ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2013

துருவ நட்சத்திரத்தின் ஒளி எப்படிப்பட்டது..?

நமது வாழ்க்கையில், நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும். நாம் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தி, துருவ மகரிஷியின் உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்.

அவனால் உருவான உணர்வின் தன்மை, இன்றும் ஒளிச்சுடராக வருகின்றது. துருவ நட்சத்திரம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அதை நுகரப்படும்போது இளம் நீல நிறமான ஒளி வீசும்.
விஷத்தின் தன்மை ஒடுங்கிய பின்,
அதன் உணர்வின் ஒளியாகத்தான் காட்டும்.
கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்றுதான் தெரியும்.
இதைப்போல, அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி நாம் ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள். ஆகையினாலே நாம் எதைப் பெற வேண்டுமென்றால், துருவ மகரிஷியின் ஆற்றலை பெற வேண்டும் என்று ஏக்க உணர்வினை நமக்குள் செலுத்துதல் வேண்டும். அதை அதிகமாக எடுத்தால், அதன் அவதாரமாக உயிர் ஒளியாக மாறும். இதில் ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் நுகரும் ஆற்றலை, நமக்குள் அதிகரிக்கும் பொழுது, இன்றைய விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்து, மற்றவர்களையும் விடுபடச் செய்து, அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக மாற்றிடச் செய்யும், அந்த துருவ நட்சத்திரம்.

ஏனென்றால், துருவ நட்சத்திரத்தின் அருகில், இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது.
அதை அடக்கிவிடும்.
அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும்.
தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
இத்தகைய நிலை அந்த துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும், ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

அத்தகைய நிலையை நாமும் பெற்று, ஒவ்வொரு நொடியிலும், நம் சிந்தனைகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின்பால் இணைந்து, அந்த அருள் வட்டத்திலே வாழ்ந்திடும் சக்தியினை, நாம் உருவாக்குதல் வேண்டும். எமது அருளாசிகள்.

May 5, 2013

போகர் எதைத் திருடினார்? எதைச் செலவழித்தார்?

போகரை, திருடன், திருடன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் குருநாதர்.

என்ன சாமி, அவர் (பழனி) கோயிலிலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அவர் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்திருக்கிறாரேஅப்பொழுது எமக்கு அதிக விளக்கம் தெரியாததால், குருநாதரிடம் யாம் கேட்டோம்.

உனக்குத் தெரியாதுடா., பக்காத் திருடன்அவன் என்பார் குருநாதர். அப்புறம்தான் திருடன் என்ற சொல்லுக்கே வியாக்கியானம் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தில் உள்ள சத்தையும் போகன் திருடி, அது என்ன நன்மை செய்யும் என்ற நிலைகளைத் தனக்குள் திருடி, அவன் செலவழிக்கத் தொடங்குகின்றான். அவன் திருடிய சொத்து, பிறருடைய நிலைகளுக்கு நன்மை செய்யப் பயன்பட்டது.

ஆக நீ எதைத் திருடப் போகிறாய்? நன்மை செய்யும் அந்த உணர்வின் தன்மையைத் திருடப் போகிறாயா? அல்லது, பிறருடைய நிலைகளில் அவர்களைக் கஷ்டப்படச் செய்து, அவர்களுடைய சுகத்தை நீ திருடப் போகிறாயா? இப்படி வினாக்கள் எழுப்பினார் குருநாதர்.

போகன் எவ்வளவு பெரிய சக்தி பெற்றாலும், அவனைத் திருடன் என்று குருநாதர் சொல்லுகின்றார். நாம் எதைத் திருட வேண்டும்? உயர்ந்த அருள் ஞானத்தைத் திருட வேண்டும். நமக்குள் தீமைகளை அடக்கும் அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.
அருள் ஞானம் பெறுவதற்கு,
நன்மை செய்யும் உணர்வை அங்கே போதிக்க வேண்டும்.
ஏனென்றால், திருடியதை மறுபடியும் செலவழித்துத்தானே ஆகவேண்டும்.

ஆகவே, அந்த அருள் ஞானத்தைப் பெறும் பொழுது, அதைத் திருடினால், அந்த உணர்வை எடுத்துத்தான் நம் வாழ்க்கைக்குச் செலவழிக்க முடியும்.

போகன் தன் உணர்வின் தன்மை, தனக்குள் அந்த உயர்ந்த நிலையைத் திருடினான், உயர்ந்த  நிலைகளைச் செலவழித்தான்.

அதைப் பெற்றுக் கொண்டு, அந்த மகிழ்ச்சியின் நிலைகளில் இங்கே கொடுக்கின்றார்.
அந்த மகிழ்ச்சியே மூலதனமாகின்றது.
மகிழ்ச்சியில், அவன் எதிர்காலம் வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

இப்படித்தான் நாம் பிறருடைய நிலைகளில், ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் தன்மைகள் கொண்டு, அதிலே நாம் பேரானந்தப்படவேண்டும் அதுதான் நமக்கு அழியாச் சொத்தாக வரும்.

ஏனென்றால், எம்மைப் பக்குவப்படுத்துவதற்கு அந்த நிலையைத் தெளிவுபடுத்தினார். இப்பொழுது அவர் வழிகளில், அவர் கொடுத்த சக்திகளைப் பயன்படுத்துகிறோம்.

நமது அன்றாட வாழ்க்கையில், நம்மைச் சிக்க வைக்கும் முக்கியமான இரண்டு நிலைகள்

1. புகழ் பெறலாம் என்று, புகழாசையைக் கூட்டினால் என்ன செய்யும்?
புகழ்ச்சி கண்டு நாம் ஏங்கினோம் என்றால், நமக்குள் அந்தப் புகழ்ச்சியின் மத்தியில் அவன் நம்மைக் கைவல்யம் பண்ணும் உணர்ச்சிகள் வரும்.

ஏனென்றால் நமக்கு வேண்டிய நல்லவரைப் பொய்யனாக ஆக்குவான். உங்கள் செயல்களை எல்லாம் போற்றுகிறேன் என்பான். போற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு, நல்லவரைத் திருடனாக்கி விடுவான்.

ஆக, இவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருந்தவுடன், தப்பாகவே பண்ணுகிறான் என்ற உணர்வின் தன்மை எடுத்து, இவன் இவனுக்குச் சாதகப்படுத்துகின்றான். இவனுடன் நல்லவனாக நடித்து, நல்லவனை விலக்கி விட்டுவிடுவான். அவனை இவனிடமிருந்து பிரிக்கும்போது, இவனுக்கு உதவி செய்யும் நிலைக்கு வருகின்றான்.

ஆக புகழ் கண்டு மயங்கினால் என்னவாகும். நமது குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார். “புகழ் கண்டு மயங்காதே புகழ்ந்துரைக்க எண்ணாதே”.

ஒருவரை நாம் புகழ்ந்துரைக்க எண்ணினால், அவருடைய தவறுகளை மீண்டும் உயர்த்தத்தான் உதவ முடியுமே தவிர, தவறைத் தவறு என்று சுட்டிக்காட்டும் தன்மைகள் அங்கே மறைந்து விடுகின்றது.

புகழாரம் பாடினால் என்னவாகும்? இதைக் கண்டு மயங்கினால் என்ன நிலை ஆகும் என்பதற்குத்தான்,
புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே
இன்று மூன்று பதங்களும்
அதன் எதிர்மறையான உணர்வுகள் உன்னை எப்படி மாற்றும்? என்ற நிலைகளைச் சொல்லி, எமக்கு உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2. இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் நம்மை எங்கே இட்டுச் செல்லும்?
இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதறாதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே

ஒருவர் இகழ்ந்துரைக்கிறார், அதைக் கண்டவுடன், “இப்படி ஆகிவிட்டதா?” என்று, நாம் செல்லும் பாதைகளுக்கு இது தடைப்படுத்துகின்றது.

வன் கேவலமாகப் பேசுகிறான் என்ற உணர்வை எடுத்து, பதறினால் என்ன செய்யும். அந்த இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் விளையும். இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் வரும்போது, மற்றவர்களை இகழ்ந்துரைக்க எண்ண வைக்கும்.

அதன் வழியில் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால், அந்த இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் வளருகின்றது. இதே சொற்கள், அவரை இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால், அவருக்குள் பதிவாகி, பதில் எனக்கே வரும். உயர்ந்த எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைபடும்.

அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைபடுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள், வளரும் நிலைகள் எனக்குள் தடைபடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக,
தெளிந்து, தெரிந்து,
தெளிவான வாழ்க்கை நீங்கள் வாழ்ந்திடவும்,
மற்றவர்களைத் தெளிவாக்கும் அருள் ஞானம்
உங்களுக்குள் வளர்ந்திடவும் எமது அருளாசிகள்.