உடலின் தன்மை மறைந்திடும் நிலை கொண்டது.
ஆனால், மறையா அழியா நிலை கொண்டது உயிரின் உணர்வுகள்.
ஆக, உயிருடன் ஒன்றிய உணர்வுகளை இன்று நாம் இந்த உடலிலே எதையெல்லாம்
சேர்க்கின்றோமோ அவை அழியா நிலைகள் பெறுகின்றது.
இந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றப்படும் பொழுது சேர்த்திட்ட உணர்வுகள் அடுத்த
நிலைகள் அதுவாக விளைகின்றது. ஆனால், இந்த உயிர் என்றுமே எந்த நெருப்பிலுமே
சிக்காது, வேகா நிலை பெற்றது.
ஆகவே, எந்தத்
தீயசக்திகளிலும் நஞ்சான உணர்வுகளிலும் நாம் சிக்காது வேகா நிலை என்ற
நிலையை அடைய வேண்டும்.
ஓர் நஞ்சின் இயக்கத் தொடர்பே ஒரு உயிரணுவின் தோற்றம்
நஞ்சின் தன்மை ஒரு அணுவிற்குள் இணைந்தால் எதனுடன் இணைந்தாலும் அதனின் உணர்வை
இயக்கிக் காட்டி இயக்கச் செய்வது இந்த நஞ்சுதான்.
ஒரு நஞ்சின் தாக்குதல் அதிகரிக்கப்படும் பொழுதுதான் நெருப்பு. ஆக, நெருப்பாக
உருவாகின்றது.
ஆதியிலே அந்த நெருப்பிலே இந்த நஞ்சினைக் கலந்தால் நஞ்சின் சக்தி
இழக்கப்படுகின்றது.
ஆகவே, நஞ்சால் உலகம் உருவானாலும் இயக்கச் சக்தியானாலும்
நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும்போது
இயக்கத்தைத் தணித்து நஞ்சின் ஆற்றலாக
இருண்ட நிலைக்கே மாற்றிவிடுகின்றது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நஞ்சுக்குள் சிக்கி நம் சிந்தனைய
மறைத்திடும் நிலை வரும். அதிலிருந்து நாம் மீண்டிட வேண்டும்.
அவ்வாறு மீளவேண்டுமென்றால் வேகா நிலை பெற்ற அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை
நாம் பருகவேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து, அறியாது சேர்ந்த அறியாது சேரும் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.