ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2026

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை


தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் ம் ஈஸ்வராஎன்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
 
அதற்குப் பின்
1.கருவிலிருக்கும் அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அந்தக் குழந்தையைச் சிறிது நேரம் நினைத்து அதைத் தியானியுங்கள்.
3.கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும்.
4.அப்படி ஞானப் பாலை ஊட்டி அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.
 
உலகிற்கு அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும் மிளிரும் தன்மையாக அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்றுத் தனக்குள் விளைய வைத்து அந்த மூச்சுஅம்மா…” என்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும்.
 
அந்த மெய் ஒளியின் தன்மைகள் உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும்அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள் இந்த நாட்டுக்கும் உதவும் மற்றவர்களுக்கும் உதவும்.
 
1.ஆகவே எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

2.ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் கர்ப்பமுற்ற பின் அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் குடும்பமாக மாற்ற வேண்டும்.
 
அது சமயம் ரோஜாப்பூவும் குங்குமப்பூவும் கல்கண்டும் தேனும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும் கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து பழகுதல் வேண்டும்.
 
அதிகாலையில் குடும்பத்துடன் துருவ தியானத்தை எடுத்து அகஸ்தியர் துருவனாகி அணுவின் இயக்கத்தை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகிக் கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமான அவர்களின் பேரருளைக் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும், என்று தியானிக்க வேண்டும்.
 
கருவிலிருக்கும் குழந்தை உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும் என்று குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.இதனின் உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து தன் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.இதனின் உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்கின்றது.
 
இப்படிச் செய்தோமென்றால் நமது குடும்பத்தில் சாப அலைகள் இருப்பினும் தீய அலைகள் இருப்பினும் பாவ அலைகள் இருப்பினும் பூர்வ ஜென்ம அலைகள் இருப்பினும் இதையெல்லாம் தகர்த்தெறியும் பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்…”
 
அவன் வளர வளர குடும்பத்திலுள்ள சர்வ தோஷங்களையும் சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும் பேரருள் என்ற உணர்வை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றான்.
 
1.இதனால் அந்தக் குடும்பத்தில் மட்டுமல்லஅவர்களுடைய ஊரிலும் தெருவிலும் அருள் ஞானியின் உணர்வுகள் படர்கின்றன.
2.இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால் அவர்கள் பிறந்தபின் இருளை அகற்றி மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
 
நாமும் இந்த நிலை பெற்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும் நமக்குள் இருக்கும் சாப அலைகளை மாற்றிடும் அருள் ஞானியாகவும் ஆகின்றான்.
 
பண்டைய காலங்களில் அரசர்களின் மனைவிமார்கள் கர்ப்பமுற்றால் அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்துத் தங்களுடைய நாட்டின் பெருமைகளையும் பிற நாடுகளை எப்படி வெல்ல வேண்டும்…? என்றும் எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற வேண்டும்…? என்றும் மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதிக் கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.
 
மிக பலசாலியாகவும் அதே சமயத்தில் தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும் அந்தக் குழந்தை வளரும். இப்படி அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டித் தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.
 
அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய கத்தி வாள் போன்ற ஆயுதங்களை நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால் அவைகளை அரசர்கள் ஒரு கையாலே தூக்கி விளையாடுவார்கள். ஏனென்றால் மிருக தசைகளை அதிகமாகக் கொடுத்து மிருகங்களுக்குண்டான வலுவை உடலிலே ஏற்றியிருப்பார்கள்.
 
1.ஆனால் நீங்கள் குடும்பத்துடன் துருவ தியானத்தில் அமர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இல்லம் முழுவதும் படரச் செய்து
3.குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து தெய்வீகக் குடும்பமாக
4.சஞ்சலங்களும் குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து
5.கர்ப்பமுற்ற பெண்ணிற்குக் குங்குமப்பூவும் தேனும் கலகண்டும் ரோஜாவும் கலந்த பாகை குடும்பத்துள் உள்ளோர் அனைவரும் கொடுங்கள்.
 
இது சமயம் கருவில் வளரும் குழந்தை மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.
 
விஞ்ஞான உலகால் வரும் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும் அவன் பெற வேண்டும் என்று எண்ணித் “தேன் கலந்த பாகைக் கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்…”
 
இதைப் போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கி விட்டால் இன்று விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும் உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை நீக்கிடும் பாவ அலைகளைப் போக்கிடும் எத்தகைய நிலைகளையும் மாற்றும் அரும் பெரும் சக்தி கொண்ட ஞானியாக, அந்தக் குழந்தை வளரும்.
 
