ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2016

எல்லோரும் வாழ வேண்டும் என்ற நல் உணர்வை ஊட்டியவர்கள் எங்கிருக்கின்றார்கள்...!

“கோவில்” - இது காளி கோவில், இது முருகன் கோவில், இது மாரியம்மன் கோவில் என்று நாம் சொல்கின்றோம்.

கிறிஸ்தவ மதத்தில் ஏசு என்ற நிலைகளில் பொதுவாக இருப்பினும் ஒரு தத்துவ ஞானியின் பெயரை வைத்து இது இந்தச் “சர்ச்” என்ற நிலைகளில் அந்தக் குணங்களைச் சொல்லி பெயரை வைக்கின்றார்கள்.

முருகன் கோவில் என்று இங்கே வைக்கும்பொழுது சர்ச்சுக்கு ஒரு நல்ல மனிதனின் பெயரை அவர்கள் வைப்பார்கள். நல்லொழுக்கத்தின் குணத்திற்கு அவர்கள் ஒரு பெயரை அந்த ஆலயத்திற்குச் சூட்டியிருப்பார்கள்.

நாம் கோவில் என்கிறோம். அவர்கள் இன்ன சர்ச் என்று என்று சொல்லும் பொழுது அந்தக் குணத்தின் தத்துவத்தை அங்கே போதிக்கின்றார்கள்.

இதைப் போலத்தான் முகமதியர்களும் “பள்ளிவாசல்” என்று இன்ன பள்ளிவாசல் என்று சொல்கின்றார்கள். ஏனென்றால் பள்ளி என்றால் கற்றுக் கொடுக்கும் நிலைகள்.

நாம் கோவில் என்கிறோம். அறிவை ஊட்டும் நமக்குள் அந்த எண்ணங்கள் நமக்குள் தெய்வமாக இருந்து செயல்படும் என்ற நிலைகள்.

ஆகவே, இன்ன பள்ளிவாசலில் இன்னார் என்ற நிலைகளில் அவர் நல்லதைச் செய்தார் என்று அந்தத் தத்துவ ஞானியினுடைய நிலைகளில் பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

அவர்கள் காட்டிய நிலைகளில் இந்தப் பள்ளிவாசலில் யார் அந்த நற்குணங்களை எடுத்தார்களோ  அவரின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மெய் ஒளியைப் பெற முடியும், நல்லவைகளைச் செய்ய முடியும் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

ஆகவே, எல்லா மதங்களில் எடுத்துக் கொண்டாலும் இதே நிலைகள் தான்.

சீக்கியர்களை எடுத்துக் கொண்டாலும் “குருத்வார்” என்று சொல்வார்கள். சீக்கிய மதத்திற்குக் குருவாக இருப்பினும் அதிலே அவர்களின் தத்துவத்தை எடுத்துக் கொண்ட நிலைகளில் இன்ன குருத்வார் என்ற நிலைகளில் அங்கே காட்டப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு மதங்களிலும் காட்டிய நல் ஒழுக்கங்களில் தப்பில்லை.

இதைப் போல் அன்று அரசர்கள் தனக்கென்று மதங்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் சட்டங்களை இயற்றி அந்தச் சட்டத்தின் வழிகளில் வேள்விகளை இப்படிச் செய்தால் “இந்தக் கடவுள் நமக்குச் செய்யும்” என்று சாஸ்திரங்களை எழுதுகின்றார்கள்.

இங்கே எப்படிச் சாங்கிய சாஸ்திரங்கள் உண்டோ அதே போல் ஒவ்வொரு நல்லவரையும் மகான் என்று அழைக்கப்பட்டு அந்த ஞானிகளின் பெயரை வைத்து சர்ச்சுகளையும், பள்ளிவாசல்களையும், குருத்வார்களையும் உருவாக்கி அவர்கள் சொன்ன நல் ஒழுக்கங்களை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தான் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.

அதன் வழிகளில் நடந்தால் நமது வாழ்க்கை இவ்வாறெல்லாம் இருக்கும் என்று அங்கே காட்டப்பட்டது.

