ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2026

மனிதனின் உணர்வில் புகும் தீமையை அகற்றும் நிலை விஞ்ஞான அறிவில் இல்லை

மனிதனின் உணர்வில் புகும் தீமையை அகற்றும் நிலை விஞ்ஞான அறிவில் இல்லை


விஞ்ஞான அறிவால் உடல் கூறுகளுக்கு நாம் இன்று பல வசதிகளைச் செய்யலாம். இந்த உடல் கூறில் மனிதனின் வாழ்க்கையில் பல தீமைகள் இருப்பினும்… கேன்சர் என்ற நோய் வருகிறது என்றால் அதனின் உறுப்பின் தன்மை கொண்டு நமக்குள் மற்ற விஷத்தன்மை வாய்ந்த நிலைகள் ஒவ்வொரு அணுவிலும் இருக்கக்கூடிய விஷத்தன்மையை அதற்குக் கிடைக்காது இது உறிஞ்சிக் கொள்ளும்.
 
அந்த விஷத்தின் தாக்குதல் உணர்வுகள் இல்லை என்றால் நற்குணங்கள் இயக்குவது இல்லை. அதைக் குவித்து மற்ற உணர்வுகளுக்குச் செல்லாது தடைப்படுத்தி இது விளையும் நிலைகள் வரும் பொழுது தான் கேன்சர் மற்றதை வளர விடாதபடி இதனுடைய வேகத் துடிப்பு அதிகரிக்கின்றது.
 
ஆனால் அன்றைய மெய் ஞானிகள் அதை நீக்கிய முறைகள் வேறு… விஞ்ஞான அறிவு போன்று இல்லை.
1.ஒருவருக்குக் கேன்சர் நோய் இருக்கிறது என்றால் இவர்கள் பார்வையில் அது கேன்சல் சுத்தமாக அதை நீக்கிவிடும்.
2.அவர்களுடைய எண்ணங்கள் கொண்டு தனக்குள் சுட்டுப் பொசுக்கும் நிலையாகவே தான் இருந்தது.
 
இதைப் போல கேன்சரை முறித்திடும் தாவர இனங்களும் அக்காலத்தில் உண்டு. மனிதனை நஞ்சு கொண்ட தன்மைகள் இயக்குமே என்றால்
1.இதனை வெல்லும் தாவர இனச்சத்தை அதற்கு நேராக வைத்து சூரிய ஒளிக் கதிரை அதில் பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த ஒளிக்கதிரின் நிலைகள் ஊடுருவி அவன் உடலுக்குள் சென்ற பின் இந்தக் கேன்சரையே நீக்கியது உண்டு.
3.அன்று அகஸ்தியன் இதைப் போன்று செய்துள்ளான்
 
இதைப்போல அன்று இயற்கையின் நிலைகளைக் கண்டு உணர்ந்த தத்துவ ஞானிகள் ஏராளம் ஏராளம். அவர்கள் கண்டுணர்ந்த… அவர்களுக்குள் விளைந்த உணர்வின் ஆற்றல் இன்றும் நமது பூமியில் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாக பரமென்ற இந்தப் பூமியில் பரமாத்மாவாக சுழன்று கொண்டே தான் உள்ளது.
 
ஆனால் நாம் இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டதால் அதனைப் போற்றித் துதிக்கும் நிலைகளில் உள்ளோம்.
 
இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும் அவரவர்கள் கணிப்பிற்குத் தக்கவாறு பல பல கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். அப்படி வெளியிடும் பொழுது சில கிராமங்களில்… உலகம் நாளைக்கு என்ன ஆகுதோ எது கெட்டுப் போகின்றதோ என்ற நிலைகளில் அவர்கள் அச்சுறுத்தும் உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் அந்தத் தீமையின் நிலைகளையே நுகர்ந்து தீமையின் சக்தியைத் தான் விளைய வைக்க முடியும். காரணம்… இயற்கையில் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவு செய்து அதனின் ஆற்றலைப் பெருக்குவோமே என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தால் தீமையையே விளைவிக்கும்.
 
1.ஏனென்றால் அவனுக்குள் தீமை என்ற உணர்வை விளையச் செய்தான்... அந்த உணர்வின் அலையைப் பரப்புகின்றான்,
2.அதை உற்று நோக்கி உணர்வின் தன்மை ஊழ்வினையாக அது பதிவாகின்றது.
3.மீண்டும் நினைவாற்றல் அந்தத் தீமையே தனக்குள் வரும்படி ஆகி  நல்ல உணர்வினை மாற்றிச் சிந்தனையற்றவனாக மாற்றுகிறது.
 
ஏனென்றால் விஞ்ஞான அறிவின் தன்மைகள் எவ்வளவோ உன்னிப்பான நிலைகளில் கவனிக்கின்றனரோ மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல.
1.ஆனால் அவனுடைய அற்புதங்கள் கண்டுபிடிப்பிலே தான் இருக்கும்.
2.மனிதனின் உணர்வில் புகும் தீமையை அகற்றும் நிலை அங்கே இல்லை. 
 
விஞ்ஞான அறிவில் இன்று கண்டுணர்ந்த சில மருந்துகள் அப்படித் தான் உள்ளது
 
நம் உடலில் ஒரு நோய் வருகிறது என்றால் அந்த நோயை உருவாக்கும் அந்த அணுவின் தன்மையை நீக்க அதைக் காட்டிலும் ஒரு நல்ல உணர்வின் தன்மை அதை வளர்க்கும் வலுவுடன் ஒரு நஞ்சைக் கலந்து அது உடலுக்குள் கொடுக்கின்றார்கள்,
 
பின் இது வேகமாக எதை இந்த நஞ்சு தாங்கியதோ அந்த உணர்வின் தன்மை கொண்டு உடலிலே பரவும். எது தீங்கு செய்கின்றதோ அதற்கு எதிர்மறையாக ஒரு நஞ்சினைக் கொடுக்கப்பட்டு இதற்குள் சென்ற பின் இந்த நஞ்சின் வேகத்தை அதற்குள் புகுத்துகின்றது.
 
1.அந்த நஞ்சும் இதுவும் இரண்டறக் கலந்த பின் இதனின் உணர்வு இதற்குள் சேர்த்த பின் அந்த நோயை அது மாற்றுகின்றது.
2.இருப்பினும் இவன் எதை மாற்றி இதற்குள் எதிர்மறையாக இதை அனுப்புகின்றானோ அது புது விதமான உணர்வாக மாறி
3.மற்றொரு நோயை உடலுக்குள் உருவாக்கும்.
 
ஆனால் மெய் ஞானிகள் கொடுப்பது
1.இயற்கையில் விளைந்த தாவர இன சத்தின் தன்மைக்குள்
2.தன் எண்ணத்தால் நோய் நீக்கும் உணர்வின் தன்மை செலுத்தப்பட்டு… தன் நினைவாற்றலால் ஊடுருவச் செய்கின்றான்.
3.இந்த ஊடுருவல் அங்கு சென்ற பின் எந்தத் தாவர இனச்சத்தோ அதை நுகர்ந்து இது ஜீவன் பெறும் பொழுது
4.அந்தத் தீமைகளை நீக்கிடும் நிலை வருகின்றது.