ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2026

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.

அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.

உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.

ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.

வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது

உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.

பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.

இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.

நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்

ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.

நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.

அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

October 12, 2026

பல கோடி அகஸ்தியர்களை இந்தத் தென்னாட்டிலே நாம் உருவாக்குவோம்

பல கோடி அகஸ்தியர்களை இந்தத் தென்னாட்டிலே நாம் உருவாக்குவோம்


நமக்கு யாரும் எதிரி இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்துவோம். நாம் நுகரும் உணர்வே நமக்குள் எதிரி ஆகின்றது. நாம் நுகர்ந்த உணர்வே நமக்குள் எதிரியாக நம்மை இயக்குகின்றது.
 
பகைமை கொண்ட உணர்வோ வெறுப்பு கொண்ட உணர்வோ நுகர்ந்தால் நமக்குள்ளே எதிரி இருக்கின்றது… நமக்குள் எதிரியாக இருந்து நம்மைக் கீழான நிலையில் வாழச் செய்யும்.
 
இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவோம் என்று உறுதி கொள்வோம்.
 
1.தாய்மார்கள் இங்கே வந்தோர் அனைவரும் நீங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகாலட்சுமியாக
2.சர்வ ஞானத்தையும் வளர்த்திடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… மகாலட்சுமியாக வாழ வேண்டும்.
 
சர்வத்தையும் ஒவ்வொரு குடும்பத்திலும் பேணிக்காக்கும் நிலைகளை இங்கே வளர்த்துக் கருவுறும் குழந்தைகளுக்கு இதைப் போன்றே அந்தக் குடும்பத்தில் பற்றுடன் இருங்கள்.
 
சில குடும்பங்களில் பார்த்தால் வரதட்சனை என்று குறைகளை வளர்த்துக் கருவுறும் போது சண்டைகள் இட்டுக் கொண்டு இந்த உணர்வின் தன்மை கருவிலே வளர்ந்தால் அவன் பிறந்ததிலிருந்து வளர்கின்ற வரை குடும்பத்தில் இன்னல்களைத் தான் உருவாக்கும்… நன்மைகள் தருவதில்லை.
 
ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் கருவில் வளரும் குழந்தைகளை நீங்கள் மகா ஞானிகளாகவும் சர்வ சக்தியைப் பெறக்கூடிய உத்தமனாகவும் உருவாக்க வேண்டும்.
 
விஞ்ஞானி செய்கின்றான்… மற்ற உணர்வின் தன்மையை மற்ற உடலுக்குள் பதியச் செய்து உணர்வை மாற்றுகின்றான். அதே சமயத்தில்  எலும்பில் உள்ள அணுக்களை எடுத்து அதிலே மற்ற பக்குவப்படுத்தி இன்னொரு மனித உடலில் ட்யூபில் அதன் உடலுக்குள் இணைத்து விட்டால் அதன் தொடர்பு கொண்டு அந்த எலும்பே உருவாகின்றது. அந்த எலும்பை உருவாக்கும் தன்மையும் கற்றுக் கொண்டுள்ளார்.
 
ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் நோயாக வருகின்றது என்று தெரிகின்றோம். நோயை நீக்கிச் சர்வத்தையும் வென்றிடும் அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.
 
நம் குடும்பத்தில் குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டாலே போதும்.
1.அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறுக்குள் ரொம்ப சர்வ ஜாக்கிரதையாக ரொம்ப வலிமை மிக்க உணர்வை நமக்குள் எடுத்து
2.அந்தக் கருவில் வளரும் குழந்தை எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையினை நாம் உபதேசிக்கும் உணர்வினை எடுத்து ஓதச் செய்யுங்கள்…
3.அதை உணரச் செய்யுங்கள்… அதைக் கருவில் வளரச் செய்யுங்கள்… ஞானியாக்குங்கள்.
 
உலகையே காத்திடும் அருள் ஞானிகளை நாம் இன்று உருவாக்க வேண்டும். உலகம் எத்தனையோ சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றது. ஆகவே இதிலிருந்து நாம் மீட்டுதல் வேண்டும்.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் எல்லா நாட்டிற்கும் இதனைத் தொடர் வரிசையில் இன்றும் துருவ நட்சத்திரத்தில் இருந்து இயங்கும் அளவிற்கு அவனுடைய தீமையை அகற்றும் சக்தி பெறுகின்றது.
 
