ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2017

புருவ மத்தியின் இரகசியம் என்ன?

ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு.

அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.

அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக.., ஒன்று” உருவாகின்றது.

யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.

ஆக, உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.

அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்.., போட்டு வைப்பார்கள்”.

அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்”.

இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.

இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.

ஆனால், வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.

120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.

இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

“உயிருடன் ஒன்றி..,” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார். 

January 4, 2017

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் வேறு வாசல் வழி செல்கிறோம் ஏன்?

நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்.

பெருமாள் கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…, இடைமறித்து.., வேறு வாசல் வழி வந்து.., நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்”.

ஆக சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காக சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.

அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும்.

“தீமைகளை எண்ணாமல் இருப்பதே.., விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.

ஆக, தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள். மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.

யாரைப் பார்த்தாலும்.., அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் தெய்வ சக்தியாக அவர்கள் வளர வேண்டும் என்று “இந்த உணர்வுகளை எவர் எடுக்கின்றார்களோ.., இதுதான் சொர்க்க வாசல்” என்பது.

அதனின் உணர்வுகளை எதன் வழி பெறவேண்டும் என்று.., “உயிரைப் புருவ மத்தியை” வைத்துக் காட்டப்பட்டது.

நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது.

அதனின்று நாம் அகக்கண்ணின் நிலைகள் கொண்டு நாம் புறக்கண்ணால் பதிவு செய்த நிலைகள்

இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்? நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்?

சாமி அன்றைக்கு என்ன சொன்னார்..,? என்று உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே.., மேல் நோக்கித்தான் செல்லும்”.

வியாபார ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு தடவை பதிவாக்கிவிட்டால் இந்த உணர்வின் தன்மை மீண்டும் உங்கள் நினைவின் ஆற்றலை “அன்றைக்கு என்ன சொன்னார்..,?” என்று கீழே பார்க்க மாட்டீர்கள்.

கீழே பார்த்தால் உங்களுக்குக் கவலையும் சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

இதைப் போல இயற்கையின் நியதி கொண்டு உங்களுடைய சிந்தனையின் தன்மையை அந்த உயிரான ஈசனிடம் உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுது தான் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்த நினைவைத் திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா..,” என்று உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது சேர்ப்பிக்கும்.

அந்த உணர்வுகள் அங்கே உடல்களில் பரவும். அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது.

இதைத்தான் சொர்க்கவாசல் என்பது. இது மனிதனால் தான் முடியும்.

புருவ மத்தியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொழுது அருள் உணர்வுகளை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்.

சகஜ வாழ்க்கையில் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது அந்த உணர்வின் தன்மைகளைத்தான் உயிர் ஜீவ அணுக்களாக உடலுக்குள் மாற்றுகின்றது.

ஆக, நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும் இதன் வழி சுவாசிக்காதபடி இந்த அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்தால் அது பிராணாயாமம்.

மூக்கின் வழி சுவாசிப்பதை இடைமறித்து அருள் மகரிஷிகளின் உணர்வை வலுச்சேர்த்து உயிருடன் ஒன்றி உடலுக்குள் உள்ள அணுக்களுக்குள் பரப்பப்படும் பொழுது இதன் வழி சென்றால் பிராணாயாமம்.

நமக்குள் ஜீவனின் ஜீவ அணுக்களாக உருவாக்கும் அதன் வழி செல்லும் நிலைதான் பிராணாயாமம் என்பது.

ஆகவே, மனிதனின் சிந்திக்கும் ஆறாவது அறிவு கார்த்திகேயா. ஆறாவது அறிவு கொண்டு அவன் புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்.

இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும்.

January 3, 2017

தீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது? மீண்டும் மீண்டும் தீமை எப்படி வருகின்றது?

கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.

அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.

அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.

அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.

இது அதிகரித்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.

படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்?

அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும் இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.

அதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.


ஆனால், சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக.., இருக்கின்றான்”. சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான் என்பார்கள்.

சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது?

அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.

அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.

உதாரணமாக, ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேறவேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.

