ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2023

நல்லதைச் சொல்லித் தான் நல்லதாக இயக்க முடியுமே தவிர கெட்டதைச் சொல்லி நல்லதாக்க முடியாது

வீட்டிற்குள் எதிர்பாராதபடி சில குறைகள் வருகின்றது. எப்படி…? நம் பையனைக் கூப்பிட்டு அவசரத்திற்குக் கடையில் சென்று இன்ன பொருளை வாங்கி வா…! என்று அனுப்புகின்றோம்.

ஆனால் கடையிலோ கூட்டம் நெருக்கடியாக இருக்கின்றது. வீட்டிலே விருந்தாளிகள் இருப்பார்கள். “இல்லைங்க… நேரமாகிறது நாங்கள் கிளம்புகிறோம்…! என்று அவர்கள் சொல்லும் அவசரத்திலே... “பையன் இப்பொழுது வந்துவிடுவான்… கொஞ்சம் பொறுங்கள்…!” என்று நாம் சொல்கின்றோம்.

ஆனாலும்… பையன் அந்தப் பொருளை வாங்கி வரக் காலதாமதம் ஆகின்றது.
1.எப்பொழுது பார்த்தாலும் நீ இப்படித்தான் செய்கின்றாய் என்று
2.விருந்தாளிகள் மேல் இருக்கக்கூடிய பாசத்தால்
3.அந்தச் சந்தர்ப்பம் தன் பையனைக் “குறை கூறும் உணர்வுகள்” வந்து விடுகின்றது.

எல்லாமே சந்தர்ப்பம் தான்…!

அப்படிக் குறை கூறும் உணர்வுகள் ஒரு தரம் வந்துவிட்டால் அடுத்து அவன் அதே போன்று சென்றாலும்
1.அன்று போல் இன்றைக்கும் ஏமாற்றி விடாதே…
2.போய் விளையாண்டு கொண்டிருக்காதே…! என்று சொல்லியே அனுப்புவோம்.

அங்கே அவன் போனவுடன் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் “நாம் சொன்ன உணர்வுகள் அவனைத் தாக்கி…” எங்கேயாவது இடறிக் கீழே விழுந்து விடுவான்.

முந்தைய சந்தர்ப்பத்தில் “காலதாமதமானது…” என்று நமக்குள் முதலில் பதிவானது. அது பதிவாகிய நிலைகள் கொண்டு அடுத்து இதைப் போன்று பையன் சென்றாலும் எங்கேயாவது விளையாண்டு கொண்டிருப்பான் வேடிக்கை பார்த்துவிட்டுத் தான் வருவான் என்று எண்ணப்படும் பொழுது
1.இதே உணர்வு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… அந்த உணர்வு கொண்டு பதிவானது அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.வண்டியிலே மோதி விடுவான் அல்லது வாங்கிய பொருளைக் கை தவறிக் கீழே விட்டு விடுவான்... உடைந்து விடும்.

ஆனால் அவன் வருவதற்கு நேரம் ஆக ஆக… இங்கே நம்முடைய மனது வெடுக்கு...வெடுக்கு... என்று இயக்கிக் கொண்டிருக்கும். ஆனால் நம்முடைய எண்ணம் தான் அவ்வாறு இயக்கி அங்கே மாற்றிவிடுகிறது.

அவன் தவறு செய்தானா...? என்றால் இல்லை.

சந்தர்ப்பத்தால் நமக்குள் உருவாகும் இந்த உணர்வுகள் அவன் மேல் எடுக்கக்கூடிய உணர்வுகளும் பகைமை ஆகின்றது.

நண்பருக்குள் உதவி செய்தான் என்று பண்பாக எண்ணும் பொழுது விக்கல் ஆகின்றது. ஆனால் இடைஞ்சல் செய்தான் தொல்லை கொடுத்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது... நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் அங்கே அவனை இயக்குகின்றது.

அது போல் தான் நம் குடும்பத்தில் பையனுடைய நிலைகள் இவ்வாறு செயல்படும் போது அவன் செயல்படும் நிலைகள் நம்மை அறியாமலே இப்படி இயக்கிவிடுகின்றது… இது இயற்கை. அதே உணர்வுக்கொப்ப நம்மை வழிநடத்திச் செயல்படுத்தி வருகின்றது.

அவன் எங்கே போனான்...? எங்கே சென்றான்...? என்ன ஆனான்...? என்ற
1.இந்த வேவ்ஸ் (WAVES)… அலைகள்… உணர்வு… நமக்குள் இருப்பதால்
2.அங்கே எண்ணப்படும் பொழுது “என்ன நேரம் ஆகின்றதே…” என்ற பதட்டமானால் அங்கே அவனை உடனடியாகப் போய் இயக்குகின்றது.
3.நம்மைப் பதட்டப்படும்படி செய்து.. ஆனால் அவனைக் குற்றவாளியாக ஆக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் பையனை எண்ணி வேதனைப்படும் போது நாம் நுகர்ந்த அந்த வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து அணுக்களாக விளைந்து கை கால் குடைச்சலாகி நம்மை வேதனைப்படும்படி செய்கின்றது.

