ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2012

வாழ்க்கையே தியானம்

1. குரு காட்டும் வழியில், மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சதாசிவமாக்கும் வழி
கேள்வி:
குரு காட்டிய அருள் வழியில், நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி உணர்வை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் சதாசிவமாக்க வேண்டும். ஆனால், தீமையின் நிலைகள் ஏற்படும் பொழுது, அதிலிருந்து குருவின் அருளால் மன பலத்துடன், அதிலிருந்து மீள வேண்டும் என்று சொல்கிறீர்கள் அதற்கு விளக்கம். 

ஞானகுருவின் பதில்:
நாம் பரிவும், அன்பும், பண்பும் கொண்டவர்களாக இருக்கிறோம். அப்பொழுது, ஒருவர் ரோட்டில், ஐயா பசிக்கின்றது என்று சொல்கிறார், அந்த வேதனையான உணர்வை, நாம் நுகர்ந்து விடுகிறோம். இரக்க உணர்வு கொண்டு, அவருக்கு உதவியும் செய்கிறோம்.

ஆக, இந்த உணர்வுகள் அவரை எந்த வேதனையில் அந்த சோகக்குரலில் வருகிறாரோ, இந்த உணர்வு, சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்துவிடும். இது சிவமாகிறது.

இன்னொரு பக்கம் ஒருவர், கோமாக ஒருவரை உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். நாம் கண்ணில் பார்க்கிறோம். இது ஓம் நமச்சிவாய, இது நம் உடலாகிறது.

நமக்குள் அந்த உணர்வு குடும்பத்தில் ஏதாவது கொஞ்சம் குறை கண்டால், நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகிறோம். அப்பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் கோப உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக விளைந்து, இது சிவமாகிறது.

இப்படி, நம் வாழ்க்கையில், ஒவ்வொன்றும் சிவமாக்கப்படும் போது, நாம் மனிதனான நிலைகளில் பரசுராம் என்று சொன்னால். அவன் வேதனைப்படுகின்றான், உதவி செய்கின்றோம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா...” என்று அவனிடம் வேண்ட வேண்டும். அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வேண்டி, அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் இணைத்துத் தணிக்க வேண்டும்.

இந்த அணுவாக மாற்ற வேண்டும். இதை உடலாக மாற்ற வேண்டும். இப்போது சொல்வது அர்த்தமாகிறதா?

இதை நாம் உடலாக்கியபின், அவனை நாம் எப்படி நினைக்க வேண்டும்? அந்த மகரிஷியின் அருள் சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும். இந்தத் துன்பத்திலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று, இந்த உணர்வின் ஒலியைப் பரப்ப வேண்டும்.

நீங்கள் செய்கிறீர்களோ, செய்யவில்லையோ? உதாரணமாக, இன்றைக்கு ஒருவன் வேதனைப்படுகிறான் என்று,
நாம் உதவி செய்து கொடுத்தால்,
எத்தனை நேரத்திற்கு இருக்கும்?
அன்றைக்கு முழுவதும் இருக்கும்.
அப்புறம், நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமோ?
   
ஆக, அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று, உங்களுக்குள் அவனுடைய தீமைகள் வராது, தடுத்தல் வேண்டும். இதைப் போல், மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும். எதிர் காலம் நல்லதாக வேண்டும் என்று அவனிடம் சொல்லி, “நீ நன்றாக இருப்பாய் என்று இந்த வித்தைப் போட வேண்டும்.

இதை அவன் எண்ணினால், அவனுக்குக் கிடைக்கும், எண்ணவில்லை என்றால் கிடைக்காது. னால், வித்தை நீங்கள் அங்கு ஊன் வேண்டும்.
இதே மாதிரி, நண்பர்களுக்கு நோயாக இருந்தால், போனவுடன் அவர்கள் நோயை விசாரிக்கிறீர்கள். கேட்டவுடன் உயிரில் படுகிறது, உங்கள் உடல் சோர்வடைகிறது.

சோர்வடைந்த உடன், சோர்வடையச் செய்யும் அணுவாக நமக்குள் விளைகிறது. அந்த மனித உடலில் விளைந்து, அவன் எத்தனை வேதனைப்பட்டானோ, அதன் மீதியை எடுத்து நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆக, நாம் அதைக் கேட்டவுடன் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா” என்று அவனிடம் வேண்ட வேண்டும். உயிரான ஈசனிடம் வேண்டி, அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவாத்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று இணைக்க வேண்டும். இப்படி, இதை ஒரு இரண்டு நிமிடமாவது செய்ய வேண்டும்.

