ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2023

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

தேவரிஷியாகச் செயலாக்குவதற்கு இந்த உடலைப் பயன்படுத்த வேண்டும்

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி... மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து... அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள... மீண்டும் மழை வர... பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற... இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு... ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்...
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்...! என்றுதான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தை பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா சரீர இயக்கத்தில் செயல்படும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி
2.இச்சரீரம் மண்ணாக நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாகச் சத்தாகும் அமைப்பாய்
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து... பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளைப் பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்... பல கனி வளங்களிலும்... அபூர்வ இயற்கைத் தன்மைகளும்... இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்...
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல...! இயற்கையின் சதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்... ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்... சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்குச் செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவில் “உடல்” இயக்கக் கோளம்.

உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மா மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.

வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்... என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாக செயலாக்கும் செயலுக்கு... மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

August 19, 2023

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் காப்பாற்ற நினைக்கும் கௌரவம் உடலுடன் மறையக்கூடியது

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்...! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்துதான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று...
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு - ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது

1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை...!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்...!”

உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”

ஒருவர் கோபமாக இருக்கின்றார்… சங்கடமாகப் பேசுகின்றார்… சலிப்பாக இருக்கின்றார்… அந்த நேரத்தில் நல்லதைப் பற்றி நாம் உபதேசம் செய்தால் எப்படி இருக்கும்…?

ஏற்றுக் கொள்வார்களா…! நம் மீது வெறுப்பு தான் அதிகமாகும்.

தோசையைச் சுடுகின்றோம் என்றால் முதலில் நெருப்பைச் சரியான பக்குவத்தில் வைத்துத் தோசையை வார்த்தால் அது சரியாக… சீராக வரும். நானும் தோசை சுடுகின்றேன் என்று சொல்லிவிட்டு… சட்டி சூடாகாமல் மாவை வார்த்தால் என்ன ஆகும்…?

அது போலத் தான் ஒரு மனிதனுக்கு நாம் உபதேசிக்க வேண்டும் என்றால்
1.அந்தப் பக்குவமும் கேட்கும் பருவமும் அது எப்படி இருக்கின்றது…? என்று
2.அதை நாம் அனுசரித்துப் பார்த்து நல்லதைச் சொல்ல வேண்டும்
3.அப்போது தான் கேட்பார்கள்…!

இல்லை என்றால்… நல்லதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அவர் கேட்கவில்லை… மோசமான ஆள்…! என்று நாம் எண்ணி விடுகின்றோம்.
1.நல்லதைச் சொல்கிறோம் என்ற பேரில்.. நல்ல குணத்தை வளர்ப்பதற்கு மாறாக
2.”மோசமான ஆள்…” என்ற அந்த உணர்வை நமக்குள் கவர்ந்து விடுகிறோம்.

அவருக்கு நல்லதாக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் நாம் சொல்கின்றோம். இருந்தாலும் நம் சொல்லைக் கேட்கவில்லை என்றால் நாம் என்ன செய்யப் போகின்றோம்…!

1.வேதனை என்ற உணர்வு வருகின்றது
2.வேதனை என்ற விஷம் வரப்படும் பொழுது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்
3.சிந்திக்கும் தன்மை இழந்தால் அவர் மீது குற்றங்களைத் தான் சொல்ல வேண்டியிருக்கும்
4.அவரை எண்ணி நமக்குள் குறை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது
5.அவரை நாம் குறையாக சொல்ல நேருகின்றது
6.அவரைத் தான் குறையாகச் சொல்கிறோம் என்று நாம் நினைக்கின்றோம்
7.ஆனால் நமக்குள் முதலில் குறையை வளர்த்துக் கொள்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவ்வாறு தான் இயக்கிக் காட்டும்.

தீமை என்று தெரிகின்றது… அதை அகற்ற பழக வேண்டும். அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவ பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்... இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் - ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.

August 18, 2023

கௌரவம் அழியக் கூடியது… ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது... “சாந்தம்...” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம் படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு... வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் கோப நிலையின் “காரம்”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்…”

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலில் உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொண்டோமானால்
5.பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை
6.”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது” இவ்வெண்ணம் தான்...!

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்... சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக...!”

August 17, 2023

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அற்புதங்களையும் காட்டினார்.

