ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2016

எலும்புக்குள் உள்ள ஊன் (MONITOR), பதிவு தான் நினைவுக்கு வருகிறது – சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்க வேண்டும்

உதாரணமாக, ஒரு பயமான உணர்வை நாம் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கின்றது?

கருவிழி ருக்மணி இங்கே எலும்புக்குள் உள்ள ஊனில் பதிவாக்குகிறது. பதிவாக்கியபின் அந்த மானிட்டர் (MONITOR) என்ன செய்கிறது?
பதிவானதும் இங்கே பட.., பட..,” என்று இயக்கும்.
குணத்துக்குத் தகுந்தாற்போல் இங்கே உடலுக்குள் பார்க்கலாம்.

அதிகமாக ஆசை வந்து பணம் கிடைக்கும் என்று எண்ணினால்
பட பட என்று ஆகிறது.
பயமானாலும் இங்கே பட பட என்று ஆகிறது.

சரக்கு எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
போகவில்லை என்றால் பட பட என்று ஆகிறது.

அதே மாதிரி சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்ற நிலையில்
கொஞ்சம் கால தாமதமாகிவிட்டால் 
உடனே படபடப்பு வருவதைப் பார்க்கலாம்.

அப்பொழுது நம் சிந்தனை குறைந்து கோபம் வருவதைப் பார்க்கலாம். இழுக்கும் அப்படியே பட பட என்று. இந்த உணர்வு இங்கே பதிவுக்குத் தக்கவாறு அந்த இயக்கங்கள் காற்றிலிருந்து அது இழுக்கின்றது.

அப்படி இழுப்பதற்குக் காரணம் யார் தெரியுமா? நம் கண்ணின் நினைவுகள் தான்.

கண்ணின் நினைவை நாம் எண்ணி இரண்டும் கலந்து என்ன செய்கிறது? காற்றிலிருந்து இழுக்கும். இவனுக்குச் சரக்கு அனுப்ப வேண்டுமே! நேரத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற இரண்டும் கவர்கிறது.

இரண்டும் கவரந்து இங்கே பதிவாகப்படும் பொழுது இங்கே இழுக்கின்றது. இழுத்தவுடன் நுகர்ந்து உயிரிலே பட்டவுடனே என்ன செய்கிறது? கலக்க உணர்வுகள் வருகிறது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா?

நாம் சாதாரண நடைமுறையில் இருப்பதில் இத்தனை விதமான வித்தியாசங்கள் இருக்கிறது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பதிவு ந்த மாதிரி வந்தாலும் கூட உடனே ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை எடுக்கின்றோம். ரிக்கார்ட் செய்கிறோம்.

இப்படி வேதனைப்பட்டதை மாற்றி சரக்கை அனுப்பும்பொழுது அது வாங்குகிறவர்களுக்கு நல்ல தைரியமும் நன்றாக இருக்க வேண்டும். நல்ல ஊக்கமாக வேலை செய்ய வேண்டும். பொருள் வாங்குபவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று இப்படி எடுத்தோம் என்றால் அங்கே நல்லதாகின்றது.

இது  எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.

ஆனால், நீங்கள் வேதனைப்பட்டுச் சரக்கை அனுப்பி வைத்தீர்கள் என்றால் அதே சரக்கு அவனை அறியாமலேயே தவறு செய்ய வைக்கின்றீர்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அவர்களை அறியாமலேயே தவறு ஏதாவது ஒன்றிலே செய்து விடுவார்கள். அப்பொழுது வலு இழந்துவிடுகிறது.

ஆனால், நீங்கள் இஙகிருந்து சரக்கில் ரிக்கார்ட் பண்ணி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அவனையும் காக்கின்றது. நம் பொருளும் விற்பனையாகின்றது. பேரும் கிடைக்கும். இதுவெல்லாம் எலக்ட்ரானிக்தான்.

இதில் உள்ள நிலைகளை நீங்கள் போட்டு எதை நீங்கள் தியானத்தில் எடுத்துக் கொடுக்கின்றீர்களோ. நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற
இந்த நல்ல உணர்வு அங்கே விளையப்படும் போது
அந்த மனித உடலிலிருந்து வரக்கூடியது இதனால் விளைகின்றது.

