ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1992-1994


உயிரே கடவுள் மெய்ஞான மாத இதழ்  
(ஜூன் 1992)
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையில்ஒவ்வொரு உடலையும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மை நாம் எடுத்துக் கொண்டுமனிதனுக்குள் வளர்ச்சியின் தன்மை அடைந்ததை குறிப்பிடுவதற்குத்தான்,  அர்ச்சுனன் சகலகலாவல்லவன்சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன், வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.

கண்ணன், கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

கண்ணனின் நிலைகளுக்கு வரப்படும் பொழுதுதன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள்.   சகோதரப் பாசமான உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால்சகோதரர்களைப் பார்த்ததும் கொல்ல மனம் வரவில்லை.  அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள்ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள  வேண்டும்,  என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.

அதன் விளக்கம் ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அத்தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. 

வேறு ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால், அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் மாறி, நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும், அந்த இரக்க உணர்வால் நீ இதை செயலாக்கவில்லை என்றால், அது உன்னை அழித்துவிடும்.  நீ கற்று உணர்ந்த வல்லமை எங்கே செல்கின்றது? என்று கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்ததாக, "கீதையின் தத்துவத்தைச்"  சொல்கின்றனர்.
   
   கண்ணன் சொன்னதின் நிலைகள்,  தீய வினைகள் அனைத்தும், பாசத்தால் வரக்கூடியது தான். 

எதிரியுடன் இருந்து நின்று, அவர்கள் போர் செய்யும் பொழுது, தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும் என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும், கீதையிலே எழுதுகின்றனர். 

ஒருவன் செய்யும் தவறான உணர்வை, உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.  அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி,  அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

அவன் அறியாத இருள்களிலிருந்து, மீள வேண்டும். தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.

இதை உணர்த்தவே, அங்கு அம்பாக எய்யச் சொன்னது. அதாவது, இந்த எண்ணத்தைக் கொண்டு, இவ்வுணர்வுகளின் நிலைகளை (மகரிஷிகளின் அருள்உணர்வுகளை) அவர்களுக்கு பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால்,  நமது நல்ல குணங்களை, இங்கு அழித்துவிடுகின்றது.
எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளை
தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும், என்று 
உணர்வின் இயக்க நிலைகளை
அன்று ஞானியர்கள், கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

      எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு, இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றனர். வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார்  நேரிடையாகப்”  போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது,  அவர்களை நேரிடையாகப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால், அந்த உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து, வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
"பாதி நல்ல குணம்" வலு இழக்கப்படுகின்றது.
வாலி என்ற நஞ்சான செயல்களை,
நாம் பார்க்கப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும்.

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து,  நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும். பிறகு,
மகரிஷிகளின் அருள் சக்தி
வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும்,
அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும், என்று
நாம் மறைமுகமாக, 
நம் எண்ண வலுவின் தன்மை கொண்டு
அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான் சீதாராமன்,  வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி, அதைக் காட்டிலும்  சக்தி வாய்ந்த கணையை, மறைந்திருந்து ஏவினான், வாலியின் செயலைத் தடுத்தான்,  என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.

 (ஆகஸ்ட் 1992)

கார்த்திகை நட்சத்திரம், சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து, ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால், நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும். ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது.

நம் பிரபஞ்சத்தில், முன்னிலையில் இருப்பது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகளே, மனிதனின் ஆறாவது அறிவான, அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைக்கு காரணம்.

அறிந்திடும் உணர்வுகள் ஒளியின் சரீரமாக,  உணர்வின் அலைகள் மற்ற அணுக்களுடன் கலக்கப்படும் பொழுது, அணுவின் இயக்கத் தொடரை அறிந்திடும் செயல் ஒளியின் நாதங்களாக எழுப்பச் செய்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு, மற்றவர்களுக்கு, நுகர்ந்திடும் உணர்வின் ஒளி அலைகளைப் பெற்றது, கார்த்திகை நட்சத்திரம்.