1.என் கையை நீட்டியவுடன் ஒரு மரம் சட…சட… என்று முறிந்து விழுகிறது
2.கையை நீட்டியவுடன் மேலே பறந்து போகும் காகம் இறக்கை தன்னாலே ஒடிந்து விழுகிறது
3.ஒருவன் கெடுதல் செய்கிறான் என்றால்… இப்படி என்று ஒன்றைச் சொன்னால் போதும்… அவனை உருட்டிக் இங்கே கொண்டு வந்துவிடும்.
4.பெரிய பெரிய கல்களையும் பறக்கச் செய்து காட்டுகின்றார்.

இந்தச் சக்திகளைக் காட்டி விட்டு “இது எல்லாம் எதற்காக ஆகும்…?” என்று விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

இப்படி எல்லாம் செய்தாய் என்றால் நீ அதுவாகத்தான் ஆவாய்…! மந்திர சக்திகளை எடுத்தால் இந்த நிலைக்குத்தான் ஆகும் என்றார்.

மிலிட்டரியில் இறந்தவர்கள் பழி தீர்க்கும் உணர்வோடுதான் இறக்கின்றார்கள். “அந்தக் கூலிப்படைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்…? என்பதை நீ பார்…!” என்று அதையும் காட்டுகின்றார்.

லெப்ட்…ரைட்… லெப்ட்…ரைட்… மார்ச்… அபௌட்…டர்ன்…! என்று என்னென்னமோ சொல்கின்றார். பார்த்தால் பூட்ஸ் அடி சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றது.

ஏனென்றால் “இந்த உணர்வின் ஒலி அலைகள்” அவர்கள் எடுத்துக் கொண்டது இங்கே அலைகளாகப் பரவி உள்ளது. குவித்து எடுத்து அந்த உணர்வின் ஒலியைப் பாய்ச்சினால் பெரிய கல்லையும் தூக்கி எறிகின்றது

என்றோ இறந்தவர்கள் என்று இருந்தாலும் அது மறைந்து விடவில்லை அவர்கள் உடலில் விளைந்தது யாருக்குள் சென்றாலும் இந்த உணர்வின் (பழி தீர்க்கும்) தன்மை தான் இயக்கும்.

ஆக அதை அதிகமாக நுகர்ந்தால் அடுத்தவர்களைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையாகப் போகலாம். இது எல்லாம் இயற்கை நிலைகள்.

ஆனால் மனிதனாக ஆனபின் நீ முழு முதல் கடவுளாக ஆகின்றாய் நான் சொன்ன முறைப்படி அருள் ஞானத்தை உனக்குள் (ஞானகுரு) உருவாக்குகின்றாய். அனைவருக்குள்ளும் அதை உருவாக்கு…!

1.இந்த உலகம் உனக்குச் சொந்தமில்லை
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமில்லை
3.நீ எடுக்கும் அருள் ஞான உணர்வே உனக்குச் சொந்தமாகின்றது
4.அந்த அருள் ஒளியின் உணர்வையே சொந்தமாக்க முற்பட வேண்டும்

அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் தான் நீ அதைப் பெறுகின்றாய்
1.”நான் பெற்றுவிட்டேன்” என்று நீ அகம் கொண்டால் அந்த விஷம் தான் உனக்குள் கூடும்
2.பெற்ற சக்திகளையும் உயர்ந்த உணர்வையும் அது அழித்துவிடும்… நீ போவது எங்கே…?
3.இருளுக்குள் தான் செல்ல வேண்டி இருக்குமே தவிர ஒளிக்குள் வர முடியாது என்று
4.இத்தனை உண்மைகளையும் காட்டிய பிற்பாடு நான் என்ன செய்ய முடியும்…!

பல பேர் எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை “எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… என்று நான் (ஞானகுரு) எண்ணினால் தானே…!”

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய பல பெரியவர்களும் சாமியார்களும் நூற்றுக்கு 90% அறியாமல் தவறுகள் செய்தே வாழ்கின்றார்கள். ஆண்டவனையே நாங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றப் பழகி வைத்திருக்கிறார்கள்.

அது அவர்களுடைய உணர்வு…! இருந்தாலும் எங்கே செல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது

அந்த உணர்வை வைத்து எம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே எண்ணம் என்னையும் திருடனாகத்தான் அவர்களுக்குத் தெரிய வரும் அவர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.

ஆனால்
1.என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் ஞானிகளின் அருள் கிடைக்க வேண்டும் என்று
2.நான் பிரார்த்தனை செய்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக எண்ணுவதில்லை.

