ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2012

குருநாதர் கொடுக்கும் அருள் வாக்கு


1. ஞானகுரு கஷ்டத்தை நீக்க நமக்குக் கொடுக்கும் வாக்கு
நமது குருநாதர், யாம் சரியாகச் சொல்லவில்லை என்றால், உதை கொடுப்பார். அதே போல, இப்பொழுது யாம் உங்களை அடித்தால், என்ன செய்வீர்கள். வாங்கிக் கொள்வீர்களா?

எமக்குத்தான் திருப்பிக் கொடுப்பீர்கள். “என்னடா, சாமி என்னமோ சொல்லிவிட்டு நம்மை உதைக்கிறார். நம்மை உதைக்க முடியுமாஎன்றுதான் எண்ணுவீர்கள்.

ஒருவர் என்ன செய்கிறார்? “கஷ்டம் என்னைவிட்டுப் போகவே மாட்டேன் என்கிறதுஎன்று எம்மிடம் சொல்லி அலறுகின்றார்.

யாம் என்ன சொன்னாலும், போயா, உனக்குக் கஷ்டமுமில்லை, ஒண்ணுமில்லை போ”, என்று சொன்னவுடன், “என்ன சாமி இப்படிக் கோவிக்கின்றார் என்கிறார். இதை உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்?

இந்த அழுத்தத்தை உள்ளுக்குள் கொடுத்தவுடனே
என்ன செய்கின்றது? சரி இதோடு போகட்டும்
என்ற நிலையை நினைத்தால், பரவாயில்லை.
2. தரித்திரமே போ…!
இப்படித்தான் ஒரு அம்மாவுக்கு என்ன செய்தது? அந்த அம்மா கோயம்புத்தூர். அதற்கு ரொம்பக் கஷ்டம். சொத்து எல்லாம் போய்விட்டது. வீட்டைக் கூட வைத்துக் கொண்டு, ரொம்பத் தொல்லை கொடுக்கிறார்கள். எப்படியாவது இந்தச் சொத்து வந்துவிட்டால், நான் பிழைத்துக் கொள்வேன் என்று எம்மிடம் கேட்டது.
                                                                          
யாமும் சரி என்று சொல்லி, “இந்த தியானத்தைத் தொடர்ந்து செய். உனக்கு வீடு திரும்பக் கிடைக்கும்என்று வாக்கைக் கொடுத்தோம்.

சொத்தை வைத்துக் கொண்டு, கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்என்று எம்மிடம் அந்த அம்மா சொல்கின்றது.

வீட்டைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதை விடம்மா”, உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடு. உனக்குக் கிடைக்கும் என்று யாம் சொன்னோம்.

அதற்கு அந்த அம்மாஎங்கெங்க, எங்கெங்க கொடுக்கின்றார்கள்என்று திரும்பத் திரும்ப, அதையே சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

அப்புறம் யாம் கோபமாகச் சொல்லி, “னக்குக் கிடைக்கும், நீ கிடைக்கும் என்று எண்ணி தியானம் செய்”, என்று அழுத்தமாகச் சொல்லி, “அடுத்து நல்லதாகத்தான் நடக்கும்என்று சொன்னோம்.

அப்படீங்களா, சரிஎன்று சொல்லி தியானத்தைத் தொடர்ந்து செய்து, அந்த அம்மாவுக்கு, வீடு திரும்பக் கிடைத்தது. வீடு கிடைப்பதற்கு, கோர்ட்டுக்கும் பணம் இல்லை என்றார்கள். அதுவும் எப்படியோ கிடைத்து, கேஸ் ஜெயித்து, இந்த அம்மாவுக்குச் சாதகமாக முடிந்தது.

சந்தோஷமாகச் செய்தார்கள். கேஸ் ஜெயித்து வந்தவுடன், அந்த அம்மா என்ன செய்கிறார்கள்? சொத்து வந்துவிட்டது, அதோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், “இன்னைக்குப் பிழைப்பிற்குப் பணம் ஒண்ணும் இல்லை, ஏதாவது, தொழில் செய்ய வேண்டுமென்றால். அதற்குப் பணம் இல்லை, நான் என்ன செய்வது?” என்று சொல்லுகின்றது. அதற்கு யாம் என்ன செய்வது?

