1. நம் பூமியில் செடிகள் எப்படி விளைகின்றது?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள, 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் எதில் கலக்கின்றதோ,
ஒரு செடியில் கலந்தாலும்,
அந்த நட்சத்திரத்தின் நிலை கலக்கப்படும்
பொழுதுதான்
அதற்குத் தக்கவாறு, அந்த தாவர இனச் சத்தை உருவாக்கும்.
இந்த பூமியில் செடிகள் எப்படி
முளைக்கின்றதோ, அதே மாதிரிதான்,
நமது உடலில்,
நாம் சுவாசிக்கும்
உணர்வுக்குத் தக்கவாறு,
அணுக்கள் விளையும்.
மலைப் பகுயில் விளைவது, கீழே தரைப் பகுதியில்
விளைவதில்லை.
இதைப்போன்று, நமது உடலில், அந்தந்த
காலப் பருவமும், அதனுடைய நிலைகள் வரும்பொழுது, அணுக்கள் விளைகின்றது. அதனதற்குத்
தக்கவாறுதான், இது கவரப்படும் பொழுது, சுவாசத்தை எடுத்து, அது விளைகின்றது.
அந்த அணுக்கள், அது இருந்த இடத்திலிருந்து
விளைகின்றது. இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர்தான், அதை உருவாக்குவதும் நமது உயிர்தான்.
சூரியனோ, சந்தர்ப்பத்தில் ஒன்றோடு ஒன்றை இணைக்கச் செய்கின்றது. ஒரு வித்தை
உருவாக்குகின்றது. அது விளைந்த பின்,
எதை எடுத்து, வித்தை உருவாக்கியதோ,
புவி ஈர்ப்பின் துணை கொண்டு
அதற்கு அதைக் கொடுத்து,
செடியாக வளர்க்கின்றது.
2. பிறருடைய உணர்வுகள் நமக்குள் எப்படி விளைகின்றது?
இதே மாதிரி தான், நாம் நல்ல குணங்களோடு
இருக்கின்றோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். அவர்களது உடலில் இருந்து
வரும் உணர்வுகள், நம்
எண்ணங்களோடு கலந்து, உயிரணுவாக மாறும் பொழுது, புதுப்புது குணங்களாக மாறுகின்றது.
நேற்று நன்றாகப் பேசினார், ஆனால், இன்று
மோசமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றோம். ஏனென்றால், அவர் யாரிடம் அதிகமாகப் பேசுகின்றாரோ, அந்த உணர்வுகள் இங்கே வளர்ச்சி பெறும். இவர் சுவாசிக்கும்
அணுக்களின் தன்மை வளரப்படும் பொழுது, இதற்கு முன் மோசமாகப்
பேசினாலும், இந்த மணங்கள் வந்து நல்ல எண்ணங்களை பேசுவார்.
சிலர் உயர்ந்த எண்ணங்களில் இருப்பார்கள். பிறர்
சொல்லும் கஷ்டங்களைக் கேட்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் கேட்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் அணுக்களாகப் பெருகி இருக்கும்.
நல்லவராக இருந்து, நான்கு பேருக்கு பஞ்சாயத்து செய்தவர், பிறருடைய குறைகளை எல்லாம் கேட்டு, அது அணுக்களாக விளைந்து, தப்புள்ளவருக்கு நியாயத்தைப் பேசுவார். பஞ்சாயத்துகளில்
பார்த்தால் இதுதான் வரும். முதலில் நியாயஸ்தர் என்று நினைப்போம்,
பிறருடைய உணர்வுகள்,
அணுக்களாக விளைந்த பின்,
நியாயங்கள் மாறிவிடும்.
இந்த தப்பிற்குத் தக்கவாறுதான், அவருடைய தீர்ப்பும் வரும்.
இந்த உணர்வுகள், ஏன் இந்த மாதிரி மாற்றமடைகின்றது என்றால்,
இது எல்லாம் இயற்கையின் சில நிலைகள்தான்.
3. ஈஸ்வராய குருதேவர் பெற்ற நிலைகள் எனக்குள் (ஞானகுரு)
விளைந்து, அது உங்களுக்குள்ளும் விளையும் நிலை
அதைப் போன்றுதான், குரு காட்டிய உணர்வை
உபதேசிக்கின்றோம். அவர் எனக்குள் உபதேசித்தார். அவர் உபதேசித்ததை உங்களிடம்
சொல்கின்றோம். இது உங்களுக்குள் பதிவாகின்றது. இது, உங்களுக்குள் வளர்ச்சியாகிக் கொண்டே
இருக்கும்.
எனக்கு எப்படியெல்லாம் நல்வழி காட்டினாரோ, அந்த நினைவு சிறுகச் சிறுக
விளைந்து, நான் பெற்ற சக்தி மாதிரி, அதை அறியக் கூடிய சக்தி, நீங்கள் பெறுகின்றீர்கள்.
குரு உடலில் வளர்த்து வந்த எண்ணம், எனக்குள் இருக்கின்றது. அதை யாம் பெற்று, எமக்குள் வளர்த்து
வந்த உணர்வைத்
திரும்பச் சொல்லும்
பொழுது, அது வருகின்றது.
குருவால் பெற்ற நிலைகள், எனக்குள் வளர்வதும்,
அது உங்களுக்குள்ளும் விளைகின்றது.
ஒரு செடி, எந்த ஊரில் விளைந்ததோ, இந்த ஊரில் போய் வித்தை வாங்கி வந்தேன் என்று
சொல்கின்றீர்கள்.
அதே மாதிரி, குருவினுடைய அருளை வைத்து, எனக்குள் விளைகின்றது. குருநாதருடைய நிலைகளை, சாமியிடமிருந்து பெற்று வந்தேன் என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
நீங்கள் இந்த உணர்வின் தன்மை சொல்லும் பொழுது, சாமியினுடைய நிலைகளைச் சொல்லிச் சொல்கின்றீர்கள். குருநாதர் என்னிடம் சொன்னது பற்றி, நான் உங்களிடம் சொல்கின்றேன். நான் சொன்னதை, நீங்கள் சொல்கின்றீர்கள். ஒன்றின் தன்மை ஒன்று, நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு வருகின்றது.
குருநாதர், அவர் கண்டுணர்ந்த உணர்வுகள், எத்தனையோ கஷ்டப்பட்டு அதைப் பெற்றார். ஆனால், அதைத் தெரியப்படுத்துவதற்கு, எத்தனையோ ரூபங்களில் உணர்த்தி, அதைப் பெறச் செய்தார்.
எல்லோரும் அந்த மாதிரிக் கஷ்டப்பட முடியாது. ஆனால், அவர் கொடுத்த நிலைகளை, நீங்கள் அனைவரும் பெற வேண்டும். எமது அருளாசிகள்.