இவையெல்லாம் இதற்கு முந்தி எமக்குத் (ஞானகுரு) தெரியாது. குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) இதனை விளக்கியபின் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
கடவுளைக் காக்க மதத்தின் கீழ் இன்று எப்படிச் செயல்படுகிறார்கள்?
எல்லா மதங்களும் நல்ல ஒழுக்கங்களைத் தான் கற்பித்துள்ளது.

எந்த எந்த மதத்தின் தன்மையில் இங்கே வந்தாலும் அவர்கள் வகுத்துக் கொண்ட சட்டத்தில் சிறிது பிழைகள் ஏற்பட்டால் உடனே “துரோகி” என்ற நிலைகளை எடுத்து வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அந்த உணர்வின் தன்மையே காலத்தால் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

அன்றைய அரச காலங்களில் ஓர் அரசனுக்கு ஒரு மனைவி என்றால் பல மனைவிகளையும் சில மதத்தில் கட்டிக் கொள்ளலாம் என்ற தத்துவம் உண்டு.

இருந்தாலும் பிறக்கும் குழந்தைகள் மூன்று குழந்தைகள் ஆகிவிட்டால் தலை மகனுக்கே அரசுப் பட்டம் என்று வகுத்து வைத்தனர்.

அரச நிலையாக இருந்தாலும் அந்தச் சட்டத்தை இயற்றி அவர்கள் வகுத்துக் கொண்ட உணர்வுகள் குலதெய்வம் என்ற நிலைகளில் வைத்து “நம்மை ஆண்டு கொள்ளும் அந்தச் சக்தி” என்ற நிலைகளில் மதத்தின் அடிப்படையில் அரசர்கள் இத்தகைய நிலைகளை வகுத்துக் கொடுத்தனர்.

அரசன் வழியில் குடிமக்களுக்கும் அவர்களின் இணக்கத்துடன் வளர குலதெய்வம் என்ற நிலைகளும் அல்லது தெய்வம் என்ற நிலைகளில் இதையே பதிவு செய்து வைத்துவிட்டால் இதை (இவ்வாறு எண்ணியதை) நமது உயிர் 'ஓ' என்று ஜீவனாக்கி 'ம்' என்றாகும்போது நமக்குள் அது “கடவுளாக..,” அதை மீண்டும் எண்ணும்போது (கடவுளாக உள் நின்று) நமக்குள் இயக்கமாகின்றது.

எந்தச் சட்டத்தை எந்த அரசன் இயக்கினானோ அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக யாராவது போய்விட்டால் அவன் அந்தக் கடவுளுக்கு விரோதமானவன், இந்த நீதிக்கு விரோதமானவன் என்றும் இயற்றியுள்ளார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு மதங்களும் தனக்குள் இயற்றப்பட்ட அதுவே சட்டமாக்கப்பட்டு “அது தான் நீதி” என்ற நிலைகளில் வகுக்கப்பட்டு மனிதன் அந்த அரசுக்குக் கீழ் ஒழுக்க நெறிகள் கொண்டு வருவதற்கே இதனைச் செய்தார்கள்.

இத்தகைய நிலை இருந்தாலும் கடவுளின் நிலைகள் இப்படி உருவாக்கப்பட்டு எல்லா மதங்களிலும் இதைப் போன்று பல நிலைகள் உருவாகிவிட்டது.

அதிலே ஒவ்வொரு அரசனும் தன்னுடைய முதுமையின் நிலைகள் வரப்படும்போது அவருக்குப் பிறந்த குழந்தைகள் - ஒரு மனைவி இருந்தாலும் மூன்று மக்களாகிவிட்டால் இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆட்சி பிடிக்கும் நிலைகளில் போர் முறைகள் வந்து அவர்களுக்குள் குலதெய்வங்களின் பெயர்களையும் மாற்றி வைத்து “எங்கள் குலதெய்வம் இது வேறு.., அவர்கள் குலதெய்வம் அது வேறு..,” என்ற நிலைகளில் இனங்கள் பிரிக்கப்பட்டு இப்படித்தான் உலகெங்கிலும் “மதங்களுக்குள் இனங்கள்” பிரிக்கப்பட்டது.

