ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 11

கடவுளின் பெயரால் யாரும் தவறு செய்யாதீர்கள் “தெய்வீகச் செயலாக நீங்கள் செய்யுங்கள் என்பதே ஞானிகள் உரைத்தது
இன்று தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதிப்பர்வகள் என்ன செய்கிறார்கள்? அதிலே வரக்கூடிய சம்பாத்தியத்தை மற்ற ஏழைகளுக்குக் கொடுத்தால், “இந்தப் பாவம் போய்விடும்…” என்று எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தவறு செய்யக் கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்து தவறால் வரும் பணத்தை வைத்து மற்ற “தன் இன மக்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அடமானமாக சொத்தையோ, வீட்டையோ, பொருளையோ வாங்கிக் கொள்வார்கள், பணத்தைக் கொடுப்பார்கள். இந்தச் சொத்துகளை அபகரித்துக் கொள்வதற்கு எதுவோ அதையெல்லாம் செய்வார்கள்.

நாங்கள் கணக்கில் தப்ப மாட்டோம்…” என்பார்கள்.

காசைக் கொடுப்பார் இடையில் வாங்கிவிடுவார். ஆனால், ஒரு பைசா தள்ளிக் கொடுக்க மாட்டார்.

அதே சமயத்தில் இந்தப் பாவத்தையெல்லாம் போக்குவதற்காக பணத்தைத் தனித்துச் சேமித்து வைத்து அதற்காக வேண்டி கோவில்களில் அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்கள்.

பின், “உனக்காக வேண்டி நெய் அபிஷேகம் செய்கின்றேன்…” என்ற நிலைகளில் “உனக்குப் படைத்த படைப்புகள் என்று அதைக் கொடுப்பதற்காக சில சாமியார்களை அங்கங்கே கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டைப் போட்டு “நீ வா நீ வா நீ வா நீ வா,” என்று அழைப்பார்கள்.

ஆனால், இவர்களிடம் வரவு செலவு செய்வோரிடம்
1.அவனால் கொடுக்க முடியவில்லை,
2.ஒரு ஒரு ரூபாய் குறைத்துக் கொள் என்றால் அது மட்டும் உதவாது.
3.இது சட்டத்திற்கு விரோதமானது, என் கணக்கிற்கு விரோதமானது, என்று இப்படிப் பேசுவோரும் உண்டு.
4.திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் அதிகாரிகளை வைத்துத் தட்டித் தீர்ப்பதும் உண்டு.

இதைப் போன்ற நிலைகளில் தான் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

எந்தத் தொழில் செய்தாலும் வரும் பணத்தைக் கடவுளுக்காகக் கொடுப்பார்கள்.
1.உனக்குப் பங்கு உண்டு.
2.ஆகவே, எனக்கு நீ உதவி செய் என்ற நிலையில் செய்வார்கள்.

இவர்கள் எண்ணும் உணர்வை இவர்கள் உயிர் இயக்கி உணர்வின் நிலையாக அந்த உடலிலே “இது உருவாக்கப்படுகின்றது என்ற நிலையை உணர்வதில்லை.

இதைப் போன்ற நிலைகள் தான் நாம் மீண்டும் மீண்டும் சுழன்று நாம் இங்கே வந்து கொண்டிருக்கின்றோம்.

யாரையும் குறை கூறுகிறேன்…” என்று வைக்க வேண்டாம்.

1.தம்மையறியாது இயக்கும் இந்த நிலைகளை உணர்ந்து
2.மனிதனை மனிதனாக மதித்து
3.மனிதனின் உயிரைக் கடவுளாக மதித்து
4.மனிதனாகப் பெற்ற பெருமையை மகிழ்ந்து
5.தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்பதே நமது ஞானிகளால் வகுக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்கென்று இல்லாது ஒவ்வொரு மனிதனையும் பார்க்கும் போது மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேதமற்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்திடும் நிலைகளைத்தான் எல்லா ஞானிகளும் உணர்த்தியுள்ளார்கள்.

