ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2017

நம் சொல்லால் நம்மைக் காக்கவும், மற்றவர்களை நல்லவராக்கவும் நாம் கையாள வேண்டிய முறை – நல்லதைக் காக்கும் “காப்பு”

உங்களுக்குள் ஏற்கனவே பதிவு செய்து கொண்ட நிலைகளில் தவறு செய்பவர்களை உற்றுப்பார்த்தவுடன் இந்த உணர்வுகள் இயக்கச் செய்கின்றது.

அவர்களிடம் குற்றத்தின் உணர்வுகள் இருக்கின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் குற்றத்தை நமக்குள் நுழைய விடாதபடி

1.அவர் பொருளறிந்து செயல்படும் அந்த சக்தி பெறவேண்டும்

2.அவர் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று எண்ணினால்,

3.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வருவது இல்லை.

இது நம்மைப் பாதுகாக்கின்றது.

இப்படி ஒவ்வொருவரும் அத்தகைய பாதுகாப்புக் கவசமாக மாற்றிக் கொண்டீர்களென்றால், “நல்லது. இதை நாம் ஒரு வழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடவேண்டும்

ஒவ்வொன்றும் நம் உயிரிலே படும் பொழுது, இந்த உணர்வுகள் “குருக்ஷேத்திரப் போர்.

நம் உடலுக்குள் சென்று விட்டதென்றால் மற்ற உணர்வுகளுடன் கலக்கப்படும் பொழுது “மகாபாரதப் போர் கலக்கங்களும் சஞ்சலங்களும் நமக்குள் வந்து கொண்டே இருக்கும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?

1.யாராக இருந்தாலும் குற்றவாளியாக இருந்தாலும் சரி,

2.அதை விட மோசமான நிலையில் இருந்தாலும் சரி

3.வெறுப்பான நிலைகளில் தவறு செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் சரி,

4.”அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம்.., அது பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் என்றால்

5.அவர்களுடைய உணர்வுகள் சிறிதளவு கூட உங்களிடம் வராது. இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

6.ஏனென்றால் அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள் வரவே கூடாது.

7.அந்த உணர்வு நம்மை இயக்கவும் கூடாது.

அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயத்தில் அந்தத் தெய்வீகப் பண்பும் தெய்வீக அருளும் தெய்வீக நிலையும் அவர்கள் பெறவேண்டும்.

மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் அந்த சக்தி அவர்கள் பெறவேண்டும்.

அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால் நமக்குள் வராமல் இதைச் சேர்த்துக் கொள்கின்றோம்;

இதற்கு அணைப்பாகப் போட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் அது அவர்களுடைய நிலைகள்.

1.அவர்கள் எதை எடுக்கின்றார்களோ அதைப் பெறுவார்கள்.

2.ஆனால், நம்முடைய கடமை ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் சுத்தமாக வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கவேண்டும்.

3.அப்பொழுது சுத்தமாக வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் சுத்தமாகின்றது.

ஆகவே, இந்த முறையைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.

பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ கேட்டீர்கள் என்றால் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அடுத்து “அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த நிலை பெற வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதற்குப் பதில் அவர்களுடன் கலந்து “அப்படிக் கஷ்டம்.., இப்படிக் கஷ்டம் என்று உரையாடிவிட்டீர்களென்றால்

1.அந்தக் கஷ்டம் உங்களுக்குள் கலந்து (MIXER) ஆகி

2.உங்களிடம் விளைய ஆரம்பித்து விடும்.