இந்த வீடு இன்றைக்குத் திரும்பக் கிடைத்தாலும், வருமானத்திற்கு ஒன்றும் இல்லையென்றால் நான் என்ன செய்வது? என்று சொல்லி, திரும்பத் திரும்பத் தன் கஷ்டத்தையே எண்ணி அழுது கொண்டே இருக்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி, இந்த தியானத்தைச் செய்து, தொழில் செய்ய வேண்டுமென்று எண்ணுங்கள். அதற்குண்டான அமைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று அந்த அம்மாவிடம் சொன்னோம்.

அந்த அம்மாவோ, “எங்கெங்க நடக்கப் போகின்றதுஎன்று சொல்கிறது.

முதலில், உனக்கு எப்படி வீடு திரும்பக் கிடைத்தது?
அதே போல எண்ணினால், தொழிலும் சீராக வரும் அல்லவா
என்று யாம் சொன்னோம்.

வரும், ஆனால், இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்என்று எம்மிடம் திரும்பவும் சொல்லுகின்றது. ஏனென்றால், இந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு, அதையே தான் பேசிக் கொண்டிருக்கின்றது அந்த அம்மா. நடந்த நிகழ்ச்சி இது.

அப்புறம் யாம் கோபமாக, “இந்தத் தியானத்தைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள், அதன்படி செய்து, இந்தத் தரித்திரத்தை விடுங்கள்என்று சொன்னோம்.

அதற்கும் அந்த அம்மா, “எங்கெங்க என் தரித்திரம், என்னை விட்டுப் போகப்போகின்றதுஎன்று மீண்டும் சொன்னது.

யாம் உடனே, தரித்திரத்தைசீ... போ...” என்று சொன்னோம். அப்பொழுது அந்த அம்மா என்ன செய்கின்றது?

சீ போ..” என்று என்னை சாமி சொல்லிவிட்டார். இங்கே சாமியிடம் வந்தாலும் கூட, அவர் என்னிடம் கோவித்துப் பேசுகின்றார் என்று சொல்லுகின்றது.

ஆக, தரித்திரம் போகட்டும், நல்ல காலம் வரட்டும் என்ற நல்ல வாக்கை யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளும் மனம் அங்கே இல்லை.

கோவென்றுஅந்த அம்மா அழுக ஆரம்பித்துவிட்டது. அந்த அம்மா என்ன செய்கின்றது? “என் கஷ்ட காலம், சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றது 

நான் எதைச் சொல்கின்றேன் என்ற, அந்த அர்த்தத்தைப் புரிந்திடாது, அதனுடைய உணர்வுகளிலேயே அந்த அம்மா இருக்கின்றது. நடந்த நிகழ்ச்சி இது. பிறகு என்ன ஆகின்றது? “சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார்என்று அழுதுகொண்டே அந்த அம்மா போய்விட்டது.

ஆக, இந்த அழுத்தங்கள் இப்படியானாலும் அங்கே யாம் கொடுத்த வாக்கு, அந்த அம்மாவுக்கு நிறைவேறுகின்றது.

ஒருவர் வட்டியில்லாமல், பணம் கொடுக்கின்றேன் என்று சொன்னார். நான் கடை வைத்தேன். ஏதோ, ஓரளவிற்கு இரண்டாவது தரம் எனக்கு பணம் வந்துவிட்டது. சாமி என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்என்று அந்த அம்மா எம்மிடம் வந்து சொல்கின்றது.

அன்றைக்குத்தான், யாம் விளக்கத்தை அந்த அம்மாவிற்குக் கொடுத்தோம். அதாவது,
அன்றைக்கு உன் தரித்திரத்தைத்தான், நான் போகச் சொன்னேன்.
ஆனால், நீ கோபித்துக் கொண்டு போய்விட்டாய் அம்மா
என்று யாம் சொன்னோம்.