காரணம் குற்றம் என்று பார்க்கப்படும் பொழுது அந்தக் குற்றத்தின் உணர்வுகள் தான் விளையும்… குற்றவாளியாக நம்மையும் மாற்றிவிடும்.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொன்னது போன்று
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் அதுவாகின்றேன்
2.தவறு செய்கின்றார்கள் என்று எண்ணினால் நான் எதைச் செய்தாலும் அது தவறாகத்தான் வந்து சேரும்.
3.ஏமாற்றுகின்றான்… ஏமாற்றுகின்றான்… என்று தான் வரும்… அது அவருடைய குற்றம் அல்ல.

ஆனால் அதே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று கோபப்பட்டுக் கடுமையான ஆயுதத்தை வைத்து அவர்களை நான் வீழ்த்த எண்ணினால் அவர்கள் உடலைத் தான் வீழ்த்த முடியும். இந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக எனக்குள் விளைந்து விடும்.

அதனால் தான் யார் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
1.“என்னிடம் சக்தி இருக்கிறது…” என்று அந்த வகையிலே அடக்கியாளும் உணர்வைச் செயல்படுத்துவதில்லை.
2.“ரோசப்பட்டு நான் அவ்வாறு செய்ய முடியாது…!”

அவர்களை உருட்ட வேண்டும் என்றால் உருட்டி விட்டுப் போகலாம்…! அத்தகைய அகம் வந்தால் நான் போகும் பாதையை அது தடையாக்கி விடும்.

இந்த உடலில் எத்தனை நாள் நாம் இருக்கப் போகின்றோம்…? இந்தப் புகழ் எவ்வளவு நாள் இருக்கும்…?

மற்றொருவரைக் கொன்று வீழ்த்தி… என்னைப் பார்த்தாலே அனைவரையும் அஞ்சும்படி செய்யலாம். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து விடுமே…! நல்ல குணங்கள் வீழ்த்த பின் நான் எங்கே செல்வது…?

ஆகையினால் மற்றவரின் போற்றுதலுக்காக யாம் எதையும் செயல்படுத்துவதில்லை

அந்த அருள் ஒளி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… ஒவ்வொரு உயிரும் ஒளியாக வேண்டும் என்று எண்ணுவது தான் என்னுடைய வேலை…!

நீங்களும் அதே வழிகளில் செயல்படும் பொழுது இருளை அகற்றலாம் உயிருடன் ஒன்றி ஒளியாகவும் முடியும். ஆகவே…
1.எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும்
2.இதை எல்லாம் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

மனிதன் ஒளி நிலை பெறுவது தான் “இயற்கையின் கதி (வளர்ச்சி)”

இயற்கையின் கதியை… இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.

உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி...!”

ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.

பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்... பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.

யானை மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றது. ஆனால்
1.மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு
2.மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.

இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.

மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.

நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது...? என்பதை அறிந்திடல் வேண்டும்.

இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை...
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2.சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3.அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.

வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்...!

ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை... மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ... அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்... ஒளியில்... இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. ஆகவே…
1.உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை
2.ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது...!

இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து... சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்... சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.

1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.

August 16, 2023

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நமக்குக் கிடைக்காததனால் “அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது”

குடும்பத்திலே குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் குழந்தைகளாக இருக்கும் பொழுது குடும்பத்துடன் இருந்தாலும் திருமணம் ஆன பின் பிரிந்து செல்கின்றார்கள்.

பிரிந்து சென்றாலும் தாய் தந்தையுடன் ஒட்டி வாழ்பவர்களும் உண்டு… அவருடன் ஒட்டி வாழாதவர்களும் இருக்கிறார்கள்.

இதே போல் தான் சூரிய குடும்பத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தன்மைகள்.

ஆரம்ப நிலையில் பல அணுக்கள் மோதி மோதி…
1.மோதலில் ஏற்படும் நிலைகளில் அணுக்கள் உருமாறி ஆவியாக மாறுகின்றது
2.எடை கூடி மேகங்களாக மாறுகிறது… மேகங்களுக்குள் அணுக்கள் மோதும் போது தான் நீராக வடிகின்றது
3.நீருக்குள் சிக்கும் அணுக்கள் எடை கூடி ஓடும் பொழுது அருகிலிருப்பதுடன் உராய்வாகி
4.மற்ற உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து திடமாக ஒரு பொருளாக மாறுகின்றது.
5.அது தான் பரம்பொருள்…! – ஒரு கோளாக உருவாகிறது.

