ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1995-1997


 (பிப்ரவரி 1995)
ஞானிகளின் செப்பு மொழிகள், காலத்தால் அழியாப் பொக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்பொழுது, உங்கள் ஞானக் கதவை திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

நாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர்கள், தன்னை அறியாதவரே. எதனையும் மாற்றி அமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு  என்று அறிந்து, தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை,  நாளும், கோளும் என்ன செய்துவிடும்.

மெய்ஞானிகள், தமது மனித வாழ்க்கைக் காலத்தில், பேரண்டத்தினுடைய,  சூட்சம இயக்கங்களை அறிந்துணரும் நிலைகளையும், மனித வாழ்க்கையில் வரும் தீமையான நிலைகளிலிருந்து, தம்மைக் காத்து, உயிருடன் ஒன்றிய உணர்வினை, ஒளி பெறச் செய்யும் நிலையினையும் பெற்றனர்.

அந்த மெய்ஞானிகள், பேரண்டத்தின் பெரும் உண்மையினைக் கண்டுணர்ந்து, உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியதின் தன்மைகள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இந்த பூமியெங்கும் படர்ந்து பரவியிருக்கின்றன.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள், நமக்குக் காண்பித்த அருள் வழிகளை, நாம் பின்பற்றுவதன் மூலம் இந்த பூமியில் படர்ந்துள்ள மெய்ஞானிகளின் உணர்வலைகளை நாம் பெறமுடியும்.

நீங்கள் மெய்ஞானிகளின் அருள் ஆற்றலை பெறவேண்டும் என்பதற்காக, யாம் உயர்ந்த தன்மைகளை உங்களுக்கு உபதேசித்தோம் என்றால், அதனைக் கேட்கும் நீங்கள்,  அந்தத் தத்துவங்களை, உங்களுடைய அகத்தில் இருத்தி,  அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால்,  உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை பெருகுகின்றது. 

அதுபோன்றே, நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது, அதனின் உணர்வுகள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.

நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும், தரம் பார்த்து வாங்குகின்றோம். இருந்தாலும், வீடு வந்து சேர்ந்த பின், அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது, அவைகளில் ஒன்றிரண்டு உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து, வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா? 

கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு,  இனி, அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு,  இனி, அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.  

இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால், இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும்,  வேதனை என்ற நஞ்சான உணர்வானால்,  குணச் செல்வம் அழிந்துவிடுகின்றது. வேதனையைக் கேட்டறியும் நிலையில், அது நம்முள் வளர்ந்து, அது நமது பொருள் செல்வத்தையும் இழக்கச் செய்யும்  என்பதை நாம் அறிய வேண்டும்.

அழியாப் பேரின்பப் பெருவாழ்வு, என்ற அருள்ஞானியின் உணர்வை, நாம் கவர்ந்து கொண்டால், இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும், மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று, அனைத்தும் அறியும் ஞானம் உருவாகும்.

சொல்லில் பொருள் இருப்பது போன்று, நமது செயலில் நன்மைகள் இருக்க வேண்டும், நாமும், நமது சமுதாயமும் ஒரே இனம் என்ற நிலையில்,  நமது நலத்தையும், பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக, நமது செயல்கள் இருக்க வேண்டும். 

ஏனெனில், பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது, அதனின் உணர்வின் சத்து உங்களிடத்தில் விளைந்து, நன்மையை உங்களிடத்தில் விளையச் செய்யும்.

இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து, அருள் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப் பிடித்து, அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அனைவருக்கும் எமது ஆசிகள்.


(பிப்ரவரி 1995)
பூமியில் உள்ள காற்றுக்குள் பலவித செடிகள், மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன. அவ்வாறு பலவிதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும், ஒரு வித்து தன் இனத்தின் சத்தை, அதிலிருந்து பிரித்து எடுத்து செடியாக, மரமாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்றுதான், நமது உடல் பூமிக்குச் சமமானது. உயிரின் இயக்கத்தால், நாம் கவரும் நிலைகள், மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளைப் பதிவு செய்து கொண்டபின், பதிந்த நிலைகளை, தன் இனமான உணர்வின் அலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து, தன் ஆன்மாவாக மாற்றுகின்றது. 

பூமியில் ஒரு விதையினை ஊன்றினால், அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரும். அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால், அதன் வாசனையை நாம் அறியமுடியும். இதைப் போன்றுதான்
நம் உடலான நிலத்திற்குள்,
நாம் எண்ணிய உணர்வின் சத்தைப்
நாம் பதிவு செய்துகொண்டால்,
உணர்வு, அதிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்பொழுது, அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து, ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள், நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.

அவர்களுக்குள், எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ, அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகளை, நமக்குள் நுகர்ந்து, நுகர்ந்து, அதையே பதிவாக்குகின்றோம்.

ஆக, பிறருடைய நிலைகளை எண்ணி இப்படி ஆகிவிட்டதே என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்துவிட்டால், அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி, சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.

பின், அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது, நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து,  நாம் சிந்தித்தாலும், சிந்திக்க இயலாத நிலையை, நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.

இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ, அதனின் உணர்வுகள், 
நாம், ஒரு சொல் சொல்வதற்குமுன் வெளிப்பட்டு,
யானை வரும் பின்னே,
மணியோசை வரும் முன்னே
என்பதைப் போன்று, நாம் பேச இருப்பவரின் உணர்வில் மோதுகின்றது. 

நாம் அவரிடம் உதவி கேட்டு சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி, நாம் பேசும் பொழுது,
நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள்,
நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி,
நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்,
உதவி செய்ய விரும்பும் அவரின் எண்ணத்தை,
இது தடுக்கும்.  ஆகவே, அவர்கள் தவறு செய்யவில்லை.

ஆனால், உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது, இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது. நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ, அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார்.

பின்,அவர் தலையை ஆட்டிவிட்டு, அப்புறம் பார்ப்போம் என்பார். இங்கே நம்முடைய சொல்லே, நமக்கு எதிரியாகின்றது.அவர்களல்ல, அவர் உதவி செய்ய விரும்பினாலும், அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.

அதே சமயம், நமது தொழில்கள் தடைப்படும்பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு.  இந்த நஞ்சின் தன்மை வந்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து, கை கால் குடைச்சல், சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.

பின், நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும், நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும், அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்து, அவர் நம்மைப் பார்க்கும் பொழுது,  இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் என்று நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.

இவர் எதையும் செய்ய மாட்டார் என்ற, உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும். இந்த இடத்தில், நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.

ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத் தான், ஒவ்வொரு நொடியும், நாம் ஆத்ம சுத்தி செய்து, விண்ணில் இருந்து வந்து கொண்டிருக்கும், அந்தத்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை,  நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும்,  உயிர் வழி நுகர்ந்து,  நம் உடலில் உள்ள  அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து,  உள் முகமாக  இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 

இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாக, பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது. அது நம்முள் எத்தகைய தீமைகளையும், நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது. 

நம் ஆன்மா பரிசுத்தமாகி, நாம் மகிழ்ந்து வாழ முடியும். இந்தப் பிறவிக்குப் பின் நம் உயிராத்மா, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.


(எப்ரல் 1995)
உதாரணமாக, பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால், கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால், விபத்தைக் கண்கூடாக பார்த்ததின் உணர்வு, அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது.

அடுத்த முறை, அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றி கேள்விப்பட்டால், அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே என்று, தேடிப் பிடித்து போய்ப் பார்ப்பார்.  ஆக, பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும், அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால், இல்லை.

ஏனெனில்,  ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு, உணவு தேவை. நாம் சும்மா இருந்தாலும், அது நம்மை அழைத்துச் சென்றுவிடும். 

நாம் எத்தகைய நிலைகளையும், வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி, பரிவுடன் பார்த்தாலும் சரி, அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக, குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவதொன்றைக் கண்டால், அடுத்த சில மணி நேரத்திற்குள், அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. ஏதாவதொன்றைக் கண்டு பயந்துவிட்டால், பின் அதனின் நினைவு வரும் பொழுது, அந்த குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும். திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது. ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும், மன வலிமை கொண்டு என்ன, ஏது என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில், அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால், அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை, மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதே சமயத்தில், குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால், அது அதனிடத்தில் ஆழப் பதிந்துவிடுகின்றது. மீண்டும், அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளை, பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது, பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள், நம்மிடத்தில் பதிவதில்லை,  தீய வேதனையான குணத்தின் உணர்வே, நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில், தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால், தீமையின் உணர்வே அதிகமாக வரும். அதுவே முன்னனியில் நிற்கும். குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும். தீயதையும் பதிவு செய்து கொள்ளும். வளரும் பருவம் கொண்ட சரீரங்களில்,  இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து, மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் ஒரு முறை பதிவு செய்து கொண்டு, அடுத்தடுத்து,  அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால், அந்தச் சக்தி நமக்குள் வரும். 

நமக்கு நோய் என்று ஒன்று வந்துவிட்டால், அதற்கு, மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான், அந்த நோயே, நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களை கேட்க நேரும் பொழுது, நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும். 

வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர் இடத்தில்,  நல் உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல், என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலில் இருந்து, விளைய வைத்த உணர்வின் சத்துதான், நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே, நமது வாழ்க்கையில், நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டு தியானங்களை வலுப்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு நிமிடமும், ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி, அந்த துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியான சக்திகளை, நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும்,  சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெற்று, உடல் நலம் பெற்று, மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து,  மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.


(ஜூன் 1995)
பொதுவாகவே, ஒருவர் நம்மை ஏமாற்ற வேண்டுமானால், ஒரு பொருள் இந்த இடத்தில் மலிவாக கிடைக்கின்றது, அங்கிருந்து பொருளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்தோம் என்றால், நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும்,  அவருக்கு  நாம் அடிபணிந்து விடுவோம். லாபம் கிடைக்கும் என்ற நிலைகளில், அவர் பின்னால் நாம் அலைந்து கொண்டிருப்போம்.

இதைப் போன்றுதான், கோவில்களில் அர்ச்சனை, அபிஷேகம் செய்தால், நமக்கு இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று சொன்னால், அடுத்த கணமே நாம் அர்ச்சனை, அபிஷேகம் என்று செய்ய ஆரம்பித்து விடுவோம்.
ஆனால் ஞானியர்கள் கூறியது என்ன? எண்ணியது எதுவோ, அது நமக்குள் தெய்வமாகின்றது என்று சொல்லி வைத்தனர். அதுதான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பது.
நாம் எந்த குணத்தை, இச்சை கொள்கின்றோமோ,
அது நமக்குள் சென்று, கிரியை ஆகி,
நாம் எண்ணிய குணத்தின் ஞானமாக, இந்த உடலை இயக்குவதும்,
இதன் மூலம் நமது வாழ்க்கையின் செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன? என்பதின் நிலையை உணர்த்துவதற்காக, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சொல்லி வைத்தனர்.

நமக்குத் தெய்வம் நல்லது செய்யும் என்று நம்பி, யாக வேள்விகளைச் செய்து, பல மந்திரங்களை உச்சரித்துச் செயல்படும் பொழுது, இதே போன்று, பல வேள்விகளைச் செய்து இறந்த மனிதனின் உயிரான்மா, நம் உணர்வில் சிக்குகின்றது.

மேலும் தெய்வ பக்தியை அதிகமாக வளர்த்து, இந்தத் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் உணர்வை வளர்த்து, நாம் இந்த  உடலை விட்டுப் பிரிந்தபின், நமது உயிரான்மா, அதே மந்திரத்தை ஜெபிக்கும், இன்னொருவர் கையில் சிக்கி விடுகின்றது.  இதைத் தான் கைவல்யம் என்பது. இதன் வழி, கடைசியில் நாம் கீழான பிறவிகளுக்கே, (பாம்பு போன்ற) செல்ல நேரிடும்.

இன்று சாதுக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், நம்மை (மக்களை) தீமைகளில் இருந்து விடுபடச் செய்வதற்கு பதிலாக, மீன்களுக்குத் தூண்டிலில் இரையை வைத்துக் காட்டி, மீனைப் பிடித்து சமைத்துச் சாப்பிடுவது போன்று, இந்தத் தெய்வத்தை நான் கைவல்யப்படுத்தியுள்ளேன், நான் ஆணையிட்டால் இவையெல்லாம் நடைபெறும் என்று சொல்லி, நம்மை மெய்யுணர்வு பெறும் நிலைகளில் இருந்து தடுத்து, சாங்கிய சாஸ்திரத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர், இந்த நிலை நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ளது.

இதனின் நிலைகளை, எமது குருநாதர் எமக்கு சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஆண்டவன் சக்தியை நான் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்பவர்கள், தம்மை விட நீ கெட்டிக்காரனா? என்ற மனப்பான்மையில் உன்னைப் பார்ப்பார்கள்.