உலகெங்கும் அன்று தோன்றிய எல்லா மகான்களும் சரி.., வான்மீகியும் சரி.., வியாசரும் சரி.., இன்றைய நிலைகளில் இராமகிருஷ்ண பரமகம்சரும் சரி..,
1.“கடவுளின் பெயரால் தவறுகள் செய்யாதீர்கள்..,” என்றுதான் மக்களுக்குப் போதித்தார்கள்
2.கடவுளின் பெயரால் தெய்வ குணத்தை வளர்த்து உனக்குள் விளையச் செய்து
3.கடவுளின் செயலாக நீ செய், என்றுதான் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

May 4, 2017

சர்க்கரைக் காவடி மச்சக் காவடி சேவல் காவடி – காவடி ஆட்டங்கள்

முருகனுக்காக வேண்டி முருகனை எண்ணி காவடிகளை எடுத்து வருவார்கள்.

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டு மந்திர ஒலிகளை எழுப்பிய பின் ஆற்று மணலை எடுத்துக் கொண்டு போய் சட்டியில் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

30 நாள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து பல ஆயிரம் பேர் முன் வைத்து காவடியை எடுத்து வருவார்கள். அந்த 48 நாளும் மந்திர ஒலிகளை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.

108, 1008 அல்லது ஒரு இலட்சமோ  மந்திர ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் தன்மை இவர்கள் ஏங்கி எடுக்கும் பொழுது அந்தக் காலம் உணர்வின் நினைவாற்றல் பருகப்படும் பொழுது எந்தக் கை கொண்டு இவர் தொட்டாரோ அந்த மணல் சர்க்கரையாக மாறும்.

இது நமக்குச் சாட்சியாகின்றது.

முருகனுக்காகக் காவடி எடுத்து வந்தேன் நான் இங்கே போய்த் திறந்து பார்த்தேன். அங்கே போய்த் திறந்து பார்த்தேன். இல்லை.

இரவும் பகலும் இங்கும் அங்கும் சுற்றுவார்கள். அப்புறம் கடைசியில் பார்த்தால் சர்க்கரையாக வரும்.

முருகனின் அருள் கிடைத்தது. சர்க்கரை கொடுத்தான் என்று சொல்வார்கள். பார்த்தபின் பக்தியின் நிலைகள் கொண்டு அதற்காக வேண்டி அதிலே சாய்கின்றோம்.

1.சர்க்கரையை விளையவைத்தான் என்ற
2.இந்த மந்திர ஒலிக்குத்தான் நாம் சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிக் கொண்டோமே தவிர
3.நம் உணர்வின் தன்மை இனிப்பாக வரும் சாஸ்திரங்கள் இல்லை.

அதே போல நான் (ஞானகுரு) பழனியில் இருக்கும் காலத்தில் மச்சக் காவடி என்று எடுத்து வருவார்கள். மச்சக்காவடி என்றால் மீனை அறுத்து அதில் மஞ்சள் பொடி போட்டு மற்ற பொருள்களையும் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.

பத்துப் பதினைந்து நாள்கள் சுற்றுவார்கள். நானும் கூடப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கின்றேன். இந்தக் காவடி எடுத்துச் சுற்றும் பொழுதெல்லாம் சில இடங்களில் வரவில்லை.

அப்புறம் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களைச் சொல்லி அதை எடுத்து வந்தபின் சரியான நிலையில் வந்தபின் அந்த மீன் உருப்படியாகவே (உயிருடன்) வருகின்றது.

அந்த மீன்களை வையாபுரிக் குளத்தில் கொண்டு விடுகின்றார்கள். கோவிலைச் சுற்றியுள்ள ஒரு கிணற்றிலும் அந்த மீன்களை விடுகின்றார்கள்.

இதைப் போன்று சேவல் காவடி என்று சேவலைச் சமைத்து மறுபடியும் வந்தபின் இதைப் போல சேவலும் உருப்படியாக வந்ததைப் பார்த்துள்ளேன்.

ஏனென்றால் இந்த மந்திர ஒலிகளைக் கொண்டு சில நிலைகளைச் செய்கிறார்கள். கந்த புராணத்தில் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதற்குள் புராண காவியமாக மாற்றியமைத்து வைத்துள்ளார்கள்.

