ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2012

நாஸ்டர்டாமஸ் -- Nostradamus

1. நாஸ்டர்டாமஸ் கூறிய உண்மைகள்
கேள்வி:
நாஸ்டர்டாமஸ் கூறிய கருத்துக்கள் அனைத்தும், உலக நிலையில் நடந்து கொண்டு வருகிறது என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கம்? 

ஞானகுருவின் பதில்:
நாஸ்டர்டாமஸ் என்பவர், நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் உருவானவர். நாஸ்டர்டாமஸ் என்றவருக்கும் இப்போது சாதாரணமாக நாம் இன்றைக்கு இது பிறந்தார் என்று சொல்கிறோம்.

இப்படிச் சொன்னால் தப்பாகி விடும். இதை இணைத்துப் பேச வேண்டாம். அதைச் சொல்லாதபடி, அன்றைக்கு அபிராமிப்பட்டராக இருந்தார். இன்றைக்கு ஈஸ்வரபட்டராக இருக்கின்றார்.
இதைப் போல, பல உலகின் நிலைகளுக்கும் சென்றுள்ளார். பல உடல்களை மாற்றியிருக்கிறார். பல உடல்களிலும் புகுந்துள்ளார். அதன் இயக்கம் வரும் போது, உலகம் எப்படி இருக்கும் என்று, அந்தந்தக் காலப் பருவத்திற்கு சில நிலைகளை உணர்த்தியுள்ளார்.

இன்று கற்றுணர்ந்தோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் இன்றைய நிலையில் நடக்கும் செயல்களையும், இதை எடுத்து இணைத்து, நடந்தவைகளை வைத்துப் பார்த்துத்தான், இப்படி வந்திருக்கிறது என்று, விஞ்ஞான அறிவால் இன்று கூறுகிறார்கள். அது உண்மை தான்.

அந்த நாஸ்டர்டாஸ் சொன்னதெல்லாம், இன்றைக்கு நடந்து கொண்டுதான் வருகின்றது.
இப்பொழுது உலகத்தினுடைய நிலைகளை,
நாம் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்,
எப்படிச் செய்வது?
குருநாதர் சில முறைகளை அது வகுத்துக் கொடுத்ததனால், நாம் அதைக் கடைப்பிடித்து,திலிருந்து மீள வேண்டும்.

இந்த உலகம் விஷத் தன்மை டையப்படும் போது. நஞ்சு கலந்த உணர்வுகள் சுழலப் போகும் போது, மனிதன் மனிதனல்லாது உருபெறும் தன்மை அடைகின்றோம். சொல்வது அர்த்தமாகிறதா?

இந்த உலகம் அழிகின்றது என்றால், இன்றைக்கு மனிதனாக இருக்கிறோம். இந்த உலகத்தின் விஷத் தன்மையை நுகர்கிறோம். நுகர்ந்த பின், இந்த உணர்வின் அணுக்கள் மாறியபின் மடிகின்றோம். மடிந்தபின், மனிதன் அல்லாத உருக்களைப் பெறும் மாற்றங்கள் வருகிறது.

ஆக, மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்றால், இன்றைக்கு இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரச்செய்வது தான். அதை நுகர்ந்து, இந்த உணர்வு கொண்டு, இந்த விஷத்தன்மையிலிருந்து மாற்ற வேண்டும். இது தான் கடவுளின் அவதாரம் வராக அவதாரம்.

அதாவது, சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தை அது பிளக்கிறது. பிளந்துவிட்டு, அந்த உணார்வின் தன்மையை தனக்குள் சேர்த்து, எப்படி மனிதனாக, பரசுராமனாக விளைந்ததோ, இதைப் போன்று தான் இன்று நாம் மனிதன்.

இப்போது விஞ்ஞான அறிவில், நாம் என்ன செய்கிறோம்? குரங்கில் இருந்துதான் மனிதன் பிறந்தான் என்று சொல்வார்கள். ஆனால், இந்தப் பன்றியில் இருந்துதான் மனிதன் பிறந்தான்.
 
தீமைகளை அகற்றும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் போதுதான், அது சமப்படுத்தும் உணர்வுகள் பன்றியின் உடலில் விளைந்தபின், இந்த உணர்வுக்கொப்ப இந்த மனித உடல் அமைகின்றது.

ஆகையினால், இதை இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் அதனுடைய சக்தியை நாம் எடுப்பது போன்று, இதையெல்லாம் கடந்து நுகர்ந்து சென்றவர்கள் மகரிஷிகள். அவர்களுடைய உணர்வுகளை எடுத்து, நாம் அதை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
2. தீமைகளைப் பிளக்கும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதி
இப்பொழுது நீங்கள் நுகர்ந்து அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் அதைச் செய்கின்றோம். பல கோடி சரீரங்களில் தீமையிலிருந்து வென்றிடும் உணர்வுகளைக் கூர்மையாகப் பார்த்து, அந்த வலிமையிலிருந்து தப்பிக்கும் உணர்வுகள் எடுத்து, எடுத்துத்தான் பல கோடி சரீரங்களிலிருந்து வலிமை பெற்றது. அதுதான், வராக அவதாரம்.