நீ எவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாலும், இதிலிருந்து உன்னைக் காக்கும் சக்தி வரவேண்டும். தர்மத்தின் மேல் உன்னுடைய சிந்தனைகள் இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய சக்தி உன்னிடம் இருக்க வேண்டும்.

தர்மத்தை காத்திடும் உணர்வின் சக்தியை வளர்த்துக் கொண்ட, மகரிஷிகளின் அருள் சக்தியைத் தெளிவாக தெரிந்து,  அதனின் இச்சையை உனக்குள் கூட்டி, அதை உனக்குள் கிரியை ஆக்கி, அதனின் ஞானத்தின் நிலைகள் கொண்டு, வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று, எமது குருநாதர் உபதேசித்தார்.

நீ நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, மற்றவர்களுக்கு நல்லது செய்கின்றாய். ஆனால், உன்னால் நன்மை பெற்றவர், உன் மீது பற்று கொள்கின்றார். நீ நன்மைகள் செய்வது, அவர் மனதில் ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

அந்த நிலையில், நோயின் நிமித்தம்  அவருடைய உடலை விட்டுப் பிரியும் ஆன்மா,  அவர் உன்மீது பற்று கொண்டதின் காரணமாக, உன் உடலுக்குள் வந்துவிடுகின்றது. பின் அவர் எடுத்துக் கொண்ட வேதனைகள் இங்கே வந்துவிடும்,  என்பதையும் காண்பிக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், மந்திர ஒலிகள் கற்றுக் கொண்டவர்கள், நான் பெரியவனா, நீ பெரியவனா என்கின்ற ரீதியில் மனதில் அகந்தை கொண்டு, உன்னைப் பரீட்சித்து பார்க்கும் நிலை கொண்டு, உனக்குத் தீமைகள் செய்ய முயல்வார்கள்.

மக்களுக்கு, நன்மைகள் தானே செய்யப் போகிறோம், என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என எண்ணி, நாம் செய்யும் சேவையில்,  எத்தனை இடையூறுகள் இருக்கின்றன என்பதை விளக்கி,  அதிலிருந்து காத்திடும் நிலையையும் காண்பிக்கின்றார், குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள்ஞான வழியில், மெய்ஞான உணர்வினை வளர்த்து, தீமைகளை ஒடுக்கி, யாம் உங்களிடத்தில் அருள்ஞான வித்தினைப் பதிக்கின்றோம். உங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வித்தினை, மகரிஷிகளின் அருள் துணை கொண்டு வளர்த்திட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்தோம் என்றால், நமது உயிர், அந்த உணர்வின் சக்தி அதனை கிரியையாக மாற்றி, அதனின் ஞானத்தின் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்வாக நமக்குள் செயல்பட்டு, இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து, அருள் மகரிஷிகளின் உணர்வுகளுடன் ஒன்றச் செய்து, அந்த ஞானத்தின் வழியில் பிறவியில்லாப் பெருநிலை அடைந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நம்மை இணைக்கச் செய்யும்.


(அக்டோபர் 1995)
சூரியனின் செயலைப் போன்றே தான், மனிதருடைய உயிரின் இயக்கமும் இயங்குகின்றது.
சூரியன் தனது சுழற்சியின் பொழுது,
அணுக்களை தன்னுள் எடுத்து,
தான் சுழலும் வேகத்தில் வெப்பமாகி,
நஞ்சினைப் பிரித்துவிடுகின்றது.

இதுபோன்றே,
மனிதன் தன் உணர்வின் செயலால்,
தன் உணர்வின் அலையால்,
தீமைகளை அங்கேயே பிரித்துவிட்டு,
தனக்குள் ஒளியின் சுடராக, மாறும் நிலை பெற்றவன்.

     அகஸ்தியர், அத்தகைய  உணர்வின் ஆற்றலால், நமக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து, நஞ்சினை மாற்றிடும் உணர்வின் தன்மையைத் தமக்குள் விளைய வைத்து,  இன்று துருவ மகரிஷியாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார். 
அகஸ்திய மாமகரிஷி பெற்ற உணர்வுகளைக் கவர்ந்து, அவரைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவரும்,  ஆறாவது அறிவின் துணைகொண்டு, ஏழாவது நிலை பெற்று, சப்தரிஷிகளாகி,  இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள். அந்த மகரிஷிகள் பெற்ற நிலைகளை, நாம் அனைவரும் பெறுவதற்கே, இதை உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக, ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால், அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பாவி எனக்குத் தீங்கு செய்தானே அவன் உருப்படுவானா என்று கோபத்தின் எல்லை கடந்து, உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம். அவ்வாறு, நமக்குள் தீங்கு செய்தவனை எண்ணி, அது விளைந்து, அவன் தீங்கு செய்தான், என்று நமக்குள் பதிந்தாலோ, அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.

ஆக இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று, அவனுக்குள் புரையோடி, அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும்.  ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில், "பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்" என்று எண்ணினால்,  இது அவன் செயலாக்கங்களுக்கே, தடையாயிருக்கும்.

இப்பொழுது, நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப் பட்டுப் பிரிந்திருந்தாலும், சில நேரங்களில் புரையோடும். புரையோடும் பொழுது, சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது.  எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம்,  வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும்பொழுது,  நமது உறுப்பின் இயக்கங்களே தனி.

ஆக நண்பனாக இருக்கும் பொழுது, அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது, விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி, அது தனித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.

இதெல்லாம், இயற்கையின் நிலையின் இயக்கங்கள், மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது. நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில், தீமையின் உணர்வுகளை, நமக்குள் பதிவு செய்யும் பொழுது, நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ, அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று, பற்றின் தன்மையால், தீமையே விளைகின்றது. பாசத்தாலோ, பண்பாலோ, அன்பாலோ, பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும்பொழுது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து, அந்த உணர்வின் வித்தாக விளைந்து, அந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து, நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.

சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே, நஞ்சினை பிளந்துவிடுவது போன்று மனிதன் தன் உணர்வின் செயலால், தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது, அதனைப் பிரித்து தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் தன்மை பெற்றவன்.

கோளாக இருந்து,  நட்சத்திரமானதைப் போன்று, மனிதன், தனது உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி,  அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து,  தீமையைத் தன்னிடமிருந்து வெகுதூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன். இந்த ஆற்றல், மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால், விளைவதுதான்.

இதைத் தான்,  மாரியம்மன்  கோவிலில் நமக்கு காண்பிக்கின்றார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது,  அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி -- மாரி) தீமை செய்யும் நிலையாக, விளைவதைப் போன்று,  துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது,  அது நமக்குள் மாறி, தீமைகளை அகற்றும் சக்தியாக  உருவெடுக்கின்றது.

ஆகவே, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைp பற்றுடன் பற்ற வேண்டும். அந்தp பற்றினை, பற்றுடன் பின்பற்றினால், நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும். இந்த வாழ்வில் பெறவேண்டிய, மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறச் செய்ய முடியும். ஆகவே, மெய்ஞானிகள் உரைத்த வழி எதுவோ, அதனைப் பின்பற்றி அனைவரும் பெருவீடு பெருநிலை அடைவதற்கு எமது ஆசிகள்.

எல்லையில்லா இந்த பேரண்டத்தில், 
ஒரு எல்லையோடு நின்றாடும் இப்பரம்பொருளில்,
வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும், 
மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே, 
நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும். 


(டிசம்பர் 1995)
உயிரான ஈசன் இன்றி, இவ்வுடலில் ஓர் அணுவும் அசையாது, என்பதை உணர்த்தவே, "அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் பரவுவதை, சந்திரன் மறைப்பதனால் அவ்வளவாக நமக்கு பாதிப்பில்லை. இன்றைய நிலையில் (உபதேசம் செய்த 1995 வருடம்) செவ்வாய், வியாழன்,  இதே போன்று கேது (கேது விஷமானது)  என்ற நிலையில், இதற்கு இடைப்பட்ட நிலைகளில் சூரியனின் கதிரியக்கங்கள் வெளிவருகின்றது.

ஆனாலும், அதைக் கவர்ந்து (சூரியனின் கதிரியக்கங்களை) மறைக்கும் நிலைகள் மற்ற கோள்கள் இடைப்படுவதனால், நமது பூமிக்குள் விஷத் தன்மைகள் பரவும். 

இத்தகைய விஷத்தன்மைகள் பரவி, புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது, அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால், உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது. ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால், நமது உடல் எப்படி பலவீனமடைகின்றதோ, அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது.  இது இயற்கையின் செயல்களில் ஒன்று.

ஏனென்றால், சூரியனுடைய வெப்பம், காந்தம்,
"இயக்கச்சக்தி" நமது பூமியில்,
குறைந்த அளவில் பரவப்படும் பொழுது,
மற்ற கோள்கள் உமிழ்த்தும், விஷத்தன்மைகள்
நமது பூமியில் அதிகமாக பரவுகின்றது. 
இது ஒரு வகை.

விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், துருவ மகரிஷி, சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள், இத்தகைய நஞ்சுகளை அடக்கி, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும், அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால், அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை. இதைப் போன்ற நேரங்களில், நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், அனைவரும் ஒருங்கிணைந்து, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால், ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நாம் விடும் மூச்சலைகளால், இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.
இந்த பூமியில் சங்கடத்தாலும், வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள் பரவி படர்ந்துள்ளன. நாம் கூட்டமைப்பாக இருந்து, நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால்  நமது மூச்சலைகள், காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுக பெருகுகின்றது. 

ஒரு முறை செய்துவிட்டு, அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால், கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும். அதாவது, கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம், சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு, அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக, மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது, நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்த காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம், இதனின் வலு அதிகமாகின்றது. இதனால் புறத்தில் பரவி கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து, நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது, அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில், 
குறைந்த பட்சம் 10  மைல் சுற்றளவிற்கு
மேலேயும், அகலமாகவும் பரவுகின்றது. 
நாம் விடும் மூச்சலைகள், காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால், ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து, கயிறாகத் திரித்து, ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று, நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து, அதனின் உணர்வினை நமக்குள்  சுவாசித்து, மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது, அது இந்தக் காற்று மண்டலத்தில் பரவும்.

சூரியனுடைய கதிரியக்கங்கள் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும்,  நாம் வெளியிடும் மூச்சலைகள், அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக 10 மைல் அளவுக்காவது இது பரவும்.

அப்போது,  இந்த 10 மைல் சுற்றளவில் உள்ளவர்களுக்கு, தீங்குகள் இல்லாத நிலைகளும், அவர்கள் சுவாசத்தில், நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன. நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து, உடலுக்குள் பரவச் செய்து, நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம். 

அவ்வாறு,  அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை, மூச்சலைகளை, நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம். 

நம் ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று, இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து, மகிழ்ந்து வாழச் செய்து, அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், அனைவரும் இணைந்து வாழச் செய்வோம். 

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி, நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.


(மே 1996)
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச் செய்து,  அந்த மகிழ்ச்சியின் தன்மையில், நமது மகிழ்ச்சியின் தன்மையை, நம்மில் வளர்த்திடும் நிலை பெற வேண்டும்.

இராமாயணத்தில் கல்யாண ராமா.... என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ, அவரே சீதையை மணக்கும் தகுதியுடைவர் என்கிற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில்,  காண்டீபத்தில் பொருத்தி எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது.  ஆகவே, துன்புறுத்தும் உணர்வினை வென்றவர் எவரோ, அவரே சீதையைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவர், என்னும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும், வில்லின் வலிமையைத் தான் உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக் கூட அவர்களால் முடியவில்லை. ஆனால் இராமனோ,  தீமை விளைவிக்கும் நிலைகளில் ருந்து, தீமையில்லாத நிலையை விளைவிக்கின்றான், என்பதை உணர்த்தும் பொருட்டு, இராமன் வில்லை தூக்கி நிறுத்தி, வளைத்து, முறித்து விடுகின்றான்.

அதன்பின், சீதையை இராமன் மணந்து கொள்கின்றான் எனக் காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத் தான் கல்யாணராமன் என்று எடுத்துரைத்தனர். இவ்வாறு வளர்ந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ந்த மகரிஷிகள்,  இந்த மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி,  தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள்.  துருவ மகரிஷியை பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் எனும் நிலையைக் காண்பித்தார்கள்.

காரம், எரிச்சலைத் தருவது என்றும், புளி கூசச் செய்வது என்றும், உப்பு உமட்டலைத் தருவது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், நாம் ஒரு கருணைக் கிழங்கை எடுத்து வேக வைத்து, கிழங்கில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, அதனுடன் காரம், புளி, உப்பு இவைகளை அளவாக இணைத்துக் குழம்பு வைத்து, சுவை மிக்கதாகச் செய்து சாப்பிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். இதைத்தான், நாம் கல்யாணராமன் என்று உணர வேண்டும்.