3.ஆகையினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கஷ்டத்தை நம்மிடம் சொல்வார்கள். நாம் எல்லாம் கேட்ட பிற்பாடு நாங்கள் ஆத்மசுத்தி செய்துவிட்டோம். உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள்சக்தி படர்ந்து

1.உங்கள் குடும்பத்தில் எல்லலோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்;

2.எல்லா நல்ல சக்தியும் கிடைக்கும்;

3.உங்கள் குடும்பத்தில் நன்றாக இருப்பீர்கள்;

4.தெய்வீக நிலை இருக்கும்; தெய்வீகப் பண்பு இருக்கும்;

5.தொழில் வளம் பெருகும்;

6.உங்கள் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள் என்று உங்கள் வாயினால் சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது அது அவர்களுக்கு ஒரு “உற்சாகத்தை ஊட்டும். அதே சமயத்தில் நமக்கும் அந்த “உற்சாகத்தை ஊட்டும்.

ஆகவே எது எப்படி வந்தாலும் நம்முடைய சொல் மற்றவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டுமே தவிர அவர்கள் பட்ட வேதனை நம்முடைய நல்லதைக் கெடுத்து விடக் கூடாது.


நாம் அதற்கு இந்த முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.

“தீமையான எண்ணங்களும் கெட்ட கனவுகளும்” மீண்டும் மீண்டும் வருகிறது என்பார்கள்.., காரணம் என்ன? தியானம் செய்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தினசரி வாழ்க்கையில் பகலில் நாம் எல்லோரிடமும் பழகித்தான் ஆகவேண்டும். அவர்கள் நல்லது கெட்டதை அறிந்துதான் ஆகவேண்டும். அவர்களுடைய தவறுகளை நுகரத் தான் வேண்டியதிருக்கும்.

ஆனாலும், அதிலிருந்து விலகிச் செல்லவேண்டும். ஏனென்றால் கேட்டு அறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் வித்தாக உருவாகிவிடுகிறது. இதுதான் ஊழ்வினை என்பது.

நம் வாழ்க்கையில் எத்தகைய கெட்டதைப் பார்க்கின்றோமோ அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகிறது. வினைக்கு நாயகனாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.

இதிலே எந்த எண்ணங்கள் அதிகமாகச் சேர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி நமக்குள் செயல்படத் தொடங்கிவிடுகிறது. அந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாகச் செயல்படுவது உயிர்.

எந்த அணுவின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதை உயிரான ஈசன் தான் உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அதிபதியாக்கப்படும் பொழுதுதான் அதற்குத் தகுந்தமாதிரி சுவையின் தன்மை உருவாக்கப்படுகிறது.

மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது. ஆத்ம சுத்தி செய்கிறோம்.

1.அடுத்து குறைகளை அடுக்கடுக்காகச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

2.இதுவும் அதனுடன் இணை சேர ஆரம்பித்துவிடுகிறது.

3.நாம் நன்மை செய்யும் உணர்வுகள் தணியத் தொடங்கிவிடுகிறது.

நம்முடைய உணர்வுகளில் நன்மை செய்யும் உணர்வுகள் வளர்ச்சி குன்றும் போது உடலில் நன்மை பயக்கும் உணர்வுகள் குறைகின்றது. நல்ல அணுக்களுக்கு ஆகாரம் இல்லையென்றால் உடலையும் பலவீனப்படுத்தும்.

உதாரணமாக, நாம் வேலை செய்கிறோம் என்றால் கையில் பட்ட அழுக்கை உடனுக்குடன் துடைத்துவிடுகின்றோம்.

1.அப்படித் துடைத்தாலும்

2.முழுமையாகப் போகாமல் சந்துகளில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்.

3.நம் உடலுக்குள் போகும் பொழுது அதன் கெடுதலைக் கொஞ்சமாவது காட்டத்தான் செய்யும்.

இதே மாதிரி ஒவ்வொரு சமயத்திலும் பிறர் தீமைகளைக் கேட்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டாலும் அடுத்து இரவு படுக்கப் போகும்போது மீண்டும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உள்ளுக்குள் எடுத்து ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அப்படிச் சுத்தப்படுத்தினாலும் கூட அந்த உணர்வின் அணுக்கள் “சாப்பாட்டிற்காக ஏங்கும்.

நாம் புலனடங்கித் “தூங்கினாலும்,” அதது உணர்ச்சிகளைத் தூண்டி நம் ஆன்மாவில் கலந்து இழுக்க ஆரம்பித்துவிடும்.