தீமையிலிருந்து விடுபடும் நிலைகளில், இது வலிமை பெறும் போது தான், அந்த உணர்வு கொண்டு நாற்றத்தைப் பிளந்து, அந்த உணர்வை நுகர்ந்து, உணர்வின் தன்மை தன் உடலாக்கும் போது தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைகின்றது.

ஆக, தீமையை அகற்றும் உணர்வான மனித உடலை உருவாக்கி, நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு, தீமைகளை அகற்றும் எண்ணங்கள் உருவாகின்றது.

ஏனென்றால் அன்றைக்கு யாம் சொல்லும்போது, யாரும் நம்பவில்லை. இன்றைக்கு விஞ்ஞானி என்ன செய்கிறான்? பன்றி உடலில் இருந்து சில உருப்புக்களை எடுத்து, மனிதனுக்கு மாற்றலாம், மனிதனுக்கு கிட்னியை மாற்றலாம், என்று சொல்கிறார்கள். இதைக் கேட்ட பின்புதான், கோ, அன்றைக்கு நம் சாமி சொன்னார் என்கிறார்கள்.
 
கடவுளின் அவதாரத்தில், வராக அவதாரம், என்பதை முக்கியமாகச் சொல்லி இருக்கிறார்கள் என்று, மனிதனாகப் பிறப்பதை மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
ஞானி எழுதியிருக்கிறான், நான் சொல்லவில்லை,
ன்று சொன்னதை வைத்துத்தான்
நான் சொல்கிறேன்.

இதைச் சொன்னால், கடவுள் எங்கோ இருக்கிறான் தனியாக எங்கேயோ இருக்கிறான் என்கிறார்கள். கடவுள் என்பது, நமது உயிர்தான்.

நாம் எத்தனை உணர்வுகளை எடுத்தோம், உயிர் அதற்குத்தக்க ரூபங்கள் மாற்றி வந்தது என்று தெளிவாகக் காட்டுகிறான், ஞானி. அதை நாம் தெரிந்து கொள்ளாதபடி, கடவுள் எங்கேயோ இருக்கிறான் என்றால் என்ன செய்வது?

இப்பொழுது, உயிரே கடவுள் என்பதை நாம் எண்ணுகிறோம். இது நமக்குள் உருவாகிறது, அதன் நிலைகளை நமக்குள் எண்ணக்கூடிய உணர்வு வருகிறது. இது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். மனிதன், நாம் எதை எண்ணத்தால் எடுக்கின்றோமோ, அதை உருவாக்க முடியும்.

ஆக, பரிணாம வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் வலிமை கொண்ட உணர்வுகளிலிருந்து, தப்பிக்க வேண்டும், தப்பிக்க வேண்டும் என்று எண்ணியதை, அது உருவாக்குகிறது. அதிலிருந்து தப்பிக்கும் உடலாக மாற்றுகின்றது. இப்படித்தான் நாம் வந்திருக்கின்றோம்.

ஆகையினால், இந்த உணர்வின் வலிமை கொண்டு, யாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இப்பொழுது ஒவ்வொரு நிமிடமும், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

கஷ்டம் என்று வருகிறது. அப்பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும், இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், வேதனையிலிருந்து நீங்கள் மீள்கிறீர்கள். ஆக, இந்த வேதனையை அது அடக்குகிறது. இப்படி, நீங்கள் இதைப் போன்ற பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
3. இன்றைய உலகின் நிலையில் நம்மைக் காக்கும் அருள்ஞானக் கூட்டமைப்பு
இன்றைக்குக் கதிரியக்கங்களும், விஷக் குண்டுகளும், பூமியில் பதிய வைத்து, பரவச் செய்துள்ளார்கள். இதே மாதிரி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயார் செய்து, இந்த உலகிலுள்ள மற்ற பூச்சிகளைக் கொன்று, பயிர் இனங்களை வளர்க்கலாம் என்று சேமித்து வைத்திருக்கிறார்கள். அதையே, மனிதனைக் கொல்லக்கூடிய அளவுக்கு, ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

தனக்கு ஆபத்து வருகிறது என்றால், இதை வெடித்து விடுகின்றான். இவை அனைத்தும் பரவும் பொழுது, இந்த நச்சுத்தன்மை உலகையே அழித்துவிடுகிறது.

ஆனால், இந்த நஞ்சின் தன்மையை நாம் வெல்லக்கூடிய சக்தியாக, ஞானத்தின் நிலைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக, நமக்குள் வளர்த்து வந்தோம் என்றால், அந்த நஞ்சைப் பிளந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். மனித உருவில், கொஞ்ச நேரமாவது தங்கி இருக்கலாம்.

இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வரும் பொழுது, நம் வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு, இந்த ஞானத்தை ஊட்டினால்,து வெளிப்படுத்தும் மூச்சு நமக்கு உதவும். குழந்தைகள் என்று நாம் நினைக்கிறோம், அது தன் ஞானத்தின் உணர்வை வளர்க்கும் பொழுது, குழந்தையால் காப்பாற்ற முடியும்.

