ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2026

மெய் ஞானிகளின் ஆற்றல்

மெய் ஞானிகளின் ஆற்றல்


நமது உயிர் "ஓ" என்று இயங்குகின்றது… அந்த உணர்வான சத்து நம் உடலாக இயங்குகின்றது. அது தான் உடல் தான் சிவம்.
 
நாம் எதையெதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வுகளை எல்லாம் நமது உயிர் "ஓ" என்று ஜீவனாக்கி "ம்" என்று உடலாகும் பொழுது இது எல்லாம் ஒரு வினை.
 
இது எல்லாமே ஞானிகள் சொன்னது.
 
இப்பொழுது ஒருத்தர் மிகவும் வேதனைப்படுகின்றார். அந்த வேதனையான நிலைகளை நாம் உற்றுப் பார்க்கின்றோம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கின்றோம்.
1.அதை உயிர் "ஓ" என்று ஜீவனாக்கி "ம்" என்று உடலாக்கும் பொழுது இது நமக்குள் வினையாக மாறுகின்றது.
2.ஆக… ஊழ்வினை…! நாம் கண் கொண்டு பார்த்தோம் என்றால் அப்படியே பதிவாகிறது.
 
இப்போது எக்ஸ்ரே படம் எடுக்கும் பொழுது என்ன செய்கின்றான்…? கண்ணாடி தான் தெரிகின்றது. அதற்குள் என்ன செய்கின்றது…? நம் உடலுக்குள்ளே இருப்பது எல்லாம் ரெக்கார்ட் பண்ணி… எலும்பு என்றால் எலும்பு… குடல் என்றால் குடல்… என்று இது ரெக்கார்டு பண்ணிக் கொடுக்கின்றது.
 
இதே மாதிரி நமது கண்களால் ஒரு மனிதனைப் பார்த்தோம் என்றால் அந்த மனித உடலில் இருந்து வரக்கூடிய இந்த நிலையை இந்த எலும்பு நமது மேக்னெட். அதற்குள் "ஊன்" என்று ஒன்று இருக்கும். அதிலே சென்று ரெக்கார்ட் ஆகிப் பதிவாகி விடுகின்றது.
 
உதாரணமாக
1.ஒரு மனிதன் வாழ்க்கையில் எத்தகைய மனிதனைப் பார்த்தான்…?
2.எந்தெந்த நிலைகளைப் பெற்றான்…? இது எந்த நிலைகளில் இணைந்தது…? என்று
3.இன்றைக்கு விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க முடியும்… மெய் ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க முடியும்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு உருவாக்கப்பட்ட கருவியை வைத்து நம் எலும்புக்குள் இருக்கக்கூடிய… புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் எதை எதை எல்லாம் பதிவு செய்து எதனின் நிலைகள் இயக்கியது…? என்று காண முடியும்.
 
இப்பொழுது இங்கிருந்து ராக்கெட்டை விண்ணிலே அனுப்பி மற்ற கோள்களில் நடப்பதைப் படம் எடுக்கிறார்கள். சாதாரணக் கண்ணுக்கு அது தெரியாது. ஒரு புள்ளியாகத் தான் தெரியும்.
 
அதை ஆயிரம் மடங்கு பெருக்குகிறார்கள், அதை ஆயிரம் மடங்கு பெருக்கப்படும் பொழுது அதற்குள் இன்னது தான் இடம் என்ற நிலைகளில் அறிந்து கொள்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.
 
ஏனென்றால் முதலில் சிறிதாக இருக்கின்றது அதைப் பெரிதாக்குவது… அதைப் பெரிதாக்குவது… அப்படியே பெரிதாக்குவது. இதை ஒரு லட்சம் முறை ஆக்கும் பொழுது ஒரு ஊசி முனையில் எவ்வளவு இருக்கின்றதோ அந்த அளவுக்குத் தெரிந்தாலும் விஞ்ஞான அறிவு அதை விரிவாகப் பெருக்கிப் பெருக்கிப் பெருக்கி அந்த ஊசி முனையைப் போல் தெரிவது… “இந்தப் படத்தில் இருப்பது இந்த இடம் தான்…” என்று விஞ்ஞானிகள் கண்டு கொள்கின்றார்கள்.
 
இதே போல் தான்
1.மெய் ஞானிகள் அவர்கள் தன்னுடைய கண்ணின் தன்மை ஊடுருவி
2.தன் ஆற்றலைப் பெருக்கிப் பெருக்கிப் பெருக்கி ஒரு உடலின் தன்மையை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
3.இவன் எந்த ஜென்மத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை பெற்றான்…? என்ற இந்த நிலையை அவர்கள் கண்டு உணர்கின்றார்கள்.
4.அந்த உணர்வைத் தனக்குள் செலுத்தி நாம் எதிலிருந்து வளர்ந்தோம்...?
5.எது எதிலிருந்து மாறினோம்...? எதைக் கொன்றோம்...? எதைப் புசித்தோம்...? எதன் நிலைகளில் வந்தோம்...? என்ற நிலையை அறிகிறார்கள்.
6.இந்த எலும்புக்குள் ஒவ்வொன்றும் கலவையின் நிலைகள் இரண்டறக் கலந்து இருக்கும் இந்த அணுவின் தன்மைகள் தான் அது எல்லாம்.
 
இதே அவர்கள் செய்த நிலையை மெய் ஞானத்தின் சக்தியால் இந்த உணர்வின் தன்மையை உங்களுள் பதியச் செய்யும் பொழுது
1.அந்த உணர்வினை திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஒரு கோடி என்று நாம் எண்ணும் பொழுது
2.கோடிச் சரீரத்தில் எடுத்துக் கொண்ட அந்த எண்ணங்கள் அது பெருகிப் பெருகி எப்படி மனிதனாக நம்மை உருவாக்கியது…? என்ற நிலைகளை
3.இன்றும் நாம் காண முடியும்.
 
இந்த விஞ்ஞானிகள் கண்ட மாதிரித் தான் மெய் ஞானிகள் அவர்கள் அன்று கண்டுணர்ந்தது.