அதனின் செயலாக்கத்தை, அது உமிழாது தனக்குள் அடக்கிக் கொண்டால், நம் பிரபஞ்சமான சூரியனுக்குள், உணர்வின் தன்மை ஒளியாகி, எதிர் நிலையின் தன்மை நாம் கண்டுணரும் நிலைகள் மறைக்கப்படும் நிலைகள் வருமேயானால், மனிதனின் சிந்தனைகள் குறைவுற்று, மிருக உணர்வுகளின் தன்மைகள் அதிகமாகி, பூமி சீர்கெடும் நிலை உருவாகி வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள அன்று கண்ணன் (கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும் என்று, நம் உணர்வுக்குள் அதை கூர்மையாகச் செலுத்தி, நரசிம்ம அவதாரமாக, தீய நிலைகள் நமது உடலுக்குள் வராதபடி, அதைப் பிளந்து, அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை நமக்குள் சேர்த்து, நாம் சுவாசிக்கும் நிலைகள், ஆற்றல்மிக்க நிலையாகப் பெறச் செய்வதே நமது தியானம்.
மகாபாரதக் காவியத்தில் கண்ணன் சொல்லுகின்றான், சிவனான இந்த உடலுக்கு, அந்த ரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற, தவத்தின் பலனால் தான், உனக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க முடியும்,  என்று  விண்ணை நோக்கி ஏகும் முறையை அர்ச்சுனனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தான்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல, ஞானிகளின் உணர்வின் ஆற்றல்மிக்க எண்ணத்தின் தன்மை, ஒரு வித்தாக உங்களுக்குள் வலுப் பெறும் சத்தாக, ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

இதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணும்பொழுது, நாம் எவ்வாறு ஒரு நூலால் இழுக்க முடியாத ஒரு பொருளை, பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கயிறாக்கி இழுக்கின்றோமோ, அது போன்று எல்லாருடைய  எண்ணங்களும் ஒருமித்த நிலைகள் கொண்டு,
மகரிஷிகள் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை,
நீங்கள் இட்ட முச்சலைகள் ஒரு சொல்லாக,
ஒரு உணர்வின் சத்தாக, அது ஊன்றி
மனித உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்யும் நிலையே,
கூட்டு தியானம்.
(ஜனவரி 1993)
சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போன்று, ஒரு செடி பல விதைகளை அளித்து, அது போன்று பல நூறு  செடிகள் உருவாவதற்கு காரணமாவது போன்று, மகரிஷிகள் அருள் சக்தியை உங்கள் உணர்வில் சத்தாக விளைய வைத்து, உலகம் முழுவதும் படர்ந்து வரும் நஞ்சின் தன்மையில் இருந்து, நம்மையும், மக்களையும், இந்த பூமியின் தன்மையும் வாழவைக்கச் செய்திடும் நிலையாக, மனிதனின் தன்மைகளை நிலைக்கச் செய்திடும் செயலாக, அவ்வுணர்வின் தன்மை வளரச் செய்வதற்கும், மற்றும் மகா ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சென்றபின், இந்த உடலில் ஒளிசரீரம் பெறும் தன்மைக்காக நாம் இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, எல்லோரையும் ஒருங்கிணைத்து, தீமைகள் எவ்வழியில் எவ்வுருவில் வந்தாலும் அதைத் தடை செய்யும் ஆற்றலை, நீங்கள் பெறுவதற்குத்\தான், இந்த உபதேசத்தின் வாயிலாக,  எமது செயல்கள் நடைபெறுகின்றது.

உலகத்தை அழித்துக் கொண்டிருக்கும் விஷத்தன்மை படர்ந்து, மனிதனுடைய எண்ணத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. அதை மீட்க வேண்டும் என்ற நிலையில், எமது குருநாதர் காட்டிய அருள் வழியில், நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை உலகம் முழுவதற்கும் பரவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில், அருள் ஞானிகளின் உணர்வுகள் நான்கு திசைகளிலும் பரவி, இப்பொழுது அதுவும் வளர்ச்சியாகி வருகின்றது. 

நாம் மட்டுமல்ல. அந்த மகரிஷிகள், தியானம் என்ற நிலையில், உலகில் ஒவ்வொரு பாகத்திலும் இதைச் செயல்படுத்தி வருகின்றனர்.

இன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் வன்முறைகளும் கொள்ளைகளும் மலிந்து, உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, இன்று அங்குள்ள மக்கள் உணவுக்காக மிருகங்கள் போல் அலைந்து திரிந்து, உணவு கிடைக்காமல் பட்டினியால், ஏராளமானோர் மடிகின்றனர். இன்று இவ்வுலகில் விஞ்ஞான அறிவும் பொது அறிவும் நிறைந்த காலத்தில், ஏன் அங்கு மட்டும் பஞ்சம்?