என்ன பண்ணுவது? என் தரித்திர நேரம், எதையுமே நல்லதைக் கேட்க முடியவில்லைஎன்று அந்த அம்மா சொல்கின்றது. இப்பொழுது தரித்திரம் போய்விட்டது. இப்பொழுது இங்கே வந்திருக்கின்றேன். கடையில் நன்றாக வியாபாரம் ஆகின்றது, என்று சொன்னது. நடந்த நிகழ்ச்சி இது.

ஆக, பொதுவாக என்ன செய்கின்றார்கள். தரித்திரத்தைத் தான் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் பொழுது, “தரித்திரம் போகும்என்று, யாம் சொன்னால், உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகின்றது?

ஆக, அந்த அம்மா கோபித்துக் கொண்டு, எம்மிடம் ஒன்றும் சொல்லாமலேயே போய்விட்டது. எல்லாம் நடந்த பிறபாடுதான் வந்து சொல்லுகின்றது.

ஏனென்றால், இதையெல்லாம் மறைமுகமாக யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பு இல்லை.
3. ஈஸ்வராய குருதேவர் ஞானகுருவிற்குக் கொடுத்த வாக்கின் (சக்தியின்) நிலை
நம் குருநாதர் என்னிடம் என்ன செய்தார்? தைப் பொங்கல் அன்று, என் கடைசிப் பையன் தண்டபானியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவன் அழுது கொண்டே இருக்கின்றான்.

அந்த நேரத்தில் சாமிம்மாவோ, எம்மை ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய அம்மாவும் அதற்கு மேல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்து, யாம் கோபமாக இருக்கின்றோம்.

குருநாதர் எம்மிடம், “நான் சொல்வதைக் கேட்கின்றாயா, இல்லையா?” என்கிறார்.

அப்பொழுது நான் என்ன சொல்கின்றேன். “நீங்கள் கொடுத்த சக்தியும் வேண்டாம், பூராவற்றையும் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை ஆளை விடுங்கள்” என்று சொல்கின்றேன்.

“நான் உன்னை விடமாட்டேன்டா” என்கிறார், குருநாதர்.

அப்பொழுது, தண்டபானி ஙை..ஙை.. என்று அழுது கொண்டே இருக்கின்றான். தைப் பொங்கல் அன்று, வீட்டிலேயும் பேசுகின்றார்கள், எல்லாம் நம்மைப்பற்றி இப்படிப் பேசுகின்றார்கள்.

குருநாதர் வந்து என்ன செய்கின்றார்? “இந்தச் சக்தியை எடுடா, அதை எடுடா, இதை எடுடா” என்கிறார்.

யாம், “சாமி, என்னை ஆளை விட்டால் போதும் என்று சொன்னோம்.

“எங்கடா நான் உன்னை விடுவது?” என்று சொல்லிவிட்டு, சட்டையைப் பிடித்து என்னை இழுக்கின்றார், குருநாதர். அங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள்.

“அடப் போயா, உன் சக்தி வேண்டாம், வாங்கிட்டுப் போயா” என்று யாம் சொன்னோம்.

நான் சக்தியை “உனக்குக் கொடுத்தது, கொடுத்ததுதான். வாங்க முடியாது” என்று சொல்கின்றார் குருநாதர்.

“என்னை இப்படியும் போட்டு, அப்படியும் போட்டு இந்த மாதிரி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்களே”, என்றேன். விட்டாலும் விட்டபாடில்லை.

உனக்குக் கொடுத்தது கொடுத்ததுதான். நீ அதைச் செய்தது செய்ததுதான். நான் சொல்வதை நீ கேட்கிறேன் என்றால், நீ வந்துதான் ஆகவேண்டும். நீ வா, என்று சொல்கின்றார் குருநாதர்.

யாம் என்ன பண்ணுவது? என்னை இப்படியெல்லாம், பல வகையிலும் மாட்டினார். ஆனால், அதற்குள் மறைந்திருக்ககூடிய உண்மைகளை இப்படித் தெளிவாக்கினார், நமது குருநாதர்.

November 25, 2012

மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையில் ஆயுள் கால அங்கத்தினராகச் சேரும் நிலை



மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையில், ஆயுள் கால அங்கத்தினராகச் சேர ரூ 1500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படிச் சேரும் அன்பர்களுக்கு, அருள் ஞானச்சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து, ஆசி வழங்குவார்கள்.

