ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2012

குருநாதர் கொடுக்கும் அருள் வாக்கு


1. ஞானகுரு கஷ்டத்தை நீக்க நமக்குக் கொடுக்கும் வாக்கு
நமது குருநாதர், யாம் சரியாகச் சொல்லவில்லை என்றால், உதை கொடுப்பார். அதே போல, இப்பொழுது யாம் உங்களை அடித்தால், என்ன செய்வீர்கள். வாங்கிக் கொள்வீர்களா?

எமக்குத்தான் திருப்பிக் கொடுப்பீர்கள். “என்னடா, சாமி என்னமோ சொல்லிவிட்டு நம்மை உதைக்கிறார். நம்மை உதைக்க முடியுமாஎன்றுதான் எண்ணுவீர்கள்.

ஒருவர் என்ன செய்கிறார்? “கஷ்டம் என்னைவிட்டுப் போகவே மாட்டேன் என்கிறதுஎன்று எம்மிடம் சொல்லி அலறுகின்றார்.

யாம் என்ன சொன்னாலும், போயா, உனக்குக் கஷ்டமுமில்லை, ஒண்ணுமில்லை போ”, என்று சொன்னவுடன், “என்ன சாமி இப்படிக் கோவிக்கின்றார் என்கிறார். இதை உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்?

இந்த அழுத்தத்தை உள்ளுக்குள் கொடுத்தவுடனே
என்ன செய்கின்றது? சரி இதோடு போகட்டும்
என்ற நிலையை நினைத்தால், பரவாயில்லை.
2. தரித்திரமே போ…!
இப்படித்தான் ஒரு அம்மாவுக்கு என்ன செய்தது? அந்த அம்மா கோயம்புத்தூர். அதற்கு ரொம்பக் கஷ்டம். சொத்து எல்லாம் போய்விட்டது. வீட்டைக் கூட வைத்துக் கொண்டு, ரொம்பத் தொல்லை கொடுக்கிறார்கள். எப்படியாவது இந்தச் சொத்து வந்துவிட்டால், நான் பிழைத்துக் கொள்வேன் என்று எம்மிடம் கேட்டது.
                                                                          
யாமும் சரி என்று சொல்லி, “இந்த தியானத்தைத் தொடர்ந்து செய். உனக்கு வீடு திரும்பக் கிடைக்கும்என்று வாக்கைக் கொடுத்தோம்.

சொத்தை வைத்துக் கொண்டு, கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்என்று எம்மிடம் அந்த அம்மா சொல்கின்றது.

வீட்டைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதை விடம்மா”, உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடு. உனக்குக் கிடைக்கும் என்று யாம் சொன்னோம்.

அதற்கு அந்த அம்மாஎங்கெங்க, எங்கெங்க கொடுக்கின்றார்கள்என்று திரும்பத் திரும்ப, அதையே சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

அப்புறம் யாம் கோபமாகச் சொல்லி, “னக்குக் கிடைக்கும், நீ கிடைக்கும் என்று எண்ணி தியானம் செய்”, என்று அழுத்தமாகச் சொல்லி, “அடுத்து நல்லதாகத்தான் நடக்கும்என்று சொன்னோம்.

அப்படீங்களா, சரிஎன்று சொல்லி தியானத்தைத் தொடர்ந்து செய்து, அந்த அம்மாவுக்கு, வீடு திரும்பக் கிடைத்தது. வீடு கிடைப்பதற்கு, கோர்ட்டுக்கும் பணம் இல்லை என்றார்கள். அதுவும் எப்படியோ கிடைத்து, கேஸ் ஜெயித்து, இந்த அம்மாவுக்குச் சாதகமாக முடிந்தது.

சந்தோஷமாகச் செய்தார்கள். கேஸ் ஜெயித்து வந்தவுடன், அந்த அம்மா என்ன செய்கிறார்கள்? சொத்து வந்துவிட்டது, அதோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், “இன்னைக்குப் பிழைப்பிற்குப் பணம் ஒண்ணும் இல்லை, ஏதாவது, தொழில் செய்ய வேண்டுமென்றால். அதற்குப் பணம் இல்லை, நான் என்ன செய்வது?” என்று சொல்லுகின்றது. அதற்கு யாம் என்ன செய்வது?

