ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2017

உருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டிய குருவும் நம் தாய் தான் – பெரும்பகுதியானவர்கள் நாம் தாயைச் சாதாரணமாகத் தான் எண்ணிக் கொண்டுள்ளோம்

நாம் புழுவாக இருந்திருப்போம். பூச்சியாக இருந்திருப்போம். அப்பொழுது (தாய்) கொன்றிருப்பார்கள். இந்த உயிர் அவர்கள் உடலுக்குள் போனால் அந்த உணர்வை எடுத்து நம்மை மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனாக உருவாக்கிய பின் அவர்கள் உயிர் கடவுள்”.
2.நாம் குழந்தையான பின் தெய்வமாக இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
அடுத்து குருவாக இருந்தும் இது நல்லதப்பா…, இது கெட்டதப்பா…,” என்றும் நமக்கு நல்ல வழிகளைச் சொல்லிக் கொடுக்கின்றது.

அதைத்தான் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். நல்வழி காட்டும் குருவை அடைவோம் என்று சொல்வது.

எந்தக் குருவை?

தாயை நம் குருவாக அடைதல் வேண்டும்.

ந்த முறைப்படி நீங்கள் செய்து அடிக்கடி தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நீங்கள் எந்தக் காரியத்திற்கும் செல்லுங்கள்.

நான் வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று ஒரு சாமியாரிடமோ மற்றவர்களிடமோ கேட்க முடிகின்றது. ஆனால்,
1.“அம்மாவிடம் கேட்கக் கூச்சமாக இருக்கின்றது.
2.பெரும் பகுதி எல்லோரும் இப்படித் தான்.
3.தாயின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் தான் நாம் இருக்கின்றோம்.
4.எப்பொழுதுமே தாயின் உணர்வே நமது உடல்.
5.நாம் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.
6.நம்மைக் காத்திடும் உணர்வுகள் தாய்க்குள் விளைந்தது உண்டு.
7.அந்த உணர்வுகள் நமக்கு முன் உள்ள காற்றிலேயும் உண்டு.

இதை முறைப்படுத்தி இருந்தால் காற்றிலே வரக்கூடிய காட்டுக்குள்ளே போகின்றோம். ஒரு புலி வருகின்றதென்று வைத்துக் கொள்வோம்.

”அம்மா...,” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது தாயின் உணர்வுகள் காற்றிலே இருக்கின்றது. குவித்து…” வலுப் பெற்றுக் கொள்ளும்.

நம்மைத் தாக்க வந்த புலியும் தாய்ப் பாசம் உள்ளது. அந்தத் தாயின் உணர்ச்சிகள் வரும்பொழுது அதனுடைய மனதை மாற்றி அமைக்கும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

யானையே காட்டுக்குள் தாக்க வருகின்றதென்று வைத்துக் கொள்வோம். அம்ம...என்று சொன்னால் போதும். உங்களைத் தாக்காது.

இப்படி யாம் சொல்லிக் கொடுத்ததில் அனுபவத்தில் பெற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஆகையினால் தாய்க்கு உண்டான சக்தியை நாம் மறந்து வாழ்கின்றோம். தாய்க்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

1.நாம் சாமியாரைப் பார்த்து விட்டு வரம் வாங்கப் போகின்றேன் என்று நினைப்பதைக் காட்டிலும்..,
2.என்னைக் (ஞானகுரு) கேட்டு “நான் வரம் வாங்கப் போகின்றேன் என்று என்னிடம் நீங்கள் கேட்பதைக் காட்டிலும்
3.தாய் மூலம் எளிதில் பெறலாம்.

நான் சொன்னதை நீங்கள் எடுத்தால்தானே அது நடக்கும்.

அதே மாதிரி தாய் சொன்னதை எடுத்தால் என் பையன் எப்பொழுதுமே உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்என்று என்னைக் காட்டிலும் அந்தத் தாயின் உணர்வின் பதிவு உங்களுக்குள் அதிகம் உண்டு.

தாயின் உடலே நீங்கள். ஆகவே இதனின் உணர்வை எடுக்கும் போது “உங்கள் தாயின் உணர்வே காக்கும்.

தொழிலிலே நஷ்டம் வருகின்றது கஷ்டம் வருகின்றது.., என்று சாமியாரிடம் போய்க் கேட்கின்றீர்கள் என்னிடம் கூடக் கேட்கின்றீர்கள்.

ஆனால் அதற்குப் பதில் அம்மா.., ”எனக்கு இந்தத் தொழிலில் லாபம் வர வேண்டும். உங்களது ஆசிர்வாதம் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும்என்று தாயாரை எண்ணுங்கள்.

அதே மாதிரி தாயார் இல்லை என்றாலும் தாயார் படம் இருந்தால் அதைப் பார்த்து எண்ணி விட்டு நீங்கள் செயல்பட்டுப் பாருங்கள். தாயின் உணர்வுகள் உடலாக இருந்ததால் அந்த உணர்வுகள் காற்றிலே உண்டு. அதை உங்களால் பெற முடியும். அப்பொழுது உங்களுடைய காரியங்களெல்லாம் ஜெயமாகும்.