நாம் ஒருவருடன் அன்புடன் பண்புடன் பழகியிருந்தால் அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா பற்று கொண்ட நமது உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச் செய்கின்றது.
 
இப்படி குடும்பத்தில் அறியாது தீய வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும் பொழுது உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள் உங்களுக்குள் வந்து உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.
 
1.உங்களுக்குச் சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம் கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த இந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே நமது குடும்பத்திலும் உடலிலும் ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.
 
இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால் உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள் ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும் வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச் சொல்லிச் செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். இதனால் பிறக்கும் குழந்தை அருள் ஞானக்  குழந்தையாகப் பிறக்கும்.
 
குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும் உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும் குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும் கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.
 
இதைப் படிக்கும் அனைத்து மக்களும்
1.தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை வென்று
2.பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞானம் பெற்று
4.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் சக்தி பெற்று
5.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞான வாழ்க்கை அமைந்து
6.இவ்வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்


உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
1.யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
2.அந்த நேரத்தில் உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வுகள் வளர்ச்சியாகும்.
 
யாம் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். எது தீமை…? எது நன்மை…? என்பதை அறிந்து கொண்டீர்கள். எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுங்கள்…?
 
தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குங்கள். குறைகள் இருந்தால் அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் ஞானியாக வேண்டும் நல்லவனாக வேண்டும் என்ற உணர்வைச் சொல்லிப் பழகுங்கள்.
 
அவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்டால் அது உங்களுக்குள் வளராதபடி அவர்களுக்கு ஞானத்தை ட்டித் தெளிவாக்குதல் வேண்டும்.
 
ஆகவே தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள்
1.உங்களை யாம் எப்படிக் குரு வழியில் சீர்திருத்தம் செய்கின்றோமோ இதைப் போல
2.மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறி அவர்களைத் தெளிவானவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
3.ஞானிகளைப் போன்று மாற்றும் சக்தி உங்களுக்குள் வந்தால் தீமைகளை மாற்றி அமைத்து
4.நன்மையின் நிலைகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்ய முடியும்.
 
கஷ்டம் என்று மீண்டும் மற்றவர்கள் சொன்னால் நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லையே…” என்று வாதத்திற்கும் போக வேண்டாம் வேதனைக்கும் போக வேண்டாம்.
 
1.எப்படியும் அவர்கள் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்களும் அதைப் பெறுவார்கள்.
3.அவர்கள் அதைப் பெறும் பொழுது அந்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.
 
நான் சொல்லியிருந்தோம் இன்று அவர்கள் அதை உணர்ந்து வந்து விட்டார்கள். அந்தச் சந்தர்ப்பங்கள் கஷ்டம் என்று வரும் பொழுது நல்வழியில் வழி நடத்தும்.
 
ஆக மொத்தம் கடவுள் செய்வார் சாமி செய்வார் சாமியார் செய்வார் என்று மற்வர்களை எண்ணாதபடி உங்களை நீங்கள் நம்புங்கள்.
 
நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ அந்த உணர்வினை உங்கள் உயிர் உருவாக்கும். மற்ற யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள். நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் செயல்படுத்திக் கொடுக்கும்.
 
1.நான் (ஞானகுரு) செய்வேன் என்றால் நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எனக்குள் அந்த நன்மையின் தன்மை உருவாகின்றது.
2.அதே போல் நல்லது பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் உங்கள் உயிர் தான் அதை உருவாக்கிக் கொடுக்கின்றது.
 
வேறு யாரும் உருவாக்குவதில்லை…!

August 5, 2026

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?


உதாரணமாக தாய் ஒருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். இங்கே வீட்டிற்கு வந்து தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும். கொஞ்ச நேரத்தில் குழந்தைவீல்வீல்…” என்று கதறும்.
 
உடனே அந்தத் தாய் யார் கண் பட்டு விட்டதோ…? “சில்சில்…” என்று குழந்தை அழுகின்றது என்பார்.
1.தாய்க்குத் “தன் பார்வை பட்டது தான்…!” என்று தெரியாது.
2.ஏனென்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்த அந்த உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விடுகிறது.
3.அந்த நினைவுடன்… பாசத்தால் குழந்தையைத் தாய் அரவணைக்கிறது.
4.ஆனால் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது…. அதைத் தாங்கக்கூடிய சக்தி குழந்தைக்கு இல்லை.
5.இப்பொழுது குழந்தைக்குச் சீக்காகிவிட்டது என்பார்கள்.
 
