ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2012

ஆத்மசுத்தியை, சீராகக் கடைப்படிப்பதால் ஏற்படும் நன்மைகள்


நாம் எங்கு வெளியில் சென்றாலும், ஆத்ம சுத்தி செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், நாம் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்பாக வந்து, நம்மைச் சீர்படுத்தும்.
(1)
ஒரு சமயம், நம் தியான வழி அன்பர் பொன்னுச்சாமி என்பவர் தபோவனம் வந்துவிட்டுப் போனார். இங்கே இருந்து போகும் போது, பஸ் ஏறியிருக்கின்றார்,

பஸ்ஸில் றியவுன் அவருக்குப் பதட்டமாகவே இருந்திருக்கின்றது. அப்பொழுது, “குருதேவா.. ஏன் இந்த மாதிரி எனக்குப் பதட்டமாகவே இருக்கின்றது? என்னமோதெரியவில்லையே” என்று எண்ணுகின்றார்.

ஆனால், அவருக்குள் அந்த உணர்வு, பஸ்ஸை விட்டு அவரை இறங்கச் சொல்லி, அந்த உணர்வு இறங்கும்படி உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கத் தொடங்கினார்.

அப்பொழுது, அவர் கூட வந்தவர் ஒரு அரிசி வியாபாரி. அவர் என்ன செய்கின்றார்? பொன்னுச்சாமியைப் பார்த்து, “நீ என்னையா? பைத்தியக்காரத்தனமாஇவ்வளவு தூரம் டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, பஸ்ஸிலே போவதற்குப் பயந்து கொண்டு இருக்கின்றாய்” என்று கேட்கின்றார்.

என்னமோ தெரியவில்லை.. எனக்குள் இறங்கச் சொல்லுகின்றது என்று பொன்னுச்சாமி சொல்கின்றார்.

அப்பொழுது அவர், "உங்கள்  சாமியார் சொல்கின்றாரா? உன்னை பஸ்ஸிலிருந்து இறங்கு என்று, உங்கள் சாமியார் சொல்லிக் கொடுத்தாரா? கூட்டமாக இருக்கின்றது என்று சொல்லி, இறங்கச் சொல்கின்றாரா?” என்று திரும்பத் திரும்ப, கிண்டலாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

ஆனால் பஸ், அடுத்த ஸ்டாப்புக்கு வந்தவுடனே, கட்டாயமாகவே, அவரைக் கீழே இறங்க வைத்துவிட்டது.

அவர் இறங்கியபின், பஸ் அடுத்த ஸ்டாப்புக்குப் போவதற்கு முன்னாடியே, ஒரு பாலத்தில் இருந்து அப்படியே தூக்கி எறிந்து, பஸ் கீழே கவிழ்ந்து விட்டது.

அப்பொழுது, கிண்டல் பண்ணியவர் அவர் அந்த பஸ்ஸில், படி ஓரத்தில் உட்கார்ந்து இருந்த அந்தப் பக்கமே, பஸ்ஸும் கவிழ்ந்து விட்டது. அதற்குள்ளே அவர் சிக்கிக் கொண்டார்.

அடுத்த பஸ்ஸில், இவர் ஏறி வருகின்றார். போன உடனே, “பொன்னுச்சாமி நீ சொன்னதை, நான் கேட்கவில்லை, என்னைத் தூக்கி விடு” என்று சொல்கின்றார்.

எங்கே பஸ்ஸின் அடியிலிருந்து தூக்கிவிடுவது? ஆக, காலை வெட்டித்தான் எடுக்க முடியும். நடந்த இந்த விபத்தை, “பொன்னுசாமி வந்த வண்டி கவிழ்ந்து விட்டது” என்று யாரோ போய்ச் சொல்லி இருக்கின்றார்கள்.

அதைக் கேள்விப்பட்ட உடனே, பொன்னுச்சாமியுடைய மாமனார் மோட்டார் சைக்கிளிலில் வந்துவிட்டார். பார்த்தால், இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்கின்றது.

