ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2012

அகத்தியர் 2


DSC00014.JPG    DSC00015.JPG  
சாமி புத்தகம் அகத்தியர் 2
(பக்கம் 74-78)

தன்னுள் விளைந்த சக்தியை சூரியன் ஒளியாக மாற்றி, உலகை சிருஷ்டிப்பது போன்று, ஒரு குடும்பத்திற்குள் சகோதரர்களும், குழந்தைகளும் இதேமாதிரி, தாய் தந்தையருடைய நிலைகளில் எண்ணத்தை செலுத்தி,  எங்கள் தாய் தந்தையரின் அருளால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதைப் போன்று தாய் தந்தையரும், குழந்தைகள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். 

குழந்தைகள் ஒவ்வொரு எண்ணங்கள் கொண்டு, ஒவ்வொரு நிலைகள் வாழ்க்கையில் இருந்தாலும், அதே தாய் தந்தையருடன் இணைந்து செயல்படும் போது, அந்த உணர்வின் சக்தியால்,
குடும்பத்திற்குள் தாய் தந்தையை சூரியனாகவும்,
அதே சமயம் நாம் அதற்குள் பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகவும்
நம் வீட்டிற்குள் ஒரு பிரபஞ்சமாகச் சுழன்று,
நம் எண்ணத்தினுடைய நிலைகள்
தாய் தந்தையைப் பிரகாசிக்கச் செய்ய,
அந்த ஒளியின் தன்மையை,  நாம் எங்கு சென்றாலும் இயக்கக் கூடிய சக்தியாகும். 

கோள்கள் எப்படி வெகு தூரம் சென்றிருந்தாலும் சூரிய சக்தியால், இயங்குகின்றதோ, இதைப் போன்று, தாய் தந்தையரின் அன்பால், நாம் எங்கு சென்றாலும் அந்த இயக்கச் சக்தியின் நிலைகளில் தொடர்பு பெறலாம்.

இவ்வாறு நாம் தொடர்பு கொண்டு வந்தால்தான், நாம் முன்பு சொன்ன மாதிரி, இந்த பூமியில் இந்த உயிராத்மா வெளியே செல்லும் போது, நமது குழந்தைகள் அம்மா அப்பாவின் உயிராத்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி, ஏங்கி அவர்களை உந்தித் தள்ளமுடியும்.

நாம் உடலுடன் இருக்கப்படும் போது, நமக்குள் ஒருவருக்கொருவர் அன்புடன் நாம் எண்ணும்போது, விக்கல் பாய்கின்றது. துரோகம் செய்தார்கள் என்று எண்ணினால், புரையோடுகின்றது. நம் உடலையும் இயக்கக்கூடிய சக்தி தாய் தந்தையரின் நிலைகளிலும், அதே உணர்வுகள் கொண்ட, அவர்கள் கருவிலே உருவாகிய குழந்தைகளிடமும் உள்ளது.

இம்முறைப்படி தியானம் செய்யும் குழந்தைகள், அவர்களின் தாய் தந்தையர்கள் இறந்தபின். அந்த உயிராத்மாக்களை, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று எண்ணி, அவர்களை உந்தும் போது,
அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து,
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய
உயர்ந்த ஒளியின் உணர்வுகளை, 
தாய் தந்தையரைச் சுவாசிக்கச் செய்து
(உடலை விட்டுப்பிரிந்த உயிராத்மாக்களை) 
அதன் வழிகளில் அவர்களுக்கு ஆகாரமாக,
சப்தரிஷி மண்டலங்களின் சக்தி கிடைக்கும்.

அவர்களுடைய உடலாக நாம் இருப்பதனாலே, வானை நோக்கி எண்ணி, அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டுமென்று எண்ண வேண்டும்.