இதைச் செய்து முடித்தபின், மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும். என் நண்ர் மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும். மகரிஷியின் அருள் சக்தியால் லமாக வேண்டும் என்று சொல்லிவிட்டு, இதை விட்டு விடவேண்டும்.

இப்படிச் செய்யும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்து வலிமை பெறுகின்றது. அந்த உணர்வை எடுப்பதற்குத்தான், உங்களுக்கு யாம் சக்தி கொடுக்கிறோம்.
2. தீமைகளை உடனுக்குடன் நீக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பேராற்றல்
இப்பொழுது, திட்டியவர்களை மறுபடியும் எண்ணும் பொழுது,
பதட்டமும், கோபமும் நமக்கு வருகிறது. அதே போலத்தான்,
உங்களுக்கு அந்த அருள் ஞானத்தை
நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்,
அதை பெறக் கூடிய தகுதியை
உபதேசத்தின் மூலமாக யாம் பதிவாக்குகின்றோம்.

இதை, நீங்கள் திரும்ப நினைவாக்கும் பொழுது, கண்ணிற்கு வருகிறது. அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கிறீர்கள். இப்படி, இதைக் கலந்து பழகுங்கள். அப்படிக் கலந்து பழகினால்தான், அந்தத் தீமைகளை அடக்க முடியும். இதைச் சிவமாக்க வேண்டும்.

நீங்கள் தனித்து அந்த நோயான பின்பு, சிறிது நாட்கள் கழித்து வீட்டில் போய், எனக்குதெல்லாம் சரியாக வேண்டும் என்று நினைத்தால் கடினம்.

இது முதலில் அணுவாகிறது. இரண்டாவதாக இதைக் கொண்டு போவது சிரமம். முதலில் ஒரு செடி விளையும் பொழுது, அந்த செடியோடு இந்த உரத்தை இணைத்து வைத்தால்தான், நன்றாக இருக்கும்.

ஆகவே இந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது, அப்பொழுதே, உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு, அதை நாம் துடைக்க வேண்டும். தைத்தான், வாழ்க்கையே தியானம் என்பது.

அப்பொழுது நாம் இதைப் பற்றுடன் பற்றி, கடைப்பிடிக்க வேண்டும். தவறிப் போய்விட்டது, ஆனால்,
குறைந்தது தீமையான அணுவின் தன்மையாக அது விளைவதற்கு முன், 
முதலில் ஒரு நிமிடம் 
மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று,
இதை இணைத்துவிடுங்கள்.

இதில், ஒரு பழக்கதிற்கு வர வேண்டும். இப்படிச் செய்யும் பொழுது, தீமைகள் உங்களுக்குள் வராது தடுக்கப்படுகின்றது.

நாம் வாழ்க்கையில் பார்ப்பதெல்லாம் நமக்குள் சதா சிவமாக்கிக் கொண்டே வருகிறோம். வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும் சிவமாகிறது. இதுதான், ஓம் நமச்சிவாய. நாம் நுகர்ந்து பார்த்த உடன் “ஓ” என்று பிரவமாகி, “ம்” என்று உடலாகிறது. இது தான் ஓம் நமச்சிவாய.

இப்போது ஒருவர் நோயோடு இருக்கிறார் அவரைப் பார்த்த உடன் திருப்பிச் சொல்கிறோம், ஒருவர் திட்டுகிறார், கேட்கிறோம். அப்படித் திட்டுவது ஓம் நமச்சிவாய, நாம் அந்த உணர்வை திருப்பிச் சொன்ன உடன், “திட்டியவனை என்ன சும்மா விடுவதா? விடக்கூடாது என்று நாம் திருப்பிச் சொல்கிறோம்.

இப்போது ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். ஓம் நமச்சிவாய. என்னடா இப்படி வேதனைப்படுகிறார் என்று, இந்த உணர்வின் தன்மையை நாம் எடுக்கும் போது, அந்த உணர்வு நமக்குள் விளைகிறது.

தைத்தான் சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கிறோமே தவிர, நாம் நமக்குள் வருவதை பரசுராம் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவன். இந்தக் காய்கறிகளை என்ன செய்கிறோம்? இருப்பதை வேக வைக்கிறோம். முதலில் பல பொருள்களைச் சேர்க்கிறோம், சுவையாக உருவாக்குகிறோம்.