நம்மை அறியாமலே தான் இந்த நிலைகள் எல்லாம் நடக்கின்றது. ஆக இது இயற்கை…!

இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு வாழ்க்கையில் வருவதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதற்குத்தான் உருவம் அமைத்து ஆலயங்களில் அதை உருவாக்கப்பட்டு
1.நீ உன்னுடைய வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளுக்கு எவ்வாறு எண்ண வேண்டும்...?
2.எதனை நீ வழி நடத்த வேண்டும்...? வாழ்க்கை எவ்வாறு வழிப்படுத்த வேண்டும்…? என்று
3.கல்லை அங்கே சிலையாகக் கடவுளாகச் செய்து வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

ஆலயத்திலே காட்டப்பட்ட நிலைகளை எண்ணி “அந்தத் தெய்வீக பண்புகளை நீ வளர்த்துக் கொள்…” என்று அதை எண்ணி எடுக்கும்படி செய்து நமக்கு ஞானிகள் வழி காட்டுகின்றார்கள்.

தீமைகளை நுகரும் சந்தர்ப்பங்களில் எல்லாம்… அந்தப் பொருள் அறியும் நிலையாக அந்த ஆலயத்தில் விளக்கைக் காட்டும் போது
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் என் பையன் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெற வேண்டும்
4.என் கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
5.என் மாமனாருக்குக் கிடைக்க வேண்டும் என் மாமியாருக்குக் கிடைக்க வேண்டும்
6.எல்லோரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று
7.இவ்வாறு மற்றவர்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி
8.பொருளறியச் செய்யும் அந்த உயர்ந்த உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும் என்று ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.

யாருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் சொன்னோமோ… நாம் எண்ணியது போன்று அவர்களும் இந்த ஆலயத்திற்கு வரும் போது எண்ணினால் வெறுப்புகளை அவர்களும் மாற்றிக் கொள்ள முடியும்.

ஒருவருக்கொருவர் வெறுப்பை மாற்றுவதற்குத் தான் அங்கே ஆலயத்தில் தெய்வச் சிலையை அமைத்து எல்லோரும் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி ஞானிகள் செய்துள்ளார்கள்.

காரணம் மாமியார் மீது மருமகளுக்கு வெறுப்பு இருக்கும் அதே போன்று மருமகள் மீது மாமியாருக்கு வெறுப்பு இருக்கும். குடும்பங்களில் இப்படித்தான் ஒருவருக்கொருவர் வேதனையை வளர்த்து நோயை உருவாக்கி சம்பாரித்த சொத்தையும் பாதுகாக்க முடியாதபடி மீண்டும் வேதனையைத் தான் உருவாக்க முடியும்.

ஆக மொத்தம் வேதனையில் இருந்து நாம் விடுபடுகின்றோமா...?

அதற்காகத்தான் அந்த ஆலயத்திலே விளக்கைக் காண்பித்து… அந்த விளக்கின் வெளிச்சத்தால் அங்கே எப்படிப் பொருள் தெரிகின்றதோ…? நம் ஆறாவது அறிவு கார்த்திகேயனாக (வெளிச்சமாக) இருப்பதைச் சரியான நிலைகள் பயன்படுத்துவதற்கு அதை நினைவு கூறி நாம் அந்த உயர்ந்த உணர்வுகளை எடுக்கும்படி செய்கின்றார்கள்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… என்னிடம் வேலை செய்பவர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… என் வாடிக்கையாளர்களும் அவர் குடும்பத்தாரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று இப்படி சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்த பகைமைகளை மறக்க இந்த எண்ணங்களை அந்த ஆலயத்தில் எண்ணும்படி ஒருமித்த நிலையில் கொண்டு வருவதற்கு இதை செயல்படுத்தினார்கள்.

ஒவ்வொருவருமே இந்த முறைப்படி செயல்படுத்தினால் ஒவ்வொருவரும் நுகர்ந்த உணர்வுகள் இறை(ரையாகி… இந்த உடலுக்குள் அது விளையப்பட்டு…
1.விளைந்த உணர்வு செயலாகும் போது அதுவே தெய்வமாக நமக்குள் வந்து
2.நல்ல உடலாக நல்ல சொல்லாக நல்ல எண்ணமாக நல்ல நினைவாக நல்ல இயக்கமாக நல்ல செயலாகச் செயல்படுத்தும்படி
3.நம்மைத் தெய்வமாக மாற்றும் அத்தகைய நிலையினை உருவாக்குவதற்குத் தான் ஆலயத்தை அன்று அமைத்தார்கள் ஞானிகள்.