இது ஏனென்றால் ஒரு நண்பரிடத்தில் பேசி இருக்கின்றோம். அவருக்காக வேண்டி அவர் கஷ்டத்தைக் கேட்டிருக்கிறோம் என்றால் அந்த உணர்வுகள் ஆன்மாவில் இருக்கும். அதன் வித்தாக இங்கு இருக்கும்.

எவ்வளவுதான் ஆத்ம சுத்தி செய்தாலும் நம் நண்பனுக்கு அவன் கஷ்ட நஷ்டங்களை நீக்க உயர்ந்த கருத்துக்களைப் போதித்தாலும் அதை நாம் வாங்கித்தான் சொல்கின்றோம்.

அவர் எப்படியும் மீளவேண்டும் என்று எண்ணத்தில் சொன்னதால் அவருக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தத் தீமையில் இருக்கின்றார் என்று அறிய முடிகிறது. இரவில் கனவில் வரும்.

அவருடைய உணர்வும் நாம் சொன்ன நிலையும் இரண்டும் இணைந்து நம் ஆன்மாவில் கலந்து நாம் புலனடங்கித் தூங்கும்போது அழுக்கு அதிமாகப் படும்.

ஏனென்றால், பாசத்தால் அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் கருத்தை ஏற்றுத்தான் நாம் சொல்கிறோம். அந்த உணர்வுகள் நாம் புலன் அடங்கித் தூங்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் உருவாமாகவே சிலருக்கு நேரடியாகவே தெரியும்

அந்த மனிதரின் நிலைகள் அவருக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் “பிசாசைப் போன்று தெரியும். ஏனென்றால் அந்த ஆக்ரோஷ உணர்வுகள் நாம் பக்தி வழியில் கண்டுணர்ந்தபின் அவர் சொன்ன உணர்வுகள் இதனுடன் கலந்து ரூபமாகத் தெரியும்.

அவருக்குள் எதிரியாக அவர் நல்ல உணர்வுகளுக்கு எதிரியாக உருவாகிற மாதிரி காட்சியாகத் தெரியும். இந்த உணர்வின் ஓட்டங்களில் அவருக்கு ஏற்படும் நிலைகள் தொழில் நஷ்டமாவதும், கொடுக்கல் வாங்கலில் முடியாத நிலைகளும் தெரிய வரும்.

அதாவது அந்த உணர்வுகள் நம் புலனில் கலந்து நாம் எடுக்கும் அந்தத் “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு அதைத் தெரிய முடிகின்றது. நாம் இந்தத் தியானத்திலிருக்கும் பொழுதோ சும்மா இருக்கும் பொழுதோ கனவிலோ நினைவுகளில் வரும்.

அந்த மாதிரித் தெரிந்து கொண்டாலும்,

1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.

2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும்,

3.நாம் அமைதியாக இருக்கும் பொழுது இந்த ஆன்மாவில் உள்ளபடி,

4.நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

அந்த நேரத்தில் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் நினைவை துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தோடு இணைக்க வேண்டும். சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.

இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும். இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது.


இப்படி தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அதை அகற்றும்படி நாம் செய்ய வேண்டும்.

மெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள “அர்ச்சனை” எது?

போகமாமகரிஷி, அகத்தியமாமகரிஷி, கோலமாமகரிஷி இவர்களெல்லாம் பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளைத் தான் உணர்ந்தறிந்தவர்கள்.

அவர்கள் காட்டிய சாஸ்திரங்களைப் பின்பற்றாது புற நிலைகளில் “வேள்விகள் செய்தால் சரியாகும் என்று அந்த ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையினுடைய நிலைகளை மறைத்துவிட்டார்கள்.

பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் நாம் அனைவருமே மந்திரத்திலே சிக்குண்டு இருப்பவர்கள்.