இந்த வீடு இன்றைக்குத் திரும்பக் கிடைத்தாலும், வருமானத்திற்கு ஒன்றும் இல்லையென்றால் நான் என்ன செய்வது? என்று சொல்லி, திரும்பத் திரும்பத் தன் கஷ்டத்தையே எண்ணி அழுது கொண்டே இருக்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி, இந்த தியானத்தைச் செய்து, தொழில் செய்ய வேண்டுமென்று எண்ணுங்கள். அதற்குண்டான அமைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று அந்த அம்மாவிடம் சொன்னோம்.

அந்த அம்மாவோ, “எங்கெங்க நடக்கப் போகின்றதுஎன்று சொல்கிறது.

முதலில், உனக்கு எப்படி வீடு திரும்பக் கிடைத்தது?
அதே போல எண்ணினால், தொழிலும் சீராக வரும் அல்லவா
என்று யாம் சொன்னோம்.

வரும், ஆனால், இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்என்று எம்மிடம் திரும்பவும் சொல்லுகின்றது. ஏனென்றால், இந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு, அதையே தான் பேசிக் கொண்டிருக்கின்றது அந்த அம்மா. நடந்த நிகழ்ச்சி இது.

அப்புறம் யாம் கோபமாக, “இந்தத் தியானத்தைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள், அதன்படி செய்து, இந்தத் தரித்திரத்தை விடுங்கள்என்று சொன்னோம்.

அதற்கும் அந்த அம்மா, “எங்கெங்க என் தரித்திரம், என்னை விட்டுப் போகப்போகின்றதுஎன்று மீண்டும் சொன்னது.

யாம் உடனே, தரித்திரத்தைசீ... போ...” என்று சொன்னோம். அப்பொழுது அந்த அம்மா என்ன செய்கின்றது?

சீ போ..” என்று என்னை சாமி சொல்லிவிட்டார். இங்கே சாமியிடம் வந்தாலும் கூட, அவர் என்னிடம் கோவித்துப் பேசுகின்றார் என்று சொல்லுகின்றது.

ஆக, தரித்திரம் போகட்டும், நல்ல காலம் வரட்டும் என்ற நல்ல வாக்கை யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளும் மனம் அங்கே இல்லை.

கோவென்றுஅந்த அம்மா அழுக ஆரம்பித்துவிட்டது. அந்த அம்மா என்ன செய்கின்றது? “என் கஷ்ட காலம், சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றது 

நான் எதைச் சொல்கின்றேன் என்ற, அந்த அர்த்தத்தைப் புரிந்திடாது, அதனுடைய உணர்வுகளிலேயே அந்த அம்மா இருக்கின்றது. நடந்த நிகழ்ச்சி இது. பிறகு என்ன ஆகின்றது? “சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார்என்று அழுதுகொண்டே அந்த அம்மா போய்விட்டது.

ஆக, இந்த அழுத்தங்கள் இப்படியானாலும் அங்கே யாம் கொடுத்த வாக்கு, அந்த அம்மாவுக்கு நிறைவேறுகின்றது.

ஒருவர் வட்டியில்லாமல், பணம் கொடுக்கின்றேன் என்று சொன்னார். நான் கடை வைத்தேன். ஏதோ, ஓரளவிற்கு இரண்டாவது தரம் எனக்கு பணம் வந்துவிட்டது. சாமி என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்என்று அந்த அம்மா எம்மிடம் வந்து சொல்கின்றது.

அன்றைக்குத்தான், யாம் விளக்கத்தை அந்த அம்மாவிற்குக் கொடுத்தோம். அதாவது,
அன்றைக்கு உன் தரித்திரத்தைத்தான், நான் போகச் சொன்னேன்.
ஆனால், நீ கோபித்துக் கொண்டு போய்விட்டாய் அம்மா
என்று யாம் சொன்னோம்.