ம் சொல் தான் .ஆனால் இங்கே விளைகிறது. அந்த உணர்வு என்ன செய்கிறது? அலைகளாக மாறுகின்றது. அப்பொழுது இந்த கூட்டமைப்புகள் இந்த மாதிரி வரக்கூடிய நிலைகள். இந்தக் காற்றுமண்டலத்தில் தான் பதிவாகின்றது.

நாம் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்கிறோம் தியானத்தை எடுக்கும் பொழுது இரத்த நாளங்களிலிருந்து எல்லா உறுப்புகளுக்கும் தோல் மண்டலம் வரை கொண்டு போகின்றோம். வலு பெறச் செய்துவிடுகின்றோம்.

அப்பொழுது காற்றிலிருந்து பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. ஒரு பழக்கத்திற்கு வந்தால் ரொம்ப அற்புதமாக இருக்கும்.

ஒன்றும் சிரமம் இல்லை. சிரமப்பட்டு அந்த மந்திரத்தை அப்படி ஆயிரம் தடவை சொல்லவேண்டும், இந்த மந்திரத்தை இரண்டாயிரம் தடவை  சொல்ல வேண்டும். மறந்து விட்டால் எல்லாம் போய்விட்டது என்ற நிலை இல்லை.

உடனுக்குடனே அந்த ரிக்கார்டை துருவ நட்சத்திரத்தை எடுத்து அந்த உணர்வை  மாற்றிக் கொண்டே வாருங்கள். இந்தக் கணக்கு கூடும். உடல்களில் உள்ள எல்லா செல்களிலும்  இந்த உணர்வு ரெக்கார்ட் அதிகமாக ஆகின்றது.

ஆக, இப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எடுத்தோம் என்றால் எல்லாவற்றிற்கும் கொண்டு வந்து விடுகின்றோம்.

எல்லா அணுக்களிலும் சேர்த்துக் கொண்டு வரப்படும்போது உயிரைப்  போலவே நம் உடலில் ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஏனென்றால், அந்தந்தக் காலங்களில் விதைகளைப் போட்டு வைத்தோம் என்றால் அவைகள் முளைத்து பின் விளைந்து அந்தந்தக் காலத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

இதே போல்தான்  நம் உடலில் வரக்கூடிய அந்த உணர்வுகளை இப்படி எல்லாம் மாற்றி பழக வேண்டும்.

இது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், இந்த உண்மையை நான் அனுபவித்துச் சொல்கிறேன்.

சொல்கிறேன் என்றால் இங்கு விளைந்துள்ளது. அதைச் சொல்லாகச் சொல்கிறேன். நீங்கள் கேட்கின்றீர்கள்.

கேட்கும் போது உங்களுக்குள் பதிவாகின்றது.
நினைக்கும்போது மீண்டும் அதை எடுக்கக்கூடியசக்தி கிடைக்கின்றது.

இவ்வளவுதான், ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.
பெரிய அதிசயம் இல்லை.

திட்டுகிறவனைப் பற்றி எண்ணிக் கொண்டேயிருந்து அவனை நினைத்தாலே நமக்குக் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் இதே போல ஏமாற்றிவிட்டார்கள் என்றால் கோபம் வருகிறது.

இதே மாதிரித்தான் எல்லாவற்றிலும் நமக்குள்
அந்தப் பதிவு தான் மீண்டும் நினைவாகின்றது.

ஆகையினால், நீங்கள் மிகச் சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வர வேண்டும்.

March 3, 2016

மகாபாரதத்தின் கடைசி நிகழ்வுகள், மனித உடலின் கடைசி முடிவு - விளக்கம்

இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைக் காட்டுவதற்காக காவியங்களைப் படைத்தனர் ஞானிகள்.

பல கோடித் தீமைகளை வென்று நன்மைகளின் உணர்வுகள் நமக்குள் உருவாகி நன்மை செய்யும் உணர்வின் அணுக்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

இதில் ஆயிரத்து எட்டு குணம் உண்டு. பத்து குணங்கள் சேர்த்து ஒரு உணர்வின் குணமாகின்றது. நூறு குணங்கள் என்ற நிலைகள் வரும்போது அந்த நூறின் தன்மை பெறுகின்றது.
ட்டு என்பது அஷ்ட திக்கின் உணர்வை நுகர்வது.
பத்து என்பது அந்த உணர்வின் நிலையானது.

