்திரமோ, கோபமோ, பயமோ,
இதைப் போன்ற நிலைகளில்
நாம் தொடர்ந்து அதைப் பேச ஆரம்பித்துவிடுகின்றோம்.

இவைகள் எல்லாம், ஒரு மனிதனுக்குள் பதிவு செய்து கொண்ட இந்த நினைவை, நாம் சண்டை போடும் பொழுதும், பேசும் பொழுதும், இந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பதிவாகி விடுகின்றது.

அப்படிப் பதிவான உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது, உதாரணமாக நாம் பாசமுடன் இருந்து நினைவுபடுத்தினால் பாசமான உணர்வை நாம் சுவாசித்து, பாசத்திற்குத் தக்கவாறு அன்றைய செயல் பேச்சு இருக்கும்.

அதே சமயத்தில், ஒருவருடன் கோப நிலைகளில் பேசி இருந்தால், அந்தக் கோபத்தில் அவருடை பேரைச் சொல்லி, (அவர் நமக்கு இடைஞ்சல் செய்திருப்பார்)
அவரை நினைவுபடுத்தியவுடன்,
சண்டை போட்ட உணர்ச்சியின் உணவுகள் தூண்டப்பட்டு,
அவரின் உணர்வைச் சுவாசித்து,
ஆத்திரத்துடன் நாம் பதில் சொல்ல ஆரம்பிப்போம்.

அதே சமயம், அதே உணர்வுகளை நாம் வியாபாரத்தில் உட்கார்ந்து நினைவுபடுத்தினால் சரியான பதில் கொடுக்க மாட்டோம். ஏனென்றால், நமக்குள் வெறுப்பான எண்ணங்களைத் தோற்றுவித்தவருடைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது இந்த உணர்வின் எண்ணம் நமக்கு முன்னால் நிற்கின்றது.

அதாவது நாம் எதை எண்ணுகிறோமோ, அந்த உணர்வின் அலைகள்
நம் உடலைச்சுற்றி கவசமாக இருக்கும். 
ஆக அதுதான் முன்னாடி இருந்து,
நம்மை சுவாசிக்கச் செய்து
எந்த குணத்தில் இருந்தோமோ, அந்த குணத்தைப் பாதுகாக்க
அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.

இப்பொழுது கோபமான நிலைகளில் நாம் பேசினால், அந்தக் கோபத்திற்குத் தகுந்தவாறு தப்பு செய்திருப்போம். இப்படிச் செய்ததனால்தான் நாம் இப்படிச் செய்தோமென்ற, அந்த உணர்வு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் ஞானத்தைப் பேசும்.
2. நாம் சுவாசிக்கும் உணர்வின் குணங்கள், உடலிலே எப்படியெல்லாம் இயங்குகின்றது?
இதைபோன்றுதான்நம் உடலில் எந்தெந்த குணங்களில் தன்மை இருந்தாலும்அதை நாம் நினைவுபடுத்தும்போதுஇந்த உணர்வுகள்ஆற்றல் பெற்றுஉடனே சுவாசித்துஅது செயல்படுத்துகின்றது.

உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தவறு செய்திருக்கிறார், கோபமான  உணர்வை நம் புலனறிவு இழுத்திருக்கின்றது. அப்பொழுது அந்த கோபத்தை நினைவுபடுத்தி கண்ணிலே பட்டவுடன், நாம் இங்கே பார்த்தவுடன்,
அடுத்து ஒருவர் சந்தோஷமாகச் சொன்னால்,
இந்தப் புலனறிவு அவரைப் பார்க்கும்போது,
அவர் சொல்வதைச் சரியாகக் கிரகித்து இழுக்காது. 

ந்தக் கோபத்தின் மேல், இந்த உணர்வின் நினைவலைகள் பட்டு, நாம் செயல்படுத்தும்போது அந்த நினைவலைகள், கண்ணிலே பாய்ந்துகொண்டிருக்கும்.

நம் முன்னால் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால், இந்த உணர்வுகளை அது கிரகிக்கக்கூடிய சக்தி இருக்காது.  மிகவும் கஷ்டமாகத் தெரியும். ஆக, நம் கண்ணின் புலனறிவு அதன் வழிக்குத் தக்கவாறுதான் அதை ஈர்ப்பது.

பல நிலைகள், நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் தவறு செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, பிறர் நம்முடன் சண்டை போட்டதன் நினைவுகளை  நாம் கொண்டுவந்தவுடன், அன்று நமக்கு அஜீரணமாகின்றது; அல்லது, சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால்,   நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகியிருக்கின்றது. நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ, அந்த உணர்வான செல்கள் அனைத்துமே, ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது,
அதற்குத்தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும்
நம் சுவாசம் இயங்குவதும்,
குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால்
உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும்.

பயம் கலந்த ஒரு கோபத்தை உண்டாக்கப்படும்போதும்,
சில்லென்ற நிலை ஏற்படும்படி,
எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும்,
நம் தலைமுடி கிர்ரென்று மேலே எழுந்துவிடும்.
இவையெல்லாம் இந்த  உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாமல்ல!  நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே, நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.
3. மெய்ஞானிகள் எப்படி தீமைகளை அடக்கினர்
     அதற்கு என்ன செய்வதுஅதற்குத்தான், இப்பொழுது தியானத்தின் நிலைகளை யாம் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.
மெய்ஞானிகள் அவர்கள் விண்ணுலக சக்தியைப் பெற்று, அவர்கள்  உடலிலே வளர்த்து, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவர்கள் உடலில் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று, தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

நமக்கு கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம். ஆனால், ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால்,
அது அவர்களுக்குள் அடங்கி,
அதற்குண்டான ஞானத்தை ஊட்டி,
எந்த செயல் வேண்டுமோ,
அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

கோபம் வரும் நிலைகளில், அந்தக் காரமான உணர்வுகள்  நமக்குள்  அதைத் தூண்டச் செய்து,  அந்த காரமான நிலைகளில் நாம் பேசி,  பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்,  அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆக,  மெய்ஞானிகள் விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக்கொண்டதனால் அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்,   அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 

ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.