உடலுடன் இருக்கும் நாம், அவ்வாறு ஏங்கி எண்ணும்போது, சப்தரிஷி மண்டலங்களுடன் ஐக்கியமான அந்த உணர்வுகள் மூலமாக, அங்கிருந்து  நாம் பல சக்திகளை நாம் இந்த புவியிலேயும் பெற்று, இந்த புவியின் ஈர்ப்பிலே சிக்கியிருந்தாலும், நம் வாழ்க்கையில் வரக்கூடிய பல இன்னல்களையும் துரித நிலைகளில் மாய்த்து, நாம் அடுத்து இந்தச் சரீரத்தை விட்டுச் சென்றவுடன், ஒளி நிலை பெறும் தகுதியைப் பெறுவோம். இவைகளெல்லாம் அன்று மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

அவர்கள் ஒளி சரீரம் பெறும்போது,  நாம் இங்கிருந்து எண்ணத்தால் இயக்கப்படும்  இந்த உணர்வின் சத்துக்களை, நம் தாய் தந்தை பெற்று,  இந்த மனிதனின் எண்ண உணர்வுகளின் ஆற்றல்கள் அங்கே பெருகுகின்றது.
தன் நினைவின் ஆற்றலை, நாம் குழந்தைப் பருவமாக எவ்வாறு இங்கே பெறுகின்றோமோ, சிறுகச் சிறுக வளர்ந்து, நம் எண்ண அலைகள் பெறுவது போன்று கடும் தவம் இருந்து, இந்த உயிராத்மாக்கள் விண்ணிலே சென்றாலும், சப்தரிஷியின் உணர்வுகளை அங்கே பெற்று, அது வளர்ச்சி அடையும் பக்குவம் பெறுகின்றது.

அங்கிருந்து விண்ணின் ஆற்றலை,  தான் நினைவு கொண்டு ஈர்த்து, மரம், செடி கொடிகள், எப்படித் தன் சத்தின் தன்மையை இருந்த இடத்திலிருந்து பெறுகின்றதோ,  இது போன்று, விண்ணில் இருக்கக் கூடிய இந்த உயிராத்மாக்கள், விண்ணிலே எங்கு வேண்டுமானாலும் நினைவைச் செலுத்த முடியும்.

அந்த ஆற்றல் மிக்க நிலைகளை ஆகாரமாக எடுத்து, தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டு, உயர்ந்த சக்தியினுடைய நிலைகள் பெற்று,
என்றும் 16 என்ற நிலைகளாக,
பெரு நிலைகள் பெரும் தகுதியே,  அது. 
என்றும் 16 என்ற அந்த நிலையை, நீங்கள் அனைவரும் அடைய எமது அருளாசிகள், 

 (பக்கம் 79-84)
யாம் இப்போது கொடுத்த அந்த சக்தியினுடைய நிலைகள் கொண்டு, அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தியானம் செய்யவேண்டும்.  தியானமென்பது, மகரிஷிகளின் அருள் சக்தியை, நம் உடலில் சேர்க்கக் கூடியது. 

நமக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம், ஆத்ம சுத்தியின் சக்தியை நமக்குள் எடுத்து, நமக்குள் வரக்கூடிய துன்பத்தைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் வீட்டை எவ்வளவுதான் சுத்தப்படுத்தி வைத்தாலும், அடிக்கடி சுத்தப்படுத்தவில்லை என்றால், குப்பைகள் சேர்ந்துவிடும். அதே போன்று, வெள்ளைத் துணியை நாம் போட்டிருந்தாலும், அடுத்து, அதில் சேரும் அழுக்கை நாம் துவைக்கவில்லை என்றால், வெள்ளை வராது. அதைப் போல வெள்ளைத் துணியில் அழுக்கு அதிகமாகச் சேர்ந்துவிட்டால், அதைத் துவைத்தாலும் அது மிகவும் கிழிந்துவிடும்.

நம் வாழ்க்கையில், எப்பொழுது இன்னலான நிலைகளால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சேர்கின்றதோ,. அப்பொழுதெல்லாம், இந்த ஆத்ம சுத்தி செய்து, துடைத்து, உங்களுக்குள் அழுக்கான நிலைகள் சேராவண்ணம் தடுத்து, உங்களை மனபலப்படுத்தி, உங்கள் எண்ணங்கள் மகிழ்ச்சியான நிலை கொண்டு, உங்கள் பேச்சும் மூச்சும், பிறருடன் பேசினாலும், அவரையும் மகிழச் செய்து, அங்கே விளைந்த உணர்வுகள், நமக்கு மகிழ்ச்சியான எண்ணங்களை பேசச் செய்யும்.