காரணம் அமெரிக்கா, தான்  கண்டுபிடித்த கருவிகளை பரீட்சாத்திரமான ரீதியில் சோதிக்க, இது போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுத்து,  தாவர இனங்கள் வளர இயலாத நிலையையும், மனித சிந்தனைகளைச் சீர்கெடச் செய்தும், தங்களுடைய வக்கிரமான ஆதிக்க எண்ணங்களாகச் செயல் படுத்துகின்றனர்.

சோமாலியா நாட்டில் படர்ந்தது போன்று, விஷத்தன்மைகள், அதனின் காற்று மண்டலங்களாக சில புயல்கள் அங்கே திசை மாறி, அதனின் ரூபமாக அது கவர்ந்து, சுழன்று மழை நீருடன், இன்று உலகம் முழுவதற்கும் படரும் நிலை வந்துவிட்டது.

ஆக தீமையின் நிலையில் புயலின் நிலைகள் வரப்படும் பொழுது, எந்த நாட்டில் இந்த விஷத்தின் தன்மைகள் அவர்கள் செய்தனரோ, இவை அனைத்தும் மேகங்களில் கலந்து, இம்மேகங்கள் கலைந்து சென்று, எங்கெல்லாம் மழை நீராக வடிகின்றதோ, அந்த நாட்டில் இத்தகைய விஷத் தன்மைகள் வளர்ந்துவிடுகின்றது.

இந்த விஷத்தின் தன்மைகள் மனித உடலுக்குள், உணர்வின் தன்மைகள் ஊடுருவி, இம்மனிதன் இறந்தாலும் அம்மனிதருக்குள் சேர்ந்த உணர்வுகள், உடலிலே விளைந்த நிலைகள், ஆகியவை இன்னொரு மனித சரீரத்துக்குள் புகுந்து, உணர்வின் சக்தியாக, அந்த விஷத் தன்மைகளைக் கவரும் நிலையாக அணுக்களாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று, மனிதனின் உணர்வின் தன்மைகள் அனைத்தும் நஞ்சாக மாறும் நிலையில், மனிதன் சிந்திக்கும் நிலையே அற்றுப் போய்விடுகின்றது.  இந்நிலை இருப்பதினால், இந்த நிலையில் இருந்து  நம்மைக் காப்பாற்ற,  மகாஞானிகளின் அருள் சக்திகளை, நம்மிடம் பெருக்குவதுதான் ஒரே வழி.

 (ஜூலை 1993)
எமன் என்பது என்ன? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை, நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால், அது நமக்குள் பாசக் கயிறாக மாறுகின்றது. 

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ, அதனின் அறிவில்லாத செயலைப் போன்று, நாம் எடுக்கும் வேதனையான உணர்வால், நமது எண்ணங்கள் சிந்தித்து செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.

நாம் சிந்திக்கும் திறனை இழந்து, அறியாமையால் உழலப்படும் பொழுது, நமது எண்ணங்கள் வலுவிழந்து, நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது, எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு, எமன் எனும் எண்ணம், நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே, அன்று மகரிஷிகள் எமனுக்கு, எருமையை வாகனமாக வைத்து, எமன், சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான், என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திர புத்திரனாக இயக்கம் பெறுகின்றது. 

இந்தச் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம், நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று, தீமையை அகற்றிடும் செயலாக, அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது.

நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது, அவைகள் நமக்குள் சித்திர புத்திரனாகின்றன.
கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ,
அவை நமக்குள் புகுந்து, புத்திரனாக விளைகின்றன.

நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன. தீமையை அகற்றுகின்றன. 

தீமையில்லாத உலகத்திற்கு,  உயிர் நம்மை அழைத்துச் சென்று,  என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது. ஆக நாம் அங்கே பிறவா நிலை என்பதை அடைகின்றோம்.

மார்க்கண்டேயனை நோக்கி எமன் பாசக் கயிறை வீசுகின்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை அணைத்துக் கொள்கின்றான். இதில் லிங்கம் என்பது உயிர், ஆவுடை என்பது உடல்.

அங்கே,  மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது,  லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.  அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.