மேலும், தபோவனத்திலிருந்து மாதம் ஒரு முறை உயிரே கடவுள் எனும் மெய்ஞான இதழ், ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளிவருகிறது. அந்த இதழ் தபால் மூலமாக, ஆயுள் கால அங்கத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
புஞ்சை புளியம்பட்டி  638 459
ஈரோடு மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
தொலை பேசி  04295 267318

ஆயுள் கால மெம்பர் எப்படி இருக்க வேண்டும்?
அந்த அருளைப் பெற வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அந்த அறிவைப் பெறும்போது, ஒளிக்குப் போகின்றோம்.னென்றால், இந்த ஆயுள் மெம்பராஇருக்கக் கூடியவர்களுக்கு, இதைச் சொல்கின்றோம் ஆகவே, நமக்கு எது தேவை?

இது பெரும் சொத்து, கோடிக்கணக்கில் பணம் குவித்தாலும் கிடைக்காத சொத்து, அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை, இந்த உடலுக்குப்பின் என்றும் ஏகாந்த நிலை, இங்கே ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி. நம்மை எதுவுமே அழித்திட முடியாது, என்றுமே நிலையானது.

, இந்த சரீரத்தைப் பெறுவதற்குத்தான்,ந்த மனிதனின் கடைசி நிலை இதுதான். அதனால்தான், ராமாணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். சீதா எங்கே போகின்றது?

சாப்பிட்டதெல்லாம், சேமித்த சொத்தெல்லாம், இந்த உடலுக்கு. உடல் எங்கே போகின்றது? பூமியைப் பிளந்து, மறுபடியும் இங்க மண்ணிற்குள்தான் போகின்றது. மண்ணிற்குள் போகும் உடலுக்கு, ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்? என்று ராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா, உணர்வின் தன்மை ஒளியின் அறிவாகும், இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு, விஷ்ணுவுடன் இருந்தது. அப்பொழுது, அங்கே போய் சொர்க்கம் அடைகின்றது.

அப்படி இதில் உணர்த்துகின்றார்கள். ஆனால், இராமாயணக் கதையே தெரியவில்லை. பிறகு, நாம் சொல்லி எதை நிரூபிக்கின்றது?

சீதா இவ்வளவு கஷ்டப்பட்டது. ராமன் இத்தனை சந்தேகப்பட்டான். அப்படி என்ற, சந்தேக உணர்வுகளைத்தான் கொடுக்கின்றார்களே தவிர, எத்தகைய மூலம் அதற்குள் இருக்கின்றது? என்று தெரியவில்லை.

அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுள் கால மெம்பராக ஆக வேண்டுமென்றால், எப்படி இருக்க வேண்டும்? சும்மா பேருக்கு மெம்பராக இல்லை.

இயற்கையிலேயே, ஆயுள் கால மெம்பராக ஆக வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ, நண்பர்களோட வாழ்க்கையிலோ, இப்படி வரப்போகும்போது அருளைப் பெற்று, இவர்கள் இருளைப் போக்க கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

உங்கள் சொல்லின் தன்மை, பிறருடைய தீமைகளைப் போக்கக் கூடிய நிலையாக இருக்கவேண்டும். உங்கள் சொல்லின் தன்மை, அவர்களுக்குள் சிந்திக்கும் தன்மைய ஊட்டி, அவர்களைச் சிக்கலில் இருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும். நீங்கள் ஒவ்வொரும் இந்த நிலை பெறவேண்டும்.

ஏனென்றால், இதுதான் ஆயுள் கால மெம்பர் பிறிதொரு தீமைகள் நமக்கு வராது, அருள் உணர்வை நமக்குள் பெருக்கும் சக்தி வரும். ஆகவே, நீங்கள் மன உறுதி கொண்டு, அருளைப் பெறுங்கள், இருளை அகற்றுங்கள், என்ற ஞானத்தைப் பேசி, ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறக்கூடிய சக்தியா நீங்கள் மாறவேண்டும்.