அதாவது… ஓடும் வேகத்தில் தன் அருகிலே காந்தப் புலனால் உராயப்படும் பொழுது சுழற்சி ஆகின்றது. சுழற்சியால் வெப்பம் ஆகும் பொழுது நுண்ணிய அலைகளைத் தனக்குள் கவர்கின்றது. துருவப் பகுதி வழியாகத் தன் உணவை எடுக்கிறது.

பல பொருள்களைப் போட்டு நாம் வேக வைக்கும் போது எப்படிப் புது புது சுவை கொண்ட பொருள் உருவாகின்றதோ இது போன்று கோள்… அது நுகர்ந்த உணர்வுகள் கரைந்து அமிலமாக மாறுகின்றது.

அமிலத்தின் தன்மை அடைந்த பின் ஆவியாகப் பல மாற்றங்கள் அடைகிறது. மேலிருந்து வாரியாக பல அடுக்குகளாக வரும் போது இது தான் நிலநடுக்கங்களாக ஆகிறது.

நிலநடுக்கம் ஆன பின் மேல் பகுதி டபக்… என்று உள்ளே சென்று விடுகிறது. உள்ளே சென்ற பின் நிலைநடுக்கம் நின்று விடுகிறது. வேகத்துடிப்பு குறைந்து விடுகிறது.

1.இப்படித்தான் கோளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு அதனின் வளர்ச்சியில் பெரும் சக்தியாக மாறி
2.சுழற்சியின் வேகம் கூட.. வெப்பத்தின் தணல் கூட… அது நடு மையத்தில் கூழ் போன்று ஆகின்றது.

முதலில் நீரானது… அடுத்து ஆவியானது மீண்டும் நீரானது. நீருக்குள் அணுக்களின் தன்மை சிக்கியது. சிக்கப்படும் பொருள்கள் உறைந்து உறைந்து எல்லை இல்லாத இடத்தில் ஒரு எல்லையாக பரம்பொருளாக உருப்பெறுகின்றது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சுழற்சியின் வேகம் கூடி நடு மையத்தில் வெப்பத்தின் தணல் கூடக் கூட அனைத்தும் உருகி அமிலமாகிறது… கோள் நட்சத்திரமாக மாறுகிறது.

அமிலமாக இருப்பதை உமிழ்த்தப்படும் போது பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. உதாரணமாக நூலாம்படை பூச்சி தன் மலத்தால் வலையை விரித்து அதிலே சிக்கக் கூடியதை உணவாக எடுத்து வளர்கிறது.

அதே சமயத்தில் ஒரு ஈ கிடைத்தால் தன் மலத்தால் அதைக் காற்று புகாது சுற்றி மூடி விடுகிறது. மூடித் தன் இனத்தை அது விருத்தி செய்கிறது. ஒரு நூலாம்படைப் பூச்சி அடுத்து பலவாகிறது.

இதைப் போல் நட்சத்திரம் பால்வெளி மண்டலமாக அமைத்த பின் அதனின் உணர்வின் தன்மை பரவுகின்றது. இருந்தாலும் தன் சுழற்சியின் தன்மை கொண்டு தூசிகளாக வருகிறது.

நூலாம்படைப் பூச்சி வலையில் சிக்குவதை எப்படி உணவாக எடுத்துக் கொள்கின்றதோ அது போன்று பால்வெளி மண்டலத்தில் சிக்கிக் கொண்ட உணர்வுகளைச் சுழலும் வேகத்தில் நட்சத்திரம் தூசிகளாக மாற்றுகின்றது.

மேல் பகுதியில் இருந்து எடுப்பதைத் தனக்குள் விளைய வைக்கின்றது. அமிலமாக இருந்த அந்த நட்சத்திரம் சிறுகச் சிறுக உறைகிறது. அமிலம் உறைந்து பாதரசமாக மாறுகிறது.
1.அதை எடுத்தால் சூடாகாது… சூடானாலும் ஆவியாக மாறிவிடும் ஆனால் பொருளாக இருக்கும் போது எடை கூடியதாக இருக்கும்.
2.ஒன்றைத் தாக்கப்படும் பொழுது வெப்பத்தின் தணல் கூடி பிரித்துவிடும்.
3.ஆனால் வெப்பத்தின் தன்மை வரும் போது இயக்கும் சக்தி வருகின்றது
4.பாதரசத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தன்மையாக வருகிறது.