பல கோடித் தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், அதனை, மகரிஷிகள் தமது அரவணைப்பாக,  தமக்குள் சுவைமிக்க ஒளியாக, மாற்றிக் கொண்டவர்கள். 

துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களைத் தம்முள் வளர்த்திடாது, ஒளி பெறும் உணர்வினைத் தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாற்றியவர்கள். இதுதான் கல்யாணராமா என்பது.


(ஜூன் 1996)
            கடவுள் ஒருவரே என உரைப்பார் சிலர்,
கடவுள் பலர் என உரைப்பார் சிலர்,
கடவுளே இல்லை என உரைப்பார் சிலர், ஆனால் தம்
உயிரே கடவுள்  என அறிந்தவர் மேலானவர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும், மனிதன் அவைகளை தக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றான். அதே போன்று, தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால், அந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகளை, நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்திடல் வேண்டும்.

மகரிஷிகள், தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது, அவைகளை செயலற்றதாக்கி, தம்மிடத்தில் தீமையின் உணர்வினை ஒடுக்கி, அதனுடைய செயலாக்கங்களை மாற்றி, தமது உணர்வினை வலிமை மிக்கதாக மாற்றுகின்றனர்.

இதே போன்று, தீமையின் உணர்வுகளை நமக்குள் ஒடுக்குகின்ற பொழுது,  ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும், அது, நம் உடலுக்குள், தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.    

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் கலக்கப்படும் பொழுது,  நம் உடலில் தீமையை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்,  அவைகளை  நமக்குள், நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன. 

உதாரணமாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன், சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது, அது நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது. எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ, அந்த விஷம் ஊடுருவி, இந்த நல்ல மருந்தின் தன்மையை,  உடலெங்கும்  பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில், மருந்தினைச் செலுத்தும் பொழுது, மருந்துடன் கலந்துள்ள விஷம்,
மருந்தினை எடுத்துச் சென்று,
உடலில் உள்ள வேதனையை உருவாக்கும்
உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு,
தன் இனத்தை உருவாக்கும் தன்மையால்,
நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி,
வேதனையை உருவாக்கும் அணுக்களை
வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது,

ஆகவே இதைப் போன்று, ஞானிகள் காண்பித்த வழியில், அருள் ஞானிகளின் உணர்வை, நம் எண்ணத்துடன் கலந்து,  நாம் எத்தகைய தீமையின் உணர்வினைக் கண்டுணர்ந்தோமோ, அந்த மகரிஷியின் ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும் என இணைத்து, நம் உடலுக்குள் செலுத்திவிட்டால், அருள்ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு, நமக்குள் வலுகொண்ட நிலையாக மாறுகின்றது.


(நவம்பர் 1996)
நாம், மிக மிக நல்லவர்களாக இருப்போம். பலருக்குப் பக்குவம் சொல்லக் கூடியவர்களாக இருப்போம். ஆனால்,  நல்ல அறிவுரையுடன் கூடிய யோசனைகளைக் கூறுபவர்கள் அனைவருமே, பிறருடைய குறைகளை, வேதனைகளை, துன்பங்களைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது.

உங்களிடத்தில் பலர் வந்து, என்னைப் பிறர் ஏமாற்றிவிட்டார்கள், நான் மோசம் போனேன் என்று கூறுவதைக் கேட்டுக் கொண்டேயிருங்கள். அப்பொழுது, இதனின் உணர்வுகளெல்லாம் உங்களில் விளைந்து, உங்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை எல்லாம், காணாமல் போகச் செய்துவிடும்.

இதெல்லாம், உங்களில் விளைந்தவுடனே நீங்களும் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவரைப் பார்த்து பித்தலாட்டம் பண்ணுகிறார் என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள். இவ்வாறு, நீங்கள் நல்லதே செய்து வந்தாலும், பிறர்படும் வேதனையின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்பொழுது, அது உங்களிடத்தில் நோயாகவும், கவலையாகவும், சோர்வடைந்த நிலையாகவும், உங்களிடத்தில் விளையும்.

பலரின் குறைகளைக் கேட்டு, உங்களுடைய உணர்வு வேகமாக இருக்கும். இதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால், மகன் ஏதாவது காரியத்திற்காக வெளியே சென்றால், உடனே அவனை அறிவு கெட்டதனமாகப் போகிறான் என்று திட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஏதாவது ஒரு வேலையாக, மனைவியைக் கூப்பிடுவோம். கூப்பிடும் பொழுதே, வா இங்கே என்று வேகம் காட்டுவோம். இதோ வருகிறேன் என்று அவரும் குரல் கொடுப்பார். அதனின் உணர்வு என்ன செய்யும்? பாத்திரம் ஒன்று, கை நழுவி விழுந்துவிடும். உடனே நாம் மனைவியைக் கொஞ்சமாவது அடக்கம் இருக்கிறதா பார் என்று சத்தம் போடுவோம், வெறுப்பின் உணர்வுகள் நம்மிடத்தில் அதிகரித்துவிடும்.

அப்பொழுது, இந்த உணர்வின் தன்மை வேதனையாகும் பொழுது, மனைவி பொறுமையாகத் தான் இருப்பார். ஆனால், ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுகிறார்,  என்னிடம் எரிந்து விழுகிறார் என்று மனைவி வேதனையாகும் பொழுது, அவருக்குக் கை, கால் குடைச்சல் வருகின்றது. 

இதே உணர்வின் தன்மையுடன் சமையல் செய்தால், என்ன ஆகும்? சாப்பாடு நன்றாக இருக்காது,  ஆக, சாப்பாடு பரிமாறும் பொழுதும் வம்பு.

கணவன், மனைவி இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள் என்றால், நீ, நான், என்று சண்டை வருகின்றது. அப்பொழுது, அடுத்தவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் புகுந்தபின், யாராவது உதவி செய்கிறார்கள் என்றால், அவர்களுடைய எண்ணம் இங்கே வரும்.

என் வீட்டுக்காரர் இப்படித்தான் என்று வேதனைப்படும்பொழுது, அவர்களைச் சார்ந்தவர்கள் அந்த மனுஷன் அப்படித்தான், நீ வாம்மா கண்ணு என்று அனுசரித்தால் போதும். இவர்கள் செத்தால், உயிரான்மா அவர் உடலில் புகுந்துகொள்ளும்.

அப்பொழுது, வேதனையின் உணர்வுகளை மேலும் வளர்த்துக் கொண்டபின், நான் உதவி செய்தேன், ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே என்ற நிலையில், வீட்டில் கலவரம் உருவாகும். ஆக, இங்கே எண்ணங்கள் எமனாகி விடுகின்றன. பகைமை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது, அது, இணை சேர்த்து வாழும் தன்மையைப் பிரித்துவிடுகின்றது.  

இப்படி, எத்தனையோ நிலைகள் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்குகின்றன. அதை நாம் மாற்றுதல் வேண்டுமல்லவா? இதை எல்லாம் நீக்குவதற்கு, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும், ங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும், ங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், என்று இந்த எண்ணத்தை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

எமனிடமிருந்து, சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் எனும் நிலையாக, எப்பொழுது ஒன்றிய நிலைகள் வந்தாலும் இன்னொரு பிறப்புக்குப் போகாதபடி, பிறர் செய்த ஏவல், நோய்கள் தனக்குள் வராதபடி தடுக்க இது உதவும்.

வசிஷ்டரும், அருந்ததியும் போன்று வாழவேண்டும். அவர்கள் வாழ்ந்த உணர்வின் தன்மை, என்றும் நிலை கொள்ள வேண்டும் என்பதற்குத்தான், இதை உபதேசிப்பது. இரண்டு மனமும் ஒன்றாகி, திருமணமானபின் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் இவை. 

கணவன், தன் மனைவியை உயர்த்தி நினைப்பதும், மனைவி, தன் கணவனை உயர்த்தி  நினைப்பதும், போன்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.

கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து, இதே உணர்வுடன் செயல்படவேண்டும். அப்பொழுது அருள் ஞானியின் உணர்வுகள், உங்களில் ஒளியாகின்றது. தீமைகளை அகற்றும் நிலை உருவாகின்றது. 

தீமைகளை நீக்கி, இருவரின் மனத்தையும் ஒன்றாக்கி, இந்த உணர்வின் வலுகொண்டு, நீங்கள் தீமையில்லாத நிலையாக, ஒளியாகப் பெறும் பொழுது,  கல்கி. 

பின், உங்களுடைய உணர்வு எதிலே பாய்ந்தாலும், அங்கே இருக்கும் தீமைகளை மாய்க்கும் நிலை வருகின்து. இந்த உணர்வின் தன்மை, எவரின் மீது பாய்கின்றதோ, அவர் இருளை நீக்கி, மெய்ப்பொருளைக் காணும் நிலைகள் பெறுகின்றார்.

கணவன், மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மைகளும் ஒன்றிணைந்து, கல்கியினைப் பெறும் நிலையாக, தங்களது உணர்வின் தன்மையை வளர்ப்பவர் அனைவருக்கும், அவர்கள் உணர்வின் வழிப்படி, பேரின்பப் பெரு வாழ்வு பெறுவதற்கு, எமது அருளாசிகள்.

ஊசி முனை தவம் வேண்டாம்.
காடு, மலை தேடி போக வேண்டாம்.
அன்னை, தந்தை அருள் இருந்தால் போதும்.
குருவின் அனுக்கிரகம் எளிதில் கிட்டும்.

ஒரு செடிக்கு நீர் ஊற்றினால், அந்தச் செடி நீரின் துணை கொண்டு, காற்றில் உள்ள தன் சக்தியினைக் கவர்ந்து, தன்னை வளர்த்துக் கொள்ளுகின்றது. நமது உயிரான்மாவும், ஒரு செடி போன்றதே.

செடிக்கு நீர் போன்று,  நமக்கு குருவின் அருள்.
குருவின் அருள் துணை கொண்டு,
காற்றில் பரவிப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வை
நாம் கவர்ந்து,  நம்மில் நாம் மெய்யுணர்வை வளர்ப்போம்.

தீபத்தின் ஒளியால் இருள் அகன்று, இருளில் இருக்கும் பொருள் தெரிவதைப் போன்று, சப்தரிஷிகளின் அருளுணர்வை, நாம் பெறுகின்ற பொழுது,  உயிரில் கலந்திருக்கும் இருள் அகன்று,  மெய்ப் பொருளைக் காணும் திறன், நாம் அனைவரும் பெறுகின்றோம்.



(டிசம்பர் 1996)
உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தன் மகன்மீது, பாசமாகப் பிரியமாக இருக்கிறார், என்று வைத்துக் கொள்வோம். அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாக   இருந்தாலும், அவன் மீது  பாசம்   வைத்திருந்ததால், அவன்  எந்தத் தவறு செய்து ருந்தாலும்  ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அதே சமயத்தில், அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும், தவறு என்ற வகையில் மகன், தந்தையை வெறுக்கும் பொழுது, தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.

இவன் அயோக்கியன், நம்மையே குற்றம் சாட்டுகின்றானே, இவன்  மோசமானவன், அப்பனையே   எதிர்க்கிறான் பார் என்று தந்தை, மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார். அவன் நல்லதையே செய்தாலும், அவனுடைய தந்தை அவனைக் குற்றவாளி என்றுதான், எண்ணுவார்.

ஆனால், முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் மகனே, நீ நல்லவன்டா என்று அவனை ஆதரிப்பார். ஏனெனில், இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.

மற்றவர்கள், முதல் மகன் செய்த தவறுகளை, குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும், அவர் ஏற்றுக் கொள்ளாமல், இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான், நல்லவன் என்று சொல்வார்.

ஆனால், இரண்டாவது மகனைப் பார்த்து, அயோக்கியன், இவன் தவறு செய்வான் என்றுதான் கூறுவார். முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால், அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும், தப்பு இல்லை என்று தான் அவருக்குச் சொல்லவரும்.

இது இயற்கையின் செயலாக்கங்கள்.  நாம் எதை எண்ணுகின்றோமோ, அதனின்  உணர்வை  நம்முடன் இணைக்கப்படும்  பொழுது, அதே  உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.

தம் பையனைக் கண் கொண்டு பார்த்து,  அவன் தப்புச் செய்திருந்தாலும் கூட,  அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது, அந்த உணர்வு கொண்டு, அவருக்குள் படமாக்கி, அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது, இதைத்தான் கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்று உரைக்கப்பட்டது.

தந்தை செய்த தவறுகளையெல்லாம், முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை, அவருக்குள் வளரப்படும்பொழுது, அது அவரிடத்தில் கடும் நோயாக விளைகின்றது.

ஆனால் அந்த சமயத்தில், தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ, தந்தையால் நல்லபிள்ளை என்று பாராட்டு பெற்றவன், கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து. நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்,  நான் என்ன செய்யட்டும் என்று சொல்வான்.

நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ, அவனைப் பார்த்து, அடேய்.., பாவி என்று தந்தை தம் மகனைப் பார்த்து சொல்லும் நிலை பின் நாட்களில் வரும். இதை நாம் பார்க்கலாம்.
சில குடும்பங்களில், உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது. எந்த உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து, தன்னிடத்தில் இணைக்கின்றதோ, அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும், வேறொன்றையும் இயக்காது. 

எதனை நாம் எண்ணுகின்றோமோ, அது நமக்குள் கணங்களுக்கு அதிபதியாகின்றது. நமக்கு மெய்ஞானிகள் கொடுத்துள்ள தத்துவங்கள் சாதாராணமானதல்ல. நாம் வணங்கச் செல்லும் ஆலயங்களும் சாதாராணமானதல்ல.
 நமக்குள் இயக்கும் உணர்வுகளை,  உருவமாக்கிய நிலைகள்,  துவைதம். அந்தக் காவிய படைப்புகளை,  எண்ணத்தால் எண்ணும் பொழுது,  அத்வைதம். அதனை உணர்ந்து,  உயிரால் இயக்கப்படும் பொழுது, விசிஷ்டாத்வைதம். நம் உணர்வின் தன்மையினை உருவாக்கி,  நம் உடலாக்கும் பொழுது துவைதம்.

இன்று துவைதவாதிகளும், அத்வைதவாதிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். துவைதவாதி தாம் படித்ததைப் பேசுவார். உடலுக்குள், உணர்ச்சியின் தன்மை இயக்குகின்றது. இதுதான் உண்மை. இந்த உடலுக்குள், உணர்ச்சியின் தன்மை எதிலிருந்து வருகின்றது? 

நாம் புறத்திலிருந்து நுகர்ந்து, பின் உடலுக்குள் இயக்குகின்றது.  ஆனால், இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். உடலில் இருந்துதான், இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்பார்கள். உடல் எப்படி வந்தது என்பார்கள். இதுதான் இவர்களது வாதம்.

தெய்வச் சிலைகளை வைத்து, அதற்கு யாக வேள்விகளைச் செய்தால், ஆண்டவனை அடைய முடியும், துயரங்களைப் போக்க முடியும் என்பது துவைதவாதிகளின் கொள்கைகள்.

யாக வேள்விகளை ஆண்டவனுக்கு படைத்தபின், அந்த அக்கினிக் குண்டத்தில், ஆண்டவன் இறங்கி வருவான் என்றும்,  தாய் பராசக்தி எழுந்து வருவாள் என்றும். கட்டுக் கதைகளைக் கட்டுவார்கள். யாரையும் குறை கூறுவதற்காக இங்கு இதை யாம் இதை சொல்லவில்லை.

அன்று ஆண்ட அரசர்கள், தன் அரசாட்சிக்குத் தக்கவாறு, மக்கள் அரசனை நம்பியிருக்கும்படியாகவும், அரசனின் கீழ் குடிமக்கள் அமைவதற்கும் உகந்தவாறு, ஞானிகள் அன்று உரைத்த உண்மைகளை மறைத்து, திரிபுபடுத்தி, உனக்குத் தொழில் செழிப்பாக வேண்டுமா, இந்த அபிஷேகத்தைச் செய், ஆண்டவன் உனக்கு செய்வான் என்ற ஆசையினைத் தூண்டி, ஞானிகள் கண்பித்த அருள் வழிகளை மாற்றியமைத்து விட்டார்கள். அதன் வழியில் மதங்களை உருவாக்கி, மதத்தினுள், இனங்களையும் உருவாக்கினார்கள். இன்று இனங்களுக்குள் போர் முறை மாறாத நிலைகளே, வந்து கொண்டிருக்கின்றன.

துருவ மகரிஷி தீமைகளை வென்றவர். இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவரும், சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவனும், மனைவியும் இணைந்தே தீமைகளை அகற்றி, அருள்ஞானத்தின் வழியில் வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஒரு நோயாளியையோ, தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும், அது வாலியாக, வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து, நல்ல குணங்களை அடக்குவதை, அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால், தடுக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால், அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும். இதைத்தான் இராமாயணத்தில், இராமன் வாலியை, சுக்ரீவன் துணைகொண்டு அடக்கினான், என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.

அதாவது, அருள்ஞானியின் உணர்வுகளை, மனிதனில் தீமைகளை வென்ற, அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்கு வேண்டித்தான், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து, இந்த வலிமைமிக்க விஷத்தை, வாலியை அடக்குதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை, நாம் எண்ணத்தால் நுகர்ந்தால், சுக்ரீவன்.

அவன் உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி, நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது. இதைத்தான், சுக்ரீவன் துணைகொண்டு, வாலியை இராமன்  அடக்கினான் என்பார்கள்.

இதில் வாலி அண்ணன், சுக்ரீவன் தம்பி.
(ஆதியில்) விஷத்தின் இயக்கத்தால்,
தொடர்ந்து வந்தவன்தான் அண்ணன், வாலி.
மனிதனாக ஆனபின், உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை,
ஆக, பின்னால் பிறந்ததுதான் ஒளி, சுக்ரீவன்.
இவ்வளவு தெளிவாகக்  காட்டுகின்றார்கள்.

இதனால்,  வாலி, சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்து, சகோதரர்கள் என்றும், ஆகவே,  சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது, இது இணைந்து, நமக்குள்   நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது,  என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

மெய்ஞானிகள், தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும், காரணப் பெயர்களைச் சூட்டி,  தம் இன மக்கள் அனைவரும், விண்ணின் ஆற்றலை தம்முள் பெற்று, உணர்வினை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காகத் தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை வெளிப்படுத்தினர். 

நாமும், மெய்ஞானிகள் வெளிப்படுத்திய,  உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து, நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி, மெய்ப் பொருளை பெறும் நிலையாக, நமது உணர்வினை வளர்ப்போம் என மெய்ஞானிகள் காண்பித்த வழியினை கடைப்பிடிப்போர் அனைவரும், என்றும் பேரானந்த பெருநிலையைப் பெறுவதற்கு எமது அருள் ஆசிகள்.

உண்மையான யாகம் என்பது, தீயை வளர்த்து, அதில் விலையுயர்ந்த பொருள்களைப் போட்டு எரித்து, மந்திரங்களை ஓதுவது அல்ல. 
உயிரான நெருப்புக்குள்,
மகாஞானிகளின் உணர்வைச் செலுத்தி,
நம்முள் உள்ள நஞ்சினை ஒடுக்குவதே,
உண்மையான யாகம்.


(ஜனவரி 1997)
அன்பு, பாசம், பரிவு, பொறுமை, சாந்தம் என்று நற்குணங்களனைத்தும்,  மனிதரிடம் இருந்தாலும்,  சந்தர்ப்பங்கள், மனிதரிடத்தில் தீமைகளைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். 

துருவ நட்சத்திரத்தின் அருள்சக்தி ஒன்றுதான், தீமைகளைப்  போக்கும் அருமருந்தாகும்.

வைகுண்ட ஏகாதசி  என்ற நிலைகளை உருவாக்கிக் கொடுத்த ஞானிகள், பெருமாள், விஷ்ணு ஆலயங்களில் சொர்க்கவாசல்  என்ற நிலைகளை உருவாக்கி, மனிதர்கள் தம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களைக் காக்கும் நிலையைத் தெளிவாக்கினார்கள்.

அதாவது, நமது மூக்கு, நமக்கு முதல் வழி, நேர்வழி. நாம் நமது கண்கொண்டு பார்க்கும் உணர்வுகளை, சுவாசிக்கின்றோம். நமது உயிர், நாம் சுவாசித்த உணர்வுகளை அதனின் உணர்வின் சக்தியாக, நமது உடலில் அமைத்து விடுகின்றது.
      
     ஆக, நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அந்த குணத்தின் அணுவாக நமது உடலில் விளைந்து, பின் அந்த அணு அதனின் குணத்தின் சத்தை, காற்றில் கலந்திருப்பதை நம் சுவாசத்தின் வழிக்கூடி நுகர்ந்து, தன்னுள் கவர்ந்து,  தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நாம் எந்த குணத்தை எடுத்தோமோ, அந்த குணத்தை நாம் சுவாசிக்கும்பொழுது, அது உயிரில் மோதி, அதனின் உணர்வின் சத்தை அறியச் செய்கின்றது, உணரச் செய்கின்றது.

ஆனால், அதனின் உணர்ச்சிகள் நமது உடலில் இயங்கி, அதற்குத் தக்கவாறு நமது உடலை இயக்கிக் கொண்டுள்ளது என்ற நிலையை, நமக்கு உணர்த்துவதற்காக ஞானிகள் சொர்க்கவாசல் என்ற நிலைகளை ஆலயங்களில் ஏற்படுத்தினார்கள்.
      
ஆனால்,  நாம் வைகுண்ட ஏகாதசியன்று என்ன செய்கின்றோம்?  இரவு முழுவதும் கண் முழித்திருந்து, காலை  4.00  மணிக்கெல்லாம் சொர்க்கவாசல் திறப்பார்கள், என்று கோவிலுக்குச் செல்கிறோம்.

சொர்க்கவாசல் வழி சென்றால், சொர்க்கத்தை அடைவோம் என்ற எண்ணத்துடன்தான் நாம் செல்கின்றோம். இது எப்படி இருக்கிறது என்றால், ஏட்டில் சுரைக்காயை வரைந்து, அதைக் குழம்பில் போட்டுச் சமைத்துச் சாப்பிடுவது போன்று, இருக்கின்றது.
      
   இரவு உணவு உட்கொள்ளாது, விடிய விடிய விழித்திருந்து,  4.00  மணிக்கெல்லாம் ஆலயத்திற்குச் சென்று, அங்கே சொர்க்கவாசலைத் திறந்ததும், கூட்டத்துடன் முண்டியடித்து மோதிக் கொண்டு சென்று,  அங்கே வைத்திருக்கும் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை அர்ச்சனைகள் செய்தால், அந்தத் தெய்வம் நமக்கு நல்லது செய்யும், நம்மைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும், என்று சாங்கிய சாஸ்திரங்களை வைத்துதான், நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
      
நாம், பேருண்மையின் தன்மைகளைக் காண முடியாத நிலைகளில்தான் இருக்கின்றோம். பேருண்மையின் தன்மைகளை, யாம் உங்களுக்கு வெளிப்படையாக உபதேசித்தாலும், இது என்ன புதிதாக இருக்கின்றது என்று புதிர் போட்டு, கேள்வி கேட்டு, கேள்விக் குறியாகத்தான் யாம் உபதேசிக்கும் உணர்வுகளை, உங்களுக்குள் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.
      
யாம் உபதேசிப்பதைக் கேட்டாலும், புதிதாக இருக்கின்றது, புதிராக இருக்கின்றது என்றும், இதனின் உணமையை உணர்ந்து கொண்டாலும், மற்றவர்கள் இதைப் பெறமுடியுமா? இதன்வழி பின்பற்றி நடப்பார்களா? என்று, நாம் மற்றவர்களைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகின்றதே தவிர, நாமும் பெறுவோம், நம்மைச் சார்ந்தவர்களையும் பெறச் செய்வோம், மற்ற அனைவரையும் பெறச் செய்வோம், என்ற இந்த உணர்வுகள் நம்மிடத்தில் இன்னும் வளரவில்லை.
      
ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த பேருண்மையின் தன்மைகள், நம் மனதில் இருந்து மறைந்தே போய்விட்டது. ஆனால்,  மகரிஷிகள் தமது உடல்களில் விளைவித்து வெளிப்படுத்திய உணர்வுகளை, சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து, நமது பூமியில் படரச் செய்துள்ளது,  அது அழியவில்லை.  அதன் தொடர்கொண்டு, அவர்கள் சப்தரிஷி மண்டலமாகவும்,  துருவ நட்சத்திரமாகவும் இருந்து, ஒளிச்சரீரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
      
அவர்கள், இந்த பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில், மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, தீமைகள் தம்மைச் சாராத நிலைகள் கொண்டு,  உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள்.

அவ்வாறு மாற்றிய உணர்வுகளை, அவர்கள் தம் உடலில் விளையவைத்து வெளிப்படுத்திய உணர்வை, சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளாக இந்தப் பூமியில் படரச் செய்துள்ளது. அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில், பிறவியில்லா நிலை பெறும் நிலையாக,  தமது உணர்வினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றச் செய்து  வேகா நிலை  என்ற நிலையை அடைந்தார்கள்.
      
இந்தப் பேரண்டத்தில், எத்தகைய மாற்றங்கள் நடைபெற்றாலும்,  இவர்கள் உயிர் அழிவதில்லை. இந்த உடலில் இருந்து, ஒளியாக மாற்றிய உணர்வுகள் மாறுவதில்லை.

ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி,  இன்றும் விண்ணின் ஆற்றலை, தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.
      
இதன் நிலைகளை நாமும் பெறவேண்டும் எனும் நிலைக்காகத்தான், அன்று ஞானிகள் நமது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் சீராக பயன்படுத்தச் செய்து,  நமது வாழ்க்கையில் சொர்க்கத்தைப் பெறும் நிலையாகவும், சொர்க்கவாசலை எதன்வழி கொண்டு திறக்கவேண்டும் என்பதையும், ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள். 

