ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2021

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.

கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.

இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.

இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.

நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.

1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.

இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.

காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

செயற்கையின் பிடியிலிருந்து மீளுங்களப்பா…! - ஈஸ்வரபட்டர்

  

இப்புவியின் நாதமான ஓ…ம்… என்ற நாத அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒலி பிறக்கின்றது.

அமிலச் சுவையின் ஒலி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒலி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.

இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை… குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.

சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.

செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.

ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.

அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.

அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தை தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.

1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் என்று ஏற்கனவே சொன்னேன்.

ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பி பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.

மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே...!

சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.

இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே…
1.ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற
2.“இச்செயற்கைப் பிடியிலிருந்து மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”

September 17, 2021

பிறிதொருவரின் இயக்கமாக நாம் இயங்கிவிடக் கூடாது

 

அன்றாட வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ போன்ற உணர்வுகளை எல்லாம் நாம் அதிகமாகச் சந்திக்க நேருகிறது… நமக்குள் அது எல்லாம் பதிவாகின்றது.
1.அதன் வழி நாம் சுவாசிக்க சுவாசிக்க
2.நம் உடலிலே அந்தந்த குணங்களுக்குண்டான அணுக்கள் பெருகுகின்றது.

கோபமும் வேதனையும் வெறுப்பும் வளரும்போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள்ளே பெரும் போராக நடக்கின்றது.

கார உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுக்கள் அதனுடைய வளர்ப்புக்குக் காற்றிலிருந்து தன் தன் இனமான உணர்வுகளை நுகரச் செய்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்போது
1.நம் உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்வுகள் செல்கின்றது
2.அதனால் நம் உடலுக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கும் சந்தர்ப்பமும் வருகிறது.

நல்ல அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தினால் அதற்கு உணவு கிடைக்காதபடி நம்மை அறியாதபடி ஒரு இருண்ட நிலையாக மாறுகின்றது.

உதாரணமாக ஒருவன் அரக்கத்தனமாகத் தாக்கப்படும்போது அவன் உடலில் இருந்து விளைந்த உணர்வுகளை நுகரும் பொழுது அது வாலி.

நாம் அதை நுகர்ந்தோமென்றால் உடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்குகிறது. அவனுடைய கார உணர்ச்சிகளை நம் உடல் தாங்காது உடல் நடுக்கமாகிச் சிந்திக்கும் செயலும் இழக்கப்படுகின்றது.

சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது…
1.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வவதற்கு முன்
2.அவனைத் தாக்க வேண்டும்…! என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

இப்படி… சாந்தமாக இருக்கும் ஒருவன் கொலை செய்ய எப்போது காரணம் ஆகின்றான் என்றால் மற்றொருவன் கொலை செய்யும் உணர்வுகளைப் பார்த்துப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகளை நுகரப்படும் பொழுது இவனுக்குள் வந்து விடுகின்றது.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அடிக்கடி பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணி எடுக்கின்றான்.

1.அதை அடுத்தவர் உற்றுப் பார்த்து நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய… அவர்கள் உடலாக மாறி
2.சிவாய நம ஓ…ம் நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனையும் கொலை செய்ய
3.இந்த உடலிலிருந்து மீண்டும் செயல்படுத்தத் தொடங்குகிறது.

கெடுதல் செய்கிறார் என்ற உணர்வினை நாம் அடிக்கடி நுகர நேர்ந்தால் சிவாய நம ஓ…ம் அவனின் அசுர உணர்வுகள் நம்மை இயக்கி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே…
1.எடுத்துக் கொண்ட (சுவாசித்த) உணர்வுக்கொப்ப நாம் எவ்வாறு இயங்குகிறோம்…?
2.பிறிதொரு உணர்வால் எவ்வாறு நாம் இயக்கப்படுகின்றோம்…?
3.இதிலிருந்தெல்லாம் நம்மை நாம் எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை அறிந்து
4.தீமைகளை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்
5.இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் - ஈஸ்வரபட்டர்

 

விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.

அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!

அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.

காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.

இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.

வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?

ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.

சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.

பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.

1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.

கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.

ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.

பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.

ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.

இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.

September 16, 2021

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

அரசியல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்வோர்கள் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டால் அதே பகை உணர்வு மக்கள் மத்தியிலும் வளரும்.

ஆனால் பகைமையற்ற உணர்வுகளைத் தான் வளர்க்க வேண்டும்.

அன்றும் சோஷலிசம் கம்யூனிசம் என்று எத்தனையோ விதமான கட்சிகள் இருந்தது. எத்தனையோ மதங்களும் இனங்களும் இருந்தது.

1.மதம் என்ற நிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு
2.கட்சி அடிப்படையில் ஒவ்வொருவருடைய கோட்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு
3.எப்படி வாழ வேண்டும் என்று காந்திஜி சாந்த உணர்வு கொண்டு தனக்குள் செயல்படுத்திக் காட்டினார்.

தாழ்த்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களைப் பார்த்து
1.தாழ்த்தப்பட்டவன் அல்ல…
2.நீ உயர்த்தப்பட்டவன்…! என்று சொன்னார்.
3.நோயாளியைப் பார்த்து… நீ நோயாளி அல்ல… நீ என்றுமே உயர்ந்த குணங்களை பெற்று உயர்ந்த நிலைகள் பெற்று…
4.நோயற்ற வாழ்வாக வாழ்வாய்…! என்று என்று உபதேசித்தார்.

எதிரி என்று மற்றவர்கள் சொன்னாலும் பாகிஸ்தானுக்குள் சென்றார். சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று இருந்தாலும்…
1.இந்த உடல் சொந்தமல்ல…
2.நண்பன் என்ற நிலை வளர வேண்டும்…! என்று அங்கே சென்றார்.

யாரும் யாருக்கும் பகைமை இல்லை. மதமும் இனமும் நம்மைப் பகைமை ஆக்கக்கூடாது. மதம் இனம் என்ற நிலையில் பிரித்து எண்ணினால் பகைமை என்ற நிலைக்கே நம்மை அழைத்துச் செல்லும் என்று தெளிவாக்கினார்.

“நாம் அனைவரும் சகோதரர்களே…!” என்ற அந்த உணர்வுகளை காந்திஜியைப் போன்று நாம் ஒவ்வொருவருமே வளர்த்த வேண்டும்.

மேலெழுந்தவாரியாக அரசியல் தலைவர்கள் செய்கிறார்கள் என்றால்
1.அவர்களுக்கெல்லாம் அருள் வழியில் நாம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
2.நல்ல செயல்களை நாம் செயல்படுத்திக் காட்டி அதைப் பார்த்து அவர்கள் பூரிப்படைய வேண்டும்.

“கட்சியில் நான் இருக்கிறேன்…” என்று தவறு செய்தால் கட்சிக்குள்ளேயே இப்படித் தவறு செய்கிறார்களே…! என்று மனம் நொந்து விடுகின்றது. இப்படி வரப்படும் பொழுது தான் தவறின் நிலைகள் வளர்க்கப்படுகின்றது.

இதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே… எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதை நமது அரசு என்று தான் நாம் ஏற்று வழி நடக்க வேண்டும். ஆனால் கட்சியின் தோரணையில் பார்த்தால் தவறுகள் தான் வரும்.

அரசை நல்வழிப்படுத்த காந்திஜி போன்றவர்களின் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் அறிவின் ஒளியாக வளரும். அதன் வழியில் நாம் நடந்தால் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

“உயிர் வழி தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”

சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.

சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?

ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.

ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.

ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.

ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.

1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.

தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.

ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.

இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.

September 15, 2021

உடல் வலுவைக் காட்டிலும் நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்

 

1.“அந்நியன் வெளியேறு...!” என்று காந்திஜி அன்று சொன்னாலும்
2.அடிமைப்படுத்தும் அந்நிய குணங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று தான் சொன்னார்.

அந்நியர்கள் என்று யாரையும் அவர் கருதவில்லை அந்நியனாக்கும் குணங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்த எண்ணத்தை தான் உருவாக்கினார்.

ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விடவில்லை.
1.உடல்தான் மடிகின்றது... அவருக்குள் விளைந்த உணர்வுகள் பரவுகின்றது.
2.அந்தப் பரவும் உணர்வுகள் மற்ற உடலில் சேர்க்கப்பட்டு அவனும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செயல்படுகின்றான்.

எங்கே மடிகின்றது...?

அவன் செய்த நிலைகள் மீண்டும் தாக்கப்படும் உணர்வுக்கே வளர்க்கப்படுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது...?

1.இது வீரியம் (வீரம்) அல்ல...
2.தாக்குவோர் நிலையிலிருந்து மீள வேண்டும் என்று எவர் வலிமை கொள்கின்றாரோ அவர் தான் வீரியத்தில் சிறந்தவராகின்ரார்.

ஆகவே...
1.ஒருவரைத் தாக்குவது என்றால் அது கோழை தான்
2.மீண்டும் பதிலுக்கு அவரைத் தாக்கி அதிலிருந்து நான் மீள்வேன் என்று சொல்வதும் கோழை தான்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

சாமி ஆன்மீகம் பேசாமல் அரசியல் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் காந்திஜி தான் உண்மையான ஆன்மீகம்... அவர் வலிமை பெற்றவர்.

அந்த வலிமை இருந்தால் தான் உயர்ந்த நிலைகளை எண்ணித் தனக்குள் அதை வளர்த்து நம்மையும் காக்க முடியும்... நாட்டையும் காக்க முடியும்... மனிதன் என்ற முழுமையும் அடைய முடியும்.

1.அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்தால் தான் மகிழ்ச்சி
2.அந்த மகிழ்ச்சியை வளர்க்கப்படும் போது தான் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) அந்தத் தேசிய இயக்கத்தில் செயல்பட்டவன். தொண்டனாகச் சேர்ந்தவன். காந்திஜி வழியில் செயல்பட்டு தலையிலே அடி பட்டவன்.

குருநாதர் அருள் சக்திகளைக் கொடுத்தாலும் அந்த அருள் வழி கொண்டு நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.

1.வலிமை இருந்தால் தான் அருள் ஒளியைப் பெற முடியும்.
2.அது இல்லை என்றால் ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்
3.அது நடக்கவில்லை (அந்த வலிமை இல்லை) என்றால் கொடுத்த சக்தியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.

உடல் என்பது ஆத்மாவிற்கு ஒரு வாடகை வீடு தான்...! - ஈஸ்வரபட்டர்

 

ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால் வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?

இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.

மோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.

அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,

1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.

இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…? அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.

ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”

அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.

பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.

அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.

ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.

பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.

இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.

1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.

மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.

ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.

மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.

ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!

September 14, 2021

நம் நல்ல குணங்கள் சீராக இயங்க சுதந்திரம் வேண்டும்

 

இன்று கோடிச் செல்வங்கள் வைத்திருப்போரும் சரி... அரசியலில் முன்னணியில் இருப்போரும் சரி... அரசியல் தலைவர்களும் சரி... யாரும் நிம்மதியாக இருப்பது இல்லை.

1.உலகம் முழுவதும் உள்ள அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் அனைவருமே
2.நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழுகின்றனர்... “சுதந்திரம்” என்ற நிலை இல்லை.

அவர்கள் வெளியே வரவேண்டும் என்றாலும் அஞ்சித் தான் அவர்கள் வர வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு பின்னாடியே வருகின்றது.

நாமும் இன்று பஸ்ஸில் சென்றாலும் அல்லது ரோட்டில் சென்றாலும் நமக்கும் அந்த முழுச் சுதந்திரம் இல்லை. எவன் பறிப்பான்...? எவன் அடிப்பான்...? அவன் கொல்வான்...? என்ற உணர்வில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சுதந்திரம் என்ற நிலை யாருக்கும் வரவில்லை. அரசியலிலும் சரி... செல்வாக்குடன் வாழ்வோரும் சரி... எல்லாம் ஓங்கி வளர்ந்து வந்தாலும் உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.

சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1.எத்தகைய தீமையும் அவருக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே...” என்று
2.தன் உடலுக்குள் அந்த உணர்வை ஊட்டிக் கொண்டார்
3.அந்த சகோதரத்துவதைத் தான் அவர் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.

