ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2017

“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள்

நான் ஏதோ.., “கதை சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள்.

இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்

மனிதனும் தெய்வமாக வேண்டும்.., தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும் என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.

1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்.
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்.
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும்
என்ற நிலையை உணர்த்திய இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற இன்றைய நிலையில் எத்தனையோ ஏனைய ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.

இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்?

இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.

அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால், அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.

ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.

சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும் “விண் செல்லும் ஆற்றலை..,” அவர்களும் கற்றுணரவில்லை.

மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும் என்று யாரும் எண்ணவில்லை.

இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.

மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின்  நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.

காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது என்றுதான் எண்ணினார்.

அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.

அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.

அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுக போகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.

உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றினர். ஆனால் அந்த மகான்களின் உபதேசங்களை இந்த மனித வாழ்க்கைக்குத்தான் பின்பற்றினார்களே தவிர அவர்கள் காட்டிய அற நெறிகளை யாரும் பின்பற்றவில்லை.

1.இந்த மனித வாழ்க்கையைச் சதம் என்றே எண்ணினார்கள்.
2.சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்.
3.சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு
4.சதமற்றுப் புழுவைப் போல இன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதனின்று மீட்டிட வேண்டும் என்பதற்கே சொல்கிறேன் நான் கொடுத்த அருள் உணர்வின் ஞான வித்தை உன்னுள் வளர்த்து விடு என்றார் குருநாதர்.

பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து என்றார்.

அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன், இணைக்கக் கற்றுக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது?
என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.

இராமலிங்க அடிகள், போகர், இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகாநந்தர், இராகவேந்திரர், ஐயப்பன் இவர்களையெல்லாம் விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.

அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.

1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.

இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?

பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.

அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய் என்றார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

April 26, 2017

ஆயிரம் நல்லது செய்து… என்ன பலன்? “தெய்வம் என்னைச் சோதிக்கின்றது” என்கிறோம் – விநாயகர் தத்துவம் என்ன சொல்கிறது?

வாழ்க்கையில் மனிதர்கள் யாரும் தவறு செய்யவில்லை. பக்தி மார்க்கத்தில் இருப்போர் எவரும் குறைகளைச் செய்யவில்லை.

1.நல்லவைகளைச் செய்ய வேண்டும்.
2.நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
3.பிறரைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டிருந்தாலும்
4.”பிறர் படும் துயரங்களைக் கேட்டுணர்ந்த உணர்வுகள் பதிவான பின்.., என்ன ஆகின்றது?”

நாம் பலகாரங்களைச் சுவையாகச் செய்து வைத்த பின்பு அதிலே சிறிதளவு உப்பு அதிகமாகிவிட்டால் அதனின் சுவை கெட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்தாலும் பிறர் படும் வேதனைகளை நாம் கேட்கும் பொழுது அவர்கள் கஷ்டமெல்லாம் நமக்குள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இந்தத் தீமையான உணர்ச்சிகள் வளர்ச்சி அடைகின்றது.

பல பொருள்கள் தனித்தனியாக இருக்கின்றது. பலகாரமாகச் செய்யும் பொழுது எல்லாவற்றையும் ஒருக்கிணைந்து அந்த உப்பையும் இணைத்தால் தான் பலகாரம் சுவையாக இருக்கின்றது.

ஆனால் அந்த உப்பு கூடிவிட்டாலோ சுவையின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயல்கள் அதிகமாக இருப்பினும் மற்றவர்களையும் நாம் மகிழ்வடையச் செய்கின்றோம்.

சில பேர் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் அவர்களை மகிழச் செய்வார்கள். 100க்கு 99 பேர் அந்தக் கொள்கையில் உள்ளவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

பிறருக்கு உதவி செய்யும் நிலைகளில் அதை மெச்சிச் செய்வார்கள். ஆனால் பின்னாடி “என்ன செய்து, என்ன பலன்?” என்று வெறுப்பார்கள்.

பிறர் படும் துயரங்களைக் கேட்டறிந்து கேட்டறிந்து ஒருவருக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார்.