ஆனால் யாரும் அதை பின்பற்றவில்லை. நாம் அபிஷேகம், ஆராதனை செய்தாலே போதும் என்ற நிலைக்கு சென்றுவிட்டோம்.
மெய்யுணர்வை நமக்குள் நுகர்ந்து, நம் உயிருக்குள்
இந்த உணர்வினை அபிஷேகம் செய்து,
மகரிஷிகளின் அருள் உணர்வை நம் உடலுக்குள் பரவச்செய்து,
அதனை ஆராதனையாக்கி,
நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கு,
அருள்ஞானிகளின் உணர்வை உணவாக கொடுத்து,
அதனின் நிலையை வளரச் செய்வதற்குத் தான்,
ஆலயங்களில், சொர்க்கவாசல் என்ற நிலைகளை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நாம் ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும், நேர் வாசல் மூலம்தான் செல்கின்றோம். ஆனால்,  வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் என்று மற்றொரு வாசல் மூலம், உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.

அதாவது,  நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு, நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக, இந்த ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.

ஆக, அந்த வாசல் வழியாகச் சென்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் பெறவேண்டும்.
      
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடல் முழுவதும் படர்ந்து, நம் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்தி, இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து, அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று ஆலயம் வருவோர் அனைவரையும், எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.
            அவர்கள் உணர்த்திய உணர்வின்படி ஆலயங்களை அமைத்து, 
மூக்குவழி சுவாசிப்பதைக் காட்டிலும், 
புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப்
பருகும் நிலையை நாம் பெறவேண்டும்
என ஞானிகள் தெளிவாக்கினார்கள்.
            (நமக்கு சொர்க்கவாசல் புருவ மத்திவழி, உயிர்வழி)
இப்படி நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நமக்குள் உயிர் வழி சேர்த்து, வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, இந்த ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், தெய்வ குணங்கள் பெறவேண்டும், தெய்வ நிலைகள் பெறவேண்டும், அவர்கள் குடும்பங்களில் அமைதி பெறவேண்டும், அருள் ஒளி படரவேண்டும் என்று நாமும், மற்றும் அனைவரும் எண்ணும்பொழுது, நம்முள்ளும், மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும், நல்ல உணர்வுகள் விளைகின்றன.

ஆக, நமது உணர்வின் தன்மை நம்முள் விளைந்து,  ஒளியின் சரீரம் பெறும் தகுதி, நாம் அனைவரும் பெறுகின்றோம். ஞானிகள், மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம்.
இதுதான், வைகுண்ட ஏகாதசி.


(மார்ச் 1997)
உதாரணமாக இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால், மனிதரின் கை, கால் அங்கங்கள் சுருங்குகின்றன.. கோபத்தின் தணலும் அதிகமாகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்பொழுது, இதனின் உணர்வுகள் அணுக்களாகி, அந்த வேதனையின் உணர்வுகளே அதிகமாகும்.

ஆகையால், யாரைப் பார்த்தாலும் கோபிக்கும் தன்மையும், தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், உணர்ச்சிவசப்பட்டு அழுவதும், அவர்களைக் கோபிப்பதுமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

இவர், யார்மீது அதிக பற்று கொண்டு பார்க்கின்றாரோ, அல்லது இவர்மீது யார் பற்று கொண்டு பார்க்கின்றனரோ, அவருடைய உணர்வுகளில் இது பதிவாகி, அந்த உணர்வின் தன்மை அதிகமாகிவிட்டால், இவருடைய உயிரான்மா அவருடைய உடலுக்குள் செல்கின்றது. பின், தன்னுடைய உடலில் இருந்தபொழுது விளைய வைத்த உணர்வுகளை, இவரிடத்தில் உருவாக்குகின்றது.

இவருடைய உடலில் அதை உருவாக்கி, அதே உணர்வினைத் தனது உணவாக ஈர்க்கின்றது. இவருடைய உடலில் இந்த ஆன்மா புகுந்துவிட்டதால், இவருக்கும் கோபம் அடிக்கடி வரும். ஏன் கோபம் வருகிறது என்றே,  இவருக்குத்  தெரியாது.

பின், இவருடைய உடலையும் வீழ்த்திவிட்டு வெளியே சென்றபின், மனிதல்லாத பிறவியைத்தான் அடைகின்றது.

இதில், எத்தகைய உணர்வின் வலுவைச் சேர்த்துக் கொண்டதோ அதற்கொப்ப, பரிணாம வளர்ச்சியில் வந்தபொழுது, எந்தெந்த குணங்கள் கொண்ட உடலின் உருவங்கள் பெற்றதோ, அதற்குத்தக்க உருவத்திற்கு நமது உயிர் அழைத்துச் சென்று, எங்கே அதனின் உணர்வின் வலு இருக்கின்றதோ, அங்கே அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு TV  நிலையத்தில், ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும் பொழுது, மறுமுனையில், அதே அலைவரிசையில் நமது  TVயின் அலைவரிசையைத் திருப்பி வைக்கப்படும் பொழுது, ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.

இதைப் போன்று, நமக்குள் எவருடைய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ, அதனின் உணர்வுகள் உந்தப்படும்பொழுது, அதே நினைவின் உணர்வுகளை நாம் சுவாசித்து, அதன் வழிகளில் பெருக்கப்படும் பொழுது, இந்த உடலை விட்டுச் சென்ற பின், அவருடைய உடலுக்குள் நாம் புகுந்து கொள்கின்றோம். இப்படி இயற்கையின் நியதிகளைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.

பிறவியில்லா நிலைகளை உணர்ந்தவன், உணர்ந்து தனக்குள் நுகர்ந்தவன், தம்மிடத்தில் உணர்வினை ஒளியாக மாற்றினான். ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகிறான். சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன. கோபப்படுவோரின் உணர்வை சுவாசித்தால்,  நம்மிடத்தில் அது  காளி  ஆகின்றது.

ஒருவர் தொழிலில் முன்னேற்றமடைந்து, அவருடைய மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து, தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்து, அங்கலாய்த்து, பார், நான் இத்தனை தொழில் செய்கின்றேன், எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆனால், ஆண்டவன் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்று அவர்பால் உயர்வைக் காட்டி, தன்பால் அங்கலாய்த்துக் கொள்ளப்படும்பொழுது, நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு, உணவு கொடுப்பதில்லை. ஆக, நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.

அங்காளேஸ்வரி என்ன செய்கின்றது?
அது, தன் குழந்தையையே பிளக்கின்றது.
குடலை உருவுகின்றது.
அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.

இதைப் போன்றுதான், நாம் வேதனையை நுகர்வதனால், நமது உடலினுள், நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை, நாம் பிளந்து விடுகின்றோம் என்பதை உருவமாக்கி, 
அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து,
அங்கே, மடி மீது குழந்தையை வைத்து,
குடலை உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

நமக்குள் வளர்ந்துவரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது,  யாரையோ பார்த்து அங்கலாய்த்து, அதனின் உர்வின் சக்தியை நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது, அது நம்மிடத்தில் உள்ள அணுக்களைப்  பிளந்து விடுகின்றது,  என்பதனைத் தெளிவாக் காண்பித்தார்கள், ஞானியர்கள்.

ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்? அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும், கோழியும், கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள் என்று நமது நல்ல குணங்களைக் கொன்றிடும் நிலையாக, அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பலி கொடுத்து, அவள் செய்வாள் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு, அகங்கார உணர்வுகளை எடுத்து, பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்துவிட்டால், இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.

பின், இதிலும் காரியம் சித்தி ஆகவில்லை என்றால், தன் சொந்தமோ, நண்பர்களோ, அவர்களுடைய உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும், வெறிகொண்ட உணர்வுகளைப் பெறுவதும், ஆக, இந்த உணர்வின் தன்மையினை கொண்டு வரப்படும் பொழுது, எவர்மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ, அவருடைய உடலுக்குள் இவர் இறந்தபின், இவருடைய உயிரான்மா புகுந்துகொள்ளும்.

பலி கொடுத்து அரக்கச் செயல்களை செயல்படுத்தும்பொழுது, இந்த உணர்வுகள் வளர்ந்து, அந்த உணர்வின் தன்மை வந்தபின், எந்த நிலையை உருவாக்கி, அசுர உணர்வின் குணத்தைத் தனக்குள் பார்த்தாரோ, அந்த உணர்வின் வலுக்கொண்டு இந்த ஆன்மா வெளி வந்தபின், தன் மேல் வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ, அல்லது இவர் மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ, இது ஈர்க்கப்படுகின்றது.

நோய்வாய்ப்பட்டு இவர்கள் மரணமடையப்படும் பொழுது, தன் நண்பர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்தால், இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா,  அங்கே அங்காளேஸ்வரி போன்று காட்சி தரும்.

ஆக, அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண முடியாதபடி, ஐயோ, என்னை விரட்டுகின்றது, ஏதோ என்னைத் துரத்துகின்றது என்ற நிலை வரும். ஆக, வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்துவிட்டால், அவர் உடலுக்குள் சென்றால், இதுவே செய்யும்.

    எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக்  கொண்டதோ, அதன் ரூபமாகக்  காட்சி கொடுத்து, இது வருகிறது என்றும், சோர்வடையும் நேரங்கள் எல்லாம்,  என்னைத் துரத்துகின்றது,  தூங்க விடுவதில்லை என்றும், எந்தச் சிலையைப் பார்த்து,  அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொண்டதோ,  மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்றபின், எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை, எனக்குக் கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை என்றும், இந்த உணர்வு கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
அசுர உணர்வின் செயல்களையே, அங்கே செயல்படுத்தும். ஆகவே, இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக, அந்த உடலில் வளர்ந்து, அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும். ஆக, இவ்வழியில்தான், இந்த மரணங்கள் நேரிடுகின்றது.

எத்தனனையோ கோடி சரீரங்களில், நாம் பலவற்றிற்கு இரையாகி, அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து, மனிதனாக உருவாகி, இன்று பகைமை உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கி, பகைமையற்ற நிலையாக மாற்றி, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, அதன் செயலாக்கமாக தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே, இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும், துருவ நட்சத்திரமாகவும், வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நாமும்,  துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால், நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும், வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்து, ஒளி பெறும் உணர்வுகளை நம்முள் வளர்த்து,  சப்தரிஷி மண்டலங்களின் அருள்வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக,  வாழ்ந்திடல் வேண்டும் 

அவ்வாறு வாழ்ந்து வரும் அனைவரும், பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும், மலரைப் போன்ற மணத்தையும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெறுவதற்கு, எமது அருள் ஆசிகள்.

குழப்பங்களும், கவலைகளும் தம்மைச் சூழ்கின்ற பொழுது, அதனின் வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர். அந்த சமயத்தில் குருவையும், குரு கொடுத்த அருள் வாக்கையும், எண்ணுவதற்குப் பலர் மறந்து விடுகின்றனர்.

ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில்,  குருவையும், குரு நமக்கு கொடுத்த அருள் வாக்கையும், எண்ணி ஏங்கும் பொழுது,  நம்மைச் சூழ்ந்த குழப்பங்களும், கவலைகளும் குருவின் அருளால் அகன்று, மகிழ்ச்சி உண்டாவதைக் காணலாம்.


(ஏப்ரல் 1997)
பிறரிடம் குறை காணும் உணர்வுகளானது, அதே குறைகளை, நம்மிடத்திலும் உருவாக்கி விடும். இந்த வகையில்,  நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை. நாமேதான் நமக்கு எதிரி. 

எல்லோரும் நல் நிலை பெறவேண்டும் என்னும் உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது, நம்மிடத்திலும், நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும் நல் உணர்வுகள் விளைந்து, நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும், உயர்ந்த நிலை பெறச் செய்யும்.

நாம் யாரிடமெல்லாம் பழகினோமோ,  அவர்கள் நம்மிடம் பகைமையாகப் பேசியிருந்தாலும் சரி, அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது, நாம் நமது நினைவிற்கு கொண்டுவந்து, அவர்களது குடும்பங்கள் நலம் பெறவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த, இருள் நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி,  ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின், அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும், ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெறவேண்டும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, அவர்கள் வாழ்ந்திடவேண்டும் நளாயினி போன்று, ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும், என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே, நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். 

காலையில், இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது, அனைவரது உடல்களிலும் பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது அவை தடைபெற்று விடும்.  இந்தப் பரமாத்மாவில், (காற்று மண்டலத்தில்) மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.

ஒரு புழு, ஒரு விஷச்செடியைத் தனது உணவாக உட்கொண்டால், அதனின் உணர்வின் எண்ணங்கள், புழுவினுள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால், அதை உணவாக உட்கொள்ளும் அந்த குணத்தின் தன்மை கொண்டு, அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும். ஆனால், அதே புழுவின் உயிர், இந்த குருவியின் தன்மைக்கு வந்திருக்கும். இதைப் போன்று, பல கலவைகள் கலந்தே,  நாம் வந்துள்ளோம்.