அப்படி வேதனையினுடைய நிலைகள் அதிகமானவுடன் மிகக் கஷ்டமாக இருக்கின்றது என்று பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
 
இதைக் கேட்டுக் கொண்டு வந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குத் தாங்காதபடி வயிற்றுப் போக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்தச் சங்கடமான உணர்வையே மேலும் மேலும் நினைத்துப் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள்.
 
இதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.பின் உங்கள் பார்வையால் உங்கள் எண்ணத்தைக் குழந்தை மேல் செலுத்துங்கள்.
2.“இனி உனக்கு வயிற்றால் போகாதுநன்றாகிவிடும்…!” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
3.உங்கள் எண்ணத்தால் பார்வையால் குழந்தைக்கு நன்றாகிவிடும்.
 
இதை நீங்கள் அனுபவத்தில் கொண்டு வாருங்கள்.
 
உங்கள் மனதை வலுப்படுத்துங்கள். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் போக்கக் கூடிய சக்தி உங்களுக்குள் வரும். இதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்க்கலாம்.
 
அடுத்தடுத்து இவ்வாறு நீங்கள் பெறும் அனுபவத்தால் உங்கள் வாக்கினைச் சொல்லும் பொழுது
1.அடுத்தவர்கள் எண்ணங்களில் இது பதிய வேண்டும்.
2.அவர்கள் நோய்நான் போகிறேன்…” என்று ஓட வேண்டும்.
 
நான் இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
1.எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக இனிமேல் விலகிவிடும்
2.எங்களுக்கு நன்றாக இருக்கும்…! என்ற எண்ணங்கள் அங்கே அவர்களுக்குத் தோன்ற வேண்டும்.

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”


குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.
 
விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.
 
அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!
 
நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!
 
1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.
 
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.
 
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டி அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.
 
1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
 
உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன்.  பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.
 
1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
 
அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத்  துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ட்டுகின்றோம்.
 
1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.

August 4, 2026

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?


இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் கருவில் வளரும் குழந்தைக்கு எதைக் கொடுக்கின்றார்கள்…?
 
T.V. அல்லது ஃபோனைப் பார்க்கின்றார்கள். “டமார்டமார்…” என்று பந்து அடிப்பதைப் பார்த்து அந்த உணர்வைத் தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடம் பெருக்குகின்றார்கள். அதே போல் கராத்தே விளையாடுவதைக் கண்டால் அதையும் வேடிக்கைப் பார்ப்பார்கள். அதன் வலிமையைப் பார்ப்பார்கள்.
 
இதனால் என்ன ஆகின்றது…?
 
1.அவன் பிறந்தவுடனே கிரிக்கெட் பார்க்க ஓடிவிடுகின்றான்.
2.அதே போல் கராத்தே போன்று தாக்கிக் கொண்டே விளையாடுவான்.
3.இருப்பவர்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்துவிடுவான்.
 
மனிதர்கள் தங்களிடத்திலும் தங்கள் குழந்தைகளிடத்திலும் வளர்க்க வேண்டியது எது…? நீக்க வேண்டியது எது…? என்பதை, ஞானிகள் தங்களது காவியத் தொகுப்புகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி உள்ளார்கள்.
 
இதை யாரும் சிந்திப்பதில்லை.
 
உதாரணமாக ஒரு கருவுற்றிருக்கும் பெண்மணி ஊனமுற்ற குழந்தையைப் பார்க்குமேயானால் அந்தக் குழந்தையின் உடலிலிருந்து வரக்கூடிய மூச்சலையும் உடலின் அலைகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொள்கின்றது.
 
இந்த உணர்வின் சக்தியை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது “அந்தக் குழந்தைக்கு இப்படியாகி விட்டதே…!” என்று சோர்வும் வேதனையும் அடைகின்றதுசஞ்சலமும் படுகின்றது.
 
அந்த உணர்வின் நிலைகள் வரும் பொழுது அத்தகைய உணர்வைப் பார்வையால் நுகரச் செய்து அந்த எண்ணத்தால் உடல் இயங்கி அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து
1.அதாவது அந்த ஊனமுற்ற குழந்தையின் உடலில் இருந்து வரும் உணர்வின் சத்தைக் கர்ப்பிணிப் பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த உணர்வின் அலைகள் பதிவாகி விடுகின்றது.
 
கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று கதையைச் சொல்வார்கள். நமது கண் ஊனமுற்றிருக்கும் குழந்தையைக் கண்டு இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு வேதனைப்படும் அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து உயிரை இயக்கச் செய்கின்றது.
 
உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வின் அலைகள் இரத்தத்துடன் கலந்து தாயின் இரத்தத்தில் இருக்கக்கூடியதைத் தான் கருவில் இருக்கக்கூடிய குழந்தை உணவாக எடுத்து அதனின் தசைகள் வளர்கின்றது.
 