1.இதைப் போல ஆயிரக் கணக்கோருக்கு உதவி செய்கின்றார்.
2.அவர்கள் எல்லாம் மகிழ்கின்றார்கள்.
3.ஆயிரம் பேரிடம் கேட்டுணர்ந்த கஷ்டத்தின் உணர்வுகள் இவருக்குள் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து
4.இவரின் சுவையைக் கெடுத்துவிடுகின்றது.

இதைத் “தெளிவாகக் காட்டுகின்றார்…” நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கோவிலினுடைய தத்துவமே “உதவி செய் என்று தான் சொல்கிறது. ஆனால் உதவி “எப்படிச் செய்யவேண்டும்?” என்று  நாம் அறிந்துள்ளோமா?

பக்தி மார்க்கத்தில் இருப்போர் “ஆயிரம் பேருக்கு நன்மை செய்தேன் என்ற நிலைகளில் பின்னாட்களில் தெய்வத்தை எப்படி எண்ணுகின்றோம்?

1.நான் உன் வழியிலே தான் அனைவருக்கும் உதவி செய்தேன் என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்?
2.உனக்காக நான் எத்தனை காலம் நான் விரதம் இருந்தேன்?
3.எத்தனை யாகச் சாலைகளைச் செய்தேன்? எத்தனை ஆலயங்களை நான் கட்டினேன்.., உதவி செய்தேன்?
4.எத்தனை பக்தர்களை உனக்காக வரவழைத்தேன்? எத்தனை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்தேன்?
5.உன்னை நாடி வருவோருக்கெல்லாம் எத்தனை உணவைக் கொடுத்தேன்?
என்னே ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்.? என்று கேட்கும் நிலை வருகின்றது. இப்படித்தான் பக்தி மார்க்கத்தில் உள்ளோர் நாம் இருக்கின்றோம்.

பக்தி என்றால் நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் அதைக் காத்திடும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

உன் வாழ்க்கையில் “நீ.., எதனை உனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்?” என்று கேள்விக்குறி போட்டு திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நல்லதை எண்ணிப் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த பின்பு தானே நாம் உதவி செய்கின்றோம்.

நாம் கேட்டறிந்த கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் யாராவது தூய்மைப்படுத்துகின்றோமா? அதைக் கடவுள் வந்து சுத்தப்படுத்துவாரா..?

செடிக்குள் விளைந்தால் வித்து. மனிதனுக்குள் விளைந்தால் வினை. வினைக்கு நாயகனாக விநாயகனாக நாம் மனிதனாக இன்று உருவாகியுள்ளோம்.

மனிதனான பின் கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் வினையாகச் சேர்த்தால் அந்த வினை நமக்குள் விளைந்தால் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அதை உணர்த்துவதுதான் விநாயகர் தத்துவமே. மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி விண்ணுலகில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி வாழ்ந்து கொண்டுள்ளான்.

அதை (துருவ நட்சத்திரத்தை) அரசாகக் காட்டினார்கள். வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வரும் கசந்த நிலைகளை வேப்பமரமாகக் காட்டினார்கள்.

அன்றாட வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி அதை வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக ஒளி சரீரம் பெறு என்பது தான் விநாயகர் தத்துவம்.

ஒவ்வொரு மனிதரும் இதைப் பெற அன்று செய்து வைத்தான் ஞானி.

ஆகவே,
1.மறுபடியும் இன்னொரு உடலுக்கு வித்திடும் வினைகளைச் சேர்க்கின்றாயா..
2.அல்லது பிறவியில்லா நிலை அடையும் ஒளிச் சரீரம் பெறும் ஒளியான வினைகளைச் சேர்க்கப் போகின்றாயா..? என்று
3.கேள்விக்குறி போட்டு “நீ யார்.., இந்தப் பிள்ளை.., யார்? என்று
4.நாம் போக வேண்டிய மார்க்கங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

April 25, 2017

“நாம் சுவாசிக்கும் உணர்வுகளால்” நரம்புகளுக்குள்ளும் எலும்புகளுக்குள்ளும் ஏற்படும் “இராசாயண மாற்றங்களும்” – டி.பி. நோயும்

சாதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றால் அவன் எத்தகைய குணத்தை கொண்டிருந்தானோ உதாரணமாக வாழ்க்கையில் அடிக்கடி வெறுப்பும் வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் இப்படிக் கலவை கொண்டு எடுக்கப்படும் போது அதற்குத்தக்க நோய் வருகிறது.