1.மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதற்குள் படப்பட்டு
2.இது மீண்டும் சரியான பருவம் வரும் பொழுது இணைந்துவிடும்.
3.இதைக் கரையான் மந்திரம் என்பார்கள்,

ஆனால் பக்தி மார்க்கங்களில் இதையெல்லாம் “முருகன் செயல் என்று நிலைக்கு வரும் பொழுது
1.அந்த முருகனை வணங்கினால்
2.சாங்கியங்களைச் செய்தால் நமக்கு நல்லது
என்ற நிலையில் தான் இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.

ஆனால், அந்த ஞானிகள் சொன்னது பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் அறிவாக வளர்ந்து வந்த மனிதனின் “ஆறாவது அறிவை முருகனாகக் காட்டினார்கள்.

அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை உனக்குள் எடுத்து நஞ்சினை வென்று ஒளியின் சுடராக “கார்த்திகேயா என்று பேரொளியாக மாற வேண்டும்.

1.என்றுமே மகிழ்ச்சியின் நிலைகளாக மனிதர்கள் வாழவேண்டும்
2.வாழ முடியும் என்பதை மகிழ்வாகனா (மயில்வாகனா) என்று

3.அந்த ஆட்டங்களைக் காவடி ஆட்டங்களாகக் காட்டினார்கள்.

May 3, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 9

ஸ்தல வரலாறுகளில் உள்ள மூலங்களை அறிந்து கொள்ளுங்கள்
ஸ்தல புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்தல வரலாறுகளை எடுத்துச் சொல்வார்கள். இன்று காசி, இமயமலை போன்ற இந்தப் பகுதிகளில் இதைப் போல உருவாக்கியுள்ளார்கள்.

அதாவது இரு பட்சிகள் வந்தது. அங்கே விஷ்ணு ஆலயம் ஒன்று உண்டு. தவ முனிவர் ஒருவர் இருந்தார். விஷ்ணுவின் பக்தனாக இருந்து பல சாபங்களிலிருந்து மீட்டிட அவனை அடைய மரத்தடியில் அவர் கடும் தவமிருந்தார்.

ஒரு காலத்தில் சாபமிட்ட நிலைகள் கொண்டு அது பறவைகளாக வரப்படும் பொழுது தவமிருக்கும் முனிவரிடம் அந்த இரு பட்சிகள் வருகின்றது.

ஏனென்றால் முந்தி சாபமிட்ட நிலைகள் கொண்டு அந்த முனிவர் தவமிருப்பதைக் கண்டு அவரிடம் ஆசி பெற்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற நிலைகள் கொண்டு வருகின்றது.

முனிவர் கண் விழித்துப் பார்த்தபின் சாப நிலைகள் நீங்கி மனிதனாகின்றான். ஆகவே,
1.அந்த ஸ்தலத்தில் போய் நாம் குளித்தால்
2.நம் சாப அலைகள் எல்லாம் நீங்கும் என்று
3.அதற்கு ஒரு “ஏஜெண்ட் இருப்பான்.
4.அங்கே காசையும் கொடுத்து குளத்தில் முழுக்கைப் போட்டுக் காசைப் போட்டு வந்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய்விடும் என்றும்
இப்படிக் “கற்பனைக் காவியங்களை…” உருவாக்கிவிட்டனர்.

ஆக, மனிதன் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமைகளிலிருந்து விடுபட மெய் ஞானிகள் வெளிப்படுத்தியுள்ள மெய் உணர்வுகளைப் பெற முடியாத நிலைகளையே செயல்படுத்துகின்றனர்.

இதைப் போன்று அரசர்கள் வகுத்த வழிதான் இன்று உலக நிலைகளில் ஆலயங்களை அமைத்து அரசனுக்குக் கீழ் நல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தான் என்று பறைசாற்றுகின்றனர்.

அரசர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆலயப் பண்புகளைப் புகழ் பாடினர்.

1.அவர்கள் புகழ் பாடிய இந்த ஸ்தலம்,
2.இது முக்கியமான ஸ்தலம் என்றும்
இன்று நாம் அங்கேயெல்லாம் வரிசைப்படுத்திச் செல்கின்றோம்.