1.தாயின் கண் அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கின்றது.
2.ஊழ்வினையான அந்த வினைதான் இந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படும் உணர்வை மீண்டும் சுவாசிக்கச் செய்கின்றது.
3.ஏனென்றால் தாயின் கருவிலே அந்த உணர்வுகள் பதிவாகவில்லை என்றால் எடுக்காது.
 
இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை
1.“சாமி என்ன சொல்கிறார்…?” என்று கேட்டு உணர்ந்து கொண்டு இருந்தால் இது பதிவாகும்.
2.சொல்லும் உணர்வுகளும் தெளிவாகக் கேட்கும்.
3.மற்றவர்கள் அருகிலே பேசினாலும் அது செவிப்புலனுக்கு ஏறாது.
 
ஆனால் இங்கே யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டுக்கு அவசரமாகப் போக வேண்டும் எப்பொழுது முடிப்பார்…?” என்று எண்ணினால் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் பதியாதுஎண்ணிய உணர்வுதான் இயக்கும். யாம் சொல்லும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகாது.
 
தே போல்… வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற உணர்வினைப் பதியச் செய்து விட்டால் அது பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டி நல்ல உணர்வுகளைக் கெடுக்கச் செய்துநம்முடைய கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ அதனின் நிலைதான் பதிவாகி அதனையே இயக்கும்….!
 
இதைப் போல அந்தக் கர்ப்பமுற்ற தாய் தான் பார்த்த ஊனமுற்ற உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அது உடலிலே பதிவாக்கும் பொழுது தாய்க்கு ஊழ் வினை.
 
ஊழ் என்பது நமது எலும்புக்குள் மேக்னட் - காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே பதிவு செய்த அனைத்தும் நமது எலும்புக்குள் ஊழ் வினையாக அது ஊழாக இருக்கின்றது.
1.நாம் எப்படி டேப்புகளிலே முலாம் பூசுகின்றோமோ அதைப் போல நமக்குள் உருவான இந்த நிலை
2.நாம் வளர்ச்சி பெறும் வண்ணம் நமது எலும்புக்குள் இந்த ஊண்.
3.நாம் கண்ணால் பார்த்த உணர்வின் தன்மையை அந்த ஊணுக்குள் பதிவு செய்துவிடும்.
 
இவ்வாறு தாய் சந்தித்த (ஊனமுற்ற குழந்தையைப் பார்த்த) சந்தர்ப்பத்தின் உணர்வுகள் தாய்க்கு ஊழ் வினையாகி சுவாசிக்கும் உணர்வுகள் தாயின் இரத்தத்திலே கலந்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.
 
ஆகவே இந்தக் குறையான உணர்வை… அதாவது ஊனமான குழந்தையின் உணர்வுகள் கருவுற்ற தாய்க்குள் பட்டபின் வேதனை என்ற நஞ்சு வரப்படும் பொழுது… அதனால் அந்தக் கருவிலே வளரும் சிசுவிற்குச் சிந்திக்கும் திறன் இழந்து மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கும்.
 
அவ்வாறு அந்த மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே வளர்ச்சியின் தன்மை குறைவாக ஆகி எதனின் உணர்வுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததோ அதே நிலைகள் கொண்டு கருவிலே இருக்கக்கூடிய குழந்தை உடலும் ஊனமாகும்…
 
இதுதான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.
 
நமது கண்ணின் நினவலைகள் அங்கே இருப்பதைக் கவர்ந்து உடலுக்குள் அது செல்லப்படும் பொழுது குழந்தைக்கு அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
 
ஆஅகவே கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அனைவரும் கருவிலிருக்கும் தன் குழந்தையை எண்ணி
1.அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.
 
அந்த ஏக்கத்துடன்துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கருவுக்குள் இருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று கண்ணின் நினைவலைகளைக் கருவுக்குள் செலுத்த வேண்டும்.
 
இவ்வாறு செய்யும் பொழுது, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசிப்பது போல
1.கண்ணால் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவலைகளை
2.கருவிலே பாய்ச்சப்படும் பொழுது அது ஞானக் குழந்தையாக வளருகின்றது.
3.அது வளர வளர நமக்குள் தெளிவான நிலைகள் வளருகின்றதுஅது நம்மைக் காத்திடும் நிலையாக வருகின்றது.
4.அந்தக் குழந்தை அகஸ்தியனைப் போன்ற ஞானக் குழந்தையாக உருவாகும்.
5.இந்த உலகைக் காத்திடும் உத்தம ஞானக் குழந்தையாக வளரும்.