இப்படிக் கூட்டமைப்பு இல்லையென்றால், நாளைய உலகம் அழிகின்றது என்றால், உலகம் அழியப் போவதில்லை. அது இருக்கும். மனித உலகம்தான், இந்த நிலை சிதறிப்போய், இந்த உலகத்தை நாம் அறியும் அறிவை இழப்போம். சொல்வது அர்த்தம் ஆகிறதா?

உலகம் இப்படியேதான் இருக்கும். இது ஒன்றும் அழிவதில்லை.
ஆனால், இந்த மனிதர்கள் அதாவது, இந்த மனித உலகம்
தன் அறிவை இழக்கும். 
எது என்று அறியத் தெரியாது.

இப்பொழுது, ஆடு மாடுகளுக்கு இந்த உலகம் இருப்பது தெரியுமா? தெரியப்போகிறதா?
தன் எதிரியைக் கண்டு, தப்பித்து ஓடத்தெரியும். 
இந்த உணர்வுதான் நமக்குள் வரும். 
ஆகவே, நமக்கு இந்த எண்ணங்கள் அழிந்து விட்டால் எதைப் பார்க்கப் போகிறோம்.
4. இன்றைய உலக மக்களின் இயல்பு நிலை
இன்றைக்கு என்ன நடக்கிறது? பழமைவாதத்தைக் கொண்டு வருகிறார்கள். பெண்களை, சவுக்கில் அடிக்கிறான். இருப்பவர்களைக் கொல்கிறான். இதே போல, முஸ்லீம் நாடுகளில் முழுவதும் இது நடக்கிறது.

அதே மாதிரி இன்றைக்கு கிறித்தவ மதத்தைக் கொண்டு வருகின்றார்கள். அதில், இயேசு காப்பாற்றுகிறார் என்று சொல்கிறார்கள். அவனை நீ வணங்கு, அவன் காக்கின்றான் என்பார்கள். ஆனால், அவன்தான் இயேசுவை வைத்து வணங்குகின்றான். எல்லாவற்றையும் அணுகுண்டைப் போட்டுக் கொல்கிறான். இருக்கும் லேசர் கதிர் இயக்கத்தை வைத்துக் கொல்கிறான்.

அவனை எவனும் கேட்க மாட்டான் எப்படிக் கேட்பான்? இதைத்தான் அவன் செய்கின்றான். இந்த உணர்விலிருந்து மீள வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆகவே, மதங்கள் உருவாக்கப்பட்டதை இவன் எடுத்துக் கொண்டதால், இந்த உலகம் அழியும் தன்மை வருகிறது என்று தான் நாஸ்டர்டாமஸ் சொன்னது.

இப்படி, உலகை அழித்திடும் நிலைக்கு வரப்படும் பொழுது, இன்றைக்கு எல்லாம் சேர்ந்து, அமெரிக்காவைக் கவ்வப்போகின்றது. ஏற்கனவே, ரஷ்யா வீழ்ந்துவிடும் என்று சொன்னேன். ரஷ்யாவினுடைய நிலைகள் வீழ்ந்திடும். வீழ்ந்திட்டால் இவன் கொண்டாடுவான்.

ஆனால், ரஷ்யாவில் கண்டுபிடித்த விஷத்தன்மை முழுவதும், முஸ்லீம் நாடுகளில் கவருகிறது. அதாவது, சூட்சமமான நிலைகளில் விஷத்தன்மை முழுவதும் முஸ்லீம் நாடுகளில் இருக்கிறது.

தான் இறக்கப் போகின்றோம் என்று சொன்னால், இதை விட்டு விடுவான். நான் ஆண்டவனிடம் நேராகப் போகிறேன் என்ற நம்பிக்கை, அவனிடம் இருக்கிறது.

உலகத்தில் ஆண்டவன் என்றால், தர்மத்தைக் கடைப்பிடித்தேன். இறந்தாலும் நான் உன்னிடம் வந்து விடுகிறேன். ஆனால், இங்கு மற்றதெல்லாம் சாகட்டும். அதாவது இதுவெல்லாம் அனைத்தும் பேய்கள், பிசாசுகள்.

அதற்காக வேண்டித்தான், இன்றைக்கு மெக்காவில் என்ன செய்கிறார்கள்? பேய்களை, இந்தக் கல்லை கொண்டு எறிவது. பேயை விரட்டுகிறார்களாம். அதிலே முண்டியடித்துக் கொண்டு போய், இடிபட்டுச் சாகிறவர்கள்  நிறையப் பேர்.

இப்படி ஒரு தத்துவத்தை உணர்த்தி, தான் மடிந்தாலும் பரவாயில்லை பேயை ஓட்டுகின்றார்களாம். இப்படி ஒரு தத்துவத்தை வைத்து,தை ஆண்டவனுக்கு விரோதமாகப் போனால், அவனை நீ கொல்வதனால், உனக்கு ஆண்டவன் நல்ல நிலையைக் கொடுக்கின்றான்.