அரசன் செயல்களைப் புகழ் பாடி அவர்கள் பொருளீட்டி அவருடைய நிலைகள் எதுவென்று தெரியாது “அரசனைப் புகழ் பாடத்தான் தெரிந்ததே தவிர.., அருள் ஞானத்தைப் பெறும் தகுதியையும் இழந்தவர்.

இன்று பெரும்பகுதி எடுத்துக் கொண்டால் அரசனைப் புகழ் பாடிய நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கலாம். “கடும் தவமிருந்தாலும்,” அரசனை அன்று புகழ்ந்து பாடவில்லை என்றால் அவர்கள் “வாழ முடியாது.

ஸ்தல புராணத்தை அவர்கள் பாடும் பொழுது அதை ஒவ்வொரு நிலையும் இப்படித்தான் வெளிப்படுத்தினர்.

இப்படி இன்று மக்கள் விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம். ஆனால், அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம்.

1.உடல் இச்சைக்கும், அழியக்கூடிய நிலைகளுக்கும்தான் மனிதன் வாழ்கின்றானே தவிர,
2.“அழியாத நிலைகள் எது?” என்ற நிலையை எண்ணிப் பார்க்கவே இல்லை.
3.மனிதனுக்குப் பின் என்ன?
4.மனிதன் எவ்வாறு விண் செல்ல வேண்டும் என்று மெய்ஞானிகள் காட்டிய அருள் நெறிகள் நம் காவியத் தொகுப்புக்குள் உண்டு.

அவைகளெல்லாம் காலத்தால் மறைந்தே போய்விட்டது.

மீண்டும் அதை நினைவுபடுத்தினால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக, மறைந்த நிலைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உணர்த்தி வருகின்றோம். இதைச் சீராகக் கடைப்பிடிப்போர் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை நிச்சயம் அறிய முடியும், அதை உணரவும் முடியும்.


பிறவியில்லா நிலை அடைய முடியும், அழியா ஒளி சரீரம் பெற முடியும். உங்களால் முடியும்.

நண்பர்களாகப் பற்று கொண்டு வாழும் போது நண்பர் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசத்தால் ஏங்கினால் “அதனால் வரும் தீமைகள்”

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது

1.“நண்பனே, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்! இந்த மாதிரி ஆகிவிட்டதே,
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்?
4.எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி? ஏன்?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார்.  கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

அடடா.., நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே அதற்குள் இப்படிப் போய்விட்டானா!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி, “இல்லாத கஷ்டங்களை எல்லாம் அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை. அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் சரி, “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்,” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெறவேண்டும்
என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுவதே “மனிதனின் கடைசி எல்லை.

இதைச் செய்யாது
1.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் மீது பற்று கொண்டு எண்ணினால்
2.அந்த உணர்வுகள் அந்தந்த உடல்களில் இணைந்து
3.தீய வினைகளாகவும் சாப வினைகளாகவும் இயக்கத்தான் செய்யும்.


ஆகவே, இதைப் போன்ற தீமையின் விளைவுகளிலிருந்து விடுபடுங்கள்.

May 2, 2017

“யாம் தொட்டுக் காட்டவில்லை... பொட்டில் வைக்கவில்லை...” என்று சிலர் கேட்கிறார்கள் - விளக்கம்

எத்தனை கோடிச் செல்வங்கள் இருந்தாலும் அது நம்மை மகிழச் செய்கிறதா! என்றால் இல்லை. செல்வந்தர்களை நாம் பார்க்கிறோம். “பணத்தால் அவர்களால் மகிழ முடிகிறதா என்றால் முடியவில்லை.

தனக்குள் எண்ணத்தால் எடுத்துக்கொண்ட வேதனை மிஞ்சுகின்றது. பணம் அவர்களிடமிருந்தும் வேதனைதான் அவருக்குள் மிச்சமாக இருக்கிறது.

இதைப்போல எத்தகைய செல்வமும் நம்மைக் காக்காது. செல்வம் உறுதுணையாக வேண்டும் என்றால் இருக்கும். ஆனால், காக்காது.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் அது ஒளி பெறும் நிலையிலிருந்து நம்மை என்றென்றும் பிறளாது அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து என்றும் நம்மைக் காத்தருளும்.