1.ஆகையால் மீண்டும் தென்னாட்டிலே ஞானிகளை உருவாக்க வேண்டும்.
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றுங்கள்.
3.விஞ்ஞான அறிவால் பூமியில் வரும் இந்த ஓசோன் திரை கிழிந்து விஷத்தன்மை நம் பூமியில் பரவி இருப்பதை அகற்ற
4.நாம் அந்த ஞானிகளை உருவாக்க வேண்டும்.
 
நம்மால் முடியவில்லை என்றால் நம் எண்ணத்தின் தன்மை கொண்டு நல்ல உணர்வுகளை ஊட்டி ஒற்றுமையாக இருந்து பக்குவப்படுத்தி நாம் கோயில்களில் எப்படி ஆலயங்களில் எண்ணுகின்றோமோ இதைப் போன்ற ஞானத்தின் உணர்வை அந்தக் கர்ப்பமான தாயைக் கேட்கச் செயுங்கள்.
 
தாயின் கருவில் அது ஞானத்தை வளர்க்கச் செய்யும்… உலக ஞானத்தைப் பெறச் செய்யும். அவன் வளர நாட்டையும் ஊரையும் உலகையும் நம்மையும் காக்கும் அந்த அரும்பெரும் சக்தியாக நாம் உருவாக்கிப் பழகுவோம்.
 
பத்தாவது நிலையை நாம் பெற நம் குழந்தைகளை அருள் ஞானிகளாக ஆக்குவோம்.
1.உலகைக் காக்கச் செய்வோம்
2.தென்னாட்டிலே தோன்றினான் அகஸ்தியன்… மீண்டும் அதே தென்னாட்டிலே அதே ஞானியாக நாம் உருவாக்குவோம்.
3.உலக ஞானத்தை உலகிற்கே எடுத்துக்காட்டும் உணர்வை நாம் வளர்ப்போம் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.

October 11, 2026

நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?

நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?


அங்கிருந்து 'வாருங்கள்..' என்று கூப்பிடுகிறேன்.
1.ஆனால் அதே சமயம் 'வாங்க…!' என்று சொன்னால்
2.என்ன இப்படி வெடுக்… என்று கேட்கின்றார்…? அதே சொல் தானே…!
3.அந்தஸ் சொல்லுக்குள் இந்த உணர்ச்சிகள் வித்தியாசமாக இயக்குகிறது..
 
கண்ணாடி தெளிவாகத் தெரிகிறது… தட்டினால் உடைந்து விடும் என்று தெரிகின்றது. அதிலே பெயர் அடிக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அடி கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அதில் எழுத முடியாது. பேனா உடைந்து விட்டால் அதை வைத்து எழுத முடியுமா… என்ன செய்வது…?
 
இதே மாதிரி நமது ஆன்மா ஒரு கண்ணாடிக்குச் சமம் அதிலே அந்த வேதனை என்ற அழுக்கானால் படிந்து விடும் நல்ல குணத்துடன் வெறுப்பின் தன்மை அழுக்கு அடைந்துவிடும்.
 
அதற்குப் பிறகு சிந்திக்கும் தன்மை இழந்து விடும். அவன் பார்வையில் இருக்கும் அந்த மனது என்ன செய்கிறது…?
 
நாம் சொன்னவுடன் அவன் பார்க்கும் அந்த நிலை அழுக்கடைந்து விடும். அப்போது நாம் மீண்டும் அழுக்கைத் தான் சேர்க்கின்றோமே தவிர அதை துடைத்துப் பழக வேண்டும்.
 
நாம் சொல்லும் உணர்வு கொண்டு இப்படி இருக்கிறதப்பா என்று சொல்லித் துடைத்து விட்டோம் என்றால் தன்னை உணரக்கூடிய சக்தி வரும்.
 
இப்பொழுது நம் கடையில் வந்து ஒரு கடன்காரன் வந்து கேட்டுச் செல்கின்றான். உடனே அந்த வெறுப்பு என்ற வேதனை வருகின்றது… விஷம் என்ற நிலையை உணர்த்துகின்றது. அதைப்போல் நம்மிடம் சுருக் என்று கேட்டுச் செல்கின்றான் பார்…!
 
அடுத்தாற்படி வந்து கடன்காரன் வந்து கேட்கின்றான் என்றால் கொடுத்துப் பாருங்கள். இந்த மாதிரிக் கடன் கொடுத்திருக்கின்றது என்று இவனிடம் வெறுப்பாகச் சொல்வோம். உனக்குக் கடனும் இல்லை ஒன்றும் இல்லை என்று சொல்வோம்.
 
