ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2012

பணம் காசு சேர்த்து வைத்தால் எவ்வளவு நாள் சந்தோஷமாக வாழ முடியும்?

நாம் செல்வத்தைத் தேடி, சம்பாதித்துச் சந்தோசமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றோம். எத்தனை காலம் சந்தோசமா இருக்க முடியும்?

சம்பாதிக்கிறவரைக்கும் சம்பாதிக்கிறோம். ஒரு இரண்டு பேருக்குக் கடன் கொடுத்துவிட்டு, சரி இருக்கட்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உதவி செய்கிற வரைக்கும், நமக்கு வருவாய் வருகின்றது என்று நினைக்கிறோம்.

ஆனால், பத்து பேருக்குக் கொடுத்தபின், இரண்டு பேர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்,
நமக்கு என்ன ஆகும்?
அவன் மேல் கோபம் வரும்,
பழி தீர்க்கும் உணர்வு வரும், வெறுப்பு வரும்.

பாதாமைப் போட்டு, சுவையாகச் செய்து, அதில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் என்ன செய்யும்? நம்முடைய நல்ல மனதெல்லாம், போய்விடும். அடுத்து, நாம் என்ன செய்வோம்?

நம்மிடம், சரியாக வரவு செலவு பண்ணிக் கொண்டு இருப்பவர்களிடமும் கூட, வெறுத்து பேசச் சொல்லும்இந்த வெறுப்பின் தன்மையைச் சுவாசிக்கும் பொழுது, அவர்களும் தடை செய்யத் தொடங்குவார்கள்.

இப்பொழுது, இது எங்கே இருந்து வருகின்றது? அந்த உணர்வுகளால் வருகின்றது. ஆகவே, இதைப்போன்ற நிலைகளெல்லாம், நமக்குள் வராதபடி மாற்ற வேண்டும். ஏனென்றால், இது சந்தர்ப்பத்தால் வரக்கூடியதுஇது சிவ தனுசாக மாறுகின்றது.

ஆக, உடனே அந்த அருளைப் பெருக்கி,
அந்த உணர்வின் தன்மையை
அருள் வழியில் இதற்குண்டான பதிவுகளில்,
நாம் அடுத்த நிமிடமே, மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

ஏனென்றால், சிவ தனுசு என்றால், ஒவ்வொன்றாக நாம் எதை எதையெல்லாம் கொன்று, பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக உருவாகியுள்ளோம்.

அதாவது, சந்தர்ப்பத்தில், கோழி ஒரு விட்டில் பூச்சியை விழுங்குகின்றது, அடுத்து, அந்தப் பூச்சியுடைய சந்தர்ப்பம் கோழியாகப் பிறக்கின்றது.

ஒரு காக்காய், அந்த விட்டில் பூச்சியை விழுங்குகின்றது. அதனுடைய சந்தரப்பம், காக்காயாகப் பிறக்க கூடிய நிலை வருகின்றது.

அதே விட்டில் பூச்சியை, இதே மாதிரி ஒரு எறும்பு, பத்து எறும்பு, சேர்த்துக் கடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய சந்தரப்பம் என்ன ஆகின்றது? இது உடல் பெரிதாக  இருந்தாலும், இந்த எறும்பின் உணர்வின் நினைவே வந்து, எறும்பின் ஈர்ப்பிற்குள் செல்கின்றது.

அதே சமயத்தில் மனிதன் அதைக் கொன்றால், அந்த உயிரான்மா மனிதனுக்குள் வருகின்றது. அதுனுடைய சந்தரப்பம், அந்த உயிர் நமக்குள் வந்தால், அந்த உணர்வைப் பெற்று. இந்த ரூபம் பெறக் கூடிய தகுதியாக வருகின்றது. அது அதனுடைய சந்தரப்பம்.

ஆக, இப்பொழுது நாம் மனிதனாக இருக்கக்கூடிய நிலைகளில், நம்முடைய சந்தர்ப்பம் என்ன?
வேதனைப்பட்டவர்களுடைய உணர்வை அதிகமாக எடுத்திருந்தால்,
அந்த வேதனை உணர்வை வளர்க்கப்படும் போது,
நமக்குள் என்ன செய்கின்றது?

இந்த உணர்ச்சியின் தன்மை, நமக்குள் ஆத்திரமும், கோபமும், வேதனையும் அதிகமாகி, இதே போல ஒவ்வொரு சந்தர்ப்பமும் உருவாகின்றது. யாரால் வேதனைப்பட்டோமோ, அந்த நோயின் தன்மை நமக்குள் வந்து, அது நோயாக மாறுகின்றது.

