ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2025

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”


1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.
 
யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.
 
கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.
 
வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்துதீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.
 
வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து  உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால் இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.
 
ராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.
 
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.
 
இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.
 
ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி ராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?
 
இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
 
குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.
 
அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்


னிதனின் சகஜ வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம் கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம்.
 
அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும் இழக்கச் செய்து விடுகின்றது.
 
கணவனும் மனைவியும் இருவருமே ந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக்வர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக கணவனுக்கு மனைவி இல்லை.
 
கணவனும் இதைப் போன்று பல தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி விடுகின்றது.
 
இதன் வழி பெற்றாலும் தன் வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல் பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும் இங்கே பிரிக்கப்படுகின்றது.
 
திலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
பின் உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.
 
இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால் கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் ர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.
 
அங்கே செலுத்திய பின் என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள் குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும் என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.
 
இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள்…”
 
இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.
 
1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்.
 
கணவனுடைய உணர்வுகள் தனக்குள் உண்டு. சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு ங்கேயும் வளர்கின்றதுகுடும்பத்திற்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.
 
மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும் சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் டரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெறுகின்றார்கள்.
 
ஞானிகள் காட்டி இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
2.தே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.
 
பெண்கள் மாங்கல்யத்தை நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம் இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.
 
அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி கொண்டு இரு ர்வும் ஒன்றாகச் சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின் தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும் போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள் மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும் ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
 
மகரிஷிகள் காட்டி அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம் குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

September 5, 2025

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா


ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”
 
ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கி அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.
 
மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.
 
இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.
 
மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.
 
சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”
 
வை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.
 
விஷ்ணுவிடம் கேட்டாலோ எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும் பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான் அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.
 
பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.
 
இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?
 
விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
கண்கள் தோன்றிய பின்பு அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.
 
தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்
 
வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும் நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.
 
உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.
 
ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.
 
இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.
 
குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
 
இதன் வழி உங்கள் வாழ்க்கையில் உங்களை நீங்கள் அறிந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

September 4, 2025

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்


செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.
 
இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.
 
நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர் என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.
 
1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை டைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.
 
நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.
 
தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் ரவச் செய்கின்றது.
 
விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீ அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் ன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.
 
இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.
 
ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.

September 3, 2025

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா


பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.
 
1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.
 
ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.
 
இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.
 
பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ன்றினால் இந்தப் பரத்தில் ன்றினால் பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றதுஅந்தச் செடி வளர்கின்றது.
 
இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.
 
உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிபின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.
 
தனது ஆன்மாவாக மாறிய பின்உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.
 
வேதனைப்படுபவரை சங்கடப்படுபவரை சலிப்புப்படுபவரை வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.
 
ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”
 
ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பத்தில் பல தீமைகள் உருவாகி மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.
 
1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.
 
உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் ரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.
 
இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.
 
நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.
 
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
 
ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச்ரீரம் பெற்றிட குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

September 2, 2025

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை


இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.
 
காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக இருடா நான் பார்க்கின்றேன் என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.
 
அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.
 
அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.
 
1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.
 
இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.
 
இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.
 
அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
 
புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.
 
இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றதுஅதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.
 
இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.
 
ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.
 
வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.
 
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
 
விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?
 
ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.
 
இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.
 
எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள் அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
 
ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
 
அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

September 1, 2025

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?


நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.
 
கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.தை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.
 
ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.
 
ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”
 
அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?
 
இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.
 
இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும் அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமா பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.
 
இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.
 
வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாகந்து விடும்.
 
ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும் அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?
 
சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.
 
இது எல்லாம் எப்படி வருகின்றது…?
 
எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் ருப்பெறுகின்றது.
 
இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
 
1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை கணவரை உயர்த்த வேண்டும் என்ற நிலைக்கு வருகிறது
 
ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.
 
அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.
 
செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!
 
உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.
 
எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.
 
எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!
 
1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.சையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது வ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.
 
அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.