ஆகவே, நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும், ஆகவே நாம் எண்ண வேண்டியது எது? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று, நாம் எண்ணியது அனைத்தையும், அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும், இயக்குவதும், அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி,  நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து, அதை ஏங்கி எடுத்தோமென்றால், அது சித்திர புத்திரனாக செயல் படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய, அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது, என்றும் பதினாறு என்ற நிலைத்த ஒளி சரீரத்தை நீங்கள் அடைய முடியும். 

வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது, உங்கள் உயிரை எண்ணி, ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது, உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை, லிங்கத்தை அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான். அது போன்றே, நீங்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை, நீங்கள் எடுக்கும் பொழுது, உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக, ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக, எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம். 

நீங்கள் எந்த அளவிற்கு, இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ,  அந்த அளவுக்கு ஆழமாக, யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள், உங்களிடத்தில் பதிவாகின்றன. 

யாம் கொடுக்கும் உபதேசங்களை, அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று  உயிரை எண்ணி ஏங்கும்போது, அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து, உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

ஆகவே, இந்த உபதேசத்தைப் படித்து, தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும், இருள் சூழ்ந்த இவ்வுலகில், நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும்விதமாக, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும், மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து, 
மார்க்கண்டேயனைப் போன்று, என்றும் பதினாறு என்ற
நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று
நெஞ்சில் அவா கொண்டு, 
ம் குருநாதர் காட்டிய,  மெய்வழியைக் கடைப்பிடித்து வரும்  அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாற்றலை பூரணமாக வழங்குகின்றோம்.  

(ஜனவரி 1994)

நன்மை எது, தீமை எது என்பதை அறிந்துணர்ந்து, அதில்  நன்மைகளை நாடுவதே, மெய்ப்பொருள் காணும் திறன்  ஆகும்.  இதில் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளி நிலை பெறச் செய்வதே மெய்ப்பொருள் ஆகும்.

ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் தன்மையைப்987 பெற்றது. ஒவ்வொரு உயிரும், தனது துடிப்பின் இயக்கத்திற்குள் வந்து மோதும் உணர்வினை, ஜீவ அணுக்களாக மாற்றும் தன்மை பெற்றது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், சில எதிர்நிலை உணர்வுகள் இருக்கும்.

வைரக்கற்களில், விதவிதமான கலர்கள் உண்டு. ஒவ்வொரு இன வைரக்கல்லிலும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை அதிகமாக இருக்கும். இவ்விதமாக இருபத்தியேழு விதமான வைரக்கற்கள் உண்டு. இது போன்றே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மைக்கேற்ப, இங்கே உணர்வின் இயக்கங்கள் இருக்கின்றன.

விண்ணிலே இருக்கக்கூடிய நட்சத்திரங்களின் உணர்வலைகள், ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது, அவைகளின் மாறுபட்ட நிலைகளினால்,  ஒன்றோடு ஒன்று எதிர் நிலையாகும் பொழுதுதான், விண்ணுலக ஆற்றலே, இயக்கச் சக்தியாக மாறுகின்றது. 

அதைப் போன்று, ஒரு உணர்வின் சக்தி நம் உடலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையாக இருந்தாலும், அதற்கு
எதிர்மறையான நிலைகள் வரும் பொழுதுதான்,  
உந்தி இயங்கும் நிலை வருகின்றது.

இன்று மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும், அதனுள் நெகடிவ், பாசிடிவ் என்று, ஒன்றுக்கொன்று எதிர்மறையான நிலைகளில் இருக்கும் காரணத்தினால்தான்,  பிற பொருள்களை இயக்க முடிகின்றது.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும், நவக் கோள்களின் சக்தியையும் உள்ளடக்கி,  உயிருடன் ஒன்றிய உணர்வினை, ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள், சப்தரிஷி மண்டலங்கள்  என்பதை நாம் அறிய வேண்டும். 

இந்த சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளை, நம் தியானத்தின் பொழுது, எண்ணத்தில் வலுக்கொண்டு, ஏங்கி எடுத்து, நம் உயிருடன் இணைக்கப்படும் பொழுது, அம்மகரிஷிகளின் அருள் சக்தியினால், நட்சத்திர வலுவின் தன்மைகளை நமக்குள் சமப்படுத்தி, நமக்குள் வரும் நஞ்சான நிலைகளை நீக்கி, மெய்ப்பொருளை கண்டுணரும் தன்மையாக, விண்ணின் ஆற்றலை நமக்குள் எடுத்து, நம்மை வளர்க்க முடியும்.
     