நோயின் தன்மை வந்தபின், “சண்டாளன் இப்படிப் பண்ணிவிட்டான் என்று சொல்லிவிட்டு, இந்த உணர்வின் தன்மையை வளர்த்த பின், யாரை நினைத்து வலுப் பெற்றோமோ, உடலுக்குப் பின் இந்த உடலைவிட்டுச் சென்றால், அவர்கள் உடலில் போய் ஆவியாகத்தான் மாற்றும்.

அதே வேதனையை அங்கே உருவாக்கி, அவர்களைப் பழி தீர்க்கும் உணர்வுடனே போகின்றதுஇது நமக்குத் தெரியாதுநாம் அல்ல. இந்த உணர்ச்சிகள், இந்த உயிருடன் எண்ணும் போது, இந்த உயிர் அந்த உணர்வுகள் எங்கே சென்றாலும், இது இயக்கியே தான் தீரும் இதுதான் சாகாக்கலை. சொல்வது, இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகின்றதா?

ந்த அருள்ஞானம் நமக்குக் கிடைத்தது பெரிய பேரருள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும், அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் சேர்ப்பதே “நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் பெரும் சொத்து” என்று, உணரவேண்டும்.

கணவனும் மனைவியும் குருகாட்டும் வழியில் எப்படி நடக்க வேண்டும்

உதாரணமாக எலெக்ட்ரிக் இன்ஜினியராக இருக்கின்றீர்கள். அதிலே ஒரு நொடி தவறினால், என்ன செய்யும்? சரியில்லாமல் போய்விடும்..

அதைப் பார்த்துவிட்டு வந்து, “இந்த மாதிரி ஆகிவிட்டதுஎன்று வீட்டில் சொல்வார்கள். அதைச் சொல்லும் பொழுது, அந்தக் கருத்தும் உங்களுக்கு தெரியும் அதனால், இதன் வழி வரப்போகும் போது, அதனதன் உணர்வு கலந்து, அதன் உணர்வு சிந்திக்கும் ஆற்றல் வரும்.

அங்கே வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் எலெக்ட்ரிக் வேலை செய்யும் போது, இந்த மாதிரி எர்த் ஆகிவிட்டது. இந்த மாதிரி ஆனதால், அது ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது, என்று வீட்டில் பெண்கள் கேள்விப்பட்டால், என்ன ஆகின்றது?

”... அப்படியா?.., என்று சொல்லி, இந்த உணர்வை எடுத்தோம் என்றால், அதே தன் கணவரிடத்தில் நினைக்கும் பொழுது, இந்த நேரத்திலே அவருக்குத்தான், அவர் மேல் இந்த உணர்வுகள் பாய்கின்றது.

அவருக்கு இப்படியெல்லாம் ஆகி இருந்தால் என்ன ஆகும்? அப்படி என்ற இந்த உணர்வு, மனைவிக்கு வரக்கூடாது.

ஆகவே, நாம் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்? மகரிஷிகளின் அருள் சக்தியால், அந்த மாதிரியெல்லாம் என் கணவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற, அந்த நிலை வரவேண்டும்.
மன உறுதியோடு, அந்த  மகரிஷிகளின் அருள் உணர்வோடு
தொடர்பு கொள்ளப் போகும் பொழுது,
இந்த உணர்வுகள் உறுதியாகின்றது.

இந்த உறுதி வந்தால் என்ன செய்யும்? கணவரை அந்த மாதிரி சந்தர்ப்பத்தில், அவரை அங்கே போக விடாமல் தடுத்துவிடும். இதுதான், “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்என்று சொல்வது..

ஆக, துயரம் என்ற நிலையிலிருந்து,
துயரத்தை நீக்கும் உணர்வை எடுக்கும் பொழுது,
அது அவருக்கு நல்ல உயர்ந்த சந்தர்ப்பமும்,
அதிலிருந்து தப்பிக்கக் கூடிய நிலையும்,
நல்ல மன உறுதியும் பெற வேண்டும் என்ற உணர்வை,
மனைவி பதிவு செய்தால்,
நிச்சயம் காக்கக் கூடிய சக்தியாகும்.

