ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2019

குடுகுடுப்புக்காரன் “வாசல்படி மண்ணையும்... தலை முடியையும்.. பழைய துணியையும்... ஏன் கேட்கின்றான்...?


நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்... வாசிக்கும் இசை...
2.நெருப்பில் போடும் புகை... அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ...
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்...” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.  

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு ஐந்தாம்படை என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது... அது வருகிறது... இது நடக்கப் போகிறது...! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்...! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புது துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்... வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்...! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்... தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்...! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி... அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடி மக்கள் இப்படிச் செய்வார்கள்...! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து 
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள். 

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது...!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து... யாகங்கள் செய்து... சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்...! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்.
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையுக் யாகங்களையும் செய்து  மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம்  கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்...”
3.இன்று.. இது வரையிலும்... மத அடிப்படையில் இல்லை.

June 26, 2019

சரீரம் என்ற பாத்திரத்தில் நாம் ஈர்த்துத் தியானிக்க வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம் 
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்... ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்...!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

தூக்கத்தில் “திடுக்...” என்று பயந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்...?


தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்துத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வரும் ஒரு சிலருக்குத் தூக்கத்தில் “திடுக்” என்று முழிப்பு வரும். சிலர் பயந்துவிட்டேன் என்பார்கள். கறுப்பாக உருவம் தெரிந்தது.. அல்லது வெள்ளையாக ஆவி தெரிந்தது...! என்பார்கள்.

அது மட்டுமல்ல...
1.அந்த நேரத்தில் கை கால்களை என்னால் அசைக்க முடியவில்லை...
2.பேச முடியவில்லை... எழுந்திருக்கவும் முடியாது போல் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
3.இன்னும் சிலருக்கு உடல் முழுவதையும் அமுக்குவது போலவும் மூச்சுத் திணறல் போல இருந்தது...! என்றும் கூடச் சொல்வார்கள்.

இதுகள் எல்லாம் நாம் ஏற்கனவே நமக்குள் எடுத்துக் கொண்ட சில மனித உணர்வுகள் அது இறக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் ஆகும். நம்முடைய ஈர்ப்புக்குள் வந்த பின் அது இப்படி எல்லாம் தெரியும்.

ஏனென்றால் நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது நம் நினைவோட்டம் இல்லாத நேரத்தில்
1.அத்தகைய உணர்வுகள் தன் பசிக்குப் பகலில் உணவை எடுக்க முடியாதபடி வரும் பொழுதும்
2.நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியால் அது களைந்து நல்லதாக மாறும் சமயங்களிலும்
3.உயிரிலே மோதும் சமயம் அத்தகைய உருவங்களும் உணர்ச்சிகளும் நமக்குத் தெரிய வரும்.

இதைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை....!

அப்படித் தூக்கத்தில் முழிப்பு வந்து விட்டது என்றால் எழுந்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து
1.புருவ மத்தியில் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா...! என்று மூன்று முறை சொல்லி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கலாம்.
4.இல்லை பாதி நினைவு இருந்தாலும் அப்படியே படுக்கையில் படுத்தபடியே திரும்பத் திரும்ப அதைச் சொல்லிச் செய்யலாம்.
5.மீண்டும் தூக்கம் தன்னாலே வந்து விடும்.

முக்கியமாகப் புருவ மத்தியில் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! என்று
1.நம் உயிரை அழுத்தமாக எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இழுத்துச் சுவாசித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலுக் கூடினால் எந்த ஆன்மாவின் இயக்கமும் நம் ஈர்ப்புக்குள் வராது. நம்மை இயக்காது. பயத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்காது.  அந்த அச்சுறுத்தும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் அருள் சக்திகள் அச்சுறுத்தலாகிவிடும்.

சந்தேகமோ பலவீனமோ நமக்குள் வராது. நமக்குள் மன பலம் அதீதமாகக் கூடும்... தெளிந்த சிந்தனையும் வரும். பிற உணர்வுகளின் இயக்கங்களை முன் கூட்டியே அறியவும் முடியும்.

செய்து பாருங்கள்...!

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்...?


நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே... அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்...!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்... பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி... மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்... ஆதிலட்சுமி என்பது காந்தம்... ஆதி சக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்...!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து...!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள் படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்... எல்லாமே...!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான் என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்...
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்...
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்...! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று உள் நின்று இயக்கும் நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிபட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்...! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்...?

என்னைத் திட்டினான்.. திட்டினான்... திட்டினான்...! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.
5.அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.

June 25, 2019

அரூபலிங்கம்... ஸ்வரூபலிங்கம்...! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்...?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன...? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து...
4.உயர் நிலை பெறவேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்...!”

அப்படியானால்... தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்...?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்...!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்...!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்...! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்...!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்... உருவத்தின் ஆனந்த லயமும்... அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்...
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்...”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை...!  

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”


உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி...?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறிவிடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்... என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது. சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது... சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது 
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.