மதக் கலவரங்களும இனக் கலவரங்களும் இந்தியாவில் நடக்கும் போது மக்கள் மடிவதை... அசுர சக்திகள் இங்கே வந்து மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை. அசுர சக்தி என்ற எண்ணமே அவருக்குள் வரவில்லை.

“அனைவரும் ஒன்று...” என்ற நிலையில் உணர்ந்து சாந்த நிலைகள் கொண்டு நாம் மற்றவரையும் வாழ வைக்கும் போதுதான் இந்த உடலுக்குள் சுதந்திரம் கிடைக்கின்றது.

மனிதன் அழகாக இருப்பான்... செல்வமும் இருக்கும்... செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரமில்லை.

காரணம்... அம்மம்மா...! என்று வேதனை உணர்வுடன் சாப்பிட முடியவில்லையே... படுக்க முடியவில்லையே... படுத்தால் தூங்க முடியவில்லையே...! என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
1.தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை.
2.ஆனால் செல்வம் இருக்கும்... சுதந்திர வாழ்க்கை வாழ்வதில்லை.

ஆகவே அந்தச் சுதந்திரம் என்பது எது...?

1.தன் அருகில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் மகிழ வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கல்யாணராமனாக
3.அந்த அரவணைக்கும் சக்தியாக எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது தான் நமக்குள் அந்த எண்ணங்கள் வளர்கின்றது

கல்யாணராமன் எப்போது ஆகின்றான்...?

திருமணம் ஆகும் போது நாம் எப்படி மகிழ்ச்சி பெறுகின்றோமோ அது போன்று நம் எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் அந்த மகிழ்ச்சி பொங்குகிறது.

பகைமை அற்ற நிலை உருவாகின்றது. இந்த மகிழ்ச்சி பேரானந்தத்தை நமக்குள் கூட்டுகின்றது.

ஒரு நண்பன் “அவன் உயர்ந்த நிலை பெற வேண்டும்” என்ற எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் வளர... வளர... நமக்கு அந்த வளர்ச்சி உயர்ந்ததாக வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறான்” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அந்த உணர்வுகள் வளர வளர உடலுக்குள்ளேயே எதிரியாகி நம் நல்ல செயல்களை அழிதுக் கொண்டே இருக்கின்றது. சுதந்திரம் எங்கே இருக்கின்றது...? சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

காந்திஜி இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்... மடியவில்லை. உடல்தான் மடிந்தது. அவருக்குள் விளைந்த அந்த அரும் பெரும் சக்தி உலகம் முழுவதும் பரவி உள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகிய நல்ல மக்கள் மத்தியிலும் இது பதிவாகியுள்ளது. ஆகவே...
1.அவர் உடலில் விளைந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது அரும் பெரும் சக்தியாக மாறும்.
2.சாந்த குணத்தைப் பெறச் செய்யும்... சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்யும்.
3.அதன் மூலமாக நாம் சுதந்திரமாக வாழ முடியும்...!

ஆத்ம வலுவின் சக்தியும்... அதன் மூலம் அடுத்த நிலை அடைவதும் - ஈஸ்வரபட்டர்

 

உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.

உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?

சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.

காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.

எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்த நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,

உதாரணமாக... காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

ஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.

அதைப் போல்
1.எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ…
2.அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து…
3.தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.

எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.

1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.

நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!

September 13, 2021

உயிரைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று அறிவித்தாலும் உயிரில் மோதிய பின் அணுவின் கருவாக உருவாகி விடுகின்றது.

காரணம்...
1.அவன் வேதனைப்படுகிறான்… வேதனைப்படுகிறான்… என்ற எண்ணங்களை
2.மீண்டும் அதிகமாகக் கூட்டும்போது அது கருவாகும் சந்தர்ப்பமாகின்றது.

கோழி குருவி பல்லி போன்ற முட்டை இடும் இந்த உயிரினங்கள் அனைத்துமே “கேரும்...” அதைப் போன்று நாம் திரும்பத் திரும்ப அந்த வேதனைப்பட்ட மனிதனை எண்ணும் பொழுது அந்த மனிதனின் உணர்வு நமக்குள் கருவாக உருப்பெற தொடங்கி விடுகின்றது.

