ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2012

ஞானிகள் கோவிலை அமைத்ததின் காரணம்

1. விநாயக சதுர்த்தி 
நமக்குள் கெட்டது சேராது, கெட்டதைத் தடுக்கச் செய்வதுதான் தியானம். ஆக, நாம் இருக்கும் இந்தத் தியானம் சிறிது நேரம்தான். இந்த தியானம், ஆலயங்களில் விநாயகன் என்ற நிலைகளில் காட்டப்படுகின்றது.

விநாயகரை எடுத்துக் கொண்டால், புல்லைப் போடுகின்றோம். அடுத்து, இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கடை செய்து சாப்பிடுகின்றோம்.

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு, நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள், சதுர்த்தி.
Inline image 1
விநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

வருடத்திற்கு ஒரு தரம், களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும், மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி,
விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி, 
கெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்
இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது? கொழுக்கட்டை அவருக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால், எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான், புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

கல்யாணம் ஆகவேண்டும் என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும், அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால், கொடுப்பார் என்பார்கள். அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? என்ற நிலையையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஸ்தலவிருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு, அரசும், வேம்பும், விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.
இந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம்.
கஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது,
காது கொடுத்துக் கேட்கின்றோம்.
அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன், என்ன செய்கின்றது? மாரி, அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து, சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

அங்கே ஸ்தல விருட்சம் என்ன? கசப்பு.
மாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது? அக்கினிச் சட்டி.
அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?
நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்?
அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.  

ஆக, அந்த மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தலவிருட்சம் கசப்பு.நெருப்பிலே போட்டு கசப்பை நீக்கு” என்று பொருள்.

2. அரச மரத்தையும், வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்?
அதே சமயத்தில், இந்த விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள்? அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள். கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து,
அந்த அரசின் நிலைகளில்
நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு
என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

ஆகவே, நாம் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்? உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன், நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது, நாம் எதை எண்ண வேண்டும்?

நாம் புல்லைத் தின்றோம், இலை செடிகளைத் தின்றோம், இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து, நமக்கு வேண்டியதைப் படைத்து, இந்தச் சரீரத்தைப் பெற்றோம்.

ஆக, இந்த உண்மையை உணர்த்திய, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.

கசப்பின் நிலைகளை, நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ, அதைப் போல மெய்ஞானிகள், இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி,
இந்தக் கசப்பைச் சிறுக்கச் செய்து, “அரசு”
அந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ,
அதை ஆட்சி புரிந்த நிலைகளில்,
தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”
நமக்குள் ஆட்சி புரியும் என்றுதான்
இந்த ஸ்தலவிருட்சத்தை வைத்தார்கள்.

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்? என்பதை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.

நல்லதை எண்ணினோம். அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா. யார் துடைக்கிறார்கள்? நினைக்கவில்லையே. கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக, ஞானிகள் அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து, சாஸ்திரங்களை எழுதி வைத்து, நீ இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளடா என்றான். அரசனையும் ஏமாற்றினான். நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி. நாம் அதை விட்டுவிட்டோம்.

அதை விட்டுவிட்டு, “உனக்கு அபிஷேகம் செய்தேன்” என்று அழுது புலம்பினால், நமக்குக் கொடுப்பான் என்று அழுதால், நம் உயிரான ஈசன் நமக்குள் அதைத்தான் படைப்பான்.
3. தீபாராதனை 
Inline image 4
கோவிலுக்குள் போனவுடன், தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது. நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம், அதைப் பார்க்கப்படும் பொழுது, தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வராஎன்று, வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே அந்த மலர்களைப் போட்டிருப்பார்கள்
எனக்குள் நல்ல குணத்தை தெய்வமாக உருவாக்கி,
இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெறவேண்டும்
என்ற எண்ணத்திற்காக, மலரைப் போட்டிருக்கிறார்கள்.
Inline image 10
மலரின் மணம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஒருவன் தவறிக் கீழே விழுகின்றான். கண்ணுற்றுப் பார்த்தவுடன், “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்படுகிறீர்கள். அவ்வாறு, அடிபட்டு, வேதனையான உணர்வுகள் துடித்தபின், அந்த வேதனையான உணர்வுகளின் தன்மைகள் உங்கள் உடலில் சேர்ந்தால், எந்த மணம் வரும்?

அவனைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குச் சென்றால், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள், உங்கள் முகமே மாறி இருக்கின்றது” என்று கேட்பார்கள். ஆக, பார்க்கும் பொழுது என்ன ஆகிறது? நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம், அவர்களை நுகரச் செய்து, கேட்க வைக்கின்றது.

அதைப் போல, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளில்
இந்தத் துன்பத்தைத் துடைத்துவிட்டு,
அந்த நல்ல குணங்களுக்கு, இந்த மலரை அணியுங்கள்.
Inline image 7
நல்ல குணத்தைக் கொண்டுதான் பையனைக் காப்பாற்றினோம். துடித்தான், அவனைக் காப்பாற்றி விட்டோம். அவன் அடிபட்டான். காப்பாற்றிவிட்டோம். அவன் எண்ணத்தை நுகர்ந்துதான் காப்பாற்றினோம். அவனின் வேதனையான உணர்வுகள் எனக்குள் இருந்தது.

விநாயகரைப் பார்த்துவிட்டு, கோவிலுக்குள் போனவுடன், அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். அந்த மலரின் மணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று, அந்த நல்ல குணத்திற்கு முலாம் பூச வேண்டும். முலாம் பூசியபின், அந்த உடலில் நல்ல மணம் வருகிறது.

அங்கே கனியை வைத்திருக்கும் பொழுது, கனியைப் போன்று, சுவையான சொல்லும், செயலும், நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று, நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும். நாம் கொடுப்பது அங்குதான் பெறுகின்றது. அதனால் அவனிடம் வேண்டி, அதை நாம் எடுக்க வேண்டும்.
Inline image 8
ஆக. இந்த உணர்வைத் தூண்டும் பொழுது, உயிரின் இயக்கம் அங்கு அதிகமாகின்றது. ஆக, அதைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி, இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் செலுத்தி, இந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும், நான் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு, இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறவேண்டும், என்று எண்ண  வேண்டும்.

எங்கள் வாடிக்கையாளர் அனைவரும், அவர்கள் குடும்பத்தில், நலமும் வளமும் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியை எங்கள் குழந்தைகள் பெறவேண்டும். எங்கள் குழந்தைகள், ஞானத்தின் வழியில் தொடர வேண்டும். அவர்கள் பேச்சும், மூச்சும், உலக மக்களுக்கு நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை, நம் உயிரிடம் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு அர்ச்சனை செய்தால்தான்,
இந்த உணர்வின் சக்தியை இந்த ஈசன் நமக்குள் எடுத்து,
நமக்குள் விளைய வைத்து, மணமாகி,
நம்மைப் பார்க்கும் பொழுது,
நம் சொல்லின் தன்மை அங்கே விளையும்.

“நம் உடல் ஒரு கோவில்” என்கிற நிலைகளில், இதைப் பரிசுத்தப்படுவத்துவதற்கு, எங்கள் வாடிக்கையாளர் நலமாக இருக்க வேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோரெல்லாம். நலமாக இருக்க வேண்டும். இங்கு வருவோரெல்லாம், மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில், இருள் நீங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும். எமது அருளாசிகள்.
Inline image 9

4. ஞானிகள் அமைத்த ஆலயத்தின் சிறப்பு  
இன்றைய வாழ்க்கையில், ஒருவர் கஷ்டமாக இருப்பார், ஒருவர் நஷ்டமாக இருப்பார், வேதனைப்பட்டு இருப்பார், துன்பப்பட்டு இருப்பார், துயரப்பட்டு இருப்பார், எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும், இங்கே கோவிலுக்குள் போனவுடன், இந்த எண்ணம், அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து, ஒருங்கிணைக்கும் பொழுது, எப்படி குழம்பு வைக்கும் பொழுது. எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, சுவையாக இருக்கின்றதோ, இதைப் போல,
நாம் துன்பத்தை நீக்கி,
இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று,
எல்லோரும் சொல்லும் நிலைகளுக்கு
இங்கே ஒலிபரப்பும் பொழுது,
அங்கே கோவிலுக்குள் (கல்லுக்குள்) எதிரொலிக்கும்.
மேக்னட், அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து, தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு, அந்த உணர்வின் நிலைகளில், நெடு நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த மலை.

