ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2012

ஞானகுரு உபதேசிப்பதை, நமக்குள் முழுமையாகப் பெறும்வழி


உங்களுக்குத் தெளிவாகவே கூறி வருகின்றேன். ஏனென்றால், இந்த ஆயுள்கால மெம்பராக இருக்கின்றவர்களுக்கு, இதைச் சொல்கின்றோம். யாம் ஒவ்வொரு ஊரிலிருந்து வரும் ஒவ்வொருவருக்கும், இதை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சொல்கின்றோம்.

யாம் உபதேசித்த எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்து, கேசெட்டாகச் சேர்த்து, நீங்கள் கேட்டீர்கள் என்றால், அந்த முழுமை வரும். எல்லோருக்கும் யாம் முழுமையாகச் சொல்ல முடியுமோ?

அதனால் இந்தப் பகுதியில் சொல்லப்படும்போது, அந்தப் பகுதியில் உபதேசித்துள்ளதை கேசெட்டில் பதிவு செய்து, அதை எடுத்துக் கேட்டால், அது முழுமையின் தன்மைய நிச்சயம் அடையும்.

ஏனென்றால். போன தடவை வந்தவர்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். திருநெல்வேலியில் உள்ளவர்களுக்குச் சொல்லும்போது, கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும். இப்பொழுது, இங்கே சொல்லும் பொழுது, வித்தியாசமாக இருக்கும்.

அதே மாதிரி, சேலத்தில் உள்ளவர்களுக்குச் சொல்லும் போது, வித்தியாசமாக இருக்கும், ஏனென்றால், உணர்வுகள் அங்கே இணைந்து, அந்த உணர்வுகள் மாறுவதை, எதனெதன் நிலைகளில், எதனெதன் உணர்வுகள் மாறுகின்றது என்பதைத்தான், நினைவுபடுத்துகிறோம்.

ஆகவே, இங்கே சிலர் எண்ணிவிடக்கூடாது.
அதாவது, அன்றைக்கு அந்த மாதிரி,
சாமி அவர்களுக்கு ஒரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்.
ஆனால், இன்று நமக்கு ஒரு விதமாகச் சொல்கின்றார்
என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால், இதையெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால், எல்லோரையும் கூப்பிட்டு வைத்துச் சொல்ல வேண்டும். அப்படி எத்தனை பேர் இங்கே உட்காருவது?   எவ்வளவு நாள் உட்கார்ந்து உபதேசத்தைக் கேட்பது?

இந்த சந்தர்ப்ப உணர்வுகள்,
யாம் இங்கே விளைய வைக்கும் பொழுது,
இதே உணர்வுகள் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு,
இணைந்து வாழும் அந்தப் பக்குவத்தில் வரும் பொழுது,
நாம் இதை இப்படி எடுக்க வேண்டும் என்ற நிலை வரும்.

ஆக, ஆயுள் கால மெம்பர்கள் நீங்கள் எல்லோரும் இணைந்து, அந்த அருள் உணர்வைப் பெறும் பக்குவத்தையும், அதை மற்றவர்களுக்கு எடுத்துத் தெளிவாகச் சொல்லவும், ஏற்றுக் கொள்ளும் பருவமும் நிச்சயம் வரும்.

அதனால்தான் இதைச் சொல்வது. ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித் தான் சொன்னார்