ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2026

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்


நமக்குக் கஷ்டகாலமாக இருந்தால் கோவிலுக்குப் போய் காசைக் கொடுத்து அர்ச்சனை செய்து விட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று சந்தோசப்படுகிறோம்.
 
பணம் கொடுத்தால் அர்ச்சகர் முதலில் கூப்பிட்டு விபூதி கொடுப்பார். கொடுக்கவில்லை என்றால் தட்டே இந்தப் பக்கம் திரும்பாது. ஆக ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால்தான் அவனுடைய வாக்கு இங்கே வரும். அந்த நிமிடத்தில் உங்களை ஆள்பவன் யார்…? நம் உயிர்.
 
இப்பொழுது உதாரணமாக குழந்தை என்ன செய்கிறது…? கீழே விழுந்து அவஸ்தைப் பட்டுத் துன்பப்படுகின்றது. நீங்கள் காக்கின்றீர்கள். அடுத்த நிமிடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
 
ஓ…ம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை நினையுங்கள். உங்களை ஆள்பவன் அவனாக இருக்கிறான்.
1.அப்பொழுது “ஓ…ம்” என்று சுவாசிக்கும்போது காந்தம் அதிகமாகின்றது. அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
2.ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.
 
அவன் கீழே விழுந்தான்... வேதனையான எண்ணம் வந்துவிட்டது. ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்கிறீர்கள்.
1.உயிரான ஈசன் என்ன செய்கின்றது…?
2.அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அங்கு பட்டவுடன் ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சியாகின்றது.
 
நீங்கள் இந்தக் குழந்தை மேல் பாசம் கொண்டு இப்படி விழுந்துவிட்டானே என்ற வேதனையை உணரச் செய்து அந்த வேதனை உணரக்கூடிய நிலை இருந்தாலும் ஈசனுக்கு வேதனையாகிறது.
 
இந்த உணர்வின் தன்மை அங்கு பட்டவுடன் உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி விடுகின்றது. உடலான சிவம் என்ன செய்கின்றது…? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது.
 
நீங்கள் ஆடவில்லை என்றாலும் சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை கால் எல்லாம் ஆடும். உடல் சிவம்… சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
 
வாசுகி நீ சுவாசித்த உணர்வின் சக்தியே அது உனக்குள் சக்தியாக இருந்து ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யார் படித்திருக்கின்றோம்…? அதை யாரும் படிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை.
 
ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து
1.எப்பொழுதெல்லாம் நமக்கு அந்தக் கஷ்டமான நிலைகள் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.உள்முகமாக நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த சக்தியைப் பாய்ச்சி சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.
 
இன்றைய நிலையில் சாதாரண மக்களினுடைய நிலைகள் வியாபரத்திலேயோ மற்ற நிலைகளிலோ பல உணர்வுடன் கஷ்டப்பட்டுக் கொண்டும் அவர்கள் எடுத்த சுவாசத்தாலோ எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.
 
அவர்களைச் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன…?
 
அவர்கள் மேல் இரக்கப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் மட்டும் இருந்துவிடக் கூடாது.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் தியானித்துவிட்டு “இனி உங்களுக்குத் துன்பங்கள் இல்லை… நன்றாக இருப்பீர்கள்…!” என்று சொல்லுங்கள்.
 
1.ஆனால் இதை வெளியிலே இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள்.
2.குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் ஜாஸ்தி வரும்.
 
ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும். சந்தோசமாக இருந்திருப்போம். ஏதாவது எண்ணியிருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விட்டால் நாம் நம்மையறியாமலேயே இந்த நிலைகளைப் பேசி குடும்பத்திற்குள்ளே ஒவ்வொரு உடலிலும் வெறுப்புணர்வுகளை வளர்த்து விடுகின்றோம்.
 
அப்படி அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நோயாக மாறி நம்மையே நாம் வெறுக்கும் நிலையையும் இந்த உணர்வலைகள் ஏற்படுத்தி விடுகின்றன.
 
இதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து தியானமெடுக்கும் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் சிறிதளவு பிழைகள் ஏற்பட்டாலும் உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
2.தீமை செய்பவர்கள் நாளை செய்வது எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்


விஞ்ஞான அறிவினால் இன்று தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் அதனால் விளைந்த நஞ்சு நாட்டையும் மக்களையும் அழித்து விடும். விஞ்ஞான அறிவு இதைத்தான் இன்று பெருக்கிக் கொண்டுள்ளது.
 