இன்றும் பார்க்கலாம். முகமதியர் மதமாயிருந்தாலும் அதற்குள் இனம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் செய்கின்றனர்.

இந்து மதமாக இருப்பினும் இதற்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு இந்த மதத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் “நீயா.., நானா..,” என்று போர் செய்து கொண்டு இருக்கின்றோம்.

சீக்கிய மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இயற்றிய நிலைகள் கொண்டு கடவுளுக்குத் துரோகம் செய்கிறார் என்ற நிலைகள் கொண்டு குரு துரோகம் செய்கிறார் என்று இந்த இனத்துக்குள் ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகள் இருக்கின்றது.

ஆக, அந்த இனத்தையும் காப்பதில்லை. இவர்கள் காட்டிய நல்லொழுக்கத்தை யாரும் காப்பதில்லை.

இதே போல் புத்த மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவருடைய பிற்காலங்களில் இவர் வகுத்துக்கொண்ட நிலைகளுக்கு மாறாக வருகிறார் என்றும் அதற்குள் உள் பிரிவுகள் வந்து ஒருவருக்கொருவர் போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜைன மதத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுளைப் பற்றி எங்கள் தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறினார்கள் என்று கடைப்பிடித்தாலும் அதற்குள்ளும் தவறு செய்தார் என்று அதிலேயும் ஒவ்வொரு அரசனும் கடைப்பிடித்த நிலைகள் இந்த முனிவருடைய நிலைகள் வேறு அந்த முனிவருடைய நிலைகள் வேறு,  எங்களுடைய கடவுள் என்று அதற்குள்ளும் இனங்கள் பிரிக்கப்பட்டது.

அன்றைய காலங்களில் ஜைனர்கள் யாசித்தே வருவார்கள். ஒவ்வொரு உயிரிலும் கடவுள் என்ற நிலைகளில் ஏங்கி “பிச்சாந்தேகி” என்று உணவுக்காக வீடு வீடாகச் சென்று நிர்வாண நிலைகள் கொண்டு உலகம் உய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தாலும் காட்டுக்குள் மறைந்திருந்து வாழ்வார்கள்.

உணவை யாசித்துப் பெற்ற பின் அவர்கள் வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். நான் கடவுளை அடையச் செல்கிறேன், எனக்கு அன்னமிட்ட அந்த மக்களைக் காத்திட வேண்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.

ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்புடைய நிலைகள் கொண்டு அனைவரையும் வளர்க்க வேண்டும் என்று இவ்வாறு இருப்பினும் அதிலேயும் வாழ்க்கையில் வரப்படும் பொழுது மதத்திற்குள் மதம் இனமாகப் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் முறை.

புத்த மதங்களிலும் இதே தான். சீனாவில் புத்த மதத்தின் தத்துவம் வேறு. இலங்கையில் தத்துவம் வேறு. ஜப்பானில் புத்த மதத்தின் தத்துவங்கள் வேறு.

ஆகவே, நாட்டுக்கு நாடு அந்த ஞானிகளுடைய தத்துவங்களை எடுத்துக் கொண்டாலும் தன் ஆட்சி பீடத்திற்காகவே அவர்கள் அமைக்கப்பட்டு அதன் வழிகளில் மக்களைத் தனக்குள் ஒன்று சேர்த்து வரவேண்டும் என்று எண்ணினாலும் அதற்குக் கீழ் காலத்தால் அது பேதங்கள் உருவாக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் மத பேதம் இன பேதம் என்று மதத்திற்குள் இன பேதங்கள் பிரிக்கப்பட்டு மனிதனுக்கு மனிதன் நியாயம் பேசிக் கொண்டுள்ளோம்.

ஆக, நல்லதைப் பேசுகின்றோம். ஆனால்,  அடுத்த மனிதனை அழித்திட வேண்டும் என்ற உணர்வின் ஏக்கமே நமக்குள் அதிகமாகப் பரவிவிட்டது.