ஆண்டவனுடைய தத்துவத்தை எவன் அழிக்கின்றானோ, அவனை நீ அழிக்க வேண்டியவன். ஆண்டவன், அவன் உன்னை அரவணைக்கின்றான். இந்த மாதிரித் தத்துவங்கள் வருவதால்தான், இன்றைக்கு இப்படி வருகிறது.

இன்றைக்கு எல்.டி.டி.என்ன செய்கிறார்கள்? நீ நாட்டை காக்க வேண்டுமென்றால், நீ எவரென்றும் பார்க்காதே. அவனை நீ கொலை செய். ஒன்று அவனை நீ கொல், இல்லையென்றால், நீ அழிந்துவிடு. இந்தத் தத்துவத்தைத்தான் இவர்கள் வைத்திருக்கிறார்கள். இதே மாதிரித்தான் இன்றைக்கு தீவிரவாதிகள் பெருகி வருகிறார்கள்.

தீவிரவாதம் பெருகும் பொழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மனிதன் மிருகமாக மாறுகிறான். லகம் முழுவதும், இன்றைக்கு தீவிரவாதம் வருகிறது.

இங்கு குண்டு வைத்தான். அங்கு குண்டு வைத்தான், வீட்டில் குண்டு வைத்தான், தமிழ் நாட்டில் ஓட்டலில் குண்டு வைத்தான். காரில் குண்டு வைக்கிறான், என்றெல்லாம் வருகின்றது. நீங்கள் எந்த நம்பிக்கையோடு போகிறீர்கள்? நீங்கள் எதை வைத்து, நம்பிக்கையாக இயக்க முடியும்?

ஆகவே, எந்த நிமிடம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும், நாம் அங்கு சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். நமது எல்லை அதுதான். ஆகவே இங்கு வரக்கூடாது.
அந்த உணர்வின் தன்மையை நாம் வலுகொள்ளும் போது, ஒரு மனிதனின் ஈர்ப்புக்குள் சென்றிடக்கூடாது. ஒரு மனிதனின் ஈர்ப்பிற்குள் சென்றோமென்றால், மீண்டும் பிவிக்குத்தான் வருகிறோம் அதற்குத்தான் இப்படிச் சொல்வது.
5. பூமியில் 2010க்கு மேல்தான் வளர்ச்சி
நாஸ்டர்டாமஸ் என்ன சொன்னார்? 

2000 த்தில் ஒரு விஷத்தன்மை அடையும். பின் இதனுடைய நிலைகள் ஒடுங்கும். ஒடுங்கும் பொழுது, 2010க்கு மேல்தான், மனித உருவுக்குண்டான நல்ல சிந்தனைகள் செயல்படும். அதற்கு மேல்தான் அந்த வளர்ச்சி வரும்.

அதனால்தான், நாஸ்டர்டாமஸ் சொன்னதின் உணர்வுகள்,
இந்த விஷத்தன்மைகள் அழியும்.
இதற்குத்தான் தெற்கில் போட்டிருப்பார்கள்.
ந்த அகஸ்தியன் முதலில் இங்கே தோன்றினானோ,
அதே உணர்வு தான் இந்த கருவில் வளரும் சிசுக்களுக்குப்
பெறவேண்டும் என்று, இப்போது நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
குரு கட்டளையைச் செய்கின்றோம்.
அந்தக் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைப் பதியவைத்து, இதைப் போல வர வேண்டும் என்று உபதேசம் கொடுக்கின்றோம். அந்தக் கருவில் விளையும் போதே, இந்த தியானத்திற்கு வருகிறார்கள், அவர்கள் உற்றுக் கவனித்தால் இந்த கருவில் விளைகிறது.

இது திட்டியவர்களையும், சண்டை போட்டவர்களையும், அதன் வேதனையோடு கூர்மையாகப் பார்க்கிறார்கள் இந்த உணர்வின் தன்மை அந்தக் கருவில் விளைகிறது, அவன் அந்த வழியில் சண்டை போடுபவனாக, வேதனையை உருவாக்குகின்றவனாகப் பிறக்கின்றான். 

இதனால்தான், யாருக்குச் சொன்னாலும், வர்கள் கேட்டு கடைப்பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு, யாம் பதிவாக்கும் இந்த ஞானவித்து விளைகிறது.

இப்பொழுது, எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தவர்களைப் பாருங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது, இந்தபதேசத்தைக் கேட்டவர்களின் குழந்தைகளைப் பாருங்கள். அந்தக் குழந்தைகள் ஞானமாக இருக்கும்.

இந்தக் குழந்தைகள் விபூதியை எடுத்துக் கொடுத்தது என்றால், தலைவலி போகும். அந்தக் குழந்தை தன் எண்ணத்தால் எடுத்து, வேறு ஒன்றும் வேண்டாம், நெற்றியில் போட்டால் போதும், தலை வலி போகும், காய்ச்சல் போகும்.

அதே குழந்தைகளுக்கு, கேன்சர் என்ற நிலையில் உபதேசம் கொடுத்து, கேன்சர் போய்விடும் என்று சொல்லி, மனதில் அவர்கள் இந்தக் கேன்சர் போகும் என்று நினைத்தால், இது போய்விடும். நாம் பார்க்கலாம்.