அகஸ்தியன் மூடனாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைப் பருகி
1.தீமைகளை அகற்றிடும் வல்லமையான நிலைகள் அவனுக்குள் பெருக்கிக் கொண்டது.
2.இருளான நஞ்சினை அகற்ற இவனுக்குள் ஒளியின் தன்மை பெருக்கும் நிலைகளை வளர்த்துக் கொண்டது.
3.பூமியின் இயல்பான நிலைகளையும் இதை உருவாக்கும்… மாற்றம் செய்யக் கூடியதும்… அத்தகைய வல்லமை இவனுக்கே உண்டு.
 
இவன் தான் உலகின் தன்மையை அன்று சமப்படுத்தினான்.
 
பூமி சுழலும் பொழுது துருவப் பகுதி பார்வதி…! விண்வெளியில் இருந்து வரக்கூடிய சக்திகளைக் கவர்கின்றது. துருவப் பகுதியில் வரப்படும் பொழுது அந்தச் சக்தி சிவம் ஆகின்றது.
 
1.பூமி சுழலும் சக்தி பார்வதி… தன் பார்வையில் பட்ட உணர்வைக் கவர்ந்த இந்த சக்தி உறைவிடமாக வருகின்றது.
2.அது தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.
 
சிவன் என்பது பூமி…! அதன் சுழற்சியின் சக்தியால் தனக்குள் கவர்ந்து சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்… கவர்ந்தது சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.
 
பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்.
 
கவர்ந்த உணர்வின் தன்மை அணுக்களாகப் பெருகி சக்தியின் தன்மை பெருகப்படும் பொழுது பூமியின் தன்மை கவிழும் தன்மை வரும். திசை மாறி இந்த எடைக்கொப்ப எடையற்ற நிலைகளை மீண்டும் கவர்ந்து அதனின் உறைத்தன்மையாகி இது கரைய அது வளரும்.
 
இப்படி… பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் வருவதிலிருந்து அன்று அகஸ்தியன் இதைக் காத்தான்.
 
திருமணம் ஆகும் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகரித்து விடும்… பூமி நிலை தடுமாறும். ஆகையினால் சிவன் அகஸ்தியனை நீ தெற்கில் செல்… நீ தெற்கே சென்று இந்தப் பூமியைச் சமப்படுத்து என்ற எண்ணத்தை இவன் உருவாக்கினான்.
 
1.அதன் படி அகஸ்தியன் தெற்கே சென்று சமமான பகுதியில் நின்று
2.பூமி கவரும் சக்திகள் குளிர்ச்சியான நிலைகள் கொண்டு வடக்கிலே உறைந்தாலும்
3.தெற்கிலே நின்று நேர்முகமாக நின்று சூரியனின் காந்தப் புலனை எடுத்து இந்தப் பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
4.அப்பொழுதுதான் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து இந்த பூமியின் தன்மையைச் சமப்படுத்தியது.
 
சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே செல்லும்படி சொல்லி இந்த உணர்வின் தன்மை தனக்குள் உற்றுப் பார்த்து இந்தப் பூமியைச் சமப்படுத்து என்று சொன்னது.
 
மனிதனான இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த வெப்ப அலைகளைத் தனக்குள் பரப்பப்படும் பொழுது கவர்ந்து பனிப்பாறைகள் கடலாக மாற்றியது.
 
1.அதனால் தான் அகஸ்தியனுக்குக் கமண்டம் கொடுத்திருப்பார்கள்.. நீர் சக்தி.
2.அந்தக் காலத்தில் முதல் மனிதன் அகஸ்தியன் பூமியை இவ்வாறு தான் திருப்பிச் சீராக இயங்கும்படிச் செய்தான்.

July 28, 2026

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?


நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
 
இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாக அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த பின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
2.எனக்கு அது வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லி விட்டால் அது நம்மைப் பாதிக்காது.
 
நீங்கள் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் திட்டியவரிடம் நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.
 
அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.
 
நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
1.அவர்கள் அறியாமல் செய்த தவறை
2.நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.
 
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
 
இதைப் போன்று குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ ஒவ்வொருவரும் தம்மையறியாத நிலைகளில் இப்படி அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்து விடுகின்றது. அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.
 
ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகி விட்டது என்கிற போது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்…” என்போம்.
 
பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்து விட்டு வருவான். ஜெயித்துவிட்டு வந்தால் கூட நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
1.அவன் சென்று வந்த காரியம் என்ன…? என்று கேட்டறியாதபடி
2.“அவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் செய்வோம்.
 
அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். “பொய் சொல்கின்றான்” என்ற எண்ணம் தான் தோன்றும். அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.
 
1.நாம் நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
2.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.
 
இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது நாம் எத்தனை நல்லது செய்தாலும் அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.
 
ஆகையினால இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.
 