அப்பொழுது, அவர்களைப் பக்குவப்படுத்தும் போது, அதன் உணர்வுகள் நமக்குள் வராது, பாசத்தால், நாம் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால், அந்த வேதனைகள் நிச்சயம் நமக்குள் வரும் ஆகவே, அந்த வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாக, நீங்கள் மாறவேண்டும்

அருளைப் பெற வேண்டும், இருளை நீக்க வேண்டும் என்ற நிலையாகத்தான், நீங்கள் எல்லோரும் ஆயுள் கால மெம்பராக அமைய வேண்டும். இணைய வேண்டும் எமது அருளாசிகள்.

November 23, 2012

ஞானிகள் கோவிலை அமைத்ததின் காரணம்

1. விநாயக சதுர்த்தி 
நமக்குள் கெட்டது சேராது, கெட்டதைத் தடுக்கச் செய்வதுதான் தியானம். ஆக, நாம் இருக்கும் இந்தத் தியானம் சிறிது நேரம்தான். இந்த தியானம், ஆலயங்களில் விநாயகன் என்ற நிலைகளில் காட்டப்படுகின்றது.

விநாயகரை எடுத்துக் கொண்டால், புல்லைப் போடுகின்றோம். அடுத்து, இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கடை செய்து சாப்பிடுகின்றோம்.

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு, நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள், சதுர்த்தி.
Inline image 1
விநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

வருடத்திற்கு ஒரு தரம், களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும், மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி,
விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி, 
கெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்
இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது? கொழுக்கட்டை அவருக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால், எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான், புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

கல்யாணம் ஆகவேண்டும் என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும், அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால், கொடுப்பார் என்பார்கள். அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? என்ற நிலையையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஸ்தலவிருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு, அரசும், வேம்பும், விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.
இந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம்.
கஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது,
காது கொடுத்துக் கேட்கின்றோம்.
அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன், என்ன செய்கின்றது? மாரி, அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து, சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

அங்கே ஸ்தல விருட்சம் என்ன? கசப்பு.
மாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது? அக்கினிச் சட்டி.
அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?
நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்?
அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.  

ஆக, அந்த மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தலவிருட்சம் கசப்பு.நெருப்பிலே போட்டு கசப்பை நீக்கு” என்று பொருள்.

2. அரச மரத்தையும், வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்?
அதே சமயத்தில், இந்த விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள்? அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள். கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து,
அந்த அரசின் நிலைகளில்
நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு
என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

ஆகவே, நாம் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்? உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன், நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது, நாம் எதை எண்ண வேண்டும்?

நாம் புல்லைத் தின்றோம், இலை செடிகளைத் தின்றோம், இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து, நமக்கு வேண்டியதைப் படைத்து, இந்தச் சரீரத்தைப் பெற்றோம்.

ஆக, இந்த உண்மையை உணர்த்திய, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.

கசப்பின் நிலைகளை, நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ, அதைப் போல மெய்ஞானிகள், இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி,
இந்தக் கசப்பைச் சிறுக்கச் செய்து, “அரசு”
அந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ,
அதை ஆட்சி புரிந்த நிலைகளில்,
தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”
நமக்குள் ஆட்சி புரியும் என்றுதான்
இந்த ஸ்தலவிருட்சத்தை வைத்தார்கள்.

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்? என்பதை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.

நல்லதை எண்ணினோம். அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா. யார் துடைக்கிறார்கள்? நினைக்கவில்லையே. கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக, ஞானிகள் அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து, சாஸ்திரங்களை எழுதி வைத்து, நீ இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளடா என்றான். அரசனையும் ஏமாற்றினான். நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி. நாம் அதை விட்டுவிட்டோம்.