அதாவது, “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்”. சாதாரணமாக நண்பர்களாக இருக்கின்றவர்கள் சண்டை போட்டார்கள் என்றால், அந்த உணர்வு அமெரிக்காவில் இருப்பவரையும் எப்படி இயக்குகின்றது?

நாம், அடிக்கடி ஒரு நோயாளியை எண்ணும் பொழுது, நோயாளி என்று சொல்லிப் பதிவு செய்து கொள்கின்றோம். பிறகு, அந்த நோயாளி அங்கே என்னென்ன வலு பெற்றாரோ, அவர் இறந்த பின்பு, அந்த ஆன்மா நம்மிடம் வந்துவிடும், துவெல்லாம் உணர்வுகள். இந்த காந்தப் புலன்தான் இணைக்கின்றது.

ஒவ்வொரு பொருளிலும், உதாரணமாக கத்தரிக்காயில் அந்த காந்தப் புலன் இருப்பதனால்தான், அதன் உணர்வு கொண்டு, கத்தரிக்காயாவிளைகின்றது..

தே போல, ஒவ்வொரு மிளகாயிலும் அதில் உள்ள காந்தப் புலன்  எதன் உணர்ச்சியைக் கண்டதோ, செடியின் தன்மை அதைக் கவர்ந்து, அந்த உணர்வின் ரூபத்துக்கொப்ப, அந்த ரூபத்தை உண்டாக்குகின்றது.

வாழ்க்கையில், கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தாலும், குறைகளை கணவன் வெளியில் செய்துவிட்டு வருகின்றார்கள். அப்பொழுது, எப்படியோ அதிர்ச்சி, பயம் இதைப் போன்று தோற்றுவிக்கின்றது.

கணவன் மனைவியிடம் சொல்லும் போது, மனைவி என்ன செய்யவேண்டும்? உடனே, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்து, ன்  உணர்வுகளில் படரவேண்டும்.

என் கணவர், மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். அவ்வப்பொழுது சிந்திக்கும் திறன் அவருக்கு வரவேண்டும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அவருக்கு ஒரு நல்ல மன வலு பெறவேண்டும்..

அந்த சந்தர்ப்பங்கள் அனைத்தும், அவருக்கு நல்லதாக்கும் உணர்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், என்று இப்படி எண்ணிப் பாருங்கள் அப்பொழுது உங்கள் உணர்வுகள் என்ன செய்கின்றது?

அதாவது, வாழ்க்கையில் திடீரென்று, சிக்கல்கள் வருகின்றது. இந்த சிக்கலிலிருந்து வரக்கூடிய நிலைகள் அது வராதபடி, இந்த முறைப்படி  செய்ய வேண்டும்..

அப்படிச் செய்யும் பொழுது, அந்த மனைவியின் உணர்வுகள், இது மேக்னெட்டாஇயக்கி, “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்”, தீமைகளிலிருந்து விடுபடச் செய்கின்றது. இதை நீங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கணவன் ஆபீசுக்கே போனாலும் கூட, பஸ் ஏறவிடாது, அந்த பஸ் ஆக்சிடன்ட் ஆகப்போகிறது என்றால், அந்த உணர்வலைகள் இங்கே வலுவாகி, அந்த வண்டியில் ஏற விடாது. உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம்.

வேற்றுக் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களா?

1. 2000 சூரியக் குடும்பத்தில் மனிதர்கள், மகரிஷிகள், சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம்
கேள்வி:
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று, மனிதர்கள் வாழ்கின்றார்களா? அப்படி வாழ்ந்தால், இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி மனிதர்கள் மகரிஷிகளாகி, சப்தரிஷிகளாகி, துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம் வரை, இந்த மனிதன்தான் ஆனான் என்ற நிலையில். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இதே நிலைகள் துருவ நட்சத்திரங்கள், சப்தரிஷிமண்டலங்கள் என்பது இருக்கிறதா?   

ஞானகுருவின பதில்:
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், பிரபஞ்சம் என்பது ஒரு சூரிய குடும்பம். அதே சமயத்தில், இப்போது நாம் இரண்டாயிரம் சூரிய குடும்பத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்படி சூரியன் இருக்கும் போது, மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் வரும் பொழுது, பின்னி வருவது போன்று, இடைமறித்து அந்த உணர்வு வரும் பொழுது, நடு மையமாக இருக்கிறது சூரியன்.