வசிஷ்டாத்வைதம் என்று  
எதனையும் தனக்குள் கவர்ந்து, அருந்ததியாக
இணைந்தே வாழும் நிலைகளும்,
இணைந்தே அறிந்திடும் நிலைகளும்,
இணைந்தே இயங்கிடும் நிலைகளும், இந்த உடலிலே
இணைத்திடும் நிலைகள் கொண்டு, 
நாம் என்றைக்கு நமக்குள் இயக்கிடும் நிலைகளைப் பெறுகின்றோமோ அன்று இதனை,
இணைத்திடும் நிலைகள் ஆகி,
மகரிஷிகளின் அருள் உணர்வு அதைப் பருக வேண்டும். அவ்வாறு பருகும் நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்,  கூட்டு தியானம். 

ஆகவே, நமது குருநாதர் விண்ணுலக ஆற்றலின் தன்மையை, அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை, அவருக்குள்ளேயே விளைய வைத்தார். அவ்வாறு அவருக்குள் விளைய வைத்த நிலைகளை, அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள், எமக்கு உபதேசித்தார்.

அவ்வாறு உபதேசித்து அருளி, விண்ணுலக ஆற்றலை, எவ்வாறு பருக வேண்டும்,  மற்ற எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும் என்று உணர்த்திய அவரின் அருள்வழி நெறிகளை,  உங்களுக்குள் நீங்களும் பெறவேண்டும்.

அதனை நீங்கள் பெறவேண்டும், என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது, மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து, இந்த உணர்வை வலுக்கொண்டதாக மாற்றி, இம்மனித வாழ்க்கையைக் கடந்து செல்வோம் என்றால், நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக இருந்திட முடியும். நாம் அனைவரும் அத்தகைய நிலைகளை, நிச்சயம் பெறுவோம்.
         
தாய், தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு, தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும், உலகில் மிக மிக உயர்வானது. இதில்,  குருவானவர் தன்  சிஷ்யனுக்கு எதை, எப்பொழுது, எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்திருக்கிறார். 

ஆக ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெற வேண்டும் என்று உயர்ந்த, நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும் பொழுது, குரு அருளைப் பெற முடிகின்றது.

(பிப்ரவரி 1994)
எமது குருநாதர், மாமகரிஷி   ஈஸ்வராய குருதேவர் அவர்கள், அருள்ஞான வித்தை எமக்குள் பதித்துபதித்த வித்தை எமக்குள் வளர்ப்பதற்குஎங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ. அங்கெல்லாம் எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டுஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞானசக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை, படர்ந்திருப்பதை நுகர்ந்தறியச் செய்தார். மேலும்  அதனின் ஆனந்த நிலையினை, எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.

பூமியில்  மனிதராக பிறந்த நாம்
எவ்வாறு இந்த உடலை விட்டு,
வெளியே செல்ல வேண்டும்? 
சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று
அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார். 
உயிரான்மாவைஉடலை விட்டுபிரியச்  செய்கின்றார்.
ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்.

ஒளியின் சுடராக ஆனபின்,  இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும்? என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலைமகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு, வளர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், விண்ணும் மண்ணும் போற்றும், மகாஞானிகளில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

(ஏப்ரல் 1994)
ஆதிமூலமாகிய உயிரையும், அதற்கு ஆதாரமாக இருக்கும் உணர்வையும் அறிந்து, அதனின் உயர்வுக்காக நாம் செய்யும் சேவையானதுநம் மூலாதாரத்தைப் புனிதப்படுத்தி, "பெருவீடு பெருநிலை" எனும் நிலைக்கு அழைத்துச் செல்லும். 

 (மே 1994)
கடல் அலைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட சிறு துரும்புஅலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிவது போலநாமும் மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம். 

துயர்மிகு இவ்வாழ்க்கையிலிருந்து காத்துக் கொள்வதற்காக, மேலான மெய்ஞானத்தைப் பெறவேண்டும் என்று பாடுபடும் பொழுது, மெய்ஞானிகளின் அருளை நாம் பெறமுடியும்.