அதை விட்டுவிட்டு, “உனக்கு அபிஷேகம் செய்தேன்” என்று அழுது புலம்பினால், நமக்குக் கொடுப்பான் என்று அழுதால், நம் உயிரான ஈசன் நமக்குள் அதைத்தான் படைப்பான்.
3. தீபாராதனை 
Inline image 4
கோவிலுக்குள் போனவுடன், தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது. நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம், அதைப் பார்க்கப்படும் பொழுது, தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வராஎன்று, வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே அந்த மலர்களைப் போட்டிருப்பார்கள்
எனக்குள் நல்ல குணத்தை தெய்வமாக உருவாக்கி,
இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெறவேண்டும்
என்ற எண்ணத்திற்காக, மலரைப் போட்டிருக்கிறார்கள்.
Inline image 10
மலரின் மணம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஒருவன் தவறிக் கீழே விழுகின்றான். கண்ணுற்றுப் பார்த்தவுடன், “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்படுகிறீர்கள். அவ்வாறு, அடிபட்டு, வேதனையான உணர்வுகள் துடித்தபின், அந்த வேதனையான உணர்வுகளின் தன்மைகள் உங்கள் உடலில் சேர்ந்தால், எந்த மணம் வரும்?

அவனைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குச் சென்றால், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள், உங்கள் முகமே மாறி இருக்கின்றது” என்று கேட்பார்கள். ஆக, பார்க்கும் பொழுது என்ன ஆகிறது? நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம், அவர்களை நுகரச் செய்து, கேட்க வைக்கின்றது.

அதைப் போல, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளில்
இந்தத் துன்பத்தைத் துடைத்துவிட்டு,
அந்த நல்ல குணங்களுக்கு, இந்த மலரை அணியுங்கள்.
Inline image 7
நல்ல குணத்தைக் கொண்டுதான் பையனைக் காப்பாற்றினோம். துடித்தான், அவனைக் காப்பாற்றி விட்டோம். அவன் அடிபட்டான். காப்பாற்றிவிட்டோம். அவன் எண்ணத்தை நுகர்ந்துதான் காப்பாற்றினோம். அவனின் வேதனையான உணர்வுகள் எனக்குள் இருந்தது.

விநாயகரைப் பார்த்துவிட்டு, கோவிலுக்குள் போனவுடன், அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். அந்த மலரின் மணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று, அந்த நல்ல குணத்திற்கு முலாம் பூச வேண்டும். முலாம் பூசியபின், அந்த உடலில் நல்ல மணம் வருகிறது.

அங்கே கனியை வைத்திருக்கும் பொழுது, கனியைப் போன்று, சுவையான சொல்லும், செயலும், நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று, நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும். நாம் கொடுப்பது அங்குதான் பெறுகின்றது. அதனால் அவனிடம் வேண்டி, அதை நாம் எடுக்க வேண்டும்.
Inline image 8
ஆக. இந்த உணர்வைத் தூண்டும் பொழுது, உயிரின் இயக்கம் அங்கு அதிகமாகின்றது. ஆக, அதைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி, இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் செலுத்தி, இந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும், நான் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு, இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறவேண்டும், என்று எண்ண  வேண்டும்.

எங்கள் வாடிக்கையாளர் அனைவரும், அவர்கள் குடும்பத்தில், நலமும் வளமும் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியை எங்கள் குழந்தைகள் பெறவேண்டும். எங்கள் குழந்தைகள், ஞானத்தின் வழியில் தொடர வேண்டும். அவர்கள் பேச்சும், மூச்சும், உலக மக்களுக்கு நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை, நம் உயிரிடம் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு அர்ச்சனை செய்தால்தான்,
இந்த உணர்வின் சக்தியை இந்த ஈசன் நமக்குள் எடுத்து,
நமக்குள் விளைய வைத்து, மணமாகி,
நம்மைப் பார்க்கும் பொழுது,
நம் சொல்லின் தன்மை அங்கே விளையும்.