நமது பூமி சுற்றும் போது, ஈர்ப்பின் தன்மையில் வெப்பம் வரும்போது நடுமையம் வெப்பமாகிறது. இந்த வெப்பம்தான் அதற்கு உயிர். வெப்பம் இல்லையென்றால் பூமி வாழ்வதில்லை, வெறும் கல்தான். இதன் ஈர்க்கும் சுழற்சியின் வேகத்தில் வெப்பம் வரும் என்றால், பூமியின் நடு மையத்தில் வெப்பம் வரும்.

இந்த வெப்பத்தின் தணல் கூடக் கூட, கூடக் கூட தன் அருகில் இருக்கக்கூடிய மற்றதை உருக்கும். அப்படி உருகி வரும்போது, மேல் இருக்கும் பாறைகள் அப்படியே கீழே இறங்கும். நில நடுக்கம் என்று சொல்வார்கள்.     

எந்தெந்தப் பகுதியில் அதிகமாக உருகுகின்றதோ, து சிறுகச் சிறுக விளைந்து, அந்த மேல் அடுக்கு தாங்காது, அப்படியே உள் அமுங்கி விடும். அப்பொழுது, அந்தப் பக்கம் பூமி நில நடுக்கம், பூமி அதிர்வு, மற்ற மாற்றங்களெல்லாம், கீழே உள்ளுக்குள் போகிறது என்று சொல்வதெல்லாம், இப்படித்தான். ஒரு பக்கம் இது குழம்பு போல், எப்படி நாம் சாப்பிட்டால் மலம் வெளியே போகின்றதோ, இதே மாதிரி வரும்.

இதைப் போல, நமது பிரபஞ்சம் இந்த வெப்பத்தின் தணலில்தான் உயிர் வாழ்கிறது. இதே போல் நம் சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் என்று, வடிவமைத்து இங்கே இருக்கிறது.

இதே போல், ஒவ்வொரு கோளும், தன் சுழற்சியின் தன்மையில் ஏற்படும் வெப்பத்தை வைத்து, அது அது உயிர் வாழ்கிறது. இவை அனைத்திற்கும், சூரியனில் இருந்துதான் வெப்பம் கிடைக்கிறது. அதனுடைய உணர்வுகள் உராயப்படும் போது, வெப்பம் கிடைக்கும்.

இதே போல் சூரியனிற்கும், மற்றதோடு அந்த உணர்வுகளோடு உராயப்படும் போது தான், சூரியனுக்கே வெப்பம் கிடைக்கின்றது. ஆக, இது ஒன்றின் துணை கொண்டு, ஒன்று விளையும்.

இப்படி விளைந்தாலும், நமது பிரபஞ்சத்தில் மற்ற கோள்களில் உயிரணுக்கள் உண்டு, நட்சத்திரங்களில் இல்லை. சூரியனில் உண்டு. சூரியனில் யார் என்றால், இப்பொழுது நம்மைப் போல் ஜெபித்த, மிக சக்தி வாய்ந்த ரிஷிகள் அங்கே குடி கொண்டுள்ளார்கள். அதாவது சூரியன் மிகக் குளிர்ச்சியான பூமி, இதைப் போல் தலைமை அடைந்து, ஒரு சில ஆன்மாக்கள் அங்கு இன்றும் உண்டு.

தே போல் இந்த பூமியில் விளைந்த மனிதன், வெகு நாள் வாழ வேண்டும் என்று தவமிருந்து சென்ற சிலர், இன்றும் சந்திரனில் உண்டு. அந்த ஆன்மாக்கள் சூட்சம நிலையில் உண்டு.

ஆனால், மற்ற கோள்களுக்கு அதிகமாக இங்கு இருந்து செல்லவில்லை. இருந்தாலும், துருவத்தின் நிலை கொண்டு  வாழ்கிறார்கள், ஏனென்றால், இனி பிறவியில்லா நிலை அடைந்தவர்களும் பிற நிலைகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி, நமது பூமியில் இத்தனை நிலைகள்.

இதே போல் மற்ற பிரபஞ்சங்களிலும் வளர்ச்சி அடைந்த, ஒரு சூரிய குடும்பத்தில் நம்மை போல் விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்த நிலையில் உண்டு. சூரியனும் இதே போல், ஒரு முட்டை வடிவில்தான் இருக்கும். ஒன்றின் துணை கொண்டு ஒன்று சுற்றுகிறது.

இதில் எல்லாவற்றிலும் கழிவு என்ற நிலை வரப்படப் போகும் பொழுது, அதாவது ஒவ்வொன்றின் நிலைகளிலும் வெளிப்படுத்திய துகள்கள் கண்டிருப்பது, வால் நட்சத்திரம் என்று சொல்வார்கள். இதே மாதிரி எத்தனையோ. அப்பொழுது, நமது சூரிய குடும்பம் வரும் போது, அதற்கு நேராக இடைப்பட்டது என்றால், வால் நட்சத்திரமாகத் தென்படும்.
அப்படி டைப்பட்ட நிலைகளில் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இது வால் நட்சத்திரமாகத் தென்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வரக்கூடியதும் உண்டு. சில காலங்களில் வரக்கூடிய வால் நட்சத்திரங்களும் உண்டு. ஏனென்றால், இது எடையற்றது. ஆவியின் நிலைகள் கொண்டது.

சூரியனின் நிலைகளில் போனால், இதனுடைய பங்கு சூரியன் அது இழுக்கும் சக்தி வரும் பொழுது, வால் போல் தெரியும். வரும் பொழுது, நமது பூமியின் பக்கம் இப்போது நாம் உணர முடிகிறது.

பூமியில்லாத பக்கம் நம் பிரபஞ்சத்திற்கு வரும் பொழுது, சில காலம் தெரியும். இந்த வால் நட்சத்திரம் என்பது, ஒரு தூசி, ஒரு சுழல் காற்று அடித்தால், எப்படி ஒரு பக்கத்தில் உருண்டையாக இருக்கின்றதோ, அந்த மாதிரி இருக்கும். ஆக, அதற்குள் ஒரு திடப் பொருளினால் ஆனதல்ல.

இதே மாதிரி, இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில் குறைந்தது ஒரு இருநூறு சூரிய குடும்பங்களில், நம்மைப் போல் வளர்ச்சி பெற்ற, விஞ்ஞான அறிவில் நம்மை காட்டிலும் முன்னேற்றம் அடைந்த பிரபஞ்சங்கள் உண்டு.

அங்கு இதே போல் துருவ நட்சத்திரம், துருவத்தில் வளர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். இந்த சூரியன் அழிந்து விட்டால், அடுத்தவரிடம் தொடர்பு கொண்டு, மீண்டும் வேகா நிலையாக என்றும் அவர்கள் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்.
இதற்காக வேண்டித்தான்பல பேர் பல முயற்சி எடுப்பது. இனி பிறவியில்லை. அகண்ட உலகில், இரண்டாயிரம் சூரிய குடும்பமும், பிற மண்டலத்திலிருந்து எடுக்கிறது. இந்த இரண்டாயிரம் சூரிய குடும்பமும் வட்டமிடும்.

பின், இதனுடைய உணர்வுகள் வெளியிலே எடுக்கக் கூடிய உணர்வை வைத்து, அகண்ட நிலைகளுக்கு வெளியிலே செல்லும். இதைத்தான், என்றும் பதினாறு என்று இந்த அண்டத்தில், அதனுடைய நிலைகள் வளர்ச்சி அடையும் பொழுது என்றும் பதினாறு என்ற நிலைகளில், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில்தான், இத்தகைய துருவ நட்சத்திரங்கள் உண்டு. அதன் வளர்ச்சியில் சப்தரிஷி மண்டலங்களில், அதில் குறைவாக இருப்பவர்களும் உண்டு. நம் பிரபஞ்சத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில், அதிகமாக உண்டு.

ஆனால், இதிலும் அதற்குப் பிறகு, இந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குப்பின், நம் சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாகச் செல்லவில்லை. இப்போது, நாம் அதற்கு வேண்டிய உணர்வை எடுத்து, அந்த ஆன்மாக்களை அனுப்புவதனால், இதன் நிலையில் கொஞ்சம், இப்போது சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.
2. சப்தரிஷி மண்டலத்தில் இணையும் உயிராத்மாக்களின் வளர்ச்சி
நம் உடலில் இருக்கும் இந்த உயிரான்மா ஊசி முனையின் அளவு எவ்வளவோ, அந்த அளவுதான். இப்போது இங்கிருந்து செல்லக் கூடியவர்களுக்கு, இந்த உணர்வின் தன்மை வளர்த்து, அதனுடைய வளர்ச்சி வரப்படும் போது ஊசி முனை அளவுதான். இன்றைக்கு இருக்க கூடிய இந்த ஆன்மாக்கள்.

அது மின் அணுவின் தன்மை வரும் பொழுது, ஒளியாக வரும். அது எடுத்துக் கொண்ட ஆன்மா நிலைகள் உடல் கருகிய நிலை கொண்டு ஒளி தான் இருக்கும். அது ஓரளவுக்குக் கொஞ்சம் விரிவடைந்திருக்கும்.

இப்பொழுது ஒரு கடுகை எடுத்து கொண்டால், இதில் மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்தால் எப்படி, ஊசி முனை போல் இருக்கும் உயிர், உணர்வின் அலைகள் கொஞ்சம் கடுகில் மூன்றில் ஒரு பாகத்தைப் போன்று, அதனுடைய அலைகளை வீசும். இது அதற்குப் பின், அதனுடைய வளர்ச்சிகள் இருக்கும்.

ஆனால், சிவசக்தியாக கணவன் மனைவியாக அவர்கள் இணைந்திருந்தால், அதனுடைய வளர்ச்சி வேகமாக வளரும். அது, தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி.

இப்பொழுது இவர்கள் எல்லாம் மின் அணு போன்றுதான். அவரைப் பின்பற்றித் தொடர்ந்தவர்கள், மனைவி அவர்களோடு இணைந்தால் அது நன்றாக வளர்ச்சி பெறும்.

பெண்களை ங்கு அனுப்பியிருந்தால், அதில் ஆண்களுடைய உணர்வு இணைந்தால்தான், இரண்டு உணர்வும் சேர்ந்து, உணர்வைத் தனக்குள் எடுத்து, வளரும் பருவம் அடையும். இதில் இத்தனை பக்குவம் இருக்கிறது, ஒன்று, இரண்டு அல்ல.

அதனால், அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள். நாம் அவர்களுடைய உணர்வில் தொடர்பு கொண்டு இருக்கிறோம். ஆக, நாம் அந்த நட்சத்திரத்தின் உணர்வை எண்ணும் போது, நமக்கு அந்த அலைகள் கிடைக்க முடிகிறது.

நம் முன்னோர்கள் முன் சென்றால்,
பின் நமக்கு அந்த அலைகள் கிடைக்கிறது.
ந்த மாதிரி அனுப்பினால்தான் கிடைக்கும். இல்லை என்றால்,
நாம் அந்த சப்தரிஷி மண்டலங்களின் அலைகளை எடுக்க முடியாது.
3. விண் செலுத்தும் உணர்வை குரு காட்டும் வழியில், உங்கள் ஊனுக்குள் பதிவு செய்யும் நிலை
அதற்குத்தான், நாம் அதைப் பெறுவதற்கு, நமது குருநாதர் கொடுத்த அந்த நட்சத்திரத்தின் உணர்வை, உங்கள் உணர்வின் நினைவுகளில் கொடுக்கின்றோம்.

அதே மாதிரி, இந்த உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களையும் ந்த ஆன்மாக்களின் முகப்புகளில், இந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம். இந்த ஆன்மா மேலே போனால், அந்த திசையின் கோடியில் இழுத்துக் கொண்டு போகும்.

அங்கே சென்ற உடன், உடல் பெறும் உணர்வுகள் கருகி விடும். ஆனால், ஒளி பெறும் அறிவு தான் நிலைத்திருக்கும்.. அதன் வழி கொண்டு தான் இருக்கும்.

இப்பொழுது, ராக்கெட்டை இங்கிருந்து ஏவுகிறார்கள். அப்படி ஏவும் பொழுது, அதில் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்கிறார்கள்.
அதில் வைத்திருக்கக்கூடிய செயற்கைக் கோள்,
அந்தக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து,
இந்தக் கோளின் நிலையைப் பதிவு செய்திருந்தால்,
அந்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
இல்லையென்றால், கோளின் அடையாளம் தெரியாது.
, அதே மாதிரித்தான், உங்களுக்குள் இந்த நிலையைப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய, ஊனில் பதிவு செய்யும் நிலைகள் கொண்டு, எந்த ஞானத்தின் முகப்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ, இதன் நினைவு கொண்டு உங்கள் நினைவாற்றல் வரும்.

அப்பொழுது, அந்த முகப்பில் இருக்கும். அந்த ஆன்மாவின் முகப்பில் இருந்தது என்றால், விண் சென்றபின், அந்த சப்தரிஷி மண்டல அலைக்கு அது செல்லும். இல்லை என்றால், வான் வீதியில் வீசி விடும். எங்கு போகும் என்றே தெரியாது. அதற்கு வழி தெரிய வேண்டும்.