ஆக, இந்த ஆற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குப் பெறவேண்டுமென்று மாமகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி,
அந்த அருள் சக்தியை பெற்று, உங்கள் மூச்சான நிலைகள்,
நீங்கள் சந்தித்த, தியானத்திலிருந்தோருடைய எண்ணங்கள் அனைத்தும்
இந்த மகிழ்வான நிலைகளில் மகிழ்ந்து
நீங்கள் விடும் மூச்சலைகள், 
ஊருக்கும், உலகத்திற்கும், எனக்கும்,
உங்களுக்கும், அது நல்லதாக அமைகின்றது.

ஆகவே, நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று, உங்கள் மூச்சின் உணர்வின் அலைகள், அது மகிழ்ச்சியான எண்ண அலைகளாக வெளிப்படவும், அநத மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு, உங்களுக்குள் ஒளியின் சரீரமாக உருப்பெறும் ஆற்றல்கள், உங்களுக்குள் பெற வேண்டுமென்று,  இதை நினைவுபடுத்துகிறோம்.

நீங்கள் பெறவேண்டுமென்று யாம் கொடுக்கும் போது, நீங்கள் ஏங்கி வந்த உணர்வுகள், யாம் கொடுக்கக்கூடிய அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் துரிதமாக இயங்கி, உங்களுக்கு அது நன்மை பயக்க செய்யும்.

இந்த நிலைகளை கடைப்பிடிப்போர், ஒருவருக்கொருவர் இந்த பக்குவப்படுத்தும் நிலை வரவேண்டும்.  பிறரிடம் சொல்லும் போது, நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும், இனிமை கலந்து தான் சொல்ல வேண்டும்.
அதாவது, ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் போது,  நாம் எப்படிப் பேசுகின்றோமோ, இந்தப் பாச அணைப்புடன், நம் வார்த்தைகளைச் சொல்லிப் பழகவேண்டும். அந்தப் பாச அணைப்புகள் இருந்தால்தான்,  உயர்ந்தது.

நாம் சொல்லக்கூடிய நிலைகள் இந்த உணர்வுகள்,
நாம் எப்படி  நாதத்தைத் தட்டும் போது
நாதத்திற்குத் தக்கவாறு, உணர்வுகள் இயங்குகின்றதோ,
அதே மாதிரிதான், நாம் சொல்லக்கூடிய சொல் ஒன்றாக இருந்தாலும், நாதத்திலே நாம் வீணையை வாசிக்கும்போது, அதே நாதத்தை சமமான நிலைகள் இருந்தால், இனிமையாக இருக்கின்றது.

இதைப் போன்று, இந்த உணர்வின் நிலைகளை, நாம் சொல்லும்போது அமைதிப்படுத்தி, ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும். எக்காரியம் இருந்தாலும் நாம் அனைவருமே,
நம் குருநாதர் கொடுத்த ஆற்றல் கொண்டு,
அனைத்து மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெற்று,
நம்முடைய நிலைகளில், நம் இனிமை கலந்த சொல்லாலே,
பிறரை மகிழச் செய்து, அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு,
அங்கே, அவர்கள் வாழ்க்கையை மகிழ செய்யவேண்டும்.

ஆக, நாம் நல்லதைப் பெறக்கூடிய நிலைகளில் நாம் வரும் போது,  நமக்குள் உள்ள குறைகளை நிவர்த்திக்கத் தான் வருகின்றோம்.  குறை இல்லாதவர்கள் இல்லை. 

இருந்தாலும், நமக்குள் சொல்லாலேயும், சில நிலைகள் நமக்குள் குறைப்பட்டாலும், அதை,  நாம் இப்படி பக்குவப்படுத்தி, அணைப்புடன், நம் சொல்லின் இனிமையின் நாதங்கள், பிறருடைய உடல்களில், இந்த இனிமையை உண்டாக்கி, அவர்கள் வாழ்க்கையில் மகிழச் செய்ய வேண்டும்.

(பக்கம் 84-86)
நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள், நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி,  நம் எதிரியாக இருந்தாலும் சரி, நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் காரமான நிலைகள் பேசினாலும், நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன், பிறர் காரமாக பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெறவேண்டும்.

ஆக, இதை ஒவ்வொரு நிமிடமும், உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு சதா, நீங்கள் ஆத்ம சுத்தி  என்ற ஆயுதத்தை எடுத்து, உங்கள் உயிரை ஈசனாக மதித்து,
அந்த ஈசனுக்கு, பாலாபிஷகம்
ஆலயங்களில் செய்வது போன்று, உங்கள் ஈசனுக்கு, அந்த மெய்ஞானியின் அருள் சக்தியான நிலைகளை,  நீங்கள் சுவாசித்து, அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வின் மணங்கள், உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக,  உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து,  அந்த அபிஷேகத்தை, யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
ஆகையினாலே, உங்கள் உயிரான ஈசனுக்கு, இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து,  அங்கே உங்கள் உயிரான நிலைகளுக்கு, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து,  உங்களுக்குள் மகிழச் செய்யுங்கள்.

இதைப் போல, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்து பிறருக்குச் சொன்னாலும்,
அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம்,
நாம் வெளிப்படுத்தும், இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து,
ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு,
அந்த உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
நாம் பேசிய உணர்வுக்கொப்ப, அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து. நம்மைப் பக்குவப்படுத்துவதோ, நம்மை சொல்லச் செய்வதோ,  இதைப் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது. ஆகையினாலே, இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் எப்படிச் செயல்படவேண்டும்?
நாம்  குழந்தை தவறு செய்தாலும், பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம்.
அதைப் போன்று, நாம் உடலிலே வேதனையாகும் பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டுவிட்டால், அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி,  அதைத் துடைக்க முற்படுகின்றோம்.
அதைப் போன்று, ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன், பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும், நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தைப் பெறவேண்டும்.

எப்படி அசுத்தமான நிலைகள் இருந்தாலும், மனமுவந்து துடைக்கின்றோமோ,
அதைப் போன்று,  பிறருடைய அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும்,  நாம் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பின்பற்றி, அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகவேண்டும்.

ஆகவே, நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும். இதன் மூலம், நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை, எளிதாக அடைய முடியும். எமது அருளாசிகள்.

(பக்கம் 88-94)
குருநாதர் அவர் தாம், அருள் சக்தி பெற்ற நிலைகள் கொண்டு, எல்லாவற்றையும் அரவணைத்து வைத்திருக்கின்றார். அரவணைக்கிறார். அதைப்போல், கங்காரு எப்படி, தன் குட்டிகளை அரவணைத்து வைத்திருக்கின்றதோ, அதே போல
ஒரு வெப்பகாந்தம்
அந்த உணர்வின் சக்தியை
தனக்குள் அரவணைத்து வைத்திருக்கின்றது.
அவ்வாறு அரவணைத்து வைத்திருக்கின்ற
சக்தியின் நிலைகள் கொண்டுதான், அது இயங்கும்.
வெறும் எண்ணத்தை கொண்டு தன் இனத்தை, தான் வளர்க்க வேண்டுமென்று எண்ணியதோ, அதன் நிலைகள் கொண்டு, தன் பாசத்தால் அது அரவணைத்துக் கொள்கிறது.  தன் இனத்தை வளர்க்கச் செய்கின்றது.  கங்காருவும் தன் நிலைகளில், தன் குட்டியை அரவணைத்து வைத்துக் கொள்கிறது.

ஒரு அணுவும், எத்தகைய உணர்வு கொண்டு, ஒரு அணுவின் நிலை பெறுகின்றதோ, அத்தகைய அணுக்களின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மரமாகும்போது,  அது தன் இனத்தின் சக்தியை அரவணைத்துத்தான் வளரச் செய்கின்றது.