என்ன பண்ணுவது? என் தரித்திர நேரம், எதையுமே நல்லதைக் கேட்க முடியவில்லைஎன்று அந்த அம்மா சொல்கின்றது. இப்பொழுது தரித்திரம் போய்விட்டது. இப்பொழுது இங்கே வந்திருக்கின்றேன். கடையில் நன்றாக வியாபாரம் ஆகின்றது, என்று சொன்னது. நடந்த நிகழ்ச்சி இது.

ஆக, பொதுவாக என்ன செய்கின்றார்கள். தரித்திரத்தைத் தான் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் பொழுது, “தரித்திரம் போகும்என்று, யாம் சொன்னால், உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகின்றது?

ஆக, அந்த அம்மா கோபித்துக் கொண்டு, எம்மிடம் ஒன்றும் சொல்லாமலேயே போய்விட்டது. எல்லாம் நடந்த பிறபாடுதான் வந்து சொல்லுகின்றது.

ஏனென்றால், இதையெல்லாம் மறைமுகமாக யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பு இல்லை.
3. ஈஸ்வராய குருதேவர் ஞானகுருவிற்குக் கொடுத்த வாக்கின் (சக்தியின்) நிலை
நம் குருநாதர் என்னிடம் என்ன செய்தார்? தைப் பொங்கல் அன்று, என் கடைசிப் பையன் தண்டபானியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவன் அழுது கொண்டே இருக்கின்றான்.

அந்த நேரத்தில் சாமிம்மாவோ, எம்மை ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய அம்மாவும் அதற்கு மேல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்து, யாம் கோபமாக இருக்கின்றோம்.

குருநாதர் எம்மிடம், “நான் சொல்வதைக் கேட்கின்றாயா, இல்லையா?” என்கிறார்.

அப்பொழுது நான் என்ன சொல்கின்றேன். “நீங்கள் கொடுத்த சக்தியும் வேண்டாம், பூராவற்றையும் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை ஆளை விடுங்கள்” என்று சொல்கின்றேன்.

“நான் உன்னை விடமாட்டேன்டா” என்கிறார், குருநாதர்.

அப்பொழுது, தண்டபானி ஙை..ஙை.. என்று அழுது கொண்டே இருக்கின்றான். தைப் பொங்கல் அன்று, வீட்டிலேயும் பேசுகின்றார்கள், எல்லாம் நம்மைப்பற்றி இப்படிப் பேசுகின்றார்கள்.

குருநாதர் வந்து என்ன செய்கின்றார்? “இந்தச் சக்தியை எடுடா, அதை எடுடா, இதை எடுடா” என்கிறார்.

யாம், “சாமி, என்னை ஆளை விட்டால் போதும் என்று சொன்னோம்.

“எங்கடா நான் உன்னை விடுவது?” என்று சொல்லிவிட்டு, சட்டையைப் பிடித்து என்னை இழுக்கின்றார், குருநாதர். அங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள்.

“அடப் போயா, உன் சக்தி வேண்டாம், வாங்கிட்டுப் போயா” என்று யாம் சொன்னோம்.

நான் சக்தியை “உனக்குக் கொடுத்தது, கொடுத்ததுதான். வாங்க முடியாது” என்று சொல்கின்றார் குருநாதர்.

“என்னை இப்படியும் போட்டு, அப்படியும் போட்டு இந்த மாதிரி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்களே”, என்றேன். விட்டாலும் விட்டபாடில்லை.

உனக்குக் கொடுத்தது கொடுத்ததுதான். நீ அதைச் செய்தது செய்ததுதான். நான் சொல்வதை நீ கேட்கிறேன் என்றால், நீ வந்துதான் ஆகவேண்டும். நீ வா, என்று சொல்கின்றார் குருநாதர்.

யாம் என்ன பண்ணுவது? என்னை இப்படியெல்லாம், பல வகையிலும் மாட்டினார். ஆனால், அதற்குள் மறைந்திருக்ககூடிய உண்மைகளை இப்படித் தெளிவாக்கினார், நமது குருநாதர்.