இல்லையென்றால், இதை அனுப்புவது என்றால், அத்தனை சாதாரமாக அனுப்ப முடியாது. இதையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான அறிவில் எப்படி டெக்னிக்கல் இருக்கிறன்தோ. ந்த மெய்ஞான அறிவில், இதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதை சாதாரமாக வாயிலே சொல்லிவிட்டு, அனுப்பி விடலாம் என்று சொன்னால், அதற்கெல்லாம் ஒன்றும் நடக்காது. அத்தனை சிரமம் இருக்கின்றது.

ஆனால், அவர்கள் வாயில் சொல்வதில், அதைப் பெறுவதற்கு, இந்த திசைகள், இந்த உணர்வுகள், எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும்.
4. மற்ற சூரியக் குடும்பத்தில், தமிழ் மொழி
இதே மாதிரி, சில இடங்களில் மிகவும் வளர்ச்சி பெற்ற விஞ்ஞான அறிவு உண்டு. இப்பொழுது, நாம் மாந்திரீக அளவுகளை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, இதே போல் சில சூரிய குடும்பங்களில் இருந்து, அவர்கள் எந்தத் திசைக்கும் போகக் கூடிய நிலையும், அவர்கள் தனித்து வரக் கூடிய நிலைகள் உண்டு. அந்த ஆன்மாவை விரிவாக்கப்பட்டு, அதை கிரகித்து, அதிலிருந்து தனக்குள் சேமித்து, மற்ற துணை கொண்ட குருவுக்கு அனுப்பக்கூடிய நிலைகளிலும் இருக்கிறார்கள்.

இதில், நம் நாட்டில் இருக்கும், நம் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய தமிழ் மொழி போல, மற்ற பிரபஞ்சத்திலும் தமிழ் உண்டு.னென்றால், இந்த உணர்வின் ஒலி கீற்றுகளுடைய உணர்வுகளுக்கொப்ப, நாதங்கள் எழும்புகின்றது.

மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய அணுக்கள், எப்படி உராய்கின்றதோ, இதே போல் மின்னல் தாக்கும் போது, இந்த மின் அணு தோன்றும்.
5. தமிழ் மொழியை எப்படி உருவாக்கினான் அகஸ்தியன்
அந்த மின்னலில் பார்த்தால், பல விதமான ரூபங்கள் இருக்கும்.
இதே மாதிரி, அதற்குத் தகுந்த ஒலி அலைகளை எழுப்பும்.
அதில் ஒலி, ஒளி என்ற நிலைகள் இருக்கும்.
அதை ஆதாரமாக வைத்துத்தான்,
அகஸ்தியர் சொல் வடிவுக்கு கொண்டு வந்தது.

அதை இணைத்துச் சேர்த்து, நாம் ரூபத்தை காணும் நிலைகளுக்கும், ஒரு பொருளின் தன்மையை,த்திற்கொப்ப அந்தச் சொல்லை அமைத்து, இந்தச் செடி தான் என்ற நிலைகளையும் நிர்ணயித்தது, ஆதியிலே அகஸ்தியன், தமிழ் சுத்தமான தமிழ்.

அன்றைய தமிழ், கோடு வரிசையில் தான் இருக்கும். அதில் நெளிவுகள் இருக்கும். நாம் இப்போது பார்க்கும் தமிழில், எம்.ஜி.ஆர் வந்ததும் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

அதே சமயத்தில், பெரியார் வந்த பின்பு, தமிழில் லை, ழை எல்லாம் மாற்றப்பட்டு  ஜ, ஷா, ஸா என்ற எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டது. இப்படி தமிழில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, முதலில் வட்ட ழுத்தாக இருந்தது, பின் தட்டை ழுத்தாக வந்தது.

அதே மாதிரி அதில், ஒன்றில் ஒன்று குதிரை ஏறுவது போல் இருக்கும். ப்படி எழுத்துக்கள் மாறி மாறி, இது ஒவ்வொரு அரசர்கள் வரப்படும் போது, தனக்குகந்த மொழிகளாக இதை மாற்றினாலும், ஒரே பாஷையாக இருந்தாலும், சொற்களை மாற்றி எழுதியவர்களும் உண்டு.
6. குரு வழியில், 2000 சூரியக் குடும்பத்திற்குள்ளும் நம் உணர்வுகள் செல்லும் நிலை
ஆக, மற்ற சூரிய குடும்பங்களில் நம்மைப் போல் மனிதர்கள் வாழ்கிறார்கள். வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு. வளர்ச்சி உள்ள மனிதர்களூம் உண்டு. மக்கு முடி உண்டு, சில சூரிய குடும்பங்களில், மொட்டைத் தலையாக, முடி இல்லாத மனிதர்களும் உண்டு.

நமது சூரிய குடும்பத்தில், ஒரு பூமி உண்டு. ஆனால், இரண்டு பூமி இருக்கும் சூரிய குடும்பமும் இருக்கிறது. ஒன்று நல்ல வளர்ச்சி இருக்கும், மற்றொன்று வளர்ச்சி இருக்காது.

இப்பொழுது, நாம் இரட்டைக் குழந்தை என்று சொல்வது போல, இரண்டு பூமி இருக்கும் சூரியக் குடும்பங்களும் உண்டு. இதையெல்லாம் விரிவாக்கமாக ஒரு நாள் தெளிவாகக் காட்டுகின்றார், குருநாதர்.

இங்கு மட்டும் அல்ல. நமது சூரிய குடும்பத்திற்குள் போவதற்கு, வருடக் கணக்கில் ஆகும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆக, இந்த அகண்ட நிலைகளில், இரண்டாயிரம் சூரிய குடும்பம் போக வேண்டும் என்றால் எப்படி இருக்கும்.
இரண்டாயிரம் சூரிய குடும்பம் என்பது,
ஒரு அகண்ட அண்டமாக இருக்கிறது.
இதைக் காட்டிலும், இதைப் போல் எத்தனையோ அண்டங்கள் இருக்கிறது.

அது விரிவடைந்த நிலையிலிருப்பதை, நீங்கள் பார்க்கப் போனால், யுளே பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டும் இல்லை, போக முடியாது.

அங்கு போக வேண்டும் என்று, இந்த நிலையில் சென்றால், (குருநாதர் காட்டும் வழியில்) அது போய்க் கொண்டே இருக்கும்.

இப்பொழுது, நாம் இதையெல்லாம் பார்க்கின்றோம் என்றால், நட்சத்திரங்களாகத் தெரிவதில் பெரும்பகுதியானது, இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில் உள்ளது, நட்சத்திரமாக நமக்குத் தெரியும்.

இதைப் போல, நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த, மிகவும் பெரிதாக இருக்கக்கூடிய சூரியனும் சில பிரபஞ்சத்தில் உண்டு. ஒரே அளவாக இல்லை.
இதை ஒரு சமயம் நீங்கள் பார்க்கப் போனால், இந்த உணர்வை எடுத்து கொண்டு வந்தால். படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, மேலே அழைத்து கொண்டு போய் விடும்.

எந்த உணர்வு இருக்கிறதோ, இந்த ஆன்மா அங்கு கலக்கும். அப்படியே பறப்பது போல் இருக்கும். சிலர் பயந்து கொண்டு, அப்படியே எங்கேயோ போய் விடுவோம் என்று பிடித்துக் கொள்பவர்கள் உண்டு. இப்படியெல்லாம் வரும்.

ஏனென்றால், இந்த உணர்வுகளை நினைக்கும் பொழுது, உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும். அப்பொழுது, அதனுடைய உணர்வுகள் அதுவாக இங்கே வளரும். ஏனென்றால், ஒரு விழுது பாய்ந்துதான், அது இதற்குள் வளரும்.

தே மாதிரித்தான் கனவு காண்கிறோம் என்றால், ஒரு மனிதனின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை, நீங்கள் பிறர் சொல்லும் போது கேட்டிருந்தால், நம் உயிரில் படுகிறது. இரவில் இந்த உணர்வுகள் அங்கே அழைத்துச் செல்லும்.

எங்கேயோ இருப்பது போல் இருக்கும். ஒரு பள்ளத்தில் இருப்பது, மேட்டில் இருப்பது போல் இருக்கும், ஒரு மலை மேல் இருக்கிறோம் என்பது போல் இருக்கும். அப்படி என்றால், ந்தந்தப் பகுதியில், எந்தெந்த மனிதர்களின் உணர்வுகள் விளைந்து அதனுடைய நினைவாற்றல் வந்ததோ, அவை எல்லாம் கனாக்களில் வருவது உண்டு.