“அது எப்படி..,?” என்று எண்ணாதீர்கள். உங்களால் முடியும்.

உங்களது தொழிலுக்குச் சிலர் வேண்டுமென்றே தீமைகளைக் கொடுக்கின்றனர். தொல்லைகளைக் கொடுக்கின்றனர். நம்மை எப்படியும் துரத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது நீங்கள் உங்கள் தாயை மட்டும் எண்ணி
1.”அம்மா.., இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் நல்ல குணங்கள் வர வேண்டும்.
2.நல்ல உணர்வை நீ ஊட்ட வேண்டும். அந்த அருளுணர்வு இங்கே படர வேண்டும்.
3.தொழில் செய்யும் இடங்களிலே அன்பு பரவ வேண்டும். அருளுணர்வு பெருக வேண்டும்.
4.அந்த அருள் ஞானம் நான் செல்கிற இடங்களில் எல்லாம் படர வேண்டும் என்று நீங்கள் அம்மாவை நினைத்துப் பாருங்கள்.

இந்த உணர்வுகள் தாயின் உணர்வுடன் வலுவாகி இந்த உணர்வைப் பெறப்படும் போது பகைமை உணர்வுகள் உள்ளவன்.., மாற்றிக் கொள்வான். நமக்குள் அந்த உணர்வின் தன்மை வலிமை பெறும்.

இதைச் சிறிது காலம் நீங்கள் செய்து பாருங்கள். உங்களது தாயின் பேரன்பை நீங்கள் உணரலாம்.

ஆனால், நீங்கள் சாதாரணமாகத் தாயை எண்ணுகின்றீர்கள்.

நாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும் எவ்வளவு தொல்லைகள் பட்டு எத்தனை இன்னல்கள் பட்டு நம்மை வளர்த்தது.

தாயை மறந்தவர்களாகத்தான் பெரும் பகுதியானவர்கள் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் நம்மை உருவாக்கிய கடவுள் அவர்கள். தெய்வமாகக் காத்தது தாய். நல்ல வழிகளைக் கற்றுக் கொடுத்ததும் குருவாக இருப்பதும் உங்கள் தாய்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு ண்டு. இது காற்றிலேயும் உண்டு. உங்களுக்குள் உண்டு. இதன் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பெறவேண்டும் என்றால் எளிதில் பெறலாம். அந்த வலிமை கூடுகின்றது.

இதைப்போல எண்ணும்போது நம் குரு காட்டிய அருளுணர்வுகள் உங்களுக்குள் உறுதுணையாக இருந்து இதையெல்லாம் பெறக்கூடிய தகுதி ஏற்படுத்துகின்றது. இதை நீங்கள் பின்பற்றுங்கள்.

அதே சமயத்தில் இப்பொழுது நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிகளில் தாயின் வழிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற ஆசைப்பட்டால் இது இச்சா சக்தி.

அப்பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்குள் கிரியையாகி அந்த ஞான சக்தியாக உங்களை இயக்கும். தாயின் துணை கொண்டு அதை எளிதில் பெறலாம். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி”.


இந்த உணர்வின் தன்மை நம் உடலில் வரப்படும் பொழுது தீமை அகற்றிடும் ஞானம் வருகின்றது. அந்த ஞானத்தின்படி நாம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

மனத் தூய்மையும் உண்மையான தெய்வ பக்தியும்

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அதைக் கேட்டுக் கொண்ட பின் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் சிறிது நேரத்தில் உடலில் பிசு பிசு என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதை நாம் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்?

1.அதே சமயத்தில் ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.
2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.
3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.
4.நீங்கள் குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “உங்கள் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

நீங்கள் எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. ஆக எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் ஈஸ்வரா என்று தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

தூய்மைப்படுத்தியபின் நாம் எதை எல்லாம் எண்ண வேண்டும்?

முதலில் சொன்ன மாதிரி மகரிஷிகளின் அருள் சக்தியை ஒரு பத்து நிமிடம் உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். பின் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவது தியானம்.
2.அந்தச் சக்தியைப் பெற்ற பின் அதை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுவது பக்தி.
3.நல்ல ஒழுக்கத்தை நாம் எண்ணுவதே பக்தி.

ஒரு சட்டியில் சாதமோ குழம்போ இருந்தால்தான் மற்றவர்களுக்கு எடுத்துப் போட முடியும். அது இல்லாதபடி “மகராசன் நன்றாக இருக்க வேண்டும்” என்று மற்றவர்களை நாம் சொன்னால் எப்படி இருக்கும்.

1.சட்டிக்குள் ஒன்றும் இல்லை. வெறும் சொல்லாகத் தான் வரும் (அகப்பையைத்தான் கொடுக்க முடியும்).
2.ஆகவே, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்ற  இந்த உணர்வின் வலுவை எடுத்துக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி “அந்த உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் (கொடுக்க) வேண்டும்”.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அங்கே தொழிலில் இணக்கம் பெறவேண்டும்.

அங்கே தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என்னைப் பார்ப்போர் குடும்பங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெறவேண்டும்.