அதை போன்று, மனிதர்களாக இருக்கக்கூடிய நாம், இதை அனைத்தையுமே அறிந்துகொள்ளக்கூடிய நிலைகளில் நாம் இருக்கின்றோம். ஆக, மனிதனான இனத்தின் நிலைகளில் நாம் அரவணைத்து, எப்படி குரங்கு தன் குட்டியின் நிலைகளில் பாசத்தை செலுத்துகின்றதோ, அதை போன்று நமக்குள் மனித இனமாகப் பெற்றவர்கள் நாம், அதற்குள் அரவணைத்துக் கொண்டு, நமக்குள் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வளர்த்துக் கொளவது தான்.

ஏனென்றால், விருப்பு, வெறுப்பு இத்தகைய சத்தின் நிலைகள் நமக்குள் சேர்ந்து, அது நம்மையறியாமலேயே பிறிதொன்றை வெறுக்கச் செய்கின்றது.
நாம் எத்தகைய உணர்வின் தன்மையை
நாம் உணர்ந்து, சுவாசித்து,
நுகர்ந்து கொள்கின்றோமோ,
அந்த  சுவாசித்த உணர்வு, அத்தகைய நிலைகள்
நம் உயிரிலே பட்டு,  அது இயக்கச் செய்கின்றது.

ஆக அதன் இனத்தை, அந்த காரமான உணர்வுகள் நமக்குள் பட்டவுடன், இந்த காரமான சுவாசத்தைத்தான், நாம் எடுத்து, அந்த உணர்வின் தன்மை நமக்குள் கூட்டி, நாம் வெறுக்கும் தன்மைகளைச் செய்கின்றோம்.

இதைப் போன்றுதான், உலக அணுவின் இயக்கமும் மற்ற நிலைகளும். மனிதனாகப் பிறந்து, நாம் எப்படி ஒரு பொருளை அறிந்து கொண்டோமோ, அதை அறிவதற்கு உணர்வின் தன்மை நமக்குத் தெரிகின்றது.

சூரியன் ஒளி சக்தியாகத் திகழ்கின்றது. அந்த ஒளியின் சக்தியில், பிறிதொன்றை அறியச் செய்யும் ஆற்றல்கள் இருக்கின்றது. ஆனால்,
அந்த உணர்வின் ஆற்றல்.
மனிதனுக்குள், நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி
நாம் இயக்கப்படும்போது,
அறிந்துணர்ந்து செயலாக்கும்
இந்த உணர்வின் ஒளி, சக்தி பெற்றது.
அவ்வாறு பெற்ற நாம், அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, நாம் உயிரின் நிலையை, ஒளியாக மாற்றிச் செல்லும் நிலை.

நமது குருநாதர், அவர்கள் எப்படி ஒளி சரீரம் பெற்றார்களோ, அந்த ஒளி சரீரத்தை பெறும் தன்மையே,  இந்த தியானம்.

இப்பொழுது ரேடியொக்களில், T.V.க்களில் அதே ஸ்டேஷன் அலைகளை, நாம் திருப்பி வைக்கும்போது, அந்தந்த அலைவரிசைகளைக் காண்கின்றோம். இதைப் போன்று மெய்ஞானிகள் வெளிப்படுத்திய, அந்த உணர்வின் சக்திகள் இன்று காற்றிலே மிதந்து கொண்டிருக்கிறது. அதைப் படைத்து வைத்திருக்கின்றார்கள்.

அந்த மெய்ஞானிகள் அவர்கள் விண் செல்வதற்கு முன், ஆற்றல் மிக்க சக்திகளை தன் உடலிலே வளர்த்து, 
தன் மூச்சாலும்,  பேச்சாலும்,  சொல்லாலும்,
உடல் உணர்வாலும்,  வெளிப்படுத்திய சக்திகள், 
அவர்கள் சமைத்த சக்தி அத்தகைய படைக்கப்பட்ட சக்தியை நிறைவுபடுத்தியிருக்கிறார்கள்.

ஆக,  மனிதனால்தான், அந்தக் காற்றிலே இருக்கக் கூடிய சக்தியை எண்ணி,  தனித்து, தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆக, மெய்ஞானிகள் அவ்வாறு அத்தகைய ஆற்றலைத் தனக்குள் பெற்று, வளர்த்த அந்த உணர்வின் சத்து, இன்று காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது.  அதைப் பெறுவதற்குண்டான, தகுதியின் ஆற்றலைப் பெறுவதற்குத்தான், நாம் இப்பொழுது செய்யும் தியானம். 

மெய்ஞானியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு, குருநாதருடைய ஆற்றல் மிக்க சக்தியை நமக்குள் செலுத்தி, அவரின் துணை கொண்டு, மெய்ஞானியரின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும். ஒவ்வொரு ஞானியும், ஒவ்வொரு ஆற்றலின் தன்மை பெற்றவர்கள்.
 ஆக அத்தகைய ஞானியர்களின் அருள் ஒளிகள் இங்கே காற்றிலே மிதந்து கொண்டிருப்பதை நாம் ஈர்த்து, சுவாசித்து, நாம் சுவாசிக்கும் அதனின் சத்து, நமக்குள் உணர்வின் சத்தாக அது மாறுவதும், அந்த உணர்வின் நிலைகள் இயக்கப்படவும்,  இது உதவுகின்றது. அதற்காகத் தான் நாம் செய்யும் இந்த தியானம்.

ஆகையினாலே, இதை ஒவ்வொருவரும் நாம் எண்ணத்தாலே எடுக்க வேண்டும். அந்த எண்ணத்திற்கு உதவ வேண்டுமென்றால், அந்த உணர்வின் சக்தி நம் உடலிலே வேண்டும்.

இந்த உடலில் பெறுவதற்குதான், நம் குருநாதர் காட்டிய அருள் சக்தியை,
அவர் வழியில், எமக்குள் வளர்த்துக் கொண்ட
அந்த உணர்வின் சக்தியை,
அதே உணர்வின் சக்தியை,
உங்களுக்கு பெறச் செய்வதற்கு, உபதேசத்தின் மூலமாக,
உங்கள் செவிப்புலனறிவிலே ஈர்க்கச் செய்து,
அந்த உணர்ச்சிகளை, உங்களுக்குள் உந்தச் செய்து
அந்த உணர்வின் சக்தியை, உங்கள் உடலில் சேர்க்கின்றோம்.

அதனை, நீங்கள் உங்கள் உணர்வாலே உடலுக்குள் பதியச் செய்யும் பொழுது, அந்த உணர்வின் நிலைகளை நீங்கள் காணமுடிகின்றது. சில பேர் காணமுடியவில்லை என்று ஏங்க வேண்டியதில்லை.

சிலருடைய நிலைகளிலே உடனடியாகத் தெரிந்தாலும், நாம் இப்பொழுது தியானிக்கும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி  என் இரத்த நாளங்களில் உள்ள, ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் பெறவேண்டுமென்று நீங்கள் எண்ணும்போது, அந்த உணர்வின் சத்து,
உமிழ்நீராகச் சேர்ந்து, உங்கள் உடலுக்குள் சேர்ந்து
அந்த உமிழ்நீராக சுரப்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறு, சிறுகச் சிறுக சேர்ந்து உடலிலே விளைகின்றது. அப்படி ஒவ்வொரு நாளும் இப்படி விளையச் செய்யும் போது, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலை, நாம் பெறுகின்றோம்.  

அவ்வாறு பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் அமைத்து, அந்த அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று, அந்த மகரிஷியின் அருள் சக்தியை உங்கள் உடலிலே சேர்த்து, உங்களுடைய துன்பங்களை நீக்கி, உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பப்படுவோர் செவிகளிலே கேட்டாலும், அவர்கள் துன்பங்கள் நீங்க,  இது உதவும். எமது அருளாசிகள்.
DSC_0000022.jpg