மதங்களால் இயக்கப்பட்ட சாஸ்திர நிலைகளிலும் சாங்கிய நிலைகளிலும்தான் சிக்குண்டு உண்மையினுடைய நிலைகளை நாம் அறிய முடியாது இன்றும் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தகைய வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டோமோ அந்த மதத்திற்குக் கீழ் நல்ல ஒழுக்கத்தைக் காட்டினாலும் நல்ல ஒழுக்கத்தைக் கொண்டு அவன் இந்த மதத்திற்கு விரோதமாகச் செய்கின்றான் என்று எதிர்மறையானதைப் பதிவு செய்யும் பொழுது அந்த மதத்திற்குள்ளேயே வெறுப்பின் தன்மை வளர்க்கப்பட்டுவிடுகின்றது.

வெறுப்பின் தன்மை கொண்டு “இவன் துரோகி” என்று பறைசாற்றும் பொழுது அவன் மீண்டும் “இவனை துரோகி” என்ற நிலைகளில் மதங்களில் இது உருவாக்கப்பட்டு அதனின் நிலைகளில் தான் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டுள்ளது.
இன்றைய உலக நிலை
இந்த நிலைகளில் எதை எதை நமக்குள் வளர்த்துக் கொண்டோமோ மனிதனுக்குள் விளைந்த இத்தகைய உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூமியில் படர்ந்து கொண்டேயுள்ளது.

அன்றைய காலங்களில் மந்திரம் எந்திரம் என்ற நிலைகளில் போர் முறைகள் வந்தாலும் இன்று இயந்திரத் துப்பாக்கிகளும் அணு விசைகளும் வந்துவிட்டது.

எலெக்ட்ரானிக், லேசர் முறை கொண்டு போர் முறை உருவாகி யுத்தங்கள் வரும் நிலை ஆகிவிட்டது. மனிதன் மனிதனையை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலை ஆகிவிட்டது.

இது தான் இன்றைய நிலை. எந்த மதத்திற்குள் ஏற்படுத்தப்பட்ட கடவுளாக இருந்தாலும் அந்த மதத்தையே காக்க முடியாத நிலைகள் உள் பூசல்கள் அதிகமாகிவிட்டது.

மனிதன் மனிதன் என்ற நல் அறிவை இழக்கும் போர் முறைகள் வந்து மனிதனுக்குள் மனிதன் அழித்துக்கொண்டு இருக்கும் நிலைகள் தான் உலகெங்கிலும் பரவியுள்ளது.

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் ஆட்சியும், தன் கொள்கையைக் காப்பதற்காகப் போர் முறைகள் செய்து, தனக்கு எதிர்நிலையாக இருப்பதை அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் தோன்றியதே தவிர இவர்களுக்குள் வணங்கிய கடவுள் மக்களைக் காக்க வந்ததா..,? கடவுள் இவரைக் காப்பாற்றியதா…,? கடவுளைக் காக்க மனிதர்கள் தன் மதத்தின் கீழ் எப்படிச் செயல்படுகிறார்களா..,? என்று சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைத்தான் எமது குருநாதர் காட்டினார்.

மனிதனாக இருக்கும் நமக்குள் கடவுளாக இருக்கும்போது நாம் எண்ணியதை இயக்கி 'ஓ' என்று ஜீவனாக்கி கடவுளாக அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகிறது? என்று காட்டினார்.
எல்லோரும் மெய்ஞானிகளாக வேண்டும் என்ற நிலையில் விண்ணுலகில் வாழ்பவர்கள்
எல்லா மதங்களிலும் “எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நல் உணர்வை ஊட்டியவர்கள் அனைவருமே விண்ணுலகில் இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் “மதமற்ற நிலைகளில்” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

உலக மக்கள் எல்லோரும் அருள்ஞானிகளாக வேண்டும், மெய்ஞானிகளாக உயர்ந்திட வேண்டும் என்ற உணர்வின் தொடர் கொண்டு வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளனர்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையை, நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவும் சப்தரிஷி மண்டலம் அடைவதே கடைசி எல்லை. இதுதான்  மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள்.

எல்லோரும் நல்லவரே...!
உயிரே கடவுள்... உடல் ஆலயம்...!

September 12, 2016

"ஞானக் கண்"

கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.

பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்துவிட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.

ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.

இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது

இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.

இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.

இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.

தாய் உற்று பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.

சில குழந்தைகளில் இப்படி ஆகும்.

ஏனென்றால், சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.

முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.

இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.

பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது? என்ற நிலையையும் காட்டினார்.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.

இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள் எனக்குள் அதைப் பாய்ச்சி குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி "என்னை நீ பார்..," எனக்குள் அது எப்படி இயங்குகின்றது? உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையைக் காட்டினார்.

அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார்.

இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம். உங்களாலும் இதைக் காண முடியும் உணர முடியும். 

அண்டத்த்தின் ஆற்றல் இந்தப் பிண்டத்திற்குள்ளும் உண்டு. உங்களை நீங்கள் நம்புங்கள். 

September 11, 2016

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் பகுதியில் வாழ்ந்த அகஸ்தியனின் பாதச் சுவடிகளில் பதிவான உணர்வின் ஆற்றல்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் விண்னை நோக்கி ஏகுவதும் இந்தச் சூரியனைப் பார்ப்பதும் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் அதன் தொடர் வரிசையாக மற்ற நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவும் நிலையும் அவன் சக்தி வாய்ந்த நிலைகளில் உற்றுப் பார்க்கும் நிலைகள் அவனுக்குள் வருகின்றது.

அகஸ்தியன் இதைப் போன்ற உணர்வுகளை அவன் நுகர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை அவனுக்குள் வளர்க்கும் தன்மை பெறுகின்றான்.

பிற மண்டலங்களிலிருந்து (பேரண்டத்திலிருந்து) 27 நட்சத்திரங்கள் எப்படி இதைக் கவர்கின்றது? அது தனது உணர்வின் ஒளிக் கதிர்களை எப்படிப் பரப்புகின்றது?

சூரியன் அதை எவ்வாறு கவர்கின்றது?

அது வரும் பாதையில் மற்ற கோள்கள் எப்படி அதை இடைமறித்துத் தான் சுழலும் நிலைகளில் துருவப் பகுதியில் நுகர்கிறது? தன் சுழற்சியால் வெப்பமாவதும் அது நுகர்ந்த உணர்வுகள் கொண்டு கோள்கள் எப்படி விளைகின்றது? என்ற பேருண்மைகளை அகஸ்தியன் தனக்குள் கவர்கின்றான். அவனுக்குள் அது விளைகின்றது.

தனக்குள் அப்படி விளைந்த உணர்வின் எண்ணங்களைப் பரப்புகின்றான். அவன் பரப்பிய எண்ணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டேயுள்ளது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கண்ட உணர்வுகளும், இவனில் விளைந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இவை அனைத்தையும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்து அலைகளாக இன்றும் பெருகிக் கொண்டுள்ளது.

அவன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த நிலைகளை அந்த அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்றது அனைத்தும் நீங்கள் அனைவரும் பெற முடியும். அதைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசமே.

ஏனென்றால், அகஸ்தியன் சில பகுதிகளில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடுகளும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகளும் தரையில் இங்கே பதிந்துள்ளது.

பதிந்திருந்தாலும் எங்கே அவரின் பதிவுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது.

அந்த இடத்தில் தான் உங்களுக்கும் இந்த உபதேசத்தை உணர்த்தி உணர்வின் நினைவாற்றலை அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) செலுத்தச் செய்கின்றோம்.

இந்த உணர்வுகள் பதிவாக்கிவிட்டால் அந்த அகஸ்தியன் இளம் பருவத்தில் பெற்ற அந்த ஞானத்தை நீங்கள் பெற முடியும். அந்த ஆற்றலையும் பெறமுடியும் என்பதைத்தான் யாம் உணர்த்திக் கொண்டுள்ளோம்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தக் காட்டு பகுதியெல்லாம் வரச்சொல்லி நடக்கச் செய்து அகஸ்தியன் உணர்வுகள் எவ்வாறெல்லாம் பதிந்திருக்கின்றது என்றும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு குருநாதர் காட்டிய உபாயத்தின் துணை கொண்டு அதையே அந்த உணர்வை நினைவு கொண்டு இப்பகுதிகளில் (பாபநாசம்) முதல் காலங்களில் யாம் சுற்றுப்பயணம் வந்தது தான்.

