ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2021

ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது - ஈஸ்வரபட்டர்

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… மனிதனுக்குள் இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலமே “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.
 
இந்த மனிதப் பிறவியை எடுத்ததன் பலனாக... “எந்த இலட்சியம் தன் கருத்தோ” அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலையைப் பெறுவது அதுவே தான்…! ஆனால்  அந்தப் பாக்கிய நிலை பெற்று விட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.
 
இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்பதன் பொருள் என்ன…?
 
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.விண்ணை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதையே நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும்...! என்பதே
5.இராமபாணம் திரும்ப வரும்...! என்று சொன்னதன் தொடர்.
 
ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகி மாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
 
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.வாலி வதம்…! என்ற பாங்கில்
3.இராமன் தலை குனிந்தான்…! (மறைந்திருந்து தாக்கியது) என்பதன் பொருள் என்ன…?
 
ஆச்சா மரத்தை வெட்டுபவனுக்கு அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.
 
“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம்... ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா...? என்று…!”
 
அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?
 
உலக இயல் என்னும் பிடிப்பில் (உலகப் பற்று) “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான்.
 
ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.
 
இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்...
1.உற்றுக் கேட்கவும் வேண்டாம்…!
2.அதிசயித்துப் பார்க்கவும் வேண்டாம்…!.
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.நாம் எடுக்கும் வீரிய சக்தி நம்முடைய உயிராத்மாவிற்கு அழியாச் சொத்தாக இருக்க வேண்டும்.

February 24, 2021

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது...?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது...?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது...?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது...?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது...?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது...? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்
 
அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.
 
வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.
 
இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா... அது என்ன...? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
 
ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.
 
சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
 
இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்...!
 
1.நான் மட்டுமல்ல... உங்களாலும் அதைக் காண முடியும்.
2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும். 

ஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

மாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

ஒரு விலங்கினம் நீர் குடிக்கும் ஓசையைக் கேட்டே அம்பெய்து அதைக் கொல்லக்கூடியவன் தான் தசரதன். அப்படிப்பட்ட செயலாகத் தான் ஒரு சந்தர்ப்பத்தில் சிரவணனைத் தசரதன் கொல்ல நேர்கிறது.
 
அந்தச் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் ஒரு “சூட்சமப் பொருள் உள்ளது...!” அது என்ன..?
 
கண் பார்வை இல்லாத பெற்றோரைச் சுமந்து செல்பவன் தான் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் “தாகம்...” என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான்.
 
ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன...?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் தன் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.
 
விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா...?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா...?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?
 
ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.
 
ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன...?
 
காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு... சரீர உணர்வின் இயக்கத்தால்... “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்...” தசரதனின் அந்தச் செயல்.
 
தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.
 
அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்... எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்... குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு... “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது...!”
 
1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்தால் சந்தித்த சந்திப்பு...
4.அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.
 
ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு.
 
எப்படி...?
 
செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்படும் அந்த நேரத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேர்க்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே... அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து
6.தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே...
1.ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும்
2.ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான்
3.நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

February 23, 2021

செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்

கடந்த கால மனிதர்கள் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப் போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்... உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.
 
அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது... சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது இல்லை. “கெட்டுப் போய் விட்டது...” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப் போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின் நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.
 
அவர்கள் எண்ணங்கள் அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது...?
 
முந்தி எல்லாம் பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப் போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன...? என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.
 
இப்பொழுது விஞ்ஞான அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப் பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை நாடும் போது சுயமாக சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால் மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.
 
இயந்திரத்தின் நிலையை வடிவமைத்த... அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ... அவன் உணர்வுதான் தான் வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது
 
இதைப்போல செயற்கையில் செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு... எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன் செயலாக்கம் நடக்கின்றது.
 
கம்ப்யூட்டர் அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும். அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.
 
உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்...
1.ஒரு பிரமை பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில் அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது...? ஏது செய்வது...? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின் ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
 
மனிதனால் செயற்கையில் இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான் இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
 
இப்படி அந்த விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன் மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.
 