அவரிடம், உன் மருமகன் சொன்னதை நான் கேட்கவில்லை. அவரைக் கிண்டல் பண்ணினேன். ஆகையினால், இந்த மாதிரி நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்கின்றார். இது நடந்த நிகழ்ச்சி.

ஆக, இந்த உணர்வுகள் தை எப்படி இயக்குகின்றது? என்றுதான், யாம் சொல்கின்றோம்.
(2)
அதே மாதிரி, அவருடைய பையன் இந்த தியானத்தில் இருப்பான் ந்த சமயத்திலெல்லாம், யாம் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது, அவனுடைய பாட்டியும், தம்பியும் மைசூரிலிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த பாட்டியும் தியானம் செய்து கொண்டிருப்பவர்தான்.

அப்படி பஸ்ஸில் வரும் போது, அந்தப் பாட்டி, “என்னமோ எனக்கு ஒரு மாதிரியாகவே இருக்கின்றது, இந்த பஸ் டிரைவர் ஓட்டுவதைப் பார்த்தாலே, சந்தேகமாகவே இருக்கின்றது என்று பேரனிடம் சொல்லுகின்றது.

அட, நீ ஏன் பாட்டி இந்த மாதிரி பயப்படுகின்றாய்? நீ பயப்படுகின்ற மாதிரியெல்லாம் ஒன்றும் ஆகாது”, என்று பேரன் சொல்கின்றான்.

இருந்தாலும் கூட, நிலைமை என்ன ஆகின்றது? அந்த பஸ் ஒரு பாலத்தில் விழ்ந்துவிட்டது. அப்படிக் விழும்போது, ஈஸ்வரா…,” என்று அந்தப் பாட்டி சத்தம் போட்டிருக்கின்றது.

இந்தக் குரல், இந்த இன்னொரு பையன் (மூத்தவன், இங்கே இருப்பவன்) காட்சி சொல்லிக் கொண்டு இருப்பானே, அந்தப் பையனுக்கு காட்சியில் வந்திருக்கின்றது.

உடனே அவன், அப்பாவிடம் ஓடிப் போய், “பாட்டி வந்த பஸ் கவிழ்ந்துவிட்டது” என்று சொல்லி இருக்கின்றான்.

டேய் பேசாமல் இருடா”.. என்று அவர் இவனை அடித்திருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது. “ன்டா, இந்த மாதிரி, காட்சியெல்லாம் தெரிந்தால், இந்த மாதிரிப் பொய் சொல்லக் கூடாது” என்று, அவனிடம் சொல்கின்றார்.

ஆனால், அவன் அப்பாவிடம், “அட, நிஜமாகத்தான் என்று சொல்கின்றேன், நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். சாமியிடம் போய்க் கேளுங்கள்” என்கிறான். ஏனென்றால், அப்பொழுது யாம் காட்சியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது என்ன ஆகின்றது? இங்கே இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே, பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாம் அடிபட்டு விழுந்து கிடக்கின்றார்கள் என்று, அடுத்த பஸ்ஸில் வந்தர்கள் வந்து சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், இவர்களெல்லாம், இந்த மாதிரி அடிபட்டு, கை கால் எல்லாம் உடைந்து போயிருக்கின்றார்கள்.

ஆனால், உங்கள் பையனும், அத்தையும், எந்த அடியும் படாமல் தப்பி இருக்கின்றார்கள் என்று இங்கே வந்து சொல்கின்றார்கள்.

அப்பொழுது, அந்தக் காட்சி சொன்ன பையன் தன் அப்பாவிடம், “நம் சாமி என்ன சொல்கிறார்? பொய் சொல்லக் கூடாது, என்றுதான் சொல்லி இருக்கின்றார். நீங்கள், “நான் பொய் சொல்கிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம்?” அப்புறம் தியானத்தில் இருந்து என்ன? என்று, அவரிடம் கேட்கின்றான். இது நடந்த ஒரு சம்பவம்.