ஆனால், அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து “படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்..,” என்ற உணர்வினைச் சுவாசித்துவிட்டால் சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்”.

இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.

குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்துவிட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.

உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது.  மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.

நாம் தவறு செய்கின்றோமா..,? அல்லது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி உங்கள் ஆன்மாவில் உள்ள தீமையான உணர்வலைகளை அகற்ற முடியும்.

 அருள் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகப் பெருக அதுவே உங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும். உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவர்களுக்கும் நல்லதாக இருக்கும்.

January 2, 2017

“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ்வரா…”

பையனோ தாயோ அல்லது தந்தையோ குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பினும் குடும்பத்தில் ஏவரேனும் ஒருவர் பிறர் தவறு செய்யும் உணர்வினைத் தனக்குள் பதிவு செய்துவிட்டால் கோப உணர்வின் கார வித்து விளைந்து விடுகின்றது.

பையனாக இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

கோபமாகப் பேசிய உணர்வுகள் இவனுக்குள் அதிகமாகக் கலந்துவிட்டால் அவன் போகும் பொழுதெல்லாம் அடிக்கடி யாரைத் தவறு செய்தானோ அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோபத்தின் உணர்வுகள் தூண்டும்.

ஏனென்றால் நாம் பொது இடங்களில் பழகும்பொழுது அவனின் தவறை எண்ணும் பொழுதெல்லாம் அவன் செய்த தவறின் தன்மையே நமக்குள் விளைந்து கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும்.

அந்த உணர்ச்சியுடன் பையன் வீட்டிற்குள் வந்தவுடனே ஒரு வேலையின் காரணமாக அவன் அப்பா கூப்பிட்டு “நீ சிறிது அதைப் பார்த்துக்கொள்..,” என்று சொல்வார்.

பையன் உடனே “சரி..ரிரி..,” என்று கார உணர்வுடன் சொல்வான்.

பையன் என்னடா.., நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றான்? என்று அப்பா எண்னுவார். இந்தச் சந்தர்ப்பம் பையன் தவறு செய்யவில்லை.

ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரத்தைப் போட்டபின் அந்தக் காரத்தின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றதோ இதைப் போன்று தான் அங்கே இயக்கமாகின்றது.

பையன் நல்லவனாக இருந்தான். ஆனால், அவன் தொழில் செய்யும் இடத்தில் ஒருவன் தவறு செய்கின்றான்.

தவறு செய்பவனைப் பார்த்தபின் அவன் இப்படித் தவறு செய்து கொண்டிருக்கின்றான் என்று வேதனைப்படுகின்றான். வேதனை என்றால் நஞ்சு. நஞ்சு கலந்து விட்டால் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்.

பின், அவன் செய்யும் தவறைப் பார்க்கும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது. கோபமாக மாறுகின்றது.

அந்த உணர்வின் வேகம் அந்தக் கோபத்தின் தணல் அடையப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் தன் ஆன்மாவில் பெருக்கி விடுகின்றது. இவ்வாறு தொழில் செய்யும் இடத்தில் “அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்..,” அந்த எண்ணங்கள் இயக்கும்.

இவன் “அயோக்கியப் பயல்…, எப்பொழுது பார்த்தாலும் தவறு செய்து கொண்டிருப்பான்..,” என்ற நிலைகள் வரும்.

ஆனால், அவன் (முதலில்) கோபித்தவனோ இவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “பெரிய.., யோக்கியன் மாதிரிப் பேசுகின்றான் பார்..,” அடுத்து ஜாடையில் பேச ஆரம்பிப்பான்.

இவனை எண்ணும் பொழுது இரண்டு உணர்வுகளும் மாறி மாறி மாறி இந்த உணர்விற்கு அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வாக அது பையன் உடலுக்குள் வளர்ச்சி அடைந்துவிடுகின்றது.

அதனுடைய வளர்ச்சிகள் அதிகமாகும் பொழுது ஆன்மாவில் அது பெருகிவிடுகின்றது. அதன் வளர்ச்சியின் தன்மை அவனிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு பரமாத்மாவில் பெருகுகின்றது.

