சூரியனில் இருந்து வெளிப்படும்
‘வெப்பம் பராசக்தி’ என்றும், அதனிடம்
இணைந்து வெளிப்படும் சக்தி ‘காந்தம்
லட்சுமி’ என்றும்
பெயர் வைத்தனர் ஞானிகள். அதனுடன் வெளிக்கடந்து, சூரியனிலிருந்து வெளிப்படும் “அல்ட்ரா வயலட்”
என்ற நஞ்சினைக் கவர்ந்து, நமது
பூமிக்குள் வரப்படும் பொழுது, மூன்று நிலையாக வருகின்றது.
விஷம் – இயக்கம்,
காந்தம் – இணைத்தல்,
வெப்பம் – உருவாக்குதல்,
என்ற நிலைகள் கொண்டு, நம்
பூமிக்குள் வரப்படும் பொழுது, அது நம்
பூமியிலே வந்து, ஒரு ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால், காந்தம் தனக்குள் கவர்ந்து, தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொழுது, வெப்பமான நிலைகளிலே இது மோதியவுடனே, வெப்பமாகின்றது.
அப்பொழுது, அது
இரண்டறக் கலந்து, அந்த ரோஜாப்பூவின் மணமாக,
இந்த சூரியனில் இருந்து வந்த,
காந்தப்புலன் இயங்குகின்றது. அப்பொழுது அந்த மணம், ஞானம் – சரஸ்வதி.
ஆகவே, அந்த
அணுவிற்கு
(1) வெப்பம் - உருவாக்கும் சக்தியாகவும்,
(2) காந்தம் - தனக்குள் அணைக்கும் சக்தியாகவும்,
(3) மணம் - அறியும் சக்தியாகவும்,
அதனுடன் இணைந்துள்ள
(4) விஷத்தின் தன்மை - இயக்கச்சக்தியாகவும்,
அனைத்தும் இணைந்து இருந்தால்,
(5) “உணர்வு”, இயக்கம் என்று, ஐந்து புலனறிவாக மாறுகின்றது.
மூன்று சக்தியாக
இயங்குகின்றது. (1) பராசக்தி வெப்பம், உருவாக்கும் சக்தி (2) லட்சுமி - காந்தம், அணைக்கும் சக்தி(கவரும் சக்தி) (3) சரஸ்வதி -ஞானம், மணத்தின் சக்தி,
என்று ஒரு அணுவின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்குத்தான், மூன்று படங்களையும் வைத்து, ஒரு அணுவிற்குள் உருவாக்கும் சக்தியும், அணைக்கும் சக்தியும், மணத்தின் சக்தியுமாக அது இயங்குகின்றது, என்ற நிலையை மனிதனாக இருக்கும் நாம் புரிந்து கொள்வதற்காக, “ஆயுத
பூஜை” என்று ஞானிகள் வைத்தார்கள்.
‘’ஆயுதம்‘’ என்றால் என்ன? இப்பொழுது எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அந்த குணத்தின் சக்தியாக நாம் எண்ணி, அதையே ஆயுதமாக எண்ணி, நாம் செயல்படும் தன்மை, ஆயுத பூஜை.
இப்போது நாம் ஒரு பொருளை உருவாக்க
வேண்டும் என்றால்,
அதை எண்ணி, நாம் எண்ணத்தால் செயல்படுத்தும் நிலையை நாம் அறிந்து
கொள்வதற்காக, ஆயுத பூஜை என்று வைத்தது.
நாம் ஏதாவது செய்யவேண்டும்
என்றால், ஞானம் வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுத பூஜை என்றும், நாம் எண்ணியதை காந்தம் அணைத்து, அந்த உணர்வாக செயலாக்கும் நிலைதான் லட்சுமி. இவை அனைத்தும்
நமக்குள் எண்ணியதை, இந்த
எண்ணத்தை உருவாக்கியது, ‘’பராசக்தி’’ என்ற இந்த உண்மையினை நாம் அறிவதற்காகத்தான், (ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள்) “ஆயுத பூஜை” என்றும், “லட்சுமி பூஜை’
என்றும், “பராசக்தி பூஜை”
என்றும் கொண்டாடப்படுகின்றது,
இன்று வட இந்தியாவில் எடுத்துக் கொண்டால், “துர்கா பூஜை
என்றும், “காளி பூஜை” என்றும் அதை வணங்குகின்றனர். அன்று துர்கை மாதிரி சிலைகளைச்
செய்து, பத்து நாள்
கொண்டாடி, அதன்பின்
துர்கையைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைப்பது வழக்கம்.
ஆனால், தமிழ் நாட்டைப்
பொறுத்த வரையிலும், ஆயுத பூஜை என்று நாம் வைத்து,
முறைப்படி இங்கு வணங்குகின்றோம்.
“தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி”,
என்று சொன்னதைப் போல, தென்னாட்டிலே
தோன்றிய அகத்திய மாமகரிஷி இதைக் கண்டுணர்ந்து, இந்த உண்மைகளை வெளியிட்ட நாள் தான் விஜய தசமி.
இதிலிருந்துதான், உலகம் முழுவதற்கும் விண்ணுலக ஆற்றலின், ஒரு அணுவின் இயக்கத்தை வெளிப்படுத்தியது.