இவன் உடலில் விளைந்த செயற்கை அலைகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து காற்றிலே பரவச் செய்கிறது.
1.அந்த எலெக்ட்ரானிக் சாதனங்களை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் போது
2.அதே உணர்வு தான் வரும் அதே உணர்வின் இயக்கமாகத் தான் வரும் (ARTIFICIAL INTELLIGENCE).

மனிதனுக்கு அடுத்த நிலையான உயர் ஞான வழிக்குச் செல்லும் நிலை தடைப்படுகின்றது..!

மகரிஷிகளால் சொல்லப்பட்ட முக்கியமான கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா...! என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?
 
சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம்... ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?
 
இதன் பொருள் புரிந்ததா,.?
 
1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட...பொட...!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்...!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே - நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.
 
உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்...! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும்.
 
அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா...?
 
ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்...” நமக்கு அவசியம் தேவை.
 
உணர்வுகளை மாற்றிட நாம் முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்... நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.
 
அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?
 
நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்...!”
 
ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன...? எப்படி...?
 
நம் வாழ்க்கை நடை முறையில் எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் வந்து மோதும் சமயத்தில் எல்லாம்... அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி (ஒரு பிரேக்)
2.அவ்வாறு சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.
 
தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன...?
 
இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.
 
அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
 
விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ...ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்...!” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
 
1.ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து
2.அதன் வழியில் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால்
3.அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.
 
இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்...” என்று காட்டப்பட்ட 
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
ஆகவே சமமான நிலை நிலைக்க வேண்டும் என்று சொன்னபடி நாம் செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்...!.

February 22, 2021

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்...! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
 
அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.
 
இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி... பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.
 
ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.
 
உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்... ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ... அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.
 
உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்... இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.
 
ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி  மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்...! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).
 
ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.
 
நாம் தனித்து இருந்தாலும்... அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்... உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.
 
நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்... உணர்வுகள்... தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது... நமக்கு அது நன்மை பயக்கிறது.
 
ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
 
அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.
 
வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். 

அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

காற்றிலிருந்து ஆகாரம் எடுக்கும் சித்தர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
 
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை...!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை...!”
 
ஆனால் இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்...” கிடைக்கின்றது.
 
எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது... “தான் உணர்ந்து... அனுபவத் தன்மையால்... பதிவு செயல் நடைபெறுகிறது...!”
 
உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.
 
காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா...!) மறை பொருளாக நிற்கும்.
 
பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும்
1.காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்..
2.“நம்மை அதன் வழியிலேயே இயக்கும்...!”
 
ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா - தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.
 
இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது  
1.உணர்வுகளின் உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்...” உபயோகப்படுத்தப்படும்.
 
ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.
 
ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது  எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.
 
சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்...!

February 21, 2021

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்... எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று...!
 
இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.
 
நோயின் உணர்வுகள் விளைந்தால்... “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே...” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல... இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை...!
 
நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது...? என்று சிந்தியுங்கள்.
 
வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது
 
ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.
 
இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது
 
ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி... பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது...! - ஈஸ்வரபட்டர்

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்... சகோதரப் பாசம் என்றும்... உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.
 
அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி...” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
 
“விதியின் பின் இராமன்...!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.
 
இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி...! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல... விதி முன் செல்ல... இராமன் பின் செல்ல... பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.
 
அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன...?
 
சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.
 
உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தைக் காட்டுகின்றார்.
 
அதாவது...
1.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
2.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்ற நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.
 
இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள்பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.
 
உயிர் ஒன்று தான்...! அது இராமனானாலும் சரி... இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.
 
தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி... ஒன்றி... அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.
 
ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.
 
அது மட்டுமல்ல...!
 
1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்...! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.
 
தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்...! என்ற குணத் தன்மைக்கு
2.தானே - அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது...? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!