நாம் எந்தெந்த மந்திரங்கள் உய்யப்படுகின்றோமோ அந்த மந்திரங்கள் நமக்குள் சென்ற பின் நாம் அதிலிருந்து மீளமுடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

1.நமக்குள் அனைத்து ஆற்றல்களும் உண்டு என்று சொன்னாலும் அதை “நம்புவார் யாரும் இல்லை.

2.இன்றைக்கு எல்லா ஆலயங்களுக்கும் சென்றுதான் திருப்தி பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம்.

3.நம் மனித உடலுக்குள் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலைகளைத்தான்

4.ஆலயத்தில் அனைத்து உருவங்களையும் காட்டி தெய்வ குணங்களாக அன்று மெய்ஞானிகள் சொன்னார்கள் என்று

பலமுறை யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆலயங்களுக்குச் செல்லும்போது அந்த ஆலயங்களில் பூஜிக்கும் முறைகளையும் யாம் சொல்லியிருக்கின்றோம். அதையாவது சரியாகச் செய்கின்றார்களா என்றால் இல்லை.

காசைக் கொடுத்தால் தான் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது. அங்கே சென்று அர்ச்சனைக்குக் காசு கொடுத்துவிட்டு நாமும் எட்டிப் பார்க்கும் நிலைகளில்தான் இருக்கின்றோம்.

அர்ச்சனை என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாகச் சுவாசித்தல் வேண்டும்.

சுவாசித்த அந்த உணர்வுகள் நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் அது படுகிறது

உயிரிலே படும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நமக்குள் எண்ணங்கள் வலுப்பெற்று நாம் எத்தகைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ

1.அந்த உணர்வின் சக்தியைச் சுவாசித்து

2.நம் உயிரான ஈசனிடம் படும்போது

3.நாம் கோயிலுக்குள் செய்வது போன்று

4.நம் உயிரான ஈசனுக்குள் அர்ச்சனை ஆகின்றது.

அத்தகைய மணத்தின் தன்மை கொண்டுதான் நம் உடலின் உணர்வலைகள் செயலாக்கி அந்த அலைவரிசையின் நிலைகள்தான்

1.கண்களின் பார்வையும் காதின் நிலைகளும்

2.சொல்லும் செயலும் உடலின் அமைப்பும்

3.நாம் எடுத்துக்கொண்ட சத்து உடலாக அமையும்.

ஆகவே, நாம் எடுக்கும் ஆற்றல்மிக்க உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்தால் தான் உயிரிலே உராயச் செய்தால் தான் உயிரிலே மோதச் செய்தால் தான் புருவ மத்தியில் இணைத்தால் தான் அதை நமக்குள் சிருஷ்டியாக்க முடியும்.

இல்லை என்றால் நாம் நுகர்ந்தது நமக்குள் இயக்கமாகி அதை உயிர் சிருஷ்டித்துவிடும். இதைத்தான் ஆலயங்களில் சாதாரண படிக்காத பாமர மக்களும் புரியும் வண்ணம் “அர்ச்சனை என்று காட்டினார்கள்.

புறத்தில் செய்வதைத்தான் பழகி இருக்கின்றோமே தவிர அகத்திற்குள் செய்ய வேண்டியதை விட்டுவிட்டோம். நமக்குள் உள் நின்று இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரை மறந்துவிட்டு அங்கே உள்ள சிலைக்கு அர்ச்சனை செய்வதால் எந்தப் பலனும் இல்லை.


இந்த விஞ்ஞான உலகத்தில் அனைத்தையும் ஒரு நொடிக்குள் அழித்துவிடும் இந்தத் தருணத்தில் நாம் இந்தச் சாமி செய்யும் இந்த ஜோசியம் செய்யும் அந்த ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் இயந்திரம் செய்யும் என்று இருப்போமேயானால் “அறியாமையிலிருந்து நாம் விடுபடவில்லை என்றுதான் அர்த்தம்.

May 20, 2017

“யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை” ஆனால் கடுமையான நோய் வருகிறது என்றால் அதன் காரணம் என்ன...?

விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு இன்று பூச்சி புழுக்களைக் கொல்ல கடும் விஷம் கொண்ட பூச்சி மருந்துகளைச் செடி கொடிகளில் பாய்ச்சுகின்றனர்.

உதாரணமாக நெல் பயிரில் விஷத்தைப் பாய்ச்சியபின் பூச்சிகளும் புழுக்களும் மடிந்துவிடுகின்றன. ஆனால், அந்த நெல் பயிரில் விஷத்தன்மை ஊடுருவி விடுகின்றது.

1.அதில் நெல் மணியை உருவாக்கும் அமிலங்களில் இந்த விஷம் கலந்துவிடுகின்றது.
2.நெல்லுடன் சேர்த்து விஷம் அதிகரிக்கின்றது.
3.அதை(த்தான்) நாம் உணவாக உட்கொள்ளுகிறோம்.

ஏற்கனவே நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றும் நம் உடலில்
1.இத்தகையை பூச்சிகளைக் கொல்லும் விஷம்
2.ஒவ்வொரு உணர்விலும் உணர்வுகளிலும் அதிகமாகின்றது.

இன்று எடுத்துக் கொண்டால் எந்தப் பயிர் ஆனாலும் பூச்சிக்கொல்லி “மருந்து தெளிக்காதபடி விவசாயம் செய்ய முடிவதில்லை.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலும் இந்த விஷத்தின் தன்மையே கலந்துள்ளது.

இப்படி நம் உடலில் சிறுகச் சிறுக நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும்போதுதான் நமக்கு கை கால் குடைச்சல் இதைப் போன்ற மற்ற உபாதைகளும் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்யும் நிலைகளும் ஏற்படுகின்றது.

இன்று மனிதனுடைய சிந்தனை குறைந்த செயலுக்கு முழுக்காரணமே நாம் உணவாக உட்கொள்ளும் உணவுப் பொருள்களில் கலக்கப்படும் கெமிக்கல் கலந்த மருந்துகள் தான்.

நாம் பரிணாம வளர்ச்சியில் விஷத்தன்மைகளைக் குறைத்துக் குறைத்து விஷத்தைக் கழிக்கும் உறுப்புகளாக வளர்ந்து தான் இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக உருவாகியுள்ளோம்.

ஆறாவது அறிவாக வளர்ந்து வந்த நாம் இத்தகைய பூச்சிகளைக் கொல்லவும், களைகளைக் கொல்லவும் இதைப் போன்று மனிதனுக்குள் வரும் நோய்களை நீக்கப் பல விதமான விஷமான மருந்துகளையும் எடுத்துக் கொண்டால் விஷங்கள் நம் உடலுக்குள் அதிகரித்துவிடும்.

1.விஷத் தன்மைகள் அதிகரிக்கும் பொழுது
2.வேக உணர்வுகள் கூடி சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
3.தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகிவிடுகின்றது.
4.குற்ற இயல்புகளும் அதிகமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது என்ற நிலையைச் சிந்தித்தல் வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத் தன்மைகள் பரவப்பட்டு விஷ உணர்வுகளை உணவாக உட்கொள்ளும்போது இதே விஷத்தின் தன்மை இன்னொரு பக்கம் வேறொரு நாட்டில் தெரிவதாக இருந்தாலும்
1.அதைப் பார்த்துக் கேட்டறியும் நிலையில்
2.நமக்குள் அவைகளை ஈர்க்கும் சக்தியாகின்றது
3.அதன் வழியிலும் நமக்குள் அதே நோய்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

ஆடு மாடுகள் மற்ற மிருகங்கள் எல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைத் தன் மலமாக மாற்றிவிடுகின்றது.

மனிதர்களான நாம் பூச்சிகளைக் கொன்றுவிட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு காட்டுகின்றது. ஆக, பூச்சியைக் கொன்று பயிரை உருவாக்குகின்றான்.

