ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2026

மனிதனின் எண்ண வலு

மனிதனின் எண்ண வலு

 

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்...? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.

அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.

ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.

தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.

1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்...? நம் குருநாதர் இருக்கின்றாரா...? திருமூலர் இருக்கின்றாரா...? ஆதிசங்கரர் இருக்கின்றாரா...? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா...? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா...? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா...?

யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.

அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்...?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்... உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது...? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.

உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.

1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.