1.அடிக்கடி “வேதனை என்ற உணர்வு எடுத்தால் டி..பி. வருகிறது.
2.அடிக்கடி “எல்லாக் குணங்களிலும் வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கி விட்டால் அது கேன்சராக மாறுகின்றது.

இந்த டி.பி. என்ற அணுக்கள் தனித்து எந்த உறுப்பில் நாம் பதிவாக்குகின்றோமோ நாம் ஊழ்வினை என்ற பதிவினை நாம் எலும்புக்குள் உள்ள ஊன்களில் இது பதிவாகி விடுகின்றது.

அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் நாம் எடுக்கும் உணர்வுகள் இரத்த நாளங்களில் அணுக்களாக மாறி அதன் உணர்வின் தன்மை “இரசாயணமாக மாறுகின்றது.

அது எலும்புகளில் வரப்படும் போது அதில் உறையச் செய்து அதில் வடித்து இந்த உணர்வுக்கொப்ப ஊழ்வினை என்ற ஒரு அமிலத்தை (எலும்புக்குள்) உருவாக்குகின்றது. கண் கொண்டு உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் அந்த ஊனுக்குள் பதிவாகின்றது.

எதை உற்றுப் பார்த்தோமோ எண்ணம் அந்த உணர்வுகளைத் தூண்டும் அந்த உணர்வினைப் பதிவாக்கி அதனை ஈர்க்கும் சக்தியாக உடல் முழுவதும் உள்ள எலும்புகளில் (அந்த இடத்தில்) வைத்து விடுகின்றது.

சற்றுக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.

மண்ணுக்குள் ஒரு செடியில் விளைந்த வித்தினை ஊன்றினால் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு எந்தச் செடியில் விளைந்ததோ அது எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்ததோ அதன் வழி அந்தச் செடியின் உணர்வுக்கொப்ப ரூபமாகின்றது.

இதே போல ஒரு குணத்தின் தன்மை இங்கே பதிவான பின்
1.வேதனை என்ற உணர்வை நாம் நுகரப்படும்போது
2.வேதனையை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து அது இரசாயணமாக மாறி
3.நரம்பு மண்டலங்களில் கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த இரசாயணக் கலவை நம் நரம்பு மண்டலங்களை அது இயக்குகின்றது.

இது சிறு மூளை பாகங்களில் நாம் எண்ணும் உணர்ச்சிக்கொப்ப அந்த இரசாயணக் கலவை அதன் அழுத்தத்தின் உணர்வின் அழுத்தங்களைக் காட்டும் போதுதான் கைகளை மடக்குவதும் மற்ற நிலைகளைச் செயல்படுவதும் இவை அனைத்தும்.

இப்படி இரசாயணக் கலவைகள் வரப்படும் போது அதனதன் அமைப்பு தன்மைப்படி வேதனை என்ற விஷத் தன்மை வரப்படும் போது இந்த எலும்பை அசைக்கும் நரம்பு மண்டலங்களிலிருந்து வரும் இரசாயணத்தில் அந்த விஷத்தின் அணுக்கள் உருவாகி விடும்.

வேதனை என்ற உணர்வின் தன்மை கொண்ட இரசாயணக் கலவையில் வரப்படும் போது இதனில் எதிர்மறையான விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.

சாதாரணமான நிலையில் இந்த எலும்புக்குள் இரசாயணக் கலவை ஊடுருவி அதை எடுத்து எலும்பின் வளர்ச்சியும் அதற்குப் போதுமான நிலைகள் கொண்டு வலு கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் உருவாக்கிய அந்த அணுக்களை வைத்துத்தான் அதன் மலம் எலும்பாகிறது.