ஒன்றைக்  கொல்கிறது, ஒன்றை வளர்க்கின்றது. ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும், விஷத்தை விஷத்தாலே, தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.

விஷச் செடியில் புழுக்கள் உருவாகின்றது, அதைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று, குருவியின் ரூபத்தை அடைகின்றது. ஆனால், அந்த உணர்வின் தன்மை, விஷத்த்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.

ஆக, இன்று பிறிதொருவரிடம் தொடர்பு இல்லை, என்று, ஒருவரும் இருக்க முடியாது. யாரும், பிரிந்து தனியாக இல்லை.  ஒருவன் உங்களைச் சபித்து, அதை உங்களிடம் பதிவாக்கி விட்டான் என்றால், அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.

நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால், நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது. இதைப் போன்று,
நாம் ஒருவரோடு ஒருவர் பேசினாலும்,
அவர்களின் உணர்வுகளும், நமக்குள் உண்டு.
இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி,
உங்களை இணைத்துக் கொண்டிருக்கும்.
பாவிப்பயல்,  இப்படிச்  செய்துவிட்டான் என்று
உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பர்களாக இருந்து,  ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும், இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான் இருக்கிறீர்கள். ஆக, நன்மையின் நிலை வரும் பொழுது, இரண்டு பேருக்குமே நன்மையாகி விடுகின்றது.

இரண்டு பேரும், தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும் கூட, இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை. உங்கள் நண்பரின் நிலைகளில்,  எதை அதிகமாக உங்களில் பதிவாக்கியிருக்கின்றீர்களோ, அதன் உணர்வுகளின் தன்மை, உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆக,  நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ, பேசினோமோ, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது எண்ணி, அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், மெய்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும்  என்று எண்ணி, இந்த உணர்வுகளை, நமக்குள் வளர்க்க வேண்டும்.

மேலும்,  அவர்கள் குடும்பத்தில் கணவனும், மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திடவேண்டும், நளாயினி போன்று ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும், என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அவர்களுடைய குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும், அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்கவேண்டும், என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து, இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.
 அவர்கள் வளர்ச்சி பெறவேண்டும்  என்ற உணர்வுகள்
நமக்குள் விளையும் பொழுது,  நமக்குள் அந்த நிலைகள்
தானாகவே வளரும் தன்மை பெற்று,
வளர்ச்சி அடைகின்றது.

நாம் சந்தித்தவர்களின் உணர்வுகளும், நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில், அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும், என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும்பொழுது, நம்மிடத்தில் உள்ள தீமை என்ற உணர்வுகள் மறைந்துவிடுகின்றன. அதே சமயத்தில், அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளை பெறுகின்றார்கள்.

யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய, அருள் வாக்கினை நீங்கள் நினைவு படுத்தும் பொழுது, இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும். 

அது உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்பொருளை அறிந்திடும் நிலையைப்  பெறச் செய்யும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில் பெருகி, தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது,  உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும், நல்மணமும் பெருகி வளர்வதற்கு,  எமது அருள் ஆசிகள்.


IMG_5517.JPG

(மே 1997)
உணர்வின் மணமே, மனிதரின் மனம் ஆகும்.
நற்குணங்களின் உணர்வே
மனிதருள் நறுமணத்தைச் சேர்க்கும்.

மெய்ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை, யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம். ஆனால், உபதேசத்தைக் கேட்கும் பலர், என்றைக்குத்தான் நாம் இதைப்  புரிந்து கொள்ளப் போகின்றோமோ, என்று இதையும் விட்டு விடுகின்றார்கள்.
இருப்பினும், இதைத்  திரும்பத் திரும்ப, யாம் உங்களுக்கு நினைவுபடுத்தித் தான் ஆகவேண்டும்.
நம்மை, நமது உணர்வுகள்
எவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளது? என்பதை
ஒவ்வொரு கோணங்களிலும்,
உங்களை உணரச் செய்து கொண்டுள்ளோம்.

நாம் அன்பு, பண்பு, பாசம் கொண்டு பிறருக்கு உதவி செய்தாலும், இந்த உயர்ந்த உணர்வுகள் கொண்டு அவர்படும் துயரத்தை உணர்ந்து, நுகர்ந்து அறியப்படும் பொழுது, அது உயிரினில் மோதி, உடல் முழுவதும் படர்கின்றது. குளவி புழுவைக் கொட்டியது போன்று அவர்படும் வேதனையின் உணர்வை நுகர்ந்து அறியும் பொழுது, அவைகள், இந்த உடலை உருவாக்கிய, அணுக்களை எல்லாம் தாக்குகின்றன.

பின், அந்த வேதனையின் உணர்வின் தன்மை நமது நினைவுக்கு வருகின்றது. அதனின் அணுவின் தன்மை, நமக்குள் உருப்பெறுகின்றது. நமது உடல், நம்மை அறியாமல் நலியத் தொடங்குகின்றது.

இந்த விஷத் தன்மைகள் நம்மைச் சார்ந்தோரிடமும் பரவுகின்றது. இதையெல்லாம் நீக்குவது யார்? நீக்கும் வழிமுறை என்ன? என்பதை நமது வேதங்கள், நமக்குத்  தெளிவாக கூறுகின்றன. அதனை நாம் அறிதல் வேண்டும்.

வேதனையின் உணர்வை வளர்த்தவர்கள் ஞானிகளையோ, பெரியோர்களையோ காணும் பொழுது, அவர்களிடம் தங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லி விக்கி, விக்கி அழுவார்கள். குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை எல்லாம் கூறி, எனக்கு இப்படி இருக்கின்றதே, இதிலிருந்து எனக்கு விமோசனம் கிடையாதா?  என்று சொல்லி அழுவார்கள்.

ஆனால், அந்த ஞானியின், பெரியோரின் நல்ல உணர்வுகளை நமக்குள் இணைக்க வேண்டும் என்ற எண்ணமே எழாது.

பெரியோர்களை தரிசனம் செய்து பாத நமஸ்காரம் செய்தால், எல்லாம் நல்மாக இருக்கும், அழுது புலம்பினால், அவர்களுடைய ஆசி கிடைக்கும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால், இவர்கள் எடுத்துக் கொண்ட துயரத்தின் தன்மையானது நல்லதை நுகரவிடாது, துயரத்தைத்தான் அதிகமாக கூட்டும், நல்லதை வளர்க்கவே விடாது. பாத நமஸ்காரம் செய்வதனாலும் பலனில்லை.

ஆக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நான் பெறவேண்டும், என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும். ஞானிகள் கண்டுணர்ந்த, மெய்பொருள் உணர்வுகள், என்னிலே விளைய வேண்டும்.

என் செயல் அனைத்தும், புனிதம் பெறவெண்டும், என் பார்வை, அனைவரையும் நலமாக வைக்கும் நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஏங்கி,  ஞானிகளை உற்றுப் பார்த்து, அந்த உணர்வினைப் பதிவாக்கி, அவர் உடலிலிருந்து வரும் உணர்வை எவர் நுகர்கின்றனரோ, அவரே நல்நிலை பெறுவர்.

ஆனால், யார் அப்படி செய்கின்றார்கள்? ஆனாலும், ஞானிகளைப் பார்த்ததின் உணர்வை நுகரப்படும்பொழுது, அவர்கள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகள், அணுக்களாக நமக்குள் விளைகின்றது.

அவருடைய உடலில் விளைந்த மெய் உணர்வின் அலைகள், நம்மிடத்தில் படர்கின்றது. அவர் பார்த்துணர்ந்து அறிந்த உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது. 

அவ்வாறு அணுக்களாக நமக்குள் மாறிவிட்டால், அது தன் இரையை எடுக்கின்றது. அப்பொழுது,  அவருடைய உடலில் விளைந்த ஞானத்தின் உணர்வுகள் வெளிப்படும்பொழுது, நாம் நுகர்ந்தறிவதனால் அது, நமக்குள் விளைகின்றது.

அந்த ஞானத்தைப் பேணிக் காக்கும் அணுக்கள், நமக்குள் வளர்கின்றது.  அந்த ஞானத்தின் உணர்வு, நமக்குள் அணுக்களாகப் பெருகுகின்றது. 

ஆகையால், நாம் பெரியோரிடத்தில் ஆசி பெறும் பொழுது, இந்த முறைப்படிச் செயல்படுத்த வேண்டும்.

வீட்டில் சொத்து, சுகம் நிறைய இருக்கும். தொழிலுக்கு என்று கணவன் கேட்கும் பொழுது, மனைவி வீட்டில் இருக்கும் நகைகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து விடுவார்கள். தொழில் நசிந்து, வீட்டில் இருக்கும் நகைககள் எல்லாம், கையை விட்டுப் போயிருக்கும்.

இந்த நிலையில், பக்திகொண்டு கோயிலுக்குச் சென்றால், அங்கே, தெய்வச் சிலைக்கு அணியப்பட்டிருக்கும் நகைகளைப் பார்க்கும் பொழுது அழுகைதான் வரும்.

நான் இவ்வளவு நகை வைத்திருந்தேனே, எல்லாம் போய்விட்டதே, நீயும் சோதிக்கின்றாயே, என்று அழுவார்கள். தெய்வச் சிலைக்கு அணியப்பட்டுள்ள வைரங்கள் ஜொலித்தாலும், இந்த துன்பத்தின் நிலைகள் வரும்பொழுது, அது நிற்காது. கழட்டிக் கொடுத்தேன், போய்விட்டது என்ற நிலைகள்தான், வரும்.

உடல் உழைப்பும், திறமையும் கொண்டுதான் நம்மிடத்தில் செல்வம் வருகின்றது. அந்த செல்வத்தின் தன்மை நமக்குள் வளர்ந்தாலும், சிறிதளவு குறைகள் இருந்தாலும் வீட்டில் கௌரவக் குறைச்சல் வந்துவிடும். 

எனக்கு இப்படிச் செய்தார்கள், எனக்கு அப்படிச் செய்தார்கள் என்று சொல்லிக் குறைப்படும் பொழுது, செல்வத்தைக் காக்கும் தன்மையே, போய்விடுகின்றது.

அந்த வேதனையின் உணர்வு உடலில் வளரும் பொழுது, நோயின் பெருக்கமும் அதிகமாகின்றது. நோயின் பெருக்கம் அதிகமாகும் பொழுது, இது என்ன  என்று அலட்சியப்படுத்தும் தன்மை வருகின்றது.

மக்கள் அனைவருக்குள்ளும், உயர்ந்த பண்புகளை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில், தெய்வச் சிலைகளுக்கு வைரக் கிரீடங்களை அணிவிக்கின்றார்கள். வைர ஒட்டியாணம் மாற்றுகின்றார்கள். பள பள வென்று மின்னும் நகைகளை அணிவிக்கின்றார்கள்.

இவைகளை எல்லாம் பார்க்கும் நாம் எப்படி இருக்கவேண்டும்?
சங்கடம், சலிப்பு, வெறுப்பு இவைகளை நீக்கி,
சிலைக்கு அணிவிக்கப்பட்ட வைரம்
எப்படி ஜொலிக்கின்றதோ,  அதைப் போன்று,
என்னுடைய சொல்லின் நிலைகள் ஜொலிக்க வேண்டும்,
என் சொல்லைக் கேட்போர் வாழ்வில்,
அந்த ஜொலிப்பு ஏற்படவேண்டும்,

என் பார்வையின் நிலைகள், அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும்.  என் குடும்பத்தில் மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி,  இதை நுகர்ந்தால் அதனின் உணர்வின் அணுக்கள், நம்முள் விளையும்.

வைரமோ விஷம் கொண்டது. மின்னிடும் இயல்பு கொண்டது. அதைத் தட்டி சாப்பிட்டால் நம்மைக் கொல்கின்றது. ஆக,
மின்னும் அணுவின் நிலையை,
கண்ணுற்றுப் பார்த்து,
அந்த உணர்வின் நிலையை நாம் நுகர்ந்து,
அந்த உணர்வைப் பெறவேண்டும், என ஏங்கி எண்ணும் பொழுது, இந்த உணர்வின் தன்மை, 
மின் அணுவாக மாறி,
உடலில் விளைந்த விஷத்தை ஒடுக்கி,
உணர்வின், ஒளியின் அறிவாக
வளரச் செய்வதற்குத்தான், வைரக் கிரீடம்.

ஏராளமான நகைகளுடன் வெங்கடாசலபதியின்  படம் போட்டு ருப்பார்கள். அவனை வணங்கும் பொழுது, அவனுக்குக் காசு கொடுத்தால் நிறையப் பணம் கொடுப்பான், என்ற எண்ணம்தான் வருகின்றது. 
வெங்கடாசலபதி எனும் பொழுது, 
நம்மை ஆட்சி புரிபவன் நமது உயிர், 
நமக்கு அதிபதி.  அதில் நாம் எத்தகைய உணர்வை இணைக்க வேண்டும்? எந்த உணர்வாக, நமக்குள் இயக்கப்பட வைக்க வேண்டும்? என்பதைத்தான் காவியமாகப் படைத்துள்ளார்கள்.