ஆனால், அந்தக் கல்லுக்குள் மறைந்திருக்கக்கூடிய காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும். மனிதனுக்குள் நாம் எடுத்துக் கொண்ட ஒலியின் அலைகள், அங்கே பதிவாகி இருக்கும்.

ஆக, நாம் இடும் இந்த மெய்ஞானிகளின் அலைகள், அங்கே கோவிலுக்குள் படரப்பட்டு, நாம் எண்ணிய நிலைகளில் அங்கே பெறச் செய்வதற்கு, அந்த மெய்ஞானி சாதாரண மக்களும் பெறுவதற்காக வேண்டி, அங்கே ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

இதை நான் சொல்லவில்லை. நமது குருநாதர் சொன்னது. நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தலவிருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம். குருநாதர், எம்மிடம் கோவிலுக்குப் போனால், இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.

நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது, தெய்வமாகின்றது.
எண்ணிய எண்ணம் இறையாகின்றது. இறைவானாகின்றது.
அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாகின்றது.
ஆக, அந்த செயலின் தன்மையாக நான் ஆகின்றேன்,
என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.
அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.
5. தேர் இழுப்பதின் மகிமை 
கோவிலில் பெரிய தேரைக் கட்டிவைத்து, சிறிய சிலையை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்குப் போகும் நாமெல்லாம் இதைப் போல எண்ணினால், எல்லாமே வலுவாகி, வலுவான நிலைகள் பெறுகின்றது.

ஆகையினாலே, அந்த நிலைகளில் கோவிலில் பல ஆயிரம் பேரை வைத்து, தேரை இழுக்கச் செய்கின்றார்கள். அந்தத் தேரில் சிறிய சிலையை வைக்கிறார்கள்.
Inline image 5
அந்தத் தெய்வ குணத்தை, அத்தனை பேரும் ஒருங்கிணைந்து எடுத்துச் செயல்படுத்தினால், இந்த எண்ணத்திற்கு வலு உண்டு.

எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் வரப்படும் பொழுதுதான்,
இயக்க நிலைகள் வரும் என்று
கோவிலில் தேரை வைத்தார்கள்.
தேருடைய மகிமையை நாம் அறியாமல் இருக்கிறோம்.

ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தப்படுத்துவதற்கு இந்த நிலையைச் செய்தார்கள் ஒவ்வொருவரும் நம் உடலை ஆலயமாக்கி, ஒவ்வொரு நொடியிலும் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காக ஆலயங்களை அமைத்தார்கள், ஞானிகள்.

ஆக, கேட்டுணர்ந்த நீங்கள் இனியாவது கோவிலுக்குப் போகும் பொழுது, விநாயகரை எப்படிக் கும்பிட வேண்டும்? கோவிலுக்குப் போனால், அந்தத் தெய்வ சக்தியை எப்படிப் பெறவேண்டும்? இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம், எப்படி வரவேண்டும் என்ற நிலைகளில், நீங்கள் ஒரு வழிகாட்டியாக வாருங்கள்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று, நீங்கள் எண்ணுங்கள். அந்த தெய்வகுணம் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எமது அருளாசிகள்.

November 17, 2012

Cell phoneல் பார்க்க (JPEG) -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)


NOTE:
Option 1. (with net conn. in cell phone)
Pl. click this link. You will find WIN RAR formatted file.
Pl open that file. Then extract it. Pl give a destination for extraction.
A file folder with the book heading will come.
Open that folder and start viewing as Slide show in cell phone

Option 2. (with net conn. in computer)
Pl. click this link. You will find WIN RAR formatted file.
Pl open that file. Then extract it. Pl give a destination for extraction.
A file folder with the book heading will come.
Then  transfer to memory card or cell phone memory.
View as slide show in cell phone.


1. அகத்தியம் -- புத்தகம் 
(இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் எப்படி உருவாகியது, இயங்குகின்றது என்பது பற்றிய விளக்கம்)

2. ஞானகாண்டம் -- புத்தகம் 
(தியானம் ஏன்எப்படிஎதற்காகச்  செய்ய வேண்டும் என்பது பற்றிய விளக்கம்)

3. சப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும் -- புத்தகம் 
(முன்னோர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம்)

4. உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள் 
(நம் உயிரின் பேராற்றல் பற்றிய விளக்கம்)
https://www.box.com/s/gcvdqpvu70ir49xmiqdr

5. ஞானகுரு வெளிப்படுத்திய பேருண்மைகள் -- புத்தகம் 
(நம் சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகளின் விளக்கங்கள் )
https://www.box.com/s/r2w1p6ekx616mqeg5moe