நோய்க்குக் காரணமாக எது அவர் உடலில் இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வந்து கருவான பின் இரத்தங்களில் சுழன்று வரும்.
1.அப்பொழுது அது எந்தெந்தப் பாகங்களில தேங்கி நின்றதோ
2.அங்கே முட்டையாகி அணுவாக வெடித்து வெளி வரும்.

கோழி அடைகாத்துக் குஞ்சு பொரித்த பின் அவை வெளிவந்தபின் கத்துகிறது. தாய்க் கோழி கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றது. அதே போல் நமது உயிர் கூப்பிட்டு உருவான அந்த அணுக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்.

எப்படி…?

நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
1.நம் சிறு மூளை பாகம் வந்து இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.பின் உயிர் நம் புலனறிவுகளான கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு ஆணைகள அனுப்பும்.
3.இந்த உணர்ச்சியின் தன்மை வந்தபின் எந்த மனித உடலில் இருந்து வெளி வந்ததோ அதே வேதனைப்படும் உணர்வுகளைக் கவரும்.

காரணம்.. வேதனைப்பட்ட அந்த மனித உடலில் இருந்து வெளிவந்த அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. அதைத் தான் ஐம்புலன்களும் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும்.

உடலுக்குள் அனுப்புவதற்கு முன் நாம் நுகர்ந்தது உயிரிலே பட்டபின் அந்த வேதனைப்பட்ட மனிதன் எப்படி வேதனைப்பட்டாரோ அதே போல் அந்த மனிதனின் சோர்வும் வேதனையான உணர்ச்சிகளும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்... இனம் புரியாதபடி நாமும் வேதனைப்படுவோம்.

அவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் இன்ன குறை இருக்கிறது என்று
2.எதையோ ஒன்றை எடுத்துச் சொல்ல ஒருவர் வருகிறார் என்றால் சரி...
3.நம் புலன்களில் அது ஏற்றுக் கொள்ளாது... கவனிக்க முடியாது.
4.அந்த வேதனைக்குண்டான அவருடைய நினைவை ஊட்டும்

அந்தச் சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண் பார்வை அதை ஏற்றுக் கொள்ளாது. கண் பார்வையில் அந்த வெறுப்பின் நிலையையே ஊட்டும். அந்த வேதனைப்படும் உணர்வையே ஊட்டும்.

நாம் பணத்தையோ ஒரு பொருளையோ கணக்குப் பார்க்க வேண்டுமென்றால் சரியான முறையில் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டி இருக்கும்.

மேலே சொன்ன இந்த வேதனை உணர்வுகள் பார்வைக்கு வரும் பொழுது அதைச் சீராக இயக்கவிடாது. தப்பும் தவறுமாகச் செய்வோம்.

தொடர்ந்து இத்தகைய உணர்ச்சிகள் உடலிலே இயக்க இயக்க அந்த வேதனை உணர்வுகள் நம் கை கால் அங்கங்களைக் குறைத்துவிடும். காரணம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாக இதனைச் சுவாசிக்கச் செய்து அதைச் சாப்பாடாகக் கொடுக்கும்.

ஒரு பருந்து வருகிறது என்றால் அந்த இரைச்சல் கேட்ட உடனே தாய்க் கோழி சப்தமிடும். உடனே அந்தக் குஞ்சுகள் அனைத்தும் தாயின் இறக்கைக்குள் அடங்கி விடுகின்றது.

அதே மாதிரித்தான்
1.உடலில் உருவான இந்த வேதனையான அணுக்கள் எல்லாமே உயிருடன் ஒன்றி தன் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
2.உயிர் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றது.

மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளைத் தூண்டி தனது ஆகாரத்தை எடுத்துப் பெருக ஆரம்பிக்கிறது. இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனையான அணுக்கள் பெருகி கடும் நோயாக உருவாகின்றது.

எந்த மனிதனைப் பார்த்து அவரின் வேதனையை நுகர்ந்தோமோ அதே நிலை நமக்குள்ளும் உருவாகி நாமும் அவனைப் போன்றே நோயாகி வேதனைப்படுவோம்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வாழ்க்கையின் முக்கியத்துவம் - ஈஸ்வரபட்டர்

 

1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!

இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.

இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!

எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.

நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.

தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.

அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,

அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமிதக் கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”

நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.

அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.

இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.

இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மா காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!

அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.

September 12, 2021

இயற்கையின் நியதிப்படி மனிதனின் அடுத்த நிலை எது...? - ஈஸ்வரபட்டர்

 

இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.

முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.

ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.

மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.

இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.

இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.

இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.

ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.

அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?

உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.

குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”

September 11, 2021

சாந்த குணத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை

 

கொடும் செயல்கள் நடப்பதையும்... கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்... கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.

அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்... அதைப் பிறக்கச் செய்வோம்... அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.

ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?

சாந்தமான குணத்தை வைத்து...!

கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை... சாந்தம் அவசியம் தேவை.

அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.

எல்லோரும் சொல்வார்கள்...
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்... நான் அழித்து விட்டேன்... அழித்துவிடுவேன்... என்று
2.ஆனால் அது வலிமை அல்ல... கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்... இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்... இதுவும் கோழைத்தனம் தான்.

மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.

எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி... தொழிலிலும் சரி... வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.

அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.

காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.

அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்... அதை அவர் செயல்படுத்தினார்.

ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.

September 10, 2021

ஞானகுரு - ஈஸ்வரபட்டர்

 

ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடரை வளர்க்கும் முறை எப்படி…?

மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.

அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக - தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.

உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.

அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.

ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.

ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!

இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெற வேண்டும் (இது முக்கியம்).

உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?

தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.

குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!
1.குருவின் போதனையை குரு காட்டிய போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது

நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.

இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று சொல்வதற்கல்ல மனித வாழ்க்கை - ஈஸ்வரபட்டர்

 

உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.

ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.

அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.

தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட விஞ்ஞானி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.

எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.

ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.

ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.

அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?

நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி அந்த வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.

பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!

இருதயத்தைச் சீராக இயங்கச் செய்யவும்... மன வலிமை பெறச் செய்யவும் நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை இருதயத்திலே செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இருதயத்திலே செலுத்தி நல்ல அணுக்களை அங்கே உருவாக்கி
1.உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும்
2.நல்ல இரத்தங்களை உறுப்புகள் முழுவதற்கும் பாய்ச்சக் கூடிய வலிமை பெறச் செயுங்கள்.
3.சிறு மூளை முதற் கொண்டு மேலே நல்ல இரத்தம் சென்று நல்ல உணர்வாக மாற்ற
4.அத்தகைய திறன் கொண்ட இதயத்தை உங்களிலே உருவாக்குங்கள்.

உங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறேன். அருள் உணர்வின் இயக்கமாக அந்த அணுக்களுக்கு இதை ஊட்டுகின்றேன் (ஞானகுரு).

அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெறச் செய்யுங்கள்.
1.உங்களால்தான் முடியும்... நீங்கள் எண்ணினால் முடியும்.
2.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கக்கூடிய சக்திக்கு
3.எமது அருளும் குரு அருளும் உங்களுக்குள் கலந்து உறுதுணையாக இருக்கும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நேரடியாக இருதயத்திற்குக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது. அதைப் பெற்று உங்கள் இதயத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.

இருதயத்தில் வலி இருந்தால்... வாய்வினாலேயோ மற்ற நிலைகளினாலோ... இருதயம் பலவீனமாக இருந்து ஹார்ட் அட்டாக் வரக்கூடிய அத்தகைய அணுக்கள் இருந்தால் அதை எல்லாம் மாற்றித் தெளிவான இருதயமாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கி உடலில் எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி உடல் முழுமைக்கும் நல்ல உணர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.

1.அருள் உணர்வைச் சேர்த்து அசுர குணங்களை நீக்கச் செய்யும் சக்தியாக
2.அறியாது சேர்ந்த அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக
2.நல் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக உருவாக்குங்கள்.