ஆக, அன்று ஞானிகள் பொருள் செல்வத்தை விரும்பவில்லை. ஒளியின் சுடராக, நமக்குள் அருள்ஞானத்தை வளர்த்தோம் என்றால், நம் சொல் இனிமை பெறும். இருளைப்  போக்கிடும் அருள்ஞான உணர்வுகள் நம்மில் பெருகிடும், என்ற இந்த உண்மையின் உணர்வைப் பெறும் நிலையாக,  துவைத நிலை கொண்டு சிலை வைத்தார்கள்.

திருவேங்கடம்,  இந்த உடலை ஆட்சி புரிபவன்
உயிர்,  என்ற நிலைகளுக்கு காரணப் பெயர்  சூட்டி,
சிலையாக உருவாக்கி,
உணர்வின் காவியமாகத் தீட்டி,
கருத்தினைப் பதிவு செய்து,
சிலையை உற்று பார்க்கச் செய்து,
அதனின் கருத்தை,  உணர்வை நுகரச் செய்து,
நுகர்ந்த உணர்வை  உயிருடன் இணையச் செய்து,
இந்த உணர்வின் அலைகளை, நமது உடல் முழுவதும் படரச் செய்தனர்.

சிலைக்கு அணிவிக்கப்பட்ட,  வைரங்களின் ஜொலிப்பினை கண்ணால் பதிவாக்கப்பட்டு, நினைவின் ஆற்றல், உயிருடன் ஒன்றப்படும் பொழுது, இந்த உணர்வின் ஒளிக்கதிர்கள் நமது உடலில் ஊடுருவி, நமது ஒவ்வொரு அணுவிலும் "பளிச்சிடும்" உணர்வுகள் விளைகின்றது.

எப்படி விஷத்தின் தன்மைகள் மோதி, ஒளியின் சுடராக மாறுகின்றதோ, இதைப் போன்று அதன் உணர்வின் தன்மை, நம்முள் வேதனையின் உணர்வின் தன்மையை ஒடுக்கி, நமது உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு,  நீங்கள் உங்களை நலியச் செய்யும்,  மயங்கச் செய்யும், வேதனையான உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடம் தராது,  மகிழ்ச்சியைப் பெருக்கி, அஞ்ஞானத்தைப் போக்கி, பேரின்பப் பெருவாழ்வை பெறச் செய்யும் அருள்ஞானிகளின் உணர்வை,  உங்களுக்குள் இணைத்து, உயிரான்மா அழியா ஒளிச் சரீரத்தினைப் பெறும் நிலையாக உங்களில் உணர்வுகளை வளர்த்து, குடும்பத்தில் ஒற்றுமையுடனும், தொழில் வளத்துடனும், செல்வச் செழிப்புடனும், மலரைப் போன்ற மணத்துடனும், மகிழ்ந்த உணர்வுகளுடனும், என்றும் பேரின்பப் பெருவாழ்வுடனும் நீங்கள் வாழ்ந்து வளர்வதற்கு,  எமது அருள் ஆசிகள்.

ஆதியில்,  பேரண்டத்தில் பரவியிருந்த  ஆற்றல்கள் சக்தி.
ஆற்றல்களின் இயக்கத்தொடர் கொண்டு,  உருவான பொருள்  பரமசிவம்.

சிவமான பொருளில் விளைந்து, வெளிப்படும் உணர்வுகள் மற்றொன்றுடன் மோதி, புதுப் பொருளாக, புது ஆற்றலாக உருவாகின்றது. இப்படி,
சக்தியின் துணை கொண்டு, சிவமும்
சிவத்தின் துணை கொண்டு, சக்தியும்
பேரண்டத்தில் வளர்ச்சி நிலை கொண்டு புதுப்புது நிலைகளாக வெளிப்படுகின்றன.  சக்தியும், சிவமும் ஒன்றுக்கொன்று துணை கொண்டு, வளர்ச்சி பெறுவதால் ஞானிகள்,  
சக்தியில்லையேல் சிவமில்லை,  
சிவமில்லையேல் சக்தியில்லை  
என்று காவியங்களில் உரைத்துள்ளார்கள்.


(ஜூன் 1997)
பேரண்டத்தில், இருப்பதற்கு இல்லாமை கிடையாது இருப்பவைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கலந்து, இணைந்து, புதுப் புது நிலைகளக உருமாற்றம் பெற்றுக் கொண்டேயிருக்கும்.
அனைத்திற்கும் மூலமாக இருப்பது,
விஷம், வெப்பம், காந்தம், மணம், உணர்வு.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உபதேசித்து உணர்த்திய அருள்வழி கொண்டு, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை  உங்களில் நுகரச் செய்வதற்கும், இந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கும்  யாம் உங்களுக்கு உபதேசித்து வருகிறோம்.

ஏனென்றால், யாம் உபதேசிக்கும் உணர்வுகள், உங்களுடைய செவிப்புலன்களில் உந்தப்படும் பொழுது,
கண்ணின் உணர்வலைகள்,
ஈர்க்கும் சக்தி பெறுகின்றது,
பதிவாக்குகின்றது,
உணர்வினை நுகரச் செய்கின்றது,
உயிருடன் உராயச் செய்கின்றது,
உணர்வின் அலைகள், உடலில் படர்கின்றது.

இதில் நமது கண்கள் புறக் கண்களாகவும், நமது உயிரின் உணர்வுகள் அகக் கண்ணாகவும் இருந்து, நாம் நுகர்ந்த உணர்வுகளை நமக்கு உணர்த்துகின்றது, அதன் அறிவாக இயக்குகின்றது. நுகர்ந்த அணுவை, உயிர்  அதே அணுவாக மாற்றுகின்றது. அதனின் மலமாக, நமது உடலாக மாற்றுகின்றது.
(ஆகஸ்ட் 1997) 
ஆதிமூலம் என்ற உயிர், தான் பெற்ற பல கோடிச் சரீரங்களில், தன்னைக் காத்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து, ஜீவ அணுவுக்குள் ஜீவ அணுவாக மாற்றி, தீமையின் உணர்வுகளை வென்று, இன்று தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு, நாயகனாக மனித உடலை உருவாக்கியது,  இது விநாயகா.

ஆகவே, விநாயகருக்கு ஆதிமூலம் என்று பெயர். அதே சமயத்தில், ஓம் என்ற பிரணவத்திற்கே உரியவன் விநாயகன். நாம் எந்த குணத்தை சுவாசிக்கின்றோமோ, அது வினையாகின்றது, பின், அதுவே வினைக்கு நாயகனாக உருப்பெருகின்றது.

உதாரணமாக, சாந்த உணர்வு கொண்ட மான், தான் எந்தப் புல்லின் தன்மையை தனக்குள் நுகர்ந்ததோ, அந்த மணத்தின் ஞானமாக அதன் அணுக்கள் பிரம்மமாகின்றது. அதன் சக்தியாகி, பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அதன் மணத்தின் தன்மை கொண்டு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. தான் சுவாசித்த உணர்வுகள் எதுவோ, அதன்வழி அந்த உடலை  இயக்குகின்றது, இயங்குகின்றது,  காக்கின்றது,  உருவாக்குகின்றது.

ஒரு புலி, இந்த மானை நுகரப்படும்பொழுது, மானின் சாந்த உணர்வுகள் புலிக்குள் அடங்கிவிடுகின்றது, உதாரணமாக,  ஒரு மிளகாயை அரைத்துச் சப்பென்றிருக்கும் ஒரு பொருளுடன் கலந்தால், அந்த காரத்தின் நிலைக்கு, சப்பென்றிருக்கும் பொருள் தன்னை மாற்றிக் கொள்கின்றது. 

இது போன்று, புலி, மானின் சாந்த உணர்வுகளை நுகரப்படும்பொழுது, மானின் சாந்த உணர்வுகள், புலியின் உணர்வுக்குள் ஒடுங்கி விடுகின்றது. அதன் வழி கொண்டு, மானின் உணர்வுகள் புலியினுள் அடக்கமாகின்றது.

மானோ, புல்லைப் பார்த்து அதனின் மணத்தை நுகர்கின்றது. நுகர்ந்துகொண்ட உணர்வின் மணம், மானுக்கு வாகனமாக அமைந்து, புல் இருக்கும் பக்கம் மானின் உடலை நகர்த்திச் செல்கின்றது.
புலியோ, கடினமான உணர்வுகள் கொண்டது.
புலி, மானை நுகர்ந்தபின்,
மானின் சாந்த உணர்வுகள், புலிக்குள் ஒடுங்குகின்றது.
மான், புலியை நுகரப்படும் பொழுது,
புலியினுடைய கடுமையான  உணர்வுகள்,
மானின் சாந்த உணர்வுக்குள் சேர்ந்து கொண்டபின்,
புலியின் கடுமையான உணர்வுகள்
மானின் சாந்த உணர்வுகளை,  அடக்கும் சக்தியாக மாறுகின்றது.


ஏனென்றால், சாந்த உணர்வின் தன்மை, அணுவாக என்று இயக்கினாலும்,
ஒமுக்குள் ஓம்.
புலியின் உணர்வுகளானது கடுமையாக்கப்படும் பொழுது,
சாந்த உணர்வுக்குள் நின்று,
அதன் அணுவின் தன்மை இதையும் இயக்கி,
இதை அடக்கும் போர் முறை கொண்டு,
இந்த அணுத்தன்மை, அதற்குள் துடிக்கும் வேகத்தைக் கூட்டுகின்றது.

ஒரு கடினமான பொருள் மற்றொன்றை வேகமாகத் தாக்கும் பொழுது, வெப்பம் உருவாகின்றது. அதுவே, ஒரு உயிரினத்தில் என்றால் வலியும், வேதனையும் அதிகரிக்கின்றது.

இதைப் போன்று, வேகத்தின் உணர்வுகள் ஒன்றைத் தாக்கப்படும் பொழுது, அது அந்த உணர்வுக்குள் ஊடுருவி, அந்த அணுவின் தன்மையை அடைந்து,  அதனை அடக்கும் தன்மை பெறுகின்றது.
ஆக, அந்த அணுவுக்குள் ஓமுக்குள் ஓம்  ஆக மாறி,
அதை அடக்கி, அதனுள் இது அடங்கி
அதனின் செயலாக்கத்தை குறைக்கின்றது.

ஆக, சாந்த குணமும், சாந்த குணங்களும் அது வளர்க்கும் தன்மை இழந்து, காரத்தின் உணர்வுகள் அதனுள்
          ஓமுக்குள் ஓம்,  
ஓமுக்குள் ஓம்,  
ஓமுக்குள் ஓம்
என்ற நிலைகளில் வளரப்படும் பொழுது,  இதனின் சாந்த உணர்வுகள், சிறிது சிறிதாக ஒடுங்கிவிடுகின்றது.

மானின் சாந்த உணர்வுக்குள், புலியின் உணர்வுகளானது இயக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் வேகங்கள் கணங்களுக்கு அதிபதியாகின்றது.
மான் எதை வலுக் கொண்டதாகச் சுவாசித்ததோ, அதற்கு அடிமையாகி, எந்த புலியின் உடலில் வேகமான நிலைகள் அமைந்ததோ, இந்த மானின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா, புலியின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்று, அதன் உணர்வைக் கருவாக்கி முட்டையாகி விடுகின்றது. பின் புலிக்குட்டியாகின்றது. மான் இவ்வாறு புலியாக மாறுகின்றது.

இதையெல்லாம்  நாம் தெரிந்து கொள்வதற்காக, ஞானிகள் தத்துவ நிலைகளில் இதனைத் தெளிவாக்கி உள்ளனர். ஞானிகள் சொன்னதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.  சாமி என்னவோ சொல்கின்றார், நமக்குப் புரியவில்லை என்று சொன்னால், நமக்குப் புரியாமலே போய்விடும். 

இதை, நாம் புரியும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால், இந்த உணர்வுகள் மீண்டும் உங்கள் நினைவிற்கு வரப்படும் பொழுது, அதனின் உண்மையை, அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.

ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு,  நாம் மனிதனாகப் பிறந்த வழியைத் தெரிந்து கொண்டால்,  இந்த மனித வாழ்க்கையில்
எதைச் சேர்க்கவெண்டும்?
எதை வளர்க்க வேண்டும்?
எதை சுவாசிக்க வேண்டும்?
எதை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்?   
என்ற உணர்வுகளை உங்களில் பெற முடியும். 

இந்த மனித வாழ்க்கையில்,  ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நமக்குள் பெற்று, மகிழ்ந்து வாழ்ந்து, முழுமை பெற்று, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ந்து வாழச் செய்து,  மகரிஷிகள் சென்றடைந்த அந்த சப்தரிஷி மண்டலத்தை, நாம் அனைவரும் அடையலாம். மனிதனாகப் பிறந்ததின் பலனை ஒவ்வொருவரும் அடைய முடியும்.