இப்படி உருப்பெற்று வளர்ந்து வரப்படும் போது இந்த சூரிய குடும்பத்தின் எல்லையில் கடைசியில் இருப்பது… மற்றதை இழுக்கும் சக்தியாக நட்சத்திரங்களாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் உமிழ்த்துவதைக் கோள்கள் இடைமறித்து உணவாக எடுத்து அதனின் வளர்ச்சியில் வளர்கின்றது. மையத்தில் சூரியன் அது செயல்படுகின்றது.

முதலில் நட்சத்திரமாக இருந்தது வளர்ச்சி பெற்றுச் சூரியனாக… ஒரு சூரியக் குடும்பமாக எப்படி மாறியதோ… அதே போல கடைசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே தான் வளர்ந்து… அதுவும் சூரியனாக மாறத் தொடங்குகிறது

நட்சத்திரங்கள் தனக்கென்று உருவாக்கப்படும் பொழுது பிற மண்டலங்களிலிருந்து (வேறு சூரியக் குடும்பத்திலிருந்து) எடுத்துக் கொடுப்பது இந்தச் சூரிய குடும்பத்திற்குக் கிடைக்காத நிலை வரும் பொழுது இந்தச் சூரியன் முதுமை அடைந்து விடுகிறது.
1.முதுமை அடைந்தால் சூரியன் நாளடைவில் செயல் இழந்துவிடும்
2.அது செயல் இழந்தால் இதனுடன் ஒட்டி இருக்கக்கூடிய கோள்கள் “எங்கே திசை மாறிச் செல்லும்…” என்று சொல்ல முடியாது.

நம்முடைய சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து சென்று விட்டது. அதனுடன் சேர்ந்து மற்ற நட்சத்திரங்களும் விலகிச் சென்று விட்டது… முழுமையாகவே விலகி விட்டது.

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நம் சூரியக் குடும்பத்திற்குக் கிடைக்காததனால் “இங்கே அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது…”

விஞ்ஞானிகள் விஷக் கதிரியக்கப் பொறிகளை இங்கே பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்… அழிவின் தன்மையாகத் தான் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட விஷக்கதிரியக்கங்கள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்து பிரபஞ்சத்திலும் பரவி விட்டது. பூமிக்குள் இருக்கும் மற்ற பொருளுடன் அது இரண்டாவது தரம் மோதிய பின்
1.கல் மண் கட்டிடம் அனைத்தையும் ஆவியாக மாற்றி
2.தன் இனமாகப் புயல் போல மாற்றக்கூடிய நிலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

வான்வீதியிலும் அது அதிகமாகப் பரவியதால் சூரியனால் கவரப்பட்டு அங்கேயும் மோதலாகி வெடிக்கும் நிலை வரும் போது
1.சூரியனுக்குள் பார்த்தால் கருகும் நிலை அடைந்து (நஞ்சைப் பிரிக்கும் தன்மை இழந்து கொண்டிருக்கிறது) கரும்புள்ளிகள் அதிகமாகப் பரவி விட்டது.
2.சூரியனும் மாசுபடும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
3.விஞ்ஞானிகளும் படம் பிடித்து அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2000 சூரியக் குடும்பங்களும் இப்படி விளைந்தது தான். இதிலே
1.முதலில் உருவான மையத்தில் இருக்கக்கூடிய சூரியக் குடும்பம் அது பெரிய சுழற்சி வட்டம்… “பெரிய பாதாளம்” என்பது அது தான்.
2.அதற்குள் எந்தக் கோள் சென்றாலும் கரைத்துவிடும்… எது சென்றாலும் கரைத்து ஆவியாக மாற்றிவிடும்
3.ஆவியாக மாற்றி… மறுபடியும் மற்ற கோள்களுக்கு மற்றவைகளுக்கோ அது உணவாகக் கொடுத்து விடும்.

இது போன்று தான் நம் சூரியனும் கரையும் நிலையில் வருகின்றது கரைந்து அமிலமாக ஆவியாகப் பரவும். நம் பூமி திக்கில்லாதபடி ஓடும். மற்ற சூரியக் குடும்பத்தில் எந்தக் கோளிலாவது போய் விழுகும்.