6. துன்பத்தை நீக்கும் அருள் ஞான முத்துக்கள்
(நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை, குரு காட்டும் வழியில் எளிதாக நீக்கும் வழிமுறைகள்) 
https://www.box.com/s/1vfvfcjicfkvp6c5qtzq
7. ஞானகுரு -- புத்தகம் 
(ஈஸ்வராய குருதேவர் -- ஞானகுருவை காட்டிற்குள் அழைத்துச் சென்று காட்டிய அனுபவங்கள்)
https://www.box.com/s/51mjfettzpb8ummzsdvg

8. சற்குருவின் அருள்ஞானம் 
https://www.box.com/s/2lx87jkxz2lfyj5i6mwe 


9. தன்னைத்தான் அறிதல்
https://www.box.com/s/f2jjh4r6ey0wmzex3tic 


10. தியான பயிற்சியும் பலன்களும்
https://www.box.com/s/snkjg1q72d8ujned015t 


11. ஞானகுருவின் அருளுரைகள்

12. அகஸ்தியன் வழியில்  விண்  செல்லும் ஆற்றல் 

13. குருவின்றி ஒரு அணுவும் அசையாது

14. துருவ தியானம்

15. தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள் ஞானம்

16. நாராயணனின் அவதாரம் பத்து

17. பிருகு மகரிஷி

18. பேரண்டமும் பெருவீடும்

19. பேரின்பத்தை தரும் பேரொளி
https://www.box.com/s/v5mkyhi3sib4dkne7z1b

20. மகா சிவன் இராத்திரி
https://www.box.com/s/60xzh4tbr1mdtc3h5ahs

21. தியானம் - படங்களுடன்

22. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 1

23. தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஞானகுருவின் வேண்டுகோள்

24. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவுக்குள் கொண்டு வரும் முறை - MEDITATING METHOD
                                https://app.box.com/s/2tlhzcp9zxuwgltt859v

25. Meditating Method and it's Sequences (ENGLISH)

26. ஞானகுருவின் மருத்துவக் குறிப்புகள்

27. கணவன் மனைவி மகிழ்ந்து வாழ ஞானகுரு காட்டும் வழி முறை

குரு பூஜை விழா

1. குரு பூஜை என்றால் என்ன? -- விளக்கம் 
நமது குருநாதர், விண் சென்ற நாள்தான் “வைகுண்ட ஏகாதசி”. 
அவர் உடலை விட்டுச் சென்று,
எப்படி ஒளி சரீரமாக மாற்றிச் சென்றாரோ, அந்த நிலையை
நாம் அனைவரும் இந்த வாழ்க்கையிலேயே நிச்சயம் பெற முடியும்.

இதற்கென்று, நாம் யாரும் கடும் தவம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் எனக்குச் சொன்ன சுருக்கமான நிலை “ஆத்மசுத்தி”.

நாம் எந்த வேலை செய்தாலும், கையில் படக்கூடிய அழுக்கை, நாம் துடைக்கின்றோம். இதைப்போல, மனித வாழ்க்கையில் துயரமான எண்ணங்களும், வேதனைப்படும் எண்ணங்களும் அடிக்கடி நமக்குள் தோன்றும்.

இந்த நிலைகளை, “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தைக் கொண்டு, அன்றன்று துடைத்து, ஒவ்வொரு நொடிக்கும் அதைத் துடைத்துக் கொண்டு, நீ இந்த மெய் ஒளியைப் பெற முடியும் என்று, நமது குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

ஆக, அந்த அனுபவபூர்வமான நிலையை, உனக்குள் ஏற்படும் சந்தர்ப்ப நிகழ்ச்சியை நீ கண்டுணர்ந்து, நான் சொன்ன இந்த ஆத்ம சுத்தியைக் கொண்டு, தீமைகளைத் துடைத்துக் கொண்டு, அந்த உணர்வை எப்படி ஒளியாக மாற்ற வேண்டும் என்று, அந்தப் பேருண்மையை உணர்த்தினார், நமது குருநாதர்.

அதன்பின், அவர் உடலைவிட்டுச் சென்றபின், அவர் உபதேசித்த உணர்வுகளை அனுபவ ரீதியாக யாம் பெற்றோம். அதைப் போன்றே, நீங்களும் சாதாரண ரீதியில் பெற முடியும் என்ற நிலைகளில்தான், உங்களுக்கும் அதை இப்பொழுது உபதேசிக்கின்றோம்.
                         
