
முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை
உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!
சொந்த பந்தமாக இருந்தாலும்… தன் குடும்பத்தாராக இருந்தாலும்… அவர்கள் உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்…
அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உங்கள்
உயிரை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துங்கள்.
பின்…
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள்
குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெருநிலை என்ற நிலை அடைதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் இதை
வலுப்படுத்தி இந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை… சூட்சம
சரீரத்தை விண் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு விண் செலுத்தினால்…
1.நாம் மேல் நோக்கி விண் செலுத்திய அந்த உணர்வின்
தன்மையை… நாம் மீண்டும் நுகரப்படும் பொழுது
2.இங்கே அந்த (முன்னோர்ளைப்
பற்றிய) ஈர்ப்பின் சக்தியை… அந்த
உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது
3.அவ்வாறு அது கவர்வதனால்… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா நமக்குள் உட்புகாது தடுத்து
நிறுத்துகின்றது.
ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருக்கும்
நிலையில்
1.நாம் விண் செலுத்தத் தவறினால்… நம் ஆன்மாவில் வந்து விட்டால் “நம் சுவாசத்தின் வழி…” உடலுக்குள் நிச்சயம் சென்றுவிடும்.
2.ஆகவே இதன் வழி அடைத்துவிட்டு உணர்வினை
ஒளியாக்குதல் வேண்டும்.
மாறாக… மேலே சொன்னபடி விண்ணுக்கு அனுப்பினால் அந்த
உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு… அதை அங்கே
தனக்குள் கவர்ந்து சென்றுவிடும்.
இந்த உடலிலே பெற்ற நோயின் உணர்வை… அந்த உணர்ச்சிகளை அங்கே
கரைத்து விடும்.
ஆகவே உயிருடன் ஒன்றிய நிலைகளில்
1.”தான் வாழ வேண்டும்…”
என்ற உணர்வின் தன்மை அங்கே ஒளியாகின்றது.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும்
உணர்வினை “அது உணவாக எடுத்து…” அதனின் ஈர்ப்பு
வட்டத்தில் சுழலும்.
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்த
கோள்கள் எப்படி அதனைச் சுழன்று வாழ்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை
நாம் வலுவாக்கி விட்டால்…
அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் அடுத்து நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் அங்கே
செல்கின்றது.
அதே போல… நண்பன் என்று நாம் பழகிய நிலைகள் அவர்
சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் (இறந்தவர்
யாராக இருந்தாலும்… நாம் கேள்விப்பட்டால்) அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள்
கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைய வேண்டும்… அழியா
ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்டு
2.”இத்தகைய அடைப்பாக நாம் அமைத்துக் கொண்டு…” அந்த ஆன்மாக்கள் நமக்குள் புகாதபடி இங்கே தடுக்க வேண்டும்.
இதைத்தான் இராமாயணத்தில் வாலியை… இராமன் மறைந்திருந்து
தாக்கினான்…! என்று சொல்வது. அதாவது…
துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து நமக்குள் அடைத்து விட்டால் “எந்த ஆன்மாவும் உள்ளே செல்லாது…”
இவ்வாறு நம் முன்னோர்களை விண் செலுத்தி
விட்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும்
நாம் எளிதில் பெற அது உதவுகின்றது.
அவர்கள் முதலிலே மனிதனாளர்கள்… அடுத்து நம்மை அவர்கள்
தான் மனிதனாக உருவாக்கினார்கள்.
உதாரணமாக…
1.ஒரு விழுதின் தன்மை மரமாக வளரப்படும்போது… விழுது எப்படி அதைக் கனியாக்குகின்றதோ
2.இதைப் போன்று நாம் முன்னோர்களைக் கனியாக்க
வேண்டும்
3.ஏனென்றால் கனியாக உருவாக்குவது அதன் விழுதுகளே…!
4.(மரம் – முன்னோர்கள்…
விழுது – நாம்)
5.ஆகவே… நாம் இதை முறைப்படுத்திச்
செய்தால் அவர்கள் கனியாகின்றார்கள்.
கனி என்பது… உயிர் ஒளி. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த உயிருடன் ஒன்றும் “அனைத்தும் ஒளியாக்கப்படும் பொழுது…” கனியாகின்றது…!
கனியின் தன்மை அடைந்த பின்… அதாவது விழுதுகளான நாம்
அதை உருவாக்கப்படும் பொழுது
1.அந்தக் கனியின் தன்மையை நாம் விழுங்கும் பொழுது…
2.அது எப்படிக் கனியானதோ… அதை (அதே) முறைப்படுத்தி நாமும்…
3.நம் உணர்வுகள் (உயிருடன்
ஒன்றுவது) கனியாகி… பிறவி இல்லா என்ற
நிலை அடைகின்றது.