தையே, நாம் பெரியவர்களுக்குக் கொடுத்தால் என்ன செய்வார்கள்? இந்தச் சாமியார் இப்படிச் சொல்வார், அந்தச் சாமியார் இப்படிச் சொன்னார் என்று இரண்டையும் இணைத்துக் கொள்வார்கள். பின்பு நாம் என்ன செய்வது?

ஆக, கடலில் போய் பெருங்காயத்தைப் போட்டது போல் ஆகிவிடும். ஆகையினால், நம் குருநாதர் காட்டிய நெறிகள்படி, கருவில் வளரும் குழந்தைகளுக்கு இந்த அருள்ஞானத்தை நாம் கொடுக்க வேண்டும்.

இதற்குத்தான், பள்ளிகள் தோறும் இந்த உபதேசத்தைக் கொடுத்து, அந்த ஞானத்தை, அங்கு வளரும் குழந்தைகளிடம் நாம் இணைத்து விட்டோம் என்றால், அது வளரும்.

அதற்குத்தான் பள்ளிகளில், அந்த வளரும் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்கு, கொஞ்சம் கொண்டு போவதற்கு இதை ஏற்பாடு செய்யுங்கள்.

அதற்குண்டான புத்தகங்களை வெளியிட்டு,
கூடுமான வரையிலும் கொஞ்சம் தர்மமாகக் கொடுத்து,
அந்தப் பள்ளிகளுக்கு அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
எமது அருளாசிகள்.

ஞானகுரு உபதேசிப்பதை, நமக்குள் முழுமையாகப் பெறும்வழி


உங்களுக்குத் தெளிவாகவே கூறி வருகின்றேன். ஏனென்றால், இந்த ஆயுள்கால மெம்பராக இருக்கின்றவர்களுக்கு, இதைச் சொல்கின்றோம். யாம் ஒவ்வொரு ஊரிலிருந்து வரும் ஒவ்வொருவருக்கும், இதை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சொல்கின்றோம்.

யாம் உபதேசித்த எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்து, கேசெட்டாகச் சேர்த்து, நீங்கள் கேட்டீர்கள் என்றால், அந்த முழுமை வரும். எல்லோருக்கும் யாம் முழுமையாகச் சொல்ல முடியுமோ?

அதனால் இந்தப் பகுதியில் சொல்லப்படும்போது, அந்தப் பகுதியில் உபதேசித்துள்ளதை கேசெட்டில் பதிவு செய்து, அதை எடுத்துக் கேட்டால், அது முழுமையின் தன்மைய நிச்சயம் அடையும்.

ஏனென்றால். போன தடவை வந்தவர்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். திருநெல்வேலியில் உள்ளவர்களுக்குச் சொல்லும்போது, கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும். இப்பொழுது, இங்கே சொல்லும் பொழுது, வித்தியாசமாக இருக்கும்.

அதே மாதிரி, சேலத்தில் உள்ளவர்களுக்குச் சொல்லும் போது, வித்தியாசமாக இருக்கும், ஏனென்றால், உணர்வுகள் அங்கே இணைந்து, அந்த உணர்வுகள் மாறுவதை, எதனெதன் நிலைகளில், எதனெதன் உணர்வுகள் மாறுகின்றது என்பதைத்தான், நினைவுபடுத்துகிறோம்.

ஆகவே, இங்கே சிலர் எண்ணிவிடக்கூடாது.
அதாவது, அன்றைக்கு அந்த மாதிரி,
சாமி அவர்களுக்கு ஒரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்.
ஆனால், இன்று நமக்கு ஒரு விதமாகச் சொல்கின்றார்
என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால், இதையெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால், எல்லோரையும் கூப்பிட்டு வைத்துச் சொல்ல வேண்டும். அப்படி எத்தனை பேர் இங்கே உட்காருவது?   எவ்வளவு நாள் உட்கார்ந்து உபதேசத்தைக் கேட்பது?

இந்த சந்தர்ப்ப உணர்வுகள்,
யாம் இங்கே விளைய வைக்கும் பொழுது,
இதே உணர்வுகள் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு,
இணைந்து வாழும் அந்தப் பக்குவத்தில் வரும் பொழுது,
நாம் இதை இப்படி எடுக்க வேண்டும் என்ற நிலை வரும்.

ஆக, ஆயுள் கால மெம்பர்கள் நீங்கள் எல்லோரும் இணைந்து, அந்த அருள் உணர்வைப் பெறும் பக்குவத்தையும், அதை மற்றவர்களுக்கு எடுத்துத் தெளிவாகச் சொல்லவும், ஏற்றுக் கொள்ளும் பருவமும் நிச்சயம் வரும்.

அதனால்தான் இதைச் சொல்வது. ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித் தான் சொன்னார்

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேரவேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும், அந்த அருள் மகரிஷி அகஸ்தியனின் நிலைகளையும், நமது குரு காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள், அவன் அறிந்துணர்ந்த அருள் அனைத்தும் நீங்கள் பெற்று, அந்த துருவ நட்சத்திரத்துடன், அதில் ஆயுள் கால மெம்பராக அமைந்து செல்ல வேண்டும்.
ஏனென்றால், எனக்கு குருநாதர் இப்படித்தான் கொடுத்தார்.
அவர் கொடுத்த வழியிலேதான் யாம் இதைக் கொடுக்க முடியும்

கோடிக் கணக்கில் உங்களுக்குப் பணம் வாங்கித் தருகின்றேன், உடனே உங்கள் நோய்களை எல்லாம் நீக்கிவிடுகின்றேன், என்றெல்லாம் சொல்வதற்கு யாம் இல்லை.

நோய் வருவதும், நோயை நீக்குவதும் இயற்கை, ஆக, அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு வரப்போகும் பொழுது,, எதை வைத்து நாம் தப்ப வேண்டும்?

அந்த உணர்வின் தன்மை,
மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்து,
இங்கே தப்பவேண்டும் என்று எடுத்தால்,
நாம் இந்த உடல் பெற்ற உணர்வுக்குச் சரியாகும்,
சொல்வது அர்த்தமாகின்றதா?

இன்றைக்கு மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி, அப்புறம் கை, கால் போய்விட்டது என்று உறுப்புகளை மாற்றி வைத்தவுடன், எத்தனை காலம் வாழுகின்றார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படி உறுப்புக்களை மாற்றி வைத்தாலும், என்ன செய்கிறோம்? இந்த இயற்கையில் செய்த நிலைகளில் கொஞ்சம் மாற்றம் ஆகும் பொழுது, “என்னால் முடியவில்லைலையே, என்னால் முடியவில்லையேஎன்று எண்ணுவார்கள்.

ஆக, இப்படி இருக்கின்றது. நான் என் உடலில் உறுப்புக்களை எல்லாம் மாற்றி வைத்திருக்கின்றேன் என்று, இந்த உணர்வுகள் தோன்றும் பொழுது, இயற்கையில் நல்ல நிலையில் இருக்கும் அடுத்தவர்களைப் பார்த்தவுடனே, வேதனைதான் வருகின்றது,

அந்தச் சலிப்பின் தன்மைதான் வருகின்றது. சங்கடத்தின் தன்மைதான் வருகின்றது. இதெல்லாம் எங்கே போகின்றது? உறுப்புக்களை மாற்றியமைத்து விட்டோம்.

ஆனால், இப்படி நுகரும் உணர்வுகள் என்ன செய்யும்? இந்த உணர்வுகளை மாற்றியமைக்கின்றது. அப்படி உணர்வுகளை மாற்றி அமைக்கிறதுக்குத் தக்கவாறு, நமக்குள் உணர்ச்சிகளும் மாறுகின்றது.

அந்த உணர்வுக்குத் தக்க, உணர்ச்சியின் தன்மை கொண்டு, இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகின்றது. இந்த உடலில், இதெல்லாம் மாற்றுகின்றது. அப்பொழுது நாம் எங்கே போக வேண்டும்? சொல்வது அர்த்தமாகின்றதா?

அதனால், நாம் ஆயுள் கால மெம்பராக இணைக்கப்படும் போது. இந்த உடல் பற்றுக்கு வரவேண்டாம். பிறிதொரு ஆன்மாக்கள் நமக்குள் வந்தாலும், அதை அடக்கிடும் வல்லமை நமக்கு உண்டு,

அதே போன்று, பிறிதொரு ஏவல் தன்மையை யார் செய்தாலும், அந்த அருளைப் பெற்று இருளை நீக்க முடியும். நாம் அதைப் பற்றுடன் கொஞ்ச நாள் பற்றினால், அந்த வலுவின் தன்மை நிச்சயம் கூடும்.

அழுக்குத் தண்ணீரில், கொஞ்சம் தீமை இருக்கும் என்று சொன்னால், அதில் உலரும் பசையும் ஜாஸ்தியாக இருக்கும். நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தால், அழுக்குத் தண்ணீர் போனாலும், பாக்கி கொஞ்சமாவது அதிலே தொக்கி இருக்கும், அந்த உணர்வின் தன்மை, நல்லதை ஊற்றிக் கொண்டு வந்தால் சரியாகும்.

நான் எவ்வளவு நல்ல தண்ணீரை ஊற்றிக் கழுவினேன்,
மறுபடியும் வந்துவிட்டதேஎன்று சொன்னால் எப்படி இருக்கும்?
ஆக, இந்த உணர்வை. நாம் மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

நமக்கு இந்த உடல் சொந்தமில்லை. நாம் சொந்தமாக்க வேண்டியது உயிர் ஒன்றுதான்.

அந்த உணர்வின் தன்மை ஒளி. அந்த உணர்வின் தன்மைதான், “என்றும் ஏகாந்த நிலை என்ற நிலை”. ஆக, எதுவுமே நம்மைத் தாக்காத நிலை, அது, எப்பொழுதும் ஒளியின் தன்மை கொண்டு இருளை விரட்டும் நிலை.