இதுதான் “உண்மையான தெய்வ பக்தி” என்பது.

1.நாம் எண்ணும் எண்ணமே இறையாகி
2.அந்த உணர்வின் செயலே நமக்குள் செயலாகி
3.அந்தச் சொல்லாக வரும் பொழுது
4.நம் சொல்லே “தெய்வமாகின்றது”.
5.நமக்குள் அந்தத் தெய்வ உணர்வை இயக்குகின்றது.

6.கேட்போர் உணர்வுகள் அதைக் கேட்டறிந்தால் அது “தெய்வமாக இயக்கும்”.

May 13, 2017

குருவின் காணிக்கையும் தெய்வத்திற்குச் செய்யும் சேவையும்

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்?
2.அவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை என்ன என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து
2.இத்தகையை வினைகளை நமக்குள் சேர்த்து
3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

எங்கள் அன்னை தந்தையர் குருவாக இருந்து காட்டிய நல் வழியில் நாங்கள் செயல்பட வேண்டும்.

அவர்கள் காட்டிய பாதையில் மகிழ்ந்திடும் நிலைகள் நாங்கள் பெறும்போது “எங்கள் செயலைக் கண்டு, என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.., ஈஸ்வரா என்று உயிரை வேண்டுதல் வேண்டும்.

நம் அன்னை தந்தையருக்கு இதைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.
1.குருவின் காணிக்கை அதுதான்.
2.தெய்வத்திற்குப் பணிந்து செய்வதும் அது தான்.
3.கடவுளுக்குச் செய்யும் சேவையும் அது தான்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

May 12, 2017

நம் மூதாதையர்களை “சப்தரிஷிகளாக” ஆக்க வேண்டும் – ஆக்க முடியும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரியும் முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அங்கே அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு பிறவா நிலை எண்ணும் அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

சிலர் கேள்விகள் கேட்கலாம், எங்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்று பல காலம் ஆகிவிட்டது. “எப்படிச் செலுத்துவது முடியுமா?” என்று எண்ணலாம்.

1.அவர்கள் பகைமை கொண்டிருந்தால் பகைமை கொண்டவர் உடலுக்குள் சென்றிருப்பார்கள்.
2.பாசத்துடன் வாழ்க்கையில் சென்றிருந்தால் பாச உணர்வு கொண்ட உடலுக்குள் சென்று பேயாக உருவாகி அங்கே நோயாக உருப்பெறச் செய்வார்.
3.அதே சமயத்தில் துர் மரணம் அடைந்து எந்தப் பக்தியுடன் சென்றதோ அத்தகைய பக்தி கொண்ட உடல்களில் சென்றிருக்கும்.
4.இதைப் போன்ற நிலைகளில் ஆன்மாக்கள் அந்த உடல்களை விட்டு வெளி வந்தபின் அதைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சாதாரணமாக அதனின் இரத்த சம்பந்தம் உள்ள அவரைப் பற்றி எண்ணுபவர்கள் இருக்கும் வரை கடைசி நிலைகளில் எந்த உணர்வை அதிகமாக எண்ணியிருந்ததோ அந்த இடங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும்.

குறைந்தது மற்றொரு உடல் பெறுவதற்கு அதனுடய முந்தைய நிலைகள் மறக்கப்பட்ட பின் 150-200 ஆண்டுகளுக்குப் பின் தான் மறு (புதிய பிறப்பு) உடல் பெறும்.

(ஆனால், மிருக உடல்களுக்குள் சென்றிருந்தால் விண் செலுத்த முடியாது)

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ  நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும்
நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் எளிதில் செலுத்திவிடலாம்.

நாம் உடலுடன் உள்ளோம். அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது. இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வே உங்கள் உடல். இதைப் போன்று தினசரி தியானித்து அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அங்கே இணைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் இன்னொரு உடல்களிலிருந்து அது எந்த நேரம் வெளி வரும் என்று சொல்ல முடியாது. நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் அங்கே அந்த ஆன்மாவில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

அப்படி வெளியேறிவிட்டால் இதைப் போன்று நாம் தியானித்ததன் வலு இருந்தால் மறுபடி இன்னொரு உடலுக்குள் போகாதபடி நாம் விண்ணிலே செலுத்த முடியும்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாக மீண்டும் மற்றொரு உடலுக்குள் போகாது தடுக்க முடியும்.

நாம் நமது மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் தான் நாம் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். நமக்குப் பின் நம் குழந்தைகள் நம்மை விண் செலுத்துவார்கள்.

அன்றைய ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம். சாஸ்திரப்படி இது தான் ஞானிகள் சொன்னது.

அதை விட்டு விட்டு சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஆற்றிலேயும் கடலிலேயும் கரைத்தால் அதனால் எதுவும் பலன் இல்லை.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.
2.நமக்குச் சொந்தமானது உயிர் ஒன்று தான்.
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவதே அழியாதது. அதுதான் வேகா நிலை.
4அப்படி அடைந்தவர்கள் சப்தரிஷிகள் இன்று சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

5.நம் முன்னோர்களை நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும்.