சூனியமாக இருந்த ஆதியிலிருந்து இந்தப் பேரண்டம் எவ்வாறு உருவாகி வந்தது என்று அகஸ்தியன் கண்ட நிலைகளை நம் குருநாதர் எம்மிடம் காட்டினார்.

ஆரம்பத்தில் தென் பகுதியில் தோன்றிய அந்த அகஸ்தியன் தன் இளம் வயதிலேயே பேரண்டத்தின் பேருண்மைகளை உணரும் பருவம் வந்தது.

இந்தப் பேரண்டம் இருண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷத்தின் தன்மை எப்படி உருவாகின்றது? அந்த விஷத்தின் தன்மை அணுக்களாக எப்படிப் பெருகுகின்றது? என்பதையெல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இன்று சூரியன் இருக்கின்றது. அதிலிருந்து அணுக்களாக வெளி வருகின்றது.

ஆனால், ஆதியில் சூரியனே இல்லாத பொழுது அது ஆவிகளாக மாறுகின்றது. ஆவிகளாக இருக்கப்படும் பொழுது அது அடர்த்தியாகி மேகங்கள் எப்படி இருக்கின்றதோ இதைப் போல அக்காலங்களில் மேகங்களாக எப்படித் தொடர்ந்துள்ளது என்ற நிலையையும் உணர்ந்தான் அகஸ்தியன்.

இது அகஸ்தியர் தன் வாழ்க்கையில் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அது “முன்னோக்கிச் சென்று” இன்று அண்டத்தின் ஆற்றல் எப்படி என்ற நிலையை அவனால் அந்த விஷத் தன்மையின் ஆற்றல் கொண்டு இந்த வலிமை பெற்றதனால் காண முடிந்தது.

அந்த வலிமையான எண்ண அலைகளால் இந்த உலகம் எப்படி உருவானது? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? சூரியன் எப்படி உருவானது? என்று கண்டறியும் ஆற்றலும் அவனுக்குள் வருகின்றது.

இந்த ஆற்றல் அவனுக்குள் எப்படி வந்தது என்ற நிலையை இங்கே குருநாதர் அதை உபதேசித்தருளினார். இந்த உணர்வின் நிலையைப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி அந்த அலையின் ஆற்றலை நீ எப்படிப் பருக வேண்டும் என்பதையும் உபதேசித்தார்.

அதன் வழி கொண்டுதான் உங்களுக்கு இப்பொழுது சொல்வது.

பேரண்டத்தில் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத பொழுது இருண்ட நிலைகள் ஒரு அடர்த்தியான நிலை வரும் பொழுது ஒரு சிறு வெப்பமாகின்றது.

வெப்பத்தால் ஒரு ஆவி மாதிரித் தோன்றுகின்றது. ஆவிகளாக உருவான பின் அடர்த்தியின் தன்மை நாளாகும் பொழுது அது நஞ்சாக எப்படி மாறுகின்றது? என்று அகஸ்தியன் கண்டான்.

இதை இன்று விஞ்ஞான அறிவில் எப்படி திரவகத்தை ஊற்றிய பின் அதனுடன் சேர்ந்த பின் எப்படி எப்படியெல்லாம் மாறுகின்றது என்று காணுகின்றார்களோ அதே போன்று குருநாதர் பேச வைத்து உணர்வினை இயக்கச் செய்து அந்த அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் கவர்ந்து அவன் கண்டுணர்ந்த தொடர்பை நீ எப்படிப் பெறவேண்டும் என்ற நிலையை குருநாதர் உணர்த்தினார்.

அதன் தொடர் வரிசை கொண்டு பார்த்தேன்.