இதே போல் பலராம், பலருடைய எண்ணங்களை நாம் கேட்கிறோம். இது உடனே தீமைகள் விளைகிறது, அருள் ஞானியின் உணர்வை இதனுடன் இணைத்து விட்டால், இதில் கலந்து சமப்படுத்தி விடுகிறது.

அப்படிச் சமப்படுத்தும் போது, அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் வருகிறது. இந்தத் தீமையின் நிலைகள் தணிகிறது. இதைக் கொஞ்ச நாள் பழகிக்கொண்டால் போதும். நீங்கள் இதைச் சொல்ல வேண்டாம். தன்னாலே இது சொல்ல வைக்கும்.

இதற்கு முன்னால் நீங்கள் தீமைகளை கேட்கும் பொழுது என்ன சொல்வீர்கள் யையோ, அம்மம்மா என்பீர்கள். இப்பொழுது ஈஸ்வரா என்று சொல்லி, உயிரை நினைக்க வரும். அதனுடன் மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நினைத்தால் விளைந்து விடுகிறது.

சந்தர்ப்பத்தில் எடுத்தவுடன், வேதனையைக் கவர்ந்து எடுத்து விடுகிறீர்கள், அப்பொழுது, நாம் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்து விடுகிறோம்.

இதை இணைத்துப் பழகிக்கொண்டால், எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும். உங்கள் சொல்லால், பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும். இதனால், உங்களுக்குள் துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் விளைகின்றது.

ஒருவர் துன்பத்தைக் கண்டுரும்போது, துன்பத்தை விளைவிக்கும் அணு விளைகின்றது. துன்பத்தை அகற்றிய, அருள்ஞான உணர்வு மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்தால், இந்தத் துன்பத்தை அடக்கும் சக்தி வருகிறது. கொஞ்சம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். தியானம் என்பது இதுதான்.
3. ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
இதைச் செய்யாதபடி, யாரோ செய்வார், எவரோ செய்வார் என்றால், ஒன்றும் நடக்காது. அகஸ்தியன் என்று சொன்னால், இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது, இந்த உயிர் எத்தனை வலு பெற்றோமோ அங்கு செல்கிறது. இந்த கண்ணின் நிலைகளில் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ,தை நமக்குள் சேர்க்கின்றது.

இப்பொழுது, இன்றைக்கு வான மண்டலத்தை நோக்கும் பொழுது, அந்த நினைவு துருவ நட்சத்திரத்துடன் இணைகின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் பொழுது, அது கூர்மை அவதாரம்.

அந்த வலிமை கூடும் பொழுது, கண்ணன் என்ன செய்கிறான்? அர்ச்சுனனுக்குச் சாரதியாகப் போகிறான். இப்பொழுது வேதனைப்படும் பொழுது, தை நீங்கள் எடுத்தால் அர்ச்சுனாகும். து சாரதியாக வந்து விடும். அவர்கள் உடலுக்குள் சேர்கிறது. 

ஆனால், அருள் ஞானியின் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது, இது அர்ச்சுனாகி வலிமையாகிறது. அந்தக் கண் அங்கு விண்ணுக்கு அழைத்துச் செல்கிறது.
எதை வலுவாக எடுத்ததோ, அந்தக் கூர்மை நம்மை வலுவாக அழைத்துச் செல்கிறது. இது மகாபாரதத்திலும், கீதா உபதேசத்திலும் தெளிவாக உள்ளது. யாம் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதைத்தான், யாம் திருப்பி விளக்கமாகச் சொல்கின்றோம்.

தைத்தான் கிருஷ்ணா, கிருஷ்ணா என்பார்கள். ஹரே கிருஷ்ணா ஹரே ராம், ஹரே கிருஷ்ணா ஹரே ராம் என்று சொல்கிறோம். அந்த ராமன் யார்? ஹரே கிருஷ்ணா யார்?

இப்பொழுது, நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். அந்தக் கண்ணின் நினைவுகள் வரும், அது ஹரே கிருஷ்ணா. அவரைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன் என்று சொல்வோம்.

முதலில் ஹரே கிருஷ்ணா, அடுத்து ஹரே ராம், உன்னை நான் பார்க்கிறேன் அப்பொழுது, அந்த உணர்வின் தன்மை எனக்குள் இரண்டாவது வருகிறது, அப்போது அந்த எண்ணத்தின் செயலாக ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே கிருஷ்ணா ஹரே ராம்,
ஹரே ராம் ஹரே கிருஷ்ணா.
நாம் இதைப் பார்ப்பது கண்ணின் தன்மை கொண்டு தான் பார்க்கின்றோம். இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா?
4. அழியாப் பெரும் சொத்து
ஏனென்றால், எம்முடைய எண்ணம், நீங்கள் உயர வேண்டும் என்று யாம் எண்ணும் பொழுது, என்னிடம் வளர்கிறது, நீங்களும் அதே போல் எண்ணினால், அது உங்களுக்குள்ளும் விளையும்.

அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்கிற பொழுது, அந்த வழிக்கு நீங்கள் போகிறீர்கள் துதான் நமக்குச் சொத்து. இந்த உடலுக்கு, நீங்கள் கோடிப்ம் வைத்திருந்தாலும், அது நம்முடன் வரப்போவதில்லை. இந்த உடலை எத்தனை அழகாக வைத்திருந்தாலும், அதுவும் வரப்போவதில்லை.

நம்முடன் வருவது, அழகு படுத்தும் உணர்வுகள், இந்த ஒளி. ஆகவே. நமக்குள் வரும் இருளை மாய்க்க வேண்டும். ஆக, மனிதன் இந்த உடலில் கொண்ட இச்சையை, மறக்க வேண்டும். அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும் என்று, இச்சைப்பட வேண்டும்.
                                                  
இதைத்தான், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று, அருள் ஞானத்தை நமக்குள் இச்சைப்பட்டு நம் உடலுக்குள் வளர்த்தால், இந்த வாழ்க்கையில், இந்த உடலின் பிடிப்புக்கு வரும் தீமைகள் அனைத்தும் கரையும்.

அந்த அருள் ஞானியின் உணர்வுகள், நமக்குள் கிரியையாகும். இந்த வாழ்க்கையை, அந்தத் தெளிவான நிலைகளுக்கு அழைத்துச் செல்லும். இதுதான் இச்சா சக்தி, கிரியா சக்தி.

நாம் இச்சைப்பட வேண்டியது எது? அருள் ஞானம். அந்த அருள் ஞானத்தை, நம் உடலுக்குள் செலுத்த வேண்டும். இதை கிரியை ஆக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை ஞானமாக்க, இந்த உடலின் எண்ணங்களை இயக்க வேண்டும். இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.
5. கல்கி – ஞானகுருவின் விளக்கம்
இதே மாதிரி கல்கி பிறந்து விட்டார் என்று, தப்பான வழிகளில் சொல்லி வருகிறார்கள். விண்ணில் சென்றவன் கல்கியாகிறான்.

இந்த உயிரின் தன்மையில்,
உணர்வின் தன்மையாகும்போது தான்,
அந்த விண்ணுலக ஆற்றலால்,
மண்ணுலகில் வாளால் வீசி,
குதிரையில் பறக்கிறான்.
ஏனென்றால், மேல் நோக்கிச் செல்கிறான்.

ஆக, வாளைக் கையில் வைத்தான் என்று கல்கியைக் காட்டுகிறார்கள் ஞானிகள். இந்த புவியின் ஈர்ப்பை வீழ்த்திவிட்டு, அந்த உர்வின் தன்மை கொண்டு, அங்கே செல்கிறான் என்று உருவமாக்கிக் காட்டுகிறார்கள்.
  
நாம் எண்ணக் கூடியதை, நமது உயிர் இயக்குகின்றது. நாம் எதை எண்ண வேண்டும்? இந்த புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்ற, ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும்.

இதைத்தான், கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய், என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. இதை விட சாஸ்திரங்கள் உங்களுக்குக்  கூறவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அத்தனை தெளிவாகக் கொடுத்திருக்கின்றது நமது சாஸ்திரம். இது பொய்யல்ல, நாம் பொய்யாக்கி வைத்திருக்கிறோம்.

உண்மையை நாம் உணர முடியாது மறைக்கப்பட்டு, இன்றுறைந்தே போய்விட்டது. நமக்குள்து தெளிவாக்கப்பட வேண்டும். ஆகையால், இதை ஒவ்வொருத்தரும். நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆகவே, இந்தத் தெளிவின் தன்மையில் நீங்கள் வளர வேண்டும்.
நம் பார்வை இப்படித் தெளிவாக்க வேண்டும்.
தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்க,
தெளிந்த சிந்தனைகள் பெறும் சக்தியாக வரவேண்டும்

உங்களைப் பார்த்தாலே, மற்றவர்கள் தெளிந்திடும் மனம் பெற வேண்டும். அந்தச் சக்தி பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம். எமது அருளாசிகள்.