தைத்தான் மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர். பஞ்ச பாண்டவர்களின் நிலையில் நுகரப்படும்போது திரௌபதிக்கு இந்த ஆறு பேரும் இந்த ஐந்து பேரின் உணர்வுகளை அதை இயக்குகின்றது.

நாம் எதன் உணர்வை சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அது நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் இதைச் சேர்த்து  புலனறிவு ஐந்து.

ந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது. துதான் கண்ணனின் சகோதரி திரௌபதி.

தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது - புற நிலை.

சகோதரி திரௌபதி - தன் உடலுக்குள் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது.

கண்ணன் கண்கள் அது எதை எண்ணுகின்றனரோ அதன் உணர்வின் தன்மை உட்புறமாக அதை எப்படி ஊட்டுகின்றது என்பதனைக் காட்டுகின்றார்கள்.

கௌரவர்கள் - அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வை வளர்த்து வளர்த்து வளர்த்து தனக்குள் அது கௌரவர் (கௌரவம்) என்ற நிலை வருகின்றது.

உண்மையின் உணர்வை நாம் நுகர்ந்தால்
தனக்குள் பஞ்ச பாண்டவர்களைத் தன் சூதின் நிலை கொண்டு
திசை திருப்புகின்றனர்.

தன் உணர்வின் வலிமை கொண்டு உட்புகாது அந்த நன்மையின் நிலை பெறாது நம் உடலில் உள்ள கௌரவர்கள் தடைபடுத்துகின்றனர் என்றும், பஞ்ச பாண்டவர்களுக்குப் போர் முறை என்று காட்டுகின்றனர்.

ஆனால், உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ச்சன் என்றும் அதன் உணர்வின் தன்மை கொண்டு நம்மை மாற்றுகிறான் என்றும் இதைத் தெளிவாக உணர்வின் செயலாக்கங்களும் வலுவின் தன்மை எதுவாகின்றது என்றும் காட்டுகின்றார்கள்.

உணர்வின் உணர்வுகளை நமக்குள் எடுக்கும்போது ஆன்மா
கெடுமதி என்ற உணர்வோ அல்லது
கெடுமதியை நீக்கும் உணர்வு வரும்போது
அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பீமன்
நமக்குள் வலுகொண்ட உணர்வுகள் ஆன்மாவாகின்றது.

இந்த ஆன்மாவிற்குள் இந்த வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றார்கள்.

ஆனால், இவர்கள் அனைத்தும் வலு கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலைகள் கௌரவர்கள்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மகா போர்கள் என்ற நிலைகள் நடந்தாலும் அந்த உணர்வுகள் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் போது இவர்கள் ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான்.
கண்ணன் மடிவதற்கு முன் பலராமன் மடிகின்றான்
கடைசி முடிவு.

நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம் எண்ணத்தின் நிலை கொண்டே கண், கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள், பல எண்ணங்கள் அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் மகாபாரதத்தில்.

ஆகவே கண்ணனின் சகோதரன் மூத்தவன் என்ற உணர்வைக் கொண்டு வருகின்றான்.  மகாபாரதப்போரின் உணர்வை கொண்டு  பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை. கண்ணனும் மடிகின்றான். அவன் சொர்க்கம் அடைந்தான் என்று காரணம் காட்டுகின்றான்.

பின், வலு ஈர்க்கும் தன்மை இல்லையென்றால் பீமன் - அவனும் மலை ஏற முடியாது தவிக்கின்றான் மடிகின்றான்.

ஒரு உணர்வைக் கவர்ந்தால்தான், அதாவது நகுலன் என்ற உணர்வின் தன்மை கொண்டு ஈர்ப்பதும், நன்மை தீமை என்று சகாதேவன் பலருக்கு நன்மை செய்யும் தன்மைகள் வருகின்றது. அவர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ஆக அனைத்தும் வலுகொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ச்சுனும்  மடிந்து விடுகின்றான். அவனுக்குள் இருக்கும் வீரிய உணர்வுகள் இழந்தபின்  என்ன நடக்கின்றது?

மற்றவர்கள் பசு மாடுகளை ஓட்டிச் செல்கின்றனர். அர்ச்சுனன் கண்ணுக்கு முன் திருடர்கள் வந்து அப்படித் திருடுவதை அவன் அடக்கிவிட வேண்டும்  என்று எண்ணுகிறான்.