ஆனால், பயிரை உருவாக்கினாலும் இந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள் விஷத்தன்மையை ஊட்டிவிடுகின்றது.

இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நம் அனைவரின் உடலுக்குள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மையைப் பயிர்களில் தூவப்படும்போது நம் உடலில் பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் தன்மை விளைகின்றது.

1.அப்படி நம் உடலில் விளையும் விஷத்தை நுகரும் அணுக்கள்
2.அந்த உணர்ச்சியை ஊட்டி
3.அதே விஷ உணர்வை உணவாக எடுக்கத் தொடங்கும்போது
4.நம் உடலில் (புதிதாக) ஒவ்வொரு உறுப்பிலும் கடுமையான நோய்கள் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நஞ்சினை ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவசியம் நாம் நுகரந்தே ஆக வேண்டும்.

மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள் மின் கதிர்கள் போவதைக் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும்போது எதிர்நிலையாகி மின்னல்கள் உருவாகின்றது. மின்னலாகிப் பரவும் ஒளிக்கற்றைகளை நம் உடலிலுள்ள அணுக்கள் அதைப் பெறும்.

அதை நாம் பெறத் தொடங்கினால் “நமக்குள் சிந்திக்கும் திறனும் தீமைகள் நமக்குள் உட்புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று நம்மை நாம் காத்துக் கொள்கிறோம். நாம் வெளிவிடும் மூச்சலைகளால் இந்தக் காற்று மண்டலத்தையும் தூய்மையாக்க முடியும்.

அத்தகையை திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ளவே நஞ்சை ஒளியாக மாற்றிடும் அந்த “அகஸ்தியனின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.


உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.

இனி வரும் காலத்தில் "சித்திரக்குள்ளர்கள்" தோன்றுவார்கள்...!

இந்த விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் உண்டான வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

விஞ்ஞானத்தில் விஞ்ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளால் இன்று காற்று மண்டலமே விஷத் தன்மை பரவிட்டது.

உதாரணமாக நீர் மூழ்கிக் கப்பலை (SUBMARINE) உபயோகித்துப் பல காலம் கடலுக்கடியில் அமிழ்ந்து “ஆராய்ச்சி செய்யலாம் என்று எண்ணிச் செயல்பட்டனர்.

இந்த நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போய்விட்டது அதில் இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்,

இப்படி அணுக் கதிரியக்கத்தால் அவன் ஓட்டிய அந்தக் கப்பலினால் தீமைகள் விளைகின்றது என்று தெரிந்து கொண்டனர்.

அதிலே பட்ட கசிவான அணுவின் தன்மைகள் (RADIOACTIVE) மற்ற பொருள்களுடன் இணைந்தபின் இது எங்கே சென்றாலும் அந்த (தன்) நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைகள் உணர்ந்து கொண்டனர்.

அதை எப்படி மறைப்பது! என்று எண்ணுகின்றார்கள்.

மறைக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதை அடக்குவதற்காக கடலின் கண நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தயார் செய்தார்கள்.

செய்தாலும் கடலுக்குள்ளே இவன் இருக்கப்படும் பொழுது சிதைந்த உடல்கள் செயலிழந்த நீர் மூழ்கிக் கப்பலின் விஷக் கதிரியக்கங்களும் அதன் கழிவுகளும் மீண்டும் கடலுக்குள் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அப்படிக் கசியும் அணுக் கதிரியக்கங்கள் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களிலும் இனப் பெருக்கங்களாகிக் கலந்து அதுவும் பெருகிவிட்டது.

இன்று மனிதன் உணவாக உட்கொள்ளும் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களில் அணுக்கதிரியக்கங்கள் சேர்ந்து விட்டது.

