ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2023

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிலே “முந்திக் கொள்ள வேண்டும்…?”

உங்கள் வாழ்க்கையில் தொழிலிலோ மற்றதிலோ…
1.எப்போதெல்லாம் சங்கடமோ கோபமோ ஆத்திரமோ சலிப்போ வெறுப்போ வருகிறதோ
2.அந்த உணர்வுகளை அடக்குவதற்கு நீங்கள் “முந்திக் கொள்ள வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
4.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர வேண்டும்… அதை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
6.எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
7.எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
8.இது போன்று வரிசையாக எண்ணித் தினமும் ஒரு இன்ஜெக்ஷன் செய்வது போன்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மருத்துவர்கள் எவ்வாறு ஊசி மூலம் மருந்தினை இரத்தத்தில் செலுத்தி அந்த உடலில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குகின்றனரோ அது போன்று
1.“உங்கள் கண்ணின் நினைவு கொண்டு”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்த நாளங்களில் இஞ்செக்ஷன் செய்வது போல் செலுத்தி
3.அதை வலுவாக்கிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் ஏற்கனவே நாம் எதைக் கண்களால் உற்றுப் பார்த்தோமோ அது தான் இரத்தத்திலே ஜீவ அணுக்களாக மாறுகின்றது.

அதே போன்று இதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தில் எளிதில் பாய்ச்ச முடியும். அவ்வாறு பாய்ச்சி இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு வேகத்தின் உணர்வைக் (TENSION) கூட்டிவிட்டால் அந்த வேக உணர்வே இயக்ச்க சக்தியாக மாறிவிடுகிறது. உணர்ச்சி வசப்படும் நிலைகளை எல்லாம் சமப்படுத்துவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் வலுவாக்கி அதை நாம் நமக்குகந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
1.ஆக நாம் அதை அடக்க வேண்டுமே தவிர
2.அதன் வழியில் அதன் இயக்கமாகச் சென்று விடக்கூடாது.

சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் வேதனையோ வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ அவைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கண்ணின் நினைவு கொண்டு உள் செலுத்தி அடக்கிப் பழகுதல் வேண்டும். பயிற்சியாக இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…! வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை மறக்கத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் செயல்பட்டோம் என்றால் இந்தக் கணக்குக் கூடினால் துருவ நட்சத்திரத்துடன் நாம் இணைந்து விடுகின்றோம்.

இல்லை… இப்படிப் பேசினார்கள்… அப்படிச் சொன்னார்கள்…! என்று பிறருடைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

வேதனை அதிகமானால் நோய் அதிகமாகிறது. நோயாகி உடலை விட்டு சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலுக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வாழ்க்கை வாழுங்கள்.