நாம் ஆத்ம சுத்தி செய்து முடித்தவுடன் நம்மைத் திட்டியவர்கள் பேசிய முறைகள் செய்த முறைகள் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.
 
வாயிலே சொல்லிவிடாதீர்கள்… சொன்னால் வம்பு வந்துவிடும். உங்கள் எண்ணத்தால் வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்களும் அறியும் தன்மை வந்துவிடும்.
 
ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்காது. நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.
 
குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
1.மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது.
2.மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது.
3.அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.
4.இன்றைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.
 
நம் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
 
யாம் “வெறும் வார்த்தையிலே சொல்கிறோம்…” என்று எண்ணி விடாதீர்கள்.
1.உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது


எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் தெளிய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எம்முடைய அருள் ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள் எமது உபதேசங்களைக் கேளுங்கள்.
 
உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து ஓதுங்கள்… அவர்களுக்குள் பதிவாக்குங்கள்… நினைவாக்குங்கள். அவர்களையும் அந்த அரும்பெரும் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
 
அந்தத் துணிவு உங்களுக்கு வரவேண்டும்.
 
1.நீங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்… கேட்காதவரிடம் சொல்ல வேண்டியதில்லை.
2.ஒரு சிலர் கேட்க மறுப்பார்கள். அவர்களிடம் நாம் இதைப் பேச வேண்டியது இல்லை.
3.அவர்களுக்கும் நல்ல காலம் வரும் நல்வழி நடப்பார்கள்… என்று நாம் அவர்களுக்காகத் தவம் இருக்க வேண்டும்.
 
மீறிச் சொன்னால் நம்மைக் கிண்டலாகச் சொல்வார்கள். அது தான் நடக்கும். பரவாயில்லை… ஒரு காலம் உங்களை அறியும்… உண்மைகளை அறியும் அந்தச் சக்தி நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்.
 
1.உலக மக்களுக்காக நீங்கள் பேசும் இத்தகைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது… உங்களுக்குள் பரவுகின்றது.
2.அவர்கள் முதலிலே கேட்க மறுத்தாலும் கூடச் சங்கடம் வரும் பொழுது உங்களை எண்ணுவார்கள்… உடலில் பதிவானது நினைவுக்கு வரும்.
 
நாம் சொன்னதைச் செய்தால் நல்லது வரும் என்ற சிந்தனை அவர்களுக்கும் வரும். அப்பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்து நம்மை அணுகி வருவார்கள்.
 
முதலில் சொல்கின்றோம் ஆனால் அவரிடம் “விவாதிக்கும் தன்மைக்கு” நாம் போகக்கூடாது… அதை விட்டு விட வேண்டும். நீங்கள் நன்மை பெறுவீர்கள் நல் வழி நடக்கும் நீங்கள் நுகர்ந்த இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும் என்று மட்டும் நாம் சொன்னால் போதும்.
 
1.அடுத்து அழுத்தமாக இதைப் பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
2.யாருக்கும் கட்டாயப்படுத்தி இந்தச் சக்தியைத் திணித்து அவர்களைப் பெறச் செய்ய முடியாது.
 
அன்புடன் அரவணைத்து உண்மையின் உணர்வை எடுத்துச் சொல்லத் துணிவு வேண்டும்.
 
இந்தத் தியானத்தை கடைபிடிப்போர் அனைவரும் உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் அடிக்கடி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்த உணர்வுகள் பூமியிலே படரும்.
 
ஒருவரிடம் சொல்கின்றோம் அவர்கள் நினைவானால் கவரும் சந்தர்ப்பம் வருகின்றது. சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குள் வரும். உங்கள் சொல்லும் வீணாகாது.
 
ஆனால் ஏற்கும் பருவம் கொண்டு அவருக்குள் பதிவு செய்து ஏற்க வைத்து விட்டால்
1.நாளைக்கு ஒரு சிரமம் வரும் பொழுது உங்கள் நினைவு வரும்.
2.நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வு இங்கே இருக்கும்... அதைப் பெற வேண்டும் என்ற நினைவு அவருக்கு வரும்.
 
ஆனால் கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்த வெறுப்பின் தன்மை தான் வளரும்… ஏற்றுக்கொள்ளும் பருவமே இழக்கப்படுகிறது.
 
ஒரு பொருளில் விஷம் கலந்தால் அது எல்லாம் விஷமாகத்தான் மாறும். ஆகவே கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்.
 
அரவணைத்து அன்புடன் ஞானத்தைப் பதிவு செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது மற்றவர்களும் இந்த அருள் ஞானத்தைப் பெறுவார்கள். ஆகவே அந்தத் தகுதியைப் பெறச் செய்யுங்கள்.