நரகாசுரனைக் கொன்ற நாள் என்று ஞானிகள் சொன்னது போல் கண்ணின் நினைவு கொண்டு அந்த அருள் உணர்வுகளை உடல் முழுவதும் பாய்ச்சி
1.அசுர குணங்களை... அசுர அணுக்களை
2.நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நல்ல உணர்வின் இயக்கம் கொண்ட உடல் உறுப்புகளாக நமக்குள் உருவாக்கச் செய்யும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.

உதாரணமாக இருதயத்தில் பலவீனம் இருந்தால்
1.அது பம்ப் செய்யும் போது கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும்.
2.சில உணர்வின் மோதல் அழுத்தமானல் இரத்தம் போகாது தடுக்கும் போது அந்த நேரத்தில் துடிப்பு அதிகமாகும்.
3.நரம்புகளில் அந்த இயக்கச் சக்தி அது போகும் பாதையில் பலவீனமானல் இழுக்கும் சக்தி குறையும்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் வலியும் வேதனையும் தோன்றும்.

அதைப் போன்ற நிலையில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.சீரான நிலைகள் கொண்ட இருதயமாக நீங்கள் இயக்கச் செய்யுங்கள்
2.உங்கள் கண்ணின் நினைவினை இருதயத்தில் செலுத்தி அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.

September 9, 2021

துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்...!

 

காந்திஜியின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம். மற்றவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும் பிறிதொரு தீமையின் விளைவுகளிலிருந்து நம்மை எல்லாம் மீட்டிய மகான் இந்த நாட்டிலே ஜெனித்த நாள் தான் அது.

ஞானிகள் கண்ட உணர்வினைத் தன்னிலே அவர் வளர்த்துக் கொண்டவர். சாந்தம் என்ற நிலைகள் கொண்டு பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து... பகைமைகளைத் தவிர்த்துத் தீமையில் இருந்து விடுபட்டு அதன் வழி கொண்டே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்திஜி என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலங்களில்
1.தன் உடலைப் பற்றி எண்ணாது
2.தனக்குள் வரும் சுகத்தை எண்ணாது
3.நமது நாடு... நமது மக்கள்... நமது என்றே... தன்னுடன் அரவணைத்து வாழும் நிலையாக
4.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளும் அந்த அருள் சக்தியை
5.வெறுமனே சொல்லால் அல்ல... செயலாலேயே அதைச் செயலாக்கிக் காட்டினார்.

உடலை விட்டு உயிர் பிரியும் போது கூட...
1.தன்னை ஒருவன் கொலை செய்தான் என்று எண்ணவில்லை
2.அந்த நேரத்திலும் அவனை எதிரியாகக் கருதவில்லை
3.தீயவன் என்றும் அவனைச் சொல்லவில்லை
4.அவனை அறியாது இயக்கும் தீய விளைவுகளிலிருந்து அவன் காக்கப்பட வேண்டும்
5.அவன் காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் ஜீவன் பிரியும் பொழுதும்
6.அத்தகைய நினைவு கொண்டுதான் தன் செயலாக்கங்களை வெளிப்படுத்தினார்.

அவர் எண்ணி வெளிப்படுத்திய அந்த உயர்ந்த உணர்வலைகள் அனைத்தும் நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

மனிதனுக்குள் செயல்படும் உணர்வுகள் அனைத்தும் பண்புடன் இயக்கப்பட வேண்டும். சகோதர உணர்வுகள் உருப்பெற வேண்டும். ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ வேண்டும். மனிதர்கள் என்ற பண்பு கொண்டு இயங்க வேண்டும் என்று தான் மகான்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.

அந்த மகான்கள் காட்டிய வழிப்படி நாம் நடந்தால் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம். உடலுக்குப் பின் பேரானந்த நிலையான அழியா ஒளிச் சரீரமும் பெறலாம்.

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் உள்ளது - ஈஸ்வரபட்டர்

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

September 8, 2021

புற அழகு முக்கியமில்லை… அகத்தின் அழகு தான் மிகவும் முக்கியமானது - ஈஸ்வரபட்டர்

 

ஒலி கொண்டு… ஒளி கொண்டு… உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ்ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எறும்பும் பூச்சிகளும் ஏறாத வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அந்த எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.