ஆனால், அவன் எண்ணிய உணர்வு அவனுக்குள் ஒரு வித்தாகின்றது.

இப்படி இவர்கள் உரையாடும் உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது கண்கள் அந்தக் காரமான வேதனையான உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பின் உயிரின் நிலைகள் “இழுக்கும் பொழுது..,” இது உடலுக்குள் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது.

ஏனென்றால், விஷ்ணு வரம் கொடுக்கின்றான். தனக்குள் வளர்க்கப்பட்ட தன் பிள்ளைக்கு “பிரம்மா” அவன் சிருஷ்டிக்கும் உணர்வுகளுக்கு விஷ்ணுவே அவனுக்கு ஆகாரம் கொடுத்து அதனின் உணர்வின் தன்மையை வளர்வதற்குத் தன் பிள்ளைக்கு உபகாரம் செய்கின்றான்.

அவனால் உருவான உணர்வின் தன்மை உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலூட்டும் உணர்வின் செயலாகவே இது மாறுகின்றது. ஆக, இந்த உயிரின் இயக்கம் விஷ்ணு.

“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ்வரா…”

ஆகவே, எல்லாவற்றையும் நமக்குள் உருவாக்குவது “உயிர்..,” என்று குரு பிரம்மா குரு விஷ்ணு குரு.., “சாட்சாத் இந்த உயிரின் தன்மையே குருவாகின்றது..,” இது சாட்சாத் மஹேஸ்வரா.

சர்வத்தையும் எனக்குள் உருவாக்கும் தன்மை பெற்றது (உயிர்) என்று மிகவும் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று சொல்வார்கள். ஆனால், எதைக் குறிக்கின்றனர்..,? எதைச் சொல்கின்றனர்..,? எதற்காகச் சொல்கின்றனர்..,? என்ற நிலையை இதை நாம் உணர்வதில்லை.

சாதாரண வழக்கில் இன்று சாஸ்திர ரீதியாகப் பலர் இதைப் படித்திருந்தாலும் இதைப் போல குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று யாரை எண்ணுகிறார்கள்..,?

“உயிரை” எண்ணுவதில்லை.

கடவுள் என்ற எண்ணத்தில் புறத்தால் காட்டிய அந்த உணர்வை விஷ்ணு என்று சிலை வைத்ததை எண்ணுகின்றார்கள். குரு பிரம்மா என்று நான்கு தலை வைத்த சிலையைப் பார்த்து அது தான் பிரம்மா என்று எண்ணுகின்றார்கள்.

“எண்ணும் பொழுது” - நான்கு நமக்குள் அந்த உணர்வின் தன்மை சக்தியாக விளைகின்றது என்பதை மறந்துவிடுகின்றார்கள்.

இப்பொழுது ஒரு கோபமான உணர்வை எண்ணும்பொழுது குரு பிரம்மமாகின்றது. குரு விஷ்ணு தனக்குள் அது குரு பிரம்மமாக மாற்றுகின்றது. கார உணர்ச்சி நமக்குள் உருவாகின்றது.

தனக்குள் உள் செல்லும் பொழுது குரு மஹேஸ்வரா. தனக்குள் அதை உருவாக்கும் செயலாக நமக்குள் அந்த உருவைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

ஆனால், நாம் எதை எண்ண வேண்டும்..,? குரு பிரம்மமாக எதை உருவாக்க வேண்டும்..,? குரு விஷ்ணுவாக அவனிடம் எதைக் கேட்க வேண்டும்..,? அந்த விஷ்ணுவிடம் வரம் கேட்பது எதுவாக இருக்க வேண்டும்..,?

இதை உணர்த்துவதற்குப் பல நிலைகள் காட்டினாலும் அதை நாம் இது வரையிலும் “மூலத்தை.., அறியாது” ஆக துவைதம் என்று உருவத்தைக் காட்டிய பின் சிலையை வடித்து வைத்து அந்தச் “சிலையைத்தான் நாம் கடவுளாக” மதிக்கின்றோம்.