ஆனால் அந்த இரசாயணக் கலவையில் வேதனை என்ற விஷ அணுக்கள் உருவாக்கி விட்டால் எலும்பை உருவாக்கிய அணுக்களை இது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.

இது விழுங்கத் தொடங்கினால் எலும்புக்கு வலு கொடுக்கும் அந்த அணுக்களின் மலங்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்பு சொத்தையாகி விடும். தொட்டால் கத்தரித்து விடும். இது போன் டி.பி. (BONE T.B.)

இதைப் போல வேதனை உணர்வுகள் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களில் வரப்படும் பொழுது மூளையில் டி.பி, கண்களுக்கு வரும் நரம்பு மண்டலங்களில் டி.பி. என்று காரணப்பெயர் வைக்கின்றார்.

இன்னென்ன அணுக்களின் செயலாக்கங்களால் இந்த அணுக்கள் மற்ற அணுக்களைக் கொன்று சாப்பிடுகின்றது என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

விஞ்ஞான அறிவுப்படி டி.பி. அணுக்களைக் கொல்லும் போர் முறைக்காக அதைக் காட்டிலும் அதிகமான அணுக்களைச் சேர்த்து பல கலவைகளைச் சேர்த்து (3-4 மாத்திரைகள) அதை உணவுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

அதே சமயத்தில் இரத்த நாளங்களில் இஞ்சக்சன் மூலம் கலக்கச் செய்கின்றனர். அல்லது நேரிடையாகவே அமில சக்தி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு ஆசிட் போன்றவைகளைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

அப்பொழுது அந்த எலும்புகளில் உள்ள அந்த விஷத்தன்மையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்துகின்றனர்.

தடைப்படுத்தினாலும் அதனுடைய கொடுமையான உணர்வுகள் நாம் சிறுகச் சிறுக வேதனையின் உணர்வுகள் எடுத்திருந்து மற்றவைகளுக்கு இணைத்து அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அறிவை ஊட்டும் நிலையில் இது மடிந்து விட்டால் சிந்தனை மாறி விடும்.

இதற்காக இந்தச் சிந்தனையின் நிலையை வைத்து இன்னென்ன உறுப்புகளில் இன்னென்ன இராசாயணக் கலவை கொண்டு இயங்குகின்றது என்று காண்கின்றனர்.

விஞ்ஞான அறிவுப்படி ஈரல் என்றால் அதற்குச் சத்து கொடுப்பதற்காக மற்ற தாவர இனங்களைப் புசித்து அந்த நிலையில் நல்ல அணுக்கள் உருவாக்கும் தன்மையை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது நேரடியாகவே மாட்டு இனங்களில் இருந்தோ ஆட்டு இனங்களில் இருந்தோ மனிதனுக்கொத்த உணர்வுகள் கலந்த அந்த ஈரலை மற்ற இராசாயணக் கலவையைக் கொண்டு அதைப் பவுடராக்குகின்றார்கள்.

அந்தக் கலவைகளை இஞ்சக்சன் மூலமோ உணவு மூலமோ உட்செலுத்தி நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றார்கள்.

ஆக, எலும்பை உருக்கும் அணுக்களிலிருந்து மீட்க மருந்துகளினால் அந்த அணுக்களை உருவாக்கி இதனைக் கலந்து மற்ற அணுக்கள் செத்து விடாது அதற்குகந்த உணர்வின் சத்தைச் சேர்க்கின்றனர்.

இன்னென்ன நிலைகளில் இன்னென்ன உறுப்புகளுக்கு அது பாதிக்காத நிலைகள் கொண்டு இந்த இஞ்சக்சன் செய்கின்றார்கள்.

இதையெல்லாம் நான் பேசுகிறேன் என்றால் விஞ்ஞான அறிவில் படித்தவன் அல்ல. மெய்ஞான அறிவை ஊட்டி அந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்று குரு காட்டிய அருள் வழியில் தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

1.காற்றில் கலந்துள்ள உணர்வை நீ நுகர்ந்து
2.உணர்வின் தன்மை அறிந்து
3.அந்த இயற்கையின் செயலாக்கங்களை நீ அறி
என்று குருநாதர் சொன்னார்.