(ஆகஸ்ட் 1997)
நஞ்சான தீமைகளை, ஒடுக்கக் கற்றுக் கொண்டவர் அகஸ்தியர். அவர் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, இன்றும் ஒளியின் சிகரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஒளியலைகள், சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பூமியில் படர்வதை, நாம் நம்முள்  கவர்ந்து, அந்த உணர்வின் சத்தை, நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்றால், அருள் மகரிஷியான துருவ மகரிஷியைப் பின்பற்றி, மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களைப் போன்று, நாமும், இந்த அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தை ஒடுக்கி, உணர்வின் சக்தியாக மாற்றிடும் சக்தியினைப் பெறுகின்றோம்.

ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் நாம் சாந்த குணம் கொண்டு, துன்பப்படுவோரை நுகர்ந்தறியப்படும் பொழுது, அது நமது நல்ல அணுக்களில் ஊடுருவி, என்று இயங்கத் தொடங்கிவிடும். இது தான் ஓமுக்குள் ஓம்,  அது, இதை அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

இப்படி, பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக ஓமுக்குள் ஓம் என்ற நிலைகள் கொண்டு, எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றிய நமது உயிர்,  கடைசியில் மனித உருவை உருவாக்கியது.

            நமது உயிரான்மாவை, ஒளிச் சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற இந்த மனித சரீரத்தை அலட்சியப்படுத்தாமல்,  நாம் நமது உயிரை மறந்து விடாமல்,  இந்த மனிதப் பிறவியை, நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக எண்ணி,  
இந்த மனிதச் சரீரத்தை உருவாக்கிக் கொடுத்த,  
நம் அன்னை, தந்தையை முதல் கடவுளாக வணங்கி,
அவர்களது ஆசியின் துணைகொண்டு
மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து,
நம்முள் தீமைகள் வராது தடுத்து,
நம்முள் சேர்க்கும் உணர்வுகளை,
ஒளி பெறும் உணர்வுகளாகச் சேர்க்க வேண்டும்.

(அக்டோபர் 1997)
மாமகரிஷி அகஸ்தியர், நமது பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்து நிலைகளையும் தமக்குள் அதிபதியாக்கி, தமது வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்று, தம்முள் வரும் அனைத்து உணர்வின் தன்மைகளையும் அடக்கி, தம்முள் ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெற்றவர்.

துருவத்தின் ஆற்றலைத் தம்முள் கண்டுணர்ந்த அகஸ்தியர், அதனைத் தம் இன மக்கள், அனைவரும் பெறவேண்டும் என்று, பேருண்மையின் தத்துவங்களை வெளிப்படுத்தினார்.

இந்தப்  பிரபஞ்சத்தில் ஒரு உயிரணு, தான் நுகர்ந்த உணர்வுகளை எப்படி அணுக்களாக உருவாக்குகின்றது? அந்த அணுக்களுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது?  என்பதை அறிந்து உணர்ந்தவர் அகஸ்தியர்.

அகஸ்தியர் இந்தப் பிரபஞ்சத்தையும், பூமியையும் ஒப்பிட்டு, அந்த உணர்வின் தன்மையை தம்முள் வளர்த்தார்.
மெய்யுணர்வை உணர்ந்த அகஸ்தியர்,
அதைத் தாம் நுகரப்படும்பொழுது,
அது அவருக்குள் அணுவாக உருவாகின்றது.
அவருக்குள் உருவான அணுக்கள்,
அறிந்திடும் உணர்வை, உணவாக எடுக்கும் சக்தி பெறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை,  அவருக்குள் வளர்ச்சி அடைந்த பின்,
அவர் துருவத்திலிருந்து வரும் ஆற்றலை அறிந்து,
அதனை தமக்குள் வலு பெறச் செய்தார்.
அவர் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும், அவருடைய இரத்தத்தில் கருமுட்டைகளாக வளர்ந்து,  அவருடைய உடல் முழுவதும் பரவியது. பின், அவைகள் அவருக்குள் உயர்ந்த அணுக்களாக உருவாகியது.

நாம் நுகர்ந்த அணுக்களை, நமது உயிர் நமது உடலுக்கு எப்படி அறிவிக்கின்றதோ, இதைப் போன்று,
அகஸ்தியருக்குள் இருக்கும் அணுக்கள்,
தனக்குள் வரும், நஞ்சினைப் பிரித்துவிடும் உணர்வினை, வலுகூட்டி, தனக்குள் நுகர்ந்த உணர்வினை,   ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

இன்று நீங்கள் மின்மினிப்  பூச்சிகளைப் பார்க்கலாம். அது, தான் நுகர்ந்த மூச்சலைகள் மோதியபின், வெளிச்சம் தருகின்றது. அது எப்பொழுதும் மின்னிக் கொண்டேயிருக்கும். இதைப் போன்று,
அருள் ஒளியின் உணர்வை அணுக்கள், தனக்குள் சேர்க்கப்படும் பொழுது, மின் அணுவாகத் துடித்துக் கொண்டிருக்கும்  இந்த உணர்வின் அலையை, ஆன்மாவாக மாற்றும் பொழுது, தீமை என்ற நிலைகளைப் பிளந்து தள்ளுகின்றது. இதன் வழிகொண்டு, தனக்குள் தீமை இல்லாத நிலைகளை, உருவாக்குகின்றது.

உதாரணமாக, சீராகத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும், தங்களிடத்தில் பார்க்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்த நீங்கள், இரவிலே திடீரென்று விழித்தீர்கள் என்றால், உங்கள் உடலில் இருந்து, வெளிச்சம் வருவதைக் காணமுடியும்.

ஏனென்றால்,  நீங்கள் தியானித்த உணர்வுகள், உங்களில் மின்னிக் கொண்டேயிருக்கும். திடீரென்று விழித்தவுடன், அந்த உண்மையின் உணர்வை, நீங்கள் அறிய முடியும். அகஸ்தியர் இதைப் போன்றுதான், தமக்குள் ஒவ்வொரு அணுவையும், ஒளியாக மாற்றியவர்.

இதன் வழி கொண்டு, அகஸ்தியர் தமக்குள் பெற்ற சக்தியால், இந்த பிரபஞ்சத்தையும், இந்த பிரபஞ்சம் அது, தான் எடுத்து விளைந்த உணர்வின் தன்மையை,
நமது பூமி எடுத்து வாழ்வதையும்,
இந்த பூமியில் வாழும் தாவர இனங்களையும்,
கல்லையும், மண்ணையும் மற்றும் உயிரணுக்கள்
எப்படித் தோன்றியது என்பதையும்,
தாவர இனத்தின் மணங்கள் எவ்வாறு இருக்கின்றதோ,
அதற்கேற்ப குணமும், அதற்கேற்ப செயலாக்கங்களும்
ஒவ்வொரு உயிரினங்களிலும் எப்படி இருக்கின்றது
என்பதையும், அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.

            இவ்வாறு, அகஸ்தியர் தாம்  பேருண்மையின் தன்மைகளை அறிந்து, அதனின் ஆற்றலை வளர்த்து வரும் சமயம், தமது பதினாறாவது வயதில் திருமணமாகி, (பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், அக்கால வழக்கப்படி) தன் மனைவிக்கு,  தான் கண்ட பேருண்மைகள் அனைத்தையும், போதித்தார்.

அவ்வாறு போதித்த உணர்வு, அது உயர்ந்து பெருகுகிறது என்ற நிலையை ஊட்டி, தன் மனைவி உயர வேண்டும், அந்த அருள் ஒளியால்,  எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்,  இரு மனமும் ஒன்றி, எங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை உருவாக்க வேண்டும், என்று அகஸ்தியர் எண்ணினார்.

இப்படி இருவரும் சேர்ந்து, தாங்கள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு,  துருவத்தில் இருந்து கவர்ந்த உணர்வை, தங்களிடத்தில் ஒளியின் தன்மையாக மாற்றினார்கள். துருவ மகரிஷி  என்ற, உருவாக்கும் ஆற்றல் கொண்ட, ரிஷி என்ற நிலை அவர்களிடத்தில் உருவானது.

அருள் ஒளியின் உணர்வைத் தான் பெறவேண்டும் என்றும், அது தன் மனைவியும் பெற்று வளர்ந்து, தன் மனைவி உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்றும்,  இரு உணர்வும் ஒன்றிய பின், உணர்வின் அணுக்களை, ஒளியின் சரீரமாக மாற்றிடும் திறன் பெற்றனர். 

இவ்வாறு, எதனைக்   கூர்மையாக உற்றுப் பார்த்து, வளர்த்துக் கொண்டனரோ, அதன் நிலை கொண்டு, இந்த உடலை விட்டு அகன்ற பின்,  துருவ நட்சத்திரமாக  ஆனார்கள்.

அகஸ்தியர், அவரது மனைவி இருவரும் தங்களுக்குள் சிருஷ்டித்து, துருவ நட்சத்திரமான நாள்தான், விநாயக சதுர்த்தி. அவர்கள் இந்த மனித வாழ்கையில் வரும் தீய வினைகளை நீக்கி, அருள் ஒளியை தங்களிடத்தில் வளர்த்துக் கொண்ட நன்னாள்தான்,  விநாயக சதுர்த்தி.

அதிகாலை 4.00 மணிக்கு, சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தாங்கி, பிரபஞ்சத்தின் மேல் பரப்புகின்றது.
அவ்வாறு பூமியில் பரவும் நேரங்களில், நாம் துருவ மகரிஷிகளை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ணி, அந்த உணர்வுகளை  நம்முள், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த அருள் சக்திகளை, நம் உடலை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிற்கும், உணவாக கொடுத்துப்  பழக வேண்டும்.

இவ்வாறு,  நாம் தொடர்ந்து செய்து வந்தால்அகஸ்தியரும், அவருடைய மனைவியும்,  எப்படி, என்றும் பதினாறு என்று, இன்றும் மகிழ்ந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்களோ,  அந்த நிலையை  நாமும் அடைய முடியும்.  அந்த நிலையை அடைய, எண்ணி ஏங்கி தியானிக்கும் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.



(அக்டோபர் 1997)
கண்வழி உற்றுப் பார்க்கும் உணர்வுகள், நமக்குள் பதிவாகிவிட்டால் ஊழ்வினை என்ற வித்தாகின்றது, வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது.

வேதனைப்படும் ஒரு மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வேதனையின் உணர்வை, கண்ணின் கருவிழியுடன் இணைந்த காந்தப் புலனறிவு  நுகரச் செய்கின்றது. வேதனைப்படுகிறான் என்ற உண்மையை அறிகின்றது. ஆனாலும்,  நமது உயிர்,  நாம் நுகர்ந்த உணர்வை ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

நாம் எந்த குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ, உணர்கின்றோமோ, உணர்த்துகின்றோமோ இந்த உணர்வுகள் நமக்குள் அணுக்கருவாக உருவானபின், நமது இரத்த நாளங்களில் செலுத்தப்படுகின்றது. எந்த குணத்தின் தன்மை நமக்குள் கருவானதோ, அது, நமக்குள் சுழன்று கொண்டே இருக்கும்.

நமக்குள் கருவாகும் அந்த முட்டை, நம் உடலுக்குள் சுழன்று வரப்படும் பொழுது, எந்த பாகத்தில் இதற்கேற்ற நிலை உள்ளதோ,  அங்கே அந்த அணுவின் தன்மை வளர்ச்சியாகி, அந்தத் தசையுடன் ஒட்டுகின்றது. 
நுரையீரலோ, தசையோ அல்லது ஏதோ ஒரு பாகத்தில் ஒட்டிக் கொண்டபின்,  நத்தை தன் ஓட்டுக்குள் இருந்து, தான் சுவாசித்து வாழ்வது போன்று, இதைப் பாதுகாப்பாக வைத்து, அந்த அணு, தன் உணர்ச்சிகளை உந்துகின்றது.  இந்த உணர்வின் ஒலியலைகள், நமது இரத்தங்களில் ஒலி அதிர்வுகளாகச் செல்லும்.

நாம், எங்கேயெல்லாம் செலுத்துகின்றோமோ
அதன் உணர்ச்சிகளை ஊட்டி,  
நினைவுபடுத்தி இயக்கும், சிறுமூளை பாகங்களில் தாக்கப்படுகின்றது.
அப்பொழுது அந்த உணர்ச்சிகள் தெரிகின்றது.

சிறுமூளை பாகமோ,
நம் கண்ணுக்கும், செவிக்கும் ஆணையிடுகின்றது.
வாயிற்கும் அந்த சுவையின் உணர்வை உணர்த்துகின்றது..
உடல் அனைத்திற்கும் அந்த உணர்வுகள் தெரிவிக்கின்றது.
கண்ணோடு இணைந்த காந்த புலனறிவு, யார் வேதனைப் பட்டாரோ
அவருடைய உணர்வுகளைக் கவர்ந்து
தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.