பிற தீமைகளில் நாம் சிக்காது உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

ஆகவே, அந்த அருள் ஞானியின் உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களில் விளைவிப்பதற்குத்தான் இந்த உபதேசம். மகரிஷியின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பெறுவதற்குண்டான தகுதியை உருவாக்குவதுதான் இப்போது இந்த உபதேசம்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால் அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.

அதைப் பெறுவதற்குண்டான தகுதியை அவர்களைப் பற்றிச் சொல்லி அந்தப் பதிவுகளை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைக்கச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து கவர்ந்து, எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,
6.அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம்.

என்னமோ, சாமி லேசாகச் சொல்கிறார், என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

1.குண்டலினியைத் தட்டி எழுப்பி
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்,
3.தொட்டுக் காண்பித்தார்கள் பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்,
4.ஐயோ.., “இவர் ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.

உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச்சக்தியாக மாற்றத்தான் என்னால் என் குரு காட்டிய நிலையில் முடியும்.

தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ உங்களுக்குள் சொல்லவில்லை.

உதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.

உங்களுக்குள் அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன்
3.உங்களை ஒன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவர்களுடன் ஒன்றும் நிலை வரும் பொழுது நம் ஆன்மாவில் கலந்த தீமைகளைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் உணர்வாக அது விளையச் செய்யும். நமக்குள் அதை வலுப்பெறச் செய்யும்.

இந்த வலுவின் துணை கொண்டு தான் உடலை விட்டு அகன்று சென்ற நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய முடியும்.

அவர்கள் முன் சென்றால் இன்னோரு உடல் பெறும் உணர்வுகள் அங்கே கருக்கப்படுகின்றது, கருகியபின் அது ஒளியின் உணர்வாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றது.

ஏனென்றால் அவரின் உணர்வின் தன்மை பெற்றது தான் நமது உடல். அவர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் நாம் உந்திச் செலுத்தும் பொழுது அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறார்கள்.

அதே சமயம் அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை எளிதில் நாம் கவர முடிகிறது. அதன் வழியில் நம் வாழ்க்கையில் வரும் தீமையைத் துடைக்க முடிகின்றது.


அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் நமக்குள்ளும் இருள் நீக்கும் அந்த உணர்வாக விளைகின்றது. அதைப் பற்றுடன் பற்றும்போது நமது எல்லையும் “சப்தரிஷி மண்டலமாகஅமையும்.

May 1, 2017

காசைக் கொடுத்து யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்லி தீயிலே பொருளைப் போட்டால் விதியை வென்றுவிட முடியுமா…?

விநாயகரை வைத்து அதை உற்று நோக்கி உணர்வினைப் பதியச் செய்து விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானியர்கள்.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஓங்கி எண்ணத்தைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று அதைத் தனக்குள் கவர்ந்து தீமையை அகற்றும்படி செய்து உணர்த்தினார் அகஸ்தியர்.

எதைக் கண்டுணர்ந்து அன்று அகஸ்தியன் விண்ணுலகம் சென்றானோ அதைத் தன் இன மக்களுக்கும் பெறவேண்டும் என்று அவ்வாறு செய்தான்.

அதை யாரும் இப்போது செய்யவில்லை.

அதைச் இப்பொழுது சொன்னோம் என்றால் “தேங்காய் பழம் உடைக்காமல்…, எப்படிச் செய்வது? அரச மரத்தைச் சுற்றாமல்…, எப்படி அந்தச் சாமியிடம் வரம் வாங்குவது? என்று கேட்பார்கள்.

எங்கள் மூதாதையர்கள் இறந்து விட்டால் இறந்த பிற்பாடு நாம் மோட்ச தீபம் போட்டு அங்கே அர்ச்சனை செய்யாவிட்டால் மோட்சத்திற்கு எப்படிப் போவார்கள்.