தெய்வச் செயல் என்பதுதீமையானவற்றை நாம் காணும்பட்சத்தில், "மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்" என்று எண்ணி ஏங்கும்போழுதுநம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

மேலும்யார் நமக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ , அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர வேண்டும்" என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுதுஅங்கே கடும் சொல் வராது,   அது கனிந்திடும் நிலையாகக்  கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்துஅவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி,  அவர் நம்மீது கொண்ட பகைமையை நீக்கி,  நட்பினை வளர்க்கும்.  

     பிறவிப் பெருங்கடல் நீந்தி,   தன் ஞானத்தால் பிறவி இல்லா பெரு நிலையை அடைந்து,   உயிருடன்   ஒன்றி ஒளிச் சரீரமாகஇன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறும் ஏக்கத்துடன்நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும்பொழுதுஅவர்களிடம் நமது  உயிரான்மா இணைந்து, அங்கே சுழலும்  சக்தியாகப் "பிறவா நிலை" என்னும் நிலையை, அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல்நமக்கு தீங்கு செய்பவரைப்  பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால்இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாஇந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி என்ணிக்கொண்டிருந்தோமோ,  அவரின் உடலுக்கு இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்

பின், அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்துஅதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை, இந்த உயிரான்மா கவர்ந்து, அவரின்  உயிரான்மாவையும் வீழ்த்திஇதுவும் வீழ்ந்து, பிறிதொன்றைக் கொன்று புசிக்கும், உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கிஅதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது. 

ஆகவேநாம் தேய்பிறை போன்று இல்லாதுவளர்பிறையாக, நமது மெய்ஞானத்தை வளர்க்கும் விதமாகமெய்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துவாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கிவிண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகாஞானிகளின் ஈர்ப்பில் கலந்துநாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம் என்ற பேரவாவுடன் கூட்டுத்  தியானங்களில் ஏங்கி தியானிக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும்எமது ஆசீர்வாதங்கள்.

கல்வி,  விஞ்ஞானம் போன்றவைகள்நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும்.  மெய்ஞானம் ஒன்று மட்டுமே,  நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும்.  அந்த மெய்ஞானத்தை, குருவின் அருளால்தான் பெறமுடியும்.

(அக்டோபர் 1994)
          இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து தன்னையும், உலகையும், உணர்வையும் அறிந்துர்ந்த ஞானிகள், இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற நோக்குடன் பெற்ற, அந்த உணர்வின் துணையால், உண்மையின் உணர்வை அறிந்து, தன் நிலைகளில் உணர்வை ஒளியாக மாற்றி, விண் சென்ற ரிஷிகள் பலர். 
இந்த உடலான சிறையில் இருந்து விடுபட்டு,
இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து,
என்றும் சுதந்திரமாக,
தம்மை எந்த உணர்வும் அழித்திடாது இன்றும் விண்ணில் மின்னிக் கொண்டிருக்கின்றனர், சப்தரிஷிகள்.

ஒருவன் குற்றம் செய்தால், அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால், அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ, ஒருவர் உடலில் அறியாது புகுந்த,
தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி, உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி, 
அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி,
அதற்கு தண்டனை அளித்து,
இணைந்து செயல்படும் உணர்வினை, வளர்த்துக் கொண்டார்கள். அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி, நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபடவேண்டும் என்றும், அதே சமயம், ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும்,
மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான்
விலக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி பாடுபட்டார்.

உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர், ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து, அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையைச் சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் ராம ராஜ்யம் என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ, அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுதும், நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அது ஒருக்கிணைந்து, நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதுதான் ராம ராஜ்யம்.

நமது பூமியே, நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது, அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி டைகின்றது. அது போன்று,  நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள்,  நமது தாய்பூமியில் படர்கின்றது. 

இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது,
நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும்.
இதில் வாழும் கோடிக்கணக்கான
மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.

பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால், அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி, அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர். 

ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது, அதனை நுகர்பவர்கள், மகிழும் நிலை வருகின்றது.

நமது பூமியே, நமக்குத் தாய் என்கின்ற பொழுது, அந்த தாய்க்கு, நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்?, என்ற நிலையில் சிந்தித்து,
இந்தப் பூமியில் பிறந்த நாம்,
இந்தத் தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து,
தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கின்றோமோ, 
தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ,
இது போன்று, நாம் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு,
நாம் அனைவரும் சகோதரர் என்றும்,
இன பேதமின்றி, மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி,
நாம் வாழ்நிடுவதே நலம். 

