
சாப அலைகளின் இயக்கம்
நாம்
உதாரணமாக, எல்லோருடனும்
பழகுகின்றோம். மிகவும் நெருங்கி ஒருத்தருக்கு நீங்கள் உதவி செய்கின்றீர்கள்.
அவர்களுடைய குடும்பத்தில் எத்தனையோ சிக்கல்கள் வருகின்றது. என்னடா வாழ்க்கை…? என்று
அவர்கள் தற்கொலை பண்ணுகின்றார்கள்.
அவர்கள்
குடும்பத்தின் மேல் “இந்த
குடும்பம் தொலைந்து போகும்…! உருப்படுமா…?" என்று இந்த சொல்களைச் சொல்லி அங்கே விட்டுவிடுகின்றார்கள். அதை இழுக்கிறது இல்லை. இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் சாப
அலைகளாக மாறுகின்றது.
அந்தச்
சாப அலைகளாக மாறும் பொழுது என்ன செய்கின்றது…?
1.இவர்கள்
எப்படி எல்லாம் இந்த குடும்பம் "நாசமாகப் போக
வேண்டும்" என்று சொன்னார்களோ
2.இந்த
உணர்வெல்லாம் அந்த உடலுக்குள் சேர்த்து அந்தக்
குடும்பத்தைச் சீரழிக்கின்றது.
சாப
அலைகள் உள்ள குடும்பங்களைப் பாருங்கள்.. எப்படிச் சம்பாதித்தாலும்
கடைசியில் எந்தக் காசையும் பாதுகாக்க முடியாது. எதை எடுத்தாலும் எங்கு பார்த்தாலும் முட்டுக்கட்டை...!
இப்படிப் பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.
வீட்டில்… அவர்கள்
குடும்பம் நாசமாக போக வேண்டும் இன்னொருத்தர் சாபங்களைச் சொல்லப்படும் பொழுது அங்கு
நின்று வேடிக்கை பார்த்தாலும் அந்த உணர்வுகளை நாமும் நுகர்கின்றோம்.
இப்படிச் சொல்கிறார்கள் என்று எண்ணும் பொழுது
1.அதே சாப அலைகள் நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடல்களில் தவறுகள்
நிறையச் செய்து
2.நமக்கும்
தொல்லைகள் அதிகமாக வருகின்றது, வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட.
ஒரு
சாக்கடைத் தண்ணீரைத் தூக்கி
வீசப்படும் பொழுது அந்த இடத்தில் ஒரு
நல்லவர் வந்தால் நல்லவராக இருந்தாலும் அந்த நல்லவர் மீது படாமல் இருக்குமா…?
தூக்கி
வீசும் போது கெட்டவன் மேலே ஊற்றுகின்றோம். பக்கத்திலே நல்லவன் இருந்தால் அவன்
மேலேயும் நிச்சயம் விழுகத்தான் செய்யும். இவன் உடலிலும் நாற்றம் ஆகின்றது; அந்த நல்லவன் உடலிலும் நாற்றம் ஆகின்றது.
நல்லவன் என்றா பார்க்கின்றது சாக்கடை…?
இல்லை…!
சாக்கடை
விழுந்தால் அதை நாம்
துடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…? இந்த நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதே மாதிரித் தான்
1.நாம்
நல்லவனாக இருந்து வேடிக்கையாகப்
பார்த்த ஒருத்தன்
சாபமிட்டாலும்
2.நாம்
நுகர்ந்த அந்த உணர்வுகள்… "சாபம் இடுகின்றான்…"
என்று தெரியச் செய்கின்றது.
3.அந்த
உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்கி விடுகின்றது. நமது ரத்தங்களில்
தேங்கி விடுகின்றது.
4.பின் அந்தச் சாப
அலைகள் ஒவ்வொரு
நிமிடமும் “அவன்
கெட்டுப் போக வேண்டும்…” என்று உணர்ச்சிகளே நமக்குள் எண்ணங்களாகத் தோன்றுகின்றது.
5.யாராக இருந்தாலும் “நீ நாசமாகப் போ…!” என்று நாமும் சொல்வதற்கு
ஆரம்பித்து விடுகின்றோம்.
தொலைந்து
போகின்றவனே என்று சொல்லட்டும் நாசமாக
போகட்டும் என்று இந்த உணர்வுகளைத் தான் நமக்குள் ஊட்டி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மை
அறியாமலேயே நமக்குள் இந்த சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
தெரிகிறது நமக்கு…!
கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபமிட்டான் என்று
தெரிகின்றது... நாமும்
சாபம் விடுவோம்.
ஏன் ஐயா
இப்படிச்
செய்கிறாய்…? என்று சொன்னால் உனக்கு என்னையா
தெரியும்…? அவன்
செய்வது என்று அப்படிச் சொல்கிறவர்களுடனும் வம்புக்குத் தான்
போவோம்.
ஏனென்றால்
அந்த உணர்வு தானே நம்மை
இயக்குகின்றது என்று
தெரிகின்றோம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்துவதற்கு என்ன
செய்வது…? என்கிற வகையில் தான் இப்போது யாம் சொல்ல வருவது.
இப்படி
நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் நமக்குள் அந்த
உணர்வுகள் நம்முடைய
வாழ்க்கையேல்
சின்னாபின்னமாக்கும். தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியவில்லை.
கல்வி எல்லாம் கற்று உலகத்தில்
விஞ்ஞானத்தின் தன்மை கூட அவர்கள் பெற்றிருக்கலாம். புதுப் புதுப்
பொருள்களையும் தேடி இருக்கலாம். செல்வத்தைத் தேடக்கூடிய அந்த சக்தியும்
இருக்கலாம்.
ஆனால்
1.இந்த மாதிரி சாப அலைகள் விடுபவர்களை நாம் பார்த்தோம் என்றால்
2,நல்ல
குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலைகளின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த
பின்
3.இதுவும்
அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றது.
நாம்
தேடிய செல்வத்தையும் பார்க்க முடியவில்லை. நம்மை அறியாமல் “யாரோ
என்னவோ செய்துவிட்டார்கள்… நாம் வளர்ந்து வருவதில் பொறாமையில் ஏதோ என்னமோ பண்ணி விட்டார்கள்
என்றுதான் தூண்டும்.
1.இந்த
உணர்வுகள் அந்த சாப அலைகளுக்குச் ஜீவன்
ஊட்டச் செய்து
2.அந்தச்
சாபத்தையும் நமக்குள் நிறைவேற்றியே
கொடுக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மிளகாய்
நெடி எந்தப் பொருளில் பட்டாலும் அந்த உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம்
எதிலே பட்டாலும் அந்த விஷத்தின் தன்மையைத் தான் அதை
மாற்றும்.
அதே போல நம்
உடலிலேயே இத்தகைய உணர்வுகள் மாறும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? சற்று சிந்தித்துப்
பாருங்கள்.