அவ்வாறு நான் பார்த்த, கண்டுணர்ந்த, எனக்குள் விளைய வைத்த அந்த உண்மையின் உணர்வுகள் அனைவரும் எளிதில் பெற முடியும் என்பதற்குத்தான் இங்கே பாபநாசத்தில் வருடம் தோறும் கூட்டமைப்பாக அமைத்து அந்த அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறச் செய்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி, 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

September 9, 2016

“ஒ.....ம்” “ஒ.....ம்” “ஒ.....ம்” - பிரணவம் - ஞானிகளின் விளக்கம்

நமக்குள் இதற்கு முன் அறியாது சேர்ந்த எத்தனையோ உணர்வுகளால் கேன்சர், டி.பி., ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருகின்றது. அந்த உணர்வுக்கொப்ப அணுக்கள் தூண்டுகின்றது. அந்த உணர்வின் தன்மையை நுகர்கின்றோம்.

அதனால் நம்மை அறியாமலே உடலில் வேதனைப்படுகின்றோம். வேதனை என்ற உணர்ச்சிகளை உந்துகின்றது.

வேதனைப்படும் அணுக்கள் நம் உடலில் சேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது நம் இரத்தத்தின் வழி உயிரின் சிறு மூளைக்கு எட்டுகின்றது. அணுக்களுக்குள் வேதனை என்ற உணர்வு வருகின்றது.

நம் உயிர் உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகின்றது. அந்த உணர்வின் நினைவாற்றல் “வலிக்கும் இடத்தைக் காட்டுகின்றது”.

அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது அந்த வலி இருக்கும் இடங்களில் எந்த விஷத் தன்மையை அந்த அணுக்கள் பெற்றதோ அதற்கு நேரடியாகவே உணவைச் செலுத்தச் செய்கின்றது.

நமக்குள் தீமையை விளைவிக்கும் அல்லது நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் நம் உடலைச் சிதையச் செய்யும் அணுக்கள் உருவாகியிருந்தால் அத்தகையை சிதைவின் நேரத்தில் நமக்குள் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது,

ஆக, இந்த உணர்வின் தன்மை உயிருக்கு எட்டுகின்றது. ஆனால் எட்டும் பொழுது வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையான அணுக்களைத் தான் பெருக்க உதவுகின்றது.

அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா..,?

ஆகவே, நாம் எதைப் பெருக்க வேண்டும்?

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம் உடலில் எங்கே வேதனை உருவாகி இருக்கின்றதோ அந்த அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், அவை மகிழச் செய்யும் அணுக்களாக மாற வேண்டும் இந்த உடலில் நாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால், வேதனைப்படுவதற்கு மாறாக, வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாக விடாமல் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும், மகிழ்விக்கும் உணர்வின் அணுவாக விளைய வேண்டும் என்று நாம் நம் நினைவாற்றலைச் செலுத்தப் பழகிக் கொள்தல் வேண்டும்.

இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமன் எப்பொழுது கல்யாணராமனாகின்றான்? (சீதா என்ற) மகிழ்ச்சி என்ற உணர்வைச் சேர்க்கும் பொழுதுதான் கல்யாணராமன் ஆகின்றான்.

எல்லோருடைய எண்ணங்களை ஒன்றாக இணைத்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை ஒன்றாக்கிப் பாருங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி அனைவரும் பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்குள் “ஆனந்தக் கண்ணீர்” வரும். ஆக, அன்புடன் அரவணைக்கும் அணுவின் தன்மை உருவாகும். இதைப் போன்ற உணர்வுகளைத் தான் ஜீவ அணுவாக நம் உடலாக மாற்ற வேண்டும் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஏனென்றால் நம் உயிர் “ஓ.., ம்” என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.

வெறுமனே “ஓம் ஓம்” என்று சொன்னால் அர்த்தமற்றது. நாம் “ஓம்.., ஓம்.., ஓம்..,” என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் உடலில் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் இப்பொழுது யாம் கூறிய தியான முறைப்படி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகின்றது.

அந்த உணர்வின் வலுவை நமக்குள் உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றது. இதன் வழி கொண்டு மகரிஷிகளின் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் செலுத்துங்கள்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது “நம்முடைய நினைவாற்றல்” அங்கே பெருகுகின்றது. அவ்வாறு பெருகும் நிலைகள் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே மகரிஷிகள் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

சப்தரிஷி மண்டலம் அடைகின்றோம், மனிதனின் கடைசி எல்லை அதுவே.