அவர் கொடுத்த அருள் ஞான வித்தின் துணை கொண்டுதான் இயற்கையின் விளைவு அது எவ்வாறு என்ற நிலைகளில் நான் அறிய முடிகின்றது.

இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் தன் வளர்ச்சியில் நாம் சிறிது காலம் வாழ்வதற்காக வேண்டி இந்த உடலைக் காக்க எவ்வளவோ பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

ஆனால், மெய்ஞானிகளோ விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைவதே மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் அடைய வேண்டிய எல்லை.

April 24, 2017

அக்காலங்களில் நடந்தவற்றை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.

காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.

சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாத படியும் சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.

அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள் என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “அக்காலங்களில் நடந்தவைகளை..,” எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

இப்பொழுது கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வலைகளைப் பதிவாக்கி அதே அலையில் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது?

அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது. அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.

இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது.., பறந்து சென்றது, மனிதனாக வந்தது என்று காட்டினார்.

அந்த உணர்வலைகள் அந்த இடங்களில் அக்காலத்தில் இருந்த தாவர இனங்கள் அதனுடைய மணங்கள் இங்கே பட்டது.

1.அந்த உணர்வைத் தன் உயிருக்குள் எடுத்து குருநாதர் அறிந்ததனால்
2.அதை எனக்குள் பதிவு செய்து அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு
3.மூச்சலைகள் விடும் போது எதிர் அலைகள் தெரிகின்றது
4.அப்பொழுது அந்த ஒளி அலைகள் பரவப்படும் போது அந்த ரூபங்கள் என் கண்ணுக்கே தெரிகின்றது.
5.அந்த அலைகள் படமாக்கப்பட்டு பதிவாக்கப்பட்டு அக்காலத்தில் எப்படி இருந்தது என்று அறிய முடிகின்றது.

விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களைன் குணத்தையும்  வெளிப்படுத்துகின்றார்கள்.

மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.

அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.

சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது என்று அடுக்கு வரிசையில் அதை போட்டு இருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகையை தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக்கொண்டது என்று காட்டுகின்றார்.

இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார், அன்று உருவான பச்சிலைகளுக்கும் இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.

1.இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
2.ஆனால் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுகளை இவர்கள்  நுகர்கின்றனர்.
3.அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.

ஏனென்றால், தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.

அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்த பின் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.

இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.

அப்படி ஆற்றல்மிக்க நிலைகளாக ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் “அகஸ்தியன்”. குருநாதர் இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.

1.அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு.

2.நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.

April 23, 2017

“மகராசன்…” எனக்கு தக்க நேரத்தில் ரொம்பவும் உதவி செய்தான் என்ற எண்ணத்தில் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மாக்கள் “நன்றிக் கடனை எப்படித் தீர்க்கிறது..?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

நல்லதைப் பெறவேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர் வேதனைப்படுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.

ஆனால், இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்துவிட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.

இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.

ஆனால், இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். ஆனால், அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்.., அடடா.., முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.

அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய் என்பார்.

அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.

எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால், “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா.., இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.

இது தான் பக்தி மார்க்கங்களில் நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில் நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

நாம் அதற்கு நன்மை செய்தோம். ஆனால், யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

நேற்றெல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடி எல்லாம் செய்தார். இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார். இப்பொழுது சதா வேதனையைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

காரணம் அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால் அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.

ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அந்த ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்றுவிடுவது போல் இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்”.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.

அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள். அந்த உணர்வின் தன்மை அங்கே எண்ணும் பொழுது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும்.

தீமைகளைப் பொசுக்கும் உணர்வுகள் கொண்டு வளர்ந்த பின் இந்த உடலை விட்டு வெளியில் சென்றால் அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.


கருக்கிய உணர்வு கொண்டு “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்”.