அதற்கு நைவேத்தியம், சாங்கியம் செய்து அவனுக்குப் படைத்துவிட்டால் அவன் எல்லாமே பார்த்துக் கொள்வான் என்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் நாட்டம் செலுத்திக் கொண்டுள்ளோம்.

உருவம் அது துவைதம். காவியமாகத் தீட்டிய அதனின் நிலைகளை “அதைப் பெறவேண்டிய எண்ணங்களை” எண்ணினால் அத்வைதம் (சூட்சமம்).

அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக அந்த உணர்வின் நல்ல செயல்களை நமக்குள் மாற்றுகின்றது.

குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா.., சர்வத்தையும் நமக்குள் உருவாக்கும் உடலாக அமைத்து அதனின் நிலையாக நாம் உருவின் தன்மையை அடைகின்றோம். தெளிவாக எடுத்துரைத்த இந்த நிலையை நாம் தெளிந்திடல் வேண்டும்.

முதலில் சொன்ன நிலையில் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் தீமைகள் வீட்டுக்குள்ளும் வந்துவிடுகின்றது.

தாய் தன் பையனிடம் சொல்லி “நீ இதைச் செய்யப்பா..,” என்று ஒரு வேலையைச் சொன்னால் அவன் என்ன சொல்வான்?

“நீ என்ன..,? சும்மா எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்..,? என்று தாயிடம் வேகமாக எதிர்க்க ஆரம்பித்துவிடுவான்.

தாய் சாந்தமாகச் சொல்லும் பொழுது இந்தக் காரம் சாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை. அது ஏற்றுக் கொள்ளாது.

உடனே தாய்.., “ஏண்டாஆஆ.., இப்படிப் பேசுகின்றாய்..,? சாந்த உணர்வுடன் சொல்லும்.

“ஏண்டா இப்படிப் பேசுகின்றாய்” என்ற சொல் வரும் பொழுது நீ எப்பொழுது பார்த்தாலும் “நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாய்..,” என்று தாயை வெறுக்க ஆரம்பிப்பான் பையன்.

குரு பிரம்மா. அதாவது “நாம் எண்ணியதை” அது மீண்டும் அதிகமாக “குரு விஷ்ணு - குரு பிரம்மமாக மாற்றிவிடுகின்றது”.

அதனின் வளர்ச்சியின் தன்மை பெருக ஆரம்பிக்கும்.

குரு மகா.., அந்த உணர்வின் தன்மை “சாட்சாத் மஹேஸ்வரா”. அதை எல்லாம் (சர்வத்தையும்) மஹேஸ்வரனாக நமக்குள் இருந்து நாம் எண்ணியது ஒவ்வொன்றையும் அது உருவாக்குகின்றது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா, “வெறும் சொல்லால் அல்ல”,

எதை விஷ்ணுவிடம் வரம் கேட்க வேண்டும்? எதைப் பிரம்மமாக்க வேண்டும்? எதை நமக்குள் சாட்சாத் மஹேஸ்வரனாக நமக்குள் உருவாக்கும் சக்தியாக மாற்ற வேண்டும் என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

தாய் சொன்னாலும் இதே மாதிரி அந்தக் கார உணர்வுகள் சொன்னவுடன் இந்த நாதம் என்ன செய்யும்?

நம் வாயினுள் ஒரு காரமான பொருளைப் போட்டவுடன் என்ன சொல்கின்றோம்..,?

“உஷ்ஷ்., ஆ..ஆ..,” என்று அலறுவது போல இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடன் உணர்வுகள் உராய்ந்து “சாம..,”

அதனின் உணர்வின் நாத இயக்கமாக இயக்கும். நாதமாக இயக்கப்படும் பொழுது “ஏண்டா.., இப்படிச் செய்கின்றாய்.?” என்று சொல்லும் அந்தத் தாய்.

இதை அந்தப் பையனின் தந்தை பார்த்தார் என்றால் இந்த உணர்வின் தன்மை அவருக்குள் போய் “ஏண்டா., நீ இந்த மாதிரியெல்லாம் அம்மாவிடம் பேசுகின்றாய்..?” “அம்மா என்னடா உன்னைத் தவறாகச் சொன்னது?” என்பார்.

நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் என்னை “எதிரியாகத்தான்..,” கருதுகின்றீர்கள் என்பான் பையன்.

அப்பொழுது எதிரியாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அவன் எதைச் சொல்ல வந்தாலும் நல்லதை ஏற்றுக் கொள்ளாது.

இங்கே எதிரியின் தன்மை பகைமையாகும் பொழுது தாயும் தந்தையும் கடவுள் என்ற நிலைகளை மாற்றிவிடுகின்றது. “தன்னைக் காக்கும் தெய்வம்..,” என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்துவிடுகின்றது.

ஒரு சுவையான பதார்த்தத்தில் கார உணர்ச்சியின் தன்மை அதிமாகிவிட்டால் அதைத் தூக்கியெறியும் நிலையே வரும்.

அதைப் போன்று தாய் என்ற நிலையோ தந்தை என்ற நிலையோ இங்கே செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஏனென்றல் பொது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையான உணர்வின் தன்மை தனக்குள் வளர்க்கப்படும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக மாறி குரு சாட்சாத் மஹேஸ்வரனாக அதனின் வளர்ச்சியின் தன்மை அடைகின்றது.

நாம் எண்ணிய உணர்வை கண் நமக்கு எப்படி வழி காட்டுகின்றது?

தாய் மீது வெறுப்பாகிவிட்டால் கண் அதைப் பார்த்தவுடன் அந்தத் தாய் சொன்ன நினைவின் அலைகளை இங்கே காற்றில் இருப்பதைக் கவர்கின்றது.

பார்ததபின் அந்த வெறுப்பின் உணர்வைச் சுவாசித்துத் தாய் நல்லதைச் சொன்னாலும் கேட்காதபடி “தலையைத் திருப்பிக் கொண்டு” போகும்.

“இதைச் செய்டா..,” என்று தாய் சொல்லும்.

“ஊ…ஹ்ம்..,” என்று தான் சொல்வான். அப்புறம் நான்தான் “சரி..,ரீ..,” என்று சொல்லிவிட்டேனே அப்புறம் ஏன் இன்னும் திரும்பச் சொல்கின்றாய் என்று தாயிடம் எதிர்த்தே பேசுவான் பையன்.

அவன் தவறு செய்யவில்லை. தனக்குள் வளரும் அந்த வித்தின் தன்மை “அது” அவனுக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தந்தையும் “தாய் என்னப்பா சொன்னது..,” என்று பையனிடம் கேட்டால் பையன் என்னை எதிரியாகவே நீங்கள் கருதுகின்றீர்கள் என்று சொல்லித் தந்தையையும் வெறுக்கத் தொடங்குவான்.

ஏனென்றால், திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். நம் உணர்வின் செயலாக்கங்கள் “உயிர் நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது..,” என்பதைத் தெளிவாக நீங்கள் அறிதல் வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

இந்தத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மகரிஷிகள் காட்டிய உண்மைகளை நாம் எளிதில் காணலாம்.

January 1, 2017

சொந்தத்தின் பந்தத்தால் பாசத்தால் வரும் நிலைகளும் – அருள் உணர்வின் நேசத்தால் வரும் நிலைகளும்

உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்..,” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்..,” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.

“பாசத்தால்.., இப்படி ஆகிவிட்டதே..,” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.

“நேசத்தால்..,” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.

“எதைக் கொண்டு..,” நேசிக்க வேண்டும்?

“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெறவேண்டும்..,” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். ஆகவே, குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

ஏனென்றால், உங்களுக்கு யாம் “படிப்படியாக.., சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால், என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவருக்கும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.

மெய் உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம். உலகம் நலம் பெற தவமிருப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற தவமிருப்போம்.

December 31, 2016

காண்டீபத்தை ஒடித்ததால் சீதையை மணந்துகொள்கின்றான் “கல்யாணராமன்” - விளக்கம்

காட்டில் வாழும் உயிரினங்கள் ஒரு கூட்டமாகச் செல்லும்போது ஒரு தாய் தன் குட்டி வரவில்லை என்றால் கூட எட்டிப் பார்க்கும். வந்துவிட்டதா.., இல்லையா? என்று பார்த்துக் கொள்ளும்.

வெளியிலே சென்றால் ஒரு மிருகத்தை தன் எதிரியைப் பார்த்ததென்றால் உள்ளே பாதுகாப்பாகக் கொண்டு வைத்துக்கொள்ளும்.

இதெல்லாம் எப்பொழுது? மிருகமாக இருக்கும்போது இந்த உணர்வு வந்தது. அது ஒன்று சேர்த்து வாழும் அரவணைக்கும் தன்மை ஒரு குடும்பத்திற்கு வருகிறது.

ஆனால், நமக்கு நம் குடும்பத்தில் இன்று வருகிறதா? இல்லை. எத்தனை பேர் வருகின்றார்கள்? பாருங்கள்.

இவன் என்னை இப்படியே பேசிக் கொண்டிருக்கின்றான். அம்மா அவன் பக்கம்தான் பேசிக் கொண்டுள்ளது என்று சண்டை போடுபவர்கள்தான் இருக்கின்றார்கள்.

அவனுக்குத்தான் அம்மா ஆதரவு கொடுக்கின்றார்கள், எனக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறது. நான் அம்மா சொன்னபடியெல்லாம் கேட்கிறேன் என்று சொல்வதை நீங்கள் பார்க்கலாம்.

அம்மா என்ன செய்வார்கள்? அவன் அறியாமல் செய்கின்றான், எப்படியும் திருந்திவிடுவான் என்று கொஞ்சம் அரவணைப்பார்கள். அது இங்கே பொறாமையாகிவிடும்.

நான் உதவி செய்கிறேன், அவன் அம்மாவிற்கே எதிரியாக உள்ளான். ஆனாலும், அம்மா அவனுக்குத்தான் உதவி செய்கிறது என்பார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உருவாகும்போது மனிதனுடைய சிந்தனைகள் நம்மையறியாமலே பகைமை உணர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

அதாவது, அவனும் தாயின் எண்ணப்படி தெளிவாக வேண்டும், தெளிந்தவனாக வேண்டும், தாயின் அருளை அவன் பெறவேண்டும் என்று எண்ணினால் இங்கே பகைமைகள் வராது.

இதையெல்லாம் நம் ஞானிகள் காட்டிய நிலைகளில் இராமாயணத்தில் உற்றுப் பார்த்தால் தெரியும். ஒன்று சேர்த்த உணர்வுகள் எப்படி விளைகிறதென்றும் எண்ணங்கள் ஒன்று சேர்க்கும் நிலைகளைப் பற்றி அதில் சொல்லியுள்ளார்கள்.

இராமன் எப்பொழுது “கல்யாணராமன்” ஆகின்றான்?

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றான். வருபவர்கள் அவரவர்கள் எண்ணங்கள் கொண்டு கற்றுக் கொண்ட வித்தைகளையெல்லாம் வைத்து காண்டீபத்தில் நாண் ஏற்றி ஏவுகிறார்கள்.

ஆனால், இராமன் என்ன செய்கிறான்? வந்தவுடன் காண்டீபத்தையே ஒடித்துவிடுகிறான்.
காண்டீபத்தில் நாண் ஏற்றினால்தான் அங்கே தாக்க முடியும்.
ஆகவே அதை ஒடித்துவிடுகின்றான்.

ஏன்?

தனக்குள் இருக்கும் மற்றவருடைய பகைமை உணர்வை எல்லாம் நீக்கிவிடுகின்றான். அப்பொழுதுதான் அந்த அரவணைக்கும் எண்ணம் அங்கே வருகின்றது.

அடுத்து என்ன செய்கின்றான்? “சீதா” அந்த சந்தோசமான உணர்வைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான்.  சந்தோசமான உணர்வை அரவணைக்கும்போதுதான் “கல்யாணராமா”.

தனக்குள் இருக்கும் தீங்கான உணர்வுகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுத்து, தீமைகளை நீக்கிவிட்டால் அந்த அருள்ஞானம் என்ற உணர்வு வருகின்றது.

இதைத்தான், வான்மீகி அன்று கல்யாணராமா என்று காட்டினார்.