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், என்று எண்ண வேண்டும்.  இந்த எண்ணமானது நம் பூமியைக் காக்கும்.

இந்த பூமித்தாயைக் காப்பது போன்று, நம்மை ஈன்ற தாயும், மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும். நமது தாய் தந்தையர், எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில், நம்மிடத்தில் அன்பைக் காட்டி, நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்தனர்.

ஆகவே  நாம், நம் தாய், தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெறவேண்டும். தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால், தாயின் பேரன்பைப் பெறவேண்டும். 

தாயின் பேரன்பைப்  பெற்றால், மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி, மெய்ஞானிகளின் உணர்வை உங்களில் வளர்த்து, அன்னை தந்தையை, பேரின்பப் பெருநிலை பெறச் செய்ய வேண்டும்.

அன்னை, தந்தை, அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால்
வெளிப்படும் மூச்சலைகள், இந்த பூமியில் படர்கின்றன.
நம் தாய் பூமியான இந்த பூமியில்,
நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால்
தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.

 (நவம்பர் 1994)
உண்டு என்பவருக்கு உள்ளதாகவும்,
இல்லை என்பவருக்கு இல்லாததாகவும்
செய்விக்கின்ற உணர்வின் தன்மையை அறிந்து,
தன் ஆன்ம ஞானத்தை வளர்ப்பவருக்கு
அனைத்தும் கைகூடும். 

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்,  விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து, பூஜித்துப்  பின் கடலில் கரைக்கின்றோம். 

இதைப் போன்றுதான், சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து, அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எல்லா குடும்பங்களும் நலம் பெறவேண்டும், எங்கள் பகைமைகள் அழிய வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது, 
நம் உடலிலும்,
நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த,
தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஒரு மரம், எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ, அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.

ஆனால், அதனுடைய வேரை அறுத்துவிட்டால், அது நீரைக் கவரும் திறனை இழந்து, தன் ஜீவ சக்தியை இழந்து, தன் இனத்தைக் கவரும் தன்மையையும், இழந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான், நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து, 
அதனின் நினைவாற்றல் வராதபடி,
தடுத்து நிறுத்தும் நிலையாக, 
மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.

இவ்வாறு தடைப்பட்டபின்,
நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில்,
எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது,
நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த,
காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள், நகர்ந்து,
கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.
அப்பொழுதுதான், இந்த பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி, அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.

ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,  நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, வெறுப்பையோ, குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆகவேதான், நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து, நமது வாழ்க்கையில் நல்ல குணங்களை சுதந்திரமாக்க,  அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிடவேண்டும்.

அரசியல், மத, இன, மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்த பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு, நமது நல்ல உணர்வுகளை சுதந்திரமாக செயல்படச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டு, தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில், நம்மிடத்தில் உருவாக்க வேண்டும்.  இதைச் செய்தோமானால், பேருலகத்தையும் படைக்க முடியும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை படைக்கும் திறன் பெற்றது நமது உயிர். ஆகவே உயிரை ஈசனாக மதித்து, உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.

நம் முன் படர்ந்து கொண்டிருக்கும்  தீய உணர்வுகள், நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது, துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு, அதனைக் கடலுக்கு துரத்தியடிக்க வேண்டும். 

ஏனென்றால், தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால். அது, வேறு வழி இல்லாது, இறுதியில்,  கடலின் ஈர்ப்பிற்கு சென்று மறைந்துவிடும்.

இவ்வாறு, இனி தீய உணர்வுகளுக்கு, இங்கு இடமில்லை என்று செய்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம். அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம். மத, இன, மொழி, அரசியல் பேதங்களை அகற்றுவோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ, எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டி, பிரார்த்திப்போம். இவ்வுலகில் அமைதி படர்ந்து, அனைவரும் பிறவா நிலை எனும் நிலை எய்த வேண்டும், என்று எண்ணி நாம் தவமிருப்போம்.

இதன் வழியில், மகரிஷிகளின் அருள் வழியைப்  பின்பற்றி, செயலாக்கி வரும், அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

 (டிசம்பர் 1994)
இன்று விஞ்ஞானிகள், ஒலி அலைகளை காந்த அலைகளாக மாற்றி, அதனை ஒலி நாடாவில், காந்த வடிவில் பதிவு செய்கின்றனர். மின் காந்த அலைகளை விரிவு படுத்தி, ஒலி அலைகளாக வெளிப்படுத்துகின்றான்.
அதே போன்றுதான்  நமது உயிர்,
காந்தப் புலனை ஈர்க்கக் கூடிய நிலையும்,
காந்தப் புலனை உருவாக்கக் கூடிய நிலையும்,
காந்தப் புலனை தனக்குள் பெருக்கும் நிலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆகவே, அதற்கு ஈசன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.

காருக்குள் இஞ்சின் இயக்கம் எப்படி முக்கியமோ, அவ்வளவு  முக்கியம் நம் உடலுக்குள் உயிரின் இயக்கம். 

பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும், நமக்குள் வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காக, மெய்ஞானிகள் உயிருக்கு ஈசன் என்று பெயரிடுகின்றார்கள். உருவாக்கும் திறன் நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது.

ஒரு மோட்டாருடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள், எதன் பணிக்காக அமைக்கப்பட்டு உள்ளதோ, அதனதன் பணிகளை அது அது செய்கின்றன. அது போன்றுதான், உலகின் இயற்கையின் தன்மைகள், எது எது அதனுடன் இணைகின்றதோ, அந்த உணர்வின் செயலாக அது அது இயங்குகின்றது என்பதை மெய்ஞானிகள் அறிந்திருந்தனர்.

உயிரான ஈசனின் துடிப்பால், வெப்பம் ஏற்படுகின்றது. நெருப்பின் மீது பாத்திரத்தை வைத்து, அதனுள் நீரை ஊற்றி, மேலும் அதனுள் எப்பொருள்களை போடுகின்றோமோ, அப்பொருள்கள் அனைத்தும் நெருப்பின் வெப்பத்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து, புதுப் பொருளாக, குழம்பாக மாறுகின்றது.

அது போன்று, உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக, ஈர்க்கும் சக்தி அங்கே உருவாகின்றது.

நமது எலும்புகள் அனைத்தும் மேக்னட் (காந்தம்) தன்மை கொண்டது,  அதாவது, ஒலி அலைகளை காந்தப் புலன்களாக மாற்றி, ஒலி நாடாவில் பதிவு செய்வதைப் போன்றது. உயிரின் துடிப்பால் இயக்கப்படும் பொழுது, அது காந்தப் புலனை இயக்க, அதனின் தொடர் வரிசையில் அது இயக்குகின்றது. 

இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படும் பொழுது, உயிரின் இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ, கண்களில் உள்ள காந்தப் புலன் அதைக் கவர்கின்றது. ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குள் இருக்கக் கூடிய கருவிழி மற்றொன்றை படமெடுக்கின்றது.

அது நமது எலும்புக்குள், ஊனாக உருவாகின்றது. ஆக அதைப் பதிவு செய்து கொள்கின்றது. அந்த உணர்வின் தன்மையை, தனது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

இவ்வாறு ஆன்மாவாக மாறியது, எப்படி ஒலி நாடாவில், நாம் பதிவு செய்து கொள்கின்றோமோ, அந்தப்  பதிவின் அலைகள் வரிசையில் வரும். 

பின் நம் உயிரின் காந்தப் புலன், சுவாசத்தால் அதைக் கவர்கின்றது. இந்த உணர்வின் அலைகளை இயக்குகின்றது. உடல் முழுவதும் இந்த அலைகளைப் பரப்புகின்றது. அதில் ஏற்படும் காந்தத்தை, உணர்வின் சத்தை உடலாக்குகின்றது. மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.

ஒரு மின் விசிறி சுழல்கிறதென்றால், அது தன் சுழற்சியின் போது, பின்புறத்தில் இருந்து காற்றை இழுத்து, முன்புறமாக தள்ளுகின்றது. அது போன்றுதான்,  இந்த உணர்வின் தன்மையை வடிகட்டி, உணர்வின் ஆத்மாவாக மாற்றுகின்றது.

அதனுடைய நிலைகளை, காற்றலைகளைத் தான், நாம்
மூச்சலைகள் (ஆன்மா) என்று சொல்கின்றோம்.
இவைகளெல்லாம், அன்று மெய்ஞானிகளால் கண்டுணரப்பட்ட பேருண்மைகள்.