September 8, 2016

நம்மை ஆட்டிப் படைக்கும் வேதனையிலிருந்து மீள எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால், நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது, வேதனையாகின்றது, நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால், சிலர் என்ன சொல்வார்கள்?

இப்படித்தான் நான் எண்ணினேன். ஆக, இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால் அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா.., இன்னும் நிற்கவில்லையே..,” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்?

அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே.., வலி நிற்கவில்லையே..,” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே, இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..,?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ, வேதனையோ, நோயோ எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.


தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெறமுடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

September 7, 2016

1000 வருடம் தவமிருந்த ஆன்மா - பாபாஜி

குருநாதர் எம்மை ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார்.

போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன்.

உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாக படர்ந்து இருக்கின்றது.

பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது.

அங்கே போய் உட்காருடா என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன்.

திடீரென்று தண்ணீர் வருகிறது. வேகமாக வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது.

வேறு வழி இல்லை.

தண்ணீர் வர வர வர வர அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன்.

மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும் என்ற சந்தேகமும் வருகின்றது.

பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்..,” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை, குதித்தேன்.

எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால், ரிஷிகேசத்தில் இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை.

அங்கே மரம் இருந்தது பாருங்கள். இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது.

“ஓ….ம்.., நமச்சிவாய..,
ஓ…,ம்…, நமச்சிவாய..,” இதே சொல் கேட்கிறது.
“ஓ..,ம்..,” என்று அந்தத் “தொனியே..,” சப்தம் அழகாகக் கேட்கின்றது.

ஓம் நமச்சிவாய என்று சொல்லி தத்துவப்படி தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை.

இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது.  

இந்த மாதிரி அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர். “நீ அதைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார்.

சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது. முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டுகின்றார்.

ஏனென்றால், அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்.,” என்றார் குருநாதர்.

அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர்.

அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால், இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது.  உள்ளுக்குள் இருந்து “ஒளி..,” அப்படியே வீசுகின்றது,

உள்ளே தீபம், விளக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்..,” என்று அடிக்கின்றது.

அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார். போகும் இடம் தெரியவில்லை.

அப்புறம்தான் இதை எண்ணி குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி இந்த மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக “அந்த இடத்தைக் காட்டுவதற்காக” இந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றார்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து அதில் போய் ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த ஆன்மா பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர்.

எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான் இந்த அலைகளை (தீமைகளை) மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது.

குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார்.

எதன் ரூபமாக?

இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்..,” என்று சொல்கின்றார் குருநாதர்.

இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்..,” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார்.
அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார்.

மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார்.

அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால், இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது.

அவர் “எதைப் பெறவேண்டும்..,” என்று எண்ணினாரோ அங்கே பெறவேண்டும் என்று குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும், “என்றும் ஒளியின் சரீரம் அவர் பெறவேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன்.

அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராகப் போகின்றது.

எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”.

அப்பொழுது என் வாழ்க்கையில் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர். இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்குக் கரைகின்றது. அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர்.

நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது.

ஆனால், இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால், போகும் பாதை இல்லை.

அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன் என்றார் குருநாதர்.

அங்கே ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும்.

அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெறவேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு, எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர்.

இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார்.

அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்தும் நிலையும் தெரியாது, ஒன்றும் தெரியாது.

ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா.

குருநாதருடைய பாதை சென்றாலும் கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து” மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும்.

அவர்கள் விண் சென்றால் இதனின் உணர்வு கொண்டு நம்முடைய எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்கின்றது. அதனின் துணை கொண்டு மற்றவர்களையும் விண் செலுத்த முடியும். பிறவா நிலை என்ற நிலையை எல்லோரையும் அடையச் செய்ய முடியும்.

இதைத்தான் அந்த இடத்தில் ரிஷிகேசத்தில் எனக்கு (ஞானகுரு) உணர்த்திக் காட்டுகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் பிறவா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெற எமது அருளாசிகள்.