விளக்கைப் போட்டால் எப்படி இருள் மறைகின்றதோ, அதைப் போல நம் உணர்வின் தன்மை, எதையுமே தெரிந்து கொள்ளும் நிலை. அதனின் வலு அழுத்தமானால், தீமை என்ற நிலை நம்முள் வராது.
அந்த உணர்வின் தன்மையை, நாம் வளர்த்து விட்டால், துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், அதன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் தன்மையாகும். இது ஏகாந்த நிலை அதுதான் ஏகாதசி”. அப்படி என்றால் பத்து, பத்தாவது நிலை அடையும் போது, ஏகாதசி.

ஏகாதசி என்றால், நாம் என்ன செய்கின்றோம்? எங்கேயோ போகின்றோம். ஆனால், ஞானிகள் காட்டியது, நாம் ஏகாந்தமான நிலைகளில் இருக்க வேண்டும். எதுவுமே எதிர்ப்பு இல்லாத நிலை, ஏகாதசி..

அடுத்து வைகுண்ட ஏகாதசி அப்படி என்றால், பிறருடைய தீமைகளை எண்ணாதபடி, நமக்குள் சந்தோசமான நிலையிலேயே இருப்பது.

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்? நம்முடன் பகைமை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், என்று எண்ண வேண்டும்.

சண்டை போடுபவர்கள், சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறவேண்டும் ஒருவர் துரோகம் செய்தார் என்று நினைத்தால், அவர் பொருள் அறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால், நமக்குள் அந்தத் தீமையின் உணர்வுகள் வராது. அதுதான் ஏகாதசி விரதம்

இந்தப் புவியின் தன்மையில் வைகுண்ட ஏகாதசி என்றால், இந்த உணர்வின் தன்மை, பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை அது இயக்காது, “என்றுமே ஒளி”, இது வைகுண்ட ஏகாதசி. சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா

மனிதன் எப்படி வாழ வேண்டும்?
இந்த உயிரணு எதைப் பெற வேண்டும் என்று, எத்தனையோ கோடி சரீரங்களில், இன்னலைக் கடந்து, இந்த இன்னலை நீக்கக் கூடிய வலிமையான இந்த உடலும், அந்த உணர்வும்,
அறியும் அறிவும் கிடைத்த ஆறாவது அறிவை,
நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று,
ஞானிகள் உணர்த்திய உண்மைகளைத்தான்
இப்பொழுது யாம் உங்களுக்குக் கொடுப்பது.

ஆத்மசுத்தியை, சீராகக் கடைப்படிப்பதால் ஏற்படும் நன்மைகள்


நாம் எங்கு வெளியில் சென்றாலும், ஆத்ம சுத்தி செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், நாம் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்பாக வந்து, நம்மைச் சீர்படுத்தும்.
(1)
ஒரு சமயம், நம் தியான வழி அன்பர் பொன்னுச்சாமி என்பவர் தபோவனம் வந்துவிட்டுப் போனார். இங்கே இருந்து போகும் போது, பஸ் ஏறியிருக்கின்றார்,

பஸ்ஸில் றியவுன் அவருக்குப் பதட்டமாகவே இருந்திருக்கின்றது. அப்பொழுது, “குருதேவா.. ஏன் இந்த மாதிரி எனக்குப் பதட்டமாகவே இருக்கின்றது? என்னமோதெரியவில்லையே” என்று எண்ணுகின்றார்.

ஆனால், அவருக்குள் அந்த உணர்வு, பஸ்ஸை விட்டு அவரை இறங்கச் சொல்லி, அந்த உணர்வு இறங்கும்படி உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கத் தொடங்கினார்.

அப்பொழுது, அவர் கூட வந்தவர் ஒரு அரிசி வியாபாரி. அவர் என்ன செய்கின்றார்? பொன்னுச்சாமியைப் பார்த்து, “நீ என்னையா? பைத்தியக்காரத்தனமாஇவ்வளவு தூரம் டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, பஸ்ஸிலே போவதற்குப் பயந்து கொண்டு இருக்கின்றாய்” என்று கேட்கின்றார்.

என்னமோ தெரியவில்லை.. எனக்குள் இறங்கச் சொல்லுகின்றது என்று பொன்னுச்சாமி சொல்கின்றார்.

அப்பொழுது அவர், "உங்கள்  சாமியார் சொல்கின்றாரா? உன்னை பஸ்ஸிலிருந்து இறங்கு என்று, உங்கள் சாமியார் சொல்லிக் கொடுத்தாரா? கூட்டமாக இருக்கின்றது என்று சொல்லி, இறங்கச் சொல்கின்றாரா?” என்று திரும்பத் திரும்ப, கிண்டலாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

ஆனால் பஸ், அடுத்த ஸ்டாப்புக்கு வந்தவுடனே, கட்டாயமாகவே, அவரைக் கீழே இறங்க வைத்துவிட்டது.

அவர் இறங்கியபின், பஸ் அடுத்த ஸ்டாப்புக்குப் போவதற்கு முன்னாடியே, ஒரு பாலத்தில் இருந்து அப்படியே தூக்கி எறிந்து, பஸ் கீழே கவிழ்ந்து விட்டது.