ஏதாவது ஒரு கோளின் ஈர்ப்புகள் புகும். பூமியிலே விளைந்த உயிர் அணுக்கள் மற்ற கோள்களில் நம் பூமி போன்று ஜீவிக்கக் கூடிய நிலை இருந்தால் அங்கே மீண்டும் உயிரினங்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அப்படி இல்லை என்றால்
1.மனிதனாக உருப்பெற்ற “நம்முடைய உயிர்கள்” விஷத் தன்மை கொண்டு சதா வேதனைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்
2.கண்ணுக்குப் புலப்படாத நிலையில் (உயிர்) தான் இருக்கின்றது
3.ஆனால் சேர்த்துக் கொண்ட அந்த விஷத் தன்மையின் துடிப்பு தாங்காது வேதனையை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் காட்டிய உண்மைகள்.

மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது அவன் எண்ணும் எண்ணங்கள் தான்

காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.

பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து... இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை...” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி...”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்...”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.

இயற்கையின் கதியில்... பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி... இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்... பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்... சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.

பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது... மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்... துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.

ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு... அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.

அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.

ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்...
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)

தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.

1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.

ஆகவே... இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.

August 15, 2023

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.

தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.

ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.

ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.

எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.

இது தான் தியானம்.

நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!

நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.

இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தான் ஏகாதசி...!

1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.

அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”

யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”

12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்திந் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.

ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.

ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அதுதான் நமக்கு முக்கியம்…!

சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

நுகரும் ஆற்றல் பெற வேண்டுமப்பா…!

காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.

விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து... அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து... காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து... “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.

பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்...
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.

அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது... உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு... ஆத்மாவினைச் சுவைப்படுத்தி... ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க...
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.

பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது... அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.

ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்... வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.

ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை... சமைப்பு நிலை... ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.

இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்...
1.நாம் உண்ணக்கூடிய உணவு… எது எது மனிதனுக்கு ஏற்றது...? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப் படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.

மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் அறிவில்... செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்...” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது...?

உருவத்தில் சிறிய எறும்பு... மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.

நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.

ஆனால்... மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது...? என்பதை அறிய முடிகின்றது.

நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று...?

மழை வருவதற்கு முன்னும்... எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.

இதனை எல்லாம் நாம் அதனுடைய “இயற்கையின் செயல்” என்கின்றோம்.

ஒவ்வொரு உருவக நிலையும்... அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்... மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்... பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்...
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு மனிதனால் தான் முடியும்.

மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.

இதே தொடரில் இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும் பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்...
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான “ஆத்ம ஜோதி” என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.

இப்பூமியின் தொடர்பில் இருந்து... விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்... ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்... அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்...!”

1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா...!

August 14, 2023

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது

1.உணர்வுகள் நுகரப்படும் பொழுது உமிழ் நீர்கள் எப்படிச் சுரக்கிறது என்று
2.காட்டிற்குள் அழைத்துச் சென்று என்னை வைத்தே தங்கத்தைச் செய்யும்படி
3.உமிழ் நீர்களை வைத்து அதை உருவாக்கும்படி செய்து காட்டினார் குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

மாங்காயைச் சாப்பிட்டு இருக்கின்றீர்களா…? வெயில் காலங்களில்…! எப்படி இருக்கின்றது…?

இப்பொழுது உமிழ் நீர் (எச்சில்) உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…? லேசாக அந்தப் புளிப்பு கலந்து உமிழ் நீர் ஊறுகிறதல்லவா…!.

“மாங்காய்…” என்ற சொல்லை நான் சொன்னவுடன்
1.அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உமிழ் நீராக எப்படி மாறுகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம்முடைய எண்ணங்கள் நாம் நுகரக்கூடியது அனைத்தும் உமிழ் நீராக மாறும்.
3.(இது நமக்குள் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டிருப்பது).

உணவை உட்கொண்ட பின் சங்கடம் சலிப்பு வெறுப்பு இது போன்று எண்ணிப் பாருங்கள். சரியான ஜீரண சக்தியாக வராது அஜீரணமாகி… விஷத்தன்மைகளாக மாறும்.

ஆகையினால் தான் பேசும் பொழுது “உயர்ந்த ஞானத்துடன் பேச வேண்டும்” என்று சொல்வது. அவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் நல்ல சக்தியாக உங்களுக்குள் சேரும்.

அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான் அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று வேதனையும் சோர்வையும் கலந்து
1.அந்த உணர்வோடு உணவு உட்கொண்டீர்கள் என்றால்
2.உடலுக்குள் எதிரியான அணுக்கள் உற்பத்தியாகி நோயாக உருவாக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் சாப்பிடும் ஆகாரத்துடன் சுவாசிக்கும் உணர்வின் உமிழ் நீர்கள் சேர்கின்றது. இந்த உமிழ் நீர் எதுவோ அதற்குத் தகுந்த சாப்பிட்ட ஆகாரத்தை மாற்றுகின்றது.

இது ஒரு திரவகத்தைப் போன்று தான்..

கடினமான நிலைகள்… வேதனை சலிப்பு அந்த உணர்வோடு இருந்து பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்காது

1.நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி அது உமிழ் நீராக… அந்த உணர்வின் சத்தாக…
2.அதற்குண்டான கருவின் தன்மையாக… அணுக்களாக உடலுக்குள் எப்படி உருப்பெறுகின்றது…?
3.அதனுடைய இயக்கங்கள் எப்படி எல்லாம் நம்மை மாற்றுகிறது…? என்பதை
4.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.

“நமக்கு மேல் ஒருவன்” நம்மை உயர்த்தச் செயல்படுகின்றான் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்

நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்... பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்... உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.

உணர்வின் எண்ணத்தில்... அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்...
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.

ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.

தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்...
1.மனித உணர்வின் செயல் வீரியம்... “தான்...!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியாத் தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு...” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டக் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.

மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்...!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

1.தனக்கு மேல் ஒருவன்...
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்...” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்...” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.

இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.

மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.

பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.

மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது...” இதனை...
1.”தான் என்ற” அறிந்து விட்டோம்... என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.

மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்... நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து.... சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்... நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது... இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது... ஒளியாக... மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.

ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று...
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்... மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.

அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!

August 13, 2023

முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”

உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வதற்கு முன்னாடி இருந்த அனுபவமும்… தியானத்திற்கு வந்த பிற்பாடு சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

இதை நீங்கள் கூர்ந்து பார்த்து இதனுடைய இயக்கம்
1.நாம் இயங்குகின்றோமா…
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அந்த இயக்கிய உணர்வுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்பதை யோசனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொண்ட அந்த உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. ஆகவே தீமை என்ற உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? அதை மாற்றுவதற்கு உண்டான சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமைகளிலிருந்து தப்புவதற்கு குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்தாரோ அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீயவினைகள் இருந்தாலும் குறையும்
2.புதிதாகத் தீயவினைகள் நமக்குள் உருவாகாதபடி தடுக்கவும் முடியும்.
3.இரண்டும் இல்லை என்றால் நான் தியானம் செய்தேன்… அதைச் செய்தேன்… என்று சொன்னால் “அது அர்த்தமற்றது…”

ஆகவே இதைப் பின்பற்றி ஒவ்வொன்றுக்கும் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.

ஒரு வித்தினை ஊன்றி செடி உருவாகி விட்டால் அது வளர்வதற்குண்டான நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் தான் வளர்க்க முடியும்… அதிலே மீண்டும் வித்துக்களும் உருவாகும்.

ஆனால் செடியை வைத்து விட்டேன்… தண்ணீரையும் ஊற்றி விட்டேன்.. அது வளர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி விளையும்…?

இது போன்று அனுபவத்திலே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரக்கூடிய அழுக்குகளை நீக்கிடும் ஒரு பழக்கம் வர வேண்டும்,

1.எத்தனையோ கோடி உடல்கள் பெற்று
2.அதிலிருந்து மீளும் சக்திகளை நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது தான்
3.உயிர் இந்த மனித ரூபத்தைக் கொடுத்தது.

அகஸ்தியன் பல விஷத்தன்மைகளை அடக்கி அதை எல்லாம் மாற்றி அமைத்ததனால் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்றால்… அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றி முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதிய வினைகள் நமக்குள் சேராதபடி தடுத்து நம் உணர்வுகளை வலுவாக்க முடியும்.

வலு பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழி நடந்த பின்
1.வாழ்க்கையில் உங்களை எது இயக்கியது…?
2.குடும்பங்களில் வெறுப்பு எப்படி வந்தது…?
3.பகைமைகள் எப்படி வந்தது…?
4.தொழில் எப்படி நஷ்டமானது…?
5.அதை எல்லாம் தியானத்தின் மூலம் எப்படி மாற்றினோம்…? என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

உங்களிடம் இப்போது கேட்கிறோம்…! அடுத்து அதற்குண்டான விடைகளையும் யாம் (ஞானகுரு) கொடுக்க முடியும்.