இப்படி இந்த ஐதீகத்திலும் சாங்கியத்திலும் தான் நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கையே சாங்கியம் சாஸ்திரங்களில் காட்டியபடிதான் போய்க் கொண்டிருக்கின்றது.

சாங்கிய சாஸ்திரம் என்பது வேறு. ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிகள் வேறு.

ஆக ஒவ்வொரு குணங்களுக்கும் விதி அமைத்து இதை முடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு மதி கொண்டு விதியை மாற்றும் மார்க்கங்களைக் காட்டினார்கள் மகரிஷிகள்.

நம் விநாயகர் தத்துவமே ஞானவான் என்று விநாயகரைச் சொல்வார்கள். அதாவது அந்த மதி கொண்டு மனிதன் வாழ்வில் வந்த இருளைப் போக்கிய நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள்.

ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்தால் கண்ணின் கருவிழி நம் உடலிலுள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற நிலைகள் பதிவாக்குகின்றது. அதன் கதியில் நமக்குள் விளையப்படும் போது அது விதியாக மாறுகின்றது.

ஓர் வித்தினை நாம் ஊன்றினால் அது மரமாக வளரும் போது அதன் “கதியிலே” வளருகின்றது. வித்தின் தன்மை பெறும்போது “விதியாக” மாறி விடுகின்றது. தன் இனச் செடியை அது “விருத்தியாக்கச்” செய்து விடுகின்றது.

இதைப்போன்று தான் மனிதன் நாம் தீமையான சொற்றொடர்களைக் கேட்டுணர்ந்தால்
1.ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
2.பின் அந்தத் தீமைகளைப் பற்றிய நினைவுகள் கூடிக் கூடி
3.அதனின் கதியிலே மனிதன் வாழ்க்கை கூடிவிடுகின்றது.
4.ஆக, அந்தத் தீமையை விளைவிக்கும் அந்த உணர்வின் நிலையாக விளையப்படும் போது “விதியாக..” மாறி விடுகின்றது.
5.அந்த விதியிலிருந்து மீள முடியாது.., என்ற நிலை சாங்கிய சாஸ்திர விதிகளில் காட்டப்பட்டிருக்கின்றது.
6.விதி வழி நடக்கும் என்கிறார்கள், அதை மதி கொண்டு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சாங்கிய சாஸ்திரத்திலே இவர்கள் சொல்லும் “மதி…” என்பது என்ன?

1.சாஸ்திர விதிப்படி யாக வேள்வியினை நடத்தி
2.தீயிலே பல பொருள்களைப் போட்டுப் பொசுக்கி விட்டால்
3.பல மந்திரங்களைச் சொல்லி விட்டால்
4.மதி கொண்டு விதியை மாற்றுவதாக இவர்கள் சொல்கின்றார்கள்.

எந்த மதி கொண்டு… விதியை மாற்ற வேண்டும்….!

நீங்கள் காசைக் கொடுத்துவிட்டு அதிலே யாகத்தை வளர்த்து தீயிலே போட்டு பொருளைப் பொசுக்கிவிட்டால் “மதியாக” மாறிவிடுமா…?

நம் உயிர் நெருப்பு. அருள் மகரிஷிகளின் அருளாற்றலை உயிர் வழி சுவாசித்து உடலில் உள்ள இரத்தங்களிலும் அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களிலும் பாய்ச்சுதல் வேண்டும்.

பின் நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சுதல் வேண்டும்.

ஆக, ஊழ்வினையாகப் பதிவாகி அதனால் விளைந்த அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை வலுப் பெறச் செய்யும் பொழுது அந்த விதியின் கதி மாறி நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் மதியாகி “ஒளியின் சுடராக” மாறுகின்றது.

1.நம் உயிரான நிலைகள் கொண்டு
2.அருள் ஞான உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி
3.தீமையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்
என்பது தான் மகரிஷிகள் கண்டுணர்ந்த சாஸ்திரத்தின் உண்மைகள். உயிரான நெருப்புக்குள் அருள் உணர்வுகளைப் போடச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆனால், நாம் புறத்தில் உள்ள நெருப்பில் பொருள்களைப் போட்டுக் கொண்டுள்ளோம்.