அப்பொழுது, கிண்டல் பண்ணியவர் அவர் அந்த பஸ்ஸில், படி ஓரத்தில் உட்கார்ந்து இருந்த அந்தப் பக்கமே, பஸ்ஸும் கவிழ்ந்து விட்டது. அதற்குள்ளே அவர் சிக்கிக் கொண்டார்.

அடுத்த பஸ்ஸில், இவர் ஏறி வருகின்றார். போன உடனே, “பொன்னுச்சாமி நீ சொன்னதை, நான் கேட்கவில்லை, என்னைத் தூக்கி விடு” என்று சொல்கின்றார்.

எங்கே பஸ்ஸின் அடியிலிருந்து தூக்கிவிடுவது? ஆக, காலை வெட்டித்தான் எடுக்க முடியும். நடந்த இந்த விபத்தை, “பொன்னுசாமி வந்த வண்டி கவிழ்ந்து விட்டது” என்று யாரோ போய்ச் சொல்லி இருக்கின்றார்கள்.

அதைக் கேள்விப்பட்ட உடனே, பொன்னுச்சாமியுடைய மாமனார் மோட்டார் சைக்கிளிலில் வந்துவிட்டார். பார்த்தால், இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்கின்றது.

அவரிடம், உன் மருமகன் சொன்னதை நான் கேட்கவில்லை. அவரைக் கிண்டல் பண்ணினேன். ஆகையினால், இந்த மாதிரி நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்கின்றார். இது நடந்த நிகழ்ச்சி.

ஆக, இந்த உணர்வுகள் தை எப்படி இயக்குகின்றது? என்றுதான், யாம் சொல்கின்றோம்.
(2)
அதே மாதிரி, அவருடைய பையன் இந்த தியானத்தில் இருப்பான் ந்த சமயத்திலெல்லாம், யாம் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது, அவனுடைய பாட்டியும், தம்பியும் மைசூரிலிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த பாட்டியும் தியானம் செய்து கொண்டிருப்பவர்தான்.

அப்படி பஸ்ஸில் வரும் போது, அந்தப் பாட்டி, “என்னமோ எனக்கு ஒரு மாதிரியாகவே இருக்கின்றது, இந்த பஸ் டிரைவர் ஓட்டுவதைப் பார்த்தாலே, சந்தேகமாகவே இருக்கின்றது என்று பேரனிடம் சொல்லுகின்றது.

அட, நீ ஏன் பாட்டி இந்த மாதிரி பயப்படுகின்றாய்? நீ பயப்படுகின்ற மாதிரியெல்லாம் ஒன்றும் ஆகாது”, என்று பேரன் சொல்கின்றான்.

இருந்தாலும் கூட, நிலைமை என்ன ஆகின்றது? அந்த பஸ் ஒரு பாலத்தில் விழ்ந்துவிட்டது. அப்படிக் விழும்போது, ஈஸ்வரா…,” என்று அந்தப் பாட்டி சத்தம் போட்டிருக்கின்றது.

இந்தக் குரல், இந்த இன்னொரு பையன் (மூத்தவன், இங்கே இருப்பவன்) காட்சி சொல்லிக் கொண்டு இருப்பானே, அந்தப் பையனுக்கு காட்சியில் வந்திருக்கின்றது.

உடனே அவன், அப்பாவிடம் ஓடிப் போய், “பாட்டி வந்த பஸ் கவிழ்ந்துவிட்டது” என்று சொல்லி இருக்கின்றான்.

டேய் பேசாமல் இருடா”.. என்று அவர் இவனை அடித்திருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது. “ன்டா, இந்த மாதிரி, காட்சியெல்லாம் தெரிந்தால், இந்த மாதிரிப் பொய் சொல்லக் கூடாது” என்று, அவனிடம் சொல்கின்றார்.

ஆனால், அவன் அப்பாவிடம், “அட, நிஜமாகத்தான் என்று சொல்கின்றேன், நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். சாமியிடம் போய்க் கேளுங்கள்” என்கிறான். ஏனென்றால், அப்பொழுது யாம் காட்சியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது என்ன ஆகின்றது? இங்கே இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே, பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாம் அடிபட்டு விழுந்து கிடக்கின்றார்கள் என்று, அடுத்த பஸ்ஸில் வந்தர்கள் வந்து சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், இவர்களெல்லாம், இந்த மாதிரி அடிபட்டு, கை கால் எல்லாம் உடைந்து போயிருக்கின்றார்கள்.

ஆனால், உங்கள் பையனும், அத்தையும், எந்த அடியும் படாமல் தப்பி இருக்கின்றார்கள் என்று இங்கே வந்து சொல்கின்றார்கள்.

அப்பொழுது, அந்தக் காட்சி சொன்ன பையன் தன் அப்பாவிடம், “நம் சாமி என்ன சொல்கிறார்? பொய் சொல்லக் கூடாது, என்றுதான் சொல்லி இருக்கின்றார். நீங்கள், “நான் பொய் சொல்கிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம்?” அப்புறம் தியானத்தில் இருந்து என்ன? என்று, அவரிடம் கேட்கின்றான். இது நடந்த ஒரு சம்பவம்.