எம்மிடம் பழகிக் கொண்ட பிற்பாடு… தியானத்தில் இருந்தீர்கள். தியானத்தின் மூலம் தீமை நீக்கிடும் அனுபவங்களைப் பெற்று அதை வலுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.

அதை மற்றவரிடமும் சொல்லித் தான் ஆக வேண்டும். நீங்கள் அதை வெளிப்படுத்தினால்
1.அடுத்து மற்றவரும் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல
2.எல்லோரும் அந்த ஞானிகள் காட்டி வழியினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

ஆரம்பத்திலே எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டினோம். உடலுக்குள் ஆன்மாக்கள் எப்படி இயங்குகின்றது…? அது உடலுக்குள் நுகரப்பட்டால் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் காட்சியாகக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஆனால் காட்சியைக் கொடுக்கப்படும் போது அவரவர் ஆசை எதுவோ அதற்குத்தக்க
1.அந்த ஆசை உணர்வு கொண்டு இறந்த பிற ஆவிகள் அவர்கள் உடலில் புகுந்து…
2.போகும் மார்க்கங்களை இடைமறித்து… மீண்டும் தீய வினைகளுக்கே அழைத்துச் சென்று விட்டது.

ஆரம்ப நிலையில் எம்மிடம் பழகியவர்கள் எல்லாம் பெரும்பகுதி அந்த நிலைக்குத் தான் சென்று விட்டார்கள்.

ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல நிலைகளைக் காண்பித்தேன். அதைத் தப்பான வழியில் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆகவே… அந்த இயற்கையின் உண்மைகளை நாம் நுகர்ந்து கொண்ட பின் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?

நம் உடலில் அது வளர்ந்த பின் நண்பர்கள் நம்மைப் பார்க்கும் போது எப்படி மதிக்கின்றனர்…? ஒரு பொருளைப் பார்த்த பின் நமக்கு வெறுப்போ அல்லது அதன் மீது பாசமோ எப்படி வருகிறது…? என்பதை நாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுக்கொப்பத் தான் அது வரும்.
1.எம்மிடம் அதை வெளிப்படுத்தினால் அதற்குண்டான விளக்கமும் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அருள் வழியில் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும்.

தனக்குத் தானே விதியை விதித்துக் கொண்டு… அதைத் தான் “தெய்வத்தின் விதி” என்று எண்ணி வாழ்கிறார்கள்

ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் "இளமையில் கல்" என்பதன் பொருள் யாது...?

வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.

நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா...? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.

காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.

அந்தந்த தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.

இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி…! என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.

இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி... நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.

ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.

தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்... பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்... இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.

1.தெய்வத்தின் தொடர்பால் தொடர் பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.

இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்... உணரலாம்.

அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.

இதைப் பெறவல்ல நிலை எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.

அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே...
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.

1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ...
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.

August 12, 2023

ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது

கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.

அதனின் உட்பொருள் என்ன…?

1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது - நம் கண்கள்.

இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.

உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்... ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.

நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.

அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.

ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.

ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?

உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.

ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!

குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.

அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?

இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.

1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.

குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?

குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.

காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்

அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.

அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.

விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது

அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?

அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்

நம்முடைய “விதி” (தலையெழுத்து) உருவாகும் விதம்…!

கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ... அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்...
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலனடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.

இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ... பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.

அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று “தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்…”

ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக (விதியாக) நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.

உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.

நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.

இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை “அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்”
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.

இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.

ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்...!

August 11, 2023

உங்களுடைய ஏக்கம் தான் என்னைப் பேச வைக்கிறது - ஞானகுரு

எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்

மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்

அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்

இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.

ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.

உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.

இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.

அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.

இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்

அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!

ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும் ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?

எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்...?

அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.

இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!

விண்ணுலக ஆற்றல்

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்... இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்... இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது...?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது…? என்று கண்டறிந்து...
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்... எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்... தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா...?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்றுத் தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை... மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன்
1.இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை”
2.தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு... இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்... இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை...
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்... நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்... இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்...
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.