1.எந்த விஞ்ஞான அறிவு கொண்டு அணுக்கதிரியக்கங்களைக் கண்டுபிடித்தானோ
2.கசிந்ததை எப்படி மறைக்க வேண்டும் என்று முயற்சித்தானோ
3.மீனை இன்று இரசித்து உணவாக உட்கொள்ளும்போது அந்தக் கதிரியக்கச் சக்தி “மீண்டும் மனிதனுக்கே வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது இதனின் கடைசி எல்லை எது? ஆக இப்பொழுது இருக்கும் இந்த
1.மனித உடலையே இழக்கச் செய்து
2.மனிதனின் நினைவை இழக்கச் செய்து
3,மனிதக் கருக்களை உருமாற்றி
4.மனிதனின் உண்மையான உருவத்தை மாற்றி – “சிதைவுண்டு
5.அதனின் நிலைகள் இனி வரும் எதிர்காலம் “சித்திரக் குள்ளர்களாகப் பிறப்பார்கள்.

இந்த அணுக்கதிரியக்கங்கள் பதிந்த நிலைகள் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக வளர்ந்து இப்பொழுதுள்ள இந்த உருவம் மாறி “சித்திரக்குள்ளர்களாக மாறும் நிலை வரும்

ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், கதிரியக்கங்களால் பூமி கொதிகலனாகி துருவப் பகுதிகள் உருகி நீர் நிலை பெருகி இந்த நிலங்கள் குறையப்படும் பொழுது ஒரு செடியைப் பார்த்தாலே அது மரத்தைப் போன்று ஆகி அதனின் வளர்ச்சியிலே கூழையாகி செடியே மரமாகிவிடும்.

விஞ்ஞான அறிவால் மனிதன் குறுகிய நிலைகள் கொண்டு மீண்டும் இத்தகைய நிலை பெறும் தகுதியைத்தான் பெறுகின்றோம்.

இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில்
1.விஞ்ஞானத்தை எல்லோருக்கும் எளிதாகப் புகட்ட முடிகின்றது.
2ஆனால், மெய்ஞானத்தைப் புகட்டும் நிலைகள் வந்தால் எதிர் நிலையாகின்றது.
3.நாம் ஏற்க மறுக்கின்றோம்.
4.அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் வீரிய உணர்வுகள் நம் உடலுக்குள் அணு செல்களாக வளர்ச்சி அடைந்துவிட்டது.

இதையெல்லாம் யாம் சொல்கிறோம் என்றால் “அடேயப்பா.., இவருக்கென்ன (ஞானகுரு) விஞ்ஞானத்தைப் பற்றி என்ன தெரியும்? என்று சிலர் நினைப்பார்கள்.

அந்த விஞ்ஞான அறிவைப் பற்றி நமது குருநாதர் “அவர்கள் எப்படி இயக்குகின்றனர்?” என்பதைக் காட்டினார்.

நாளை நடக்கும் எதிர்காலத்தை நமது குருநாதர் விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளை இது எவ்வாறு மாற்றமடைகின்றது என்ற நிலைகளை உணர்த்தியுள்ளார்.

ஆகவே என்ன செய்யும் என்று நமக்குத் தெரியும். இதை எப்படி அகற்ற வேண்டும் என்று நிலைகளுக்குத்தான் தொடர்ந்து அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.

May 19, 2017

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா – நாம் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும்பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக மறுகின்றது.

ஆக, நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது
1.உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது.
2.உணர்வை அணுவாக மாற்றுகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

காலையில் நம் உடலைத் தூய்மைப்படுத்தி நம் ஆடைகளைத் தூய்மைப்படுத்தியபின் விநாயகரை உற்றுப் பார்க்கும்பொழுது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழியை அன்று இவ்வாறு முறைப்படுத்தினார்கள்.

ஆக அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி வலுப்பெறச் செய்து கொண்டே வந்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளைந்து அதனின் சத்தாக நம் உயிரான்மாவில் ஒளியின் அணுக்கள் பெருகும்.


இதுதான் நம் உயிராத்மாவிற்குச் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து. ஒளியின் சரீரமாகி நாம் அந்த அகஸ்தியமாமகரிஷி வாழும் துருவ நட்சத்திரத்தின்  ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்திட முடியும்.