
கண் திருஷ்டியைக் கழிக்கும் முறை
லாபம்
சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலே கடையை வைத்து வியாபாரம் செய்கின்றோம்… வியாபாரமும் நன்றாக
நடக்கிறது. வியாபாரம் நடக்கும் பொழுது இன்னொரு நண்பர் வருகின்றார்.
வந்தவுடன்… பாரப்பா…! உன்னுடைய நண்பர் வியாபாரத்தைப் பார்த்து என்னென்னமோ நடக்கிறது என்று சொல்கிறார். உனக்குக் கண்
திருஷ்டி ஆகிவிட்டது. வியாபாரம் அதிகமாக ஆவதைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்கள் என்று
நம்மிடம் சொல்கிறார்.
1.இதை அவர் குறையாகப் பதிவு
செய்கின்றார். அவர்
சொன்னதை அப்படியே பதிவு
செய்கின்றோம்.
2.யாரைச்
சுட்டிக்காட்டி இதைச் சொன்னாரோ… “பொறாமையில் இப்படி எல்லாம் நம்மைப் பேசுகின்றார்கள்…” என்று நாம் எண்ணுகிறோம்.
ஆனால் அந்த நண்பரோ வியாபாரம்
நன்றாக ஆகிறது என்று உயர்வாகத்தான் சொல்லி இருப்பார்.
1.அவர்
சொன்ன வழியில் நம் வியாபாரம் நன்றாக ஆகட்டும்…
2.சரக்கு
வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.
பொறாமைப் பட்டு இப்படிச் சொல்கின்றார்கள்
என்று சொன்னவுடனே இவர் சொன்னதை ஏற்றுக் கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று அதைத் தான் நாம் எண்ணுகிறோம்.
1.பின் அவர்
நினைவு வரும் பொழுதெல்லாம்
2.அது நமது ஆன்மாவாக
மாறும்.
அந்த நினைவுடன் அன்றைக்குக் கடையிலே போய் உட்கார்ந்தோம் என்றால் சரக்கின் விலையைச் சொல்லி வியாபாரம் செய்யும் பொழுது வாங்குவோர் செவிகளிலே இது படும்
பொறாமையில்
செய்கின்றார் என்று நம்மிடம் சொன்ன உணர்வு இங்கே வெறுப்பாக நம் ஆன்மாவிலே புகுந்து…
வாடிக்கையாளர் கண்களில் நம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் காதிலே
அதே உணர்வுகள் பாய்ச்சப்பட்டு.. அவர் நாம் எடுத்துக் கொடுத்த சரக்கைப் பார்த்தார் என்றால்… நாம் வெறுப்படைந்தது போன்று அவருக்கு இந்தச் சரக்கு வெறுப்பைக் காட்டும்.
நண்பர் நம்மிடம் சொல்லி ஒரு விஷ விதையை முதலிலே ஊன்றுகின்றார். அவர்
மீது நம்பிக்கை கொள்கின்றோம். அந்த எண்ணம் வலுவாகின்றது…
கணங்களுக்கு அதிபதியாகின்றது. அது நமக்குள் பதிவாகிறது.
இதை
அதிகமாக எடுக்க எடுக்கக் கண் திருஷ்டி விழுந்துவிட்டது என்று இந்தக் கார உணர்வுகள் நமக்குள் அதிகமாகும்.
இதை
மாற்றியமைக்க ரோட்டிலே முச்சந்தியில் கீழே இருக்கும் மண்ணை எடுங்கள். இரண்டு மிளகாயை எடுங்கள். கையிலே
அவைகளை வைத்து எண்ணி தலையைச் சுற்றி
மிளகாயை
நெருப்பிலே போடுங்கள்.
1.இவர்
எவ்வளவு கார உணர்வை எடுத்தாரோ
2.மண்ணுடன்
கலந்த மனிதனின் எண்ணமும் இந்த உணர்வும் அதற்குள் கலந்த பின் அந்த மிளகாயை
அடுப்பிலே போட்டால் நெடியே வராது.
சாதாரணமாக
மிளகாயை அடுப்பிலே
போட்டு நாம் வறுத்தோம் என்றால் கருகிவிட்டால் வீட்டிலே யாரும் இருக்க முடியாது… உட்கார
முடியாது.
எல்லோரும் தும்ம ஆரம்பிப்போம் இறும ஆரம்பிப்போம்… எல்லாம்
செய்யும்.
காரணம் அந்த
மனிதன் சொன்ன உணர்வை அறியாது சேர்ந்த இந்தத் தீமைகளை எப்படி
மாற்றுவது…? என்று ஞானிகள் சாஸ்திரமாக அந்தக்
காலத்திலே நமக்கு இதைக்
கொடுத்தார்கள்.
1.முச்சந்தி
மண்ணில் தவறான
உணர்வு கொண்ட பலருடைய அந்த உணர்வுகள் பட்டிருக்கும்.
2.இவர் நிலைகளை
எண்ணி கண் திருஷ்டி ஓமழிப்பு எல்லாம் போக வேண்டும் என்று தலையைச் சுற்றிய
பின் (இவர் உடலில்
உள்ள மேக்னட்)
3.அவருடைய ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கக் கூடிய நிலைகளை எரிச்சலான உணர்வுகளை மிளகாய் கவர்ந்து
எடுத்துக் கொள்ளும்...
4.அதை
அடுப்பிலே போட்டால் நெடி வராது. கண் திருஷ்டி மாறிவிடும்.
கைக்குழந்தைகள்
நன்றாகச் சிரித்து விளையாடிக்
கொண்டிருக்கும். ஒரு சிலருடைய உணர்வுகள்… அவர் உடலில் நோய் இருக்கும் அல்லது சங்கடம் இருக்கும். அவர்கள் இந்தக் குழ்ந்தையை உற்றுப்
பார்ப்பார்கள்.
அந்த
உணர்வுடன் குழந்தையை உற்றுப் பார்த்தால் அது அதனின் ஆன்மாவிலே
பட்டுவிடும். அது உடல் நலக் குறைவாகிவிடும். அதை நீக்கக் குழந்தையின்
தாய் அதே போல் முச்சந்தியில் மண்ணை
எடுத்து இரண்டு மிளகாயை எடுத்து அந்தக் குழந்தையைச் சுற்றினால் போதும்.
அந்த
குழந்தையைச் சுற்றியுள்ள நெடியின் தன்மையை இழுத்து
விடும்… குழந்தை
நன்றாக ஆகிவிடும். காரணம் இது எல்லாமே மேக்னெட்.
1.சாஸ்திர
விதிப்படி சாதாரண மக்களுக்கும் இந்த உண்மைகளை ஞானிகள் உணர்த்தி வெளிப்படுத்தி
உள்ளார்கள்.
2.இந்த முறைப்படி செய்து தீமையின்
விளைவுகள் நமக்குள்
வராதபடி நீங்க வேண்டும் என்ற உணர்வைக் கலந்து
3.மிளகாயை வைத்துச் சுற்றும் பொழுது தீமையான உணர்வுகளைக் கவர்ந்து
கொள்கின்றது.
அவர்கள்
நன்றாகின்றார்கள்.