முதலில் கொடுத்துப் பழகிவிட்டோம். கடன் கொடுத்துப் பழகியதை வெறுப்பாகச் சொல்லும் பொழுது அடுத்த பக்கத்தில் கடன் தரத் தயாராக இருப்பார்கள்… அங்கே போகின்றார்கள்.
 
அங்கு சென்றவுடன் வாங்கிய கடனைச் சரியாகக் கொடுப்பார்கள். அன்றைக்கு நம்மை வெறுத்தார்கள்… அவருக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று நம்மை எண்ணுவார்கள்.
 
வெறுப்பின் தன்மையால் இப்படி ஆகிறது. இது இயற்கை சில சந்தர்ப்பங்களில் நுகரும் உணர்வுகள் இப்படி இயக்குகிறது.
 
அடுத்தாற்படி நல்ல காசு கொடுத்து வாங்குபவர்கள் வருகின்றார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நம் சொல் சரியாக வருவதில்லை. சரக்கை எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது சரியான பதில் வராது.
 
அவர்கள் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாம்  வெறுப்படைந்த நிலைக்குத் தகுந்த மாதிரி சாமானை எடுத்துக் கொடுப்போம்.
 
பார்க்கலாம்… சில நேரங்களில் வெறுப்பாக இருந்தால் உப்பிற்கு பதிலாக பப்பு என்று சொன்ன மாதிரி எதையாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
 
என்னங்க நான் எதை கேட்கின்றேன்.. நீங்கள் எதைக் கொடுக்கின்றீர்கள் என்பார்கள். இரண்டு முறை நமது உணர்வுகள் இப்படி மாறி வந்தவுடன் என்ன ஆகிறது.
 
எதையாவது ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லாதபடி எதையாவது கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி என்ற இந்த வம்பு வரும். அவர்கள் சொல்வது நம் காதில் சரியாகக் கேட்காது குற்றவாளியாக நம்மை மாற்றும். அப்பொழுது எது செய்கிற…?
 
இதே மாதிரித் தான் தறி நெய்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் கொஞ்சம் வெறுப்பாகிவிட்டால் போதும். நிச்சயம் நாடா ஒரு பக்கம் சென்று நூலை அற்றுக்கொண்டே போகும்.
 
அதே சமயத்தில் முன்னாடி எதிரில் தெரிந்துள்ள நூல் அறுந்திருக்கும். அப்பொழுது என்ன செய்யும்…? அறுந்தது நமக்குத் தெரியாதபடி இருப்போம்.
 
அதை எடுத்தவுடன் இங்கே சிக்கலாகி வந்துவிடும். அப்பொழுது என்ன செய்யும்…? இங்கே வெறுப்பாக இருப்பதனால் எதிரில் இருக்கக்கூடிய நூல் அறுந்ததைக் காண முடியாது.
 
உதாரணமாக ஒரு காரியத்திற்கு நீங்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பாருங்கள். கையிலே சாமானை வைத்து கொண்டிருப்பீர்கள்.
 
ஆனால் அதைக் காணோம் காணோம் என்று… எங்கே…? இங்கே தானே வைத்தேன் என்று வீட்டில் சண்டைக்குச் செல்வீர்கள். ஆனால் அவர்களும் இந்தப் பதட்டத்தில் கையில் தான் இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள்.
 
இவர்களும் சேர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடைசியில் இருவரும் அமைதியான பிற்பாடு ஐய்யய்யோ நான் கையிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…?
 
இந்த மாதிரி அப்பொழுது நம் கண்ணிற்கு முன்னாடி இருளச் செய்வது எது…? இந்த உணர்வுதான். நம்மை அறியாமல் ஆக்குவதும் அறிந்த நிலையில் செயல்படுத்துவதும் நாம் நுகர்ந்த உணர்வு தான்.
 
ஆகவே நம் வாழ்க்கையில் இதையெல்லாம் துடைக்க வேண்டும். இந்த ஆயுட்கால மெம்பர் என்றால் எப்படி அகஸ்தியன் ஒவ்வொரு இருளையும் மாற்றி ஒளியின் தன்மை பெற்றானோ அந்தத் துருவ நட்சத்திரமாக ஆனானோ அதை எடுக்கும் பொழுது இந்த இருளை அகற்ர முடியும்.
 
உயிரோடு சேர்த்து உணர்வை ஒளியாக்க முடியும்… அது தான் தனுஷ்கோடி.