அவர் எப்படி ஒளி சரீரம் பெற்றாரோ, அதைப் போல நாமும் ஒளி சரீரம் பெற வேண்டும், முடியும் என்ற அந்த நிலையைக் கொண்டுதான், நம் குருநாதர் சென்ற வழியில், நாம் அனைவரும் இதே சரீரத்தை, நிலையான சரீரத்தை, சரீரம் ஒளியாக மாறும் நிலையை, நாம் நிச்சயம் அடைய முடியும்.
ஆகவே தான், குருபூஜை” என்று வைத்து,
அவர் எப்படி ஒளியின் சரீரமாக மாற்றினாரோ,
அதே குருத்தன்மையை நாம் எடுக்கும்போது,
நாமும் அந்த ஒளி சரீரம் நிச்சயம் பெற முடியும்.
இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி, நாமும் நிச்சயம் அதைப் பெற முடியும்.
2. உயிரை எப்படி நேசிக்க வேண்டும்?
“ஓம்” என்பது பிரணவம் என்று, நமது சாஸ்திர விதிகள் கூறுகின்றன. நமது உயிர் “ஓ” என்ற நிலைகளில் நமக்குள் பிரணவமாகி, ஜீவனாக இயங்குகின்றது.

“ம்” என்கிற போது, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் உடலாக அமைகின்றது. அதனால் “ஓம் ஈஸ்வரா”, நமக்குள் இயக்க சக்தியாக நம் உயிர் இருக்கின்றது, என்ற நிலையை குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.

ஆகவே, நாம் “ஓம் ஈஸ்வரா” என்று
வெறும் வாயில் சொல்வதற்குப் பதில்,
நாம் எண்ண வேண்டியது நம் உயிரை,
நமக்குள் ஜீவனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், இச்சக்தியை (“உயிரை”) நீ எப்படி நேசிக்க வேண்டும்? என்று, நமது குருநாதர் முதல் நிலையிலே எனக்கு உணர்த்தினார்.

நமக்குள் இருந்து இயக்கும் உயிர், நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையைத் தெரிவதற்கு, நாம் மனிதனானபின் இந்த உயிரின் நிலைகளை, நாம் அறிந்து கொள்ளக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணும்போது, நம் உயிரை, நினைவில் கொண்டு தான், இந்த சொல்லை நாம் சொல்ல வேண்டும். நம் உயிரை நேசிக்கும் நிலையாக, அவர் சொன்ன முறைப்படித்தான், உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
3. குருநாதரின் ஆத்மா விண்ணுலகம் செல்வதை உற்றுப் பார்க்கச் சொன்னார் 
உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவ வேண்டும் என்பதற்குத்தான், இந்த உபதேசங்களை யாம் கொடுப்பது. ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கை, இந்த மனித உடலினுடைய நிலைகள் இந்த பூமியினுடைய ஆயுளாகி, அது குறுகிய காலங்களாக இப்பொழுது வருகின்றது.

மனிதன் வாழ்க்கைக் காலம் எவ்வளவோ, அதைப் போன்று, இந்த பூமியினுடைய காலங்கள், அது மாறுபடும் நிலைகளும் மாறியே தான் ஆகவேண்டும்.

ஆனால், இந்த பூமியில் இருக்கப்படும் பொழுது, இந்த உடல் மாறாத நிலைகள் கொண்டு,
உயிர் ஒளியாக எப்படி மாறியதோ,
இதைப் போல உணர்வுகள் ஒளியாக மாறி,
இந்த உடலை நாம் ஒளிச் சரீரமாக மாற்றி,
அந்த ஞானிகள் சென்ற நிலையில்,
என்றும் நிலையான சரீரமாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அந்த நிலைதான், நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று, இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, உயிருடன் ஒன்றி, அவருடைய உணர்வுகள் எப்படி இந்த ஆத்மாவாகச் சுழல்கிறது என்ற நிலையை, எமக்கு உணர்த்தினார்.