“நம் உடல் ஒரு கோவில்” என்கிற நிலைகளில், இதைப் பரிசுத்தப்படுவத்துவதற்கு, எங்கள் வாடிக்கையாளர் நலமாக இருக்க வேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோரெல்லாம். நலமாக இருக்க வேண்டும். இங்கு வருவோரெல்லாம், மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில், இருள் நீங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும். எமது அருளாசிகள்.
Inline image 9

4. ஞானிகள் அமைத்த ஆலயத்தின் சிறப்பு  
இன்றைய வாழ்க்கையில், ஒருவர் கஷ்டமாக இருப்பார், ஒருவர் நஷ்டமாக இருப்பார், வேதனைப்பட்டு இருப்பார், துன்பப்பட்டு இருப்பார், துயரப்பட்டு இருப்பார், எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும், இங்கே கோவிலுக்குள் போனவுடன், இந்த எண்ணம், அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து, ஒருங்கிணைக்கும் பொழுது, எப்படி குழம்பு வைக்கும் பொழுது. எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, சுவையாக இருக்கின்றதோ, இதைப் போல,
நாம் துன்பத்தை நீக்கி,
இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று,
எல்லோரும் சொல்லும் நிலைகளுக்கு
இங்கே ஒலிபரப்பும் பொழுது,
அங்கே கோவிலுக்குள் (கல்லுக்குள்) எதிரொலிக்கும்.
மேக்னட், அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து, தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு, அந்த உணர்வின் நிலைகளில், நெடு நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த மலை.

ஆனால், அந்தக் கல்லுக்குள் மறைந்திருக்கக்கூடிய காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும். மனிதனுக்குள் நாம் எடுத்துக் கொண்ட ஒலியின் அலைகள், அங்கே பதிவாகி இருக்கும்.

ஆக, நாம் இடும் இந்த மெய்ஞானிகளின் அலைகள், அங்கே கோவிலுக்குள் படரப்பட்டு, நாம் எண்ணிய நிலைகளில் அங்கே பெறச் செய்வதற்கு, அந்த மெய்ஞானி சாதாரண மக்களும் பெறுவதற்காக வேண்டி, அங்கே ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

இதை நான் சொல்லவில்லை. நமது குருநாதர் சொன்னது. நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தலவிருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம். குருநாதர், எம்மிடம் கோவிலுக்குப் போனால், இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.

நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது, தெய்வமாகின்றது.
எண்ணிய எண்ணம் இறையாகின்றது. இறைவானாகின்றது.
அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாகின்றது.
ஆக, அந்த செயலின் தன்மையாக நான் ஆகின்றேன்,
என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.
அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.
5. தேர் இழுப்பதின் மகிமை 
கோவிலில் பெரிய தேரைக் கட்டிவைத்து, சிறிய சிலையை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்குப் போகும் நாமெல்லாம் இதைப் போல எண்ணினால், எல்லாமே வலுவாகி, வலுவான நிலைகள் பெறுகின்றது.

ஆகையினாலே, அந்த நிலைகளில் கோவிலில் பல ஆயிரம் பேரை வைத்து, தேரை இழுக்கச் செய்கின்றார்கள். அந்தத் தேரில் சிறிய சிலையை வைக்கிறார்கள்.
Inline image 5
அந்தத் தெய்வ குணத்தை, அத்தனை பேரும் ஒருங்கிணைந்து எடுத்துச் செயல்படுத்தினால், இந்த எண்ணத்திற்கு வலு உண்டு.

எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் வரப்படும் பொழுதுதான்,
இயக்க நிலைகள் வரும் என்று
கோவிலில் தேரை வைத்தார்கள்.
தேருடைய மகிமையை நாம் அறியாமல் இருக்கிறோம்.

ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தப்படுத்துவதற்கு இந்த நிலையைச் செய்தார்கள் ஒவ்வொருவரும் நம் உடலை ஆலயமாக்கி, ஒவ்வொரு நொடியிலும் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காக ஆலயங்களை அமைத்தார்கள், ஞானிகள்.

ஆக, கேட்டுணர்ந்த நீங்கள் இனியாவது கோவிலுக்குப் போகும் பொழுது, விநாயகரை எப்படிக் கும்பிட வேண்டும்? கோவிலுக்குப் போனால், அந்தத் தெய்வ சக்தியை எப்படிப் பெறவேண்டும்? இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம், எப்படி வரவேண்டும் என்ற நிலைகளில், நீங்கள் ஒரு வழிகாட்டியாக வாருங்கள்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று, நீங்கள் எண்ணுங்கள். அந்த தெய்வகுணம் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எமது அருளாசிகள்.