தன் ஆயுதமான காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான். னால், உணர்வுகள் அனைத்தும் இழந்தபின் (பீமன், நகுலன், சகாதேவன், கண்ணன்) அவனின் உணர்வுகளின் நிலைகள் ஒன்று சேரவில்லை.
அர்ச்சுனனின் ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை.
அவனை (திருடர்களை) ஒன்றும் செய்ய முடியவில்லை.
தான் வீழ்ந்து விட்டேனே என்ற உணர்வுகள் வருகின்றது.

ஏனென்றால் கண்ணால் கவர்ந்த உணர்வுகள் வலிமையின் உணர்வை இங்கே ஊட்டித்தான் அந்த வலு இயக்குகின்றது என்ற நிலையை இங்கே மகாபாரதப் போரில் காட்டுகின்றார்கள். (கண்களில் பார்வை இல்லையென்றால் நாம் எதை வைத்துப் பார்க்க முடியும்?)

·         ஒரு உணர்வின் தன்மை உடலை எவ்வாறு இயக்குகின்றது?
·         உடல் இயக்கம் அது எவ்வாறு இயங்குகின்றது?
·         உணர்வுகள் மடிந்தபின் எது மடிந்தது?
என்ற நிலைகளை காபாரதத்தில் தெளிவாகக் கூறுகின்றார் வியாசகர்.

.நாம் உணரும் உணர்வுகள் எண்ணங்கள் ஆக, வேதனை என்ற உணர்வானால் வாலி, கோபம் என்ற உணர்வானால் காளி.

நாம் நுகரும் உணர்வு உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகிறது? என்று உணர்த்துகின்றார்கள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ல் வேண்டும். 

நமக்குள் புகுந்த உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும் நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத்தான் மகாபாரதம் தெளிவாகக் கூறுகின்றது

மனிதன் அருள் வழியில் வாழும் நெறிகளைத்தான் .நமது ஞானிகள் காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய வழி நடந்தால் நாம் விண் செல்வது சுலபம்.

March 1, 2016

பறக்கும் ஆற்றல் கொண்ட மெய்ஞானிகளின் நிலைகள்

அக்காலத்தில் நம் இந்தியாவின் மேல் படையெடுத்த ஜெர்மனியர்கள் இங்கே மெய்ஞானிகள் கண்டுணர்ந்த சாஸ்திரங்களைக் கவர்ந்து சென்றனர்.

அன்று இராக்கெட் போன்ற நிலைகளை உருவாக்கினார்கள். ஆசியக் கண்டத்திலேயே சீனாவில் உண்டு. விழாக் காலங்களில் வேடிக்கையாக இராக்கெட்டை மருந்துகளைப் போட்டு அதில் பொருத்தி வைத்தபின் இராக்கெட் மாதிரி அது மேலே போகும்.

சீனாவில் அரசர்கள் வாழும் காலங்களில் கொண்டாட்டங்களில் அதிலே பல பொருள்களை உருவாக்கி வெடிகளை உருவாக்கி மேலே விண்ணிலே செலுத்தினார்கள். ஆனால், அது வேடிக்கைக்காகத் தான் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், ஜெர்மனியர்களோ இந்த உணர்வின் தன்மையைக் கவரப்பட்டு அது எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையும் அரசியல் ரீதியில் மற்ற நாடுகளை அடக்குவதற்கு எது? என்ற நிலைகளைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டார்கள்.

நம் நாட்டில் கந்தகம் மற்ற உணர்வோடு சேர்க்கப்படும் பொழுது மற்ற என்னென்ன பொருள்களைச் சேர்க்கின்றோமோ ஒன்று வெடிக்கவும் செய்கின்றது.

மற்றொன்றுடன் பொருள் சேர்த்து மற்ற உலோகத்துடன் கலக்கப்படும் பொழுது இது எரியும் தன்மையில் சூடாகி கொதிகலனின் தன்மைகளை மாற்றுகின்றது என்ற நிலைகளையும் இதை வேடிக்கையாகச் செய்தார்கள்.

ஆனால், பிற்காலத்தில் அதை இராக்கெட்டாகச் செய்தான் விஞ்ஞானி. முதலிலே ஜெர்மனியில் உருவானது. நம்முடைய சாஸ்திரங்கள் அங்கே சென்றது.