குருநாதரின் ஆத்மா விண்ணுலகம் செல்லப் போகும் பொழுது,
அதை உற்றுப் பார்த்து, அதைக் கவர்ந்து,
அவர் எங்கே சென்றடைகின்றார்?
என்ற அதனுடைய நிலைகளை,
நாமெல்லாம் அடையச் செய்யும் நாள்தான்
வைகுண்ட ஏகாதசி நன்னாள்.
அது குருவாக உங்களுக்குள்ளும் கிடைக்க வேண்டும், அவர் காட்டிய அருள் நெறிகள் அனைத்தும், உங்களுக்குள் வித்தாக ஊன்ற வேண்டும். நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம், அந்த மகாஞானியுடைய அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்க வேண்டும். உங்களையறியாமல் இந்த வாழ்க்கையில் வந்த, இருள்கள் நீங்கவேண்டும். இந்த இச்சையின் ஆசை எனக்குள் ஆகின்றது.

இச்சா சக்தி, அதனுடைய நிலைகள் எனக்குள் கிரியையாக மாறி, நீங்கள் பெறவேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது,
உங்களை எண்ணி, யாம் ஏங்குவதனால்,
அந்த ஞானியின் அருள் சக்தி எனக்குள் இச்சை,
கிரியையாக இயங்கி, அதனின் வழிகளில்,
இந்த சொல்லின் தன்மை ஞானமாக வெளிப்படுகின்றது.

அதை, இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, நீங்கள் இயக்கும் இந்த செவிப்புலனில் எந்த அளவிற்கு, கூர்மையான எண்னங்களைச் செலுத்துகின்றீர்களோ, இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் அது பதிவாகி, இந்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவிக்கும் பொழுது, இது கூர்ம அவதாரம்.
4. குரு காட்டிய நிலைகளை குருவாக ஆக்க வேண்டும் 
ஆக, நாம் உயிருடன் ஒன்றிய அந்த ஞானிகள் சென்ற, கல்கியின் அவதாரத்தை நாம் நிச்சயம் அடைய முடியும், என்ற இந்த நிலையைத் தான், இந்த ஆசையில்தான் யாம் இந்த குரு பூஜை அன்று, நம் குருநாதர் காட்டிய நிலைகளை, இந்த சொல்லே உங்களுக்குள் நீங்கள் எண்ணமாக எடுக்கும் பொழுது, அது குருவாக அமைகின்றது.

இப்பொழுது, திட்டியவர்களை எண்ணும் பொழுது, அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவானபின், அவர்களை எண்ணினால், அந்தக் குணம் நமக்குள் குருவாகி, அவருடன் சண்டையிடச் செய்யும் நிலையாக, குருவாக அது இயங்கும்.

ஒருவர் வேதனைப்பட்டுச் சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால், அந்த வேதனையான உணர்வுகளை மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று, அடிக்கடி வேதனைப்பட்டு, அந்த குருவின் வழி நோயை உருவாக்கும். நம்மை அந்த வழியிலே அழைத்துச் செல்லும்.

குரு பூஜை நடைபெறும் நாள், அவர் ஒளியாகப் பெற்ற நாள். உங்கள் உணர்வின் தன்மைகள் ஒளியாகப் பெறவேண்டுமென்ற இந்த ஆசையில்தான், இந்த இச்சையில்தான், இது சேர்க்கப்படும் பொழுது,
நீங்கள் எண்ணும் எண்ணங்கள் குருவாக நின்று,
உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கி
ஒளியின் தன்மை பெறச் செய்ய முடியும்.
இந்த ஆசையில், யாம் குரு பூஜை விழாவாக இதை ஆரம்பித்து, அவருடைய நிலைகளை, மீண்டும் மீண்டும் இந்தக் குரு பூஜையினுடைய தன்மையை, அந்த மெய்ஞானியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் குருவாக நின்று, நீங்கள் எண்ணும் இந்தக் கூர்மையான உணர்வுகளை எடுத்து, சுவாசித்து, இந்த உடலின் தன்மையை, மெய்ஞானிகள் சென்ற நிலைகளில் அந்த உணர்வின் எண்ணங்களை ஒளியின் சரீரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. எனது ஆசியும் அதுவே தான்.

அந்த ஆசையில், நீங்கள் பெறவேண்டும் என்று யாம் எண்ணும் பொழுது, அந்த ஆசை எம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.

அதை நீங்களும் எடுக்கப்படும் பொழுது, இந்த உணர்வின் தன்மை குருவாக நின்று, உங்களையும் அங்கே அழைத்துச் செல்லும்.
5. வைகுண்ட ஏகாதசி - குருநாதர் உடலைவிட்டு ஒளிச் சரீரம் பெற்ற நாள்.
ஒரு மாமரத்தை எடுத்துக் கொண்டால், பிஞ்சாக இருக்கும் பொழுது, துவர்க்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. ஆனால், கனியாகும் பொழுது இனிக்கின்றது. கனியானபின், அதனின் சத்து அனைத்தும் வடித்து, அதன் வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் தன்மை,
நாம் பிஞ்சான தாவர இனங்கள் போல அந்தச் சத்தின் தன்மை,
இன்றைக்குப் பல உயிரினங்களாகத் தோன்றி,
பிஞ்சாகும் பொழுது, பரிணாம வளர்ச்சிகள் கொண்டு மிருக நிலைகளும் மற்ற நிலைகளும் அடைகின்றோம். நாம் அதாவது காயாகும் பொழுது, மனிதனாகி விடுகின்றோம்.

இப்பொழுது நாம் இந்த மனிதனானபின், இந்த உணர்வுகள் அனைத்தும், உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ, இதைப் போல உணர்வின் தன்மை இரண்டறக் கலக்கும் பொழுது, சுவை மிக்க இனிப்பாக மாறுகின்றது. ஆக இப்படி மாறும் நிலைகளில்தான், நம் உயிர் முழுமை பெறும் தன்மை பெறுகின்றது.

சூரியன் எப்படி அங்கு பிரகாசிக்கின்றதோ, இதைப் போல உணர்வின் சத்து கொண்டு, உணர்வுகள் உயிருடன் ஒன்றி, ஒளியாக வரும் பொழுது, இது அழியாச் சரீரமாக, என்றென்றும் நிலைத்த சரீரமாக அது நிலைத்திருக்கின்றது.

சாஸ்திரங்களில் எவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு. ஆனால், இந்த சாஸ்திரங்களை மாற்றியமைத்து, அந்த உண்மையினுடைய நிலைகளை அறிய முடியாத தன்மையாக, ஆக்கிவிட்டார்கள்.

வைகுண்ட ஏகாதசி. என்கிற பொழுது, இந்த உணர்வின் தன்மைகளை, நமக்குள் நினைவுக்குக் கொண்டுவந்து, இந்த உடலைவிட்டு இந்த ஆத்மா ஒளிச் சரீரமாக பெறப்படப் போகும் பொழுது, அந்த உணர்வின் உண்மையினுடைய நிலைகளை, அங்கேயிருந்து சூட்சம சரீரம் பெற்றபின், இந்த ஓம் என்ற பிரணவத்தின் தத்துவமும், இந்த உணர்வும் அனைத்தும் ஒளியாக மாறிய நாள்.

வைகுண்ட ஏகாதசி அன்றுதான், நம் குருநாதர் உடலைவிட்டு ஒளிச் சரீரம் பெற்ற நாள். அந்த ஒளிச் சரீரம் பெற்ற இந்த நிலையைத்தான், இன்று உங்களுக்குள்ளும் அவர் காட்டிய அந்த உணர்வுகள், உங்களுடைய எண்ணங்கள் கூர்மையாக்கப்படும் பொழுது, இந்த உணர்வின் சக்தி கூர்ம அவதாரமாக நீங்கள் எடுத்து, அந்த உயிர்தான், அந்த ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.
6. கல்கி - பத்தாவது நிலை 
ஆகவேதான், நாம் ஓம் ஈஸ்வரா என்கிற பொழுது, நமக்குள் ஜீவனாக இருந்து, எனக்குள் இயக்கும் உயிரைத்தான் “ஈஸ்வரா” என்று இங்கு சொல்கிறோம். ஆகவே, இந்த ஏழாவது தன்மையான இந்த நிலைக்கு, அப்புறம் எட்டாவது நிலை.

எட்டாவது நிலை என்கிற பொழுது, நமக்குள் எடுத்துக் கொண்ட
எந்த ரிஷியின் உணர்வின் சக்தியை நமக்குள் எடுத்தோமோ,
அவை “அஷ்டதிக்கு பாலகர்கள்”.

நாம் ஒருவனுடைய நிலைகள், ஏழாவது அறிவின் தன்மை கொண்டு, கெட்டதை நீக்கி, மெய் ஒளியின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் பொழுது, எட்டாவது நிலை அடைகின்றோம்.

ஆக, எத்திசையிலிருந்தும், எத்தகைய நிலைகள் இருந்தாலும், அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டுத்திக்கிலிருந்தும், ஒரு கோவிலில் ஒரு தெய்வத்தை, அந்த பாலகர்கள்தான் அங்கே காக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள்.

ஆகவே, நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்தும் வரக்கூடிய அந்த நிலையை நீக்கித்தான், கெட்டதை நீக்கி, தன் உணர்வின் சத்தை அது காத்துக் கொள்கின்றது.

ஏனென்றால், அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அந்த நிலையை மாற்றும் பொழுது, எப்படி தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின், அதில் உள்ள செம்பும், பித்தளையும். நீக்குகின்றதோ, இதைப் போல, நாம் அடிக்கடி அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது,
நம் உணர்வின் மணம் தீயதை நாடாது,
தனக்குள் அந்த ஒளியின் சரீரமாக, காத்தருளும் சக்தி பெறுகின்றது.

ஆகவே, இதிலிருந்து எட்டாவது நிலையை அடையப்படும் பொழுது, நாம் ஒன்பதாவது நிலை. நாம் உயிருடைய நிலையில் ஒன்றி, இந்த நவமி என்ற நிலையை, நாம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும், சொல்லின் தன்மைகள் கொண்டு, ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இந்த ஒன்பதாவது நிலை, நமக்குள் எட்டின் நிலையில் தீயதை நீக்கி, இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, ஒன்பதாம் நிலையை அடையப்படும் பொழுது, இந்த உடலைவிட்டு மீண்டபின், பத்தாவது நிலை. அதுதான் கல்கி அவதாரம் என்பது.

இப்பொழுது, நம் உடலிலிருந்து எட்டுத்திக்கிலும் காப்பது போல,
நாம் இந்த உடலைவிட்டு, உயிராத்மா வெளியே போனபின், கல்கி.
ஆக இன்னொரு உடல், (நம்மை) அந்த உயிரை,  நாம் இழுத்திடாத வண்ணம் தடுத்திடும் நிலைதான் பத்து,

அதாவது, பத்தாவது நிலை என்ற இந்த நிலைகளைக் காட்டி, இதிலிருந்து நீ விடுபடும் நிலையே தசாவதாரம், ஆக, இந்த உயிர் பத்தாவது அவதாரமாக, ஒளியின் தன்மை அடைவதுதான் பத்தாவது அவதாரம்.
 

November 14, 2012

Cell phoneல் பார்க்க (Picasa) -- சாமிகள் உபதேசம் புத்தகம் - Picasa Photo Album



Please click the following link and easily view and read saamigal upathaesam in MOBILE PHONE.

Option 1 
After clicking the link, picasa photo album will come. If you are viewing in Cmputer system, please download all the images. Make it as a folder. Save it in your cell phone as phone memory or memory card. Read as slide show.

Option 2  
If you are having mobile internet, you can directly view as picasa photo album and read as slide show.

கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ தொடர்பு கொண்டு, சாமிகள்  உபதேசத்தை செல் போனில் எளிதாகப் படிக்கலாம்.

1. அகத்தியம் -- புத்தகம் 
(இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் எப்படி உருவாகியது, இயங்குகின்றது என்பது பற்றிய விளக்கம்)

2. ஞானகாண்டம் -- புத்தகம் 
(தியானம் ஏன்எப்படி, எதற்காகச்  செய்ய வேண்டும் என்பது பற்றிய விளக்கம்)



3. சப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும் -- புத்தகம் 
(முன்னோர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம்)



4. உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள் 
(நம் உயிரின் பேராற்றல் பற்றிய விளக்கம்)
https://picasaweb.google.com/108157395192262525763/MXEwHL


5. ஞானகுரு வெளிப்படுத்திய பேருண்மைகள் -- புத்தகம் 
https://picasaweb.google.com/108157395192262525763/xaLCcB


6. துன்பத்தை நீக்கும் அருள் ஞான முத்துக்கள்
8. ஞானகுருவின் அருளுரைகள்

9. தன்னைத் தான் அறிதல்
https://picasaweb.google.com/108157395192262525763/oKMvQE


10. தியான பயிற்சியும் பலன்களும்
https://picasaweb.google.com/108157395192262525763/RoLCGF


11. அகஸ்தியன் வழியில் விண் செல்லும் ஆற்றல்



12. துருவ தியானம்

https://picasaweb.google.com/108157395192262525763/NvXvVB


13. குருவின்றி ஒரு அணுவும் அசையாது


14. தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள் ஞானம்