ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2023

“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?

“நாம் உயர்வான எண்ணங்களை எண்ணும் பொழுதெல்லாம்…” அந்த நேரம் நல்ல நேரமாகின்றது. அப்போது உயர்வான சிந்தனைகளும் உயர்வான நிலைகளும் நமக்குக் கிடைக்கின்றது.

நாம் தொழில் செய்கிறோம்… கடையிலே பொருள்களைப் பொட்டலமாக வைத்து வியாபாரத்திற்காக வைக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

கடைக்கு வருபவர்கள் பொருள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுது நாம் எந்தெந்த எண்ணத்துடன் கொடுக்கின்றோம்…?

பொருள்களுக்குண்டான பணத்தை
1.அவர் சரியானபடி கொடுப்பாரா…? தர மாட்டாரா…?
2.அல்லது போன தடவை போன்று பணத்தைக் கொடுக்காது இழுத்தடிப்பாரா…? என்ற
3.இந்த எண்ணத்தோடு நாம் கொடுத்தால் என்ன ஆகின்றது.

ஏனென்றால்... நம்மிடம் பொருளை வாங்கிச் செல்வோர் அதை நல்ல முறையில் உபயோகித்து (அல்லது மற்றவருக்கு விற்று) அந்தப் பணத்தை உடனே நமக்குக் கொடுக்க வேண்டும். அவருக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால்
1.நாம் நல்லதாக எண்ணுகின்றோம் என்று அர்த்தம்… அந்த நேரமும் நல்ல நேரமாக அமைகின்றது.
2.அதே சமயத்தில் பொருளை வாங்கிச் செல்வோருக்கும் அங்கே நல்ல வியாபாரம் ஆகிறது.

ஏனென்றால் நாம் எதை எண்ணி… தொட்டு… அந்தப் பொருளை எடுத்துக் கொடுக்கின்றோமோ… அதிலே நம் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.. பொருள்களிலும் அந்தக் காந்தப் புலன் உண்டு.

நாம் தொட்டு எடுத்துக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் எத்தகைய எண்ணங்கள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோமோ “அது கலந்து தான்…” அங்கே செல்கின்றது.

நாம் சந்தேகப்பட்டு…
1.பணத்தைக் கொடுக்க மாட்டான்… இழுத்தடிப்பான்…! என்று
2.இந்தக் கலக்கமான உணர்வுடன் அதைத் தொட்டு எடுத்துக் கொடுக்கும் பொழுது
3.அவர்களும் இதை வைத்து வியாபாரம் செய்தார்கள் என்றால் அங்கேயும் வியாபாரம் மந்தமாகி விடுகிறது
4.அவர்களுக்கும் அந்த நேரத்திற்கு பணம் வராது… நமக்கும் சரியான நேரத்திற்குப் பணம் வராது.
5.அப்போது இந்த நேரம் என்ன ஆகிறது...? நாம் முதலிலே சந்தேகத்துடன் எண்ணித் தொட்டுக் கொடுத்த நேரம் கெட்ட நேரமாகி விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்... ஒவ்வொரு நாளும் உயர்ந்த குணங்களைத் தான் நாம் வளர்த்துக் கொண்டு வர வேண்டும். அப்போது உயர்ந்த உணர்வுகள் நம் கைகளிலும் பதிவாகின்றது. நாம் எதையெல்லாம் தொட்டுக் கொடுக்கின்றோமோ அந்த உணர்வுடனே பொருள்கள் வெளியே செல்கின்றது.

நல்ல நேரத்தை இப்படித் தான் நாம் உருவாக்குதல் வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்கப்படும் போது...
1.அந்தப் பொருளை வாங்கிச் செல்வோர் அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
2.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.பொருள் அவர்களுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுத்துப் பாருங்கள்.

அவர்கள் வியாபாரம் நல்லதாகும்... இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் இரண்டு பேர் காசு கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காதபடி எதையோ பொய்யாகச் சொல்கின்றார்கள். அப்போது அந்த நேரத்தில்... பொய் சொல்கின்றான்... ஏமாற்றுகின்றான்... இப்படிச் செய்கிறானே...! என்று நாம் வேதனைப்பட்டால் என்ன ஆகிறது…?

அதே எண்ணத்துடன் அடுத்து இன்னொருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுப்போம். கொடுத்தால் அந்தப் பொருளிலும் அந்த வேதனை பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கும் இதே உணர்வு இயக்கப்பட்டு அங்கிருந்தும் பணம் அடுத்து வராது
2.இது போன்று எத்தனையோ நிலைகள் நம்மைத் தொடர்ந்து வருகிறது - நாம் அறியாமலே.

அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்ய வேண்டும்...?

சரி... அவர்களுக்கு அந்த வருமானம் வரட்டும்... கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களுக்கு வரட்டும்... என்று நாம் எண்ணிக் கொடுத்தால் நம் உடலில் பதிவாகும் இந்த உணர்வுகள் தொட்டுக் கொடுக்கும் பொருளிலும் படுகின்றது. அவர்களுக்கு அது நல்ல நேரமாக அமைந்து விடுகிறது.

சங்கடப்பட்டு நாம் பொருளைக் கொடுத்தோம் என்றால் அது நமக்கும் கெட்ட நேரமாகிறது... நம் பணம் வருவதில்லை. சங்கட உணர்வு அங்கே இயக்கி அவர்களுக்கும் கெட்ட நேரத்தை உண்டாக்குகிறோம்.
1.ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… (உணர்வின் அழுத்தம்)
2.எல்லாமே எதன் உணர்வின் இயக்கமாக அமைகின்றதோ அதன் நிலையாக அது மாறி விடுகிறது.

நம் குழந்தை மீது பாசமாக இருக்கின்றோம். அவனிடமிருந்து தகவல் வரவில்லை என்ன ஆனதோ…? என்று வேதனைப்பட்டால் இதே உணர்வுகள் குழந்தையை இயக்கப்பட்டு அவன் சிந்தனையைச் சிதறும்படி செய்து விடுகின்றது... அவன் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

நாம் சுவாசித்துக் கவர்ந்து வெளிப்படுத்தும் எல்லா உணர்வுகளும் சூரியனுடைய ஈர்ப்புக்குள் தான் வளர்கின்றது... அதே சமயத்தில்
1.நம் உடலுக்குள் எதன் எதன் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ
2.பதிவானது நம் ஈர்ப்புக்கு வருகின்றது… உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகிறது.

ஒரு செடி எந்தச் சத்தைக் கவர்ந்து கொண்டதோ அதைத்தான் காற்றில் இருந்து கவந்து வளர்கின்றது. அதைப் போன்று தான் நம் உடலுக்குள் எத்தனை வகையான குணங்கள் இருக்கின்றதோ எதை எதை நாம் எண்ணி இயக்குகின்றோமோ அதை இழுத்து வளரத் தொடங்கும்.

இப்படி நம் உடலுக்குள் எண்ணிலடங்காத உணர்வுகள் உண்டு. அதிலே தீமையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாறுகிறது.

இதற்கு நாம் என்ன செய்வது…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி பதிவாக்கி… அதைக் கூட்டி நமக்குள் பெருக்கி பழகுதல் வேண்டும். இது கூடினால் அதைத் தணிக்கின்றது.

எந்தக் காரியத்தைச் செய்ய தொடங்கும் முன்பும்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எல்லாவற்றிலும் அதைக் கலக்கும் ஒரு பழக்கம் வருதல் வேண்டும்.
3.அதற்குத் தான் இந்தப் பயிற்சி.

ஆகவே அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.