இராக்கெட்டின் தன்மையை அன்று மெய்ஞானி சொன்னான்.

விண்ணின் உணர்வின் அலைகள் நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் கலந்துள்ளது. அதை எவ்வாறு எதனால் பிரித்து எடுக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தான்.

அந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்தான். இன்னொரு இடத்திற்குச் செல்லப்படும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையைத் தன் எண்ணத்தால் கவர்ந்து சென்றால் இதனின் ஈர்ப்பில் மனிதன் பறந்தே செல்வான் என்ற அங்கே காட்டப்பட்டுள்ளது.

இரதம் என்ற நிலைகளில் பறக்கும் நிலைகளை அங்கே உருவாக்கப்படும் பொழுது நட்சத்திரங்களின் இயக்கங்களையும் அத எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது இவன் உருவாக்கிய அந்தச் சப்பரத்தில்
இந்த உணர்வின் அறிவைப் பதியச் செய்து
ஒளிகளைப் பதியச் செய்யப்படும் பொழுது
அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது மிதந்து சென்றான்.
இது சாஸ்திரங்களில் உண்டு.

ஆனால், இதையே நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அணுக் கதிரியக்கங்களைப் பிளந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் வலுக் கொண்டதாக மாற்றி இங்கே இராக்கெட் எப்படி வெடி வெடித்து விண்ணிலே வீசினானோ அதைப் போல வலு கொண்ட உணர்வு கொண்டு அதைப் போன்ற இராக்கெட்டுகளை V1, V2 என்று ஏவினான் ஜெர்மனி.

அதே போல விமான நிலைகளையும் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வில் இந்த ரேடர் (RADAR) காற்றின் அலைகளை எடுத்து இதே உணர்வின் தன்மை அழுத்தத்தைத் தனக்குள் சமப்படுத்தும் நிலைகள் கொண்டுதான் ரேடரைக் கண்டுபிடிக்கின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி, காற்றின் அழுத்தத்தின் உணர்வின் தன்மையை தன் உயிருடன் உணர்வுபட்டு,
தன் உடல் பாகங்களிலே அழுத்தம்
எதெனெதன் அழுத்தங்கள் வேண்டுமென்று முதலிலே பதிவு செய்கின்றான்.

தன் நினைவாற்றல் வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிந்த உணர்வுகள் அவன் மிதக்கும் தன்மை அடைகின்றான் மெய்ஞான உணர்வில்.

இந்த இயற்கையின் நிலைகளில் அன்று மெய்ஞானிகள் அதன் வழிகளிலே சென்றவர்கள் உண்டு.

அன்று ஆதிசங்கரரை எடுத்துக் கொண்டால் தன் உடலின் தன்மை எடுக்கப்படும் பொழுது அன்று காடு மேடு எல்லாம் அலைந்தார். அவர் உடலுக்குள் செயல்பட்டவர் கோலமாமகரிஷி.

மூன்று சக்திகள், விண்ணிலிருந்து வரக்கூடியதை மூகாம்பிகை என்று பூமி தன் உடலின் சக்தி எவ்வாறு கவர்கின்றது என்ற நிலையைக் கண்டுணர்ந்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் காந்தம் விஷம் வெப்பத்தைப் பராசக்தி என்றும், காந்த்த்தை லட்சுமி என்றும், அதே சமயத்தில் விஷத்தின் தன்மையை அது இயக்கச் சக்தியாக வரும் பொழுது அது எதனுடன் இதைக் கலக்கின்றதோ அந்த உணர்வின் தன்மைய ஞானம் என்றும் இப்படி நான்கு சக்திகளாக வைத்தார், மூன்று சக்திகளாகவும் பிரித்தார்.

அது பிரித்த உணர்வின் தன்மையை இந்தப் பூமி எவ்வாறு கவர்கின்றது?  
இந்த உணர்வின் தன்மையைத் தாவர இனங்கள் எவ்வாறு கவர்கின்றது?
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு கவர்கின்றது?
இதை எங்கெங்கெல்லாம் பெறலாம்?
என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவு செய்து கொண்டார்.

அதைப் பதிவு செய்து கொண்டபின்
ககன நிலையில் அடுத்த பக்கம் பறந்து சென்று
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கவரும் சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி.