
வெப்பம் காந்தம் விஷம் - மூன்று சக்தி
சக்தி வாய்ந்த விஷம் கொண்ட ஆவியின் நிலைகள் தான் ஆதியில் இருந்தது. பேரண்டத்தில்
இன்று இருக்கக்கூடிய கோள்களோ சூரியன்களோ எதுவுமே இல்லாத சூனியமாக இருக்கும் பொழுது
விஷம் கொண்ட நிலைகள் பேரண்டத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் அதிலே முதன்மை பெற்றது
தான் விஷம்.
அதைத்தான் ஆதிசக்தி
என்று காரணப் பெயரைக்
கொடுக்கின்றார்கள். மகரிஷிகள்.
விஷமான சக்தி விஷமற்றதைத் தாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தாக்குதல் தாங்காது
வெப்பம் ஆகின்றது. இந்த வெப்பத்தின் நிலைகள் கொண்டு சுக்கு நூறாக ஆவியின்
தன்மை அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது.
அவ்வாறு ஓடும் நிலைகளில் உருப் பெற்றது தான் காந்தம். முதலிலே
நெருப்பும் வெப்பத்தின் தணல் கூடும் பொழுது ஈர்க்கும் சக்தி அடைகிறது.
இவ்வாறு அடைந்ததைத் தான்
முதலிலே விஷம் ஆதிசக்தி என்றும் அதில் வெப்பமாக உருவாகும் நிலையை
ஆதிபராசக்தி என்றும் அதில் ஈர்க்கும் காந்தம் தனக்குள் இழுத்து வளரும் தன்மையே ஆதிலட்சுமி என்று காரணப் பெயரை
வைக்கின்றார்கள்.
இவ்வாறு உருப்பெற்ற இந்த மூன்று நிலையும்… அதாவது வெப்பம்
காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்த்து ஒரு அணுவாக மாறுகின்றது.
அந்த அணுவின் தன்மை அணுக்களாகப் பிரபஞ்சத்திற்குள்
இயக்கச் சக்தியாக அது ஓடும் நிலைகளில் மற்ற எப்பொருளை… எந்த ஆவியின் சக்தியை இது கவர்கின்றதோ அந்த அணு சேர்த்துக் கொண்டால் அதை மணம்
என்றும் ஞானம் என்றும் பெயரை வைக்கின்றார்கள்.
காந்தம் தனக்குள் இழுத்து மோதும்
பொழுது அது வெப்பமாகி அந்த உணர்வினை இரண்டறத் தனக்குள் அணுவின் தன்மையாக அடைந்து விடுகிறது.
அவ்வாறு அணுவின் தன்மை அடையப்
படும்போது மனம் ஞானம் அதனுடன் சேர்த்து இயக்கத்தின்
தன்மை
வரப்படும் பொழுதுதான் அதைக் காயத்ரி என்று பெயரை வைக்கின்றார்கள்.
இந்த மூன்று நிலைகள் எப்பொருளைத் தனக்குள்
கலக்கின்றதோ அதைக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதச் செய்யும் பொழுது அதில் இருக்கக்கூடிய
விஷம் வெப்பத்தை உருவாக்கி வெப்பத்தின் தணலுக்கு ஆற்றலை ஊட்டித் தனக்குள் எடுத்துக் கொண்ட சத்தினை இரண்டறக் கலந்து அதன் ஞானமாக அந்த அணுவின் தன்மை இயக்கத் தொடங்கி விடுகிறது.
அவ்வாறு இயங்கிய மணம் தான்
ஞானம் என்பதைச் சரஸ்வதி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். இரண்டற அந்த
அணுவின் தன்மை இயக்குவது காயத்ரி.
காயத்ரி என்றால் எதைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டதோ அதன் வழுவாக அது இயக்கும் என்று பொருள்.
சாதாரண மக்களும் இதை புரிந்து கொள்வதற்கு மகரிஷிகள் தன்னுள்
கண்டறிந்த நிலையும் விண்ணில்
படர்ந்த நிலையும் விண்ணில் உருவான நிலையும் தன்னுள் இயக்கும் நிலையும் தனக்குள்
கண்டுணர்ந்து சாஸ்திரங்களாக இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.